• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Nathamuni

தவிக்கும் உல்லாசப் பயணத்துறை

Recommended Posts

ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது.

Kalpitiya-2.jpg

காத்து வாங்கும் கல்பிட்டி கடற்கரை. எங்கே அவர்கள்?

இலங்கை அரசு, சீனா போன்ற பல அரசுகளை கெஞ்சி, பயண தடை அறிவிப்பினை நீக்க சொன்னாலும், யாரும் பெரிதாக வருவதாக இல்லை.

இன்னும் மோசமாக, செப்டெம்பர், அக்டோபர், மற்றும் அடுத்த கிறிஸ்மஸ் வரை செய்த பதிவுகளை கான்செல் செய்து பணத்தை திருப்பி பெறுகிறார்கள்.

Dambulla.jpg

தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே?

நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்து வரும் உல்லாசப்பயணத்தினை நம்பி, வாகனங்களை லீசுக்கு வாங்கியவர்கள் நிலை பெரிய அவலத்துக்கு உரியதாக உள்ளது.

சில கிராமங்களில், சாப்பாட்டு கடைகள், சிறு தங்குமிடங்கள் எல்லாம் அடி வாங்கி உள்ளன.

Maduganga-Aluthgama.jpg

அளுத்கம பகுதியில் உள்ள மடுகங்கை நதியில் உல்லாசப்பயணிகள் இன்றி, கரையில் மூடி கட்டப்  பட்டுள்ள படகுகள். 

முன்னமே எச்சரிக்கை செய்யப்பட்டும், அரசு எவ்வித நடவடிக்கையும் எடாமல், இப்போது வேகமாக கைது நடவடிக்கைகள் நடாத்துவது, கண் கெட்ட பின்னர் சூரிய உதயம் தேடுவது போலுள்ளதாக அவர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த கோபங்கள் எல்லாம் இஸலாமிய மக்கள் மீது திரும்புகிறது என்பதும் உண்மை.

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

ஏப்ரல் 21, ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, வீழ்ந்த உல்லாசப் பயணத்துறை, எழ முடியாமல் தவித்து நிக்கிறது.

 

கொஞ்சம் பொறுங்கள்.இந்த மாதம் முடிந்தால் நம்மவர்களே இந்தக் குறையை நிரப்பிவிடுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கள்.இந்த மாதம் முடிந்தால் நம்மவர்களே இந்தக் குறையை நிரப்பிவிடுவார்கள்.

    Bildergebnis für bag packing gif

உண்மைதான்... நல்லூர் திருவிழாவும் வர,  விமானச்  சீட்டின் விலையும் குறைந்து இருக்க
சனம் Bag Pack பண்ண தொடங்கிவிடும்.

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் பொறுங்கள்.இந்த மாதம் முடிந்தால் நம்மவர்களே இந்தக் குறையை நிரப்பிவிடுவார்கள்.

 

3 hours ago, தமிழ் சிறி said:

    Bildergebnis für bag packing gif

உண்மைதான்... நல்லூர் திருவிழாவும் வர,  விமானச்  சீட்டின் விலையும் குறைந்து இருக்க
சனம் Bag Pack பண்ண தொடங்கிவிடும்.

 

 

1200 ருபாவுக்கு பஸ்ச, ரயில பிடிச்சு சொந்தக்காரர் வீடுகளுக்க பூந்துவிடும் கசவாரங்கள் கதைய விடுங்கோ...

உல்லாச பயணிகளை நம்பி முதல் போட்டு, பவுடர் தொன் கணக்கில வாங்கி வைச்சிருக்கிற கோஸ்டிகளே அல்லாடுது.

போலீஸ்காரர் மாதாமாதம், ஜறாவ(மாமூல்) வாங்க வந்திருகினமாம்.

 • Like 1
 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமியத் தீவிரவாதம் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தோடு இலங்கை  வாழ் முஸ்லிம் மக்களின் பொருளாதாரம் படு வீழ்ச்சி கண்டுள்ளது. காரணம் சிங்களவர்கள் முஸ்லீமகளின் வியாபாரங்களை புறக்கணிப்பதே. 

உதாரணத்திற்கு, ஒரு சிங்களக் குடும்பமொன்றின் திருமண வீட்டில் முஸ்லிம் ஒருவர் உணவு சமைத்தார் என்பதற்காக; திருமண வீட்டுக்கு வந்தவர்கள் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர் எனும்போது, சிங்களவர்களின் உணர்வுத்திறனை அறியமுடிகின்றது,

நம்மில் சிலரும் கூட சிங்களத்தை புறக்கணிப்பது உண்டு. . 

சரிந்துவரும் பொருளாதாரத்தை மீட்க இலங்கை மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை 0.5 வீதத்தால் குறைத்துள்ளது.   

https://www.cbsl.gov.lk/news/monetary-policy-review-no-3-of-2019

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

ஆனி 2ஆம் திகதி : பயண அறிவுறுத்தலை விடுத்த ஐக்கிய அரபு இராச்சியம் 

இலங்கையில் தொடரும் அசாதாரண நிலைமை காரணமாக தனது நாட்டு மக்களுக்கு பயண அறிவிப்பை விடுத்துள்ளது. 

 

COLOMBO (News 1st): The United Arab Emirates issuing a travel advisory have requested its citizens to postpone all travel to Sri Lanka.

In a tweet, UAE Embassy in Sri Lanka notes that the Ministry of Foreign Affairs and International Cooperation in UAE urges citizens of the state to postpone travel to Sri Lanka due to the ongoing security situation.

https://www.newsfirst.lk/2019/06/02/uae-issues-travel-advisory-on-sri-lanka/

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

மகனின் பாடசாலை கிரிக்கெட் அணி இலங்கைக்கு 2 கிழமை  2021 இல் போக  தீர்மானித்து இருந்தார்கள். கண்டி, கொழும்பு, காலி ஆகிய இடங்களில் 5 ஸ்டார் விடுதிகளில் தங்கி விளையாடவும் இருந்தது. ஆளுக்கு 2500 பவுண்ட்ஸ் முடிவு செய்ய பட்டது. 

குண்டு வெடிப்புக்கு பிறகு இந்த கிரிக்கெட் பயணத்தை கேரளாவுக்கு மாற்றி விட்டார்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிங்களம் நினைத்தது முஸ்லீம் சீனா வெடி போட்டு விளையாட போறாங்கள் எண்டு ஆனால் அவர்கள் போட்டது  அணுகுண்டு ஏற்கனவே இலங்கையின் பெயர் அந்தமாதிரி இதுக்குள்ள தென்னையில் அடிவிழ பனைமரத்தில் நெறி கட்டினது போல் யாழில் சும்மா கிடந்த ஆமிக்கு ஓடரை போட பழையபடி செக்கிங் அது இது என்று தொடங்க ஊர் போக இருந்த நம்ம சனமும் டிக்கெட் கான்செல் பண்ணிட்டு பழையபடி ஐரோப்புகுள் சுத்த வெளிகிட்டு விட்டினம் .

Share this post


Link to post
Share on other sites

உல்லாசதுறையின் வாட் வரியை ஏழு வீதத்தில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது 

The Government has issued fresh legislation amending VAT for tourism-related industries to 7% instead of 5% to avoid restrictions on input credit claims after worried industry stakeholders lobbied the Finance Ministry over the changes. 

http://www.ft.lk/top-story/Tourism-sector--VAT-revised-to-7-/26-679712

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, ampanai said:

உல்லாசதுறையின் வாட் வரியை ஏழு வீதத்தில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது 

The Government has issued fresh legislation amending VAT for tourism-related industries to 7% instead of 5% to avoid restrictions on input credit claims after worried industry stakeholders lobbied the Finance Ministry over the changes. 

http://www.ft.lk/top-story/Tourism-sector--VAT-revised-to-7-/26-679712

என்னதான் குத்தி முறிஞ்சாலும் உல்லாச பயணத்துறை நிமிர நான்கு ஐந்து வருடங்கள் ஆகும் சிலவேளை சைனாவை விட்டு விலகினால் அடுத்தமாதமே உல்லாசத்துறை நிமிரும் 😀

Edited by பெருமாள்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நாங்கள் வேறு அவர்கள் வேறு என்று போர் புரிந்த காலத்தில் சிங்கள தேசத்தின் பொருளாதாரம் கவுண்டு விழுறதில மகிழ்ச்சியடைந்த பல லட்சம் ஈழ தமிழர்களில் நானும் ஒருவன்.

ஆனால் இப்போ எல்லாம் அதுபற்றி மகிழ்ச்சியடையமுடியவில்லை.

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படபோகும் சரிவு போரின் தாக்கத்திலிருந்து இன்னும் எழுந்து நிற்கமுடியாத எம்மினத்தையும் சேர்த்தே தாக்கும்.

இன்னும் ஒருபடி மேலே சஎன்று சொல்லபோனால் தாயகத்திலிருந்து ஆளுக்கொரு காரணம் சொல்லி ஓடிவந்த இலங்கை தமிழர்கள் எவராலும் கைவிடப்பட்ட தாயக உறவுகளுக்கு கையளவு உதவியையும், கடலளவு கருத்துக்களையும் தவிர எதுவுமே அவர்கள் வாழ்வை மேம்படுத்த செய்ய முடியாது,

முடிந்தவரை சிங்கள தேசத்தின் அரச பொருளாதர வளர்ச்சியை ஒட்டியே வெளிநாட்டிலிருந்து எவர் உதவியும் இல்லாத போரினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் போராளிகள் அனைவருமே வளரவேண்டும் என்பதே கசப்பான யதார்த்தம், 

சுதந்திரம் மறந்துபோய் மூன்று சோறு,ஒரு வேலை  கிடைச்சால் போதும் எனும் நிலையில் ஆகிவிட்ட எம்மக்களில் பல லட்சம்பேர்கள் நிலையானது எவ்வாறெனில் 

ஓடி எங்கேயும் போக அவர்களிடம் காசும் இல்லை, ஓடி  இனி போனாலும் அவர்கள் அகதி கோரிக்கையை இனி எந்த நாடும் ஏற்கபோவதில்லை.

இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மிக பெரும் சரிவு சிங்களவர்களுக்கு நிகராய், அல்லது அதற்கும் மேலாய் தமிழர்களையும் பாதிக்கபோகிறது & பாதிக்கும்.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

எவ்வளவு தூரம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு உல்லாசதுறையால் எவ்வளவு பாதிப்பு இருக்கும் என தெரியவில்லை. ஆனால், இந்த துறை வளரும் பொழுது ஒரு சிறு பகுதியே தமிழர் தாயகத்தில் வளர்ந்துள்ளது. 

 தாக்குதல்களால் ‘தேயிலை ஏற்றுமதிக்குப் பாதிப்பில்லை’

ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களால் தேயிலை ஏற்றுமதிக்கு உடனடியாகப் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஜோன் கீல்ஸ் லிமிடெட் அறிவித்துள்ளது. தேயிலை உற்பத்தி முகவராகச் செயற்படும் ஜோன் கீல்ஸ் லிமிடெட் வெளியிட்டிருந்த வாராந்த அறிக்கையில், ஏப்ரல் மாதத்தின் தேயிலை ஏற்றுமதி 20.8Mkg ஆகப் பதிவாகியிருந்ததாகவும், இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.  

இருந்த போதிலும் ஏப்ரல் மாதத்தில் தேயிலை உற்பத்தி 23.6Mkg ஆக பதிவாகியிருந்தது, இது முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 15.6 சதவீத சரிவாகும். தாழ்நில தேயிலை உற்பத்தி அதிகளவு இடம்பெற்றிருந்ததுடன், மொத்த உற்பத்தியில் 61.6 சதவீத பங்களிப்பை வழங்கியிருந்தது. உயர்நில தேயிலை உற்பத்தி 22.6 சதவீத பங்களிப்பையும் மத்தியநில தேயிலை உற்பத்தி 15.8 சதவீத பங்களிப்பையும் பதிவு செய்திருந்தன.   

நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதிக்கான ஒன்று திரட்டிய ஏற்றுமதி அளவு 94.4 Mkg ஆகும். இந்த ஆண்டில் 4.7 Mkg தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு பதிவாகியுள்ள நிலையில், தேயிலை ஏற்றுமதி பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.5 பில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளது.   

இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதில் ஈராக் அதிகளவு நாட்டம் காண்பித்திருந்தது. துருக்கி, ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகளும் இலங்கைத் தேயிலையின் மீது நாட்டம் காண்பித்திருந்தன. தெரிவு செய்யப்பட்ட Western High Grown BOPF தேயிலை தெரிவுகளுக்கு அதிகளவு கேள்வி காணப்பட்டது.   

http://www.tamilmirror.lk/business-analysis/தாக்குதல்களால்-தேயிலை-ஏற்றுமதிக்குப்-பாதிப்பில்லை/145-233629

 

Share this post


Link to post
Share on other sites

image_b5b49c3f38.jpg

இலங்கையில் நடக்க இருந்த முக்கிய மாநாடு ஒன்று, ஜெனீவாவிற்கு மாற்றப்பட்டது !

"This conclusion was reached after a consultation process with the CITES Standing Committee where they expressed their security and other concerns, and after careful consideration of the report of the mission of the United Nations Department of Safety and Security to Sri Lanka to assess the security situation on the ground, and discussions with the Sri Lankan Government," Higuero said in a statement.

http://www.ft.lk/top-story/Key-global-wildlife-conference-shifted-from-Colombo-to-Geneva/26-680022

 

Share this post


Link to post
Share on other sites

இன்று நாடு பெறும் பண உதவிகள் நாட்டின் கடனின் வட்டியை அடைக்கவே முழுமையாக பயன்படுத்தப்படுகின்றது - State Minister of Finance Eran Wickramaratne 

Total borrowings by the Government have been completely used to repay debt, State Minister of Finance Eran Wickramaratne confirmed to Parliament yesterday rejecting Opposition charges of bad financial management and using money for consumption

மகிந்த சனாதியான பொழுது நாட்டின் கடன் :   2, 000, 000, 000, 000 இலங்கை ரூபாய்கள் 
மகிந்த பதவி விலகியபொழுது நாட்டின் கடன் : 7, 000, 000, 000, 000 இலங்கை ரூபாய்கள்

“We had Rs. 2 trillion worth unpaid debt when the Mahinda Rajapaksa Government started. But the end of the Mahinda Rajapaksa era, the unpaid debt stood at Rs. 7 trillion. The increase was by Rs. 5 trillion for a period. But during your last four years, the increase is Rs. 5 trillion. 

http://www.ft.lk/front-page/All-borrowings-used-to-repay-debt--Eran/44-680288

பெற்ற நிதி உதவி : 1.2 000 000 000 அமெரிக்க டாலர்கள் 

Finance Minister Mangala Samaraweera yesterday told Parliament the Government had achieved stable growth and received $ 1.2 billion in foreign assistance recently to underscore the sound economic policies followed.  

http://www.ft.lk/front-page/Govt--receives---1-2-b-in-foreign-assistance--Mangala/44-680284

Share this post


Link to post
Share on other sites

உலகநாடுகளின் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை எதிர்வு நிறுவனமான மூடி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2.6% ஆக இருக்கும் என கூறி உள்ளது. 

முன்னராக இந்த ஆண்டு வீதம் 3.4% ஆக இருக்கும் எனக்கூறி இருந்தது. 

21/4 தாக்குதல்கள் இதற்கு காரணம் காரணம் என மூடி மேலும் கூறியுள்ளது.  

Ratings agency Moody’s yesterday revised Sri Lanka’s grow to 2.6% for 2019, down from 3.4% before the Easter Sunday attacks, and warned that the country faces numerous domestic and external obstacles that could pose challenges to refinance its large upcoming debt obligations.

http://www.ft.lk/top-story/Moody-s-revises--SL-s-growth-to-2-6-/26-680426

Tourism arrivals declined 7.5% year-on-year in April, following a 4.6% expansion in the first quarter of 2019. The likelihood of softer demand in other sectors such as retail and wholesale trade will further weaken economic activity. According to the World Travel and Tourism Council, tourism and associated industries contributed about 10% of GDP in 2018.

Share this post


Link to post
Share on other sites

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை தொடர்ந்தும் குறைந்த பெறுமதிகளைப் பதிவு செய்து வரும் நிலையில்,  பங்குப்பரிவர்த்தனையுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முகவர்களாக செயலாற்றும், பங்கு முகவர் நிறுவனங்கள் நட்டமீட்டி வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தொடர்ச்சியாக நட்டமீட்டும் சில பங்கு முகவர் நிறுவனங்கள் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் தமது செயற்பாடுகளை மூடிவிடக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், 2019ஆம் ஆண்டுக்கான வியாபார இலக்குகளை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையாது என துறை நம்பிக்கையை கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழலில், கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் கொடுக்கல் வாங்கல்கள் மிகவும் குறைந்த பெறுமதிகளில் இடம்பெறுகின்றன. குறிப்பாக வங்கிப் பங்குகள் முகப் பெறுமதியில் 0.6  ஆக விற்பனையாகின்றன. இவ்வாறான சந்தைச் சூழலில் பங்கு முகவர் நிறுவனமொன்றுக்கு தனது வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மாதமொன்றுக்கு ஆகக்குறைந்தது 5 மில்லியன் ரூபாய் வரை தேவைப்படுகின்றது. எனவே, சந்தையில் நிலைத்திருப்பது என்பது பெறுமதியற்றதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilmirror.lk/business-analysis/ஆறு-மாதங்களுக்குள்-நட்டமீட்டும்-பங்குமுகவர்-நிறுவனங்கள்-மூடப்படலாம்/145-234399

Share this post


Link to post
Share on other sites

Thursday, 5 September 2019 01:57

 

image_f90aa1ff21.jpg

 •  
 • Tourist arrivals in August 28.3% less than August 2018
 • Arrivals in first 8 months of year show 19.9% gap 
 • Gap between 2018 and 2019 numbers see faster than expected contraction 
 • Officials confident of continued recovery, expect numbers to return to normal by Nov. 
 • India, UK and China top 3 markets, rise in Chinese tourists anticipated

http://www.ft.lk/top-story/Tourist-arrivals-shortfall-narrows-in-August/26-685209

Share this post


Link to post
Share on other sites

புரட்டாதி மாதம் (செப்டெம்பர்) சரிந்த உல்லாசத்துறை  

The September performance also marked the first month-on-month decline since May this year. Previously, following the Easter Sunday tragedy, tourist arrivals rose from 37,802 in May to 63,072 in June, and then to 115,701 in July and 143,587 in August.

Compared to September 2018, arrivals fell 27.2%, marginally down from 28.3% in August, despite drawing over 21,000 tourists for the International Bohra Convention held in Colombo. 

http://www.ft.lk/front-page/September-dip-in-tourist-arrivals-reverses-month-on-month-gain-since-June/44-687092

Share this post


Link to post
Share on other sites

 

IMF downgrades SL 2019 growth to 2.7%

The International Monetary Fund (IMF), this week, downgraded Sri Lanka’s economic growth in 2019 by 0.8% to 2.7% in its October update in comparison to forecast made in April.

The downgrade comes midst IMF adopting a similar move for global growth as well as Asia in its World Economic Outlook October release this week.
Due to trade and geopolitical tensions, the IMF lowered 2019 global GDP growth forecast to 3%, lowest in a decade and a revision of 0.2% from its April estimate.
 

For Asia and Pacific, the forecast was 5%, down by 0.4%. Almost all notable economies in the Asia-Pacific region were subjected to downgrades, though among the exceptions were Bangladesh, whose growth forecast was increased by 0.5% to 7.8%.

http://www.ft.lk/top-story/IMF-downgrades-SL-2019-growth-to-2-7/26-687941

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் பல வெள்ளைகள் பஸ்ஸிலும் நடையிலும் காண முடிகிறது அறுகம்பையும் வழமைபோல் ஆரம்பித்தமாதிரி இருக்கு வெள்ளைகள் கடலலை சறுக்கலில் விளையாடுகிறது போட்டிகளும் போன மாதத்திற்கு முன்னர் நடந்தது 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மீண்டும் பல வெள்ளைகள் பஸ்ஸிலும் நடையிலும் காண முடிகிறது அறுகம்பையும் வழமைபோல் ஆரம்பித்தமாதிரி இருக்கு வெள்ளைகள் கடலலை சறுக்கலில் விளையாடுகிறது போட்டிகளும் போன மாதத்திற்கு முன்னர் நடந்தது 

 மிகவும் நல்ல விடயம்....!!!! ஆனால் முன் பதிவுகளில் வீழ்ச்சி உள்ளது போல் தெரிகிறது; வழக்கமாக 50%மாக இருப்பது இந்த முறை 30%மாக வீழ்ச்சி அடைந்தது  உள்ளது, இதற்கு காரணம் முன் பதிவுகள்  வழக்கமாக ஏப்பிரல் முதல் ஜூன் மாத காலப் பகுதியில் தான் மேற்கொள்ளப்படும், ஆனால் பாதுகாப்பு நிலவரம் சிக்கலாக இருந்தால் வீழ்ச்சி கண்டு இருக்க கூடும், அதை விட தேர்தல் இடம்பெறுவதும் காரணமாக இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
On 6/2/2019 at 2:48 AM, Nathamuni said:

 

 

Dambulla.jpg

தம்புள்ள விகாரையில் ஒருவரை ஒருவர் மோதுவது போல தினமும் அலைமோதும் உல்லாசப்பயணிகள் எங்கே?

 

வந்தால் சுடுவேன் என்கிறாரோ.....! எப்படிப் பயணிகள் வருவார்கள்...?? 

Share this post


Link to post
Share on other sites

உலக பொருளாதாரம் மந்த நிலைக்குள் செல்கின்றது என கூறப்படுகின்றது.
சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. 
பிரெக்சிட், மற்றும் சீன - அமெரிக்க வர்த்த 'சண்டை' தொடர்கின்றது. 

இலங்கையில் பலவேறு சவால்கள் உள்ளன: பெருக்கும் அரச செலவுகள்; வாங்கிய கடன்கள்; 
ஆகவே, இலங்கையின் வளர்ச்சியும் குன்றும் என தெரிகின்றது. 

2 hours ago, Paanch said:

வந்தால் சுடுவேன் என்கிறாரோ.....! எப்படிப் பயணிகள் வருவார்கள்...?? 

இலவசமாக விமான நிலையத்தில் இவ்வாறான ஒரு பாதுகாப்பு அங்கியை வழங்கலாம் 🙂 

Image result for bulletproof vest

Share this post


Link to post
Share on other sites

வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு 6 மாத காலத்துள் ரூ.16,650 மில். இலகு கடன்

Saturday, October 26, 2019 - 6:00am

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஆறு மாத காலத்துக்குள் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக 16,650 மில்லியன் ரூபா இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 'சஞ்சாரக்க பொட்டோ', 'ஜய இசுறு' உள்ளிட்ட 05 இலகு கடன் திட்டங்களை நிதியமைச்சு அறிமுகம் செய்ததுடன் இதன்கீழ் சுற்றுலாத்துறையைச் சார்ந்த 2,700 பேருக்கு 16, 650 மில்லியன் ரூபாவை இலகு கடன் அடிப்படையில் வழங்கியுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

இக்கடன்களுக்காக மிகக்குறைந்த வீதத்தில் வட்டி அறவிடப்படும் அதேநேரம் ஹோட்டல்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்துக்கான கடன்களை அரசாங்கமே பொறுப்பேற்றதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றுக்கு மேலதிகமாக சுற்றுலாத்துறைக்கு அறவிடப்பட்டு வந்த 15 சதவீத வரி தற்போது 05 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

ஜயசிறி முனசிங்க

https://www.thinakaran.lk/2019/10/26/உள்நாடு/42729/வீழ்ச்சியடைந்த-சுற்றுலாத்துறை-மேம்பாட்டுக்கு-6-மாத-காலத்துள்-ரூ16650-மில்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.