Jump to content

அன்னக்கிளிக்கு வயது 41 +

Recommended Posts

இன்றும் அவள் என்றும்போலவே  இனிமையாக ஒலிக்கின்றாள். 

இளையராஜா போட்டது என் இசை. நாம் பாடிய கிராமத்து இசை...தாரை , தப்பட்டையை பயன்படுத்தி இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. 

கனவோடு சில நாள்  நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ

’’இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒரு முரண்.

எங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களே ஆதிக்கம் செலுத்திவந்தன.

சலூன்கடை, ஹோட்டல், டீக்கடை, கல்யாண வீடு என்று எங்கும் இந்திப் பாடல்கள்தான். அதேசமயம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது.

ஆனால், இந்தியை தமிழகத்தில் இருந்து டிக்கெட் வாங்கி அனுப்பிவைத்தவர்... இசைஞானி இளையராஜா !

இதெல்லாம் ஆயிரம் படங்கள் மூலம் செய்த சாதனை இல்லை. ஒருபடம்... ஒரேயொரு படம்...அதுவும் முதல் படம் அன்னக்கிளி மூலமே நிகழ்த்திக் காட்டினார்’’ என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ampanai said:

மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ

அன்னக்கிளி உன்னைத்தேடுறேன்... ஆறு மாதம் ஒரு வருஷம்......

பன்னிரண்டு வயதினிலே படித்திருந்த பாடல் ✌️

Link to comment
Share on other sites

காதலிக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் தங்கள் காதல் கடிதங்களில் பயன்படுத்தும் முக்கிய வரிகளாக அன்னக்கிளி உன்னை தேடுதே என்ற வரிகள் தலையாய இடம் பிடித்திருந்தது.

லாலி லாலி லலோ... என்று ஜானகியின் குரலில் ஆரம்பிக்கும்போதே உடல் சிலிர்த்துப் போனது. இடையில் குயிலும், புல்லாங்குழலும் போட்டி போடு சத்தம் எழுப்ப, தபேலா உருட்டலுடன் அழுத்தமான கேள்விய கேட்டு சென்றது மச்சான பாத்தீங்களா என்று!! இதில் இடையே திடீரென்று உருமியும் பறையும் நுழைந்து தாளம் போட வைத்தன.

பொதுவாக இழவு வீடுகளிலேதான் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும் என விமர்சனங்களும் வரத்தான் செய்தாலும், அத்தனையும் சுக்குநூறாக நொறுக்கிப் போட்டது ஒட்டுமொத்த பாடலும்! இந்த பாடல் திரையிசையின் போக்கையே தன் பக்கம் இழுத்தது. திரைப்பட பாடல்களில் ஒரு புது அத்தியாயத்தை சேர்த்தது. அன்னக்கிளி என்றதும் மச்சான பாத்தீங்களா என்ற பாடல் வரிகள் நம் மனதில் தானாக எழும் அளவிற்கு தமிழ் சினிமாவையே கட்டிப்போட்டது!

https://tamil.oneindia.com/art-culture/essays/annakkilee-movie-release-date-today/articlecontent-pf307490-319632.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ampanai said:

உங்களின் எழுத்துகள் முன்பு இந்த யாழில் நெருங்கிய உறவு போல் காட்டுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உங்களின் எழுத்துகள் முன்பு இந்த யாழில் நெருங்கிய உறவு போல் காட்டுது .

எனக்கும் தான்...!

இந்தப் பாட்டுக்காகவே......ஆவரம் பூவைக் கொண்டு போய்க்  காட்டச்சொல்லி.....ஆச்சியைக் கரைச்சல் படுத்திக்...கூட்டிக் கொண்டு போன நினைவும் இருக்குது..!

dried-avaram-poo-566.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

கனவோடு சில நாள்  நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ

முன்னரெல்லாம் தேனீர்கடை என்றால் தூர வரும் போது பாட்டு சத்தத்தைக் கேட்டு தேனீர்கடை வருகுது என்று தெரிந்து கொள்ளலாம்.இப்படி தேநீர்கடைகளை கடக்கும் போது
அன்னக்கிளி போன்ற பாட்டுக்கள் போனால் பாட்டுக்காக எல்லோரும் மெதுவாகவே போவார்கள்.
இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் வருகைக்கு பின்தான்....
தமிழர்களுக்கு.... ஹிந்திப் பாடல்களில்  இருந்த மோகம் குறைந்து,
தமிழ்ப் பாடல்களை விரும்பி கேட்டார்கள்.

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

இன்றும் அவள் என்றும்போலவே  இனிமையாக ஒலிக்கின்றாள். 

இளையராஜா போட்டது என் இசை. நாம் பாடிய கிராமத்து இசை...தாரை , தப்பட்டையை பயன்படுத்தி இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. 

கனவோடு சில நாள்  நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்

மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ

’’இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒரு முரண்.

எங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களே ஆதிக்கம் செலுத்திவந்தன.

சலூன்கடை, ஹோட்டல், டீக்கடை, கல்யாண வீடு என்று எங்கும் இந்திப் பாடல்கள்தான். அதேசமயம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது.

ஆனால், இந்தியை தமிழகத்தில் இருந்து டிக்கெட் வாங்கி அனுப்பிவைத்தவர்... இசைஞானி இளையராஜா !

இதெல்லாம் ஆயிரம் படங்கள் மூலம் செய்த சாதனை இல்லை. ஒருபடம்... ஒரேயொரு படம்...அதுவும் முதல் படம் அன்னக்கிளி மூலமே நிகழ்த்திக் காட்டினார்’’ என்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

"இந்தியை தமிழகத்தில் இருந்து டிக்கெட் வாங்கி அனுப்பிவைத்தவர்... இசைஞானி இளையராஜா " - இதைப் பற்றி அதிகம் கேள்விப்பட்ட தில்லை, ஆச்சரியமாக உள்ளது. ராஜாவின் பாடல்களில் இருந்த உயிர் நாடி இப்பொது வரும் பாடல்களில் உணர முடிவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.