யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Structures of Tamil Eelam: A Handbook”

Recommended Posts

வணக்கம்,

வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானங்கள் சம்மந்தமாக புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “Structures of Tamil Eelam: A Handbook” எனும் ஆவண நூலினை சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி வெளியிடவுள்ளோம்.

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

இந்நிகழ்வு 09/06/2019 அன்று வென்ற்வேர்த்வில் Reg Byrne சமூக நிலையத்தில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நிகழவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு, இளைஞர்களின் முயற்சிகளை ஊக்குவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டி நிற்கிறோம்.

தமிழினவழிப்பின் தசாப்தத்தினைக் கடந்து நிற்கும் இவ்வேளையிலும், கட்டமைப்புச் சார் தமிழினவழிப்பு மறைமுகமான ரீதியிலும், பகிரங்கமான முறைகளிலும், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் கூட்டு முயற்சிகளால் இலங்கை அரசினூடாக நடாத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில் இளைஞர்களாகிய நாம் வலியுறுத்தி நிற்பது யாது எனின் - தமிழிறைமை என்றும் விட்டுக்கொடுக்கப்படமாட்டாது என்பதே.

எமது முயற்சிகளில் துணை நிற்க அனைவரும் திரண்டு வாரீர்.

நன்றி.

இங்ஙனம் 
சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள்

தொடர்பு: செல்வி. ஜனனி ஜெகன்மோகன்

 

Share this post


Link to post
Share on other sites

நல்வாழ்த்துக்கள் இளைஞர்களே.

எல்லோரும் எங்கள் அடுத்த தலைமுறை செயல்பாட்டாளர்கள் என்பது மகிழ்ச்சி.

இன்னும் புத்தகம் வாசிக்கவில்லை. இருளில் ஒளிக்கீற்று அட்டைபட மற்றும் லே அவுட் பணிகளில் எனது இளையமகன் இளவேனில் (ilavenil jayapalan)  பங்குபற்றியது தெரியும். இளைய தலை முறைகளின் நன்முயற்சிகளை மகிழ்ந்து கொண்டாடுவோம்  

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • வெளிநாட்டிலென்று பார்த்தா நமது ஆட்களுமா?
    • அப்படியெல்லாம் விடுதலை என்ற வார்த்தையை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக சுட்டுவதில்லை. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்(நான் அப்படியல்ல):  உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..? இதே மனநிலை சிலருக்கு இருப்பதால்தான் ஏழு தமிழர்களின் விடுதலையும் தள்ளிச் செல்கிறது. இப்படி காலம் பூராவும், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மனக்குறையுடன் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், விடிவு வராது சாமிகளே, ஆளை விடுங்கள்..!
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
    • இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம். கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே. இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.
    • வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து  பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார்.  மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மாநாட்டிற்கு வேண்டிய நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜூலை 4ம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடக்க உள்ளது.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505379 மாநாடு நிகழ்வுகள்: ·        நிகழ்த்துநர் : அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) & சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS). ·        நிகழிடம் : சாம்பர்க் (Schamburg) கருத்தரங்கு மையம், சிகாகோ-அமெரிக்கா. ·        நிகழும் நாள் : 4th, 5th, 6th, & 7th ஜூலை 2019. பெரும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் : ஜூலை 4 & 5. ·        உலகத் தமிழ் தொழில்முனைவோர் கூடல் (GTEN) : ஜூலை 6. ·        அணிவகுப்பு & பெருவிருந்து : ஜூலை 6, மாலை. ·        தமிழ் ஆராய்ச்சி மாநாடு : ஜூலை 5 & 6. ·        நினைவேந்தல் : அமரர், முனைவர் வா.செ.குழந்தைசாமி துணைத் தலைவர் – IATR & முன்னாள் துணைவேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம். இம்மாநாடு, அமெரிக்காவில் நிகழ விழைந்து பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஜூலை 4, 5ம் தேதிகளில் தமிழ் ஆராய்சி நகர்வுகளுக்கும், 6ம் தேதி நடக்கவிருக்கும் உலகத்தமிழ் தொழில்முனைவர் கூடலில் அமெரிக்க வாழ் இளம் தொழில்முனைவர்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் மற்றும்  இந்தியா உட்பட உலக நாடுகளில் வசிக்கும் பிரபல தொழில்முனைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என GTEN அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா மூப்பனார் தெரிவித்தார். 10ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தன் துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மாநாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். https://yourstory.com/tamil/10th-world-tamil-research-conference-in-chicago-ykpc1kms5o