ஈழப்பிரியன்

விமான அவசரகால கதவு

Recommended Posts

34-EBF907-6370-48-F9-8-C24-B3-B3-D50-DAB

கடந்த கிழமை நியூயோர்க்கிலிருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ வரும் போது என்றைக்கும் இல்லாத மாதிரி முன்னால் போன மனைவி அவசரகால கதவு இருந்த இடம் ஆட்களும் இல்லை.இடமும் பெரிதாக இருந்ததால் அதிலேயே இடம் பிடித்துவிட்டா.

                                    மற்றைய விமானங்களில் இருக்கை இலக்கங்கள் தருவார்கள்.அதை தேடிப் பிடித்து இருந்திடலாம்.முன்னுக்குப் போனாலும் பின்னுக்குப் போனாலும் எமது இருக்கைகள் எமக்காக காத்திருக்கும்.ஒரேஒரு வில்லங்கம் பின் இருக்கைக்கு போகிறவர்கள் முன்னுக்கு ஏறினால் கொண்டு போற பொதிகளை முன்னுக்கு எங்கே இடம் கிடைக்குதே அங்கே தள்ளிவிட்டுட்டு போய்விடுவார்கள்.எமது இருக்கை முன்னுக்கு இருந்தாலும் கடைசியாக ஏறினால் பொதிகள் வைக்க முடியாது.தேடித் திரிந்து பின்னுக்கு எங்காவது தான் வைக்க வேண்டும்.

                                     நாங்கள் எப்போதும் உள்ளூர் பயணத்துக்கு சவுத்வெஸ்ட் விமானத்தில்த் தான் பயணிப்போம்.பெரிய விமானம்.இலவசமாக 50 இறாத்தல் எடையுள்ள இரண்டு பொதிகளும் கையில் கொண்டு போவதற்கு ஒரு பொதி.இன்னும் ஒரு சிறிய கணனி வைக்க என்று ஒரு புத்தகபை கொண்டு போகலாம்.கையில் கொண்டு போகும் பொதியின் அளவு சரியாக இருக்க வேண்டுமே தவிர எடையை பார்க்க மாட்டார்கள்.இந்த வசதி வேறு விமானங்களில் இல்லை.வேறு விமானங்களில் கையில் கொண்டு போகும் பொதிக்கும் பணம் அறவிட தொடங்கிவிட்டார்கள்.

                                     விமானம் புறப்படுவதற்கு கொஞ்சம் முன் அவசரத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கும் ஒவ்வொன்றையும் எடுத்து எப்படி எப்படி போட வேண்டும் என்று சொல்லுவதற்காகவும் முன்னுக்கு பின்னுக்கு நடுவில் வந்து நின்று சகையால் செய்து காட்டுவார்கள்.எமது இருக்கைக்கு அருகில் வந்து நின்ற ஒரு தடியன் குத்தியன் எங்களையே ஒரு முறைப்பாக பார்த்தான்.பின்னர் இந்த இருக்கையில் இருக்க சட்டதிட்டம் தெரியுமா என்று தொடங்க அதற்கிடையில் விமானமும் நகரத் தொடங்க அறிவிப்பும் தொடங்கியது.எம்மோடு கதைத்தவர் அறிவிப்புகளுக்கு ஏற்ற மாதிரி சைகைகள் காட்டத் தொடங்கியிருந்தார்.

                                       முதலில் எம்மோடு கதைக்கும் போது என்னடா ஒரு காலமும் இப்படி யாரையும் கேட்டதைக் காணவில்லையே?இவன் என்ன துவேசம் பிடித்தவனோ என்று எமக்குள் கதைத்துவிட்டு சரி எதுக்கும் விமானத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று படங்களுடன் இருந்த மட்டையை எடுத்து விறுவிறு என்று அவசரகால கதவு பற்றிய விளக்கத்தை மேலேட்டமாக படித்தால் உண்மையிலேயே நாங்கள் அதிலிருக்க தகுதியானவர்களா என்று எமக்கே சந்தேகமாக இருந்தது.

                                       அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

 • Sad 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

--- அறிவிப்பு முடிந்த பின் திரும்பவும் அந்த மட்டையை எடுத்து இரண்டுகரையும் உள்ளவர்களை கவனிக்குமாறு விளங்கப்படுத்தி பின் ஒவ்வொருவராக நான் சொன்னது விளங்கியதா?
என்று கேட்கவும் ஒவ்வொருவரும் ஆம் ஆம் என்றார்கள்.எனது இருக்கை வந்ததும் அவர் கேட்க நானும் ஆம் என்றேன்.எனக்கு கேட்கவில்லை என்றார்.திரும்பவும் யெஸ் சேர் என்று அயலட்டைக்கும் கேட்கக் கூடியவாறு சொன்னேன்.கடைசியாக மனைவியையும் இரண்டு தரம் கேட்டார்.

                                      அத்தோடுவிட்டாலும் அவருக்கு நாங்கள் அதிலிருந்தது பிடிக்கவில்லை போலவே இருந்தது.

ஈழப்பிரியன்....  அந்த  இடத்தில், ஒரு வெள்ளைக்காரன் இருந்திருந்தால்....
அப்படி, அவர் கேட்டிருப்பாரா...?  என்பது சந்தேகமே....இப்படியான விடயம், 
அதுகும்... அமெரிக்காவில் நடக்கும் போது என்னும் போது.... கவலையாக உள்ளது.

நீங்கள் அந்தப் பயணத்தில், சமாளித்து இருப்பீர்கள்...
உங்கள் மனைவி... மிகவும்  வேதனைப் பட்டு இருப்பார் என நினைக்கின்றேன்.

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

ஒரு விமானப் பயணியை... எப்படி நடத்த வேண்டும் என்று, 
அமெரிக்கனுக்கு தெரியாது போலுள்ளது.

அந்த மட்டையில் எழுதியிருப்பதைப் பார்த்தால் மிகவும் பலசாலியாகவும் அவசரத்துக்கு அந்தக் கதவைத் திறந்து அடுத்தவரை காப்பாற்றக் கூடியவராகவும் இப்படி இன்னும் பல.அந்த இருக்கையில் நான் இருந்திருந்தா விட்டிருப்பார்.எனது மனைவி இருந்தது தான் அவருக்கு எரிச்சலூட்டி இருக்கலாம்.அந்தக் கதவை ஒருக்கா திறந்து காட்டு என்று கேட்டால் முழிசிக் கொண்டு தான் நிற்க வேண்டும்.உண்மையிலேயே இவ்வளவு சிக்கல் நிறைந்த இடத்தில் இருந்தது எமது பிழை.

பிரச்சனை என்னவென்றால் இந்த இருக்கையில் இருப்பவர்களுக்கு இந்தளவும் தெரியுமா என்பதே.அவர் எம்மை மட்டும் கேட்டால் பிரச்சனை என்று தான் இருபக்கமும் இருந்தவர்களுக்கும் விளங்கப்படுத்தி அவசரத்துக்கு உங்களால் செய்ய முடியுமா என்ற ஒவ்வொருவரிடமும் கேட்டார்.

3 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் மகளும்... விமான நிறுவனத்தில் தானே... வேலை செய்கிறார்.
அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க... யோசிக்கலாமே....

மகள் வேலை செய்வது விமான நிறுவனமல்ல.போயிங் என்று விமானம் செய்யும் கம்பனி.

Share this post


Link to post
Share on other sites

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

Edited by goshan_che
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

தட்டிவான் பின் சீற்றில் இருந்தா தான் சந்தோசம்.

12 minutes ago, goshan_che said:

ஓம் அந்த இருக்கையில் இருப்பவர் கதவை நெட்டித் திறக்க கூடிய வலுவுள்ளோராய் இருக்க வேணும். சின்ன பிள்ளைகளை, வலு குறைந்தோரை இந்த வரிசையில் இருத்த மாட்டார்கள். தப்பி தவறி அந்த வரிசை ஒதுக்கப் பட்டாலும், சிப்பந்திகள் இருக்கையை மாத்தி அமர்த்துவார்கள்.

இவ்வளவு காலமும் விமான பயணம் செய்தாலும் இதுவரை அந்த மட்டையை எடுத்து பார்த்ததில்லை.இனிமேல் அந்தப்பக்கம் தலைவைத்து படுக்க மாட்டோம்.
நல்லதொரு பாடம் கற்றுக் கொண்டோம்.

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்.....இந்த குறை குற்றங்களை வாசிக்கேக்கை.....
எனக்கு எங்கடை   ஊர் தட்டிவான் ஞாபகம்  தென்றலாய்  வீசிச்சென்றது...😎

 

 

அதுக்கு எல்லா பக்கமும் அவசரகால கதவு உண்டு  என்று நினைக்கிறன் .

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

Edited by nilmini

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nilmini said:

நீங்கள் நடுத்தர வயதுக்கு மேல் தென்பட்டு இருப்பீர்கள். அதனால் தான் அப்படி கேட்டிருப்பான். நான் Southwest இல் அநேகமாக அந்த சீட்டில் தான் இருப்பேன். வந்து கேட்கும் போதுஅதெல்லாம் நான் பாத்துக்கொள்வேன் என்று சொல்லவேண்டியதுதான். மட்டையில் என்ன எழுதிகிடக்கு என்று வாசிப்பதே இல்லை. பின்னுக்கு இருப்பவர்கள் முன்னுக்கு பொதிகளை வைப்பது மிகவும் எரிச்சலான விடயம். நான் பலதடவை முறைப்பாடு செய்தேன் ( ஒன்லைனில்) பலன் இல்லை. 
அமெரிக்காவில் ஒன்று மட்டும் கவனித்தேன். நாங்கள் நன்றாக உடுத்து படுத்து,  அவர்களை ( முக்கியமாக கறுப்பர்களை) ஒரு பார்வை ஏற இறங்க பார்த்தாள் ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள். கொஞ்சம் தன்மையாக நடந்தால் ஏறி மிதிப்பார்கள். நான் வாயே திறப்பதில்லை. எல்லாம் பார்வையில்தான். ஏதாவது சொல்லிவிட்டால் போலீசை கூப்பிட்டு விடுவார்கள்

உண்மை தான்.
அதோடு சவுத் வெஸ்ற்ரில் இருக்கைகளை முதலே தேர்வு செய்ய முடியாது.
ஒரே ஒரு நல்ல விடயம் கூடகுறைய சாமானுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு போகலாம்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சாமியாராக மடத்தில் இருங்கள். நித்தியானந்த சுவாமி மாதிரி ஆகி விடாதீர்கள். 😂
  • பின்னர் என்ன நடந்தது? 😀
  • விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊
  • வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே ப‌ழைய‌ யாழ் க‌ள‌த்தை நாம் எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து  / அப்ப‌ இருந்த‌ ம‌கிழ்ச்சி விருவிருப்பு அதிர‌டி ப‌திவுக‌ள் உற‌வுக‌ளை உற‌வுக‌ள் சிரிக்க‌ வைப்ப‌து அன்பாய் கிண்ட‌ல் அடிப்ப‌து என்று சொல்லிட்டு போக‌லாம் அந்த‌ இன்ப‌மான‌ கால‌த்தை  🙏😂👏 / ஊர் புதின‌த்தில் மிண்ண‌ல் அண்ணா, த‌யா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்கால‌போவான் அண்ணா , த‌மிழ் சிறி அண்ணா , த‌மிழ‌ச்சி அக்கா , குமார‌சாமி தாத்தா , நெல்லைய‌ன் அண்ணா , க‌ந்த‌ப்பு அண்ணா , புத்த‌ன் அண்ணா , இளைஞ‌ன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவில‌ன் அண்ணா , சூறாவ‌ளி அண்ணா , புல‌வ‌ர் அண்ணா , ட‌ங்கு அண்ணா , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , முனிவ‌ர் அண்ணா , நிலாம‌தி அக்கா , சுப்ப‌ன்னை , சின்ன‌ப்பு அண்ணா , ஊமை அண்ணா , வ‌ச‌ம்பு அண்ணா , விக‌ட‌ன் அண்ணா , விசுகு அண்ணா , ம‌ருத‌ங்கேனி அண்ணா , தூய‌வ‌ன் அண்ணா , குறுக்கால‌ போவான் அண்ணா , கிருப‌ன் அண்ணா , இவ‌ர்க‌ள் எல்லாரும் ஊர் புதின‌த்தில் எழுதின‌ கால‌த்தில் யாழில் பொழுது போர‌து தெரியாது , (குறுக்கால‌ போவான் அண்ணாவுக்கு எல்லாரும் போட்டு தாக்குவ‌தை பார்த்து சிரிக்கிற‌து 😁😂 )  யாழில்  அப்ப‌ இருந்த‌ எம் உற‌வுக‌ளின் போராட்ட‌  உண‌ர்வும் போராட்ட‌ ப‌ற்றும் எம் உற‌வுக‌ளின் எழுத்தும் விய‌மிக்க‌ வைச்ச‌து , யாழில் உற‌வுக‌ளை சிரிக்க‌ வைக்க‌ ஜ‌முனா என்ற‌ ஜ‌ம்பவான் இருந்தார் , அவ‌ரின் ஒவ்வொரு ப‌திவும் சிரிப்பு தான் 😂😁 / யாழில் புதிதா வார‌ உற‌வுக‌ளை  அன்பாய் வ‌ர‌வேற்க்க‌ ந‌ம்ம‌ த‌மிழ் சிறி அண்ணா தான் கிங்கு 😍😍😘/  பீர‌ங்கி என்ர‌ ஒரு உற‌வு யாழில் புதிதாய் இணைந்தார் / ( அவ‌ர் இட்ட‌ முத‌ல் ப‌திவு (சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ எங்கே பீர‌ங்கி தாக்குத‌ல் செய்ய‌ வ‌ந்து உள்ளேன் என்னை உள்ளே  இழுத்து செல்ல‌வும் என்று எழுதி இருந்தார் 😂😁 ) ப‌ழைய‌ யாழ் உற‌வுக‌ள் பீர‌ங்கியை அமொக‌மாய் வ‌ர‌வேற்றார்க‌ள் 🙏 அதோடு அவ‌ரின் ஆர‌ம்ப‌ ப‌திவை பார்த்து ப‌ல‌ரும் சிரித்தார்க‌ள் 😂😁/ ப‌ஞ்சு டையிலாக் எழுதுவ‌தில் எங்க‌ள் க‌ள்ளு கொட்டில் ராஜா ( குமார‌சாமி தாத்தாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை , எவ‌ள‌வு ப‌ழ‌மொழி ப‌ஞ்சு டையிலாக்கை தாத்தா எழுதி இருப்பார் , தாத்தா எழுதின‌ எல்லா ப‌ஞ்சு டையிலாக்கும்   என‌க்கு நினைவு இருக்கு  😂👏😁) ( காட்டாறு நான் நினைக்கிறேன் இவ‌ர் முன்னால் போராளி என்று , இந்த‌ உற‌வு அதிக‌ம் எழுத‌ மாட்டார் , எழுத‌ தொட‌ங்கினா , புலிவாந்தி எடுப்ப‌வ‌ர்க‌ளை ஒரு கை பார்த்து விட்டு தான் ம‌னுச‌ன் யாழை விட்டு போவார் / ஒரு கால‌த்தில் ஜ‌யாவின் க‌ருத்தை விரும்பி வாசிப்பேன் , இனி அப்ப‌டி ஒரு கால‌ம் எப்ப‌ வ‌ரும் 😓😓🤔 /  சூறாவ‌ளி , த‌மிழ் உண‌ர்வு த‌மிழின‌ துரோகி க‌ருணா மீதான‌ உண்மையான‌ வெறுப்பு , உற‌வுக‌ளுட‌ன் பேனும் ந‌ல்ல‌ அன்பு , அவ‌ர் யாழில் எழுதின‌ ஒரு ப‌ழ‌மொழி ( நாய் கெட்ட‌ கேட்டுக்கு ஞாயிற்று கிழ‌மை லீவு கேட்டிச்சாம் 😂😁) இதை வாசித்த‌ யாழ் உற‌வுக‌ள் ம‌ன‌ம் விட்டு சிரித்தார்க‌ள் ) யாழ் க‌ண்ட‌ ந‌ல்ல‌ ஒரு உற‌வு  ந‌ம்ம‌ சூறாவ‌ளி 👏/ விசுகு அண்ணா , அண்ணாவின் எழுத்து ஆர‌ம்ப‌த்தில் த‌மிழீழ‌த்தை ப‌ற்றி தான் , கொண்ட‌ கொள்கை நேர‌த்துக்கு நேர‌ம் நிர‌ம் மாரும் ப‌ழ‌க்க‌ம் இல்லை அன்றில் இருந்து இன்று வ‌ர‌ ஒரு கொள்கையோடு தான் இருக்கிறார் அது த‌மிழீழ‌ம் 💪 / த‌யா அண்ணா யாழில் நிண்டா ம‌ன‌தில் ஏதோ ஒரு ம‌கிழ்ச்சியாய் இருக்கும் 👏, அந்த‌ கால‌த்தில் த‌யா அண்ணா எழுதின‌து ஒன்றா இர‌ண்டா ம‌ற‌க்க‌ , இப்ப‌டியான‌ யாழ் உற‌வுக‌ள் அப்ப‌ எழுதி போட்டு இப்ப‌ எழுதாம‌ இருக்க‌ யாழ் இணையத்தில் மாற்ற‌ம் தெரியுது எம் உற‌வுக‌ள் ப‌ல‌ர் இல்லாத‌து 🤔 , ந‌ல்ல‌ அண்ணா 🙏, முனிவ‌ர் அண்ணா வ‌ஞ்ச‌க‌ம்  இல்லாம‌ எல்லாருட‌னும் ப‌ழ‌கும் உற‌வு , மினிவ‌ர் யாழில் அறிமுக‌மான‌து எங்க‌ எல்லாருக்கும் அந்த‌ கால‌த்தில் பெரிய‌ ம‌கிழ்ச்சியை குடுத்த‌து 🙏👏, ந‌கைச்சுவை எழுத்து , உண்மையான‌ பாச‌ம் , 2008 பார்த்த‌ முனிவ‌ர் தான் இப்ப‌வும்  , என்ன‌ பெய‌ரை மாத்தி எழுதுகிறார் இப்போது 😉/ கிருப‌ன் அண்ணா , அப்ப‌ இருக்கிர‌ கிருப‌ன் அண்ணா கொஞ்ச‌ம் சீண்ட‌ல் பாட்டி , என்னோட‌ சீண்டுவ‌து இல்லை ம‌ற்ற‌ உற‌வுக‌ளோடை , எல்லாரும் ஒன்னா கும்மி அடிச்ச‌ கால‌ம் பொற்கால‌ம் 😁🙏, கிருப‌ன் அண்ணாவும் சிரிக்கும் ப‌டி 2008ம் ஆண்டு சிறு வ‌ரி எழுதினார் , அத‌ நான் எழுதுவ‌து ச‌ரி இல்லை அத‌ எழுதினா இன்னொரு உற‌வின் ம‌ன‌ம் சில‌து வேத‌னை ப‌ட‌லாம் அத‌னால்  அத‌ த‌விர்க்கிறேன் , கிருப‌ன் அண்ணா எழுதின‌து சிரிக்க‌ தான் 😁😂 /  விக‌ட‌ன் அண்ணா ,  ஆண்ட‌வா இப்ப‌டியும் ஒரு அண்ணாவை யாழில் க‌ண்ட‌தையிட்டு ம‌கிழ்ச்சி , அம்மா பாச‌ம் ப‌ற்றி வ‌ரியோடு சிறு ம‌ட‌லும் செய்தார் , அது என‌க்கு அப்ப‌ மிக‌வும் பிடிச்சு இருந்த‌து என‌து க‌ண‌ணியிலும் அந்த‌ ப‌ட‌த்தை ப‌திவிற‌க்க‌ம் செய்து வைச்சேன் , யார் வ‌ம்புக்கும் போர‌து இல்லை , தானும் த‌ன்ர‌ பாடும் , ம‌கிழ்ச்சியாய் எழுதுவார் , த‌மிழீழ‌ ப‌ற்று  அதிக‌ம் 🙏👏/  விக‌ட‌ன் அண்ணாவின் யாழ் அவ‌தாரில் அவ‌ரின் ப‌ட‌ம் போட்டு இருந்தார் , அண்ணா பார்க்க‌ ரொம்ப‌ அழ‌காய் இருக்கிறார் 😍 /  விக‌ட‌க‌வி அண்ணா எங்க‌ளோட‌ யாழில் எழுதின‌ கால‌ம் அழ‌கான‌ கால‌ம் 😍 /     சுவி அண்ணா என‌க்கு தெரிந்த‌ ம‌ட்டில் த‌ன‌து சொந்த‌ ஆக்க‌ங்க‌ள் யாழில் எழுதின‌ மாதிரி தெரிய‌ல‌ , சுவி அண்ணா ந‌ம்ம‌ யாழ் வாத்தியாரை போல் அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ர‌ ரொம்ப‌ அமைதியான‌வ‌ர் , ம‌ற்ற‌ உற‌வுக‌ளின் ப‌திவுக‌ளுக்கு அந்த‌ கால‌ம் தொட்டு இந்த‌ கால‌ம் வ‌ர‌ ஊக்க‌ம் குடுப்ப‌வ‌ர்  ,  இப்ப‌டியான‌ ந‌ல்ல‌ உற‌வுக‌ளை அறிக‌ம் செய்து வைச்ச‌ யாழுக்கும் ந‌ன்றி அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கும் ந‌ன்றி 🙏😍😘👏    நெல்லைய‌ன் அண்ணாவின் நேர்மைக்கு நான் த‌லை வ‌ண‌ங்கிறேன் , யாழ் மோக‌ன் அண்ணாவுட‌ன் மிக‌வும் நெருங்கி ப‌ழ‌கின‌ உற‌வு , நெல்லைய‌ன் அண்ணா யாழில் எழுதின‌ கால‌த்தில் யாழும் க‌ல‌ க‌ல‌ப்பாய் இருந்த‌து , அவ‌ர் எழுதின‌ நேர்மையான‌ க‌ருத்துக்க‌ள் ப‌ல‌ என‌க்கு பிடிச்சு போன‌து / என்னை போல‌ எதையும் துனிந்து சொல்ல‌க் கூடிய‌வ‌ர் , சுறுக்க‌மாய் சொல்ல‌னும் என்றால் 2009ம் ஆண்டு புல‌ம் பெய‌ர் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ம் அவ‌ரை மிக‌வும் பாதிச்ச‌து / அந்த‌ துரோக‌ம் என்னையும் பாதிச்ச‌து / நேர்மை இல்லா ம‌னித‌ர்க‌ளை த‌லைவ‌ர் எப்ப‌டி தேர்ந்து எடுத்து இப்ப‌டியான‌ ப‌ணி செய்ய‌ அனும‌தித்தார் என்று யோசிக்கும் போது க‌வ‌லையுட‌ன் கூடிய‌ கோவ‌மும் வ‌ரும் / நெல்லைய‌ன் அண்ணா எம்மோடு அந்த‌ கால‌ம் தொட்டு இறுதி போர் வ‌ர‌ எம்மோடு ஒற்றுமையாய் ப‌ய‌ணிச்ச‌த‌ ம‌ற‌க்க‌ முடியாது 👏/ எங்கை இருந்தாலும் நீங்க‌ள் நீடூழி வாழ‌னும் அண்ணா 🙏🙏🙏    மின்ன‌ல் அண்ணா யாழில் இருந்த‌ கால‌த்தில் யாழ் அதிர்ந்த‌து , எம்ம‌வ‌ர்க‌ள் எம் போராட்ட‌த்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து க‌டின‌மாய் உழைச்ச‌வை , எம் போராட்டத்துக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து பெரும் ஆத‌ர‌வு குடுத்த‌வ‌ர் , இவ‌ரும் முன்னால் போராளி என்று தான் நினைக்கிறேன் , கார‌ண‌ம் எல்லாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் க‌ரும்புலிக‌ள் ப‌ய‌ன் ப‌டுத்திய‌ ஆயுத‌த்தை ப‌ற்றி ஒரு விவாத‌த்தில் எழுதி இருந்தார் / 2009 இறுதி போர் வ‌ர‌ யாழுட‌ன் இணைந்து இருந்தார் , இவ‌ர் யாழில் எழுதின‌ கால‌த்தில் க‌ருத்துப‌திவு நீண்டு கொண்டே போகும் 👏💪/     இப்ப‌ இருக்கிர‌ உற‌வுக‌ளுக்கு ( எங்க‌ள் பாச‌த்துக்கும் பெரும் ம‌திப்புக்கும் உரிய‌வ‌ர் ஆனா ( குறுக்கால‌ போவானை தெரிந்து இருக்க‌ வாய்ப்பு இல்லை ) உண்மையில் இவ‌ர் யாழில் எம்மோடு எழுதின‌ கால‌ம் சிரிப்பு ம‌ழைக் கால‌ம் அது  😁😂🌧) பெய‌ர‌ பார்த்தா இவ‌ர் கிறுக்க‌னா இருப்பாரோ என்று நினைச்சு போடாதைங்கோ , எம் போராட்ட‌த்தை மிக‌வும் நேசித்த‌ உற‌வு ( இவ‌ரின் வேலை யாழில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவ‌து )  வெளியில் நேர்மையான‌ புலி ஆத‌ர‌வாள‌ர் , யாழில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை தேவை இல்லாம‌ க‌டுப்பு ஏத்தும் கில்லாடி இவ‌ர் / ஆண்ட‌வ‌ எத‌ நினைச்சு சிரிக்க‌  😂😁    எங்க‌ட‌ சுப்ப‌ன்னையை எப்ப‌டி ம‌ற‌ப்ப‌து , யாழை க‌ல‌ க‌ல‌ப்பாய் வைச்சு இருந்த‌ உற‌வு  , சுப்ப‌ன்னை ஜாலியான‌ ம‌னுச‌ன் , சுப்ப‌ன்னைக்கு ம‌ற்ற‌ உற‌வுக‌மை உசுப்பேத்துர‌ மாதிரி , என்னையும் உசுப்பேத்தி விடுவார் , போய் காத‌லியோட‌ ஜாலியா இரு எப்ப‌ பாத்தாலும் யாழுக்கையே நிக்கிறாய் / த‌ன்ர‌ காத‌லி த‌ன்ன‌ குப்பிட‌னும் தான் உட‌ன‌ ஓடி போயிடுவாராம் / அன்பு ச‌ண்டை க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா பாச‌ம் , போராளிக‌ளை நினைத்து க‌வ‌லை /  சுப்ப‌ன்னை யாழில் எழுதின‌ கால‌த்தில் பெரும் ம‌கிழ்ச்சி  😂👏😁/    நிலாம‌தி அக்கா , ச‌த்திய‌மாய் ந‌ல்ல‌ அக்கா , நானும் நிலாம‌தி அக்காவும் 2008ம் ஆண்டு ஒன்னா யாழில் இணைந்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் / அந்த‌ கால‌த்தில் நிலாம‌தி அக்கா யாழில் கூட‌ நேர‌ம் யாழில் நின்று  எழுதுவா , என‌க்கு நினைவு இருக்கு 2008ம் ஆண்டு நிலாம‌தி அக்காவை நான் கிண்ட‌ல் அடிச்ச‌து , அதை நிலாம‌தி அக்கா பார்த்து சிரிச்சு எழுதினா , கால‌ங்க‌ள் க‌ட‌ந்து ஓடு அக்கா ,  அந்த‌ கால‌த்து கிண்ட‌ல் ந‌க்க‌ல் எல்லாத்தையும் நினைத்து பார்த்தா மீண்டு அந்த‌ கால‌ம் திரும்ப‌ வருமோ என்று இருக்கு , நிலாம‌தி அக்கா ந‌ல்ல‌ அக்கா 😁👏😂 /    ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணா , அந்த‌ கால‌த்தில் ஆள் மிக‌ அமைதி இப்ப‌ ஈழ‌ப் பிரிய‌ன் அண்ணாவின் லெவ‌லே வேற‌ 🙏👏 , முந்தி அதிக‌ம் எழுத‌ மாட்டார் இப்ப‌ அவ‌ரின் எழுத்து அதிக‌ம் 👏, யாழ் இணைய‌ம் என்றால் நூற்றுக்கு 90வித‌ம் புலி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் தான் , ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவின்  பெய‌ரில் முத‌ல் ( ஈழ‌ம் என்று தொட‌ங்குது ) யோசிச்சு பாருங்கோ எம் போராட்ட‌த்தை எப்ப‌டி நேசித்து இருப்பார் என்று 🙏/ ப‌ல‌ யாழ் உற‌வுக‌ளுக்கு கிடைச்ச‌ ந‌ல்ல‌ உற‌வு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , நான் நினைக்கிறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா என்ர‌ அப்பாவை விட‌ வ‌ய‌தில் மூத்த‌வ‌ர் என்று / ஆனால் அண்ணா என்று அன்பாய் கூப்பிடுறேன் , அண்ணா ஜ‌யா எப்ப‌டி கூப்பிட்டாலும் , வ‌ய‌துக்கு மூத்த‌வையை ம‌ரியாதையோட‌ கூப்பிடுவ‌து தானே என‌க்கு  அழ‌கு 🙏 /     மீதியை நாளைக்கு எழுதுறேன் 😉😁 /
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...