• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இன்றைய உலகின் உலக யுத்தம் 

Recommended Posts

இன்றைய உலகின் உலக  யுத்தம் 

இந்த நூற்றாண்டில் எங்கோ ஒரு நாட்டிற்குள் ( உள்நாட்டு) சண்டை நடந்து கொண்டே தான் இருக்கின்றது ( உதாரணம் யேமன்) . நாடுகளுக்கு இடையான சண்டை பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. காரணம், பல பலமான நாடுகள் அணு ஆயுதத்தை கொண்டு இருப்பதே அல்லது அந்த நாடுகள் தமது ஆதரவை தெரிவிப்பதுதான் ( வெனிசுவேலா இல்லை சிரியா) . 

ஆனால், உலகின் மிகப்பெரிய சண்டை ஒன்று நடந்து கொண்டிருப்பது, பொருளாதார சண்டை; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில்.

சீனாவின் சடுதியான பொருளாதார வளர்ச்சிற்கு காரணம் அமெரிக்க முதலாளித்துவ பொருளாதார கொளகை - மலிவான தொழில்திறன். ஆனால், சீனா கடந்த நாற்பது வருடங்களில் அமெரிக்காவையும் வளர்த்து தன்னையும் கெட்டித்தனமாக வளர்த்துக்கொண்டது. 

அமெரிக்காவின் பலம் அதன் மத்திய வங்கி ( US Federal Reserve) . அது தும்மினால் உலகமே காய்ச்சல் பிடித்து தவிக்கும். அதன் வட்டி வீதம் அதன் மாற்றம் உலக பொருளாதாரத்தையே தன்னுள் வைத்துள்ளது. அவ்வாறான  வங்கி விற்கும் பண முறிவுகளை ( US Treasury) அது பொருளாதாரா ரீதியாக 2009இல் தடுமாறிய பொழுது சீன நாடு அவற்றை வாங்கியது. சீனாவின் அறிவு சார்ந்த இந்த நடவடிக்கையை எடுத்தது - சீன மத்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் மூலம் பல த்ரிலியன்கள் அமெரிக்க டாலர்கள் பெறுமதியை சீன அரசு கொண்டுள்ளது. 

China-US-trade-war

 

 

ஏற்றுமதி - இறக்குமதியில் சமநிலுவை இல்லை என்பதே இந்த சண்டையின் அடிப்படை வாதம் என கூறப்பட்டாலும், சீனாவின் வளர்ச்சி வீதமே ஒரு முக்கிய பயமாக அமெரிக்காவிற்கு உள்ளது.

How the trade war has played out

இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ச்சி ஒரு பலத்த பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் யாரால் அதிக காலம் தாக்குப்பிடிக்கலாம் என்பதில் தமது பலத்தை பிரயோகித்து வருகின்றனர். சீனா ஆசியாவிலும், ஆப்பிக்காவிலும் தனது பொருளாதாரா வலுவை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகின்றது. அமெரிக்கா, வழமையான உறவு நாடுகளுடன் தொடர்ந்தும் உறவை பேணுவதுடன் சீனாவிற்கு மாற்று நாடுகளை தேடி வளர்த்து வருகின்றது. 

வியட்னாம்: ஒபாமாவின் பிரயாணம் ஊடாக இந்த உறவை வளர்த்து வருகின்றது. ஆனால், தென் சீன கடல் பிரச்சனையில் சீனாவின் முறுகல் நிலையம் உண்டு. 

மீண்டும் ட்ரம்ப் வென்றால், இந்த அமெரிக்க - சீன 'உறவு ' அடுத்த பரிமாணத்தை பெறலாம். 

Illustration by Henry Wong

https://www.bbc.com/news/business-45899310

https://en.wikipedia.org/wiki/China–United_States_trade_war

https://www.scmp.com/news/china/diplomacy/article/3008133/us-and-china-will-have-many-more-battles-fight-when-trade-war

Share this post


Link to post
Share on other sites

தெற்கிழக்காசியாவில் உள்ள நாடு இலங்கை. அதன்மீது பலருக்கும் கண் 🙂 

June 03, Colombo: The United States Department of Defense (DoD) says it supports Sri Lanka's vision to become a regional hub for logistics and commerce.

According to the recent Indo-Pacific Strategy Report: Preparedness, Partnerships, and Promoting a Networked Region, since 2015, the DoD has strengthened its relationship with Sri Lanka and increased military engagements significantly, particularly with the Sri Lankan Navy.

The DoD says within South Asia, the U.S. is working to operationalize its Major Defense Partnership with India, while pursuing emerging partnerships with Sri Lanka, the Maldives, Bangladesh, and Nepal.

http://www.colombopage.com/archive_19A/Jun03_1559586352CH.php

Share this post


Link to post
Share on other sites

கடந்த 30 வருடங்களில் சீனாவின் பாரிய பொருளாதார வளர்ச்சி சில படங்கள் ஊடாக 

 

மக்களின் நகரம் நோக்கிய இடப்பெயர்வு 

CHINA%20URBAN%20MIGRATION%20rev.1559593756302.PNG

சீனாவின் பெரிய நகரங்கள் 

CHINA%20CITIES.1559708511173.PNG

சீனாவின் அதிகரித்து செல்லும் உல்லாச பிரயாணிகள் 

CHINA%20OUTBOUND%20TOURISM.1559594183660.PNG

Share this post


Link to post
Share on other sites

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகளுடனான உறவு மோசமடைந்ததை அடுத்து, ரஷ்யா கடந்த சில ஆண்டுகளாக கிழக்கத்திய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

https://www.bbc.com/tamil/global-48547543

மேற்குலகத்தால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இரு நாட்டு உறவை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இன்னும் நெருக்கமாக்கியது என்கிறார்கள் வல்லுநர்கள்.

இரு நாடுகள் இடையேயான வணிகம், 2018ம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites

ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பர்

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் காணப்படும் நிலையில், ஜி20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வருகின்றது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்து வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஜி 20 மாநாடு ஜப்பானில் இந்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அதேநேரம் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றால், புது வரிவிதிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்ற நிலையில், முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ட்ரம்ப்-ஜி-ஜின்பிங்-சந்திப்பர்/50-234058

China’s lending to other countries, often shrouded in secrecy, is thought to be higher than the amounts that are officially tracked, resulting in much “hidden debt.” That growing debt problem could spark a worse-than-expected slowdown, among other problems, experts warn.

The lack of transparency would also affect investors who are considering bonds issued by those countries, or organizations such as the International Monetary Fund (IMF) which are helping those countries with their debts, according to Carmen Reinhart, a professor at the Kennedy School of Government at Harvard University.

https://www.cnbc.com/2019/06/12/chinas-loans-causing-hidden-debt-risk-to-economies.html

Setting the context
The Indian Ocean Region (IOR) is a highly strategic yet a volatile body of water with heavy international maritime traffic. Often considered the world’s third-largest ocean, it carries half of the world’s container cargo. The forces of globalization have resulted in a surge in shipping trade and competition: More than 80% of the world’s seaborne oil trade transits the Indian Ocean.

The IOR hosts several key developing economies, including China, India, Australia, Singapore, South Africa and Thailand. A third of the world’s population lives in this region, making this area a large market.

For China’s energy dependency, the Strait of Malacca is critical. Beijing’s investment in Kyaukpyu, Myanmar, was strategic to reduce this dependency. While the Andaman and Nicobar Islands give India a strategic advantage, the Coco Islands, administered by Myanmar, are vulnerable to Chinese influence. Unsubstantiated reports about the Coco Islands being used for Chinese intelligence and naval facilities have formed important security considerations for India.

An analyst for the Observer Research Foundation has argued the Chinese influence in the Coco Islands provides Beijing with an ability to monitor the Indian Navy. In a similar manner, Australia’s Cocos (Keeling) Islands under a potential US-Australia defense agreement could provide the US a similar advantage.

https://www.asiatimes.com/2019/06/opinion/pros-and-cons-of-us-sri-lanka-defense-plans/

Share this post


Link to post
Share on other sites

சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு

பட்டுப்பாதை பிறந்தது எப்படி?

அமெரிக்காவின் பிரெளன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டமாரா சின் எழுதியிருக்கும் புத்தகம் "பட்டுப் பாதையின் கண்டுபிடிப்பு" எனப் பொருள்படும் ''தி இன்வெண்ஷன் ஆஃப் சில்க் ரோட்.''

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது பட்டுப் பாதை. அமெரிக்கா, உலக மேலாதிக்க வர்த்தக சக்தியாக உருவெடுத்தபின், 1500ஆம் ஆண்டு வாக்கில், பட்டுப்பாதை பட்டுப்போனது.

சீனாவின் புதிய பட்டுப்பாதை வெறும் அபிலாஷை திட்டமா?

இருந்தாலும், அதன்பிறகு, ஜெர்மனி 1877- இல், ஃபெர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் என்ற புவியியலாளரை சீனாவுக்கு அனுப்பியது.

சீனாவில் இருக்கும் நிலக்கரி இருப்பு மற்றும் அதை ஐரோப்பாவிற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதுதான் அவருக்கு பணிக்கப்பட்ட வேலை.

பட்டுப் பாதை திட்டம்: விரிவான தகவல்கள்

 

 

ஐரோப்பாவுக்கு மாற்று

சீனாவில், பட்டுச்சாலை என்ற பதத்தை சில கல்வி சஞ்சிகைகள் அவ்வப்போது பயன்படுத்தி வந்தன.

அதன்பிறகு, 1950களில், தங்களுடைய அண்டை நாட்டினர் உடனான உரையாடல்களில் சீனர்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

மேற்கத்திய சக்திகளுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டுப் பாதைத் திட்டம் சீனாவுக்கு உதவியது.

சீனாவின் ஆசியக் கனவு

அடுத்த நிபுணத்துவம் கொண்ட சாட்சியாக நாம் எடுத்துக் கொள்ளும் புத்தகம் 'சீனாவின் ஆசியக் கனவு' (China's Asian Dream). ஆசியா முழுவதும் பயணம் செய்திருக்கும் கஜகஸ்தானின் அல்மட்டியின் மாணவரான டாம் மில்லெர் எழுதிய புத்தகம் அது.

பட்டுப் பாதையில் சீனப் படைவீரர்கள் அணிவகுத்து நடப்பதை யாரும் பார்ப்பது சாத்தியமற்றது என்று டாம் மில்லெர் கூறுகிறார்.

1254 - 1324 இடையே பட்டுப்பாதை வழியாக மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதையின் வரைபடம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption 1254 - 1324 இடையே பட்டுப்பாதை வழியாக மார்க்கோ போலோ சீனாவுக்குச் சென்றதாகக் கூறப்படும் பாதையின் வரைபடம்

அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் விதத்தில் இந்தப் பட்டுப் பாதை திட்டம் செயல்படுத்துவதாக சீனா சொல்கிறது. ஆனால் இதுபற்றி டாம் மில்லெர் உறுதி கூறவில்லை. அந்தத் திட்டத்தின் பெயரைச் சொல்லி, மற்ற நாடுகளுக்கு சீனா பணம் கொடுக்கும்போது, அதை வட்டியும் முதலுமாக எடுக்கத்தானே பார்க்கும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

சீனாவின் தென்பகுதியில் இருக்கும் மலைப்பிராந்திய நாடான லாவோஸில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் கூட, அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பங்களிப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

லாவோஸ் நாட்டு அரசுடன் இணைந்து, அந்த நாட்டின் ஊடாக செல்லும் ரயில் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஏழு பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இது லாவோஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி. லாவோஸ் இதை எப்படி திருப்பச் செலுத்தும்?

மிக மிக மெதுவாக?

தனது இயற்கை வளங்களிலிருந்து மெதுவாக திருப்பச் செலுத்த தொடங்குவதே நடைமுறை வழக்கம். எனவே, இந்த ரயில் திட்டம், லாவோஸில் இருக்கும் விலை மதிப்புமிக்க இயற்கை வளங்களை சீனாவிற்கு கொண்டுச் செல்லும் ஒரு 'கன்வேயர் பெல்ட்' ஆக பயன்படும்.

இந்தக் கோணத்தில் ஆராயும் டாம் மில்லெர், சீனாவின் முதலீட்டால் பிற நாடுகள் உடனடி ஊக்கம் பெற்றாலும், நீண்டகால அடிப்படையில் அவை பாதிப்பை சந்திக்க நேரிடும் என்கிறார்.

அண்டை நாடுகளில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யும் சீனா, துறைமுகங்கள், சாலைகள், ரயில்பாதைகள் மூலம் அவற்றை தன்னுடன் இணைத்துக்கொள்ளும்.

அடிப்படையில், பட்டவர்த்தனமான லஞ்சம் என்றே இதனைச் சொல்லலாம்.

https://www.bbc.com/tamil/global-47683123?fbclid=IwAR1of0u-RbePwKxzFdzMSYw0h4gV4ai_MVhroomG04Wnp1YueKYQzZfKzN4

Share this post


Link to post
Share on other sites

தொடரும் "வரி" போரால், ஆப்பிள் நிறுவனம் பொருட்களின் உற்பத்தியின் ஒரு பகுதியை சீனாவில் இருந்து வேறு ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகின்றது. 

அத்துடன், தொடரும் சீன-அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என கூறியுள்ளது. 

அதேவேளை, அமெரிக்க அதிபர் சீன அதிபரை இந்த மாதம் நடக்க இருக்கும் ஜீ 20 மாநாட்டில் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க-சீன வர்த்தகப்போர்: பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் முடிவு

உலகப் பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நீண்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவும், சீனாவும் இசைந்துள்ளன.

ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவெய்க்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது,

சீனா மீது மேலதிக தடைகளை விதிக்கப் போவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒசாகாவில் நடைபெற்ற இந்த உச்ச மாநாட்டில்போது நடைபெற்ற இந்த சந்திப்பில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 300 பில்லியன் மதிப்பிலான வரியை விதிக்கப்போவதில்லை என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

இனி சீனாவோடு பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/global-48812754

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவுக்கு எதிராக இந்தியாவுடன் ‘கூட்டு’ சீனா திடீர் முடிவு

சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் அதிகமாக சென்றுவிட்டது, இதனால் ஏற்றுமதியை குறைத்து இறக்குமதியை அதிகரிக்குமாறு சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இதை சீனா பொருட்படுத்ததால், சீனாவின பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரித்தார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது.

இந்நிலையில், இந்தியாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்திக் கொள்ள சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி சமீபத்தில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  இந்தியாவில் இருந்து சீனாவுக்கு வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதி வரையிலான புள்ளிவிவரத்தை  பார்த்தால், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 5 சதவீதம் குறைந்துள்ளது.  தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை படிப்படியாக குறைத்து, சமநிலைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சீன அதிகாரி தெரிவித்தார்.

இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து அமெரிக்காவின் முதல் கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கும் அதிபர் டொனால்டு டிரமப்பின் கொள்கைக்கு எதிராக போராட வேண்டும். இந்த வர்த்தக போரில் இந்தியாவும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்று அந்த சீன அதிகாரி தெரிவித்தார். சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை 539 பில்லியன் டாலர் அளவுக்கும் மேல் சென்றதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரையில் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. அதேபோல், முன்னுரிமை வர்த்தக அந்தஸ்து அளிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி உத்தரவிட்டார். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 
அதாவது, 5.6 பில்லியன் டாலர் அளவுக்கு வரி இல்லாமல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டு இரு்ந்தது. அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியாவுடன் சீனா நெருங்கி வருகிறது என்று வர்த்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511799

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்காவில் உள்ள இரு பெரும் பங்கு சந்தைகள் : டோவ் ஜோன்ஸ் மற்றும் வயதில் குறைந்த நாஸ்டாக் 
இதில், நாஸ்டாக் புதிய தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்களை பெரும்பான்மையாக கொண்டது. 

ஏற்கனவே டோவ் ஜோன்ஸ் சந்தைக்கு போட்டியாக ஷாங்காய் என்ற சந்தையை கொண்ட சீன அரசு நேற்று நாஸ்டாக் சந்தைக்கு போட்டியாக ஒரு புதிய சந்தையை ஆரம்பித்தது : ஸ்டார்  

இதன் மூலம், தனது நிறுவனங்களுக்கு தேவையான பணத்தை சேகரிக்கவும் அவற்றை வளர்க்கவும் உதவும் என சீன தலைமை எண்ணுகின்றது. 

 

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

சீன தயாரிப்புகளுக்கு 10 சதவீத புதிய வரி அதிகரிப்பு?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் 300 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீன தயாரிப்புகளுக்கு 10 சதவீத புதிய வரி அதிகரிப்பை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.

அண்மையில் இருதரப்பும் இந்த விடயத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தின. இதில் ஒரு முன்னேற்றம் வெளிப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலீட்டாளர்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக திகைப்படைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையான வோல் ஸ்ட்ரீட்டில், டோவ் ஜோன்ஸ் பங்கு குறியீடு கடுமையாக சரிந்ததுள்ளது.

http://www.hirunews.lk/tamil/221340/சீன-தயாரிப்புகளுக்கு-10-சதவீத-புதிய-வரி-அதிகரிப்பு

Share this post


Link to post
Share on other sites

கடந்த வியாழக்கிழமை, ஆவணி முதலாம் திகதி இந்த வர்த்தக சண்டையை அடுத்த கட்டிடத்திற்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் எடுத்து சென்றார். அவரின் செய்தி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் பொருட்களுக்கு 10% அதிகரித்த வரி. காரணம், அமெரிக்க குழு வெறுங்கையுடன் சீனாவில் இருந்து திரும்பியது. 

ஏற்கனவே வரிகளை விதிந்திருந்த நிலையில் உலக சந்தைகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கு பதிலடி கொடுத்து இந்த சண்டையை ஒரு இக்கட்டான நிலைக்குள் கொண்டு சென்றுள்ளது. அதாவது, சீன அரசு தனது பணமான யுவானை அமெரிக்க டாலருக்கு எதிராக குறைத்துள்ளது. இது இன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. 

அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? எப்பொழுது இந்த சண்டை முடிவிற்கு வரும்? என பலரும் விடைகளை தேடுகிறார்கள். 


  

அமெரிக்காவில் வங்கி வட்டி விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டாலும், வட்டி குறைப்பு தொடர வாய்ப்பில்லை என அந்நாட்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதேபோல சீன இறக்குமதிகளுக்கு புதிதாக 10 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் அமெரிக்க பங்கு சந்தைகளும், அதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்தன. இந்த நிலை ஆசிய பங்குச்சந்தைகளில் இன்றும் தொடர்கிறது.

சீன கரன்சியான யுவானின் மதிப்பு 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்கள், தங்கம் என பாதுகாப்பான முதலீடுகளை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் இந்திய பங்குச்சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவில் விற்றுத் தள்ளுவதால், சரிவு ஏற்பட்டுள்ளது. 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=515739

Share this post


Link to post
Share on other sites

வாய்த்தர்க்கம் குத்துச்சண்டையாக மாறிய வர்த்த வரி  பேச்சுவார்த்தை 

சீன அரசு தனது பணமான ஆர்,எம்.பி..யூன் பெறுமதியை ஒரு அமெரிக்க டாலருக்கு ஏழு என்ற மாற்று வீதத்தை குறைத்துள்ளது. இதனால் சரிந்துவரும் தனது பொருளாதாரத்தை சீர்படுத்த அது இந்த நடவடிக்கையை எடுத்தது. 

விளைவு, இன்று உலகம் முழுவது வர்த்தக சந்தைகள் பாரிய சரிவை சந்தித்தன. 

இன்று, அமெரிக்க அரசின் திறைசேரி சீன அரசை பண மாற்ற வீதத்தை கையாளும் அரசாக அறிவித்துள்ளது. அமெரிக்க அரசு எதிர்பார்ப்பது பண மாற்றங்கள் சுதந்திரமாக நிகழ வேண்டும் என்பதே. அமெரிக்க அரசு, தன்னுடன் ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் இணைய வேண்டும் என எதிர்பார்க்கின்றது, ஆனால், இதுவரை அமெரிக்க அரசு தனித்தே போராடுகின்றது. 

https://home.treasury.gov/news/press-releases/sm751

ஆனாலும், அமெரிக்க அரசும் தனது வட்டி வீதத்தை கடந்த வாரம் 0.25% த்தால் குறைத்தது, பத்து வருடங்களின் பின்னர். மீண்டும் அமெரிக்க மத்திய வங்கி வரும் மாதங்களில் குறைக்கலாம். 

இந்த நிலையற்ற பொருளாதார நிலமையால், தங்கத்தின் விலை மற்றும் பிட்கோயின் அதிகரித்துள்ளன. 

chart

தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. சவரனுக்கு 352 உயர்ந்து 27,680க்கு விற்பனையானது.  அமெரிக்க பெடரல் வங்கி வட்டி குறைப்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை   அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் ஆபரண தங்கம் கடந்த 2ம் தேதி சவரனுக்கு 584 உயர்ந்து ஒரு சவரன் 27,064க்கும், 3ம் தேதி சவரனுக்கு 264 உயர்ந்து 27,328க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்கப்பட்டது. நேற்று மீண்டும் அதிரடியாக தங்கம் கிராமுக்கு 44 அதிகரித்து கிராம் 3,460க்கும் சவரனுக்கு 352 உயர்ந்து சவரன்  27,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=515890

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

சீன நாடு. அமெரிக்க டாலருக்கு எதிரான தனது பண மாற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக அறிவித்ததை அடுத்து, உலக சந்தைகள் ஒருவித அமைதியையும் முன்னேற்றத்தையும் கண்டுள்ளன.


அமெரிக்க நாடு பேச்சுவார்த்தை மீதான தனது விருப்பையும் தெரிவித்துள்ளது. ஆனால், அதிபர் ட்ரம்ப் எதை தனது குறுச்செய்தியில் எழுதுவார்? என்ற பயமும் உள்ளது.

சீன அரசு தன வசம் பல ஆயுங்களை கொண்டுள்ளது, குறிப்பாக அது வைத்திருக்கும் அமெரிக்க பண முறிவு பத்திரங்கள். அதேவேளை, அவர்கள் அமெரிக்க தொழில்நுட்ப தொழில்முறைகளை களவு செய்தும் பிரதிகள் எடுத்தும் காப்புரிமையை மதிக்காமல் நடக்கின்றது.

சீன மக்கள் மத்தியில், அமெரிக்க பொருடக்களை புறக்கணிக்கும் பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது. அமெரிக்க நிறுவனங்கள், சீன நாட்டுக்கு பதிலாக மலிந்த தொழில்வலிமை நாடுகளை தேடிவருகின்றது.

 

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க - சீன வர்த்த சண்டையின் தொடராக உலகத்தில் பல மத்திய வங்கிகளும் தங்கள் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் வட்டி வீதத்தை குறைத்து வருகின்றன. இந்தியா, தாய்லந்து மற்றும் நியூ சிலாந்து ஆகியன இறுதியாக இணைந்த நாடுகள். 

வளர்ந்த நாடுகளான ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளின் மத்திய வங்கியின் பண முறிவுகள் பூச்சியத்திற்கு கீழே சென்றுள்ளன. ( உதாரணத்திற்கு இன்று ஜெர்மன் நாட்டின் 10 வருட பண முறிவின் விலை 106 யூரோ , பத்து வருடத்தில் உங்களுக்கு 100 யூரோ கிடைக்கும், இந்த பத்து வருட காலத்தில் நீங்கள் எந்த வட்டியும் பெறவும் மாட்டீர்கள் , வங்கியும் தராது ). அதனால், பலரும் அமெரிக்க வங்கியின் பண முறிவுகளை இன்று வாங்கினார்கள், அதனால், அமெரிக்க 10 வருட கால பண முறிவுகளும் சரிந்தன. 

அதேவேளை, சீனாவின் பணம் குறைக்கப்பட்டதால், பலரும் சீனாவில் இருந்து தமது பணத்தை வெளியே  கொண்டுசெல்கிறார்கள். குறிப்பாக ஹானங்கோங்கோவில் இது வர்த்த நிலையமாக உள்ளதால் உலக பொருளாதாரம் நிலையற்ற நிலையில் உள்ளது. பிரித்தானியாவிற்கு வழமையாக செல்லும் இந்த பணம் பிரெக்சிற்  காரணமாக வேறு எங்காவது செல்லும். 

 

Edited by ampanai

Share this post


Link to post
Share on other sites

சீனாவிற்கு பணிந்தாரா ட்ரம்ப்?
தொடரும் வர்த்தக போரில் இன்று ட்ரம்ப் 'விட்டுக்கொடுத்தார்' என  கூறப்படுகின்றது.

உலக பங்கு சந்தைகள் உயர்ந்தன

 

  • Some influential voices on Wall Street are saying Trump blinked in the latest exchange with China and showed just how much pain the U.S. could tolerate. China may use that to its advantage.
  • “Tell me why Xi should not continue to wait out The World’s Greatest Negotiator, who keeps ‘dealing’ with himself?” says Jim Chanos, founder and managing Partner of Kynikos Associates.
  • Markets rallied on the announcement by the U.S. Trade Representative office that certain items were being removed from the new China tariff list and others would be delayed until mid-December.

https://www.cnbc.com/2019/08/13/trump-just-blinked-giving-china-a-possible-edge-in-trade-war-jim-chanos-others-say.html

Share this post


Link to post
Share on other sites

சீன - அமெரிக்க வர்த்த போரில் இந்தியாவும் பாகிஸ்தானும் கூட நுழையலாம். 

இந்தியாவால் சீன பொருட்களை தடை செய்ய முடியவில்லை 

வியாட்நாமை அமெரிக்காவும் இந்தியாவும் வளர்ந்து வருகின்றன 

சீனாவின் வளர்ந்து வரும் தரமான பொருட்கள், பத்து வருட சீன திட்டம் 

இந்திய மக்களின் தேசப்பற்று ? மக்களாகவே புறக்கணிக்க முடியுமா? 

' மேட் இன் இந்தியா' - பொருட்களின் தரம் குறைவாகவே உள்ளது 

 

Share this post


Link to post
Share on other sites

மோடியின் பல கனவுகள் இந்தியாவின் பொருளாதார வெற்றியை அடிப்படையாக கொண்டவை. ஆனால், அந்த நாட்டின் பொருளாதார தேக்கம், நெருக்கடி அந்த கனவுகளை சிதறடிக்கலாம். 

 

Share this post


Link to post
Share on other sites

சரிந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த, அதிபர் ட்ரம்ப் நாட்டில் உள்ள சம்பளம் செலுத்தும் வரியை (Payroll Tax) குறைக்க எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

( பல வரிகள் உள்ள நாடான அமேரிக்காவில் சம்பளம் செலுத்தும் வரி என்பது தொழிலாளிகள் இல்லை தொழில்நிறுவனகள் மீதான வரி ) 

கிட்டத்தட்ட இதன் வீதம் 2.9% 

உதாரணாத்திற்கு, எனது தொழிலாளிக்கு வருட வருமாம் : 30000 
நான் செலுத்த வேண்டிய வரி : 2,295 

President Donald Trump on Tuesday said he was “thinking about” cutting payroll taxes, less than a day after the White House denied that a payroll tax cut was under consideration.

https://www.cnbc.com/2019/08/20/trump-says-hes-considering-payroll-tax-cut-despite-white-house-denial.html

Share this post


Link to post
Share on other sites

தொடரும் வர்த்தக போரை அமெரிக்க அதிபர் வரும் ஆண்டு கார்த்திகை மாத சனாதிபதி சேர்தலுக்கு முன்பாக தனது வெற்றியாக அறிவித்து முடிப்பார் என நம்பப்படுகின்றது. 

ஆனால், அவரை எதிர்த்து யார் போட்டியிடுவார்கள் என்பதை வைத்தே சீன கதையை நகர்த்தும். 

ட்ரம்ப் வெல்லுவார் என எண்ணும் தருவாயில் சீனாவும் ஒரு உடன்படிக்கைக்கு வரும். இல்லை அடுத்த தலைவர் தெரிவாகும் வரை காத்திருக்கும். 

இதுவரை வரை நடந்த இந்த வர்த்த போரில் சீனாவே அதிக இழப்பை சந்தித்துள்ளது என கூறுகிறார்கள். அமெரிக்க நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தாலும், அது மந்தமடையும் சாத்தியங்கள் தெரிகின்றன. குறிப்பாக, உலக பொருளாதாரம் சுருங்கி வருகின்றது. எனவே, அமெரிக்காவும் நீண்ட காலமாக அதனை காப்பாற்றி வரும் உள்ளூர் பொருளாதாரம் தாக்கு பிடிக்காது என்பது வாதமாக உள்ளது. 

அமெரிக்காவில் உள்ள அநேகமானோர் நாடுப்பற்றாளர்கள். அவர்கள் செலவை இந்த போர் அதிகதித்து இருந்தாலும், ட்ரம்ப் வெல்லவேண்டும் என விரும்புகிறார்கள். குறிப்பாக அமெரிக்க விவாசாயிகள் அதிகம் பாதிக்கப்படு உள்ளார்கள். 

இந்த போரில், சீனாவிலும் நாட்டுப்பற்றாளர்கள் தமது குரலையும் உயர்த்தி உள்ளார்கள். ஆனால், அமெரிக்க மோகம் அங்கு இன்னும் பெரியதாகவே உள்ளது. 

    

Share this post


Link to post
Share on other sites

சீனாவுடன் வர்த்தகப் போர் பெரும் விலையை செலுத்தும் அமெரிக்கா

வர்த்தகப் போர் ஒன்றை தொடங்கியதன் மூலமாக அமெரிக்கா பெரும் விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் பொருட்கள் மீது மேலதிக இறக்குமதி வரிகளை அறிவிப்பதற்கு சீனா நிர்ப்பந்திக்கப்படுகிறது.

சுமார் 75 பில்லியன் டொலர்கள் பெறுமதியான (5078 அமெரிக்க உற்பத்திகளை உள்ளடக்கிய ) பொருட்கள் மீது மேலதிக வரிகளை சீனா அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் 1 தொடக்கம் டிசம்பர் 15 வரை இரு பிரிவுகளாக விதிக்கப்படும் இவ்வரிகள் 10 அல்லது 5 சதவீதம் மேலதிகமானதாகும்.

இந்த புதிய வரிவிதிப்புக்கு உட்படும் பொருட்களில் வாகனங்களும் உதிரிப்பாகங்களும் சோயா, சோளம் போன்ற விவசாய உற்பத்திகளும் அடங்குகின்றன. இதன் தாக்கத்தை அமெரிக்க விவசாயிகளும் உற்பத்தியாளர்களும் விரைவில் உணருவார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக வர்த்தக முறுகல் நிலவி வருகின்ற போதிலும், சீனா ஒருபோதும் தடுமாறவில்லை. அமெரிக்கத் தரப்பினர் வர்த்தக விவகாரங்களில் அச்சுறுத்தலை செய்ய முயற்சித்து சீனா மீது கூடுதல்பட்ச நெருக்குதலைப் பிரயோகித்த போது, சீனா தளர்ந்து விடவில்லை.மாறாக, அதன் மனவுறுதி மேலும் வலுப்படவே செய்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு எதிராக கூடுதலான அளவுக்கு உறுதியாக நின்று அதன் நியாயபூர்வமான உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்தது.

அமெரிக்காவுடனான வர்த்தகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறையே ஒரே வழி என்பதே சீனாவின் நம்பிக்கையாக எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், அத்தகைய ஒத்துழைப்பு முன்னிபந்தனையுடனானதாகவே இருக்க முடியும். சீனா அமெரிக்காவின் வர்த்தக மேலாதிக்கத்தை உறுதியாக எதிர்க்கிறது; அதன் அடிப்படைக் கோட்பாடுகளில் விட்டுக்கொடுப்பை ஒருபோதும் செய்யப் போவதில்லை. அமெரிக்காவில் உள்ள சிலர் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த அச்சுறுத்தலைச் செய்யும் ஆபத்தான பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். கடுமையான எதிர்ப்புக்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டியிருக்கும். வர்த்தக விவகாரங்களில் அமெரிக்கா நடந்து கொள்கின்ற முறைக்கு சீனாவின் எதிர்வினையும் அதே முறையிலேயே அமையும்.

வர்த்தகப் போரில் வெற்றியாளர் என்று யாரும் இல்லை. இரு தரப்பையும் சேர்ந்த கம்பனிகளே விலையைச் செலுத்தியிருக்கின்றன. சீனாவுடனான வர்த்தகப் போரின் விளைவாக அமெரிக்காவின் சில பகுதிகளின் விவசாயிகள் 'படுமோசமாக' பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அமெரிக்க ஊடகங்களின் செய்தி அறிக்கைகள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது.

வரிவிதிப்பு அதிகரிப்பு அமெரிக்கப் பொருளாதாரம் மீது கணிசமான அளவுக்கு நெருக்குதலைக் கொடுக்கிறது. அதனால் செலவினங்கள் அதிரிப்பதுடன் முதலீட்டை மலினப்படுத்துவதன் மூலமாக பங்குச்சந்தையில் பங்குகளின் பெறுமதியில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சீனா இல்லாமல் அமெரிக்க பொருளாதாரம் பலம் பொருந்தியதாக மேலும் வளரப் போவதில்லை.

அமெரிக்க கம்பனிகளுக்கும் சீனக் கம்பனிகளுக்கும் இடையிலான உறவுகளை துண்டிப்பதைப் பற்றிய எந்தவொரு பேச்சுமே உச்சபட்ச நகைப்புக்கிடமானது. இரு நாடுகளினதும் கம்பனிகள் பயனுறுதியுடைய மாற்றங்களுக்கான தூதுவர்களாக விளங்குகின்றன. தற்போதைய முட்டுக்கட்டை நிலைக்கு மத்தியிலும் கூட ஆக்கபூர்வமான ஊடாட்டமும் ஈடுபாடுமே முன்னோக்கிய சரியான பாதையாக இன்னமும் இருக்கிறது.

வர்த்தகப் போரில் வெற்றி பெறுவது சுலபமானது என்று அமெரிக்காவில் உள்ள சிலர் நினைத்தார்கள். அவர்களது நினைப்பு தவறானது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளினதும் அரசாங்க தலைவர்களுக்கிடையில் காணப்பட்ட கருத்தொருமிப்பை நடைமுறைப்படுத்துவதே அமெரிக்காவைப் பொறுத்தவரை வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழியாகும். சமத்துவத்தினதும் பரஸ்பர நம்பிக்கையினதும் அடிப்படையில் கலந்தாலோசனைகளின் ஊடாக ஒரு தீர்வைக் காண்பதற்கு சீனாவுடன் இணக்கப்பாடொன்றுக்கு வர வேண்டும்.

பெய்ஜிங் (சின்ஹுவா)

https://www.thinakaran.lk/2019/08/31/கட்டுரைகள்/39548/சீனாவுடன்-வர்த்தகப்-போர்-பெரும்-விலையை-செலுத்தும்-அமெரிக்கா

Share this post


Link to post
Share on other sites

சீனா - அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் உலக பங்கு சந்தைகளில் ஒரு உயர்வு காணப்படலாம். 

China and US agree to meet in October for trade negotiations: Chinese Ministry of Commerce

https://www.cnbc.com/2019/09/05/china-and-us-agree-to-meet-in-october-for-trade-negotiations-chinese-state-media.html

Share this post


Link to post
Share on other sites

சீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்

பெய்ஜிங்,( சின்ஹுவா ) உலகின் பல பாகங்களிலும் இப்போது மாணவர்கள் கல்வியாண்டின் புதிய பருவத்துக்கு பாடசாலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றே வாஷிங்டனில் உள்ள கடும்போக்கு வர்த்தகக் கொள்கையாளர்கள்  சீனாவுடனான தங்களது பயனற்ற வர்த்தகப் போரில் இருந்து குறைந்தது நான்கு பாடங்களை படிக்கத் தொடங்கவேண்டிய நேரமாகவும் இது அமைந்திருக்கிறது.  

china-america.jpg

 அமெரிக்காவின் உச்சபட்ச நெருக்குதல் தந்திரோபாயத்துக்கு முன்னால் சீனா வளைந்துகொடுக்காமல் நிமிர்ந்து உறுதியாக நிற்கிறது என்பது முதலாவது பாடம்.

30,000 கோடி டொலர்கள் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற புதிய மேலதிக வரிகளின் ஒரு பகுதி செப்டெம்பர்  முதலாம் திகதி நடைமுறைக்கு வந்திருக்கிறது. எஞ்சிய பகுதி வரிகள் டிசம்பர் 15 நடைமுறைக்கு வரும்.

ஆனால், பெய்ஜிங்கிடமிருந்து நியாயத்துக்கு ஒவ்வாத சலுகைகளை கறந்தெடுக்கும் நோக்கில் வாஷிங்டன் தொடர்ந்து தீவிரப்படுத்திவருகின்ற வர்த்தகத் தாக்குதல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது.அது மட்டுமன்றி, அமெரிக்காவின் பொருளாதாரப்போர் வெறிக்கு எதிரான எதிராக சீனாவின் மனவுறுதி மேலும் மேலும் அதிகரித்திருக்கிறது ; அதன் எதிர் நடவடிக்கைகள் தீர்க்கமானவையாகவும் நன்கு சிந்தித்து நிதானத்துடன் மேற்கொள்ளப்படுபவையாகவும் இருக்கின்றன. பெய்ஜிங் கைவசம் இன்னும் போதுமான நடவடிக்கைகள் இருக்கின்றன.

சீனாவின் பொருளாதாரம் வலிமையானதாகவும் தற்போதைய வர்த்தகப் போரின் விளைவான நெருக்குதலுக்கு தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு உறுதியானதாகவும் இருக்கிறது என்பது வெள்ளைமாளிகையின் வரி அதிகாரிகள் படிக்கவேண்டிய இரண்டாவது பாடமாகும்.

சீனாவுக்கு மாற்றீடான நாடுகளைக் கண்டறியுமாறு அமெரிக்கக் கம்பனிகளை தூண்டும் முயற்சிகளில் அமெரிக்காவில் உள்ள சிலர் அண்மைக்காலமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.என்றாலும் கூட அமெரிக்க முதலீடுகள் சீனாவில் இன்னமும் அதிகரிக்கின்றன என்பதே உண்மையாகும்.

இந்த வருடத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்க கம்பனிகள் 680 கோடி டொலர்களை முதலீடு செய்தன ; அது முன்னைய இரு வருடங்களிலும் இதே காலப்பகுதியில் செய்யப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க முதலீட்டை விடவும் 1.5 சதவீத அதிகரிப்பாகும் என்று ' றொங்டிங் கொன்சல்ரிங் ' என்ற நியூயோர்க் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. அந்த முதலீட்டு முயற்சிகளில் ஒன்று ' ரெல்சா ' கம்பனி ஷங்காயில் தொடங்கிய அதன் உலக ' சூப்பர் ஃபாக்டரி' யாகும்.

இவ்வாறாக அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் சீனா உலகின் மிகவும் குடிநெருக்கமான பாவனையாளர் சந்தையைக் கொண்டிருப்பதேயாகும். சீனாவின் சனத்தொகையில் 40 கோடி மக்கள் நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகளினால் வகைப்படுத்தப்பட்ட சகல கைத்தொழில்து றை வகைகளையும் கொண்ட உலகின் ஒரே நாடு என்ற வகையில், பல்தேசியக் கம்பனிகளுக்கு முழுநிறைவான கைத்தொழில் சங்கிலித்தொடரையும் விநியோகச் சங்கிலித் தொடரையும் சீனாவினால் வழங்கக்கூடியதாக இருக்கிறது ; தொழில் முயற்சிகளுக்கான செலவும் சீனாவில் குறைவாகவே இருக்கிறது.முன்னுணரக்கூடிய எதிர்காலத்தில்  வேறு எந்த நாட்டினாலுமே வழங்க இயலாத ஒரு அனுகூலமாக இது அமைந்திருக்கிறது.

தற்சமயம் சீன அரசாங்கம் புலமைச்சொத்துடமை உரிமைகளை பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புநிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சீனச் சந்தைகளை முதலீட்டாளர்கள் அடையக்கூடிய வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதிலேயே நாட்டம் காட்டுகின்றது.இந்த புதிய சீர்திருத்தங்களும் திறந்தபோக்கு நடவடிக்கைகளும் சீனாவில் தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உலகம் பூராவுமிருந்து கூடுதல் வர்த்தக வாய்ப்புக்களைக் கொண்டுவரும்.

தங்களது வர்த்தகப் போர் அமெரிக்க மக்களையும் வர்த்தகத் துறையையும் பாதிக்கவில்லை என்று கூறுவதை வாஷிங்டனின் வர்த்தக கடும்போக்காளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும். இதுவே அவர்கள் படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.

சீன இறக்குமதிகள் மீது இறுதியாக விதிக்கப்பட்ட வரிகள் முன்னர் நேரடியாக இலக்குவைக்கப்பட்டிராத பொருட்களை முதற்தடவையாக தாக்கப்போகின்றன ; அமெரிக்கா துவக்கிவைத்த வர்த்தக மற்றும் வரி தகராறு துணிவகைகள், உடுப்புகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற குடும்ப பாவனைப் பொருட்களின் விகைளை நேரடியாகவே அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

புதிய வரிகள் நடைமுறைக்கு வந்தபிறகு சீனப்பொருட்களின் மீதான சகல வரிகளின் காரணமாகவும் அமெரிக்க குடும்பங்கள் வருடாந்தம் சுமார் 1000 டொலர்களை மேலதிக செலவிடவேண்டியிருக்கும் ; வரிகளை மேலும் அதிகரிக்கப்போவதாக விடுத்துவரும் அச்சுறுத்தலை வாஷிங்டன் நடைமுறைப்படுத்தினால், அந்த மேலதிக செலவு வருடாந்தம் 1500 டொலர்களாக இருக்கும் என்று ஜே.பி.மோர்கன் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.

சீனாவுடனான தற்போதைய வர்த்தகப்போர்  வணிக முதலீட்டையும் தயாரிப்பையும் ஊக்கங்கெடச்ய்துகொண்டுமிருக்கிறது.இவ்வருடத்தின் இலண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மறு ஆயவுசெய்து 2 சதவீதத்துக்கு மாற்றியமைத்ததாக அமெரிக்க வர்த்தக திணைக்களம் கடந்த வாரம் கூறியிருந்தது. கடந்த மாதம் செய்த மதிப்பீடு 2.1 சதவீதமாக இருந்தது.

இறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், பொறுப்புவாய்ந்த ஒரு உலக வல்லரசாக எவ்வாறு  நடந்துகொள்வது என்பதை அமெரிக்கா கற்றுக்கொள்ளவேண்டும்.அத்துடன் பாடசாலைகளில் மற்றைய மாணவர்களுடன் வீறாப்புத்தனமாக நடந்துகொள்ளும் பெருத்த உருவம் கொண்ட மாணவனைப் போன்று நடந்துகொள்வதை வாஷிங்டன் நிறுத்தவேண்டும். உலகின் ஒரே வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா தனக்கேயுரிய பொறுப்புக்களை தோளில் சுமக்கவேண்டியது அவசியமாகும் ; உலகை கூடுதல் சுபிட்சம் நிறைந்ததாக மாற்றுவதில் ஏனைய நாடுகளுடன் இணைந்துகொள்ளவேண்டும். அப்போது தான் அமெரிக்கா மீண்டும் மகத்தானதாக வரமுடியும்.

https://www.virakesari.lk/article/64510

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா சீனா வர்த்தகப்போர்: இறங்கி வந்த டொனால்ட் டிரம்ப் - கூடுதல் வரி விதிப்பு தள்ளிவைப்பு

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் இறக்குமதி வரி விதிப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இந்த வரியை நல்லெண்ண அடிப்படையில் தள்ளி வைப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்த இந்த 5 சதவீத கூடுதல் வரியை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சோயாபீன்ஸ், வாகனங்கள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு உள்பட 106 அமெரிக்கப் பொருட்களின் மீது 25 சதவீதம் அதிக வரி விதிக்கப்போவதாக 2018ஆம் ஆண்டு சீனா தெரிவித்திருந்தது. 1,300 சீனப் பொருட்களுக்கு 25 சதவீத அதிக வரி விதிக்கும் விவரங்களை அமெரிக்கா அறிவித்த சில மணிநேரத்தில், பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சீனாவின் நியாயமற்ற அறிவுசார் சொத்துரிமைக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைதான் தங்களின் அதிக வரி விதிப்பு முன்மொழிவு என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்து இருந்தது.

இரு நாடுகள் இடையேயிலான வர்த்தகப் போர் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

https://www.bbc.com/tamil/global-49674042

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this