Jump to content

Recommended Posts

புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, தலைப்பு, முன்னிருத்தப்பட்ட விமர்சனங்கள் மற்றும் நண்பர்களின் பரிந்துரைகள் போன்றவைகள் ஆகும். 
 
6174 நாவலை நான் வாசிக்கக் காரணம் அதன் தலைப்பும், நாவலைப் பற்றி இணையத்தில் பரவியிருந்த நல்ல விமர்சனங்களாகும். தமிழில் இது போன்று அறிவியல் சார்ந்த த்ரில்லர் நாவல்களை வாசித்தது நினைவில்லை. வாசகர்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் இணைக்குமாறு வேண்டுகிறேன். அறிவியல் புனைவு சார்ந்த தலைப்பில் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் 6174.
 
1546362034690.jpg
 
இந்நாவல் நமக்குப் பரிட்சயமில்லாத பல்வேறு விடயங்களை சுவாரசியத்துடன் உள்ளடக்கியது. இதுவே ஆசிரியரின் முதல் நாவல் என்பதில் ஆச்சரியமாக உள்ளது. லெமூரியாவில் துவங்கும் கதை, நிகழ்காலத்தில் பல்வேறு குறியீட்டுச் சொற்கள் அடங்கிய புதிர்களைப் பற்றிய தேடலில் சுழன்று, உலக அழிவை எதிர்நோக்கும் ஒரு தீவிரவாதக் கூட்டத்தினிடமிருந்து இவ்வுலகைக் காப்பாற்றுவதைப் பற்றியது. 
 
இந்நாவலில் ஆசிரியர் பல்வேறு சுவாரசியமான விடுகதைக் குறிப்புகள், சித்திரப்புதிர், கணித சூத்திரம், சங்க இலக்கிய வெண்பாக்கள் ஆகியவற்றைக் குறிச்சொற்களாக்கி, புதிர்களாக அமைத்து பரபரப்புக் குறையாமல் நகர்த்திச் செல்கிறார். 
லெமூரிய கண்டத்தில் தொடங்கி, பிரமிடு, பிரம்மி எழுத்துகள், கோலங்கள், வடிவக் கணக்கியல், ஸ்பெக்ட்ரோமீட்டர், விண்கற்கள், செயற்கைக்கோள், சீலகந்த் மீன்கள், ஹர்ஷத் எண், கேப்ரிகர் எண், லோனார் ஏரி, படிகங்கள் (crystal), ஆனைக்கொன்றான் பாம்பு (Anaconda), இந்தியக் கடற்படைப் போர் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல், விமானப் படை, கணிதக் குறியீடுகள், ஆகம விதிகள், மண்டுக மாண்டலம், மியான்மார் பகோடா என்று சாதாரண வாசகனுக்கு முற்றிலும் பழக்கமில்லாத, ஆனால் சுவாரசியமான அறிவியல் களஞ்சியங்களை உள்ளடக்கியப் புதினத்திற்குள் மூச்சிடுவதற்கும் நேரமளிக்காமல் வாசகர்களை இழுத்துச் செல்கிறார். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் ஆசிரியர் இதற்கான ஆராய்ச்சிகளுக்காக  அதிகம் மெனக்கெட்டிருப்பதை உணர முடிகிறது.

தமிழ்ப் பெண்களிடும் சாதாரணக் கோலத்தையும் அதனுடன் ஃபிபனாக்கி எண்களை ஒளித்திருப்பது வியப்பாக இருந்தது. வியப்பு குறைவதற்குள் தொடர்ச்சியான புதிர்களை அடுக்கடுக்காக அமைத்து வாசகர்களுக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது.  

கணிதவியலில் இந்தியர்களின் பங்காற்றலை கேப்ரிகர் மற்றும் ஹர்ஷத் எண்கள் பற்றிய புதிர்களில் அழகாக இணைத்திருப்பது கவனத்திற்குரியது. 


"தன்னிலே பிரிந்துகூடிப் பின் பகுக்க 
தன்னை இயல் தோற்றும் தசம் ஆதி
ஆதியின் முதல்வர்க்கம் சூடிய அறைதனிலே 
சீரிய கட்டமதில் தடயம் காண்"

ஹர்ஷத் எண், எ.கா. 18 -> 1 + 8 = 9 ;    18/9 = 2
                                        21 -> 2+1 = 3 ; 21/3 = 7

"தலைவால் நேராகி தன்வாலே தலையாகி
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே
நல்லார வட்டத்துக்குள் நாலே எண்ணாம்"

கேப்ரிகர் எண், எ.கா. 1897
1897 -> 9871 (reverse order) - 1789 = 8082
         -> 8820 - 0288 = 8532
         -> 8532 - 2358 = 6174

கதை மாந்தர்களை அமைத்த விதமும், அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல்களும் சுவாரசியத்தை சிறிதுக் குறைப்பதாக உணர்ந்தேன்.  கதையின் தொடக்கமும், முடிவுப் பகுதியும் வாசிப்பில் சிறிது தொய்வை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் புதிர்கள் மற்றும் அதற்கான விடைகளை எளிமையாக அமைத்த விதம் பாராட்டப்படக்குரியது. முதல் வாசிப்பில்நாவலின் முழுமையை  நிச்சயம் அடைய முடியாது, குறைந்தது இரண்டாவது முறை வாசிக்கும்போது முழுமையடையும் என்பது என் கருத்து. 

வாசிப்பின் முடிவில் National treasure: Book of Secret & Dan Brown படங்களைப் பார்த்தது போன்ற உணர்வு எழுவதை மறுக்க இயலாது. தமிழ் எழுத்துலகில் இதுபோன்ற அறிவியல் சார் புனை நாவல்கள் உருவாக இந்நாவல் ஒரு அடிக்கல்லாக அமையும். 

ஒவ்வொரு பக்கங்களிலும் நாவலின் சுவை குன்றாமல், அடுக்கடுக்காக புதிர்களை அமைத்து, வாசிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டி, நாவலில் வரும் குறியீட்டுச் சொற்களைப் பற்றிய தேடலை நம்முள் விளைவிக்கிறார். வாசித்த பின் வாசகர்களாகிய நாம் கூகிளின் துணை கொண்டு குறிச்சொற்களைத் தேடிப் பயணிப்பதே இந்நாவலின் வெற்றியாக நான் உணர்கிறேன். 

தமிழ் எழுத்துலகில் க. சுதாகர் அவர்கள் நிச்சயம் ஒரு சிறந்த எழுத்தாளராக  வளர வாழ்த்துகள். தமிழ் வாசகர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய நாவல் இது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அருள்மொழிவர்மன்....புத்தகம் கிடைத்தால் வாசிக்க வேண்டும் .....!   👍

Link to comment
Share on other sites

இப்புத்தகம் கிடைத்தும் வாசிக்க தவறியிருந்தேன் இந்த எழுத்தாளர் face bookla எழுதி வரும் பாஜக மற்றும் மோடி ஆதரவு கருத்துகளினால் இவர் மேல் இருந்த கடுப்பினால் 

Link to comment
Share on other sites

1 hour ago, அபராஜிதன் said:

இப்புத்தகம் கிடைத்தும் வாசிக்க தவறியிருந்தேன் இந்த எழுத்தாளர் face bookla எழுதி வரும் பாஜக மற்றும் மோடி ஆதரவு கருத்துகளினால் இவர் மேல் இருந்த கடுப்பினால் 

எனக்கும் ஆசிரியரைப் பற்றி அதிகம் பரிட்சயமில்லை....இப்புத்தகம் தமிழ் எழுத்துலகில் ஒரு புது முயற்சியாக இருப்பதால், நாமும் ஆதரவு அளித்து வரவேற்கலாம் என்பது என்  அபிப்பிராயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேசன் கிண்டிலில் கிடைக்கின்றது. சற்று முன்னர் தரவிறக்கினேன். வாசித்த பின்னர் சில வரிகள் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

47 minutes ago, கிருபன் said:

அமேசன் கிண்டிலில் கிடைக்கின்றது. சற்று முன்னர் தரவிறக்கினேன். வாசித்த பின்னர் சில வரிகள் எழுதுகின்றேன்.

நல்வரவு கிருபன்..

6174 வாசிப்பின் போதும் அதற்குப் பிறகும் கூகிளில் எனது தேடல் தொடர்ந்து கொண்டே செல்கிறது.

ஜெமோ வின் விஷ்ணுபுரம் நாவலின் வாசிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது. அதைப் பற்றிய விமர்சனத்தை இன்னும் விளக்கமாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். என்னைப் போன்ற  சாதாரண வாசகர்களுக்கு இந்நாவல் மிகவும் கடினமானதாகத் தோன்றுகிறது. பல்வேறு புதிய சொற்களைப் பற்றி ஆராய்வதிலும், ஆசிரியரின் விவரிப்பைக் கற்பனை செய்துகொள்வதிலுமே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது.  முற்றிலும் சவால் நிறைந்த நாவல் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அருள்மொழிவர்மன் said:

ஜெமோ வின் விஷ்ணுபுரம் நாவலின் வாசிப்பு முடிவுறும் நிலையில் உள்ளது

விஷ்ணுபுரம் வாசித்து 20 வருடங்களாகிவிட்டது. சில பந்திகளை இரண்டு மூன்று தரம் படித்தாலும் எல்லாம் புரியாது. ஜெமோவின் ஏழாம் உலகம், காடு இரண்டும் மிகவும் பாதித்த நாவல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6174ஐ அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

யாழ் இணையத்தில் இணைந்தபின்பு பல தரமான நாவல்கள் பற்றியும்,  புதிய எழுத்தாளர்களைப்பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.. வாசிக்க நினைக்கும் புத்தகங்களின்( சங்கதாரா, வேங்கையின் மைந்தன், 6174...) பட்டியலும் அதிகரித்துக்கொண்டே போகிறது..ஆனால் இவை paper printல் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் .. புத்தகத்தை வாங்கி அதனை பக்கங்களை நுகர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை..

 

Link to comment
Share on other sites

On 6/14/2019 at 7:03 AM, பிரபா சிதம்பரநாதன் said:

6174ஐ அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்..

யாழ் இணையத்தில் இணைந்தபின்பு பல தரமான நாவல்கள் பற்றியும்,  புதிய எழுத்தாளர்களைப்பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.. வாசிக்க நினைக்கும் புத்தகங்களின்( சங்கதாரா, வேங்கையின் மைந்தன், 6174...) பட்டியலும் அதிகரித்துக்கொண்டே போகிறது..ஆனால் இவை paper printல் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுதல் .. புத்தகத்தை வாங்கி அதனை பக்கங்களை நுகர்ந்து வாசிக்கும் பழக்கத்தை கைவிடமுடியவில்லை..

 

தாங்களும் புத்தக விரும்பி என்பதில் மகிழ்ச்சி. நீங்கள் குறிப்பிட்டது சரிதான், காகிதத்தில் இருக்கும் சுவை மின்னூலில் கிடைப்பதில்லை. வாசிப்பு தொடர்ந்து செழித்திட வாழ்த்துகள்.

யாழின் நூற்றோட்டப் பகுதியில் நூல்கள் பற்றிய பதிவுகள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது வாசிக்கும் எண்ணம் உள்ளது.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவியல் fantasy த்ரில்லர் நூலை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஆசிரியர் இணையம் முழுவதும் தேடல் செய்து பல அறிவியல் விடயங்களை கதைக்குள் புகுத்தியுள்ளார். ஆனால் கதை என்னவோ பதின்ம வயதினர் வாசிக்கும் fantasy கதையாகத்தான் உள்ளது.

பயணங்களில் பொழுதைப்போக்க வாசிக்கலாம்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருஞ்சுழிக் கோலங்கள்

6174-cover.jpg?fit=1024%2C575

4 நிமிட வாசிப்பு

மார்கழி! இன்றுவரை சில்லென்ற பனியும், கோவில் பொங்கல் வாசமுமாய் இந்த மாதம் எனக்குள் உறைந்திருக்கிறது. மென்புகையாய்ப் படர்ந்திருக்கும் வெண்பனியில் முந்தானையால் முக்காடிட்டபடி கோலமிட்டுத் தெருவை நிறைக்கும் அம்மாக்கள் மற்றும் அக்காள்கள். திண்ணையில் பிரவுன் பேப்பர் கொண்டு தைக்கப்பட்ட கோல நோட்டுகள், அதில் பல வருடங்களாய் வரைந்து சேமிக்கப்பட்ட கோலங்கள். சாதாரண நாட்களில் ஏழு புள்ளி ஏழு வரிசைக்குள் முடிந்துவிடும் அவை, அந்த மாதம் மட்டும், பட்டாம்பூச்சிகளாய், இரண்டடுக்குத் தாமரைகளாய், மயில்களாய் வீட்டின் முன் விரிந்து பரவும்.

அம்மா தண்ணீர் தெளித்துப் பெருக்கித் தயாராக்கிய தரையில் அமர்ந்து கோலத்திற்கான வெண்புள்ளிகளை வைக்கத் துவங்கியிருப்பாள். ஒரு வட்டத்தைச் சுளிப்பின்றி வரைய முடியாத எனக்கு, அவளின் விரல் இடுக்கிலிருந்து சீரான இடைவெளியில், ஒரே அளவில், மொக்கு மொக்காய்த் தரையில் விரியும் வெண்புள்ளிகளைப் பார்க்க வியப்பாய் இருக்கும். சில நாட்கள் நேர்ப்புள்ளிகள் வைத்து இதழ் விரிந்த பூவை வரையும் அம்மா மற்றொரு நாள் சந்துப் புள்ளிகள் வைத்து லட்டு நிறைந்த தட்டுகளை வரைவாள். அப்புள்ளிகளுக்கு இடையேயிருந்து எழப்போகும் வடிவத்தை மனதுக்குள் காட்சிப்படுத்தியபடி, வண்ணப்பொடி வட்டில்களைத் தட்டி விடாத கவனத்துடன் அவ்விடத்தைச் சுற்றி வருவேன்.

க.சுதாகர் எழுதிய 6174 நாவலில் வரும் ஜானகியும் இதைப் போன்ற ஒரு பின்புலத்தில் வளர்ந்தவள். கோலமிடுவதன் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் வடிவம் அமைத்து அதில் தனக்கென சவால்களை உண்டாக்கி, அவற்றிற்கு விடை காணுவது பெண்களின் தன்மை என்றும் அதுவே அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துகிறது என்றும் நம்புபவளாய் இருக்கிறாள். அவளுக்கு சிகாகோ சென்று, அங்கு வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் முனைப்பைச் சிறுவயதில் கோலங்களின் மீது கொண்டிருந்த ஆசையே உருவாக்கியிருக்கக் கூடும். வடிவம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய புதிர் ஒன்றை விடுவிக்க நம்பகமான ஆளாய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் அதுவே காரணமாய் இருந்திருக்க வேண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுவென செல்லும் 6174 நாவலின் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒருத்தி இந்த ஜானகி.

பிற கிரகங்களுடனான தகவல் தொடர்பு சாதனங்களாகவும், பெரும் ஆற்றலின் சேமிப்புக் கிடங்குகளாகவும் இருக்கும் பிரமிடுகள், அவை தீய மனிதர்களிடம் சிக்கினால் பெரும் அழிவு ஏற்படும் என்று நம்பும் லெமூரிய அறிஞர்களின் குரு பிரமிடைத் துண்டாக்கி அழிக்கிறார். இந்நிகழ்வுகளுடன் புராதன யுகத்தில் தொடங்குகிறது நாவல்.

நிகழ்காலத்தில் அந்தப் பிரமிட் துண்டுகள் ஒன்றிணையும் நேரம் நெருங்கி விட்டதைத் தங்களுக்குக் கிடைக்கும் வினோத சமிக்ஞைகள் மூலம் அறிகிறார்கள் உலக விஞ்ஞானிகள். அதனால் ஏற்படக்கூடிய அழிவினைக் கணிக்கும் அவர்களுக்கு அத்துண்டுகளின் ஆற்றலை அழித்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அந்தப் பணியை நிறைவேற்ற அவர்கள் கிரிஸ்டல் ஆராய்ச்சியில் நிபுணனான ஆனந்தையும், வடிவக் கணக்கியல் பிரிவில் ஆராய்ச்சி செய்யும் ஜானகியையும் சிறு பரீட்சைகளின் மூலம் தேர்வு செய்கிறார்கள்.

பிரமிடுகளின் வடிவமும், இறந்த உடலைக் கெடாமல் வைத்திருக்கும் அவற்றின் தன்மையும் என்னைச் சிறுவயதில் ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. அதனுள்ளே இருப்பதாகச் சொல்லப்பட்ட மர்மப் பாதைகளும், அவற்றினூடாக அலையும் ஆவிகளைப் பற்றிய மர்மக் கதைகளும் என் பால்யத்தின் பகுதிகளை நிறைத்திருக்கின்றன. இக்கதையில் வரும் பிரமிடின் சக்தியும் அதே வசீகரத்துடன் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

லெமூரிய குருவால் வெட்டப்பட்டு இணையக் காத்திருக்கும் பிரமிட் துண்டுகளுக்கும், தமிழர்களின் வழிவழியாய் வந்த பாரம்பரிய கோலத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? தொடக்கத்தில் இந்தச் சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, ஆனந்துடன் பிரமிடைத் தேடிப் பயணிக்கும் ஜானகிக்கும் ஏற்படுகிறது. இதற்கு விடையாக, பிரமிடுடன், புராண கால லெமூரியா, 1949-ல் கப்ரேகரால் கண்டுபிடிக்கப்பட்ட மாறிலி, தற்கால பாங்காக், சிகாகோ, ரஷ்யா, அம்பாசமுத்திரம், எர்ணாகுளம் இவற்றை நம் பாரம்பரிய கோல இழைகளால் பின்னி நகர்கிறது கதை.

ஜானகியும் ஆனந்தும் வழியில் தங்களுக்குக் கிடைக்கும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் பிரம்மி மற்றும் வட்டெழுத்துக் குறியீடுகளில் பொறிக்கப்பட்ட செய்யுள் வடிவிலான தமிழ்ப் புதிர்களை விடுவித்தபடியே செல்கிறார்கள்.

தலைவால் நேராகித் தன் வாலே தலையாகித்
தன்னிலே தான் கழிய தானேயாய் நின்றிடுமே…
நாலார வட்டத்துள் நாலே எண்ணாம்

இந்தச் செய்யுளைக் கப்ரேகர் மாறிலியுடன் தொடர்புபடுத்தி இருந்ததைக் கண்டு மீண்டும் ஒருமுறை செய்யுளைப் படித்து அசை போட்டு ரசித்தேன். அதே போல எண்களில் கருந்துளை உண்டென்பதை அறிய வியப்பு ஏற்படுகிறது.

அறுமுகத்தோன் ஆதியாதிக்கும் ஆதி தானேயாகி
ஒன்றாக ஆலிலைமேல் கிடந்திட்ட சிசுவாகி
எழுபுரவி தான்செலுத்தும் ஆதவனின் தேவாகி
நான்முகன் தான் படைத்த, பூவுலகை நீ காத்தி,
அடிக்கீழ்படி கந்தனையே என்றுமிருத்தி…

இப்பாடல், முதல் பார்வையில் தாய் மாமனான விஷ்ணுவிற்கு அடங்கிடும் முருகனாய்த் தோன்றி ஆன்மீகப் பொருளைக் கொடுத்தது. இரண்டாவது வாசிப்பில் ஒவ்வொரு அடியின் முதல் சொல்லும் இணைந்து கப்ரேகர் மாறிலியாகவும் (6174), ‘அடிக்கீழ்படி கந்தனையே’, ‘அடி கீழ் படிகம் (Crystal) தனையே’ வாகவும் மாறி அறிவியல் மற்றும் கணிதத்திற்குள் இட்டுச் சென்றது. இப்படிப்பட்ட புதிர்களும், படிக்கும் பொழுதே தாளை எடுத்து கணக்கைப் போட வைக்கும் பக்கங்களும், இடையிடையே சுவாரஸ்யம் தரும் விதத்தில் முடிச்சுகள் இடுவதும், அவற்றை விடுவிப்பதுமாகக் கதை முன்னேறுகிறது.

தன் சிறுவயதில், லேசாக மண்ணுக்கு வெளியே தெரிந்த சாதாரண தூணை வழிபடும் குருவைச் சீடன் கவனிக்கிறான். அவன் சொன்ன இந்தத் தகவலை வைத்து அசோக மன்னன் அத்தூணைப் பெயர்க்கிறான். கொள்ளை போகாமல் காப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புத்தரின் பல் அதிலிருந்து வெளிப்படுகிறது. வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற உப கதைகள் புதியவை.

லோனார் பள்ளம், அதைச் சுற்றியிருக்கும் இடிபாடுகள், கற்கோவில் தூண்கள், கால் தூக்கிய நிலையில் வாமன அவதார சிற்பம், அவற்றின் மீது படிந்திருக்கும் வெயில். இவை மகாபலிபுரத்தையும் அங்கிருக்கும் சிற்பக் கோவில்களையும் நினைவுபடுத்துகின்றன. மீண்டும் மாமல்லபுரம் சென்று புலிக்குகை மற்றும் ரதக் கோயில்களின் உட்சுவர்களில் புதிர்கள் ஏதேனும் பொறிக்கப்பட்டிருக்கின்றனவா எனத் தடவிப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருக்கின்றன.

இனி கோலமிடும் பொழுது அதனுள் பொதிந்திருக்கும் வடிவங்கள், அவற்றின் மீள் அடுக்கமைவு, சமச்சீர்த்தன்மை மற்றும் தொடர் வளைவுக் கோடுகள் நிச்சயம் என் பார்வையில் படும்.

தலையற்ற உடலமிங்கு தலைகீழாய் தான்நின்று
தன்னினின்று தான் கழிய …. தானென்றுமுள்ளோனே!
தோன்றக்காண் தலையங்கே தடையற்ற ஒளிததும்பி

என்ற புதிர்ப்பாடலும்கூட நினைவிற்கு வரலாம்.

 

http://aroo.space/2018/10/01/கருஞ்சுழிக்-கோலங்கள்/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.