ரஞ்சித்

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !

Recommended Posts

சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை !

அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது.
இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.  அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் அபிப்பிராயம். அது அமெரிக்காவின் உள்வீட்டு வேலைதான் என்பதில் பிடிவாதமாக இருந்த அவர், என்னுடன் வழமைக்கு மாறாக அதிகமாகப் பேசினார். சிலவிடங்களில் மெளனம், இன்னும் சில இடங்களில் பாடமாக்கி ஒப்புவித்தது போன்ற ஆற்றொழுக்கான சாட்சிய அடுக்குகள்...இப்படி தனது சதிக் கோட்பாடிற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து விவாதித்துக்கொண்டிருந்தார். அவருடனான எனது சுவாரசியமான உரையாடலின் சில நகைச்சுவையான பதிவுகளை இங்கே எழுதுகிறேன். 

Share this post

Link to post
Share on other sites

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

Share this post

Link to post
Share on other sites

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, ரஞ்சித் said:

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 🤣

 • Like 2
 • Haha 1
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
Just now, நீர்வேலியான் said:

சரியா கஷ்டப்படப்போறீங்கள், அதற்கு முன்கூட்டியே  வாழ்த்துக்கள் 

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

Share this post

Link to post
Share on other sites

இப்படியான கனவுகளிலும் சதிக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடப்பதும் ஒருவகையான போதை தான். தம்மைத் தவிர மற்ற அனைவரும் பொய்யான தகவல்களை நம்பிக் கொண்டு இருக்கின்றனர் என்றும் இந்த உலகமே பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் கனவுக்குல் மீழ்கிக் கிடப்பர்.

இப்படியானவர்களுடன் விவாதிப்பதே வீணான விடயம் என நான் விலகிச் செல்வதுண்டு. நேரம் பொன்னானது

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
17 minutes ago, நிழலி said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

நன்றி
 
எனக்கு நேரம் பொன்னானது

Share this post

Link to post
Share on other sites

அடுத்த நாடுகளில் இடம்பெறும் தாக்குதல்களின் உண்மை சூத்திரதாரிகள் பற்றி அறிய சிறிதும் முயற்சி செய்யாமல் அனைத்ததையும் கொன்ஸ்பிரஸி குப்பை என தூக்கி எறிபவர்கள், தமது நாடுகளில் நடக்கும் தாக்குதல் பற்றியோ நடந்த இனப்படுகொலை பற்றியோ அதன் பின்னணி பற்றியோ அறிய மாட்டார்கள். 

ஆனால் தமது நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களின், இனப்படுகொலையின் வெளிப்படை சூத்திரதாரிகளை மட்டும் மற்றவர்கள் குற்றவாளிகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். நீங்கள் இந்நாட்டில் நடந்தது என கூறுபவை வேறு நாடுகளிலுள்ள பலருக்கு கொன்ஸ்பிரஸி தியறியாக தெரியும்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் நீர்வேலியான் அப்படிச் சொல்கிறீர்கள் ?

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

எனது வேலைத்தள நண்பர் போன்று இன்னும் பலர் இருக்கலாம். இவ்வாறானவர்கள் எதற்காகச் சதிக் கோட்பாடுகளை உண்மையென்று நம்புகிறார்கள் என்று அறிய ஆவலாக இருந்ததினால், சில விடயங்களை அறிந்துகொண்டேன்.

அண்மையில் இங்கிலாந்தில் சதிக்கோட்பாடுகளை மக்கள் எதற்காக உண்மையென்று நம்புகிறார்கள் என்பதைக் கண்டறிய மூன்று உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஆராய்ச்சி முடிவுகளின்படி பின்வரும் மூன்று காரணங்களுக்காக சதிக்கோட்பாடுகளை அவர்கள் நம்புவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

1. ஒரு விடயம் தொடர்பான உண்மையை அறிந்துகொள்வதற்கான அல்லது உறுதிப்படுத்திகொள்வதற்கான ஆர்வம்.

2. தமது வாழ்க்கை தமது முழுக் கட்டுப்பாட்டினுள் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம்.

3. சமூகத்தில் தனது நற்பெயருக்கான அல்லது அந்தஸ்த்திற்கான ஆர்வம். 

இம்மூன்று விடயங்களையும் பின்வருமாறு இந்த ஆராய்ச்சியாளர்கள் விளங்கப்படுத்துகிறார்கள்.

ஒரு விடயம் நடைபெறும்பொழுது அது எதற்காக அப்படி நடக்கிறது என்று அறியவிரும்புவது மனித இயல்பு. ஆனால், அது நடப்பதற்கான காரணம் என்று நாம் நினைப்பது உண்மையாக இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. ஆனாலும், எமக்குத் திருப்தியளிக்கும் விடையாக இருக்கும் பட்சத்தில், அக்காரணத்தைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். உதாரணத்திற்கு, நாம் வெளியே போகும் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது எதேச்சையாக இருந்தாலும் கூட, நாம் துரதிஷ்ட்டசாலிகள், அதுதான் நாம் வெளியே போகும்போதெல்லாம் மழை பெய்கிறதென்று ஒரு முடிவிற்கு வந்துவிடும் நாம், அதையே நம்பத் தொடங்குகிறோம். இப்படியானவர்களைப் பொறுத்தவரை எதேச்சையென்பதற்குச் சந்தர்ப்பமே இருக்கப்போவதில்லை. 

அடுத்தது, எமது வாழ்க்கை எமது கைகளில், எமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்கிற ஆர்வம். இது ஓரளவிற்கு நியாயமாகப் பட்டாலும்கூட, இதை நாம் கைக்கொள்ளும் விதம் அலாதியானது. உதாரணத்திற்கு, வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பென்பது பற்றிய எமது நம்பிக்கை. வெளியுலகில் எவர் இதுபற்றி நம்ப மறுத்தாலும்கூட, நாம் வேற்றுக்கிரக வாசிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எம்மை ஆயத்தப்படுத்துவது. அல்லது உலக வெப்பமாதலில் இருந்து எம்மைத் தற்காத்துக்கொள்ள எமக்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொள்வது. 

மூன்றாவது, சமூகத்தில் தனக்கான விம்பத்தை ஏற்படுத்திக்கொள்வது, அல்லது நிறுவிக்கொள்வது. இவ்வாராய்ச்சிகளின் முடிவுகளின்படி, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களே பெரும்பாலும் சதிக்கோட்பாடுகளை விரும்பி நம்புவதாகக் கணித்திருக்கிறார்கள். சாதாரணமாக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது மற்றையவர்களுக்கு ஏதோவொரு விதத்தில் நண்மையாக, உதாரணமாக இருப்பதைப் பார்க்கும் இவ்வாறான தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், தம்மையும் இவர்களைப் போன்றே நிலைநிறுத்திக்கொள்ள சதிக் கோட்பாடுகளை நம்பி ஏற்றுக்கொள்வதாக குறிப்பிடுகிறார்கள். சமூகத்திலிருந்து எப்போதும் தனித்தே வாழும் இவர்களுக்குக் கிடைக்கும் தனிமையான நீண்ட பொழுதுகள் இணையத்தில் இவர்கள் சதிக் கோட்பாடுகளை விரும்பித் தேடவும் , உண்மையென்று நம்பி வாழவும் வழிசமைத்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஆக, எனது வேலைத்தள நண்பரைப் பொறுத்தவரையில், அவருக்கு இருப்பது நான் இங்கே குறிப்பிட்டவற்றில் மூன்றாவது வகை. அவருடன் தொடர்ந்து பேசலாம். 

1 minute ago, நீர்வேலியான் said:

உங்கள் அளவுக்கு deep ஆக இறங்காவிட்டாலும், முன்பு ஓரிருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருவருமே வெள்ளையர்கள், ஒருவர் பழைய வேலை செய்யும் இடத்தில் சந்தித்தது, மற்றவரை party ஒன்றில் சந்தித்தேன். உரையாடல் போகும் போக்கில் புரிந்துவிடும் என்ன முடிவு வரப்போகிறதென்று.  இவர்களிடம் பொதுவாக நான் அவதானிப்பது, உரையாடலை முன்முடிவுடன் அணுகுவார்கள், முதலிலேயே தீவிர நம்பிக்கையை வைத்துவிட்டு அல்லது முடிவை எடுத்துவிட்டு, அதற்கு ஏதுவாக சந்தே இழைகளை தூவிச்செல்வார்கள். ஏதாவது ஒரு சம்பவத்தில் பதிவாகாத அல்லது கண்டுபிடிக்கப்படாத விடயத்தை வைத்து சந்தேகத்தை கிளப்பி தங்களது  சதி கோட்பாட்டிற்கு அதை ஒரு முக்கிய ஆதாரமாக வைப்பார்கள். Physicalஆக இப்பிடி முடியுமா, சம்பத்தப்பட்ட ஒருவர் கூடவா leak ஆக்க மாட்டார்கள், இதில் மற்றவர்கள் கருத்து என்ன என்பதை பற்றி கணக்கில் எடுக்க மாட்டார்கள். நீங்கள் மேலே சொன்னதுபோல, logicalஆக ஏதாவது கேள்வி அல்லது ஆதாரங்கள் வைத்தாலும், விஞ்ஞான முறைப்படி இது சாத்தியம் இல்லை என்று நீங்கள் கரடியாக கத்தினாலும்  வேலைக்கு ஆகாது. இப்போதெல்லாம் இவற்றை நான் தவிர்த்துக்கொள்வதுண்டு, மரியாதைக்காக கேட்பதுடன் நிறுத்திவிடுவேன்.

மிகச்சரியாகக் கணித்திருக்கிறீர்கள். 

Edited by ரஞ்சித்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, நீர்வேலியான் said:

என்னைப்பொறுத்தவரையில், இவர்கள் முன்வைக்கும் சதிக் கோட்பாடுகளைக் காட்டிலும், இவர்கள் ஏன் இதை நம்புகிறார்கள் அல்லது இவர்களது மனநிலை ஏன் இப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிவதிலேயே ஆர்வம் இருக்கிறது. 
வெளிபார்வைக்கு இவர்களின் வாதம் விசித்திரமாக இருந்தாலும் கூட சுவாரசியமானது என்பதையும் மறுப்பதற்கில்லை. 

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ரஞ்சித் said:

நானும் இப்பிடி வியற்பதுண்டு. சில வேளைகளில் இவ்விவாதங்கள் மனஸ்தாபத்தில் முடிந்துவிடும்.  உங்கள் அனுபவத்தை தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்க ஆவலாக உள்ளோம்   

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

Edited by Lara
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

உலகத்தில் நடக்கும் பலகொலைகள், தாக்குதல்கள், யுத்தங்களை திட்டமிடுவது யூதர்கள். உலகம் அவர்கள் கையில். இதை புரிந்து கொள்பவர்களுக்கு உலக அரசியல் விளங்கும்.

அது விளங்கினால் அமெரிக்கா ஏன் தொடர்ந்து இஸ்ரேலுக்கு பின்னால் சுற்றித்திரிகிறது என்பதும் விளங்கும்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

அவருடனான சம்பாஷணைகளிருந்து இன்னொரு விடயமும் எனக்குப் புரிந்தது. யூதர்கள் தொடர்பான அவரது நிலைப்பாடு.

இதற்குக் காரணம், யூதர்களை மைய்யப்படுத்தி அவர் தனது சதிக் கோட்பாடுகளை வரைந்துகொண்டது.

உதாரணத்திற்கு, ஹொலொகோஸ்ட் எனப்படும் நாசிகளினால் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்ட இனவழிப்பு. சுமார் 6 மில்லியன் யூதர்கள் வரை இதில் கொல்லப்பட்டதாக நன்றாக சாட்சியப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவ்வாறானதொன்றே நடைபெறவில்லையென்பதும், இது முற்றாக யூதர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கதையென்றும் அவர் நம்புகிறார்.

அவ்வாறே, ரெட்டைக் கோபுரத் தாக்குதல்கள் பற்றி யூதருக்கு முன்னமே தெரிந்திருந்ததினால்த்தான், இத்தாக்குதலில் யூதர்கள் எவருமே கொல்லப்படவில்லை என்றும் அடித்துக் கூறுகிறார். ஆனால், கொல்லப்பட்ட 2997 பேரில் யூதர்கள் 300 பேரும் அடங்குவதுபற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 

யூதர்களை மைய்யப்படுத்தி இவர் நம்பிக்கொண்டிருக்கும் இன்னும் பல சதிக் கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பின்னர் எழுதுகிறேன். 

Share this post

Link to post
Share on other sites

இன்னொரு திரியில் யூதர்கள் உலகை ஆள முற்பட்டமை ஒரு காரணம் ஹிட்லர் அவர்களை கொல்வதற்கு என எழுதியிருந்தேன். 

ஹிட்லர் anti-semitism வழி நடந்தவர்.

இப்ப உலகம் Zionism வழி செல்கிறது.

Share this post

Link to post
Share on other sites

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Lara said:

இந்த திரியில் லாறாவிற்கு எனது ஆதரவு என்றும் உண்டு. உண்மைகளை எழுதுங்கள்.👍

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
On 6/7/2019 at 1:32 AM, Lara said:

தாங்கள் மட்டும் தான் அறிவாளிகள் மற்றவர்கள் முட்டாள்கள் என நினைக்கும் உங்கள் போன்றவர்கள் மற்றவர்கள் கூறுவதில் உண்மை இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

இந்த திரியில் நான் சிலவற்றை ஏற்கனவே எழுதியுள்ளேன், விரும்பியவர்கள் வாசிக்கலாம், நம்ப விரும்புவோர் நம்பலாம். நம்ப விரும்பாதோரை யாராலும் மாற்ற முடியாது.

https://yarl.com/forum3/topic/228133-ரத்தன-தேரர்-உண்ணாவிரத-விவகாரம்-பின்னணியில்-ஜனாதிபதியா/

On 6/7/2019 at 3:06 AM, Lara said:

ரஞ்சித் அவர்களே, நான் முன்னர் யாழின் வாசகியாக இருந்த போது நீங்கள் ரகுநாதன் என்ற பெயரில் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதை வாசித்தேன். இப்பொழுது தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக எழுதுவதையும் பார்த்து வருகிறேன். சமூகத்தில் உங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் நீங்கள் தான் ஈடுபட்டுள்ளீர்கள்.

உங்களை போல் இரட்டை வேடம் போடுபவர்களின் மனநிலை ஏன் இவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிவதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. உங்கள் முன்னைய பின்னைய வாதங்கள் பற்றியே ஒரு திரி திறந்து நீங்கள் எழுதலாம். 😀

உலகில் நடக்கும் சில விடயங்களை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் என் போன்றோரின் மனநிலை உங்கள் மனநிலையை விட உகந்தது. 😂

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

On 6/7/2019 at 4:09 AM, பிரபா சிதம்பரநாதன் said:

நான் முதன் முதலில் Illuminati பற்றி அறிந்தது Tom Hanksன் The Davinci Code படத்தை பார்த்த பின்புதான்..

Illuminati  என்ற பெயரில் எனக்கும் ஒரு மயக்கம் உண்டு 

ஆனால் நீர்வேலியான் கூறியது போல அதிகம் அதை தலைக்குள் போட்டதில்லை.அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு..

எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக உள்ளேன்..

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து 

On 6/7/2019 at 3:57 AM, Lara said:

தாக்குதலை யூதர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதற்காக யூதர்கள் யாருமே கொல்லப்படக்கூடாது என அவர்கள் நினைக்கப்போவதில்லை. திட்டமிடுபவர்கள் தப்பிக்கொள்வார்கள். அடிமட்டத்தில் இருப்போர் பலியாடுகள் தான்.

Depopulation செய்ய நினைப்பவர்களுக்கு மக்கள் உயிர் ஒன்றும் முக்கியமில்லை.

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 6/6/2019 at 11:48 AM, ரஞ்சித் said:

அமெரிக்காதான் இதைச் செய்தது, அல்லது நடக்கப்போவது தெரிந்தும் தடுக்காமல் இருந்தது என்று அவர் சொன்னார். நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்குத் தேவையென்றால், உலகில் எந்தவிடத்திலும் எந்த நேரத்திலும் தாம் நினைத்ததைச் செய்யும் ஆற்றலும், அகம்பாவமும் கொண்ட அமெரிக்கர்களுக்கு, தமது மக்களில் 3,000 பேரைக் கொன்றுதான் ஈராக் மீதோ அல்லது ஆப்கானிஸ்த்தான்மீதோ போர்தொடுக்கவேண்டிய கட்டாயம் என்னவென்று கேட்டேன். அவர் எனக்குப் பதில் தராமல், திரும்ப்பத் திரும்ப தான் கூறியதையே நியாயப்படுத்தினார். நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்கவில்லை. தான் சொல்வதைத்தவிர வேறு எதுவுமே சாத்தியப்படாது என்பதில் மிகுந்த பிடிவாதமாக இருந்தார்.

அடுத்ததாக ரெட்டைக் கோபுரங்கள் தாமாக இடிந்து விழாமல் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது என்று சொன்னார். இரும்பு உருக்கினால் ஆன சட்டங்கள் உருகுமளவிற்கு விமானத்தின் எரிபொருள் வெப்பமாகி எரியாது, ஆகவே குண்டுதான் வெடித்தது என்று வாதாடினார். சுமார் 2700 பாகை செல்சியஸில் இரும்பு உருகினாலும் கூட, அதன் பலமானது சுமார் 1100 பாகையில் பாதியாகக் குறைவடைவதுடன், அதன் மீது ஏற்றப்பட்டிருக்கும் சுமை காரணமாக அக்கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுதான் உண்மை என்று என்று நான் கூறவும், பிடிவாதமாக மறுத்தார். சாதாரணமான ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கான ஒழுங்கமைக்கப்பட்ட குண்டு வெடிப்பை நடத்தவே வாரங்கள் ஆகும்பொழுது, உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரங்களில் குண்டுகளை ஒழுங்காகப் பொறுத்தி வெடிக்கவைக்க எவ்வளவு நாட்கள் எடுத்திருக்கும், ஆட்களின் கண்களுக்குள் மண்ணைத்தூவி இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறீர்களா என்று கேட்கவும், எதுவும் சொல்லாமல் இருந்துவிட்டார். ஆனாலும், கட்டிடங்கள் குண்டுவெடித்துத்தான் கீழிறங்கின என்பதில் பிடிவாதமாக இருந்தார். 

On 6/6/2019 at 12:06 PM, ரஞ்சித் said:

7 ஆவது உலக வர்த்தக நிலையம் தானாகவே விழுந்ததற்கான காரணம், திட்டமிட்ட குண்டுவெடிப்பன்றி வேறில்லை என்பதில் அவரது எண்ணம் இருந்தது. அருகிலிருந்த இரண்டு 110 மாடிக் கட்டிடங்கள் இடிந்து விழும்போது வெறும் 47 மாடிகளே கொண்ட சிறிய அடுக்குமாடிக் கட்டிடத்தினால் அத்தனை பாரத்தைச் சுமக்கமுடியுமா என்று அவர் நினைக்கவில்லை. விஞ்ஞானத்தினால் நிரூபிக்கமுடியாத அவரது கற்பனைகள் பற்றி நான் கேள்விகேட்டபோதெல்லாம் மெளனமே பதிலாக அவரிடமிருந்து வந்தது.

பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொருங்கிய நான்காவது விமானம் உண்மையாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதென்று சொன்னார். ஒன்றில், பயணிகள் முன்னமே கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது, வேறொரு இடத்தில் அவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் என்று சொன்னார். என்னால் இதை ஏற்கமுடியவில்லை. விமானத்திலிருந்தவர்களுக்கும், கீழே இருந்தவர்களுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல்கள், இவ்வுரையாடல்களினூடே கேட்ட கடத்தல்க் காரர்களுக்கும் பயணிகளுக்குமிடையிலான கைகலப்பு பற்றி நான் வினவியபோது, இவை எல்லாமே நாடகம் என்று சொன்னார். அவரது இந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை என்னால் ஏற்கமுடியவில்லை. 

அடுத்ததாக நோராட் எனப்படும் அமெரிக்காவிற்கு வெளியிலான வான்பரப்பில் பறக்கும் வெளிநாட்டு யுத்த விமானங்களைக் கட்டுப்படுத்தும் உத்தரவை வேண்டுமென்றே அமெரிக்கா விடுக்காமல் இருந்தது, அப்படி விடுத்திருந்தால் இவ்விமானங்களைச் சுட்டி வீழ்த்தியிருக்கலாம் என்று கூறினார். முதலாவதாக, இவை அமெரிக்க வான்பரப்பின் வெளியே பறந்த யுத்த விமாங்கள் கிடையாது என்பதுடன், இவ்விமாங்களுக்கும் வான் கட்டுப்பாட்டு அமைப்பிற்குமிடையிலான தொடர்பாடலை கடத்தல்க் காரர்கள் முன்னமே துண்டித்துவிட்டிருந்தார்கள் என்று நான் சொன்னேன். அவரிடம் பதில் இல்லை. 

இறுதியாக பென்டகனில் பாய்ந்தது விமானமே இல்லை, ஏவுகணைதான், அதனாலேயே விமானத்தின் இறக்கைகள் தாக்கிய இடிபாடுகள் இல்லாமல் வெறும் வட்டமாக ஓட்டை இருக்கிறது என்று சொன்னார். அப்படியானால், பென்டகனைச் சுற்றிச் சிதறிக் கிடந்த விமானத்தின் சிதைவுகளும், கொல்லப்பட்டுக் கிடந்த மக்களும் யாரென்று கேட்டேன், பதில் இல்லை. 

இவருடனான உரையாடலில் இருந்து நான் எனக்கு விளங்கியது ஒன்றுதான். தான் சரியென்று நினைக்கும் ஒரு விடயத்தை எக்காரணம் கொண்டும் அவர் விட்டுவிடப்போவதில்லை. தனது தனிமையையும், தாழ்வான மனப்பான்மையையும் மறைக்க கவசமாகப் பாவிக்கும், தன்னையும் ஒரு மனிதராக மற்றவர்க்கு நிகராக உயர்த்தும் சந்தர்ப்பத்தைத் தரும் இவ்வாறான சதிக் கோட்பாடுகள் பற்றிய அறிவை எக்காரணம் கொண்டு அவர் விட்டுவிடப்போவதில்லை. 

இனியும் இவருடன் சில விடயங்களை வேண்டுமென்றே விவாதிக்கப்போகிறேன், பார்க்கலாம். 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, அபராஜிதன் said:

அது ஏஞ்சல் அன்ட் டெமொன் ல தான் இலுமினாட்டி பற்றி அதிகம் வருகிறது 

டாவின்சி கோட் 3-4 தரம் / அதற்கு அதிகமாகவோ  பார்த்தவன் என்ற ரீதியில் எனது தாழ்மையான கருத்து

உண்மைதான்,

The Da Vinci Code -Secret Society, Angels & Demons - Illuminati, Inferno - Reduce the population பற்றி கூறும் படங்கள் என்பது சரியென நினைக்கிறேன்..

தவறாக எழுதியதை திருத்தியமைக்கு நன்றிகள்..

Edited by பிரபா சிதம்பரநாதன்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
5 hours ago, அபராஜிதன் said:

நீங்கள் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது போல எனக்கு தோன்றுகிறது 

உங்களிற்கு ஒரு விடயத்தில் ஒரு பார்வை இருப்பது போல ஏனையோருக்கும் இருக்கும் அது நீங்கள் பார்க்கும் பார்வை போல இருக்காது .. தனியாக தாக்குவதை விட்டு உங்கள் கருத்துகளை வலுவாக்குங்கள் கருத்துகளால் மோதுங்கள் ..அது தான் கருத்துக்களம் 

நான் யூதர்களை பற்றி படித்ததில் இருந்து தெரிந்து கொண்டது மொஸாட் க்கு யூதர்களை கொல்லுவதற்கு மட்டுமே அதிகாரமில்லை ...யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அவர்கள் அதிக கவனம் எடுப்பார்கள் 

நிழலி, ரஞ்சித் இருவரும் வேறு திரிகளிலும் என்னை முட்டாள் ரேஞ்சில் கருத்து எழுதியவர்கள். உங்களுக்கு அது தெரியாமல் இருக்கலாம். 

சதிக்கோட்பாடுகளை நம்புவோர் சமூகத்தில் தமது அந்தஸ்திற்கான அல்லது நற்பெயருக்கான ஆர்வத்தில் அதை செய்கிறார்கள் என்றும் ரஞ்சித் இங்கு எழுதினார். அப்படியான கருத்துகள் உங்களுக்கு தவறாக தெரியவில்லை.

நான் ஏற்கனவே சில ஆதாரங்களை நான் இணைத்த இணைப்பில் கொடுத்துள்ளேன். இங்கும் இணைத்துள்ளேன்.

யூதர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று முடிந்தவரை கவனமெடுப்பார்கள். அதற்காக யாரும் கொல்லப்படக்கூடாது என நினைக்கப்போவதில்லை.

யூதரான Larry Silverstein, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட சுமார் 100 பேர் அன்றைய தினம் அங்கு சமூகமளிக்கவில்லை. அவர்கள் medical appointment, அல்லது sick  என்று சொல்லிட்டு நின்றார்கள்.

WTC ஐ அவரது பெயரில் எடுத்ததே தாக்குதலை ஒழுங்கு படுத்த.

5326AFC2-E47D-423A-9897-26DA57E932B2.jpg

83988CC0-45BF-48AF-8C16-3E01B078BB3D.jpg

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • சைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....!   😁
  • இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம். சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.  பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது. அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.
  • எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை! https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html