Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
mom-teaching-tamil-to-child.jpg
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.


“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 


ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 

 

**********


இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன். 

“தெரியலடா! ஹாஸ்பிட்டலுக்குப் போய்க்கிட்டிருக்கும்போது அம்மா சொன்னாங்க. ‘புக் ஷெல்ப்ல ஒரு லெட்டர் வெச்சிருக்கேன். படிச்சிப் பாரு’ன்னு”. 

சொல்லிக் கொண்டே உள்ளேயிருந்து ஒரு தாளைத் கொண்டு வந்தான். நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தத் தாள் பார்க்கவே கொஞ்சம் பழையதாக இருந்தது. பிரித்தேன். அம்மாவின் கையெழுத்துதான். இடது மேல் மூலையில் ‘நாள்: 12.8.2010’ என்று இருந்தது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதா?! அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவ்வளவு உயிர் போகிற வலியிலும் படிக்கச் சொல்லி நினைவுபடுத்தியிருக்கிறார் என்றால்... வியப்போடும் புதிரோடும் நான் படிக்க ராகேஷும் அவன் மனைவியும் கேட்கத் தொடங்கினர். 

“உயிரினும் இனிய மகன் ராகேஷுக்கு, அம்மா எழுதும் முதலும் கடைசியுமான கடிதம். 

மகனே! நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்பொழுது நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் இறந்த பிறகுதான் இது உன் கைக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நீ நெருங்காத இடமான புத்தக அடுக்கினுள் ஒளித்து வைக்கிறேன். 

கடைசிக் கடிதம் என்றவுடன் அம்மா ஏதோ சொத்து பத்து எழுதி வைக்கப் போகிறாளோ என்று ஆவலை வளர்த்துக் கொள்ளாதே! இது வெறுமே என்னுடைய கடைசி விருப்பம் ஒன்றை உன்னிடம் தெரிவிக்கும் நோக்கம்தான், வேறொன்றுமில்லை. அது என்ன என்பதைத் தெரிவிக்கும் முன், ஏன் இப்படி ஒன்றைக் கேட்கிறேன் என்கிற காரணத்தைச் சொல்லி விடுகிறேன். 

சிறு வயதிலிருந்தே மிகுந்த தமிழ்ப் பற்றுக் கொண்டவள் நான். பள்ளியில் படிக்கும்பொழுதே கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் என வளர்ந்தவள். கல்லூரியில் இன்னும் ஒரு படி மேலே போய்த் தமிழ் இனத்துக்கான போராட்டங்களில் கூடக் கலந்து கொண்டேன். 

ஆனால், திருமணம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப் போட்டது. உன் அப்பா எனக்கு நேர் எதிர். திருமணச் சடங்கிலேயே எங்களுக்குள் முரண்பாடுகள் வேர்விடத் தொடங்கி விட்டன. நான் தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். உன் அப்பாவும், அவர் வீட்டினரும் வழக்கமான முறைப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். மணமான பிறகு இருவரும் சேர்ந்து எங்காவது வெளியில் போவது என்றால், என் தேர்வு கவியரங்கம், மேடை நாடகம் என்று இருக்கும். உன் அப்பாவோ திரைப்படம், கடற்கரை போன்ற இடங்களுக்குத்தான் அழைத்துப் போவார். இவையெல்லாமாவது சிறு சிறு விஷயங்கள். ஆனால், பெற்ற பிள்ளையை வளர்ப்பதில் கூட உன் அப்பா ஒன்றைக் கூட என் விருப்பப்படி விடவில்லை. 

நான் உனக்காக மிகவும் சிந்தித்து அழகழகாகப் பதினைந்து தமிழ்ப் பெயர்களைப் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஆனால், அவரோ ‘ஷ்’ என்கிற எழுத்தில் முடியும்படி பெயர் வைப்பதுதான் நாகரிகம் என்று சொல்லி உனக்கு ‘ராகேஷ்’ என்கிற பெயரைச் சூட்டினார். அது மட்டுமா? நீ எந்தப் பள்ளியில் படிக்க வேண்டும், கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும், யாரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற வரைக்கும் எல்லாமே அவர் விருப்பப்படியும், உன் விருப்பப்படியும்தான் இந்த வீட்டில் இதுவரை நடந்திருக்கின்றனவே தவிர, என் விருப்பப்படி ஓர் அணுவும் இங்கு அசைந்ததில்லை. 

மகனே! வாழ்க்கை முழுக்க இப்படி அடுத்தவர் விருப்பப்படியே வாழ்ந்து முடித்து விட்ட எனக்கு, இறந்த பிறகாவது ஒன்றே ஒன்றை என் விருப்பப்படி நடத்தி வைப்பாயா?... 

ராகேஷ்! தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளில் இன்றும் முதுமக்கள் தாழிகள் கிடைப்பது, இறந்தவர்களைப் புதைப்பதுதான் பழந்தமிழர் மரபு என்பதைக் காட்டுகிறது. எரிப்பது பிற்காலத்தில் தோன்றிய வழக்கமாக இருக்கலாம் என்பது என் கருத்து. கிறித்தவர், இஸ்லாமியர், எகிப்தியர் போன்ற உலகின் மற்ற இனங்களில் கூட இறந்த பின் புதைக்கும் வழக்கம்தான் இருக்கிறது. எனவே, பழந்தமிழ் நாட்டின் வழக்கமும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். 

எனவே, மகனே! நான் இறந்த பின் என்னை நெருப்பிலோ, மின்சாரத்திலோ போட்டு எரித்து விடாதே! தமிழ் வழக்கப்படி புதைத்து விடு! நான் பிறந்த இந்த மண்ணுக்கே என் உடல் அர்ப்பணமாக வேண்டும்! என் உடம்பு என் தமிழ் மண்ணுக்கே உரமாக வேண்டும்! 

என்னுடைய இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி வைப்…”
 - படித்து முடிப்பதற்குள், 

“அம்மா!...” எனப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான் ராகேஷ். 

“என்னடா? டேய்! என்னாச்சுடா?” என நான் அவனை உலுக்க, 

“இப்பதாண்டா அம்மாவை கிரெமெடோரியத்துல வெச்சு எரிச்சுட்டு வந்துருக்கேன்” என்றான் அவன். 

“அடப்பாவி! என்னடா இப்பிடி பண்ணிட்டே! நான் வர்ற வரைக்கும் ஏண்டா வெயிட் பண்ணிட்டிருந்தே? முன்னாடியே இந்த லெட்டரை படிச்சுப் பார்த்துருக்கலாம்ல?” 

“என்னடா பேசறே? எனக்குத்தான் தமிழ் படிக்க வராதுன்னு தெரியும்ல! சின்ன வயசுலேர்ந்து சி.பி.எஸ்.சி-ல படிச்சு வளர்ந்தவன்; செகண்ட் லேங்க்வேஜ் இந்தி; தமிழ் 
தேர்டு லேங்க்வேஜ்தான்வர்ஷாவுக்கும் தமிழ் தெரியாது. வேற யார் படிக்கறது? அப்பிடியும் ஸ்டார்ட்டிங்கை கொஞ்சம் எழுத்துக்கூட்டிப் படிச்சுப் பார்த்தேன். ஏதோ பர்சனலா எழுதியிருக்காங்கன்னு தெரிஞ்சுது. அதைப் போய் வேற யார்கிட்டயாவது படிக்க சொல்ல முடியுமா? எனக்கு அப்புறம் நீதானே அவங்களுக்கு பையன் மாதிரி? அதனாலதான் வெயிட் பண்ணோம். ஆனா, இப்பிடி ஒரு விஷயத்தை சொல்லி இருப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லடா” என்றவன், 

“அம்மா! தமிழ் படிக்க தெரியாததனானால உன் கடைசி ஆசைய கூட ஃபுல்ஃபில் பண்ண முடியாமப் போயிட்டேனேம்மா!...” என்று கதறி அழ, கண்ணீர் கொட்டும் விழிகளோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த அழுகை இந்த ஒரு ராகேஷோடு ஓயாது என்று தோன்றியது.

❀ ❀ ❀ ❀ ❀

(நான் திண்ணை இதழில் ௨௪-௧௦-௨௦௧௬ அன்று எழுதியது. #StopHindiImpositionமுதலான சிட்டைகள் மூலம் உலகை அதிர வைத்த தமிழ்ச் சூறாவளிகள் அனைவர்க்கும் இப்படைப்பு காணிக்கையாகுக). 

படம்: நன்றி ஓவியர் இளையராஜா

 - https://agasivapputhamizh.blogspot.com/2019/06/thaaimoli.html

Edited by நியானி
விதி: ஆக்கம் முழுமையாக இணைக்கவேண்டும்
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் முழுக்க இங்க பதிய இடமில்லையோ?????

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By ரஞ்சித்
   ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கெதிரான தீர்ர்மானத்தில் நடுநிலைமை வகித்து மீண்டும் தமிழர்கள் முதுகில் குத்திய இந்தியா 

   தமக்கெதிராக முன்வைக்கபடும் என்று இலங்கை எதிர்பார்த்த பிரேரணைக்கு எதிராக நாடுகளின் ஆதரவினைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஐ நா வின் இலங்கை அதிகாரிகளும், வெளிவிவகார அமைச்சும் கடுமையான முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது நாம் அறிந்ததே. 
   அந்தவகையில், தற்போது நடந்துமுடிந்துள்ள விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் விவாதத்தில் கலந்து பேசியதாகத் தெரியவருகிறது.
   பிரித்தானியா தலைமையிலான முக்கிய நாடுகள் இலங்கைக்கெதிரான இந்தப் பிரேரணையினை கொண்டுவந்திருந்தன. ஆனால், இந்தப் பிரேரணையினை ஏற்றுக்கொள்வதில்லை என்று இலங்கை அதனை முறியடிக்கும் விதமாகச் செயற்பட்டுவந்தது.
   தனக்குச் சார்பான நாடுகளை  அணிதிரட்டும் நடவடிக்கைகளை இலங்கை முடுக்கிவிட்டிருந்தநிலையிலேயே இந்த விவாவதம் நடைபெற்றிருக்கிறது. 
   ஐக்கிய ராச்சியம், நோர்வே, கனடா, அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் நிலையினைக் கடுமையாக விமர்சித்திருந்தன.
   ஆனாலும், இலக்கையின் சீனச் சார்பு நிலைப்பாட்டினால் அண்மைக்காலமாக அதிருப்தியுற்றுவரும் நாடுகளான இந்தியாவும், ஜப்பானும் இவ்விவாதத்தில் கலந்துகொள்வதில்லையென்று நடுநிலைமை வகித்தன. மேற்கிற்குச் சார்பான நாடாகவிருந்தாலும், அவுஸ்த்திரேலியா இலங்கை தொடர்பாக மிதவாதப் போக்கினையே இவ்விவாதத்தில் கடைப்பிடித்தது.
   இலங்கைக்கு ஆதரவாக விவாதத்தில் பங்காற்றிய 21 நாடுகளில் 10 நாடுகள்  ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலில் அங்கத்துவம் வகிக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது.
   இலங்கைக்கு ஆதரவாகவும், பிரேரணையினை எதிர்த்தும் விவாதித்த நாடுகளாவன, 
   ரஷ்ஷியா, சீனா, பாகிஸ்த்தான், ஈரான், வியட்னாம், மாலைதீவுகள், கியூபா, நிக்கராகுவா, எரித்ரியா (????? நீயுமா), நேபாளம், கம்போடியா, லாவோஸ், அசர்பைஜான், பெலாரஸ், வடகொரியா, கேபொன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து என்பனவாகும்.
   தமிழரின் முதுகில் மீண்டும் ஒருமுறை ஓங்கிக் குத்தியுள்ள இந்தியா இலங்கையின் காலில் விழுந்திருக்கிறது என்பதே உண்மை. சுமந்திரனும், சொல்கெயிமும் கூறும் இந்தியாவிடம் போங்கள் எனும் கோரிக்கைக்கைக்கு என்னவாச்சு?
  • By இ.பு.ஞானப்பிரகாசன்
   போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக. ➵ உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா?

   ➵ ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன?

   ➵ இது தமிழின் குறைபாடா இல்லையா?   இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு.  
   என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப்படி எதிரடி அடித்தாலும், “எல்லா மொழிகளிலும் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் தமிழில் இல்லாதது ஒரு குறைதானே?” எனும் எண்ணம் நம்மவர்களுக்கே இங்கு இருக்கிறது என்பது உண்மையே!

   அதுவும் அண்மைக்காலமாக இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழையும் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளில் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் நம் தாய்மொழியில் மட்டும் ஏன் இல்லை எனத் தோன்றத்தான் செய்யும். அதற்கு விடையளிக்க வேண்டியது நம் கடமை என்பதால் மட்டுமில்லை உண்மையில் இதற்கான விளக்கம் மிகச் சுவையானது! தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது! எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! பார்ப்போமா?
     தமிழ் வல்லெழுத்துக்களின் பல்முனைப் பயன்பாட்டுத் திறன்!

   சமற்கிருதம், இந்தி ஆகியவற்றிலும் சமற்கிருதத்தோடு சேர்ந்து கெட்டுப் போன பிற திராவிட மொழிகளிலும் க, ச, ட, த, ப ஆகிய எழுத்துக்கள் தலா நான்கு உண்டு (பார்க்க: படம்). ஆங்கிலத்தில் கூட இவற்றுக்கெல்லாம் இரண்டு, மூன்று தனி எழுத்துக்கள் உண்டு. ஆனால் தமிழில் கிடையாது! ஏன்?
     ஏனெனில் தமிழின் வல்லெழுத்துக்கள் இடத்துக்கேற்பத் தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு விதவிதமாக ஒலிக்கும் வல்லமை வாய்ந்தவை என்பதால்தான்.

   என்ன, சும்மா சமாளிக்கிறேன் என நினைக்கிறீர்களா? சரி, சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம்.

   ‘கலகம்’ எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம். இதை நாம் எப்படிச் சொல்கிறோம்? ‘kalagam’ என்றுதானே? அது ஏன், இந்தச் சொல்லின் முதலில் உள்ள க-வை ‘ka’ எனச் சொல்லும் நாம் அதற்கு அடுத்து உள்ள க-வை மட்டும் ‘ga’ என்கிறோம்? ‘kalakam’ என ஏன் சொல்வதில்லை?

   அடுத்து, ‘தண்ணீர்’ எனச் சொல்லிப் பார்க்கலாம்! இதில் முதல் எழுத்தை எப்படி ஒலிக்கிறோம்? ‘tha’ என்றுதானே? அப்படியானால் ‘உதவி’ எனும் சொல்லில் உள்ள த-வையும் ‘tha’ என்றா சொல்வோம்? இல்லையே! அதை ‘dha’ என்றுதானே சொல்கிறோம்? ஏன் இப்படி?

   இதற்குக் காரணம் நம் வல்லெழுத்துக்களின் ஒலி இடத்துக்கேற்ப மாறுவதால்தான். இடத்துக்கேற்ப மட்டுமில்லை மற்ற மொழிகளைப் போலவே உடன் சேரும் எழுத்துக்கேற்பவும் இவற்றின் ஒலி மாறும். இப்படி அடிப்படையாக நான்கு விதமாய் ஒலிக்கக்கூடியவை தமிழ் வல்லின எழுத்துக்கள்*.

   1. தனியாகவோ சொல்லின் துவக்கத்திலோ வரும்பொழுது இயல்பான அழுத்தத்தோடு ஒலிக்கும். **எ.டு.: காலை = kaalai, சேரன் = cheran, தண்ணீர் = thanneer, பனி = pani.

   2. சொல்லின் இடையிலோ முடிவிலோ வந்தால் மென்மையாக ஒலிக்கும். எ.டு.: அகலம் = agalam, ஊசி = oosi, வடிவம் = vadivam, மதுரை = madhurai, கபம் = kabam.

   3. மெய்யெழுத்தோடு சேர்ந்து வந்தால் – சொல்லின் இடையிலோ முடிவிலோ வரும்பொழுதும் – மேலும் அழுத்தமாக ஒலிக்கும். எ.டு.: அக்கா = akka, மிச்சம் = michcham, வட்டம் = vattam, நத்தை = naththai, உப்பு = uppu.

   4. இன (varka) எழுத்தோடு சேர்ந்து வந்தால் மென்மையாகவும் இனிமையாகவும் ஒலிக்கும். எ.டு.: மங்கை = mangai, இஞ்சி = inji, நண்டு = nandu, மந்தை = mandhai, அம்பு = ambu.

   இவை மட்டுமல்ல குற்றியலுகரம், குற்றியலிகரம் என வேறு சில ஒலி மாறுபாடுகளும் இந்த எழுத்துக்களுக்கு உண்டு. ஆனால் அவையெல்லாம் தமிழுக்கு மட்டுமே உரியவை. இங்கு மற்ற மொழிகளில் இருக்கும் ஒலிகள் தமிழில் இருக்கின்றனவா என்பதைப் பற்றி மட்டும்தான் பார்த்து வருகிறோம் என்பதால் பட்டியலில் அவற்றைச் சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் கொஞ்சம் நீளும்.

   எல்லாரும் தமிழில் ‘ja’ இல்லை என நினைக்கின்றனர். ஆனால் மேலே நான்காம் எண்ணில் உள்ள ‘இஞ்சி’ எனும் சொல்லின் ஆங்கில எழுத்துக்கூட்டலைப் பாருங்கள்! தமிழ்ச் சகரம் தனது இன எழுத்தான ஞகர மெய்யெழுத்துடன் சேரும் எல்லா இடங்களிலும் ‘ja’-வாக ஒலிப்பதை உணரலாம் (எ.டு.: மஞ்சள், பஞ்சு, தஞ்சை).

   இதே போல் ககர வரிசையின் கீழ் வரும் ஹகர மெய்க்கும் தமிழில் தனி எழுத்தே இருக்கிறது.

   பள்ளியில் நமக்கு அனா, ஆவன்னா கற்பிக்கும்பொழுது ஆய்த எழுத்தை ‘அக்கு’ என்று சொல்லித் தந்திருப்பார்கள். உண்மையில் இதன் சரியான ஒலிப்பு ‘ahku’ என்பதுதான். அதாவது ஃ = ஹ். இதற்கு ஆதாரம் என்ன எனக் கேட்டால், அரிச்சுவடிப் பாடத்தில் ஆய்த எழுத்துக்கு எஃகு எனும் சொல்லைக் காட்டி ‘ekku’ எனச் சொல்லித் தருவார்கள்; ‘ekku’ என எழுத வேண்டுமானால் ‘க்’ பயன்படுத்தியே எழுதி விடலாமே? எதற்காக அங்கே ஃ? இதிலிருந்தே ஆய்த எழுத்தின் ஒலி ‘க்’ இல்லை என்பதை உணரலாம். எனவே எஃகு = எஹ்கு என்பதே சரி! (மேலும் விவரங்கள்: https://bit.ly/341ptRX).

   ஆக, எத்தனை ஒலிகள் தமிழில் இருக்கின்றன, பார்த்தீர்களா? இப்பொழுது சொல்லுங்கள், தமிழிலா எழுத்துத் தட்டுப்பாடு?
     ஆகவே தமிழிலும் அதற்குத் தேவையான அளவுக்கு வல்லின எழுத்து வகைகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் தனி எழுத்துக்களாக இல்லை. உண்மையில் அது குறையில்லை, சிறப்பு!

   அறிவியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு கருவி என்பது ஒரு துறையின் தொடக்கக் கால வடிவமைப்பு என்பதை அறிய முடியும். இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு நம் வீட்டுத் தொலைக்காட்சியின் தொலை இயக்கி (remote control). ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்தத் தொலை இயக்கிகளில் எத்தனை விசைகள் (keys) இருந்தன! ஒலியைக் கூட்ட ஒன்று, குறைக்க ஒன்று, அலைவரிசையில் முன்னே போக ஒன்று, பின்னே போக ஒன்று என ஒவ்வொன்றுக்கும் தனித் தனி விசைகள்.
     ஆனால் இன்றைய திறன்தொலைக்காட்சிகளின் (smart TVs) தொலை இயக்கிகளைப் பாருங்கள். மொத்தமே ஏழெட்டு விசைகள்தாம். அவையே எல்லா வேலைகளையும் செய்து விடுகின்றன. இதுதான் பல்முனைப் பயன்பாடு (Multi-Purpose function)! உங்களைச் சுற்றியுள்ள பல பொருட்களில் இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியை நீங்கள் இன்று பார்க்க முடியும்.

   ஆகவே சமற்கிருதம் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகள் ஒவ்வோர் ஒலிப்புக்கும் ஒவ்வோர் எழுத்தைக் கொண்டிருப்பது அம்மொழிகளின் எழுத்தமைப்பு இன்னும் தொடக்க நிலையிலேயே இருப்பதைத்தான் காட்டுகிறது. மாறாக, அவற்றுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் அந்தக் காலத்திலேயே இப்படிப் பல்முனைப் பயன்பாட்டுடன் கூடிய எழுத்துக்களோடு திகழ்வது முன்னைப் பழமைக்கும் பழமையாய் மட்டுமின்றிப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாகவும் அது விளங்குவதையே காட்டுகிறது!

   அப்படியே எழுத்து வளம்தான் ஒரு மொழியின் வளம் என ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் தமிழில் இருப்பது போல் எழுத்து வளம் வேறெந்த மொழியிலும் கிடையாது என்பதுதான் உண்மை.

   ஆம்! தமிழில் வல்லினத்தில் வேண்டுமானால் எழுத்து வகைகள் இல்லாமலிருக்கலாம். ஆனால் மெல்லினத்திலும் இடையினத்திலும் தமிழில் இருப்பது போல் வகை வகையான எழுத்துக்கள் வேறு மொழிகளில் கிடையாது.

   நம் அனைவருக்குமே தெரியும்; தமிழில் ல – ள – ழ என ‘L’ ஒலிப்புக்கு மட்டும் மூன்று வகைகள் உண்டு. ண – ந – ன என ‘N’ ஒலிப்பிலும் மூன்று விதங்கள் உண்டு. ‘R’ ஒலிப்புக்கும் ர – ற என இரண்டு உண்டு. இவை வேறு எத்தனை மொழிகளில் இருக்கின்றன?

   பொதுவாக, ஓர் எழுத்தின் ஒலி என்ன என்பதைக் காட்டப் பலரும் ஆங்கிலத்தைத்தான் நாடுவோம். ஆனால் ஆங்கிலத்தாலேயே எழுத இயலாத சொற்களின் எண்ணிக்கை தமிழில் பெரிது! கண்ணனை kannan என எழுதுகிறோம். அப்படியானால் கன்னம் என்பதை எப்படி எழுதுவது? வெள்ளத்தை vellam என எழுதினால் வெல்லத்தை எப்படி எழுதுவது? அட, இவ்வளவு ஏன்? தமிழ் என ஆங்கிலத்தில் எப்படி எழுத முடியும்? Thamizh என எழுதலாமே என்பீர்கள். அதுவே தவறு! zha என்பது சகரத்துக்கும் ஸகரத்துக்கும் இடைப்பட்ட ஓர் ஒலிதானே தவிர அது ழ ஆகாது. இது தனிப்பெரும் தமிழறிஞரும் செம்மொழிப் போராளியுமான இலக்குவனார் அவர்கள் ழகரத்தை ஆங்கிலத்தில் எழுதப் பரிந்துரைத்த ஒரு மாற்று வழிமுறைதானே தவிர, "தமிழ் எழுத்துக்கள் X ஆங்கில எழுத்துக்கள்" எனத் தீர்க்கமாகப் பார்த்தால் ஆங்கிலதத்தால் ழ-வை எழுதவே இயலாது. இப்படி ஆங்கிலத்தாலும் பிற மொழிகளாலும் எழுத இயலாத சொற்கள் தமிழில் ஏராளம்.

   மெல்லினத்தையும் இடையினத்தையும் எழுதுவது இருக்கட்டும்! சார்பெழுத்துக்கள் எனத் தமிழில் இருக்கின்றனவே! அவற்றை எழுத எத்தனை மொழிகளால் இயலும்?

   எழுத்தறிவியலில் சிகரம் தொட்ட தமிழர்கள்
     நீட்டலளவை (linear measure), முகத்தலளவை (measure of capacity), நிறுத்தலளவை (weighing measure) போன்ற பூதியல் (physical) அளவீடுகளுக்கே செந்தரமான (standard) அளவுகோல்கள் உருவாக்கப் பதினெட்டாம் நூற்றாண்டு வரை தேவைப்பட்டது மனித குலத்துக்கு. ஆனால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவுக்கு அளவுகோல் கண்டவர்கள் தமிழர்கள்! இதைக்
     “கண் இமை நொடி என அவ்வே மாத்திரை

   நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே”
   என்று 2500 ஆண்டுகள் முன்பே பதிவு செய்திருக்கிறது தொல்காப்பியம்!

   அதாவது கண் இமை மூடித் திறக்கும் நேரத்தை அடிப்படை அளவுகோலாகக் கொண்டு, அந்த அளவீட்டுக்கு மாத்திரை என ஒரு பெயரும் சூட்டிக் குறில் எழுத்துகளுக்கு (எ.டு.: அ, இ, உ) ஒரு மாத்திரை, நெடில் எழுத்துகளுக்கு (எ.டு.: ஆ, ஈ, ஊ) இரண்டு மாத்திரை, மெய்யெழுத்துகளுக்கு அரை மாத்திரை என அந்தக் காலத்திலேயே மிக நுட்பமாகக் கணக்கிட்டிருக்கிறது தமிழினம்.

   இவ்வரிசையில் சார்பெழுத்துகளான ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கு அரை மாத்திரை என அறியப்பட்டுள்ளது. இவற்றில் ஆய்த எழுத்தின் ஹ் ஒலியை மட்டுமே மற்ற மொழிகளில் எழுத முடியும். குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றை எழுதுவது பற்றி நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. தமிழிலும் இவற்றுக்கெனத் தனி வரி வடிவம் இல்லைதான். ஆனால் மேலே சொன்ன பல்முனைப் பயன்பாட்டு முறையில் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்தமைப்பில் தனி எழுத்துக்களாகவே கணக்கில் கொள்ளப்படும் இவற்றை ஆங்கிலத்திலோ பிற மொழிகளிலோ எழுத இயலாது.

   இதற்கும் மேலே மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் எனக் கால் மாத்திரை அளவேயான ஒலிப்புகளையும் நுணுக்கமாகத் தமிழிலக்கணம் கண்டறிந்திருப்பது மொழியறிவியலின் உச்சம்!

   அதையும் விட நுட்பமாக உடம்படுமெய், அரையுயிர்க் குற்றியலுகரம் போன்ற அதி உச்சக்கட்ட இலக்கணக் கூறுகளும் தமிழில் உண்டு. இவை போக, ஒலி நீளும் இடங்களான உயிரளபெடை, ஒற்றளபெடை என இன்னும் நீள்கிறது நுட்பங்களின் பட்டியல். அவற்றையெல்லாம் எழுத ஒரு கட்டுரையும் போதாது; எழுதும் அளவுக்கு எனக்குத் தமிழறிவும் போதாது.

   எனவே எழுத்து வளம்தான் மொழி வளம் என்பதாகவே வைத்துக் கொண்டாலும் தமிழின் எழுத்து வளத்தோடு போட்டியிட எந்த மொழியாலும் இங்கு முடியாது என்பதைத் தமிழ்ப் பகைவர்கள் நன்றாக மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டும்! வெறுமே ஓரிரண்டு எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பதை மட்டுமே பிடித்துக் கொண்டு பேசக்கூடாது. என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் எல்லாரிடமும் இருப்பது தன்னிடமும் இருப்பதற்குப் பெயர் பெருமை இல்லை. யாரிடமும் இல்லாதது தன்னிடம் இருந்தால் அதுதான் பெருமை. அப்படிப்பட்ட பெருமைகள் தமிழுக்கு நிறையவே உள்ளன என்பதைத்தான் இதுவரையில் பார்த்தோம். முடிவாக இவற்றுக்கெல்லாம் மகுடமான ஒன்று!

   வாழ வைக்கும் தமிழ்!
     மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் இப்படி வல்லின எழுத்து வகைகள் குறைவாகவும் மெல்லின – இடையின எழுத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால்தான் மற்ற மொழிகள் போல் வயிற்றிலிருந்து, அடித் தொண்டையிலிருந்தெல்லாம் கடினப்பட்டுப் பேச வேண்டிய சொற்கள் எதுவுமே – அதாவது மூச்சொலிகளே – இல்லாமல் மென்மையும் குழைவுமான எழுத்துக்களே தமிழின் எல்லாச் சொற்களிலும் நிறைந்து காணப்படுகின்றன. மற்ற மொழிகளை விடத் தமிழ் பேச மிகவும் இனிமையாகத் திகழக் காரணமே இதுதான்.

   இதில் என்ன பெரிய பெருமை இருக்கிறது எனக் கேட்டால், கட்டாயம் இருக்கிறது!

   தமிழறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் எனப் போற்றப்படும் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் அவர்கள் தனது ‘செந்தமிழ்ச் சிறப்பு’ நூலில் இது பற்றி எழுதுகையில், “தமிழ் பெரும்பாலும் மெல்லோசை மொழியாக இருப்பதனாலேயே, அஃது உலக முதல் மொழியாய்த் தோன்றியும் இறக்காமல் இன்னும் இளமை நிலையில் இருந்து வருகின்றது. அதைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் முயற்சி வருத்தமின்றி எளிதாகப் பேசி வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

   மேலும், “ஒரு மொழிக்கு வேண்டியது சொல் வளம்தானே தவிர ஒலி வளம் இல்லை” என்றும் நறுக்குத் தெறித்தது போல் கூறியுள்ள அவர், அத்துடன் “ஒலி மென்மையால் தமிழுக்கு உயர்வேயன்றி இழிவில்லை என்றும் அதைப் பேசுவார்க்கு மூச்சு வருத்தமும் பேச்சு வருத்தமும் இல்லாததால் வாழ்நாள் நீடிக்கும் என்றும் அறிந்து கொள்க” எனத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

   அதாவது தமிழில் பேசினால் நீண்ட காலம் வாழலாம் என்கிறார் தமிழ்ப் பேரறிஞர் பாவாணர்!

   இது என்ன புதுக் கதை என நினைப்பவர்கள் ஓகப் பயிற்சி (yogasana) பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

   ஓகக் கலை பற்றி இந்நாளில் அதிகமாகப் பேசப்படுகிறது. ஓக நாள் (yoga day) கூடக் கொண்டாடுகிறார்கள். மனிதர்களை நோயும் முதுமையும் நெருங்காமல் என்றும் இளமையோடு வாழ வைக்கும் இக்கலையில் மிக முக்கியமானது மூச்சொழுங்குப் (பிராணாயாமம்) பயிற்சி. எவ்வளவுக்கு எவ்வளவு மூச்சைக் குறைவாகச் செலவிடுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் வாழ்நாள் நீடிக்கும் என்பது இதன் அடிப்படைக் கோட்பாடு. நிமையத்துக்கு மூன்று / நான்கு தடவை மட்டுமே மூச்சு விடும் ஆமை ஒரு நூற்றாண்டுக்கு மேல் உயிர் வாழ்வதையும் மிகுதியாக மூச்சைச் செலவழிக்கும் மான், முயல், புலி, சிங்கம் போன்றவை குறைந்த காலமே வாழ்வதையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுவார்கள் ஓக ஆசான்கள்.

   இது சரியா தவறா எனத் தீர்ப்புச் சொல்ல நான் ஓகக்கலை அறிந்தவனோ மருத்துவனோ இல்லை. ஆனால் உலகெங்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி முறையாக ஏற்கப்பட்டுள்ள ஓகக்கலையுடைய இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும்பொழுது மூச்சு அதிகம் செலவாகாத தமிழில் பேசினால் வாழ்நாள் நீடிக்கும் என்பதும் சரியானதே என்பதை உணரலாம்.

   இது மட்டுமில்லை, இருக்கும் மொழிகளிலேயே மிகவும் அதிகமாக மூச்சு செலவழிவது சமற்கிருதத்துக்குத்தான் என்றும் பதிவு செய்துள்ளார் மொழிஞாயிறு.

   தமிழாய்வாளர் பா.வே.மாணிக்க நாயகர் ஒரு முறை உலகப் பெருமொழிகள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்குச் செலவாகும் மூச்சை மூச்சுமானி கொண்டு அளந்து பார்த்ததில் சமற்கிருதத்திற்கே மூச்சு மிக அதிகமாகச் செலவழிவதும் தமிழுக்குத்தான் மிகக் குறைவாகச் செலவாவதும் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாவாணர் மேற்கண்ட நூலில் குறிப்பிட்டுள்ளார்.

   எதற்கெடுத்தாலும் “சமற்கிருதம் தேவமொழி. அதனால் அதுதான் உயர்வானது” என்பவர்கள் அந்த மொழியிலேயே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவாகத் தேவர்களிடமே போய்ச் சேர வேண்டியதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

   முடிவாகச் சொல்ல விரும்புவது இதுதான். மொழி என்பது மண்ணையும் மக்களையும் சார்ந்து உருவாவது. அந்தந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான சொற்கள்தாம் அந்தந்த மொழிகளில் உருவாகும். அந்தச் சொற்களை எழுதத் தேவையான எழுத்துகள் மட்டும்தாம் அந்த மொழிகளில் இடம் பெறும். அதனால் உலகின் எந்த மொழியிலும் எல்லா ஒலிகளும் இருக்காது, இல்லை.

   இதற்காகத்தான் உலகிலுள்ள எல்லா மொழிகளின் எல்லா எழுத்துக்களையும் வரிவடிவில் கொண்டு வருவதற்காகவே பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphabet) எனும் ஒரு தனி வரிவடிவமே உருவாக்கப்பட்டுள்ளது.

   இது எதுவுமே தெரியாமல் “என் மொழியில் இருப்பது உன் மொழியில் இல்லை. எனவே உன்னுடையது மட்டம்; என்னுடையது உயர்வு” எனப் பேசுவது மொழியியலின் அடிப்படை கூடத் தெரியாத மூடத்தனம்.
     மூடத்தனம் தவிர்ப்போம்!
   மொழியறிவை வளர்ப்போம்!   ❖ ❖ ❖ ❖ ❖   * பி.கு-1: தமிழ் வல்லினத்தில் உள்ள றகரம் தமிழுக்கு மட்டுமே உரிய சிறப்பு எழுத்து என்பதால் மற்ற மொழி வல்லின எழுத்துக்கள் தமிழில் உள்ளனவா என்பதை மட்டும் ஆராயும் இந்த வரிசையில் அந்த எழுத்து பற்றிப் பேசவில்லை.

   ** பி.கு-2: டகரத்தில் தமிழ்ச் சொற்கள் துவங்குவதில்லை என்பதால் இந்த நெறி அதற்குப் பொருந்தாது. எனவே இந்த வரிசையில் அதை எடுத்துக்காட்டவில்லை.
     (நான் ‘கீற்று’ இதழில் ௨௦-௧௦-௨௦௨௦ அன்று எழுதியது) ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி லேர்ன் சான்சுகிரிட் ஆன்லைன், கவிதாலயா, அமேசான் + எம்.ஐ, பயிலகம், பிரபஞ்சக் குடில்.   கட்டுரை ஆக்கத்தில் உதவி: தமிழாய்வாளர் சேதுபாலா.   உசாத்துணை:
   ௧. அறியப்படாத தமிழ்மொழி, மே 2018, முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் (கரச | KRS), தடாகம் ௨. ‘அகரமுதல’ தனித்தமிழ் இணைய இதழ் ௩. விக்கிப்பீடியா   (தமிழிலேயே இப்படி ஜ, ஸ எல்லாம் இருக்கிறது என்றால் ஏன் கிரந்த எழுத்துக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்? – உங்கள் அடிப்படை மொழிப் புரிதலையே புரட்டிப் போடக்கூடிய இதற்கான விடை தனிப் பதிவாக விரைவில்!)   கட்டுரையின் இணைப்பு: https://agasivapputhamizh.blogspot.com/2020/10/why-tamil-does-not-have-many-consonants-shocking-reasons.html
  • By முதல்வன்
   நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான். 
   அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கும் யாழ்கள கருத்து நாகரீகத்துக்கும் உதவட்டும் என்ற நோக்கம் தான்.
   தாயகத்தில் அரசியல் சார்ந்து ஆரோக்கியமான காணொளிகளையும் ஆய்வுகளையும் கருத்தாடல்களையும் இதில் இணைப்போம். ஆரோக்கியமாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் விவாதிப்போம். மக்களுக்கு கொண்டுசேர்ப்போம்.
   பிரதேசவாதமில்லாத சாதியவாதமில்லாத கருத்துகளும் காணொளிகளும் வரவேற்க்கபடுகின்றன. 
   இது ஒரு பொறிதான். அணைவதும் எரிவதும் உங்கள் கையில்.
   தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
  • By கற்பகதரு
   தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும்.
   ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள் பயன்படும். உள்வாரி மூலங்கள் (ஒருவரின் கைபேசியை போல) மற்றையது வெளிவாரி மூலங்கள் (சமூகவலைதளங்கள் போல). இவை இரண்டில் உள்ளக மூலங்களே பிரதானமானதும், பெரிதும் விரும்பப்படுவதும் ஆகும். ஆனால் இருண்ட காலத்தில் இத்தகைய உள்வாரி மூலங்கள் மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.
   1979 இல் கண்டுபிடிக்கப்பட்ட பூலங்குறிச்சி (பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்)கல்வெட்டுகள் சங்கம் மருவிய காலத்தை அறிந்து கொள்ளப்பயன்படும் மிகப்பிரதான மூலாதாரம். கொங்குநாடு(அரசலூரில்) கண்டறியப்பட்ட கற்பலகை கரூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்பாறை கல்வெட்டு புத்ததத்தர் எழுதிய அபிதாமாவதாரம் வச்சிரதந்தி அமைத்த திரமிளசங்கம் ரோமநாணயங்கள், மட்பாண்ட சிதைவுகள் வெளிவாரி மூலங்கள் என நோக்கும் போது சமகாலத்தில் கிடைக்கும் பிறநாட்டு ஆதாரங்களும், பிற்காலத்தில் கிடைக்கும் உள்நாட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவை
   வேள்விக்குடி செப்பேடுகள். இவையே சங்கம் மருவிய காலத்தை குறித்து முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆதாரம். திருஞானசம்பந்தரின் திருவையாற்றுப்பதிகம் கால்லாடம், யாபெருங்கோல் விருத்தி, சில தனிப்பாடல்கள் பெரியபுராணப்பாடல்கள் சாதவாகன கல்வெட்டுக்கள் சின்னமனூர் செப்பேடு பல்லவர்கால செப்பேடுகள் அபிச்சத்திரா, மதுரா, பிருந்தாவனம், புத்தகயா, வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைத்த அகழாய்வு படிமங்கள் இங்ஙனம் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள ஆதரங்களைக்கொண்டு மு.அருணாசலம் உள்ளிட்டோர் சங்கம் மருவிய காலம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுவும் இருண்டகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. சீவகசிந்தாமணி, மணிமேகலை ஆகிய காவியங்களை ஆதரமாகக்கொண்டு சங்கமருவிய காலம் குறித்த வாழ்க்கை முறைகளை ஒருவாறு ஊகிக்கவும் முடியும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பயன்படுத்தி ஒரு எடுகோள் ரீதியான ஆக்கமாக இது உருவாக்கப்படுகிறது. ‘பேக் கிரௌண்ட்’ தெரியாமல் எந்த விடயத்தை ஆய்வு செய்தாலும் முழுமையான விளக்கம் கிடைக்காது. எனவே மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரான சங்ககாலத்தில் நிலவிய பேக் கிரௌண்ட் குறித்து முதலில் காணலாம்.
   கங்கை - வைகை
   வேதகாலம் என அறியப்பட்ட காலத்தில் இருந்தே ஆரியர்களின் குடிபெயர்வுகள் வட இந்தியா முழுவதும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. ஆரிய பிராமணர்கள் உள்நுழையும் இடங்கள் யாவும் ஆரியமயப்ப்டுத்தபட்டன. சுதேச வழிபாட்டு முறைகளை ஆரியத்துடன் இணைத்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களை வைதீக கோட்பாடுகளுக்கு உட்படுத்தி பிராமணர்கள் வயிறு வளர்த்தனர் என்பது பொதுவான வரலாற்று கருத்து. வைதீக கோட்பாடு, வர்ணாசிரம பிரிவு என்ற அடித்தளத்தில் அமைக்கப்பட்டது. கடுமையான சாதிப்பாகுபாடும், அடக்குமுறைகளும் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவாக பௌத்தம், சமணம் ஆகிய வேத எதிர்ப்பு(நாஸ்திக) மதங்கள் தோன்றி மக்களின் ஆதரவை பெற்றன. அதிகாரம் மிக்க பிராமண சமூகத்துக்கு எதிராக உருவான இந்த தன்மை ஒரு தாழ்த்தப்பட்ட ஹீரோ அதிகாரம் நிறைந்த வில்லனை எதிர்க்கும் தற்கால மசாலப்படம் போன்றது இல்லை. மாறாக கருணையற்ற வில்லனை கொண்ட கொரிய பேய்ப்படங்கள் போல இருந்தன. ஒன்றை ஒன்றும் விஞ்சும் போது சிலவேளைகளில் மனிதத்தின் எல்லைக்கோடுகள் மறக்கப்பட்டன.
   கடலோரங்களில் வாழும் ஒரு புல் குறித்து நாம் பெரிதும் கேள்வியுற்றிருப்போம். ராவணன் மீசை. ஒரு இடத்தில் தன்னை நிலையாக பற்றிக்கொண்ட பின்பு தன் ஓடி வேர்களை ஒட்டி, கரைகளை முழுவதுமாய் கட்டிவிடும். ஒரு இடத்தில் தான் அழிந்தாலும் பிறிதிடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டே போகும். அங்ஙனமே பிராமண சமூகமும் தனக்கு வரப்போகும் ஆபத்தை முன்பே உணர்ந்தாற்போல் பாரதம் முழுவதும் தங்களை பரப்பிக்கொண்டனர். கங்கையின் கரைகளில் இருந்த பிராமண மீசை, வைகையின் கரைகள் வரை வேர்களை ஒட்டியது.
   தோற்றுவாய்
   சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலவிய காலமது. மக்கள் இயற்கையில் இறைவனை கண்ட காலம். பாலைமக்கள் கொற்றவையையும், குறிஞ்சிமக்கள் குமரனையும், நெய்தல்மக்கள் வாலியையும், முல்லைமக்கள் மாயோனையும், மருதநில மக்கள் வஞ்சிக்கோவையும் வழிப்பட்டகாலம். ஈஸ்வரனும்,நாராயணனும் தமிழகத்தில் உள்நுழையாத காலம். அக்காலத்தில் தமிழகம் தன்னிறைவான பொருளாதார முறைமையை கொண்டிருந்தது. தம்முடைய தேவை போக எஞ்சியது அரசுக்கு வரியானது. சங்ககாலத்தில் சிற்றரசர்களின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இன்னொரு பெருநாட்டை போரில் வெல்ல இயலாத நிலை காணப்பட்டது. போர்களின் மூலம் போதுமான செல்வங்களை திரட்டிக்கொண்ட அரசுகள், அச்செல்வங்களை தன் சிற்றரசுகளுடன் பகிர்ந்து கொண்டது.பரதவர்கள் ஆழியை ஆட்சி புரிந்தனர்.  திறைகடல் ஓடி திரவியம் தேடிய வணிகர்கள் அரசுக்கு முதுகெலும்பென உதவி நல்கினார்கள்.
   வடநாடுகளுடன் ஏற்பட்ட பொருளாதார தொடர்பு என்ற இழையை பற்றிய படி வேதியர்கள் தமிழகம் அடைந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். வேதியர்களின் ஆதிக்கத்தால் அரசன், வணிகன், வேளிர் என்ற பிரிவினை மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. வடநாட்டில் உருவான சாதிய அடக்குமுறைகள் போன்ற ஒரு சம்பவம் மெல்ல மெல்ல தமிழகத்தில் உருவாக ஆரம்பித்தது. அசோகர் காலத்தில் பௌத்தமும், சமணமும் கூட தமிழகத்தை அடைந்து அமைதியாக தம் வழியில் சென்றுகொண்டிருந்தன. இந்த நாஸ்திக(வேத எதிர்ப்பு)மதங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றிருந்தன.
   யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என கனியன் பூங்குன்றனார் பாடியதில் சமணம் மற்றும் பௌத்தத்தின் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது. பூம்புகார், காஞ்சி ஆகிய இடங்களில் விகாரைகள் மெல்ல முளைத்தெழுந்தன. மீண்டுமொரு வைதீக எதிர்ப்பு போராட்டத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. ‘இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழப்பழகு’ என்பது எப்போதும் வாய்மொழியுடனே கடந்து போகிறது. ஏதோ ஒன்று நம்மில் இருந்து வேறுபட்டு, கவரும் வண்ணம், உயர்ந்தது உள்ளது போல மனதின் ஒரு மூலையில் தோன்றிவிட்டால் போதும். அது உடனே நம்மிடையே ட்ரெண்டிங் ஆகிவிடும். சிறிது நாளில் ஃபாஷான் ஆகிப்போகும். பின்னர் நம் லைஃப் ஸ்டைல் என்றாகி நீண்ட இடைவெளியில் நம் கலாசாரமும் ஆகிப்போகும். நமக்கு இந்த பரந்த மனம் உருவாகிப்போக காரணம் நம்மூதாதைகள் காட்டிச்சென்ற வழி தான். தனித்தன்மையுடன் விளங்கிய ஆதித்தமிழ் மரபுகளை மறந்து வெள்ளைத்தோல் ஆரியர்கள் கடைப்பிடித்தவற்றை நம்மவரும் கைக்கொண்டனர்.
   தமிழர்கள் தெய்வமான கொற்றவையும், குமரனும் வைதீகர்களின் பூசனைகளில் இடம்பெற்றனர். மக்களின் ஆதரவு வைதீகத்தை சேர்ந்தது. பார்ப்பனர்கள் தம்முடைய வேத வேள்விகள் குறித்து மன்னர்களுக்கு தெளிவுபடுத்த ஆரம்பித்தனர். போர்களில் வெல்வதற்காக யாகங்களை செய்யுமாறு மன்னனுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
   வேத வேள்விகளை பிராமணர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனவும், வேதத்தை பிறர் கற்பது மஹாபாவம் எனவும் மக்களை நம்பசெய்தனர். வடக்கே பௌத்தமும், சமணமும் சமாதானத்தை போற்றி மக்களின் மனதை வென்றமையால் வேதவேள்விகள் மங்கிப்போயின. எனினும் தமிழகம் அப்போது தான் அதை கைக்கொள்ள தொடங்கியது.  போர்களுக்கு முன்னராக வேள்விகள் ஆற்றும் வழக்கத்தை மன்னர்கள் கைக்கொள்ள தொடங்கினார்கள். ராஜசூயம் வெட்ட பெருநற்கிள்ளி, பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகிய மன்னர்கள் அதீத எண்ணிக்கையில் வேத வேள்விகளை செய்தனர்.
   அவர்களின் பெயர்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கிறது.  வேள்விகளை தொடர்ந்து போர்கள் வெற்றி பெறுமாயின் அவ்வேள்வியை நடாத்தி தந்த பிராமணர்களுக்கு பிரம்மதேயம் என்ற பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டன. சிலநேரங்களில் கிராமங்களும், கிராமத்தொகுதிகளும் கூட இத்தகைய தானங்களாக்கப்பட்டன. அந்நிலங்களில் வேளாளர்களை பணிக்கமர்த்தி விளைச்சலை பெற்று சுகபோகமான வாழ்க்கையை பிராமணர்கள் வாழத்தொடங்கினார்கள். போர்களில் படை தந்து உதவிய குறுநில மன்னர்களை காட்டிலும் பிராமணர்கள் உயர் அந்தஸ்த்தை பெற்றனர். மேலும் வேளாளரின் உழைப்பை கொண்டு வாழ்க்கை நடாத்தும் பிராமணர்கள் வேளாளரை சமூகத்தின் கீழ்நிலை பிரிவாக கண்ணுற்றனர். இந்நிலையால் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலே பிணக்கம் ஏற்பட ஆரம்பமானது. 
   வந்தார்கள் வென்றார்கள்
   வெறுமனே வேதங்களை ஒப்புவிப்பதற்கு விலையாக வளமான நிலங்களை பெற்று சுகபோக வாழ்க்கை நடாத்தும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த மூவேந்தர்களுக்கும் மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரும் கௌரவமும் சரிந்தவண்ணம் சென்றன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தென் கர்நாடக பகுதியை சேர்ந்த ஒரு குலத்தை சேர்ந்த சிலர் மூவேந்தர்களை வென்று தென்னகத்தில் வலுவான ஒரு ராஜ்யத்தை அமைத்தனர். அவர்கள் களப்பிரர் என அறியப்பட்டனர். சங்ககாலத்தில் போர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த சிற்றரசர்கள் மூவேந்தர்களுக்கு எதிராக களப்பிரருக்கு படையுதவிகளை செய்தனர். மக்களின் ஆதரவும் மூவேந்தர்களுக்கு சாதகமாக அமையாது போனதால் களப்பிரர்களின் வெற்றி மிகவும் எளிதாகிப்போனது. அண்ணளவாக கி.பி 250 இல் ஸ்தாபிக்கப்பட்ட களப்பிரர் அரசானது மூன்று நூற்றாண்டுகளாக கி.பி 550 இல் சிம்மவிஷ்ணு பல்லவரால் படையெடுக்கப்படுவது வரை தென்னிலம் முழுவதும் ஆட்சி செய்தது.
   தமிழ்மன்னர்கள் வைதீகத்தை ஏத்திப்பிடித்து தங்களின் சுயத்தை இழந்து போன வேளையில். களப்பிரர் தங்களின் சுயமான தாய் மொழியை விடுத்து, தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு மான்புடன் செயலாற்றினர். கல்வியும், கலைகளும், ஆட்சியும் புத்தாகம் பெற்றுவந்தன. எதிர்ப்புகளை ஒடுக்கிவிட்டு தம்பால் ஆதரவு நல்கிய மக்களுக்காகவும், குறுநில வேந்தர்களுக்காகவும் முடிந்த மட்டும் நலன்களை செய்து முடித்தனர். அவர்கள் நிகழ்த்திய புத்தாக்க மறுமலர்ச்சி தமிழகத்தில் நிலையான ஒரு மாற்றத்தினை உண்டு பண்ணியது. மூவேந்தரால் முடியாத எதனை இவர்கள் செய்தனர் என்பதை காண்போம் இனி.
    
   https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-1
    
   கோன்(ண்)மை
   தென் கருநாடாகத்தின் மைசூருக்கு அருகே ஒரு சிறு இனக்குழுவாக வாழ்ந்துவந்த களப்பிரர் தக்கதருணம் பார்த்து தென்னகத்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொனர்ந்தனர். களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தாங்கள் மைனோரிட்டி ஆட்சியை நிகழ்த்துவது சிறந்த முடிவாக அமையாது என்பதை நன்கு உணர்ந்தனர். வேற்று மொழியுடனும், மதத்துடனும் ஒரு நாட்டை ஆள்வது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் விழுவது போன்றது என்பதை புரிந்துகொண்ட களப்பிரர்கள் தனியாட்சி முறையை கைவிட்டு, முடிமன்னர்களை எதிர்த்த சிற்றரசர்கள், புலவர்கள், எண்பேராய மற்றும் ஐம்பெருங்குழு உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கினார்கள். இவர்களில் பின்வரும் சிற்றரசர்கள் முக்கியமானவர்கள்.
   தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர் கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள் பழுவூர் பழுவேட்டரையர் களக்குடி நாட்டு அரையர்கள் குண்டூர் சிற்றரசர்கள் இருண்டகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.  கி.பி 470 இல் வச்சிரதந்தி தன்னுடைய அபிதாமாவதாரம் நூலை பூம்புகாரில் இயற்றும் போது உறையூரை தலைநகராக கொண்டு அச்சுதன் (அச்சுதக்களப்பாளன்) என்பவன் ஆட்சி செய்ததாக கூறுகிறார். பெரிய புராணத்தில் கூறப்படும் கூற்றுவ நாயனார் ஒரு களப்பிர அரசர் ஆவார். கூற்றுவர் சோழர்களின் மணிமுடியை அணிந்து சோழநாட்டை ஆட்சி செய்வதற்கு எண்ணி மணிமுடியை வேண்டினார். சோழர்களின் மணிமுடியானது தில்லைவாழ் அந்தணர்களிடம் காலம்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. கூற்றுவன் சோழநாட்டின் அரசனாக இருந்தாலும் ஒரு வந்தேறி என்பதால் சோழமணிமுடியை மன்னனிடம் தரமறுத்தனர். சிறிது காலத்தின் பின்னர் அவ்வந்தணர்கள் சேரதேசம் சென்றுவிடவே கூற்றுவன் சோழமணிமுடியை குறித்தான தன் எண்ணத்தை கைவிட்டான்.
   களப்பிரர்கள் பாண்டியர்களின் இரட்டை கயல் சின்னம், சோழர்களின் வேங்கை சின்னம், சேரர்களின் விற்ச்சின்னம் ஆகியவற்றையே தங்களின் சின்னங்களாக ஏற்று நாட்டை ஆட்சி செய்தனர். பூம்புகார், மதுரை உக்கிரன் கோட்டை ஆகிய நகரங்கள் தலைமை நகரங்களாக விளங்கின. மேலும் விஜயமங்கை, புல்லமங்கை, பூதமங்கை ஆகிய நகரங்கள் முக்கிய  ஸ்டார்ட்டேஜிக் சென்டர்களாக அமைந்தன. முக்கியமான படைப்பிரிவுகள், அரசநிறுவனங்கள் என்பன இங்கேயே அமைந்திருக்க வேண்டும். நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த காஞ்சிபுரம் களப்பிரர்கள் ஆட்சியின் மணிமுடியென ஒளிவீசியது. முதன்முதலில் தமிழ் வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுக்களை உருவாக்கி தந்தவர்கள் களப்பிரர்களே. அதுவரை இருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் வழக்கொழிந்து தமிழ் வட்டெழுத்துக்கள் உருவானது. இவ்வட்டெழுத்துக்களே தற்போது தமிழ் எழுத்துக்களுக்கான அடிப்படையாக உள்ளது. இவர்களின் கல்வெட்டு முறையை அடியொட்டியே பல்லவர்களுக்கு, பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்துக்கொண்டனர்.
   அத்தி கோசம் யானைப்படையும், நாற்பாத்தினை, உள்முனையர், வலைஞ்சியர் ஆகிய காலாட்படைகளும் களப்பிர அரசில் விளைந்த வீரப்படைகளாகும். கடாரம் கொண்ட சோழர்களுக்கு முன்னோடியாகவும், சங்ககால வழக்கத்தை தொடரும் வண்ணமாகவும் வலுவான கடற்படையை களப்பாள அரசு பேணிவந்தது. களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் நாடிழந்த பாண்டிய அரசர்கள் சில கிளர்ச்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். எனினும் அவற்றை களப்பிர அரசு வெற்றிகரமாக முறியடித்து. சோழ அரசர்கள் தங்கள் முடியை தில்லைவாழ் அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு பதுங்கிவாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். சங்ககாலத்தில் பிரம்மதேயங்கள் என்ற பெயரில் மக்களின் விளைநிலங்களையும் குடித்தன பூமியையும் கையகப்படுத்தி வாழ்ந்துவந்த பிராமணர்களின் பிரம்மதேயங்களை பறிமுதல் செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கினார்கள். இந்தியா முழுவதும் அக்காலத்தில் பரவியிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிகரமான செயலாக இது அமைந்தது. வெள்ளைத்தோல் பிராமணர்களை எதிர்த்து களப்பிரர்கள் மேற்கொண்ட இந்த ஹீரோயிசம் மக்களை அவர்கள் பால் ஈர்த்துக்கொண்டது. மக்களின் மத்தியில் களப்பிரரின் கோன்மை புகழ் பெற்ற அதேவேளையில், பார்பனரின் பார்வையில் இது மிலேச்சனின் கோண்மை என ஆனது.யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்  என வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
   வாழ்வியல்
   மக்களின் வாழ்வு முறைகளில் பெரும் மாற்றங்கள் என எதுவும் நிகழவில்லை. தன்னிறைவான பொருளாதார முறை தொடர்ந்துவந்த நிலை இருந்தது. வைதீக மதத்தின் வீச்சம் சோபையற்று போக பௌத்தமும், சமணமும் அதை நிரப்பலாகின. வர்ணாசிரம முறையை உட்புகுத்துவதன் மூலம் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த திட்டமிட்ட பிராமண சித்தாந்தத்தால் அதிருப்தி கொண்டிருந்த தென்னகத்தோரை, யாவரும் சமம் என்ற நோக்கும் எளிமையும் நிரம்பியிருந்த பௌத்தமும் சமணமும் அதிகமாக கவர்ந்தன. எனினும் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் பெறவில்லை. குடும்பப்பெண்கள் வெறுமனே குழந்தைகள், கணவன் ஆகிய நிலைகளோடு இருந்து விட்டனர்.  மனைவியரிடம் மனம் நிறையாத ஆண்கள் விலைமகளிரை அணுகும் பழக்கமும் தொடர்ந்தது.
   தற்காலத்தை போல மஜெஸ்டரேட் நீதிமன்றாகளோ, காவல் நிலையங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. அரசனே நீதியின் காவலனாக இருந்தான். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட், தொட்டதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் செல்ல முடியாது என்பதால் கிராமங்கள் ரீதியாக பஞ்சாயத்து சபைகள் இருந்தன. பெரிய ஆலமரம், வெற்றிலையை குதப்பிக்கொண்டிருக்கும் முறுக்கு மீசை நாட்டாமை, நாட்டாமைக்கு ஒரு செம்புதூக்கி, நாலு பெரியமனுஷர்கள், இரண்டு வழக்காடிகள், இருநூறு வெட்டிப்பயலுகள் என பாரதிராஜா படத்துக்கு நிகராக கற்பனை செய்வது பொருந்தாது. பஞ்சாயத்து இடங்கள் கிராமத்தில் அமைந்த கோவில்களே. அவைகள் சபை எனப்படும், சபையின் தலைமையாக கிராம தேவதையே நின்றது. சங்ககாலத்தில் சாஸ்தா எனப்பட்ட ஐயனார் சபாபதியாக சேவையாற்றினார். களப்பிரர் ஆட்சியில் சாஸ்தாவுக்கு சப்போர்ட்டாக தாரா தேவி என்றொரு தெய்வம் வந்தது. இவ்வாறு கிராமங்கள் தோறும் சபைகள் செயல்பட்டு வந்தது.
   கடல் வணிகத்தை பொறுத்தமட்டும் பௌத்தர்களே அதிகம் ஈடுபடலாயினர். கிழக்கே சீனதேசம் முதல் மேற்கே ரோமானிய சாம்ராஜ்யம் ஈறாக அனைத்து அரசுகளுடனும் விரிவான வணிகம் நடைபெற்றது. மட்பாண்டங்களும், மதுக்குடுவைகளும் களப்பாளர் நாட்டிற்க்கு இறக்குமதியாயின. சமணத்தின் கோட்பாட்டின் படி கடல் தாண்டுவது பாதகம் என்பதால் தரைவழி வணிகத்தில் சமணர்கள் செழிப்புற்றனர். சமகாலத்தில் நிலவிய சாதவாகன பேரரசுநாத்திக கொள்கைகளை ஆதரித்தமையால் தரைவழி வணிகர்களான சமணர்களால் அதிகம் லாபத்தை காணமுடிந்தது.
   நாத்திகம்
   நாஸ்திகம் (नास्तिक) என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளானது ‘வேத எதிர்ப்பு’ என்பதாகும். வைதீக கொள்கைகளால் கட்டுண்டு துன்புற்ற சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் சித்தார்த்த கௌதமரால் பௌத்தமும், இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் வழியே சமணமும் நிறுவப்பட்டன. களப்பிரர்கள் ஆட்சியில் இவை தென்னகம் முழுவது மிகவும் சிறப்புற்றன. சமணத்தை காட்டிலும் பௌத்தம் அதிக செல்வாக்குடன் திகழ்ந்தது. தியானத்தையே அடிப்படையாக கொண்ட தேரவாத பௌத்தம் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவியபோதும், பிற்காலத்தில் தெய்வம் இல்லாத ஒரு மார்க்கத்தை பின்பற்ற மக்கள் தயக்கம் காட்டினர். எனவே புத்தருக்கான சிலைகளும், போதிசத்துவர் சிலைகளும் ஆசியாமுழுவதும் தோற்றம் பெற்றன. இவ்வுருவ வழிபாடு மகாயானம் எனப்பட்டது.  மகாயான பௌத்தம் தமிழகத்தில் தலைதூக்கியதும் இந்நாட்களிலேயே. அக்காலத்தில் தமிழகத்தில் அமையப்பெற்ற விகாரைகள் ‘தேவகுலம்’ என அறியப்பட்டன. புத்தர் அல்லது அவரது முக்கிய சீடர்களின் அஸ்தியின் மீது விகாரைகளை கட்டுவதே பௌத்த மரபாக இருந்தது. களப்பிர ஆட்சியில் விளங்கிய விகாரைகளில் சிறப்புற்றன சில
   பூலாங்குறிச்சி தேவகுலம், இது களப்பிரரின் கடற்படை தலைவனால் உண்டாக்கப்பட்டது. கரூர் அருகில் அமைக்கப்பட்ட தேவகுலம் கொங்குநாட்டின் முத்தூற்றுகூட்டம் அமைந்த தேவகுலம் மதுரை நகரில் அமைந்த தேவகுலம் சங்ககால தேவகுலமான புகார் தேவகுலம் நாகைப்பட்டினம் சூடாமணி விகாரம் சமணர்கள் பெரும்பாலும் மலைஉச்சிகளில் வாழ்வதையே நெறியாக கொண்டவர்கள். அவர்களின் வானியல் ஆய்வு, கருத்தாக்கம், மருத்துவம் ஆகிய தேடல்களுக்கு மலைகள் தேவையானது. எனவே சமணர்கள் இருப்பிடங்கள் மலைகளில் அமைந்தன.
   மதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாப்பட்டி மலை, இங்கு சமண தீர்த்தங்கர்களில் ஒருவரான அரிட்டநேமி(நேமிநாதர்) தங்கியதாக நம்பிக்கை தூத்துக்குடி அருகே வெட்டுவான் கோயில் பகுதியில் அமைந்த மலைக்குன்று. ஆனைமலை மதுரை அழகர் மலை, தற்கால கள்ளழகர் கோவில் பரங்குன்றம், தற்கால திருப்பரங்குன்றம் கழுகு மலை தமிழகத்தின் எல்லோரா என வர்ணிக்கப்படும் சித்தன்னவாசல் ஆகிய பகுதிகள் களப்பிரர் காலத்தில் சமணர்களின் முக்கிய மையங்களாக திகழ்ந்தன. கி.பி 470 இல் வச்சிரதந்தி என்ற சமணர் திரமிளசங்கம் அமைத்தது தமிழகத்தில் சமணத்தின் எழுச்சியை உண்டாக்கியது.
   கல்வி:கேள்வி:கலை
   பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னைய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். வெறும்5 ஆண்டு ஆட்சியிலேயே திட்டங்கள் புதிது புதிதாக தோன்றும் போது, நிலையான ஒரு அரசை உருவாக்கிய களப்பிரர்கள் பல மாற்றங்களை உருவாக்கிச் சென்றது இயல்பே.  களப்பிரர்கள் ஆட்சியில் மதுரையில் கொழுவீற்றுரிந்த கடைச்சங்கம் பொலிவிழந்து போகலானது. பாண்டியர்களின் குலஉரிமை போன்றான சங்கத்தை களப்பிரர்கள் கைவிட்டது ஆச்சரியத்துக்குரியது அல்ல. களப்பிரர் தாய் மொழி பிராகிருதம் அல்லது பாலி மொழியாக இருந்தது. எனினும் களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும்,தமிழ் கலைகளும் புனர்ஜென்மம் பெற்றன. கல்விக்கண் திறந்தனர் களப்பிர அரசர்கள். தமிழை தங்கள் தாய்மொழியாக ஏற்றனர்.
   ‘எழுதறிவித்தான் இறைவனாவான்’ என்ற வாக்கு மெய்யெனில் களப்பாளர் அனைவரும் மக்களின் கண்கண்ட தெய்வங்களே. சங்கம் வளர்த்து மூவேந்தர்கள் தமிழ்வளர்த்த போதும் மக்களிடையே நிலவிய கல்வியறிவு எத்தகையது என்பது வரையறைப்பதற்கு கூடியதாக இல்லை. ஆனால் களப்பிரர் ஆட்சியில் இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி கிடைக்குமாறு வகைசெய்யப்பட்டது. இதற்கான பிரதான உந்துதல் களப்பிரர் கைக்கொண்ட பௌத்தமும் சமணமுமே. கருத்தியல், வாதம், வானியல், வைத்தியம் என அனைத்து துறைகளிலும் பௌத்த பிக்குகளும், சமண துறவிகளும் அறிவும் ஆர்வமும் கொண்டிருந்தனர். பௌத்த பிக்குகள் கடல்வழி பிரயாணம் மூலம் கிழக்கு தேசங்களுக்கு சென்று புதிய சித்தாந்தங்களையும், அறிவியலையும் கோணர்ந்த வண்ணம் இருந்தனர். சமணர்கள் தம்மிடையே இருந்தவண்ணம் ஆலோசனைகள் கூட்டி புதிய கண்டுபிடிப்புகளில் மூழ்கினார்கள். கச்சி என அறியப்பட்ட காஞ்சிமாநகர் கல்வியின் உச்சமாக திகழ்ந்தது. பௌத்த ஆராமைகளும், சமணப்பள்ளிகளும் காணும் திசையெங்கும் விரிந்தவண்ணம் சென்றன. வாதமும், ஞானமும், கலைகளும், கல்வியும் செழிப்புற்றன. காஞ்சிக்கடிகை நிகரில்லா செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த கல்விக்கூடமாக இருந்தது. தற்கால யூனிவேர்சிட்டி, கேம்பஸ் ஆகியவற்றுக்கு திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது போல நாடளாவிய ரீதியில் திறம் மிக்க மாணவர்கள் அனைவரும் கடிகைக்கு அனுமதி பெற்றனர். களப்பிர அரசின் ஆலோசனைக்கூடமாக திகழ்ந்த இது, பிற்காலத்தில் பல்லவர்களின் வாரிசுரிமையை தீர்மானிக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தற்கால ஆட்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிப்பது போல, அக்காலத்தில் கல்விமான்கள் தெரிவு செய்தனர் போலும்.  உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ தமிழனான போதிதர்மர் வாழ்ந்து சீனதேசம் சென்றதும் இக்காலத்தில் நடைபெற்றதே. தின்னனார், தர்மபாலர், சூனியவாதத்தின் ஸ்தாபகரான நாகர்ஜுனர் ஆகியோரும் காஞ்சியில் தங்கி போதனைகளை செய்தனர்.
   தமிழ்த்தாய் சிலம்பை மட்டும் அணிந்திருக்கையில் அவளுக்கு மேகலையும், சிந்தாமணியும் சூட்டி அழகுபார்த்தவர்கள் களப்பிரர்கள். இரட்டை காப்பியங்கள் என அறியப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பிந்தையது களப்பிரர் ஆட்சியில் எழுதப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் இக்கால சமணர்களின் கைவண்ணமாக உதித்ததே. மேலும் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம், பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் சமைக்கப்பட்டதும் இந்நாட்களிலேயே. கி.பி 407 இல் புத்ததத்தர் எனும் பிக்கு கூத்தமங்களத்தில் இருந்து அபிநயவிதாரம், புகாரில் இருந்து அபிதாம அவதாரம் ஆகிய இரு இலக்கண நூல்களை வடித்தார். நந்ததத்தம், காக்கைபாடனியம், பல்காப்பியம், பல்காயம் ஆகிய இலக்கண நூல்களும் எழுதப்பட்டது. விருத்தம், தாளிசை, துறை ஆகிய செய்யுள் வடிவங்களை தந்து தமிழ் மொழியை புதியபாதைக்கு இட்டுச்சென்றவர்களும் இவர்களே.
   கலைமகள் நிச்சயம் களைப்பிரர் ஆட்சியில் களிகூர்ந்திருப்பாள். காணும் திசையெல்லாம் கானமும், ஆடலும் நிறைந்து மக்களின் மனதை நிரப்பியது. பரத்தையர்கள் என அறியப்பட்ட விலைமகளிரே நடனம் முதல் பாடல் வரை தேர்ச்சிபெற்றிருந்தனர். எனவே குலப்பெண்கள் நடனமும் கானமும் கற்பதற்கு தடை விதிக்கப்படலானது. பிற்காலத்தில் சம்பந்தர் தன் பதிகத்தில் திருவையாறின் ஒவ்வொரு வீட்டிலும் சதங்கை ஒலியும், பாடலொலியும் கேட்கும் விந்தைக்குறித்து பாடலானர். அங்ஙனம் திருவையாறு தென்னக கலைகள் கருவறையாக மாறியதற்கான அடித்தளம் களப்பிரர்கள் இட்டுச்சென்றதே. கொங்குநாட்டின் (அரசலூர்) பகுதிகளில் ஆடப்படும் கூத்துவடிவங்களின் சொற்கட்டுகளில் ஒன்றான “தா-தை” என்ற கட்டு, மணிவக்கன் தேவன் சாத்தான் என்றவாரல் ஆக்கப்பட்டது. இதுதவிர்த்து இன்னும் சிலக்கூத்து வடிவங்களும் எழலாகின.
   https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-2
    
   களப்பிரர் ஆட்சியை தென்னகம் ஏற்றதற்கு பிரதான காரணமாக அமைந்தது பிராமணர்களின் போக்கு. வேள்விகளுக்காக விலைநிலங்களுடன் கூடிய கிராமங்களை பிரம்மதேயமாக பிராமணர்கள் பெற்று மக்களின் உழைப்பை சுரண்டியது மன்னர்க்கும், மக்களுக்குமான தொடர்பையே அறுத்தது. வேளாளரும் வணிகரும் வியர்வை சிந்தியுழைத்ததை, விரயம் செய்யும் விஷமிகளை களப்பிரர்கள் எதிர்த்தது, மக்களின் மனதை கவர்ந்தது. காலப்போக்கில் களப்பிரர்கள் ஆட்சியும் அதே அவலத்தை மீண்டும் நிகழ்த்திகாட்டியது மக்களின் முகத்தை சுளிக்கவைத்தது.
   சமணர்கள் புறஉலகில் இருந்து தங்களை விடுத்துக்கொண்ட அளவுக்கு பௌத்தர்கள் செய்யவில்லை. தாங்கள் வேரூன்றும் நாடுகளில் தங்களை அசைக்கமுடியாத சக்திகளாக மாறும் உத்தியை அவர்களின் மூளை கொண்டிருந்தது.
   சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் என்ற புகழ்பெற்ற நூலில் பௌத்தர்களை கூறியதாவது
   ‘அரசே! பௌத்தர்களை நாட்டிற்கு வெளியே உள்ள புறம்பாடிகளில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதி வழங்கு. அவர்கள் தங்கும் விகாரைகளில் சொத்துக்களை சேரவிடாதே. அவ்வாறு சொத்துக்கள் சேருமெனில் அவற்றை நீ பறிமுதல் செய்துகொள்’  காரணம் இல்லாமல் இங்ஙனம் கூறுவதற்கு வாய்ப்பில்லை. பௌத்தர்கள் குறித்து அவர் ஏதோ ஒன்றை அறிந்தமையாலேயே அரசனை எச்சரித்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் அந்த எதிர்வுகூறல் உண்மையானது. ‘மழைக்காலங்களில் ஒதுங்குவதற்காக விகாரைகளை கட்டிக்கொள்ளுங்கள்’ என கௌதம புத்தர் கூறிச்சென்றார். அவரின் காலத்துக்கு பின்னர் விகாரைகள் அரசின் நிலவுடைமை நிறுவனங்களாகின. அளவில்லா செல்வமும், படைகளும், அதிகாரமும் விகாரைகளை நிரப்பின. மன்னரும் கையேந்தும் அளவுக்கு விகாரைகள் நுணுக்கமாகவும், செல்வசெழிப்புடனும் விளங்கின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரைக்கு பாண்டிநாட்டில் இருந்தும், கொங்குநாட்டில் இருந்தும் திரட்டப்பட்ட மொத்த வரியும் சென்று சேர்ந்தன. பிரம்மதேய நிலங்களை பறித்து மக்களிடம் ஒப்படைத்து போலவே விகாரைகளுக்கும் நிலங்களை வழங்கினார்கள்.
   மனம் எனும் மாயக்குரங்கு மீண்டும் பழைய கிளைக்கே தாவிற்று. எளிமையின் மறுவுருவமாக வெளியே காட்டிக்கொண்டு, உள்ளே நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியுடனும், செல்வத்துடனும் நடந்த தன்மை மக்களின் மனதிலும், சிற்றரசர்கள் மத்தியிலும் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. ‘புறத்தியான் ஒருவன் நம்செல்வங்களை இங்ஙனம் உரிமைகொண்டாடுவதற்கு, நம்மன்னர்களே ஆண்டுவிட்டு போகட்டும்’ என நினைக்கலாயினர் குடிகள்.
   இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை. மேலும் இயல்புவழிப்பாட்டில் இருந்து நிறுவனமயப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையை களப்பிரர்கள் உட்புகுத்தியதால் மக்கள் மனதில் அச்சத்துடன் கூடிய எதிர்ப்பு ஒன்று உருவானது. இது களப்பிர அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
   சனாதன சீர்திருத்தம்
   வடக்கிலும்,தக்காணத்திலும் பௌத்தமும் சமணமும் பல அரசுகளால் போஷிக்கப்பட்டன. கி.மு 4ம் நூற்றாண்டு முதலே அசோகரின் ஆதரவால் முன்பு எப்போதும் இல்லாத பெருமையை பௌத்தம் அடைந்தது. இலங்கையிலும், சீனத்திலும் பௌத்தம் வைரஸ் காய்ச்சல் போல வேகமாக பரவியது. பௌத்தத்தின் கொள்கைகளுக்கு நிகரான கொள்கைகளையும், ஆகம முறைகளையும் கொண்டிருந்த சமணமும் மிகவேகமாக பரவியது. இதன் விளைவால் வைதீகம் தன்னை தானே புனருத்தாரனம் செய்துகொண்டது.
   வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த தருணத்தில் இமாலய பழங்குடிகளுடன் பலபோர்கள் நிகழ்ந்தன. இந்த இமாலய பழங்குடிகள் தங்கள்மீது சாம்பலை பூசிக்கொண்டும், மிருகத்தோலை உடுத்திக்கொண்டும், சடைமுடியுடனும் இருந்த மூர்க்கர்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. இவர்களின் இறைவனே சிவன். பொதுவான எதிரியொருவன் தோன்றும் போது பிறர் அனைவரும் கூட்டுசேர்ந்துக்கொள்வது இயல்பே. அதன் பிரகாரம்  வைதீக கடவுள்களான இந்திரனும் அக்னியும், வருணனும் தம் புகழை இழக்க இமாலயபழங்குடி மக்களின் தலைவரான சிவனும், வேத நாயகர்களாக உருவாக்கப்பட்ட நாராயணனும், பிரம்மனும் முதன்மை பெறலாகினர். பௌத்தமும் சமணமும் போற்றிய ஜீவகாருண்யமும், சாத்வீகமும் புதிய சனாதன மதத்தின் அடிப்படை கொள்கைகளாயின. திருவிழாக்கள், உருவ வழிபாடு, பக்தி இயக்கம் என மக்களுக்காக தன்னை எளிமையாக்கிக்கொண்டது வைதீகம். சிவனுக்கென பலியாக்கப்பட்ட உயர்தர காளைகள் சிவனின் வாகனமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு சனாதன மார்க்கம் தன்னை சீர்திருத்திக்கொண்டது.
   இவ்வாறு வேததர்மம் தன்னை சனாதன தர்மமாக சீர்திருத்திக்கொண்ட சமயத்தில் பௌத்தர்கள் கலையில் மறுமலர்ச்சி செய்த  குஷணர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. பலமான பௌத்த அரசு வீழ்ச்சியடைந்தது பிராமணர்களுக்கு வசதியானது. குஷணர்களை தொடர்ந்து ஆட்சியமைத்த பாரசிவர்கள்,வாகடகர்கள் ஆகியோர் சிவனை ஏற்றுக்கொண்டு தீவிரமாக சைவத்தை பின்பற்றினார்கள். வடக்கே மெல்லமெல்ல நாத்திக கோட்பாடுகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் லகுலீசார் என்பவரால் உருவாக்கப்பட்ட பாசுபதம்என்ற சைவப்பிரிவு சமணர்களையும், பௌத்தர்களையும் அழிப்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டன. லகுலீசரின் சீடர்கள் காளாமுகம், கபாலிகம் என மேலும் இரண்டு பிரிவுகளை உருவாக்கி நாத்திக வாதங்களை அறுத்தனர்.
   களப்பிரர்கள் தமிழகத்தில் ஆட்சியமைத்த வேளையில் வடக்கே இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் பார்ப்பனிய ஆட்சியான குப்தர்கள் காலம் தொடங்கியது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு’ என்றது களப்பிரர் வரலாற்றில் உண்மை. களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏதோ ஒரு வகையில் துணைசெய்த குப்தர்களும், களப்பிரர் ஆட்சி உருவான அதே காலத்தில் உருவானவர்களே. வலுமிக்க குப்த அரசர்களால் சனாதன தர்மம் தழைத்தத்து. மேலும் களப்பிரர்கள் ஆட்சியமைத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலான பின்னர் (கி.பி 4ம் நூற்றாண்டின் இறுதி) பல்லவர்கள் என்ற புதிய மன்னர்குலம் தோற்றம் பெற்று வளர்ந்தது. நெல்லூர் பகுதியில் ஆட்சியமைத்த இவர்களில் மூத்தவரான ஸ்கந்தவர்மர் களப்பிரர்களின் மணிமுடியென விளங்கிய காஞ்சிநகரை கைப்பற்றினார். கல்வியில் சிறந்த காஞ்சியை இழந்தமையே களப்பிரர் அரசின் முதல் சரிவாக அமைந்தது. எனினும் பிற்காலத்தில் களப்பிரர் மீண்டும் காஞ்சியை கைப்பற்றினர். காஞ்சி ஒரு இழுபறிநிலையில் இருந்தது. பல்லவர் விஷ்ணுகோபர் காஞ்சியை ஆண்ட வேளையில், 1ம் சமுத்திரகுப்தர் காஞ்சியை தாக்கி வெற்றிக்கொண்டார்.
   குப்தர்களின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் உயர்ந்தது. தமிழகத்திலும் நாத்திகவாதிகளான களப்பிரர்களுக்கு எதிரான ஒரு மனோநிலை உருவாகி வலுப்பெற்றது. நிலவிய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பல்லவர்கள் தலைவரான சிம்மவிஷ்ணு களப்பிரர் ஆட்சியில் இருந்த வடக்கு தமிழகம், சோழநாடு ஆகியவற்றை தாக்கினார். களப்பிரர் ஆட்சியால் மனக்கலக்கம் கொண்ட சிற்றரசர்கள் தஞ்சாவூர் முத்தரையர் தலைமையில் பாண்டிய அரசன் கடுங்கோனின் படைகளுடன் அணிவகுத்து பாண்டியநாட்டையும் அதன் சுற்றுவட்டத்தையும் விடுவித்தனர். பல்லாண்டு வஞ்சத்தை தீர்க்கும் வண்ணமாக களப்பிரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஆனால் அழிக்கப்படவில்லை. காவேரிக்கரையில் ஒரு சிற்றரசென வாழுமாறு பாண்டியர்களும், பல்லவர்களுக்கு விட்டுச்சென்றனர். எண்ணம் தோன்றும் போதெல்லாம் அவர்களை தாக்கி மகிழ்வுறுவதற்கு போலும். மரணத்தை காட்டிலும் கொடுமையானது உரிமைகளும், கௌரவமும் பறிக்கப்படுவது. அத்தகைய குரூரநிலையை நம்மன்னர்கள் களப்பிரருக்கு விட்டுச்சென்றனர்.
   வஞ்சம் தீர்த்தல்
   களப்பிரர் ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்த பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்ததும் களப்பிரர் புகழ்ப்பாடிய அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரை தடம் தெரியாது அழிக்கப்பட்டது. புத்தசிலைகள் உடைத்தெரியப்பட்டன. சமணம், பௌத்தம் ஆகியவற்றால் அதிகம் பாதிப்புற்ற பிராமணர்களின் கைங்கரியமாகவே இவைகள் நிகழ்த்தப்பட்டன. காஞ்சி பல்லவர்கள் ஆட்சிக்குள் வந்த பின்னும் அங்கு இருந்த பௌத்த விகாரைகள், கடிகைகள் எல்லாம் தன்னியல்புடன் செயற்பட்டன. எனினும் அவற்றிடையே புதிய வேத கல்விக்கூடங்களும், சமஸ்கிருத மொழி கடிகைகளும் தோற்றம் பெற்றுவந்தன. காஞ்சிக்கடிகையில் பிராமணர்களும், பல்லவ அரசகுடியில் பிறந்த பீமவர்மரின் வாரிசுகளும் உறுப்பினர்களாயினர். மெல்ல மெல்ல பௌத்தவாதம் நீக்கப்பட்ட வண்ணம் சென்றது.
   களப்பிரர்களால் நிலம் இழந்த பிராமணர்கலின் வாரிசுகள் பலர் பிற்கால பாண்டிய பல்லவர்களிடம் முறையிட்டு வேண்டி அந்நிலங்களை மீண்டும் வசப்படுத்திக்கொண்டனர். இந்நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு ஒப்படைப்பது பெரும் புண்ணியமாக கருதினர் மன்னர்கள். ஐடில வர்மன் என்ற பாண்டியன், காமாக்கினி நற்சிங்கன் எனும் பிராமணனுக்கு பிரம்மதேயத்தை மீட்டளித்ததன் முகமாக வேள்விக்குடி செப்பேடுகளைவெளியிட்டான். தமிழக வரலாற்றில் இது இன்னும் முதன்மை செப்பேடாக உள்ளது. தொடர்ச்சியாக பல பாண்டிய அரசர்கள் இங்ஙனம் பிரம்மதேயங்களை மீட்டு பிராமணர்களுக்கு கொடுத்தவண்ணம் சென்றனர். களப்பிரர் ஆட்சியில் ஸ்டராடெஜிக் மையங்களாக விளங்கிய கூதமங்கை, புல்லமங்கை, விஜயமங்கை ஆகிய ஊர்கள் முழுவதும் பிராமணர்களுக்கு சமர்ப்பணமாகின. அதைதொடர்ந்தே அவ்வூர்கள் மங்களம் என்ற புதிய சேர்க்கையுடன் கூதமங்களம், விஜயமங்களம் என பெயர் மாற்றம் பெற்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்கிய மடங்கள் கோவில்களாக்கப்பட்டன. அழகர்மலையை விஷ்ணுவும், பரங்குன்றதை முருகனும், அரிட்டாபட்டியை சிவனும் பங்கிட்டுக்கொண்டனர்.
   சிற்றரசர்களாக சிறுமையுடன் வாழ்ந்த களப்பிரர் தம் எழுச்சிக்காக குண்டலகேசி, வளையாபதி உள்ளிட்ட காவியங்களை உருவாக்கினர். எனினும் அவ்வெழுச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தாற்போல் அக்காவியங்களுடன் சேர்த்து களப்பிர படைகளும் அழிக்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைகள் பற்றிப்பேசும் நம்மவர்கள் ஒரு விடயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். இவற்றின் உச்சகட்டமாக 7ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம் மதச்சுத்திகரிப்பை தமிழகத்தில் உண்டுபண்ணியது. நாவுக்கரசரால் பல்லவன் 1ம் மகேந்திர வர்மரும், சம்பந்தரால் நின்றசீர் நெடுமாறனும் சைவ சமயத்தை தழுவினர். இதன் விளைவாக தமிழகத்தில் எஞ்சிய சமணமும், பௌத்தமும் கூட நலிந்து போனது. நன்னூல் எழுதி தமிழ்வளர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவேற்றி கொலைசெய்யப்பட்டனர் நின்றசீர் நெடுமாறனின் ஆட்சியில் அதுவும் உமையாளிடம் பாலுண்ட சம்பந்தரின் கண் முன்னே!
   இருண்டது காலம்
   களப்பிரர்; சங்கத்துடன் சுருங்கிப்போன தமிழ்த்தாய்க்கு ஐம்பெருங்காப்பியம் என அணிசெய்து அழகு பார்த்தவர்கள். நன்னூல் என இலக்கணம் அமைத்து தமிழை காத்தவர்கள். எண்ணில்லா தமிழ் பொக்கிஷங்களைக்கொண்டு தமிழ்க்கருவூலத்தை நிறைந்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்திப்பாசுரம் பாட இசைக்களத்தை வலுவூட்டிவிட்டு சென்றவர்கள். கல்விக்கண் திறந்து அறிவை போற்றியவர்கள். முடியுடை மூவேந்தரையும் ஒற்றைக்களத்தில் வென்றவர்கள். மக்களின் நிலங்கள் மக்களையே சாரும் என முழக்கமிட்டு கூறியவர்கள். சாதிப்பாகுபாடு என்ற சாத்தானை அழித்தவர்கள். அட்டைகள் போல தான் உழைக்காமல் பிறரின் உழைப்பில் வயிறுவளர்த்த கயவர்களுக்கு பாடம் புகட்டியவர்கள். சங்ககால மன்னர்களை முதன்முறை வென்ற புறதேசத்தவர்கள். தாய்மொழி வேறாகினும் தமிழ்வளர்த்த மாந்தர்கள். கைக்கொண்டது வேற்று மதம் என்ற போதும் பிறதை ஒறுக்காத தன்மைகொண்டவர்கள்.
   வரலாறு தோறும் வென்றவர்கள் தோற்றவர்களின் பெருமையை அழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் களப்பிரர் வரலாற்றுக்கு இணையாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறு உலகில் மிகச்சொற்பமே. களப்பிரர் எழுதிய காவியங்கள் எரியூட்டப்பட்டும், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டும், வழிபாட்டுதளங்கள் தடம் மாற்றப்பட்டும் போனது. பல்லவ பாண்டிய வெற்றி எனும் வேள்வியில் பார்ப்பனியத்தால் களப்பிரர் வரலாறு ஆகுதியாக்கப்பட்டது. அதன் கரிப்புகை அவர்களின் ஆட்சியை இன்றளவும் இருண்ட காலம் என்ற பெயரை தாங்கவைத்துவிட்டது. வைதீகத்தை அவர்கள் போற்றியிருந்தால் இந்நேரம் தமிழக வரலாற்றின் பொற்காலமாக அறியப்பட்டு இருப்பார்களோ என்னவோ?
   முடிவாக…
   எந்த ஒரு விடயத்தையும் நாம் நேசிக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லையற்று நாம் செய்யும் அன்பும், பற்றும் நிச்சயம் பிரிதை அழிக்கும். தமிழ் மீது தமிழர்களாக நாம் வைத்திருக்கும் அளவற்ற பற்று சோழர்களையும், பாண்டியர்களையும், சேரர்களையும் மீறி நம் வரலாற்றை பார்ப்பதற்கு விடுவதில்லை. பல்லவர்கள் நம் வரலாற்றுக்கு செய்துவிட்டு போனதையே நாம் அலட்டிக்கொள்ளாத போது களப்பிரரை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. சமகாலத்தில் பல அறிஞர்கள் தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஒளியூட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றால் தமிழர் வரலாற்றின் மெய்யான சிறப்பு இலகுவில் விளங்கும்.
    
   வரலாறு என்ற தலைப்பை நாம் அணுகும் போதும் நடுநிலையும், நேர்மையும் நிச்சயமாக அவசியம். அப்போதே திருத்தமான வரலாற்றை அறிய இயலும். ஏனெனில் வரலாறு ஒரு சமூகத்தின் அத்திவாரங்கள்.
   https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-3
    
    
 • Topics

 • Posts

  • அமெரிக்காவில் எந்த நாடு என்று கேட்பதில்லையாம், அமெரிக்காவின் எந்தப் பகுதி என்றுதான் கேட்பார்களாம்.
  • தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத் தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம். தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த 'வெளிநாடு வாழ் இந்தியர்கள்' எனும் துறையை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை' எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும் அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு. ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம். தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.தமிழரின் தலைவிதி தமிழரின் கையில் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். மின்னஞ்சலில் கிடைத்தது.
  • நானும் ஏதாவது சொல்லிப்போடுவன், எழுதியும்போடுவன், ஆனால் ருல்பனிடம் அடிவாங்கத் தெம்பில்லைக் கபிதன்.😩
  • கனடாவுக்கு அடுத்து, சுவிற்சலாந்திலும்....  16´ வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு,  தடுப்பூசி  போட அனுமதித்துள்ளார்கள்.
  • Lesson 44 | போதல் 02 | aller | French with Pirakalathan | ASCES......! சென்ற வாரத்தின் தொடர்ச்சி...........!   👍
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.