Jump to content

நாங்கள் பயந்து வாழ முடியாது, உலகில் நாம்தான் பெரும்பான்மை, எம்மை அடக்கமுடியாது - அனல் பறக்கும் ஹிஸ்புல்லாவின் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Unknown.jpg

 

முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் இன்று -07- பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். தொடர்ந்தும் பேசிய அவர்,
 
முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. நாம் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம்.
 
இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
 
எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தல் வருகின்ற வேளையில் அதனை வெளிப்படுத்த வேண்டும். அத் தேர்தல் வரை நாங்கள் ஒற்றுமைப் பட்டு செயற்பட வேண்டும்.
 
எங்களுடைய ஒற்றுமை என்பது சாதாரணமானது அல்ல. வடக்கு கிழக்கில் இருக்கின்ற எங்களுடைய இராஜினாமா என்பது பெரியது அல்ல. அமைச்சர் கபீர் காசிம், ரவும் ஹக்கீம் போன்ற முக்கியமான தலைவர்களின் பதவி விலகல்கள் பெரியது. அவர்கள் சிங்கள மக்களின் வாக்குகளாலும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் எல்லாம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் பாதுகாப்புக்காவும் ஒற்றுமையாக எடுத்துள்ள முடிவு இது.
 
ஆகவே நாங்கள் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும். எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் முரண்பாடுகளை மறக்க வேண்டும். நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம். என்ன பிரச்சினைகள் வந்தாலும் அவற்றுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
 
நான் ஜனாதிபதியிடம் இரண்டு வார கால அவகாசம் கொடுத்திருக்கிறேன். என்மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். அப்பட்டமான பொய்களை பௌத்த துறவிகள் தலதா மாளிக்கைக்கு முன்னால் சொல்லி நாட்டு மக்களையும் நாட்டையும் ஏமாற்றினார்கள் என்ற செய்தியை நாம் இந்த மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
 
பல பிரச்சினைகளை நாங்கள் பேசிக் கொண்டு போக முடியும். ஆனால் அதற்குப் பதவிகளிலிருந்து பேசிக் கொள்ள முடியாது. ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பேச முடியாது. நான் ஒரு கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க முடியும்.
 
அதனால் எங்களால் முடிந்தவரை உங்களுடைய பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த முடியும். இன்று எங்களது உரிமைகளைப் பாதுகாப்பதும், கௌரவமான முறையில் வாழ்தலை ஏற்படுத்துவதற்கும் வழி ஏற்படுத்துவோம்.
 
நாங்கள் ஒருபோதும் மனம் தளரக்கூடாது. முன்மாதிரியாக இருக்க வேண்டும். வடகிழக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் பயந்து நடுங்கி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. வியாபாரங்களுக்குச் செல்லவில்லை.
 
இப்படி நாங்கள் பயந்து வாழ முடியாது. அவர்களை நாங்கள் வெளியே கொண்டுவர வேண்டும். அவர்கள் பயணம் செய்ய வேண்டும், தொழில்கள் செய்ய வேண்டும், அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இதை எதிர் பார்த்திருக்காது தமிழனுக்கு கருணாவும் ,கருணாநிதியும் போல் சிங்களத்துக்கு அரபு முஸ்லிம்கள் இலகுவில் தூக்கி எறியவும் முடியாது நாட்டுபண்டியும் காட்டுபண்டியும் போல் சிங்களவர்கள் இடத்தில் அவர்கள் கலந்து உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் உங்களை விட எறும்புகள் பெரும்பான்மை. எப்படி வசதி.

நசுக்கப்பட வேண்டிய முஸ்லீம் மத வெறி பயங்கரவாத அடிப்படைவாதம்.. உலகில் எங்கும் விட்டு வைக்கப்படக் கூடாது. அதுக்கு ஹிஸ்புல்லா போன்றவர்கள் மறைமுக ஆதரவு வழங்கினும்.. இவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. அதேவேளை அப்பாவி இஸ்லாமிய மக்கள் தண்டிக்கப்படக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி உசுப்பேத்தி, நாட்டின் பொருளாதாரத்தினை நாசப்படுத்தி விட்டு, பேசுற பேச்சை பாருங்கோவன்.

இப்படி நினைச்சு பேசி தான், உலகம் முழுவதுமே ஒன்றுமே செய்யமுடியாம பெரும் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இவரது இனவெறியை எதிர்க்கத்தான், சிங்கன் ஞானசேரரை வெளியால விட்டிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் அரசியல்வாதிகளும் , மக்களும் மிகத்தெளிவாக உள்ளார்கள் என்பது இந்த உரையில் தெளிவாகத்தெரிகின்றது , சிறுபான்மையினரது வாக்குகளின் மூலம் அரசியல் பேரம் மூலம் பிரதான பெரும்பான்மையினக்கட்சிகளிடமிருந்து வெறும் வெற்று வாக்குறுதிகளைத்தான் பெற முடியும் உரிமைகளை அல்ல என்பதை தெளிவாகப்புரிந்து இந்த அரசியல் பதவியின் துணையுடன் வெளி நாடுகளில் தமது இராஜீக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் தமது உரிமைகள பெறுவது என்பது மிகவும் அறிவுபூர்வமான முயற்சி . மக்களிடம் தேர்தலுக்காக வெற்றுவாக்குறுதிகளை வழங்கி ஏமாற்று வாழ்க்கை நடத்தாமல்  சில விடயங்களை அடிக்கோள் காட்டியுள்ளார் , முஸ்லீம்கள் குட்டக்குட்ட குனியும் சிறுபான்மையினமல்ல என்பதே அந்த செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, vasee said:

முஸ்லீம் அரசியல்வாதிகளும் , மக்களும் மிகத்தெளிவாக உள்ளார்கள் என்பது இந்த உரையில் தெளிவாகத்தெரிகின்றது , சிறுபான்மையினரது வாக்குகளின் மூலம் அரசியல் பேரம் மூலம் பிரதான பெரும்பான்மையினக்கட்சிகளிடமிருந்து வெறும் வெற்று வாக்குறுதிகளைத்தான் பெற முடியும் உரிமைகளை அல்ல என்பதை தெளிவாகப்புரிந்து இந்த அரசியல் பதவியின் துணையுடன் வெளி நாடுகளில் தமது இராஜீக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் தமது உரிமைகள பெறுவது என்பது மிகவும் அறிவுபூர்வமான முயற்சி . மக்களிடம் தேர்தலுக்காக வெற்றுவாக்குறுதிகளை வழங்கி ஏமாற்று வாழ்க்கை நடத்தாமல்  சில விடயங்களை அடிக்கோள் காட்டியுள்ளார் , முஸ்லீம்கள் குட்டக்குட்ட குனியும் சிறுபான்மையினமல்ல என்பதே அந்த செய்தி

இதில் வேடிக்கை என்னவென்றால்.. முஸ்லீம்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தான் இன்றும் அவர்களுக்காக இப்படி எழுதுகிறார்கள். இவர்களால்.. குறைந்த பாதிப்பை.. இவர்களை தமிழர்களுக்கு எதிராகப் பாவித்த சிங்களவன் தான்.. இன்று இவர்களுக்கு எதிராக இருக்கிறான். ஏனெனில் அவனுக்குத்தான் தெரியும் தன் நண்பர்களின் இழி குணம். அதனால்.. தன்சொறீலங்கா..  சிங்கள பெளத்த நாடு என்ற கோட்பாட்டுக்கு வரக்கூடிய ஆபத்தை. 

தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

தேசிய தலைவர் ஒருதடவை ஹக்கீம்.. பேரியல் அஸ்ரப் பிரச்சனையை பார்த்திட்டுச் சொன்னது.. அவர்கள் முதலில் ஒற்றுமையாக வரட்டும்.. அதன் பிறகு பேசுவோம் என்று. இறுதி வரை விடுதலைப்புலிகள் சிங்கள அரசுடனான சர்வதேச மத்தியஸ்த பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை. காரணம்.. இவர்களின் குணம் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

ஆனால்.. இன்று எம் கத்துக்குட்டி அரசியல்வாதிகள்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

இதில் வேடிக்கை என்னவென்றால்.. முஸ்லீம்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தான் இன்றும் அவர்களுக்காக இப்படி எழுதுகிறார்கள். இவர்களால்.. குறைந்த பாதிப்பை.. இவர்களை தமிழர்களுக்கு எதிராகப் பாவித்த சிங்களவன் தான்.. இன்று இவர்களுக்கு எதிராக இருக்கிறான். ஏனெனில் அவனுக்குத்தான் தெரியும் தன் நண்பர்களின் இழி குணம். அதனால்.. தன்சொறீலங்கா..  சிங்கள பெளத்த நாடு என்ற கோட்பாட்டுக்கு வரக்கூடிய ஆபத்தை. 

தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

தேசிய தலைவர் ஒருதடவை ஹக்கீம்.. பேரியல் அஸ்ரப் பிரச்சனையை பார்த்திட்டுச் சொன்னது.. அவர்கள் முதலில் ஒற்றுமையாக வரட்டும்.. அதன் பிறகு பேசுவோம் என்று. இறுதி வரை விடுதலைப்புலிகள் சிங்கள அரசுடனான சர்வதேச மத்தியஸ்த பேச்சுக்களில் முஸ்லிம்களுக்கு இடமளிக்கவில்லை. காரணம்.. இவர்களின் குணம் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

ஆனால்.. இன்று எம் கத்துக்குட்டி அரசியல்வாதிகள்..???! 

பொதுவாக நாம் சிக்களவர்களால் அடைந்த பாதிப்பை ஒப்பிடும்போது முஸ்லீம்களால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் குறைவு ஆனால் அவர்கள் செய்த தவறுகளைநியாயப்படுத்த முடியாது என்பதை ஏற்றுகொள்கிறேன் , ஆனால் சிங்கள்வர்களை எங்களால் மன்னிக்கமுடிகிறது அது எதனால்? சிங்களவர்கள் எவ்வாறு எங்களை அழித்தார்களோ அதேபோல் முஸ்லீம்களுக்கும் நிகழ வேண்டும் என்று விரும்புகிறோமே இதுதான் சிறுபான்மையினத்தின் பலவீனம். 

சிங்களம் எங்களை நாய் என்றுதான் அழைத்தவன் அப்படித்தான் முஸ்லீம்களையும் நினக்கிறார்கள் ஆனால் சிங்களம் எமக்கெதிராக எத்தனையோ இனவன்முறையை காலம் காலமாக ஏவினார்கள்  எமது அரசியல்வாதிகள் தமது மக்களை காப்பாற்ற முடியாத இந்த வெற்றுப்பதவி வேண்டாம் என்று ஒரு பெயரளவிலாவது தமது எதிர்ப்பை காட்டினார்களா?

முஸ்லீம் தலைவர்களைப்பாருங்கள் அவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறை தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையுடன் ஒப்பீட்டளவில் ஒன்றுமே இல்லை , ஆனால் அனைத்து தலைவர்களும் தற்காலிகமாக்வேனும் தமது பதவிகளை தூக்கியெறிகிறார்கள் , முன்மாதிரியாகவுள்ளார்கள் ஆனால் எமது அரசியல்வாதிகள் இனவிடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்க காட்ட முயற்சி செய்தார்கள், அரசியல்வாதிகள் அப்படியென்றால் மக்கள் அதை விட மோசம் ஆயிரம் பிளவுகள் , பல அமைப்புகள் மற்றும் ஒரு அமைப்பிற்குள்ளே பிரிவுகள் .

ஆனால் முஸ்லீம்களிடம் இதுவரை இம்மாதிரியான ஈனத்தனமில்லை அரசியல்வாதிகள் பயங்கரவாதத்திற்கு முட்டு கொடுக்கிறார்கள் , தீவிரவாதத்தை இன உரிமையாகக்காட்டுகிறார்கள் , இப்ப சொல்லுங்கள் சிங்களம் யாரை இழிவாகப்பார்க்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரின் பலவீனம் யார் அதிகம் நேசிக்கப்படும் செல்லப்பிராணி என்பதுதான் , தொடரச்சியாக துன்புறுத்தப்படும் போது ஒரு அளவிற்கு பின் நாய் கூட தனது எஜமானனை எதிர்க்கும் , முஸ்லீம்கள் இனி சிங்களத்துடன் இணையமாட்டார்கள் இடம் காலியாகவுள்ளது என்று நாம் நினைத்தால் சிங்களம் எம்மை பற்றி என்னநினக்கும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, vasee said:

முஸ்லீம் தலைவர்களைப்பாருங்கள் அவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறை தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறையுடன் ஒப்பீட்டளவில் ஒன்றுமே இல்லை , ஆனால் அனைத்து தலைவர்களும் தற்காலிகமாக்வேனும் தமது பதவிகளை தூக்கியெறிகிறார்கள் , முன்மாதிரியாகவுள்ளார்கள் ஆனால் எமது அரசியல்வாதிகள் இனவிடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்க காட்ட முயற்சி செய்தார்கள், அரசியல்வாதிகள் அப்படியென்றால் மக்கள் அதை விட மோசம் ஆயிரம் பிளவுகள் , பல அமைப்புகள் மற்றும் ஒரு அமைப்பிற்குள்ளே பிரிவுகள் .

சிங்களவன் தமிழர் மக்களின் தெளிவான எதிரி. அவனை மன்னிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம். 

ஆனால்... முஸ்லீம்கள்.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்களவனை விட சகோதரத்துவம் கொண்டாடும் ஒரு சமூகமாக இருந்தது. ஆனால் அவர்கள் செய்தது தமிழ் மக்களுக்கு பச்சைத் துரோகங்களே அதிகம்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சகோதர சிறுபான்மை தமிழினத்தை சிங்களப் பேரினவாதம் சிதைக்கிறது என்பதை இட்டு கிஞ்சிதமும் அக்கறை காட்டியவர்கள் கிடையாது. பலஸ்தீனத்துக்கு.. சிரியாவுக்கு.. என்று வெள்ளிக்கிழமை போராட்டங்களை நடத்தியவர்கள்... என்றுமே தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு சிறிய போராட்டத்தைக் கூட செய்யவில்லை.

களுத்துறையில் முஸ்லீம்கள் மீது மகிந்த அரசு வன்முறையை கட்டவிழ்த்தவிட்ட போது புலம்பெயர் தேசங்களிலும் தமிழர்கள் இவர்களுக்காகப் போராடினார்கள். இறுதியில் தமிழ் மக்களைக் குறிவைத்து ஐ எஸ் பயங்கரவாதத்தின் உதவியுடன் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுதான் இவர்கள் காட்டிய நன்றிக்கடனா. தாக்குதலை நடத்தி விட்டு.. சிங்களச் சகோதரன் பாதிக்கப்படாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிக்கையும் விட்டுக் கொண்டவர்கள். இவர்களை தான் தமிழ் மக்கள்.. சகோதர சிறுபான்மை சமூகம் என்று பரிவுகாட்டி வந்தது. 

முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லீம் அடிப்படைவாதத்திற்கு தீனிபோடும் கடும்போக்கு முஸ்லிம் கட்சியினைச் சார்ந்தவர்கள் அல்லது அதன் வழிவந்தவர்களை தவிர.. வேறு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிய விலகியதாகத் தெரியவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி.. மற்றும்.. இதர சிங்களக் கட்சிகளை சார்ந்த முஸ்லிம் அமைச்சர்களோ.. பாராளுமன்ற உறுப்பினர்களோ.. இந்த கடும் போக்கு முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதச் சார்ப்பு முஸ்லிம் காங்கிரஸின் முடிவை ஆதரித்ததாகத் தெரியவில்லையே. 

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள்// 2004 இல் ஒரே குரலில்.. சுயநிர்ணய உரிமையை கோரி நின்றனர் என்பதையும் மறக்கக் கூடாது. அரசுடன் ஒட்டிக்கொண்டு நின்ற ஒட்டுக்குழு ஒன்றைத் தவிர.  அப்போது முஸ்லீம்கள் எமது ஒற்றுமையை உதாரணம் காட்டினர் என்பதையும்.. தேசிய தலைவருடன் உடன்படிக்கைகளுக்கு வரவும் தூண்டப்பட்டனர். 

Link to comment
Share on other sites


உலகில் முஸ்லீம்கள் இல்லாத நாடு - வத்திக்கான்
உலகில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட நாடுகள் - 50
உலகில் அதிக முசுலீம்களை கொண்ட நாடு - இந்தோனேசியா

ஆனால், 2060 இல் அது இந்தியாவாக இருக்கும்

FT_19.03.29_muslimChristianPopulations_muslim.png?w=640
https://en.wikipedia.org/wiki/Islam_by_country 

2050இல் உலக முஸ்லீம்களின் சனத்தொகை எதிர்வு கூறப்பப்படுவது 2.8 பில்லியன்கள்
இது உலக சனத்தொகையுடன் வளர்ச்சியுடன் ஒப்பிடும்பொழுது இரண்டு மடங்கு!

PF_15.04.02_ProjectionsTables70.png?w=20

https://www.pewforum.org/2015/04/02/muslims/pf_15-04-02_projectionstables70/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள்// 2004 இல் ஒரே குரலில்.. சுயநிர்ணய உரிமையை கோரி நின்றனர் என்பதையும் மறக்கக் கூடாது. அரசுடன் ஒட்டிக்கொண்டு நின்ற ஒட்டுக்குழு ஒன்றைத் தவிர.  அப்போது முஸ்லீம்கள் எமது ஒற்றுமையை உதாரணம் காட்டினர் என்பதையும்.. தேசிய தலைவருடன் உடன்படிக்கைகளுக்கு வரவும் தூண்டப்பட்டனர். 

இதே எமது அரசியல்வாதிகள்தான் இறுதிக்கட்டப்போரின் போது தேசிய தலைவரிற்கு பத்திரிகைகளில் திறந்த மடல்களில் மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துமாறு எழுதியிருந்தார்கள் அதனை என்னால் உறுதியாகக்கூறமுடியவில்லை நான் நினக்கிறேன்  அது சம்பந்தர்தான் என்று அத்துடன் அக்கடிததின் சாரம்சம் பயங்கரவாதிகள் என்பதாக நினவில் உள்ளது

எமது அரசியல்வாதிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை போர் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளே கேள்விக்குறியாகவுள்ளது இதனைப்பேசுவதுகூட முடியாதா இவர்களால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

எமது அரசியல்வாதிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை போர் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளே கேள்விக்குறியாகவுள்ளது இதனைப்பேசுவதுகூட முடியாதா இவர்களால்?

தலைமையற்று எடுபிடிகளின் செல்வாக்குள் இன்று அவர்கள். அதனால்.. எடுபிடிகள் தான் பேச முடிகிறது. மக்களின் உரிமைக்கான குரல்கள் மெளனத்துக்கிடங்கின்றன. அவ்வளவே. இதுவே ஒரு இனம் முழுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் போது நிகழக் கூடிய.. பொதுமைப்பாடாகும். 

Link to comment
Share on other sites

24 minutes ago, vasee said:

இதே எமது அரசியல்வாதிகள்தான் இறுதிக்கட்டப்போரின் போது தேசிய தலைவரிற்கு பத்திரிகைகளில் திறந்த மடல்களில் மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துமாறு எழுதியிருந்தார்கள் அதனை என்னால் உறுதியாகக்கூறமுடியவில்லை நான் நினக்கிறேன்  அது சம்பந்தர்தான் என்று அத்துடன் அக்கடிததின் சாரம்சம் பயங்கரவாதிகள் என்பதாக நினவில் உள்ளது

எமது அரசியல்வாதிகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை போர் முடிந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளே கேள்விக்குறியாகவுள்ளது இதனைப்பேசுவதுகூட முடியாதா இவர்களால்?

அவ்வாறு எழுதியது ஆனந்தசங்கரி என்றுதான் என் நினைவுகள் சொல்லுது

Link to comment
Share on other sites

வசீ,

நீங்கள் சொல்வதில் அனேகமானவை ஏற்றுக்கொள்ளக் கூடியவை. ஆயினும் எக்காலத்திலும் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைய மாட்டார்கள் என்பது அவர்களின் அண்மைய நடவடிக்கைகளும் செயல்பாடுகளுமே காட்டி நிற்கின்றன. இது வரைக்கும் எந்த முஸ்லிம் புத்திசீவியோ அல்லது அரசியல்வாதியோ சிறுபான்மை இனங்கள் ஒன்றுபட்டாலே ஒழிய தமக்கு விமோசனம் இல்லை என்று கூட சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு வெளியே அதிகமாக வாழ்வதாலும் பல முஸ்லிம் கிராமங்கள் நெருக்கமான சிங்கள ஊர்களுக்கு இடையில் இருப்பதாலும் அவர்களால் அப்படி சொல்வது ஒருவகையில் தற்கொலைக்கு ஒப்பானது என்பதை ஏற்றுக்கொண்டாலும் தனி முஸ்லிம் அலகு கேட்கும் போது அவ்வாறு அவர்கள் நினைக்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டி இருக்குது.

ஒப்பீட்டளவில் தமிழர்களுக்கு தம் மீது எந்த கரிசனையும் இல்லாது போட்டி போட்டு மிதித்து செல்ல விரும்பும் முஸ்லிம்களுடன் இணைந்து அரசியல் செய்வதை விட அரசுடன் இணைவது ஆகக் குறைந்த அபிவிருத்தியையாவது கொண்டு வரும் என நினைக்கின்றேன். அதுதான் தமிழர்களுக்கு தேவையான பொருளாதார பலத்தைக் கொடுக்கும்.

------------
என் சொந்த பெயரில் இருக்கும் முகனூலில் பல சிங்கள நண்பர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் தீவிர சிங்கள தேசியவாதத்தை ஆதரிப்பவர்கள். போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ தளபதி ஒருவரின் சகோதரனும் அடக்கம். அவர்கள் தனி பக்கம் ஒன்றை திறந்து ரிஷாட் பதவி விலக வேண்டும் என கோரிக்கையுடன் பலரை இணைத்து கடுமையாக பிரச்சாரம் செய்தவர்கள். அதில் நான் Founder member ஆக இருக்கின்றேன்.

ஹிஸ்புல்லாவின் இன்றைய பேச்சின் தலைப்பை அப்படியே ஆங்கிலத்தில் இட்டு பகிர்ந்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

அவ்வாறு எழுதியது ஆனந்தசங்கரி என்றுதான் என் நினைவுகள் சொல்லுது

தகவலுக்கு நன்றி , தவறிற்கு வருந்துகிறேன்

Link to comment
Share on other sites

Just now, vasee said:

தகவலுக்கு நன்றி , தவறிற்கு வருந்துகிறேன்

எனக்கும் sure இல்லை என்பதால் தான் நினைவுகள் சொல்லுது' என்று எழுதியிருக்கின்றேன்...மற்றது இதுக்கெல்லாம் வருத்தம் தெரிவிக்க தேவையில்லையே...எல்லாரும் ஞாபகத்தில் இருப்பதை தான் எழுதுகின்றோம்...

Link to comment
Share on other sites

இலங்கையை விட்டும் வெளியேறுவதற்கு அந்த நாட்டைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த குடும்பங்களே, இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, இன்று வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊரான காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில், ஜும்மா தொழுகைக்கு பின்னர் அவர் உரையாற்றுகையில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

"முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டிலேதான் சிறுபான்மையினர். ஆனால் உலகில் நாங்கள் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக் கூடாது" எனவும் அவர் பேசினார்.

"பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் வரையில்தான் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. மீதி அனைவரும் அப்பாவிகள். தொழுகைக்குப் பிறகு ஓதும் பிரார்த்தனைகளை எழுதி வைத்திருந்தவர்கள் கூட, ஊவா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதே போன்று குரான் மற்றும் ஹதீஸ் பிரதிகளை வைத்திருந்தவர்களும் பல மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்".

தமது ஜுப்பா ஆடையில் சௌதி அரேபியாவின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்ததற்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, மூன்று வாரங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளையும், கடைகளையும் எரித்தவர்கள், வீதிகளில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களெல்லாம், எந்தக் காரணமும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

எனவே, கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிப்பதற்கான பணிகளை செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக பயங்கரவாதிகளை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முன்னிலையில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளரும் முன்னாள் பிரதிப் போலீஸ் மாஅதிபருமான நாலக சில்வா வியாழக்கிழமை சாட்சியமளித்தார்.

அப்போது அவரிடம்; 'பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு யாராது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதாவது உதவினார்களா'? அது தொடர்பான சாட்சியங்கள், ஆவணங்கள் உள்ளதா என்று, தெரிவுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான சரத் பொன்சேகா கேட்டார்.

அதற்கு, அவ்வாறு எந்தவொரு முறைப்பாடும் இல்லை என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் நாலக சில்வா கூறியிருந்தார்" என்றும் ஹிஸ்புல்லா கூறினார்.

முஸ்லிம் ஆளுநநர்களும் அமைச்சர்களும் கூட்டாக பதவி விலகியது குறித்து, இங்கு பேசிய அவர், "முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள இந்த ஒற்றுமை சாதாரணமானது அல்ல. எங்களைப் போன்று முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்கின்றவர்கள், எமது பதவியை துறந்தது பெரிய விடயமல்ல. ஆனால், கபீர் ஹாசிம், ஹலீம், ரஊப் ஹக்கீம் போன்ற அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்தமை மிகப்பெரிய விடயமாகும். காரணம், இவர்கள் கண்டி, கேகாலை மாவட்டத்திலுள்ள சிங்கள மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானவர்கள். எனவே, அவர்களின் பதவி விலகல்கள் மிக உயர்ந்த மட்டத்தில் வைத்துப் பாரக்க வேண்டிவை" என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலையினை அடுத்து, கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஹிஸ்புல்லா உள்ளிட்ட இரண்டு முஸ்லிம் ஆளுநர்கள் மற்றும் 9 முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48560049

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பயந்து வாழ முடியாது, உலகில் நாம்தான் பெரும்பான்மை, எம்மை அடக்கமுடியாது - அனல் பறக்கும் ஹிஸ்புல்லாவின் பேச்சு

அப்போ

பலஸ்தீனத்திலும்

ஈராக்கிலும்

சிரியாவிலும்

அழித்தொழிக்கப்படுபவர்கள்  யார் ராசா??

இன்னும்  உங்களது  நண்பர்களை

இனத்தை  நீங்க  கண்டுகொள்ளவில்லை  என்று  தெரிகிறது

வாங்கி  வா...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பா, போய், பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க. இந்தாள நம்பி நாசமாய்ப்போகாம...

நாங்களும் தானப்பா சொன்னம், பக்கத்தில 8 கோடி தமிழர் இருக்கினம், 90 கோடி இந்துக்கள் இருக்கினம் எண்டு..... நம்பி, நாசமாப்போனது தானே கண்ட மிச்சம்.

முஸ்லீம் பெரும்பான்மை, ஒண்ணா சேர்ந்து ஒண்ணுக்கு இருக்கிறம் என்கிறார்.
இந்த முஸ்லீம் அகதிகள், அங்கையும், இங்கையும் இழுப்படுகினம்.

வடக்கு ஆளுனர் செய்யிற உதவிகள் கூட, கிழக்கு ஆளுனராக இருந்த இந்த ஆள் செய்யவில்லை. பினாத்துறார், நிண்டு கொண்டு....

Link to comment
Share on other sites

Mihad Mihad  எனும் முஸ்லீம் அன்பர் ஒருவரின் முகனூலில் இருந்து இது.... கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்கின்றது

---------------------

நேற்று தமிழர்கள், இன்று முஸ்லிம்கள் எனும் அச்சத்திற்கு எதிரான அரசியல் ஒருங்கிணைவு.
* * *

பௌத்த பீடங்களின் மஹாநாயக்கர்கள் திடீரென உசாரடைந்து முஸ்லிம் எம்.பிக்களை மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்குமாறு கூறியிருப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரங்கள் எனது கடந்தகால நினைவுகளை மீட்டியும் விடுகிறது.

நான் துறைமுக அதிகாரசபையில் பணி புரிந்த காலத்தில் என்னோடு பல சிங்களவர்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்களில் V. P. நந்தகுமார என்னும் ஒருவர் இருந்தார். அவரை அனைவரும் "லொகு அய்யா " என்று அழைப்போம். மீரிகம எனும் ஊரைச் சேர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 54. நாங்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி கூடிக் குலாவுவதும் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதும் வழமை. இலங்கையின் பல்வேறு வரலாற்றுத் தகவல்களையும், அரசியல் தலைவர்களையும் முன்வைத்து அவர்களின் மொழியில் நான் புதிய கோணங்களில் விவாதிப்பதை ஆர்வமுடன் நோக்குவார்கள்.

2001 ல் மாவனல்லையில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. அப்போது "லொகு அய்யா " கூறிய வார்த்தைகள் மறக்க முடியாதவை. இன்றைக்கும் பசுமையான அரசியல் அர்த்தத்தைக் கொண்டவை.

" தம்பி, 1983 கறுப்பு ஜூலை கலவரத்தின் பின்னர் இந்த உலகம் எம்மை பெரும் மிலேச்சத் தனமான காட்டுமிராண்டிச் சமூகம் என இழி சொற்களால் பழித்தது. ஆனால் எங்களில் அனைவரும் அப்படியானவர்கள் இல்லை. கலவரத்தின் போது நாங்கள் எத்தனை ஆயிரம் அப்பாவி தமிழர்களை எமது வீடுகளில் தங்க வைத்து காப்பாற்றினோம். இழிவான அரசியலால் தூண்டப்பட்ட காடையர்கள் செய்த நாசத்திற்கு முழு சமூகமும் குற்றஞ்சாட்டப்படும் அவலம் நேர்ந்து விட்டது. நாங்கள் நல்லவர்கள் என இந்த உலகத்தின் முன்பு நிரூபிப்பதற்கான சூழலை இந்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும், மதவாதிகளும் உருவாக்கவே மாட்டார்கள் போல் தெரிகிறது. " என்று "லொகு அய்யா " சொன்னது இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளது.

திகனவிலும், மினுவாங்கொடயிலும், குருணாகலயிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடந்த போது அதனைத் தடுக்க எந்த மதகுருவும் வாய் திறக்கவில்லை.

அப்போது அவர்கள் காத்த மௌனம் என்பது சிங்களத்தின் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தை ஆதரிக்கும் செயல்தான். அதுமட்டுமல்ல சில பீடங்களைச் சேர்ந்த மஹாநாயக்கர்கள் உண்ணாவிரதம் இருந்த பிக்குவை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என மிரட்டல் விட்டமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரான பதட்டத்தை நாடு தழுவிய அளவில் விரிவாக்கியதற்கான பொறுப்பு யாருடையது என்பதை உலகம் அறியும்.

இப்படியான சூழலில்தான் முஸ்லிம்கள் தமது ராஜினாமாவை அறிவித்தனர். வேறு வகையில் கூறுவதானால் மஹாநாயக்கர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் இருந்த அதுரலியவின் நோக்கத்தை முஸ்லிம் எம்.பி க்கள் நிறைவேற்றியிருக்கின்றனர்.

ஆனால் அதுவே சிங்கள அரசியல் பண்பாட்டின் அசிங்கத்தை உலகம் உணர்ந்து கொள்வதற்கான நிலைமையையும் ஏற்படுத்துமென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை.

ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து கூட்டாக ஒரு சமூகம் வெளியேறுவது என்பது அந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர் மீது உலகம் சந்தேகம் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தும். இதே போன்றுதான் 1983 ல் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியானது பாராளுமன்ற ஜனநாயகம் இலங்கையில் சாத்தியமில்லை எனக் கூறி தனது அனைத்து உறுப்பினர்களோடு வெளியேறியது. அப்போது மஹாநாயக்கர்கள் பதட்டம் அடையவில்லை. ஏனெனில் அப்போது K. W. தேவநாயகம், செல்லையா ராசதுரை, தொண்டமான் போன்ற தமிழ் தலைவர்கள் அரசாங்கத்தோடு இருந்தனர். அதன்போது அவர்களைக் காண்பித்து தம்மோடு சிறுபான்மைப் பிரதிநிதிகள் இருப்பதாக அரசாங்கத்தினால் கூற முடிந்தது. ஆனால் அதன் காரணமாகவே முப்பது வருட கால நெருக்கடிகளையும், அழிவுகளையும் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்பட்டது.

இன்று இலங்கையில் என்ன நடந்திருக்கிறது?
அரசாங்கத்தின் அமைச்சரவையில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த போதும் ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் வெளியேறியிருக்கிறார்கள். இது அற வழியில் அமைந்த புதிய எதிர்ப்பு அணுகுமுறை. இது பேரினவாத கடும்போக்காளர்களின் மனிதாபிமானமற்ற அரசியல் பண்பாட்டை நோக்கி வைக்கப்பட்ட தடுப்பணை.

இது இலங்கையின் நற்பெயரையும், நாட்டு நலனையும் எவ்வாறெல்லாம் சிதைக்கும் என்பதை காலம் கடந்து ஞானம் பெற்ற மஹாநாயக்கர்கள் முஸ்லிம்களை நோக்கி கை நீட்டியிருக்கிறார்கள். அதற்குள்ளும் தம் சமூகத்தின் மானத்தை உலகின் பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும் எனும் அக்கறைதான் தொனிக்கிறது.

இன்று உருவாகியிருக்கும் புதிய அரசியல் நிலவரமானது சிறுபான்மையினர் மத்தியில் ஒருங்கிணைவான சிந்தனையொன்றைத் தோற்றுவித்திருக்கிறது. முன்பு மலையக தமிழர்கள், நேற்று வட கிழக்கு தமிழர்கள், இன்று முஸ்லிம்கள், நாளை யார்? எனும் ஐயப்பாடான சிந்தனைதான் அது.

இந்த ஐயத்தில் இருந்து அரசியல் ரீதியான நலவுகளை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கைகளும் துளிர் விடத் தொடங்கியுள்ளது. பல்வேறு சிறுபான்மைக் கட்சிகளும் அண்மைக்கால பேரினவாத செயல்பாடுகள் தொடர்பில் ஒரே வகையான எதிர் அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளன. இது ஒரு ஆரோக்கியமான மாற்றமாகும். இது அரசியல் ரீதியான கொள்கைப் பலமாக ஒருமித்துத் திரட்சியுறுவது காலத் தேவையாகவும் எழுந்துள்ளது. இலங்கையின் பல்வேறு சிறுபான்மைச் சமூகங்கள் ஒரே அரசியல் அணியாக ஐக்கியப்படுவதன் மூலமே இனி வரும் சவால்களை எதிர்கொள்ளலாம்.

இங்குள்ள விகிதாசாரத் தேர்தல் முறையினூடாக ஒருங்கிணைந்த சிறுபான்மைச் சமூகங்கள் மிகப் பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியும். இங்கு சிறுபான்மையினருக்குள் ஒருங்கிணைய முடியாமல் கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும் முரண்பாடுகள் யாவும் பேரினவாதத்தின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. அவை நீக்கப்பட்டு புதிய புரிந்துணர்வுகள் சிறுபான்மையினர் மத்தியில் மலர வேண்டும்.

இலங்கையின் சகல பாகங்களிலுமுள்ள சிறுபான்மை இனங்கள் யாவும் ஒரு அரசியல் அணியாக திரள்வதன் மூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலொரு பங்கு ஆசனங்களைப் பெற முடியும். இது ஆளும் பேரினவாதத் தரப்புகளின் கடும் அரசியல் சவால்களை ஏற்படுத்தும்.

சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை தென்னிலங்கையில் வாழும் சிறுபான்மையினர் பெரும்பாலும் இரண்டு தேசியக் கட்சிகளுக்கே வாக்களித்து வந்துள்ளனர். இருந்த போதும் சிங்களப் பேரினவாதம் சிறுபான்மையினர் மீது இனவெறுப்பைக் காட்டியபடிதான் இருக்கிறது. ஆகவே இவர்களால் ஏற்படுத்தப்படும் வன்செயல் அச்சம் என்பது அரசியல் கட்சி சம்பந்தமான தெரிவுடன் மட்டுமே தொடர்பானதுமல்ல. எந்தத் தேசியக் கட்சியை ஆதரித்தாலும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு குறையவில்லை. ஆகவே சிறுபான்மையினர் தனி அணியாகச் செயல்படுவதனால் பேரினவாதம் அச்சுறுத்தும் என அஞ்சுவது தேவையற்றது.

இலங்கையில் இரு கட்சி ஜனநாயகம் நிலவுகிறது என ஒரு தோற்றம்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிறுபான்மையினரைக் கையாள்வதில் எழுதப்படாத முறை ஒன்றினூடாக சிங்கள தேசமாகவே திரள்கிறார்கள். எனவே இந்த அச்சுறுத்தலை சிறுபான்மை இனங்கள் உதிரிகளான நிலையில் இருந்து எதிர்கொள்வது பயனற்றது.

இந்த இடத்தில் எவராவது மாற்றுத் தர்க்கம் ஒன்றை முன்வைக்கக் கூடும். சிறுபான்மையினர் ஒரு அணியாக திரள்வது போல் பெரும்பான்மையினரும் ஒரு அரசியல் அணியாகத் திரண்டால் என்ன செய்வது என்பதேயது.

சிறுபான்மையினர் ஒரு அணியாக மாறுவதென்பது ஒடுக்குமுறையிலிருந்து தங்களை அரசியல் ரீதியாகத் தற்காத்துக் கொள்வதற்கானது. ஆனால் பெரும்பான்மையினர் ஒருங்கிணைவார்களென்றால் அது சிறுபான்மை இனங்களை நசுக்குவதற்கானதாகவே இருக்க முடியும். இது ஜனநாயக விழுமியங்களுக்கு முன்பு பலவீனமானதாகவே இருக்கும். ஆனால் சிறுபான்மைகளின் ஒருங்கிணைவானது பன்மைத்துவ மரபு கொண்டதாக இருக்கும்.

பெரும்பான்மையினர் தேர்தல் தொடர்பாக ஒரு அரசியல் அணியாக ஒருங்கிணைவது சவால்கள் மிக்கது. இங்கு பிரதானமாக மூன்று கட்சிகள் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி தாராள ஜனநாயக கொள்கைகளை அரசியலுக்கான கோஷங்களாகக் கொண்டது. மொட்டு கட்சியானது சிங்கள தேசியவாதத்தையும் பௌத்த மதவாதத்தையும் கொள்கைகளாகக் கொண்டது. ஜே.வீ.பீ கட்சியானது இடதுசாரி கொள்கைகளை அரசியல் வழிமுறையாக பின்பற்றுவதாக கூறுகிறது. இவை யாவும் வெவ்வேறு போக்குகளைக் கொண்டவையாக இருப்பதனால் இவர்கள் தமக்குள் ஒருங்கிணைவது சாத்தியம் குறைந்தது. அதையும் தாண்டி அவர்கள் ஒருங்கிணைவார்களாக இருந்தால் அது கொள்கைகளை விடவும் சிங்கள இனவாதத்துக்கானது என்பதை உலகின் முன் பறைசாற்றுவதாக அமையும். அது கூட சிறுபான்மையினருக்கு நல்லதுதான்.

அப்படியல்லாமல் பெரும்பான்மைக் கட்சிகள் தனித்து நின்று, சிறுபான்மையினர் ஓரணியாக மாறினால் இலங்கைத் தேர்தல் களம் புதிய கலாசாரமொன்றை நோக்கி நகர வேண்டியிருக்கும். அங்கு புது வகை அரசியலமைப்பின் தேவை உணரப்படக் கூடும்.

------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உள்ள கருத்துக்களை வாசிக்கும் பொழுது எனக்கு 35 வருடங்களுக்கு முதல் எம்மவர்கள் சொன்ன கருத்துக்கள் நினைவில் வருகின்றது.....

எமது போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் சிங்கள மக்களிடையே உள்ள முற்போக்கு அரசியல்வாதிகள்(வாசுதேவ நாணயக்காரா?????)மற்றும் சிங்கள முற்போக்கு தொழிலாளர்கள் ,விவசாயிகளுடன்  சேர்ந்து போராட வேண்டும் என்று ......ஆனால் இன்று அனுபவரிதியாக  நாம் கண்டது ...வாசுதேவா சுயநல அரசியல்,சிங்கள மக்கள் இனவாதிகளுக்கு வாக்குகளை அளித்து வெற்றியடை வைத்தமை.....

இது தான் நாளையும் நடக்கும் , சிறுபான்மையுடன் சேர்ந்து போராடா வேணும் என்பார்கள் .....நாளை சேர்ந்து போராடும் சிறுபான்மையின் கூட்டு மனப்பான்மை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது....இங்கு நாம் சிறுபான்மை என்று போராடுவதை விட தமிழினத்தின் விடிவுக்காக போராடுவது மேல்....

தமிழ் பேசும் மக்கள் என்று சொல்லி முஸ்லீம் மக்களை எம்முடன் சேர்த்து போராடி முஸ்லீம் மக்களின் கோரிக்கைகளை கொச்சைப்படுத்துவதை விட அவர்களின் சோலியை அவர்கள் பார்க்கட்டும்....

வடக்கு கிழக்கு மக்கள்,தமிழ்பேசும் மக்கள்,சிறிலங்காவின் சிறுபான்மையினர்.......இந்த சொற்கள் எல்லாம் இஸ்லாமியர்களுக்கு தேவையற்றவைகள்.....முஸ்லீகள் ,உலக முஸ்லீகள் இதுதான் அவர்களுக்கு தேவையான சொற்றோடர்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள், மதம் என வரும்போது இவர்கள் உலக முஸ்லீகளாக இணந்து கொள்வார்கள். 

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் வாழ்ந்து பார்த்தால் தெரியும் அங்கு வாழும் சிறுபான்மையினர் எவ்வளவு துன்பப்படுகின்றார்கள் என. சிங்களவனுடன் வாழலாம், ஆனல் முஸ்லீம் மத நிர்வாகத்தின் கீழ் வாழ்வது மிகக் கடினம்.

Link to comment
Share on other sites

இலங்கை முஸ்லிம்கள் நாட்டைவிட்டே வெளியேற விரும்புகிறார்களா - உண்மை நிலவரம் என்ன?

இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் பதில்

முஸ்லிம்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை'

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற எந்தவொரு கலந்துரையாடலிலும், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேறும் விடயம் குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படவில்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தெரிவிக்கின்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

'எவரும் வெளிநாட்டு தூதரகங்களை நாடவில்லை'

தான் கலந்துக்கொண்ட எந்தவொரு இடத்திலும் இந்த விடயம் கலந்துரையாடப்படவில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48611824

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.