• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • இலங்கைக்காக 7 பதக்கங்களைப் பெற்ற வடக்கு வீரர்கள்       க. அகரன்   இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி வளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இன்று வரை நடைபெற்ற சர்வதேச காலுதைச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்ட வட மாகாண காலுதைச்சண்டை வீரர்கள் எழுவர் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். வட மாகாண காலுதைச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வட மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ். நந்தகுமாரால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான, வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியைச் சேர்ந்த எஸ். சஞ்சயன் (18) தங்கப் பதக்கத்தையும், பி. ராகுல் (17) தங்கப் பதக்கத்தையும், ரி. நாகராஜா (18) வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ. கெவின் (11) தங்கப் பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ. நிரோஜன் (16) தங்கப் பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வி. வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளிப் பதக்கத்தையும், வவுனியா காமினி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். சிறிதர்சன் (18) வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர். சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிவிப்பாளரும், பிரான்ஸ் சவாட் குத்துச்சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ. பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வட மாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும், தென்னிலங்கையை சேர்ந்த 14 வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 11 தங்கப் பதக்கங்களையும் எட்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். இதன்போது தெற்காசிய வூசு கூட்டமைப்பின் தலைவரும், பாகிஸ்தானின் ஒருங்கிணைப்பாளருமான மாலிக் இப்திகார் உள்ளிட்ட குழுவினரின் தலைமையில் பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் வெற்றி வாகை சூடிய எமது வீரர்கள் நாளை மாலை நான்கு மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இலங்கைக்காக-7-பதக்கங்களைப்-பெற்ற-வடக்கு-வீரர்கள்/44-244543
    • புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து     சவுதி அரேபிய அரசாங்கம், மக்காவுக்குப் புனிதப் பயணம் செல்வதற்கான விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் COVID-19 வைரஸ் பரவி வருவதால், யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. உம்ராவுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மக்கா, மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கம். COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ள நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு விசாக்கள் வழங்கபடமாட்டா என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது. இந்த தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. குவைத், பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/பனதப-பயணகளககன-வச-தறகலகமக-இரதத/50-246114
    • இலங்கை தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு     ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில் இன்று (27) நடைபெறும் அமர்வின்போது இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட்டினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அதற்கு பதில் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பச்லெட் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. முன்னதாக, இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40 /1 ஆகிய பிரேரணையிலிருந்து இலங்கை விலகுவதாக நேற்றைய அமர்வின்போது வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இலஙக-தடரபன-அறகக-இனற-சமரபபபப/150-246104
    • சஜித் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம்  தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் மைதானம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக இன்று 27() தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்த தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் நாம் வெற்றிபெற்றோம். எமது மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களித்தார்கள். எனவே, பொதுத்தேர்தலிலும் சஜித் தலைமையில் அம்மாவட்டத்தில் எமது வெற்றிநடை தொடரும். புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் அரசாங்கத்தின் மூகமூடி கலைந்துள்ளது. சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுவிட்டு, அதனை மீளப்பெற்றனர். எனவே, ஆயிரம் ரூபாவுக்கும் இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம்தான் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். கம்பனிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க முடியாது. அடிப்படை சம்பளமாக அல்லாது, மொத்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கினார் அதனை மக்கள் திருப்தியுடன் ஏற்கமாட்டார்கள். தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. நேற்றுகூட நாங்கள் மூவரும் கூட்டாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்களை விவபரத்தை அறிவிப்போம். அதேவேளை, கினிகத்தேனை மத்திய கல்லூரிக்கான மைதானத்தை புனரமைப்பதற்கு ஒரு கோடியே 70 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இன்று பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்வாறு மலையகத்தில் தோட்டப்புறங்கள் மற்றும் நகரப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு கோடி கணக்கில் ஒதுக்கினேன். மலையகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் தற்போது அவற்றை முன்னெடுப்பதற்கு அனுமதிக்காமல், தடுத்துநிறுத்துகின்றனர். இது வெட்கக்கேடான செயலாகும். சில தமிழ் பாடசாலைகளின் அதிபர்களும் அரசியல் ரீதியில் செயற்படுகின்றனர். இதனால் அபிவிருத்தி தடைபட்டுள்ளது. எனவே, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   -மலையக நிருபர் கிரிஷாந்தன்-         http://tamil.adaderana.lk/news.php?nid=126186  
    • வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு குறித்த விசாரணை இறுதி கட்டத்தில்     கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட சந்தேகநபர்கள் நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது பிரதி சொலிசிட்டர் நாயகம் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் வழக்கின் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூம் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த ஊடக சந்திப்பில் வௌ்ளை வேன் சாரதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை. இது தொடர்பில் நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வினவிய போது, குறித்த இரண்டு சந்தேகநபர்களும் கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணையின் முன்னேற்ற அறிக்கை அரச பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் அவர்களால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   http://tamil.adaderana.lk/news.php?nid=126189