Jump to content

நட்பென்பது


Recommended Posts

**நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்**

அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது 
 நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில்  மட்டுமாகவே  தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு .
 அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்..
 அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் 

ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை வராத வாழ்க்கை எங்குதான்  இருக்கு? எங்களிற்கும் வந்தது அந்த சண்டையின் பின் தான் அவன் என்னுடன் நெருக்கமானான்/ நான் அவனுடன் நெருக்கமானேன்.. எனக்கு வந்த ஒரு பிரச்சினையின் போது நான் இல்லாத நேரத்திலும் கூட  எனக்காக முன் நின்று சம்பந்தப்பட்டவர்களுடன் சண்டை பிடித்தான் என நண்பர்கள் கூறினார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனிற்கு நான் அந்தளவிற்கு எதுவும் செய்திருக்கவில்லையே என என் உள்மனது சொல்லியது.

இடை நடுவில் எனக்கு பல்கலைக்கழகத்திற்கு இடம்கிடைத்திருந்தது. எனக்கு கிடைத்த பிரிவு ராக்கிங்க்கு பெயர் பெற்றது சொந்த மாவட்ட மாணவர்களை அந்த மாவட்ட சீனியர்ஸ் எதுவும் செய்யமாட்டார்கள் மற்ற மாவட்ட சீனியர்ஸ் வைத்து பிளந்து கட்டுவார்கள் " மச்சான் பயப்படாத என்ர ப்ரெண்ட் ஒருத்தன் இருக்கான் உன்ர சீனியர் தான் அவன் கிட்ட கதைக்கிறன் என தைரியம் தந்தான் " சொன்னது போலவே கதைந்திருந்தான்..2006 வன்னியில் போர்மேகங்கள் கருகட்ட தொடங்கிய நேரம் ஆளுக்கு ஒவ்வொரு பக்கமாக பிரிந்து வந்தோம்..கொழும்பில் வந்து மீண்டும் சந்தித்தான் ..காசோ என்ன வேணும் என்றாலும் கேள்டா பிரச்சினை இல்லை சமாளிக்கலாம் என்றான்..

மீண்டும் பிரிவு தாயகத்திலிருந்து இன்னொரு நாட்டிற்கு நீண்ட நாள்கள் தொடர்பில் இல்லை ..அவனின் அப்பாவின் மறைவு தொடர்பாக முகநூலில் செய்தி அனுப்பி இருந்தான்.. அடிக்கடி தொடர்பில் இருப்பது கடினமாயிற்று ..மற்றவர்களை பற்றி கேட்கும் போது நான் கதைக்கிறதை விட்டிட்டன்ரா நான் தான் கோல் பண்ணி கதைக்கிற அவங்க அந்தளவுக்கு இல்லடா நானும் குறைத்திட்டன் என்டான்  ..

பின்னர் ஒரு நாள் கலியாணம்டா என்று மெஸெஜ் போட்டான்   யார்டா உன்னை கட்டப்போற அந்த மகராசி என்றேன்..லவ்டா என்றான்..
உனக்கு கலியாணம் என்டதே  அதிசயம் அதுக்குள்ள லவ்வேறயா? பாவம்டா அந்த பிள்ளை  என்றேன் .. 
நாங்கள் இப்ப திருந்திட்டம் ஆக்கும் என்றான் ..சரி சரி நம்பிட்டன் வாழ்த்துகள் சொல்லி வைத்தன் 

இடையில் ஒருநாள் கதைக்கும் போது என்ன 
பிள்ளைடா? என கேட்ட போது நீ guess  பண்ணி சொல்லு மச்சான் பார்ப்பம் என்டான் உன்னை அடக்கிறதுக்கு மகள் தான் சரி  அவளுக்கு தான் நீ அடங்கி இருப்பாய் என்றேன் ம்ம்  மகள் தான்டா என்டு  சொன்னான் ...

நேற்று மகளின் 1து பிறந்த நாள் விழா என சொல்லி போட்டோக்களை அனுப்பி இருந்தான் ..இதே மகிழ்ச்சியுடன் எப்போதும் இருடா துஷி...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கள் சொந்த கதையா?
 

Link to comment
Share on other sites

On 6/4/2019 at 7:28 AM, nunavilan said:

சில நட்புகள் வாழ்வின் இறுதி வரை தொடரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 

மற்றும் பச்சை வழங்கி ஊக்குவித்தோர்க்கும் நன்றிகள் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நட்புக்கள் சுயனலமாய் தம் தேவைக்காக நட்பாக இருப்பார்கள். தெரிந்தாலும் என்ன செய்வது என்று பொறுத்துப் போவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்,நட்ப்பிற்கும் வெகு தூரம்...என்னால் தான் ஒருவருடனும் ஒத்துப் போக முடியவில்லையோ என்று நினைப்பதுண்டு 

Link to comment
Share on other sites

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சில நட்புக்கள் சுயனலமாய் தம் தேவைக்காக நட்பாக இருப்பார்கள். தெரிந்தாலும் என்ன செய்வது என்று பொறுத்துப் போவது.

 

8 hours ago, ரதி said:

எனக்கும்,நட்ப்பிற்கும் வெகு தூரம்...என்னால் தான் ஒருவருடனும் ஒத்துப் போக முடியவில்லையோ என்று நினைப்பதுண்டு 

பெண்களின் நட்பு திருமணத்திற்கு பின் நீடிப்பதில்லையாம் எங்கேயோ படித்த நினைவு உண்மையா? 

எனக்கு மிக குளோஸ் ப்ரெண்ட் என ஒருவனும் அடுத்த நிலையில்2-3 பேர் என  விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அபராஜிதன் said:

பெண்களின் நட்பு திருமணத்திற்கு பின் நீடிப்பதில்லையாம் எங்கேயோ படித்த நினைவு உண்மையா? 

சுத்தப் பொய்.

ஆனால் அன்பு வேலைப்பழு பிள்ளை குட்டி என்று விரிவடையும் போது ஆரம்பகால கொஞ்சல் இருக்காது.

ஆணுக்கு எந்தநேரமும் கொஞ்ச வேணும்.கொஞ்சம் குறைந்தாலே விலகி போற மாதிரி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 6/8/2019 at 11:30 AM, ஈழப்பிரியன் said:

சுத்தப் பொய்.

ஆனால் அன்பு வேலைப்பழு பிள்ளை குட்டி என்று விரிவடையும் போது ஆரம்பகால கொஞ்சல் இருக்காது.

ஆணுக்கு எந்தநேரமும் கொஞ்ச வேணும்.கொஞ்சம் குறைந்தாலே விலகி போற மாதிரி இருக்கும்.

,நன்றி கருத்துக்கும் வருகைக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.