Jump to content

தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்

நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. 

image_1481827016-7e3ec2aef4.jpg

மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற வக்­கிர அர­சியல் தீர்­மா­னத்­தோடு மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு நட­வ­டிக்­கையின் விளை­வாக அந்த அனர்த்தம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. 

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பின் னால், தமிழ் மக்கள் ஏகோ­பித்த நிலையில் அணி திரண்­டி­ருந்த இறுக்­க­மா­னதோர்  அர­சியல் சூழல் அது. அந்தச் சூழல் மிகவும் இறுக்­க­மா­னது. அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் அபி­லாஷை அப்­போது மக்கள் மனங்­களில் கனன்று கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்கள் மீது ஒடுக்­கு­மு­றை­க­ளையும் அடக்­கு­மு­றை­க­ளையும் ஏவி விட்­டி­ருந்த அரசும் பேரின அர­சி­யல்­வா­தி­களும், தமிழ் மக்­களின் இந்த அர­சியல் நிலைப்­பாட்டை எந்த வகை­யி­லேனும் அடித்து நொறுக்­கி­விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டி­யி­ருந்­தார்கள். 

சமா­தான பேச்­சு­வார்த்­தைகள், இணக்க அணு­கு­மு­றைகள் என்­பன தோற்றுப் போயி­ ருந்த நிலையில் தனி­நாட்டுத் தீர்­மா­னத் தைத்தவிர வேறு வழி­யில்லை என்ற நிலை மைக்குத் தமிழ் மக்கள் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். இதனால் 1973 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மாநாட்டில் தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு, அதற்­காகப் போரா­டு­வது என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. 

தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அன்­றைய ஜனா­தி­ப­திக்கும் தமிழர் விடு­த­லைக்­கூட்­ட­ணியின் தலைவர் அமிர்­த­லிங்­கத்­திற்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சுவார்த்தைக­ளின்­போது, அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­ப­தற்­காக மாவ ட்ட சபை­களை உரு­வாக்­கு­வது என்றும், இனப்­பி­ரச்­சி­னைக்குப் படிப்­ப­டி­யாகத் தீர்வு காணும் வழி­மு­றையைக் கையாள்­வது என்றும் உடன்­பாடு எட்­டப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் மாவட்ட சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி இணங்கி முன்­வந்­தி­ருந்­தது.  

தமிழர் விடு­தலைக் கூட்­டணி தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்து 1977 ஆம் ஆண்டு தேர்­தலில் அமோக வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. இந்த வெற்­றியை பேரின அர­சி­யல்­வா­தி­க­ளினால் சகித்துக்கொள்ள முடி­ய­வில்லை. அதே­போன்று தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தனி­நாட்டுக் கோரிக்­கையை ஏற்­றுக்­கொள்­ளவும் அவர்கள் தயா­ராக இருக்­க­வில்லை. 

மறு­பக்­கத்தில், தனி­நாட்டுக் கோரிக்­கை க்கு முர­ணான வகையில் மாவட்ட சபை ஆட்­சி­மு­றையை ஏற்­றுக்­கொண்டு அதற்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு முன்­வந்­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் முடிவை தமிழ் இளை­ஞர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. முக்­கிய அர­சியல் தலை­வர்­களும் கூட அதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர். தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்துத் தீர்­மானம் நிறை­வேற்­றி­யி­ருந்த போதிலும் அந்த இலக்கை அடைவதற்­கான வழித்­த­டங்கள் பற்­றியோ அல்­லது அதற்­கான வியூ கம் குறித்தோ தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலை­வர்கள் தீர்­மா­னங்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. 

ஆனால் கல்­வியில் தமிழ் மாண­வர்­க­ளுக்கு எதி­ராகத் தரப்­ப­டுத்தல் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்த அர­சாங்­கத்தின் மீது அள­வற்ற வெறுப்­பையும் கசப்­பு­ணர்­வையும் கொண்­டி­ருந்த தமிழ் இளை­ஞர்கள் தனி­நாட்டுக் கொள்­கையைக் கடைப்­பி­டித்து, அந்த இலக்கை அடை­வ­தற்­காக ஆயுதப் போராட்ட வழி­மு­றையை மிகவும் இர­க­சி­ய­மாக மேற்­கொண்­டி­ருந்­தனர். இதனால் ஆங்­காங்கே அரச ஆத­ர­வா­ளர்­க­ளான தமிழ்ப் பிர­மு­கர்­க­ளுக்கு எதி­ரா­கவும் பொலிஸார் மற்றும் ஆயு­தப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரா­கவும் அவ்­வப்­போது தாக்­கு­தல்கள் இடம்­பெற்று வந்­தன. 

அந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே தமிழ் ஆயுதப் போராட்­டத்தின் முக்­கிய நிகழ்­வாக நடந்­தே­றிய நீர்­வேலி வங்­கிக்­கொள்­ளையும் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த ஆயுத வன்­மு­றையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இரா­ணு­வத்­தி­ன­ரையும் ஆயுதந் தாங்­கிய பொலிஸா­ரையும் அர­சாங்கம் தீவி­ர­மாகக் களத்தில் இறக்கி எதிர் நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டிருந் தது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே 1978 ஆம் ஆண்டு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்டு, தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதே­வேளை, 1956 ஆம் ஆண்­டிற்குப் பின்னர் வட­மா­கா­ணத்தில் ஐக்­கிய தேசிய கட்சி தனது செல்­வாக்கை இழந்­தி­ருந்­தது. மாவட்ட மட்­டத்தில் அர­சியல் கட்­சிக்­கு­ரிய கட்­ட­மைப்­பையும் அது கொண்­டி­ருக்­க­வில்லை. இந்த  நிலையில் 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்பில் ஒரு உறுப்­பி­ன­ரை­யா­வது வெற்றி பெறச் செய்து, தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் ஏகோ­பித்த வெற் றியைக் குலைத்து, தமிழ்ப்­பி­ர­தே­சங்­களில் தனது அர­சியல் இருப்­புக்கு இடம் தேடி­விட வேண்டும் என்று அன்­றைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன தீர்­மா­னித்­தி­ருந்தார்.  

வேட்­பாளர் தெரிவும் விளை­வு­களும்

இந்த நிலையில் முன்னாள் பாட­சாலை அதி­பரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய அ.தியா­க­ரா­ஜாவை 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்­தலில் தனது வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசிய கட்சி களத்தில் இறக்­கி­யி­ருந்­தது. அவரை எப்­ப­டி­யா­வது தேர்­தலில் வெற்­றி­பெறச் செய்து, தமிழ் மக்கள் மத்­தியில் தனது அர­சியல் இருப்பை நிலை­நாட்டிக்கொள்ள வேண்டும் என்­பதே அன்­றைய ஐக்­கிய தேசிய கட்­சியின் உள்­ளார்ந்த நோக்­க­மாக இருந்­தது. அதற்­காக அவர்கள் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்த வழி­முறை பேரின அர­சி­யல்­வா­தி­களின் குரூர அர­சியல் நோக்­கத்தைக் கொடூ­ர­மான முறையில் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 

ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த அ.தியா­கராஜா 1970 ஆம் ஆண்டு பாராளு­மன்றத் தேர்­தலில் வட்­டுக்­கோட்டைத் தொகு­தியில் அகில இலங்கைத் தமிழ் காங்­கிரஸ் சார்பில் போட்­டி­யிட்டு, இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் அன்­றைய தள­ப­தி­யாகத் திகழ்ந்த அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தைத் தோற்­க­டித்­தி­ருந்தார்.  

அத்­த­கைய அர­சியல் வெற்றி வீர­னாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­யாகச் சென்ற அ.தியா­க­ராஜா, சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் தலை­மை­யி­லான அப் போ­தைய ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்சி அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்து, 1972 ஆம் ஆண்டு கொண்­டு­வ­ரப்­பட்ட தமிழ் மக்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை இன மக்­களின் நலன்­களைப் பாதித்த முத­லா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்­புக்கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்தார்.   

அத்­த­கைய பின்­ன­ணியைக்கொண்ட அ.தியா­க­ரா­ஜா­வையே, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபி­வி­ருத்திச் சபைத் தேர்­தலில் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் முக்­கிய வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்சி கள­மி­றக்­கி­யி­ருந்­தது. பேரி­ன­வாத அர­சியல் கட்­சி­களில் எந்தத் தமி­ழரும் தேர்­தலில் போட்­டி­யிடக் கூடாது என்று இளை­ஞர்கள் செய்­தி­ருந்த எச்­ச­ரிக்­கை­யையும் மீறி தியா­க­ராஜா வேட்­பாளர் மனு தாக்கல் செய்­தி­ருந்தார்.

அந்தத் தேர்தல் 1981ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திக­திக்கு நாள் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது. தேர்­த­லுக்கு 11 நாட்கள் இருந்­த­போது, துவிச்­சக்­கர வண்­டியில் வந்த இரண்டு அடை­யாளம் தெரி­யாத நபர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு ஆளா­கிய தியா­க­ராஜா, வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி இறந்து போனார்.   

வேட்­பாளர் தியா­கராஜா கொல்­லப்­பட்ட சம்­ப­வ­மா­னது, நாட்டின் பழம் பெரும் கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கு விடுக்­கப்­பட்ட நேர­டி­யான சவா­லா­கவே அன்­றைய ஜனா­தி­ப­தியும் அந்தக் கட்­சியின் தலை­வ­ரு­மா­கிய ஜே.ஆர்.ஜய­வர்­தன கரு­தினார். இந்தக் கொலையின் பின்­ன­ணியில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியே இருந்­தது என்ற அனு­மா­னமும் இருந்­தது.

இந்த நிலையில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி தேர்­தலில் ஏகோ­பித்த வெற்றி பெறு­வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்­துடன் எப்­ப­டி­யா­வது ஐக்­கிய தேசிய கட்­சியின் செல்­வாக்கை தேர்­தலில் நிலை­நி­றுத்த வேண்டும் என்ற நோக்­கத்தில் அமைச்­சர்­க­ளான சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்கா ஆகி­யோ­ருடன், பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், மேல­திக செய­லாளர்  மற்றும் அமைச்­ச­ர­வையின் செய­லாளர் ஆகி­யோரை ஜனா­தி­பதி ஜய­வர்­தன யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்பி வைத்­தி­ருந்தார். இந்த உயர் மட்ட அரச குழு­வி­ன­ருடன், தேர்தல் கட­மைக்­கென மேல­தி­க­மாக 500 பேரைக் கொண்ட பொலிஸ் படையும் மே மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்­தது. 

மாவட்ட சபை தேர்தல் பிர­சாரம் சூடு பிடித்­தி­ருந்த அந்தத் தரு­ணத்­தில்தான், மறுநாள் மே மாதம் 31 ஆம் திகதி. யாழ்ப்­பாணம் நாச்­சிமார் கோவி­ல­டியில் நடை­பெற்ற தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தேர்தல் கூட்­டத்தில் 3 பொலிஸார் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரி­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­கா­கினர். அவர்­களில் இருவர் அந்த இடத்­தி­லேயே கொல்­லப்­பட்­டார்கள். மற்­று­மொ­ரு­வ­ரான முஸ்லிம் பொலிஸ்­காரர் காய­ம­டைந்தார். இறந்­த­வர்­களில் ஒருவர் தமிழர் மற்­றவர் சிங்­க­ளவர். 

இந்த வன்­மு­றை­யை­ய­டுத்து, அந்தத் தேர்தல் கூட்டம் குழப்­பத்தில் கலைந்­தது. ஆனால் அந்த சம்­ப­வத்­திற்­கான எதிர்­வினை அன்­றி­ரவு படு­மோ­ச­மான வன்­மு­றை­யாக வெடித்­தது. அது தமிழ் அர­சியல் வர­லாற்றில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் மாறாத ஒரு வடு­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. 

வன்­முறை வெடித்­தது; நூலகம் எரிந்­தது யாழ்.நக­ரமும் அழிந்­தது

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தேர்தல் பிர­சார கூட்டம் கலைந்த அரை மணித்­தி­யா­லத்தில் அந்த இடத்­திற்கு சீருடை அணிந்த பொலி­ஸாரும், சிவி­லு­டையில் இருந்­த­வர்­களும் பெரும் எண்­ணிக்­கையில் ட்ரக் வண்­டி­களில் கொண்டு வந்து இறக்­கி­வி­டப்­பட்­டார்கள். அவர்­களின் வெறி­யாட்­டத்­திற்கு நாச்­சிமார் கோவிலும் அதன் அயலும் இலக்­கா­கி­ன. ஆல­யத்­திற்கு அருகில் இருந்த வீடு­க­ளுக்கும் அங்கு காணப்­பட்ட வாக­னங்­க­ளுக்கும் தீவைக்­கப்­பட்­டது, அந்தப் பகு­தியே இதனால் சுடு­கா­டாகிப் போனது. 

மூன்று பொலிஸார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்டு, அவர்­களில் இருவர் கொல்­லப்­பட்­ட­தற்­கான பழி­வாங்­க­லாக அந்த வன்­முறை அமை­ய­வில்லை. யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்­தி­ருந்­த­வர்­களில் ஒரு சிங்­கள பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் சுட்டுக் கொல்­லப்­பட்­டு­விட்­டாரே என்ற இன­வாத சீற்­றமே அந்த வெறி­யாட்­டத்தில் மேலோங்கியிருந்­தது. வன்­மு­றைகள் நாச்­சிமார் கோவில் பகு­தி­யுடன் நிற்­க­வில்லை. யாழ். நக­ருக்குள் பரவி, அங்­கி­ருந்து யாழ்.நூல­கத்தை முற்­றாக எரித்து சாம்­ப­லாக்கும் வரையில் அது நீடித்­தது. இதனால் யாழ்.நகரம் பேர­ழி­வுக்குள்­ளா­கி­யது. இதனால் தமிழ் மக்­களின் அறிவுப் புதையல் அழிந்து போனது. அவர்­களின் கலா­சார பாரம்­ப­ரிய பொக்­கிஷம் அழிக்­கப்­பட்­டது.  கல்வி அறிவுத் தேட்­டத்தின் ஊற்­றுக்­கண்ணும் அடி­யோடு அழிக்­கப்­பட்­டது. 

அன்­றைய வன்­மு­றைகள் குறித்து பேச்­சுக்கள் நடத்தி பொலி­ஸாரை முகாம்­க­ளுக் குள் முடக்கி வைத்து அமை­தியை நிலை­நாட்ட வேண்டும் என்று யாழ்ப்­பா­ணத்தில் முகா­மிட்­டி­ருந்த அமைச்­சர்கள் மற்றும் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் நேர­டி­யாக கோரிக்கை விடுத்த யாழ். பிர­ஜைகள் குழு­வி­ன­ரிடம் அமைச்சர் ஒருவர் வெளிப்­ப­டுத்­திய கூற்று இந்த வெறி­யாட்­டத்தின் கோரத்­தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

அந்தக் குழுவில் இடம்­பெற்­றி­ருந்த ஒரு வர் அதனை, பின்னர் ஒரு சந்­தர்ப்­பத்தில் அதனை நினை­வு­கூர்ந்தார். 'நாங்கள் இப்­போது மூன்­றா­வது சிங்­கள சடலம் ஒன்றை கொழும்­புக்குக் கொண்டு செல்­கின்றோம். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்' என்று அந்த அமைச்சர் கடுமை தொனிக்க எங்­க­ளிடம் கூறினார் என்று அந்த நினை­வு­கூ­ரலில் அவர் தெரி­வித்­தி­ருந்தார். பின் விளை­வுகள் குறித்த அச்சம் கார­ண­மாக அந்த அமைச்சர் யார் என்­பதை அவர் பெய­ருடன் அடை­யா­ளப்­ப­டுத்­த­வில்லை. 

நாச்­சிமார் கோவி­லுடன் வன்­மு­றைகள் நிற்­க­வில்லை. யாழ்.நகரின் பல இடங்­க­ளிலும் அமைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ்ப் பெரி­யார்­களின் சிலைகள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை உள்­ளிட்ட பத்­தி­ரிகை விற்­பனை நிலை­யங்­களும் கடை­களும் எரி­யூட்­டப்­பட்­டன. சந்தைக் கட்­டிடத் தொகுதி மற்றும் நவீன சந்தைக் கட்டிடத் தொகு­தி­களும் தீயிட்டு எரிக்­கப்­பட்­டன. தலை­ந­க­ரா­கிய கொழும்­புக்கு வெளியில் மாகாண மட்­டத்தில் 1961ஆம் ஆண்டு முதல் வெளி­யி­டப்­பட்டு வந்த ஒரே­யொரு தமிழ் நாளே­டா­கிய 'ஈழ­நாடு' பத்­தி­ரிகை அலு­வ­ல­கமும் எரித்து சாம்­ப­லாக்­கப்­பட்­டது. 

கண்ணில் அகப்பட்ட வாக­னங்கள் பொருட்கள் என்­ப­னவும் அந்த அட்­டூழியத் தீ மூட்­டலில் சிக்கி எரிந்து சாம்­ப­ராகிப் போயின. இந்த வன்­மு­றையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் கட்சி அலு­வ­ல­கமும், பல வீடு­களும் தீவைத்து எரித்து அழிக்­கப்பட்டன. ஒரு வீட்­டி­னுள்ளே ஒளித்­தி­ருந்த நான்கு பேர் வெளியே இழுத்து வரப்­பட்டு கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். 

யாழ். நகரின் பல இடங்­க­ளிலும் இந்த வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­டி­ய­போது, மறு­பக்­கத்தில் யாழ். நூல­கத்தை நோக்கி ஒரு குழு சென்­றது. அதில் பொலி­ஸாரின் சீருடை தரித்­த­வர்­களும் இருந்­த­தாக நேரில் கண்­ட­வர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

யாழ். நூல­கத்தின் உள்ளே நுழைந்­த­வர் கள், பிரிவு பிரி­வாகச் செயற்­பட்டு, சந்­தனப் பெட்­ட­கங்­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த 16 ஆம் நூற்­றாண்டிலிருந்து கையினால் எழு­தப்­பட்ட 10 ஆயிரம் வரை­யி­லான புரா­தன ஓலைச்­சு­வ­டி­க­ளையும், தமிழ் மக்­களின் வர­லாற்று ஆவ­ணங்­களை உள்­ள­டக்­கிய பதி­வு­க­ளையும், பெறு­ம­தி­வாய்ந்த பல்­லா­யிரக்கணக்­கான  புத்­த­கங்­க­ளையும், பழைய நாளே­டு­களின் தொகுப்­புக்­க­ளையும் சேக­ரிக்­கப்­பட்­டி­ருந்த சஞ்­சி­கை­க­ளையும் அள்ளிக் கொண்டு வந்து நூல­கத்தின் மண்­ட­பத்தில் குவித்து அவற்­றுக்குத் தீ மூட்­டி­னார்கள். எல்­லாமாக சுமார் ஒரு இலட்சம் புத்­த­கங்­களை எரித்­த­துடன் அந்த வெறி­யர்கள் நிற்­க­வில்லை. கட்­டி­டத்தின் பல பகு­தி­க­ளுக்கும் தீவைத்து, முழு நூல­கத்­தையும் சாம்பல் மேடாக்­கி­னார்கள். 

பித்­த­லாட்­டமும் பேருண்­மையும்

ஆசி­யாவின் மிகப்பெரிய நூல­க­மாகத் திகழ்ந்த அதே­வேளை, பல்­துறை சார்ந்த பெரும் எண்­ணிக்­கை­யி­லான நூல்கள் மற் றும் வர­லாற்றுப் பதி­வு­களின் உள்­ள­டக்கம் கார­ண­மாக அற்­பு­த­மான நூலகம் என ஆசிய பிராந்­தி­யத்தில் பெயர் பெற்­றி­ருந்­தது. அத்­த­கைய பெருமை மிக்க யாழ். நூலகம் அமைச்­சர்­க­ளான சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்க இரு­வ­ரி­னதும் மேற்­பார்­வையில் அன்று எரி­யூட்­டப்­பட்டு நாச­மாக்­கப்­பட்­டது. அந்த நூலகம் கொழுந்­து­விட்டு எரிந்­ததை, அந்த சூழலில் அமைந்­தி­ருந்த யாழ். விருந்­த­கத்தில் (யாழ்ப்­பாணம் வாடி வீட்டில்) இருந்து அவர்கள் இரு­வரும் நேர­டி­யாகக் கண்டு இர­சித்­த­தையும் மனம் வெதும்­பிய நிலையில் சிலர் நேரில் கண்­டி­ருந்­தார்கள்.

நூல­கத்தின் சுற்றாடலில் அமைந்­தி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வே.யோகேஸ்­வ­ரனின் வீடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யது. அங்கு சென்ற காடையர் கூட்டம், அந்த வீட்­டிற்கும் அயலிலிருந்த வீடு­க­ளுக்கும் தீவைத்­தது. அர­சாங்­கத்­தையும், அதன் அடக்­கு­முறை சார்ந்த போக்­கையும் வெளிப்­ப­டை­யாக விமர்­சித்து வந்த பாராளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனை இலக்கு வைத்து காடை யர் கூட்டம் அவரைத் தேடிச்சென்­றி­ருந்­தது. ஆயினும் அந்த நள்­ளி­ரவுச் சம்­பவ நேரம் வீட்டில் தங்­கி­யி­ருந்த யோகேஸ்­வ­ரனும் அவ­ரு­டைய மனை­வியும் வீட்டிலிருந்து வெளியில் ஓடி தெய்­வா­தீ­ன­மாக உயிர் தப்­பி­னார்கள்.   யாழ். நூலக எரிப்பை நேர­டி­யாகக் கண்­டி­ருந்த சிறில் மத்­தியூ மற்றும் காமினி திசா­நா­யக்க ஆகிய இரு அமைச்­சர்­களும் உட­ன­டி­யாக யாழ். நூலகம் எரிக்­கப்­பட்­டமை ஒரு துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம் என்றே வர்­ணித்­தி­ருந்­தார்கள். 'மது­போ­தைக்கு ஆளா­ கி­யி­ருந்த ஒரு சில பொலிஸ்­கா­ரர்­களே கட்­டுப்­பாட்டை இழந்து தாமா­கவே கொள்­ளை­ய­டிப்­ப­திலும் பொருட்­களைச் சூறை­யா­டு­வ­திலும் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். அது ஒரு துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­பவம்' என்று அவர்கள் தெரி­வித்­தி­ருந்­தார்கள். 

யாழ். நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்­ட­தையும் யாழ். நகரம் துவம்சம் செய்­யப்­பட்­ட­தையும் கொழும்பிலிருந்து வெளி­வந்த தேசிய தின­ச­ரிகள் என கூறப்­பட்ட சிங்­களம் மற்றும் ஆங்­கில நாளே­டுகள் கண்­டு­கொள்­ளவே இல்லை. 

அந்த அமைச்­சர்­களின் இந்தக் கூற்றே நூலகம் எரிக்­கப்­பட்டு, யாழ்.­ ந­க­ரமும் துவம்சம் செய்­யப்­பட்­டி­ருந்­ததன் பின்னர் பேரி­ன­வா­தி­க­ளி­னாலும், அவர்­க­ளுக்கு ஆத­ர­வான ஊட­கங்­க­ளி­னாலும் தொடர்ச்­சி­யாக மேற்­கோள்­காட்டி பிர­சாரம் செய்­யப்­பட்டு வந்­தது. அது தொடர்ந்து நீடிக்­க­வில்லை. 

தனி­நாட்டுக் கோரிக்­கைக்கு முர­ணான வகையில் மாவட்ட சபை ஆட்சி முறை­மையை ஏற்­றி­ருந்த தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செயற்­பாடு குறித்து தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்தி நில­விய போதிலும் யாழ். நூலக எரிப்பும், யாழ். நகர அழிப்பும் தமிழ் மக்கள் மனங்­களில் ஒரு வைராக்­கி­யத்தை உரு­வாக்கி இருந்­தது. தங்­களின் பாது­காப்­புக்­கென ஓர் அதி­காரம் வாய்ந்த நிர்­வாகக் கட்­ட­மைப்­புடன்கூடிய தனி அரசு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்தியிருந்­தது. அந்த உத்­வே­கமே, அரச கட்­சி­யா­கிய ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தேர்­தலில் வாக்­க­ளிக்கக்கூடாது என்ற மன உறு­தியைக் கொடுத்­தி­ருந்­தது. இதனால் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி வெற்றி பெற்­றது. 

அந்தத் தேர்தல் வெற்­றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ஆம் திகதி கூடிய பாரா­ளு­மன்ற அமர்வில், யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்­பாக விவா­திக்­கப்­பட்­டது. அப்­போது தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கமும், வெற்­றி­வேலு யோகேஸ்­வரன் ஆகிய இரு­வரும் யாழ். நூலக எரிப்பும் யாழ். நகர வன்­மு­றை­க­ளுக்கும் அர­சாங்­கமும் பொலி­ஸா­ருமே காரணம் என ஆதா­ரங்­க­ளுடன் நேர­டி­யாகக் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளு­டைய இந்தக் குற்­றச்­சாட்டு பாராளு­மன்ற உரை­களின் பதி­வேட்டில் பதிவு செய்­யப்­பட்­டது. அந்த விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய அப்­போ­தைய அர­சாங்க பேச்­சா­ளரான காமினி திசா­நா­யக்க, பொலி­ஸாரே சேதங்­களை ஏற்­ப­டுத்­தினர் என்­பதைப் பகி­ரங்­க­மாக ஒப்­புக்­கொண்டார்.

'பொலி­ஸா­ரினால் சில சேதங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அதை நாங்கள் மறுக்­க­வில்லை. அதற்­காக நாங்கள் முரண்­ப­டவும் முடி­யாது. பாராளு­மன்ற உறுப்­பினர் யோகேஸ்­வ­ரனின் வீடு பொலி­ஸா­ரினால் எரிக்­கப்­பட்­டது' என பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்து உண்­மையை அவர் ஒப்­புக்­கொண்டார். 

அத்­துடன், 'பொலி­ஸாரின் மன உறுதி, அவர்­களின் உள­வியல் நிலை, நடத்தை தொடர்­பி­லான பாணி என்­பன குறித்தும் நாங்கள் கரி­சனை கொண்­டுள்ளோம்' என் றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். 

அநீதி இழை­யோடும் அழகு...........?

பாரா­ளு­மன்ற விவா­தத்­தின்­போது நூலக எரிப்பும், யாழ். நகரின் மீதான வன்­மு­றை­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும், அமைச்­சர்­களோ அல்­லது அர­சாங்­கமோ அந்தப் பாதிப்­பு­க்க­ளுக்­காக தமிழ் மக்­க­ளிடம் மன்­னிப்பு கோர­வில்லை. இந்தப் பேர­ழிவு குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கவே இல்லை. நான்கு தினங்கள் வன்­மு­றை­களில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளி­களைக் கண்டுபிடித்து நீதி வழங்­கு­வ­தற்கும் அர­சாங்கம் அக்­கறை கொள்­ளவே இல்லை. சக பிர­ஜை­க­ளான, ஒரு சக இனக் குழு­மத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாசார ஒழிப்பு சார்ந்த இன அழிப்பு நடவடிக்கை குறித்து எந்தவிதத்திலும் அரசும் பேரின அரசியல்வாதிகளும் அலட்டிக் கொள்ளவே இல்லை. 

மாறாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏனைய பேரின அரசியல்வாதிகள் யாழ். நகர வன்முறைகளின் மூலம் அடங்கி இருந்தால் இந்த நாட்டில் வாழலாம். இல்லையேல் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிச் செல்லுங்கள் என்ற மறைமுகமான செய்தியையே மறை முகமாகப் பிரதிபலித்திருந்தார்கள்.  

யாழ். நூலகம் எரிக்கப்பட்டதை அறிந்ததும், அந்த நூலகத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல் லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை தாவீது அடிகளார் மாரடைப்பினால் உயிர் துறந்தார். தமிழ் மக்கள் தமது அறிவுக் கரு மூலம் அழிந்துபோனதே என்று மனம் கலங்கி துயருற்றார்கள். யாழ்.நூலகத்தில் சேகரிக் கப்பட்டிருந்த பெறுவதற்கரிய நூல்களும் ஆவணங்களும் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்டு விட்டனவே என்று துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் கல்வி மான்களும் பெரும் கவலை கொண்டார்கள். 

அழிக்கப்பட்ட யாழ்.நூலகத்தைப் பல வருடங்களின் பின்னர், புதிதாக நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற் கொள் ளப்பட்ட முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, நடைபெற்ற இன அழிப் புக்கு நீதி வேண்டும் என்றே யாழ். மக்கள் கோரினார்கள். 

இருப்பினும் இறுதியாக பல வருடங்க ளின் பின்னர் யாழ். நூலகம் புதிதாக நிர்மா ணிக்கப்பட்டு பெறுமதியான புத்தகங்க ளுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள் ளது. வெண்ணிற அழகிய அலங்காரமான கட்டிடமாக, அது திகழ்கின்றது. அது யாழ்.நகரின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கின்றது. 

இருந்தபோதிலும், அந்த நேர்த்தியான தோற்றத்தின் பின்னால் கோரமான இன அழிப்பின் துயரம், மறைந்து கிடக்கின்றது. அதன் பாரம்பரிய பெருமைக்கும், அறிவு பொக்கிஷமாகிய அதன் கடந்த கால உன் னதத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதியும் அந்த அழகில் இழையோடிக் கிடக்கின்றது. அந்த அநீதிக்கு  நியாயம் வழங்கப்படவில் லையே என்ற ஏக்க உணர்வும் அந்த அழ கில் விரவியிருக்கின்றது. இதனை உணர்வு பூர்வமாக உணர்பவர்கள் எத்தனை பேர் என் பது கேள்விக்குறியாகவே உள்ளது.

- மாணிக்கவாசகம் -

 

http://www.virakesari.lk/article/57431

 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்

நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. 

image_1481827016-7e3ec2aef4.jpg

மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற வக்­கிர அர­சியல் தீர்­மா­னத்­தோடு மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு நட­வ­டிக்­கையின் விளை­வாக அந்த அனர்த்தம் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. 

தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் பின் னால், தமிழ் மக்கள் ஏகோ­பித்த நிலையில் அணி திரண்­டி­ருந்த இறுக்­க­மா­னதோர்  அர­சியல் சூழல் அது. அந்தச் சூழல் மிகவும் இறுக்­க­மா­னது. அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும் என்ற அர­சியல் அபி­லாஷை அப்­போது மக்கள் மனங்­களில் கனன்று கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்கள் மீது ஒடுக்­கு­மு­றை­க­ளையும் அடக்­கு­மு­றை­க­ளையும் ஏவி விட்­டி­ருந்த அரசும் பேரின அர­சி­யல்­வா­தி­களும், தமிழ் மக்­களின் இந்த அர­சியல் நிலைப்­பாட்டை எந்த வகை­யி­லேனும் அடித்து நொறுக்­கி­விட வேண்டும் என்று கங்­கணம் கட்­டி­யி­ருந்­தார்கள். 

சமா­தான பேச்­சு­வார்த்­தைகள், இணக்க அணு­கு­மு­றைகள் என்­பன தோற்றுப் போயி­ ருந்த நிலையில் தனி­நாட்டுத் தீர்­மா­னத் தைத்தவிர வேறு வழி­யில்லை என்ற நிலை மைக்குத் தமிழ் மக்கள் தள்­ளப்­பட்­டி­ருந்­தார்கள். இதனால் 1973 ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்டை மாநாட்டில் தனி­நாட்டுக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு, அதற்­காகப் போரா­டு­வது என்ற தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ர%E

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.