• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
ராசவன்னியன்

செல்வி செயலலிதா மறைந்தபொழுது..

Recommended Posts

Posted (edited)

இசையின் ஒரு வடிவம்

 

செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது.

இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்..

யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது..

உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..!

 

 

முழு வடிவம்..

 

Edited by ராசவன்னியன்
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

 

"Thao Nguyen Xanh - Sad Romance"  என் தட்டச்சு செய்து யூடூபில் தேடினால் இந்த ஒரு குறிப்பிட்ட வயலின் இசையை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு இந்த இசை,  தங்கள் மனதையும், ஆன்மாவிலும் ஊடுருவி பிழிவதாக குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

 

 

Share this post


Link to post
Share on other sites

 • Topics

 • Posts

  • 2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடத்த வாடாவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வாடாவின் இந்த முடிவினை நடுவர் மேன் முறையீடு நீதிமன்றம் மூலம் மேல் முறையீடு செய்வதற்கு 21 நாள் அவகாசமும் ராஷ்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்களில் ஊக்க மருந்து பாவனை தொடர்பான ஆய்வகத் தரவுகளை ரஷ்யா மறைத்தமைக்காகவும், போலிச் சான்றிதழ்கள் தயாரித்தமையையும் கருத்திற் கொண்டே ரஷ்யாவுக்கு இவ்வாறு நான்கு ஆண்டுகள் அனைத்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி, 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள பீபால உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பும் கை நழுவிப் போயுள்ளது. எனவே டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ண போட்டியிலும் ரஷ்யாவின் கொடி அணிவகுப்பில் இடம்பெறாது. அந்நாட்டின் தேசிய கீதமும் ஒலிக்காது. இந்த போதைப் பொருள் பயன்படுத்துதலில் எந்த குற்றமும் இழைக்கவில்லை என்றும் நிரூபித்த வீரர்கள் பொதுவான ஒரு கொடியில் விளையாடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70744
  • கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது. கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி அதிகாலை  5மணியளவில் சேமமடு முதலாம் யூனிற் மற்றும் 2யூனிற் பகுதிகளிற்கு சென்ற இலங்கை இராணுவத்தினர் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 28 சாதாரண பொதுமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வாகனங்களில் ஏற்றிசெல்லப்பட்டு காணாமலாக்கபட்டிருந்தனர். அவர்களின் 35வது நினைவுதினமே அன்னுஷ்டிக்கப்பட்டது. சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது. நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/70746
  • சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள்,  பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது. அதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும். எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் இந்த முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், உணவகங்கள் ஆண் பெண் அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா? என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அதே சமயம் உணவகத்திற்குள்  பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547336
  • பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார். அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த 34 வயதான சன்னா மரின், பின்லாந்து நாட்டின் பிரதமராக பதிவேற்றதன் மூலம் உலகில் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். https://www.polimernews.com/dnews/92022/வயதோ-34..-பதவியோ-பிரதமமந்திரி..!    
  • சுவிஸ் தூதரக ஊழியர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) விடுத்த உத்தரவுக்கு அமைய அவர் அங்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். குறித்த பெண், தாக்குதல் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளாரா என்பது தொடர்பிலும்,  அவர் ஏதேனும் மன அழுத்தத்தில் உள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிந்தார். அத்துடன், சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடையை நீட்டிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது. அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர். அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சவஸ-ததரக-ஊழயர-சடட-வததய-அதகரயடம-மனனல/150-242252