• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்!

Recommended Posts

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

June 5, 2019

Sivakumaran.jpg?resize=652%2C418

இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன்.

இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார். பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட சிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். ஜூன் 05, 1974இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 44 ஆவது நினைவுதினம் இன்றாகும்.

pon-sivakumaran-d06fdf44-e38a-4013-8236-

ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.

சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவன் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவன் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். அவன் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினான். அவன் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினான். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தான்.

தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தான் என்பதையும் அவன் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும். #பொன்சிவகுமாரன் #ஈழப்போராட்டம் #ஈழஇளைஞர்கள் #யாழ்ப்பாணம்இந்துக்கல்லூரி #அல்பிரட்துரையப்பா

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

 

http://globaltamilnews.net/2019/123520/

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

பதிவிற்கு நன்றி கிருபன். தமிழீழ வரலாற்றில் பொன். சிவகுமாரன் என்னும் பெயர் நிச்சயம் நிலைத்து நிற்கும். அவரின்  போராட்டத்தைப் பற்றிய வரலாற்றை விவரமாகப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நண்பர் அருள்மொழிவர்மன்,

யாழ் இணையத்திலேயே தேடினால் பல வரலாற்றுப் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

பல வருடங்களுக்கு முந்தைய பதிவு:

 

 

Share this post


Link to post
Share on other sites

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன் சிவகுமாரன்!

AdminJune 5, 2019

sk.jpg?resize=640%2C760
எமது தேசத்தின் நாளைய தூண்களான மாணவர்கள் நாளை எம் நாட்டைக் கட்டியெழுப்பும் இளைய சிற்பிகள். எமது தேச விடியலிற்காய் தம் உயிரை அர்ப்பணம் செய்தவர்களில் மாணவர்களின் பங்கு அளப்பரியது.


தமிழீழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெறுவதற்கு ஊன்றுகோலாக இருந்து. இப்போராட்டம் பெருவிருட்சமாக வளர்வதற்கு காரணமானவர்கள். உலகத்தின் புருவத்தை உயர்த்தி தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் குரல் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஆணிவேராக இருந்தவர்கள். இற்றைக்கு நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் தாயகத்தை மீட்டெடுக்கும் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் அன்று மாணவர்களாக இருந்த தேசியத் தலைவரும் அவர் தம் தோழர்களுமே.


இம்மாணவ விடிவெள்ளிகளுள் முதன்மையானவர் உரும்பிராயைச் சேர்ந்த பொன். சிவகுமாரன் அவர்கள் ஆவார். 1950 ஆகஸ்ட் 26இல் இவர் பொன்னுத்துரை அன்னலட்சுமி தம்பதிகளின் மகனாகப் பிறந்தார். தமிழின உணர்வும் விடுதலை வேட்கையும் இவரிடம் குடிகொண்டிருந்தது. 1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தில் இவரது மூத்த சகோதரி பருத்தித்துறை துறைமுகத்தில் உடுத்த துணியுடன் வந்திறங்கியபோது, தன்னுடைய அக்கா ஏன் இவ்வாறு கண்ணீருடன் வந்திறங்க வேண்டும் என்ற கேள்வி இவருள் எழுந்தது. எட்டுவயதிலேயே இவ்வாறான சிந்தனை இவர் மனதில் உதித்தது.


வெளியில் நண்பர்களுடன் சென்றதாக கூறப்படும் பிரஸ்தாப இளைஞர் அப்பகுதியில் உள்ள வீதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி குற்றுயிராய் கிடந்ததையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இவர் தனது தாயிடம் சென்று ?ஏன் அம்மா அக்கா இப்படி கண்ணீர் வடித்த படி இங்கு வர நேர்ந்தது? சிங்களவர்கள் அடித்தால் இப்படி அடிவாங்கிக் கொண்டு நாம் ஓடி வரவேண்டுமா? இது வெட்கம் இல்லையா? நாமும் திருப்பி அடித்தால் என்ன?? என்று கேட்டானாம்.


இயற்கையிலேயே இவரிடம் திறமைகள் பல குடிகொண்டிருந்தது. 1960ஆம் ஆண்டில் தனது பத்து வயதில் ?தினப் புழுகு? என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகையை நடாத்தினான். அதில் இவர் ?பி.எஸ்.கே? என்ற பெயரில் எழுதினார். இதே காலகட்டத்தில் 1970இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது. இனவாதியான சிறீமா அம்மையார் தமிழர்கள் மீது அளவிறந்த அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். இளைய சமுதாயத்தின் குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தின் உயர் கல்வியில் சிறீமா அரசு கைவைத்தது. தமிழர்களை கல்வியில் பின்தங்க வைக்கவேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு ?தரப்படுத்தல்? நடைமுறையை பல்கலைக்கழக கல்வியில் புகுத்தியது. தமிழ் மாணவன் ஒருவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 250 புள்ளிகள் பெறவேண்டும். அதேவேளை சிங்கள மாணவன் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் 229 புள்ளிகள் பெற்றால் போதும்.

இதைக்கண்டு குமுறி எழுந்தது தமிழ்ச் சமுதாயம். தமிழ் மாணவர் பேரவை பிறந்தது.
1970ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் நாள் தமிழீழமெங்கும் சிங்கள் வஞ்சகக் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை தமிழீழத்தில் நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர். இதனால் இவன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரள்வதை கண்ட சிங்கள அரசு உரும்பிராய்க்கு வந்த சிங்கள உதவி அமைச்சர் ஒருவருக்கு கைக்குண்டு வீசியதாக சந்தேகத்தின் பெயரில் 1970இல் சிவகுமாரனை கைது செய்தது. இத்தனை கொடுமைகளை சிங்கள அரசு செய்த போதும் தனது கல்வியைக் கைவிடாது பல்கலைக் கழக கல்விப் பரிட்சையில் சித்தியடைந்தான்.


அந்தக் கால கட்டத்தில் இவரது தந்தை ?தம்பி நீர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு படி? என்று அறிவுரை கூறினார். ஆனால் நாட்டுப்பற்றும் ஈகமும் மிக்க சிவகுமாரன் ?அப்பா நான் எங்கும் போகமாட்டேன். இந்த நாட்டில் இருந்துகொண்டே எனது இனத்தின் விடுதலைக்காகப் போராடுவேன்.


என் உடலில் உயிர் இருக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும் இந்த தமிழ் மண்ணிற்கே சொந்தமாகும் என்று கூறினார். இவர் தாயிடம் அடிக்கடி கூறுவராம்? அம்மா உள்ள உயிர் ஒன்றுதான். அது போகப் போவதும் ஒரு தடவைதான். அப்படிப் போகும் இந்த உயிரை. ஒரு புனித இலட்சியத்திற்காக கொடுப்பதில் என்ன தவறு?தமிழராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரன் மனதைப் பலமாகப் பாதித்தது. தமிழராய்ச்சி மாநாட்டில் சிறீலங்கா பொலிசாரின் அடாவடித்தனமான மக்கள் விரோத தாக்குதல்களுக்கும் மத்தியில் அவர்களின் அட்டகாசங்களால் அவதிப்படும் வயோதிபர்களையும் மங்கையர்களையும் மழலைகளையும் வெளிநாட்டுப் பேராளர்களையும் காப்பாற்றுவதில் இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். அன்று சிவகுமாரனால் மானம் காப்பாற்றப்பட்ட பெண்கள் பலர், உயிர் காக்கப்பட்ட வயோதிபர்கள் பலர். தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சக தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்ற முன்னின்று உழைத்தான். அப்போது கம்பி வேலிக்கு பக்கத்தில் ஏழு தமிழர்கள் உயிர் மீட்கப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கம்பி வேலியின் மீது சிங்களக் கடையர் காவற்படை அறுத்து வீழ்த்திய மின் கம்பி யொன்று மின்சாரத்தைப் பாய்ச்சியதால் ஏற்பட்ட துர்அனர்த்தம் இது.

 

http://www.errimalai.com/?p=21248

Share this post


Link to post
Share on other sites

சில வருடங்களாக ஒவ்வொரு முறையும் சிறிலங்கா செல்லும்போதும்  
இவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகின்றது.
நினைவஞ்சலிகள் 

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.!

Last updated Jun 4, 2020

தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

sivakumaran_06061974-302x375-1-scaled.jpயாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

sivakumaran_001.jpg

தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.

போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.

பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

siva-annai-book.jpg

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/news/135325

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

74ம் ஆண்டே முழுக்க முழுக்க சிங்கள ஆக்கிரமிப்பினுள் இருந்தபடி 

தனியொருவனாக சிங்கள அரசபயங்கரவாதத்துக்கு எதிராக போராடி சிங்களவனால் கொல்லப்பட்ட  சிவகுமாரன்..

ஒருவேளை 80 பதுகளின் ஆரம்பத்திலும், 83  களின் இயக்கங்களின் எழுச்சி காலத்திலும்  உயிரோடு இருந்திருந்தால்

இவர் பெயர் எடுப்பதா என்ற காழ்ப்புணர்வில் 

நம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில்..

தாமதமாய் கொல்லப்பட்டிருப்பார்...

சிங்களவனால் அல்ல

தமிழ் இயக்கங்களினால்.

வரலாறுகள் நாம் விரும்பாவிட்டாலும் சாக்கடை கலந்த பன்னீரை தெளிப்பவை.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு போகத் தான் சொல்லினம்...எனக்கு சும்மாவே போக விருப்பமில்லை அத்தோடு பயம் ...இந்த கால கட்டத்தில் துண்டரப் போக பயமாயிருக்கு ...பதிலுக்கு நன்றி நில்மினி
  • நானும் மிக அண்மையில் நான் முக கவசம் அணிய ஆரமபித்தேன்.அதுவும் பேருந்துகளில் திரியும் போது தண்டப் பணம் கட்ட வேண்டிய நிலை வரலாம் என்றதனால்.. உண்மையில் சுகாதாரம் கரூநி அணிந்து கொள்கிறார்களா..? .அல்லது நாகரிகம் கருதி அணிகிறார்களா புரியவில்லை காரணம் அணிந்து கொள்ளும் உடுப்பு நிறங்களில் எல்லாம் முக கவசம் தேவையா..?தமிழ் உடுப்பு கடைகளில் மாஸ்க் ஒன்றின் விலை$10டொலர்கள்..
  • என்ன அழகு உன் அருள் அழகு நிலவைப் போல் அழகுள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ அழகு அழகு என்ன அழகு என்ன அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2 கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே சீரோனின் அருள் மகளே என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - அம்மா கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே  என்னை கொள்ளை கொண்டதே உன் இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன் வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க  
  • இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா? அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம். புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான். புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள். ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார். குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம். ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ? லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள். வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 
  • இதைத்தான் நான் இலண்டனில் பழகுபவர்களிடம் காண்பது.  இந்தத் திரியில் பலரும் சொல்வது பேச்சுத் திருமணத்தின்போது சாதி பார்க்கப்படுகின்றது.  ஆனால் எல்லாப் பேச்சுத் திருமணங்களிலும் இல்லை.   தாயகத்தில் சாதீயம் முன்னர் இருந்த உக்கிர நிலையில் இருந்து மாறி திருமண விடயத்திலும், சில கோவில்களில் அனுமதி இல்லை என்பதிலும் சுருங்கிவிட்டது. முன்னரைப் போல, கல்வியில், காணி வாங்குவதில், ஏன் பாடசாலை அனுமதிகளில், வேலை பெற்றுக்கொள்வதில் இருந்த உக்கிர நிலையோ, சாப்பாட்டுக் கடைகளில் இரட்டைக் குவளை பாவிக்கும் முறையோ எல்லாம் திரும்பிவராது.  பழைய வரலாற்றை சிவா சின்னப்பொடி (யாழ் உறுப்பினர்தான்) எழுதிய நினைவழியா வடுக்கள் என்ற புத்தகத்தில் படித்திருந்தேன். நினைத்தே பார்த்திராத கொடுமைகளில் இருந்து  விலகி எவ்வளவு முற்போக்கான மாற்றங்கள் வந்துவிட்டன. இன்னும் முன்னோக்கித்தான் பயணிப்போம் என்பதில் நம்பிக்கை நிறையவே இருக்கின்றது.