Jump to content

‘ஞாயிறன்று மோடி வருகிறார்’


Recommended Posts

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை  மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார்.

அவரை வரவேற்கும்  உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்படத்தக்கது.

அயல்நாடுகளுக்குள்ளான நட்புறவை வெளிபடுத்துவதே இவ்விஜயத்தின் நோக்கம் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது

.tamilmirror.lk/செய்திகள்/ஞாயிறன்று-மோடி-வருகிறார்/175-233878

‘இந்தியப் பிரதமர் எப்போது இலங்கை வரவிருக்கின்றார்? எத்தனை நாட்கள் தங்கியிருக்கப் போகின்றார்? அவரது விஜயத்தின் முக்கிய நோக்கம் என்ன? அத்தோடு சீனா இலங்கை மீதான தமது ஆதிக்கத்தை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று செய்தியாளர்கள் வினவினர். அதற்கு ஜனாதிபதி மைத்திரி பதிலளிக்கும்போது,
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மாலைத்தீவு விஜயத்தின்போதே இலங்கைக்கும் விஜயம் செய்யவிருக்கின்றார். எதிர்வரும் 09ஆம் திகதியே அவர் இலங்கைக்கும் விஜயம் செய்வதாகக்  கூறியிருக்கின்றார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருப்பது பொருளாதார மற்றும் வர்த்தக உறவேயாகும். ஆகையால் பொருளாதார, வர்த்தக தொடர்புகளுக்குள் வேறொரு நாட்டின் வேறு விடயங்களை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு இங்கே இல்லை. ஆகையால், இலங்கை அரசு இந்த விடயத்தில் பொறுப்புமிக்க வகையில் நடந்துகொள்ளும்” – என்றார்.

http://vivegam.info/2019/06/01/மோடி-இலங்கை-விஜயம்/

Link to comment
Share on other sites

சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கம்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கையின்படி, "சீனாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ஹார்பர் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் அம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த துறைமுகத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறாது என்று முன்னரே கூறப்பட்டது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது."

பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், நியூ யார்க் டைம்ஸிடம் கூறியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்: "அம்பாந்தோட்டாவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இலங்கை முதலில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே அணுகியது. ஆனால், அந்த திட்டம் பயனற்றது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் எந்தவிதமான லாபத்தையும் கொடுக்காது என்பதால் அதை இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் அந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது."

பிசினஸ் டைம்ஸ் பத்திரிகையின் கருத்துப்படி 2019 முதல் 2022 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் நான்கு பில்லியன் டாலர்கள் அளவிலான வெளிநாட்டுக் கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 2017இல் 55 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் உள்ளது.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, 1.25 பில்லியன் டாலர்களை சீனாவிடம் இருந்து புதிய கடனாக பெறும் இலங்கை, தன்னை, அதனிடம் ஒப்படைக்கப்போகிறது. தெற்காசிய நாடுகளில் மிகப்பெரிய கடன் வழங்குநராக ஏற்கனவே சீனா உருவாகிவிட்டது.

இலங்கையின் மத்திய வங்கி, சீனாவின் பீப்பிள்ஸ் வங்கியிடம் இருந்து 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள பாண் (bond)  பத்திரங்களை (சீனாவின் மைய வங்கி இதுபோன்ற பத்திரங்களை நேரடியாக வெளியிடுவதில்லை, ஆனால் கண்காணிக்கும் பணியை செய்கிறது) வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று ஸ்ரீலங்கன் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

இதைத் தவிர, ஏற்கனவே சீனாவின் வர்த்தக வங்கிகளிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலங்கை கடன் பெற்றுள்ளது. மேற்கத்திய சர்வதேச கடன் வழங்குநர்களைவிட, சீனாவிடம் இருந்து கடன் பெறுவது சுலபமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.

 

2019 முதல் கடனை திருப்பச் செலுத்த வேண்டும்

இலங்கையின் 17 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களை, அது 2019 முதல் 2023க்கு இடையிலான காலகட்டத்தில் திருப்பிச் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி, உலக வங்கி, சீனா, ஜப்பான், இந்தியா உட்பட பல்வேறு இடங்களில் இருந்து இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க டாலர் அடிப்படையில் கடனை திருப்பிச் செலுத்தும் பாரம்பர்யமான வழியை இலங்கை தேர்ந்தெடுக்கவில்லை என்று அந்நாட்டு மத்திய வங்கியின் தலைவர் இந்திரஜீத் குமாரஸ்வாமி கூறுகிறார். இது வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் சிறந்த வழிமுறை என்று இந்திரஜீத் கூறுகிறார்.

நிக்கேய் ஆசிய மதிப்பீட்டில் பேசிய குமாஸ்வாமி, "அடுத்த ஆண்டில், கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர் அளவிலான கடனை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும். எங்கள் கடன் அளவு அதிகமாக இருந்தாலும், நாங்கள் அதை சரியாக நிர்வகிப்போம்" என்று கூறினார்.

87 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை கொண்ட இலங்கையின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகும். இலங்கையின் கடன், அதன் ஜி.டி.பியில் 77% என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

55 பில்லியன் டாலர் கடன்

இது, இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் தாய்லாந்தின் அளவை விட மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தகக்து. மொத்தமாக 55 பில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை கடன் பெற்றுள்ளது. அதில், சீனா 10 சதவிகிதம், ஜப்பான் 12 சதவிகிதம், ஆசிய மேம்பாட்டு வங்கி 14 சதவிகிதம், உலக வங்கி 11 சதவிகிதம் என்ற அளவில் இலங்கைக்கு கடன் கொடுத்திருக்கின்றன.

அதிகரித்துவரும் இலங்கையின் கடன் சுமையானது, அதன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சீனா வைத்திருக்கும் கடன் பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டிருப்பதாக பல பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

வெளிநாட்டு முதலீடு சொற்பம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நான்கு ஆண்டுகால கூட்டணி அரசின் ஆட்சியிலும் இலங்கையின் கடன் சுமை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு இல்லை என்றே சொல்லிவிடும் அளவிலேயே இருக்கிறது. 2017ஆம் ஆண்டில் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே இலங்கையில் முதலீடு செய்யப்பட்டது.

தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, கடன் வழங்குவதை உத்திரீதியிலான ஆயுதமாக சீனா பயன்படுத்துகிறது. அந்த அறிக்கையின் படி, தேவைப்படும் நாடுகளுக்கு கடன் கொடுத்து, தனது ஆதிக்கத்தை சீனா செலுத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

"சீன அதிபர் ஷி ஜின்பிங், 'ஒரு பெல்ட் ஒன் ரோட்' என்ற லட்சியத் திட்டத்தின் மூலம் அண்டை நாடுகளை ஈர்க்கிறார்" என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்தியாவின்  இலங்கை மீதான ஆதிக்கம்

இலங்கை ஒரு தனியரசாகியபோதும் இந்தியாவின் பாதுகாப்பு வலயத்தில் மிக முக்கிய பிரதேசத்தில் காணப்படுவதனால் இந்தியாவின் முக்கியத்துவம் அதீதமானதாக காணப்படுகிறது.

இலங்கைத்தீவின் வரலாறு முழுவதும், அந்நிய சக்திகளின் தலையீடும், ஊடுருவலும் தவிர்க்கமுடியாத அரசியல், பொருளாதார, கலாசார கட்டமைப்பினைத் தந்துள்ளது. பாரிய வலுவான பிராந்திய சக்திகளையும், சர்வதேச சக்திகளையும் கையாளும் வல்லமை இலங்கைத் தீவின் அரசியல் தலைமைகளுக்கும், மக்களுக்கும் இயல்பான பரிணாமமாக உள்ளது. மிக நீண்டகாலம் ஐரோப்பியரும், இந்தியர்களும் மாறி மாறிக் கையாளும் களமாக இலங்கை விளங்கியயை இருபதாம் நூற்றாண்டு முடியும்வரை காணமுடிந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டில் அக்களம் இந்தியரிடமும், சீனரிடமுமாக மாறியுள்ளது.

இலங்கை - இந்திய உடன்படிக்கைகளில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றத்தில் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலங்கை எந்த8அரசுக்கும் கைமாற்ற முடியாதென்பது இந்தியாவின் செல்வாக்கின் உச்ச எல்லையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

போர் முடிவடைந்தநிலையிலும் வடகிழக்கு பிரதேசத்தின் மீள்கட்டுமானத்திலும், அபிவிருத்தியிலும் அரசியலிலும் இந்தியாவுக்கு அதிக பங்கு உண்டு என்பதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கான வீடுகள் அமைக்கும் திட்டம், பெருந்தெருக்கள், ரயில்சேவைக்கான பாதை அமைப்பது, காங்கேசன்துறை பலாலி போன்ற துறைமுக அபிவிருத்தி எண்ணெய் அகழ்வுக்கான கருத்திட்டம் என பல்வேறு விடயங்களில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக உள்ளது.

இந்தியா அரசியல் மாற்றங்களிலும் நடைமுறையில் ஏற்படும் நெருக்கடிகளை தீர்ப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இலங்கை அரசாங்கம் மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை இந்தியா இலங்கையை  பாதுகாப்பதுடன்; தமிழர் தரப்பில் எழுந்துள்ள தீர்வு பற்றிய விடயங்களில் கரிசனை காட்டுவது போல் செயல்பட்டு வருகின்றது

இந்தியாவைவிட சீனா ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைப் பெற்றிருப்பதுடன் சர்வதேச பொருளாதார நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இறுக்கமான அரசியல் கட்டமைப்பையும், அரசியல் உறுதிப்பாட்டையும், உலகளாவிய சந்தைப் பரம்பலையும் கொண்டிருக்கின்றது. 

இந்தியா உலகளாவியரீதியில் சீனாவுக்கு அடுத்தடுத்தநிலையில் இருப்பதுடன் அரசியல் உறுதிப்பாடின்மை, உள்நாட்டுக் கட்டுமானத்தில் பலவீனம், சமூக, இன உணர்வுகளில் போட்டித்தன்மை, பழங்குடி வாழ்க்கை முறைமையை அதிகம் பேணுவது எனப் பாரிய பாதகமான நிலையை எட்டியிருக்கிறது. இந்தியாவின் இலங்கை மீதான அழுத்தங்களும், படையெடுப்புக்களும், அழிவுகளை தந்துள்ள நாடு என்ற பதிவை இலங்கை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 1971, 1987 ஆண்டுகளிலும் 2009 மே நடவடிக்கையும் அரசியல் மட்டத்திலும், இராணுவ மட்டத்திலும், பொருளாதார அடிப்படையிலும் பாதகமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவின் புவிசார் அரசியல் செல்வாக்கைக் காட்டிலும் சீனாவின் செல்வாக்கு இலங்கையில் மிகத் தீவிரமாக வளர்ந்துள்ளது. 

கே. ரீ. கணேசலிங்கம். அரசறிவியல் துறைத் தலைவர், யாழ்ப்பாண பலகலைக்கழகம்,  தொகுப்பிலிருந்து 

Link to comment
Share on other sites

இலங்கைக்கு வரும் மோடி வரும் தேர்தலில் யாரை ஜனாதிபதியாக கொண்டு வர வேண்டும் என அரசியல்வாதிகளுடன் இரகசிய கலந்துரையாடுவார் என நினைக்கிறேன்.

எமக்கு தான் யார் வேட்பாளர்கள் என தெரியாது. சர்வதேசம் யாரை ஜனாதிபதியாக்குவது என ஏற்கனவே முடிவெடுத்திருக்கும். அது மீண்டும் மைத்திரியோ இல்லை வேறு யாருமோ.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை  மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று (09) இலங்கை வருகைதரவுள்ளார்.

 

2 hours ago, ampanai said:

வௌ்ளிக்­கி­ழமை அதி­காலை 5.30 மணி­ய­ளவில் இந்­திய பிர­தமர் மோடி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைவார். அங்கு அவ­ருக்கு மரி­யா­தையின் நிமித்­த­மான வர­வேற்பு அளிக்­கப்­படும். அத்­துடன் முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யா­தையும் அவ­ருக்கு அளிக்­கப்­படும்.

 

2 hours ago, ampanai said:

வௌ்ளிக்­கி­ழமை தினத்தில் இறுதி நிகழ்­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரவு விருந்­து­ப­சாரம் நடை­பெறும். அதில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். அத்­துடன் முதல்நாள் நிகழ்­வுகள் முடி­வ­டையும்.

 

2 hours ago, ampanai said:

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மாலைத்தீவு விஜயத்தின்போதே இலங்கைக்கும் விஜயம் செய்யவிருக்கின்றார்.

 

2 hours ago, ampanai said:

இரண்டாம் நாள் சனிக்­கி­ழமை தினத்­தன்று நிகழ்­வுகள் முழு­மை­யாக கொழு­ம­புக்கு வெளியில் நடை­பெறும்.

 

2 hours ago, ampanai said:

அதன் பின்னர் சனிக்­கி­ழமை இரவு இலங்­கைக்­கான இந்­திய தூது­வரின் இரவு விருந்­து­ப­சா­ரத்தில் அவர் பங்­கேற்பார்.

 

2 hours ago, ampanai said:

எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் மோடி சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

தலையைச் சுத்துது....

sit.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

அப்ப 2015 இலும் 2017 இலும் வந்தது மோடிட ஆவியா..??!

போன பதவிக் காலத்தில் பறந்து முடிஞ்சது போய்.. இந்தப் பதவிக் காலத்துக்கான பறப்பை தொடங்கிட்டார்.

மனுசன் பதவியை வைச்சு என்ஜாய் பண்ணுது. இவங்க என்னடான்னா.. பெரிய முக்கியத்துவமாம். 😋

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

தலையைச் சுத்துது....

 

sit.jpg

முழுக்க வாசிக்காமல் மோடி வாறார் என்று மட்டும் மேலோட்டமா பார்த்திட்டு நான் கருத்தை எழுதினது நல்லதா போச்சு போல. 😂

1 hour ago, nedukkalapoovan said:

அப்ப 2015 இலும் 2017 இலும் வந்தது மோடிட ஆவியா..??!

போன பதவிக் காலத்தில் பறந்து முடிஞ்சது போய்.. இந்தப் பதவிக் காலத்துக்கான பறப்பை தொடங்கிட்டார்.

மனுசன் பதவியை வைச்சு என்ஜாய் பண்ணுது. இவங்க என்னடான்னா.. பெரிய முக்கியத்துவமாம். 😋

வந்தது மட்டுமில்லை, தமிழில் tweet போட்டுமிருந்தார். இம்முறையும் தமிழில் tweet போடுவாரோ என்று பார்ப்பம். 😎

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

அப்ப 2015 இலும் 2017 இலும் வந்தது மோடிட ஆவியா..??!

போன பதவிக் காலத்தில் பறந்து முடிஞ்சது போய்.. இந்தப் பதவிக் காலத்துக்கான பறப்பை தொடங்கிட்டார்.

மனுசன் பதவியை வைச்சு என்ஜாய் பண்ணுது. இவங்க என்னடான்னா.. பெரிய முக்கியத்துவமாம். 😋

அம்பனை இணைத்த அந்த பதிவு பழையது 2015 ஆம் ஆண்டுப் பதிவு. அதை இப்போது மறைத்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

போன பதவிக் காலத்தில் பறந்து முடிஞ்சது போய்.. இந்தப் பதவிக் காலத்துக்கான பறப்பை தொடங்கிட்டார்.

சிங்கன் இந்தியாவில் இருந்து வாயை திறந்து மேகத்துக்குள்  ஒளித்து போய் குண்டு  போடுற கதை எல்லாம் சொல்லி தன்னை தானே கெடுத்து கொள்வதை காட்டிலும் வெளிநாடு போய் ஒளித்துக்கொண்டு இரு என்று அம்பானி கூட்டம் கலைத்து விட்டிருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரர் கதையார், சம்பந்தர் அய்யாவாவது, கன்னியாவில, நீராவியடியில எண்டு, உந்தப் பாவப்பட்ட பிள்ளையாருக்கு பிக்குமார் செய்யிற வேலையள காதில போட்டு விடட்டுமன்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

"சீனாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான ஹார்பர் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் அம்பாந்தோட்டா துறைமுகத்தின் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டது. இந்த துறைமுகத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெறாது என்று முன்னரே கூறப்பட்டது. இந்த துறைமுகத்தை ஒட்டியுள்ள கடல் மார்க்கம், உலகிலேயே அதிக பரபரப்பானது; பல்லாயிரக்கணக்கான கப்பல்கள் இந்த வழியில் பயணிக்கின்றன, அதேசமயம் 2012 ஆம் ஆண்டில், அம்பாந்தோட்டாவில் இருந்து 34 கப்பல்கள் மட்டுமே அந்த வழியில் சென்றன, இறுதியில் அந்த துறைமுகம் இப்போது சீனாவிற்கு சொந்தமாகிவிட்டது."

பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இலங்கை, அம்பந்தோட்டா துறைமுகத்தையும், 15,000 ஏக்கர் நிலத்தையும் சீனாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ் ஷங்கர் மேனன், நியூ யார்க் டைம்ஸிடம் கூறியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்: "அம்பாந்தோட்டாவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, இலங்கை முதலில் இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களையே அணுகியது. ஆனால், அந்த திட்டம் பயனற்றது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் எந்தவிதமான லாபத்தையும் கொடுக்காது என்பதால் அதை இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் அந்த திட்டம் நிறைவடைந்த பிறகு, இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணமாகிவிட்டது."

 

சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியே அபிவிருத்திக்கென எடுக்கவில்லை. எதிர்காலத்தில் அங்கு கடற்படைத்தளம் ஒன்றை அமைக்கும் எண்ணம் உள்ளது என நினைக்கிறேன். எனவே சீனாவுக்கு அது இலாபம்.

Link to comment
Share on other sites

மோடியின் முதல் பயணமும் இலக்கும்

தனது முதலாவது பதவிக்காலத்தின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை, பூட்டானுக்கான அரசுமுறைப் பயணத்துடன் ஆரம்பித்திருந்த மோடி, இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை, மாலைதீவில் இருந்து ஆரம்பிக்கிறார். 

இலங்கையும் மாலைதீவும் சீனச் சார்பு ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியிருந்த போதுதான், இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலை உணரத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் தான், இலங்கையையும் மாலைதீவையும் எப்படியாவது நெருக்கமான நிலைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா கருதியது.  

இலங்கைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான உதவிகளை இந்தியா வழங்கியிருக்கிறது. கடன்களாக, கொடைகளாக, உதவித் திட்டங்களாக, கடற்படைக் கப்பல்களாக என்று பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி, இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில், இந்தியா ஆர்வம்காட்டி வந்திருக்கிறது.  

ஆனாலும், கடந்த 21/4 தாக்குதல்கள், இந்தியாவுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்தியா போதிய முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்திருந்த போதும், அதனை இலங்கை அதிகாரிகள் அலட்சியம் செய்ததால், பெரும் அனர்த்தங்கள் நிகழ்ந்தன.  

இந்தியாவின் புலனாய்வு எச்சரிக்கைகளை, இலங்கை அதிகாரிகள் நம்பவில்லை என்பதே, அந்தத் தகவல் அலட்சியம் செய்யப்பட்டமைக்குக் காரணம் என்று, இந்திய அதிகாரிகள் விசாரித்து அறிந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  அதாவது, பாகிஸ்தானுடன் இலங்கையை மோதிக்கொள்ள வைக்க, இந்தியா முனைகிறது என்ற சந்தேகம் தான், இதன் அடிப்படை.  

இவ்வாறானதொரு நிலையில், இலங்கையையும் மாலைதீவையும் இரண்டு பிரதான சக்திகளிடம் இருந்து விலத்தி வைத்திருக்க வேண்டிய நிலையில், இந்தியா இருக்கிறது.  முதலாவது, சீனா; இரண்டாவது, ஐ.எஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதம். இந்த இரண்டுமே, இலங்கையில் கைவரிசையைக் காட்டி விட்டவை.   

சீனாவின் பிடியில் இருந்து, இலங்கையால் அவ்வளவு இலகுவாக விடுபட முடியாது. அதேவேளை, ஐ.எஸ் செயற்பாடுகளை ஒழித்துக் கட்டுவதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறது.  

இந்தியா விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நழுவலான கொள்கையையே கடைப்பிடித்து வந்தாலும், இப்போது, இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதில் அவர் ஆர்வம் கொண்டுள்ளது போலக் காட்டிக் கொள்கிறார். அவரது சீனப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தமை, அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.  கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, அபிவிருத்தி செய்ய இணங்கியதும், அதற்கான ஒரு காரணமாக இருக்கலாம்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மோடியின்-முதல்-பயணமும்-இலக்கும்/91-233904

சீனா, ஐ.எஸ் ஆகிய இரண்டும், இந்தியாவுக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பதற்கான தளமாக, இலங்கையைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பது தான், இந்தியாவின் இப்போதைய இலக்கு.  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம், இந்தியாவின் இந்த இலக்கை நிறைவேற்றிக் கொள்வதில், கணிசமான பங்களிப்பைச் செய்யக் கூடும் என்பதே, பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. 

Link to comment
Share on other sites

மோடி கேடிகளைப் பாக்க ஓடோடி சொறிலங்காக்கு போறார்!

Link to comment
Share on other sites

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் துணைத் தலைவரும் அந்நாட்டின் எம்பியுமான மாவை சேனாதி ராஜா, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண, 13 -வது அரசியல் சட்ட திருத்தம் போதுமானது அல்ல என்றார். எனவே, வருகிற 9 - ம் தேதி, இலங்கை வரும் இந்திய பிரதமர் மோடியிடம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு,  வலியுறுத்துவோம் என்று மாவை சேனாதி ராஜா தெரிவித்தார்.

https://www.thanthitv.com/News/JustIn/2019/06/07001921/1038342/srilankan-mp-meets-mkstalin.vpf

Link to comment
Share on other sites

நிதி உதவிகளுக்கு மீண்டும் சீனாவை நாடும் இலங்கை

ஏற்கெனவே ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவிடமிருந்து கடனான இலங்கை பெற்றுள்ள நிலையில், மேலும் கடன் பெற்றுக் கொள்வதனூடாக சீனாவின் ஆதிக்கத்துக்குள் இலங்கையை மேலும் திகழச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15 சதவீதம் சீனாவிலிருந்து கிடைத்துள்ளது.

இதனூடாக இலங்கையின் மாபெரும் கடன் வழங்குநராக சீனா திகழ்வதுடன், அபிவிருத்திக்கு அவசியமான நிதியைப் பெற்றுக் கொடுப்பதில் பெருமளவு பங்களிப்பு வழங்குவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்வது, ஏற்றுமதிகளை அதிகரிப்பது போன்ற தற்போது அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் துறைகளை நிர்வகிப்பதற்கான மூலதனக் கணக்கை வலிமைப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/business-analysis/நிதி-உதவிகளுக்கு-மீண்டும்-சீனாவை-நாடும்-இலங்கை/145-233631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ampanai said:

நிதி உதவிகளுக்கு மீண்டும் சீனாவை நாடும் இலங்கை

ஏற்கெனவே ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் சீனாவிடமிருந்து கடனான இலங்கை பெற்றுள்ள நிலையில், மேலும் கடன் பெற்றுக் கொள்வதனூடாக சீனாவின் ஆதிக்கத்துக்குள் இலங்கையை மேலும் திகழச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 15 சதவீதம் சீனாவிலிருந்து கிடைத்துள்ளது.

இதனூடாக இலங்கையின் மாபெரும் கடன் வழங்குநராக சீனா திகழ்வதுடன், அபிவிருத்திக்கு அவசியமான நிதியைப் பெற்றுக் கொடுப்பதில் பெருமளவு பங்களிப்பு வழங்குவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்வது, ஏற்றுமதிகளை அதிகரிப்பது போன்ற தற்போது அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் துறைகளை நிர்வகிப்பதற்கான மூலதனக் கணக்கை வலிமைப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை சீனா வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

http://www.tamilmirror.lk/business-analysis/நிதி-உதவிகளுக்கு-மீண்டும்-சீனாவை-நாடும்-இலங்கை/145-233631

சீனாவா கொக்கா

Link to comment
Share on other sites

சுமார் 4 மணி நேரம் வரையே சிறிலங்காவில் தங்குவார் மோடி

modi-colombo-1-300x199.jpgசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவில் இருந்து நாளை மறுநாள் முற்பகல் சுமார் 11 மணியளவில் இந்தியப் பிரதமர் மோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார்.

அங்கிருந்து அவர், அதிவேக நெடுஞ்சாலை வழியாக, கொழும்பு வரவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தியப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

அதனையடுத்து, இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்து, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரையும், இந்தியப் பிரதமர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு, 3 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்குப் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையே அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் புறப்பட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு நாளை மாலை 4.30 மணியளவில் இந்தியப் பிரதமர் சென்றடைவார்.

அங்கிருந்து, பிற்பகல் 5 மணியளவில் திருப்பதிக்கு புறப்படும், இந்தியப் பிரதமர், நாளை மாலை 6 மணியளவில், திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயண நிகழ்ச்சி நிரல் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.puthinappalakai.net/2019/06/07/news/38388

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடிட சொறிலங்கா ஷொப்பிங்கு 4 மணித்தியாலம் போதும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வருகின்றார் மோடி ஜனாதிபதி,பிரதமர், மஹிந்தவுடனும் பேச்சு; சம்பந்தனுடன் தீர்வு விடயம் குறித்து ஆராய்வு

(ரொபட் அன்டனி)

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறுகிய நேர பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை  ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். 

modi.jpg

இந்த விஜயத்தின்போது  மூன்று மணித்தி யாலங்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரதமர் மோடி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாளை பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். 

இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை மாலைதீவு சென்றுவிட்டு , நாளை  ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து இந்தியா  திரும்பும் வழியில் கொழும்பில் இவ்வாறு  தரித்துச் செல்லவிருக்கிறார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்தியப் பிரதமர் இலங்கை வருகின்றார்.இலங்கை விஜயத்தின்போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் -,மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பினருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தவுள்ளார்.   

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள்,அரசியல் தீர்வு விவகாரம், அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், ஐ.நா. தீர்மானம் மற்றும் இலங்கை - இந்திய விவகாரங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்  இந்திய பிரதமர் மோடியை    பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாச  வரவேற்கவுள்ளனர்.   

 தொடர்ந்து இந்திய பிரதமருக்கு  ஜனாதிபதி செயலகத்தில் பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கு அவருக்கு  மதியபோசன விருந்துபசாரம்  ஜனாதிபதியினால் வழங்கப்படவுள்ளது. 

அத்துடன் இருவருக்கும் இடையில்  இருதரப்பு சந்திப்பும்  அங்கு நடைபெறும். அதன்போது   அண்மையில் இடம்பெற்ற   குண்டுதாக்குதல்கள் அதனால் ஏற்பட்ட  பாதிப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளது.  இந்த சந்திப்பில்  பிரதமர்   ரணில் விக்ரமசிங்கவும்  கலந்துகொள்ளவுள்ளார். 

அதனையடுத்து இந்திய தூதரகத்தில்  அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை   இந்திய பிரதமர்  மோடி சந்தித்து பேசுவார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடான சந்திப்பும் இரண்டு மணியளவில்   இந்திய தூதகரத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது    இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து  பேச்சு நடத்தப்படவுள்ளது. 

இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.   

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச,  மு.கா. தலைவர் , ரவூப் ஹக்கீம் -  , மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர், ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரையும் இந்திய தூதரகத்திலேயே   பிரதமர்  மோடி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். 

இந்திய பிரதமர் மோடி இந்த விஜயத்தின்போது  ஜனாதிபதி செயலகத்திலும்  இந்திய தூதகரத்தில் மட்டுமே  சந்திப்புக்களை நடத்துவார் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டின் பின்னர் மூன்றாவது தடவையாக  இந்திய பிரதமர் மோடி இலங்கை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/57781

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.