யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

இந்தி திணிப்பின் அரசியலுக்கு பதில், தமிழ் திணிப்பு

Recommended Posts

39 minutes ago, ராசவன்னியன் said:

இங்கே மல்லுகளைப் பற்றி உயர்வாய் பேசுவதால் எழுத வேண்டியுள்ளது.

எப்படி தன் சுயத்தை இழந்து இன்னொரு மொழியை புணர்ந்து மலையாளம் உருவானது என்பது அனைவருக்கும் தெரியும்.

பல மல்லுகளின் குணாதிசயங்களை கடந்த இருபது வருடங்களாக ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிற அனுபத்தில் சொல்கிறேன். 

'பிழைக்க வேண்டும், ஒரு காரியத்தை அவர்களுக்கு சாதகமாக முடிக்க வேண்டுமெனில்' எந்த இழிநிலைக்கும் செல்ல தயாரக இருப்பார்கள். ஆகவே  தங்கள் சுயமிழந்த மொழியைவிட்டு இந்தியை தேசியமொழியாக மல்லுகள் ஏற்றுக்கொண்டதில் அதிசயமில்லை.

மல்லுகளிடம் கேட்டால், இந்தி என்பது 'ராஷ்ட்ரா பாஷா' என்பார்கள். இதை என்னிடம் பல மல்லுகள் சொல்லி, "உங்களுக்கு ஏன் தேசிய மொழி தெரியவில்லை..?" என கேட்பதுண்டு.

"எது இந்தியாவின் தேசிய மொழி..? இந்தியாவிற்கு தேசிய மொழி என எதுவுமே இல்லை..!" என இரண்டு மூன்று ஆதாரங்களை அவர்களின் மூஞ்சியில் வீசியவுடன், கப்சிப்பென அடங்கிவிடுவார்கள். அதன் பின் என்னிடம் இந்தி மொழியைப் பற்றி பேசுவதே இல்லை. 

"என் வேலைக்கு தேவை ஏற்பட்டால், நான் அரபி மொழியை கற்றுக்கொள்வேனே தவிர, இந்தியை அல்ல..!" என சொன்னவுடன் பதிலொன்றும் வராது. 'இன்னொரு மொழியை கற்றல்' என்பது வேலையின் தேவையை பொறுத்தது.

"உனது அடையாளம் என்ன..?" என அரபிகள் மல்லுகளிடம் கேட்க, அவர்கள், 'இந்தியன்' என்றார்கள், அதே கேள்வியை என்னிடம் கேட்டவர்கள் நான் 'தமிழன்' என்றதும் அதன்பின் யாரும் 'அடையாளம்' பற்றியோ 'மொழி' பற்றியோ யாரும் வாய்பேசுவதில்லை. இதுதான் வித்தியாசம்..!

'எப்படியும் வாழலாம்' என்பது மல்லுகளின் கொள்கை!

 'இப்படித்தான் சுயமரியாதையுடனும், தன்மானத்துடனும், இன அடையாளத்துடனும் வாழ வேண்டுமென்பது' தமிழரின் கொள்கை!

இதில் 'எது திறம்?' என்பது அவரவர்களின் மனநிலையை பொறுத்தது.

 

சகோதரர் ராசவன்னியன் , உங்களுடைய பெயரின் தீவிர ரசிகன் நான்.

உங்களின் கருத்துக்கள்  நான் முன்பு எழுதிய சில கருத்துக்களை தொட்டுச்  செல்வதால் இதனை உங்களுக்கு விலாசமிடலாம் என தோன்றிற்று

(1) சுயம் இழப்பதற்கு நான் தனிப்பட்ட முறையில் மிகவும் எதிரானவன் அதே சமயம் சமூக அடிப்படையில் முன்னேறுவதற்குரிய உள்ளடக்கல் ( inclusive )  அம்சங்கள் பற்றியும் கவலை கொண்டவன்.

(2) நண்பர் பெருமாள்மலையாளத்தவர் இந்தியை ஏற்றுக் கொள்ளாமலே மத்திய அரசு துறைகளில் பெரும் பங்கு வகிக்கின்றனர்”  என்ற கருத்துப் பட எழுதியதாலேயே நான் அவர்களை பற்றி ஒரு சிறு  ஆராய்ச்சி செய்து எழுத வேண்டி வந்தது மற்றும் படி ஒரு இனக்குழுமம் என்ற வகையில் அவைர்களின் முன்னேற்றம் குறித்து நான் மதிப்பும் வைத்திருக்கிறேன் - இதன் கருத்து தனிப்பட்ட முறையில் எனது சுயத்தை இழக்க தயாராக இருக்கிறேன்  என்பதல்ல.   

(3) எப்படியும் வாழலாம்' என்பது மல்லுகளின் கொள்கை” - வ்வளவு இலகுவாக உங்களால்  இப்படியான  தீர்ப்பு சொல்ல முடிகின்றது என நினைத்தால் மலைப்பாக இருக்கின்றது।  அது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல என்றே தோன்றுகின்றது। ( முழு இந்தியாவிலும் கேரளத்தின் கல்வி அறிவுத்  தரம் மேம்பட்டது என்பது சரியான தரவு என நினைக்கிறேன் )

(4) உங்களிடம் இதற்குரிய பதில் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன் - இரண்டு படித்த மலையாளிகள் சந்தித்தால் அவர்கள் எந்த மொழியில் உரையாடுவார் ?

 என்னிடம்   வேறு இரன்டு கேள்விகளுக்கு பதில் உண்டு

() இரண்டு படித்த சிங்களவர் சந்தித்தால் எந்த மொழியில் உரையாடுவார் - சிங்கள மொழியில் தான்

(பி) இரண்டு படித்த தமிழர் சந்தித்தால் எந்த மொழியில் உரையாடுவார் - ஆங்கில மொழியில் தான்

யார் வெட்கப் பட வேண்டும் என்பதில்  கொஞ்சம் குழப்பம்  தான் ……!

Share this post


Link to post
Share on other sites
8 minutes ago, சாமானியன் said:

 

சகோதரர் ராசவன்னியன் , உங்களுடைய பெயரின் தீவிர ரசிகன் நான்.

உங்களின் கருத்துக்கள்  நான் முன்பு எழுதிய சில கருத்துக்களை தொட்டுச்  செல்வதால் இதனை உங்களுக்கு விலாசமிடலாம் என தோன்றிற்று

(1) சுயம் இழப்பதற்கு நான் தனிப்பட்ட முறையில் மிகவும் எதிரானவன் அதே சமயம் சமூக அடிப்படையில் முன்னேறுவதற்குரிய உள்ளடக்கல் ( inclusive )  அம்சங்கள் பற்றியும் கவலை கொண்டவன்.

(2) நண்பர் பெருமாள்மலையாளத்தவர் இந்தியை ஏற்றுக் கொள்ளாமலே மத்திய அரசு துறைகளில் பெரும் பங்கு வகிக்கின்றனர்”  என்ற கருத்துப் பட எழுதியதாலேயே நான் அவர்களை பற்றி ஒரு சிறு  ஆராய்ச்சி செய்து எழுத வேண்டி வந்தது மற்றும் படி ஒரு இனக்குழுமம் என்ற வகையில் அவைர்களின் முன்னேற்றம் குறித்து நான் மதிப்பும் வைத்திருக்கிறேன் - இதன் கருத்து தனிப்பட்ட முறையில் எனது சுயத்தை இழக்க தயாராக இருக்கிறேன்  என்பதல்ல.   

(3) எப்படியும் வாழலாம்' என்பது மல்லுகளின் கொள்கை” - வ்வளவு இலகுவாக உங்களால்  இப்படியான  தீர்ப்பு சொல்ல முடிகின்றது என நினைத்தால் மலைப்பாக இருக்கின்றது।  அது அவ்வளவு சுலபமான விடயம் அல்ல என்றே தோன்றுகின்றது। ( முழு இந்தியாவிலும் கேரளத்தின் கல்வி அறிவுத்  தரம் மேம்பட்டது என்பது சரியான தரவு என நினைக்கிறேன் )

(4) உங்களிடம் இதற்குரிய பதில் நிச்சயம் இருக்கும் என நினைக்கிறேன் - இரண்டு படித்த மலையாளிகள் சந்தித்தால் அவர்கள் எந்த மொழியில் உரையாடுவார் ?

 என்னிடம்   வேறு இரன்டு கேள்விகளுக்கு பதில் உண்டு

() இரண்டு படித்த சிங்களவர் சந்தித்தால் எந்த மொழியில் உரையாடுவார் - சிங்கள மொழியில் தான்

(பி) இரண்டு படித்த தமிழர் சந்தித்தால் எந்த மொழியில் உரையாடுவார் - ஆங்கில மொழியில் தான்

யார் வெட்கப் பட வேண்டும் என்பதில்  கொஞ்சம் குழப்பம்  தான் ……!

புரிதலுக்கு நன்றி திரு.சாமானியன்.

மூன்றாவது கருத்திற்கு எனது பதிலில் மாற்றமில்லை, ஏனெனில் இது இருபது வருட பட்டறிவு.

நான்காவது கருத்திற்கு எனது பதில்.

நேற்று அலுவலகத்தில் புதிய மின்நிலையத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை திறந்து அதுபற்றிய தொழிற்நுட்ப விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

எனது அருகில் அமர்ந்திருந்த (முன்பின் தெரியாத) ஒரு மின்பொறியாளரை பார்க்க, அவர் தென்னிந்தியராக இருந்தார். நான் வழக்கம் போல பத்தோடு ஒன்னு பதினொன்னாக அவரும் மல்லுவாக இருக்கலாமென அமைதியாக இருந்தேன். எனக்கு அவரின் வேலை செய்யும் துறையில் ஒப்பந்த புள்ளிகள் பற்றிய கேள்விகள் இருந்ததால், நான் அவர் எந்த மாநிலமென்ற பின்புலம் தெரியாததால், ஆங்கிலத்தில் உரையாடலை ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் சகஜமாக தொடர்பாடல் தொடர்ந்தவுடன் 'நீங்கள் எந்த மாநிலம்..?' எனக் கேட்டேன். அவர் 'ஆந்திரா' என்றார். மேலும் உரையாடிவிட்டு பிரிந்தோம்.

முன்பின் அறியாத இருவர் இந்தியர்களாக இருந்தாலும், பின்புலம் தெரியாத பட்சத்தில் பொதுவாக உலகம் முழுவதும் பேசப்படும் ஆங்கிலத்தில் உரையாடுவதான் சிறந்தது.

ஆனால் அதுவே ஏற்கனவே தெரிந்தவர்கள் ஒரே மொழி இனத்தவர் என்றால், தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் உரையாடுவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுதான்.
 

Share this post


Link to post
Share on other sites

ஏன் இந்தி திணிப்பு தவறு எனவும் எந்த மொழியும் தானாக விரும்பி கற்பதே தனிமனித சுதந்திரத்திக்கு உகந்தது

 

Share this post


Link to post
Share on other sites

புலம்பெயர்ந்த தமிழர்கள் இளையவர்கள் கூட இந்த தமிழ் இசையால் தமிழை விரும்புகிறார்கள், கற்கிறார்கள் 
சித் சிறிராம் அவ்வாறான இன்றைய ஒரு தமிழ் பாடகர்  

 

Share this post


Link to post
Share on other sites

சிங்களத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ் மொழியை விரும்பி கற்க கூடிய  தளம் / இது யூடியூப் பிரிவு 

 

Share this post


Link to post
Share on other sites

வடக்கத்திய மாநிலங்கள் தன்னுடைய மொழி குறித்தான நிலைப்பாட்டில் கவனம் செலுத்தாததுதான் ராஜஸ்தானி, மராத்தி, போஜ்புரி ஆகிய மொழிகள் தங்களுக்கான கலாசாரம், அடையாளம், பொருளாதாரம், பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளன.

மொழி என்பது வெறும் மொழி மட்டுமல்ல; மொழிதான் அரசியல். மொழியே அரசியல் ஆயுதமும்கூட. அதை வடக்கு மாநிலங்கள் பெரும்பாலான நேரங்களில் மறந்து விடுகின்றன.

காணாமல்போன மராத்தி சினிமா; கோடிகளில் புரளும் தமிழ் சினிமா... மொழியே அரசியல்!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஜினி பேசும்போது, ``நான் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சனின் மிகப்பெரிய ரசிகன்“ எனச் சொல்ல, `யார் அந்த அமிதாப்பச்சன்' என்ற கேள்விதான் என் முன் முதலில் எழுந்தது.

பின்னர்தான், அவர் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார்; இந்தி சினிமா மும்பையை மையமாகக் கொண்டது என்ற முரண்பாடுகள் எனக்கு விடையாகக் கிடைத்தது. ஆம், இது முரண்பாடுதான். உண்மையில் மும்பை என்பது மகாராஷ்டிராவின் தலைநகரம் என்பதுதானே வரலாறு. மகாராஷ்டிராவில் தாய்மொழி என்பது மராத்தி. நியாயப்படிப் பார்த்தால் ஒன்று அமிதாப் மராத்திய சினிமாவின் சூப்பார் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்தி சினிமாவின் தலைநகராக உத்தரப்பிரதேசத்தின் லக்னோவோ அல்லது பீகார் மாநிலத்தின் பாட்னாவோ திகழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால், இந்தியாவின் பொருளாதார தலைநகராக விளங்கும் மும்பை, இந்தி சினிமாவுக்கும் தலைநகராக விளங்குவதற்குப் பின்னால்தான் ஒளிந்திருக்கிறது மொழி மீதான அரசியல்.

தற்போதைய சூழலில் தமிழில் ஆண்டுக்குக் குறைந்தது 150 படங்கள் வெளிவருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் புரளும் துறையாக தமிழ்த் திரையுலகம் மாறியுள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்துள்ளது மராத்திய மொழி சினிமா.

வங்கமொழியைப் பொறுத்தவரை, ஒரு காலத்தில் கலையும், கலைஞர்களும் சிறந்து விளங்கிய மொழியாகவும், மேற்குவங்க மாநிலம் அத்தகைய கலைஞர்களைத் தன்னகத்தே கொண்ட மாநிலமாகவும் திகழ்ந்தது. இந்தியாவின் தேசியகீதமே வங்க மொழியில் இயற்றப்பட்டதுதான். இன்னும் குறிப்பாக உலக அரங்கில் இந்திய சினிமாவைப் பற்றிப் பேசுபவர்கள், சத்யஜித்ரேவைத் தவிர்த்து விட்டுப் பேசமுடியாது. அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அப்படிப்பட்ட பெருமைக்குரிய வங்கமொழி சினிமாவின் இன்றைய நிலை என்ன, அவர்களின் வியாபாரம் எத்தனை கோடி, பெங்கால் மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பன போன்ற கேள்விகளை முன்வைத்தால் ஏமாற்றமே விடைகளாகக் கிடைக்கும்.

`இந்தி தெரியாதது என்னுடைய வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது' என்கிறார் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். `அப்படியெனில் அவர் உடனே வளர்க்க வேண்டியது இந்தியையா, தமிழையா' என்பதை அவர்தான் யோசித்து விடைசொல்ல வேண்டும்.

முழுமையாக வாசிக்க https://www.vikatan.com/news/india/159741-the-language-politics-in-india.html?fbclid=IwAR1tq1sev2n5iFmSxrTfXHd3WW5PO6Mu1bp8JtZVEjR20lqqe2XjKPXMsR4

 

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழர்களின் குரல் - திரும்பும் வரலாறு - மணி சங்கர் அய்யர்காங்கிரஸ் மூத்த தலைவர், 

பிராந்திய மொழிகளுடன் சேர்த்து இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை உயர்நிலை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்று புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவில் கஸ்தூரி ரங்கன் கமிட்டி பரிந்துரை செய்ததற்கு தமிழர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பிற மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அரசு பள்ளிகளில் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்களை நினைவு கொள்ள வேண்டும்.

இது இரு நூற்றாண்டுக் கதை. 1833ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி கிறித்தவ மிஷினரிகளின் செயல்பாட்டை கட்டுபடுத்த தவறியது. கிறித்தவத்தை பரப்புவதற்கான மிஷினரிகள் படையெடுத்தன, குறிப்பாக தென் இந்தியாவை இலக்கு வைத்தன.

தென் இந்தியாவில் மிஷினரிகள் அதிகம் கால்பதித்தன என்பதை இரு மேற்கொள்கள் மூலம் கூறலாம்.

"1832ஆண்டுக்குள் 40,000க்கும் மேற்பட்ட கிறித்தவ துண்டுப்பிரசுரங்கள் தமிழில் அச்சிடப்பட்டன. அவை 1852ஆம் ஆண்டிற்குள் 2,10,000 ஆகின." (எம்.எஸ்.எஸ் பாண்டியனின் பிராமின் & நான் பிராமின், புத்தகம்)

"1852ஆம் ஆண்டில், மெட்ராஸில் 1185 மிஷனரி பள்ளிகளில் 38,000 மாணவர்கள் இருந்தனர். ஆனால் பாம்பே மற்றும் வங்காள பரசிடென்சியை சேர்த்து 472 பள்ளிகள் இருந்தன அதில் 18,000 மாணவர்கள் பயின்றனர்." (எஸ்.நாரயணின் தி ட்ரவிடியன் ஸ்டோரி புத்தகம் )

இவை அனைத்தும் கிறித்தவ மதம் குறித்த செய்திகளை பரப்புவதற்கு மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல.

இந்து மதக் கடவுள்களையும், நம்பிக்கைகளையும் இழிவு படுத்துவதன் மூலம் இந்துக்கள் மதம் மாறுவதற்கு தெரிவிக்கும் எதிர்ப்பதை குறைக்கலாம் எனவும் கருதப்பட்டது.

வேதங்கள், புராணங்கள், மற்றும் சங்கர அத்வைத தத்துவம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்ற பிராமணர்கள், ஐரோப்பிய மற்றும் பிரிட்டனின் கலாசாரத்தை தெரிந்தவர்கள் இதை எதிர்க்க முற்பட்டனர்.

சமஸ்கிரத மொழியில் உள்ள "ஆரியர்கள்" என்ற பதத்துடன் தங்களின் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளும் பிராமணர்கள், "பாரம்பரியம்" என்ற பெயரில் அவர்களின் "பழமையான சாதி அதிகாரங்களை" நடைமுறைப்படுத்தினர். மேலும் ஆங்கிலத்தில் உள்ள புலமையின் காரணமாக "காலனித்துவ நிறுவன அமைப்பின் அதிகாரத்தை நவீனமாக செயல்படுத்தினர்." (எம்.எஸ்.எஸ் பாண்டியன்).

காலனித்துவ நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை விளக்குகிறார் எழுத்தாளர் நாராயண்: "1892ஆம் ஆண்டிலிருந்து 1904ஆம் ஆண்டிற்குள் இந்திய சிவில் சேவையில் தேர்வாகிய 16 பேரில் 15 பேர் பிராமணர்கள். மேலும் தேர்வு செய்யப்பட்ட 27 பொறியாளர்களில் 21 பேர் பிராமணர்கள்."

ஆரிய பரம்பரை மற்றும் சமஸ்கிரத கலாசாரம் ஆகியவற்றை கொண்ட பிரமணர்கள் மக்கள் தொகையில் 3 சதவீதத்துக்கும் குறைவானவர்கள், அந்த சமயத்தில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெறுபவர்களில் 67 சதவிகிதம் பேர் பிராமணர்களாக இருந்தனர்.

அரசு பணிகள், தலைமைச் செயலகம் மற்றும் பிற மாவட்ட நிர்வாகத்திலும் அவர்கள்தாம் அதிகம் இருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் ஆகியவையும் கிட்டதட்ட அவர்கள் கட்டுபாட்டிலேயே இருந்தன. பிரபலமான பத்திரிகையாளர்கள் பிராமணர்கள்; ஏன் தனியார் வர்த்தகங்களிலும் அவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்தினர்.

இதற்கான எதிர்ப்பு சீக்கிரமே வந்தது. 1916ஆம் ஆண்டு டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறி "பார்பனர் அல்லாதார் கொள்கை பிரகடனம்" ஒன்றை வெளியிட்டனர்.

1916ஆம் ஆண்டு, மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். தமிழில் உள்ள சமஸ்கிரத கலப்பு மற்றும் தமிழ் சொற்கள் அல்லாத சொற்களை நீக்குவதற்காக அந்த அமைப்பை தொடங்கினார். இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சியாக உருவெடுத்தது. மெட்ராஸ் பிரசிடென்ஸியில் இருந்த பிராமணர்களை அதிகமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வலுவான ஒரு சவாலை கொடுக்க தொடங்கியது.

மகாத்மா காந்தியின் பரிந்துரையால் 1918ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தி பிரசார சபா, தமிழின அடையாளம் குறித்து அரசியல் மொழி தொடர்பாக ஏற்பட்டிருந்த எதிர்ப்பானதை மேலும் வளர்த்தது. ஒருகாலத்தில் காங்கிரஸ், பிராமணர்கள், ஆரியர்கள், வட இந்தியர்கள், சமஸ்கிரதம் மற்றும் இந்தி திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக இருந்து வந்த நிலை திராவிட நாடு என்ற கோரிக்கைக்கு வித்திட்டது.

சமூக, மொழி கலாசாரத்துக்கான எதிர்ப்புரட்சி உச்சத்தை அடைந்தபோது 1937ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.

நீதிக்கட்சி தேர்தல்களில் தடுமாறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம் அதனை பின்னுக்கு தள்ளியது. அதன்பின் 1938ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவரானார் பெரியார். அதனை திராவிட கழகம் என்றும் பெயர் மாற்றம் செய்தார்.

மெட்ராஸ் மாகாணாத்தின் முதலமைச்சராக இருந்த காந்தியவாத பிராமணராகிய ராஜாஜி, 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி சுதேசமித்ரன் பத்திரிகையில், "இந்தி கற்றுக் கொண்டால் மட்டுமே தென் இந்தியர்கள் பிற மக்களின் மத்தியில் மதிப்பை பெற முடியும்," என எழுதினார். இதனை அரசு ஆணையாகவும் அவர் பிறப்பித்தார். அதன்பின் இடைநிலைப் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கினார்.

இதுவே தமிழர்கள் மத்தியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ஆம் ஆண்டிலிருந்து 1940 வரை நடைபெற்றது. அதுவே தமிழ்நாட்டு அரசியலின் வரைபடத்தையும் மாற்றியது என்று கூறலாம்.

இந்த அரசாணைக்கு எதிராக நீதிக்கட்சி மற்றும் முஸ்லிம் லீக்கால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் படை 42 நாள் பேரணியை தொடங்கியது. அது ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் 1938ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற்றது. திருச்சியிலிருந்து மெட்ராஸ் வரை நடைபெற்ற அந்த பேரணி 239 கிராமங்கள் மற்றும் 60 நகரங்களில் சென்றது. அந்த பெரிய பேரணியில் 50,000 பேர் கலந்து கொண்டனர்.

"தமிழர்கள் கண்ணீர் சிந்தும்போது ஆரியர்கள் சிரிக்கின்றனர்." மற்றும் "பிராமண சமூகம் தமிழ்த்தாயை கொல்கிறது" என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்தி எதிர்ப்பு மாநாடுகள் அந்நாட்களில் இயல்பான நிகழ்வுகளாக இருந்தன. 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு படை உருவானது. பெண்கள் நடத்திய மாநாட்டில் ஈ.வெ.ராமாசாமிக்கு 'பெரியார்' என பட்டம் வழங்கப்பட்டது. அந்த பெயராலேயே அவர் பெரிதும் அழைக்கப்பட்டார்.

தமிழர்களுக்கே தமிழ்நாடு என்னும் வார்த்தையை உருவாக்கி தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்தார்.

அமெரிக்க வாழ் இந்திய எழுத்தாளரான சுமதி ராமசாமி, "இந்தி எதிர்ப்பு போராட்டமானது, பலதரப்பட்ட சமூக அரசியல் கொள்கைகளை ஒன்றிணைத்தது. மத சீர்த்திருத்தவாதிகள் மற்றும் கடவுள் மறுப்பாளர்களை ஒன்று சேர்த்தது. இந்தியாவை ஆதிரிப்பவர்கள் திராவிட இயத்தை ஆதரித்தார்கள். பல்கலைக்கழக பேராசிரியர்கள் படிப்பறிவில்லாத கவிஞர்கள், மக்களுக்கான துண்டு பிரசுரம் வழங்குபவர்கள் மற்றும் கல்லூரி மாணர்வர்களை அது இணைத்தது." என்றார்.

முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவரான பி.கலிஃபுல்லா, "நான் ராவுத்தராக இருந்தாலும், என்னுடைய தாய் மொழி தமிழ்தான் உருது அல்ல. அதில் எனக்கு எந்தவித அவமானமும் இல்லை. நான் பெருமைப்படுகிறேன்," என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும் கூட இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மகாத்மா காந்திக்கு கடிதம் எழுதினர். ஆனால் ராஜாஜி விடாப்பிடியாக இருந்தார்.

அதன்பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களின் கருத்தை கேட்காமல் அவர்களின் போரில் இந்தியர்களை ஈடுபட வைக்கிறார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து அனைத்து காங்கிரஸ் முதலமைச்சர்களும் பதவி விலகியபோது, அவர்களுடன் சேர்ந்து ராஜாஜியும் தனது பதவியை 1939ஆம் ஆண்டு பதவி விலகினார். அதன்பின் மெட்ராஸின் ஆளுநராக இருந்த எர்க்ஸ்கின் அந்த அரசாணையை திரும்பப்பெற்றார்.

அதன்பின் அவர், "இந்த மாகாணத்தில் கட்டாய இந்தி ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இது நிச்சயமாக பெருமளவிலான மக்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது," என்று வைஸ்ராயிடம் தெரிவித்தார்.

இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஆனால் அந்த முடிவை 15 வருடங்களுக்கு ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதாவது 1965ஆம் ஆண்டிற்கு. அந்த காலம் வந்தபோது, திமுக பொது செயலராக இருந்த சி.என்.அண்ணாதுரை, "இந்தியை திணிப்பவர்களுக்கு எதிராக போர்த் தொடுப்பது தமிழ் மக்களின் கடமை," என தெரிவித்தார்.

அதன்பின் இரண்டு மத்திய அமைச்சர்கள் (அழகேசன், சி.சுப்பிரமணியம்) பதவி விலகிய பின்பும் கூட காங்கிரஸ் முதலைமைச்சர் பக்தவச்சலம் மத்தியில் இருந்த லால் பகதூர் சாஸ்திரி அரசுடன் இணைந்து தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை கொண்டுவந்தனர். அது பல கலவரங்களுக்கும், பலர் தங்களை மாய்த்துக் கொள்ளவும் வித்திட்டது.

1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த தேர்தல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழக்க காரணமாக அமைந்தது

அதன்பின் இந்திரா காந்தி தலையிட்டு ஆட்சி மொழி சட்டத்தை 1968ஆம் ஆண்டு கொண்டுவந்தார். அதனால் அடுத்த அரை நூற்றாண்டுக்கு இந்த போராட்டம் தணிந்தது என்றே சொல்லலாம்.

தற்போது மு.க. ஸ்டாலின் சொன்னதுபோல் கஸ்தூரி ரங்கன் கமிட்டி "தேன் கூட்டின் மேல் கல்லெறிந்துள்ளது." இந்தி இந்துத்துவா மீண்டும் எழுந்தால் 1937-40 மற்றும் 1965 ஆண்டு நடந்த போராட்டங்கள் மீண்டு உயிர்பெரும். இது இந்திய நாட்டிற்கு ஓர் எச்சரிக்கையாகும்.

https://www.bbc.com/tamil/india-48654987

 

Share this post


Link to post
Share on other sites

`இந்தி வேண்டாம்; தமிழில் விருது கொடுங்கள்!’ - சாகித்ய அகாடமி மேடையை அதிரவைத்த குளச்சல் முகமது யூசுஃப்

தமிழ் மொழிக்கான தேவையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். அண்மையில் கூட `ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும்’ எனச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. பின் வாபஸ் பெறப்பட்டது. மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் தமிழகம் கொந்தளித்தது. `இந்தி எதிர்ப்புக்கு’ எதிராகவும் தமிழ் மொழியின் அவசியத்தையும் பறைசாற்றும் மாநிலங்களில் முக்கியமானது தமிழகம்.

சாகித்ய அகாதமி

அந்தவகையில், 2018 ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுஃப்க்கு வழங்கப்பட்டது. வட கிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் 14-6-2019 அன்று இந்நிகழ்வு நடை பெற்றது. விருதுகளை சாகித்ய அகாடமி தலைவர் வழங்கினார். இந்த விருதை பெற்றுக்கொண்ட குளச்சல் யூசுஃப், `விருதில் பொறிக்கப்பட்ட இந்தி எழுத்துகளை மாற்றி தமிழில் வழங்கும்படி’ கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவரிடம் பேசினோம். `13-ம் தேதி திரிபுரா சென்றேன். 14 அன்று எனக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 15-ம் தேதி அவரவர்களின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் மற்றும் படைப்பனுபவங்கள் குறித்து கட்டுரை எழுதச் சொன்னார்கள். அதைத்தொடர்ந்து கவி அரங்கம் நடைபெற்றது. இந்தக் கவி அரங்கத்துக்கு தமிழகத்திலிருந்து, கவிஞர் சல்மாவும் வந்திருந்தார். விருது கொடுக்கப்பட்டதும் அதைப்பார்த்தேன். அதில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த விருதை என் வீட்டில் வைத்துக்கொண்டேன் என்றால், எனக்கும் இந்தி தெரியாது. என் குடும்பத்தில் யாருக்கும் இந்தி தெரியாது. என் நண்பர்களுக்கும் இந்தி தெரியாது.

இந்தியில் எழுத்துகளைப் பார்த்ததும், எனக்கு இந்தி தெரியாது தமிழில் பொறித்துக்கொடுக்கவேண்டும் என்று பொறுப்பாளர்களிடம் கொடுத்தேன். அவர் அதை வாங்கிக்கொண்டு, `கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றலாம். பிரச்னை இல்லை. நீங்கள் ஒரு மெயில் போட்டுவிடுங்கள். நாங்கள் அதைப் பரிசீலனை செய்து உங்கள் விருதை தமிழில் மாற்றித்தருகிறோம்’ என்றனர். தொடர்ந்து ஏற்கெனவே விருது வாங்கியவர்களிடம், `உங்களுடைய விருதுகள் இந்தியில் இருக்கிறதா? இல்லை ஆங்கிலத்திலா?’ என்று கேட்டேன். அவர்கள், `எங்களுக்கு இந்தியில்தான் இருக்கிறது’ என்றனர்.

தமிழில் மாற்றித்தரவேண்டும் என்ற என் கோரிக்கையை மெயில் மூலம் அனுப்ப இருக்கிறேன். தாய்மொழி என்பது நம் தொடர்பு மொழியல்லவா. அது முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவான மொழியான ஆங்கிலத்தில் விருதை கொடுத்திருக்கலாம். அப்படியில்லாமல் தமிழ் மொழிபேசுபவர்களுக்கு இந்தியில் எழுதபட்ட விருதை கொடுத்தால் எப்படி. தமிழில் வாங்கப்பட்ட விருதாக இருந்தால், அது வீட்டில் வைத்திருக்கும்போது, வருபவர்கள் பார்த்துப் படித்து தெரிந்துகொள்வார்கள். இந்தி எழுத்துகள் இருக்கும்போது, அது எனக்கே படிக்க முடியவில்லை. மற்றவர்கள் எப்படி படிப்பார்கள். விருதுக்கான மதிப்பு என்பது, மற்றவர்களிடம் பெருமையாகக் காட்டுவதில் தானே இருக்கிறது. என் பெயரை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஃபேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்ட பின், இதுதான் உங்கள் பெயர் என்று ஒருவர் கூறுகிறார். அப்போ விருதுவாங்கியவர்களாலே அந்தப் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால்அப்பறம் என்ன பயன்?.  

வடமாநிலத்தில் இலக்கிய அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, பின்னர் விருது கொடுத்தால், அவர்கள் தாய்மொழியில் கொடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும். ஆனால், அரசு கொடுக்கும் விருதில் நமக்கு தெரியாத மொழியில் கொடுப்பதை எப்படி ஏற்க முடியும். உலகத்தில் முக்கியமான மொழி தமிழ். அதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். அந்த மொழியில் எதற்கு ஓர வஞ்சனை. முந்தைய காலத்தில், எழுத்து தெரிந்தவர்களை வைத்து செதுக்க வேண்டும். ஆனால், இப்போது கம்ப்யூட்டரில் டிசைன் செய்கின்றனர். அதை ஆங்கிலத்தில் செய்யலாம் இந்தியில் செய்யலாம் தானே? வருபவர்களிடம் வெறும் சாகித்ய அகாடமி விருது என மட்டும் கூறிக்கொள்ளவேண்டியதுதான். அங்கிருந்த யாருமே இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. தாய்மொழி மீது பற்றுக்கொண்டுள்ள காஷ்மீரிகள்கூட இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை. தமிழில் எழுத்துகளைப் பதித்து கொடுக்கவேண்டும் என்ற என் கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள் பார்ப்போம்!” என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/159941-colachel-mohammed-yusuf-refuses-to-take-sahitya-akademi-award.html?fbclid=IwAR0PaAuQAkOUHf6J4Ffs9Aeb9vLyiF0Ah1_aSd8ryLcPioJvsYe-V6_A5LQ

Share this post


Link to post
Share on other sites

உலக மொழிகள் அழிந்த சான்று

கோபால், ஜாவா போன்ற கணினி மொழியானாலும் சரி, அல்லது மனிதனின் மொழியானாலும் சரி, பயன்பாட்டில் இல்லாவிட்டால், கண்டிப்பாக அழியும் என்பது இயற்கையின் விதி.

சோவியத் யூனியனில் இருந்த பல நாட்டு மொழிகளை அழித்த பெருமை ரஷ்ய மொழிக்கு உண்டு. மத்திய மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் ஒட்டு மொத்த மொழிகளையும் கலாச்சாரத்தையும் இருந்த சுவடு தெரியாமல் நிர்மூலம் ஆகியது ஸ்பானீஷ் மற்றும் போர்த்துகீச்சு மொழிகள்.

ஆங்கிலம் கூட, ஸ்காட்லாந்து, அயர்லாந்தில் மற்றும் வேல்ஸ் நாடுகளில் பேசப்பட்ட கெய்லிக் மொழிகளை அழித்துவிட்டது. அதேபோல் சீனத்தின் மேன்டரின் பிலிப்பைன்சின் தகாலக் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதிலிருந்து இந்தி ஆதிக்கம் எந்த வகையில் வேறுபட்டது என்று சற்றே சிந்தியுங்கள்!

ஒரு மொழி உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். அதை சில ஆண்டுகளில் அழித்து விட்டால், திரும்ப மீட்கவே முடியாது. தாய்மொழி ஒரு பொக்கிசம் அதை போற்றி பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்தியினால் ஏற்படும் அபாயம்

ஏற்கனவே ஆங்கிலம் தாய்மொழியை சிதைத்துக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில், இந்தியை சேர்த்தால், அது முற்றிலுமாக அழித்துவிடும். அலுவலகத்தில் ஆங்கிலம் பேசுவார்கள், தெருவில், இந்தி பேசுவார்கள், பிறகு தாய்மொழி வீட்டிலேயே முடங்கிவிடும் அபாயம் ஏற்படும். உதாரணமாக ஹரியாணி, ராஜஸ்தானி, பிகாரி, மராட்டி போன்ற பல மொழிகளை அழித்தது இந்தி என்றால் அது மிகையாகாது.

ஒரு மொழியை கற்கும்போது, அதன் கலாச்சாரமும் சேர்ந்தே குடிபுகுந்துவிடும். உதாரணமாக இந்தி திரைப்படம் மற்றும் அவர்கள் கலாச்சாரம் நம் பண்பாட்டை அழிக்கும் நிலை ஏற்படும். பிறகு அடையாளம் தெரியாமல் அலையும் அவலநிலைக்குத் தள்ளப்படுவோம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு