அபராஜிதன்

கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் 

Recommended Posts

கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் 

*இது எனது மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரின்  வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய பதிவு 
* யார் மனதையும் புண்படுத்த அல்ல*

கலியாணப் புரோக்கர்கள் கேட்கும் கேள்விகளை விட   interview ல கேட்கிற கேள்விகள் கொஞ்சமாவது  easy ஆக இருக்கும் போல தோணுறது எனக்கு மட்டும் தானோ என்னவோ..

கலியாணப்புரோக்கர்களுடனான எனது சம்பந்தம் ? தொடங்கினது 2012 க்கு பிறகு தான்..என நினைவு எப்ப நான் வயசுக்கு வந்தனோ..இல்லை..இல்லை ...  எப்ப  வேலை கிடைச்சுதோ அப்போதிருந்தே புரோக்கர்  களை தேடி அப்பாவும் அம்மாவும் ஓடத்தொடங்கி விட்டனர்.

என்னோட கதைத்த ப்ரோக்கர் முதல் முதல் சொன்ன விசயம் இப்போதும் என் நினைவில் உள்ளது 

தம்பி இப்போதைய பிள்ளையள் வலு கெட்டிகாரியள் கண்டியளோ போட்டோ தான் முக்கியம் அவளவை இப்பத்தைய நடிகர் மாரை போல ஸ்ரைலான மாப்பிளை தான் வேணும் என்கிறாளவை நீங்க கோட் போட்டு ஒரு நல்ல போட்டோ அனுப்பி வையுங்க..அத்தோட நீங்க சிங்கப்பூரே ,லண்டன் கனடா மாப்பிளை என்டா  15 வயசு வித்தியாசம் எண்டு கூட பார்க்காமல் ஓம் எண்றாளவை ,உங்களிற்கு அங்கால போற ஐடியா எதும் இருக்கே.. 

நான் இருக்கிற நாடு தான்டா உலகத்திலேயே பாதுகாப்பான நாடு என்று சொல்றாங்க என்டு என்ர  மைன்ட் ஃவொய்ஸ் சொன்னதை அலட்சியப்படுத்தி இல்ல அங்கிள் இப்போதைக்கு அந்த ஐடியா எதுவும் இல்லை" என சரி தம்பி எதும் வந்தால் சொல்றன் என வைத்தவர் தான் ஆள் இருக்கறாரோ தெரியல இப்ப 

புரோக்கர் மாரோட அடுத்த புடுங்குப்பாடு வாறது போட்டோக்கு , நான் எனது தோற்றத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை எங்கேயும் நண்பர்களுடன் செல்லும் போது அல்லது சந்திக்கும் போது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் மட்டும் தான் இருக்கும் அதுவும் காமா சோமா வடிவில (அர்த்தம் கேட்காதீர்கள்) 
இந்த போட்டோக்களே போதும் ஆருக்கும்  பிடித்திருந்தால் வரட்டும் இதற்காக சூட்டிங்கா போக முடியும் என்ற எண்ணம் சில புரோக்கர்கள் நல்ல போட்டோ அனுப்பு அனுப்பு என கேட்டு களைத்து அதோட தொடர்பையே அறுத்து கொண்டு விட்டனர் 

இதற்கு மேலாக ஒரு புரோக்கர் "தம்பி உங்கட certificate ஒருக்கா அனுப்புங்கோ"  என்றார் 
என்னங்கடா இங்க என்ன வேலைக்கா ஆள் எடுக்கிறாங்க நான் என்ன டேஷ் க்கு அனுப்பணும் என நினைத்து நான் படிச்சு எடுத்தது உங்களிற்கு எதையும் ப்ரூவ் பண்ணுவதற்கு இல்லை நம்பிக்கை இல்லைன்னா கிளம்பிட்டே இருங்க ன்னு சொன்னதோட அவரும் அவுட் ..

அம்மா புரோக்கர், சாத்திரி, கோயில் என ஏறி இறங்கி களைத்திட்டார் , தாவடி சாத்திரி சொன்னான் ஆவணிக்குள்ள நடக்கும் வவுனியா சாத்திரி சொன்னார் ஐப்பசிக்குள்ள நடக்கும் அம்மன் கோயில் பூசாரி சொன்ன பங்குனிக்குள்ள நடக்கும் வெற்றிலை சாத்திரி ,கண்ணாடி சாத்திரி, மாம்பழ சாத்திரி என அவர் சொன்ன பங்குனி ஆவணிக்கள் வந்ததோ இல்லையோ வருடங்கள் மட்டும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன..

நானும் அம்மா ஒவ்வொரு கெடுவாக சொல்ல சொல்ல  நீயும் தான் எவ்வளவு தூரம் ஓடுவாய் வயசும் போயிடுச்சு விட்டிடணை நடக்கணும் என்டால்  அதுவா  நடக்கும் விடு பார்க்கலாம் என சொல்ல..
ஓகே நான் விடுறன் ஆனால் இனி எது வந்தாலும் செய்யணும் எந்த காரணமும் சொல்ல கூட எனும் நிபந்தனையுடன் தனது தேடும் படலத்தை இடை நிறுத்தி விட்டா..

புரோக்கர் மார் தான் இப்படி எனில் பொருத்தம் பார்ப்பவர்கள் இன்னும் ஒருபடி மேல என்னுடைய குறிப்பினை யாரோ பெண் வீட்டார் ஒரு சாத்திரியிடம் 
காட்ட அவர்  சொன்னாராம் ஏற்கனவே திருமணமான குறிப்பு என :D( டேய் நானே ஒரு பொண்ணு கூட கிடைக்காமல் இருக்கன் நீ இரண்டு பொண்ணுன்னு சொல்லி இருக்க எங்க இருக்க சொல்லு பார்க்கணும் போல இருக்கு )

சாத்திரம்  குறிப்பு பார்ப்பது என்பதே ஒரு மூட நம்பிக்கை..உங்களின் மனத்திருப்திக்கு நீங்க பார்க்கவிரும்பினாலும் 

சாத்திரம்/பொருத்தம்  பார்ப்பதில் இங்கு யாருக்குமே பூரண அறிவு கிடையாது உங்களிற்கு பிடித்த குடும்ப சாத்திரியாக இருப்பினும் அவரிடம் கேட்டு விட்டு இன்னும் வேறு இரு சாத்திரிகளிடம்  கேட்டு மூவரும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு முடிவெடுக்கிறதே மிகச்சிறந்தது.

அதுவும் ஒருபகுதியினர் சாதகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் சாதகத்தை மட்டும் காரணம் காட்டி  தட்டி விடுதல் மிகத்தவறு.பெற்றோர்களே சாத்திரி மற்றும் புரோக்கர் மார்களே கொஞ்சம் கவனத்தில் எடுங்கள் 

மனசுக்கு பிடித்தவற்றை சாத்திரம் காரணமாக பிரிச்சிவைக்கிற பாவம் உங்களை சேராமல் இருக்கட்டும் 😛 (

*அண்மையில் நண்பன் ஒருவனுக்கு பொருந்தி  வந்த திருமணத்தை சாத்திரி ஒருவர் குழப்பி அடிச்ச காண்டில கிறுக்கியது*

  • Like 5
  • Thanks 1
  • Sad 1

Share this post

Link to post
Share on other sites

35 வயதுகளிற்கு அண்மையாக திருமணம் முடித்த நண்பர் ஒருவர் சொன்னது, வயது போன இருவரை சேர்த்து விட்டது போல தானாம்!
ஒருவருக்கொருவர் துணையா இருக்க வேண்டியது தான்!!!
ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

நண்பண்ட கதையோ அல்லது உங்களின்டையோ?...சிங்கப்பூரில் தான் வடிவான தமிழ் பெட்டையல் இருக்கினம்...பார்த்து முடிக்க வேண்டியது தானே எதுக்கு சாஸ்திரம்,பொருத்தம்  பார்த்து கொண்டு இருக்கீறிங்கள் 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இப்பதானே இன்டர்நெட் இருக்கு 
எதுக்கு ப்ரோக்கர்?

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 6/8/2019 at 8:41 AM, அபராஜிதன் said:

-----புரோக்கர் மார் தான் இப்படி எனில் பொருத்தம் பார்ப்பவர்கள் இன்னும் ஒருபடி மேல என்னுடைய குறிப்பினை யாரோ பெண் வீட்டார் ஒரு சாத்திரியிடம் 
காட்ட அவர்  சொன்னாராம் ஏற்கனவே திருமணமான குறிப்பு என :D( டேய் நானே ஒரு பொண்ணு கூட கிடைக்காமல் இருக்கன் நீ இரண்டு பொண்ணுன்னு சொல்லி இருக்க எங்க இருக்க சொல்லு பார்க்கணும் போல இருக்கு )

------சாத்திரம்/பொருத்தம்  பார்ப்பதில் இங்கு யாருக்குமே பூரண அறிவு கிடையாது உங்களிற்கு பிடித்த குடும்ப சாத்திரியாக இருப்பினும் அவரிடம் கேட்டு விட்டு இன்னும் வேறு இரு சாத்திரிகளிடம்  கேட்டு மூவரும் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு முடிவெடுக்கிறதே மிகச்சிறந்தது.

*அண்மையில் நண்பன் ஒருவனுக்கு பொருந்தி  வந்த திருமணத்தை சாத்திரி ஒருவர் குழப்பி அடிச்ச காண்டில கிறுக்கியது*

அபராஜிதன்... நல்ல சிரிப்பு பகிர்வு. ரசித்து வாசித்தேன்.  :grin:

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 6/9/2019 at 1:53 AM, ஏராளன் said:

35 வயதுகளிற்கு அண்மையாக திருமணம் முடித்த நண்பர் ஒருவர் சொன்னது, வயது போன இருவரை சேர்த்து விட்டது போல தானாம்!
ஒருவருக்கொருவர் துணையா இருக்க வேண்டியது தான்!!!
ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.

உண்மையே லேட் திருமணம் நிறைய எதிர்மறை விளைவுகளை உருவாக்கிறது 

On 6/9/2019 at 3:20 AM, ரதி said:

நண்பண்ட கதையோ அல்லது உங்களின்டையோ?...சிங்கப்பூரில் தான் வடிவான தமிழ் பெட்டையல் இருக்கினம்...பார்த்து முடிக்க வேண்டியது தானே எதுக்கு சாஸ்திரம்,பொருத்தம்  பார்த்து கொண்டு இருக்கீறிங்கள் 

என்ர  கதை face book ஆக நண்பர்களின் கதைகள் என ரீல் விட்டது..

என்ர கண்ணில யாரும்படலையே இன்னும் 

9 hours ago, Maruthankerny said:

இப்பதானே இன்டர்நெட் இருக்கு 
எதுக்கு ப்ரோக்கர்?

நம்பகத்தன்மை புரோக்கர்களிடம் தான்இருக்காம் 

7 hours ago, தமிழ் சிறி said:

அபராஜிதன்... நல்ல சிரிப்பு பகிர்வு. ரசித்து வாசித்தேன்.  :grin:

நன்றி :)

Share this post

Link to post
Share on other sites

பெயர் ஸ்ரீ ரெட்டி 
அம்சமான பொண்ணு  
குடும்ப இஸ்திரிகை 

மாத வரையறையில் மாப்பிளை பார்க்குதாம் 
பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் போட்டுப்பாருங்கள் 
உங்கள் நண்பர்  இருக்க சொன்னாலும்  பிள்ளை 
ஒருமாதம் முடிய போய்விடும்.

ஒரு பிராக்டிசாக இருக்கும். 

Image may contain: 1 person, smiling, standing, mountain, sky, outdoor, nature and water

Image may contain: 1 person, standing, phone and indoor

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, Maruthankerny said:

நீங்கள் எல்லாம் போட்டி போட்டு கொண்டு வரிசையில் காத்திருக்கிறீர்கள் அவவோட படுப்பதற்கு ...அப்படிப்பட்டவவை உங்கட சக உறவை கல்யாணம் கட்ட சொல்ல்கிறீர்களே கொஞ்சம் கூட  மனசாட்சி இல்லையா உங்களுக்கு 
 
Share this post

Link to post
Share on other sites
18 hours ago, அபராஜிதன் said:

என்ர  கதை face book ஆக நண்பர்களின் கதைகள் என ரீல் விட்டது..

என்ர கண்ணில யாரும்படலையே இன்னும் 

பொண்ணுங்கள் கண்ணில படோணும் என்றால் 4 பொது இடங்களுக்கு போகோணும்...அவர்களது கண்ணில படுற மாதிரி நிக்கோணும் வீட்டில இருந்து கொண்டு புத்தகங்களை வாசிச்சு கொண்டு ,மு.புத்தகத்தில் அரசியல் விமர்சனம் செய்து கொண்டு இருந்தால் மட்டும் காணாது கடலை போடவும் தெரியோனும் 😓

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 6/11/2019 at 2:28 AM, ரதி said:

பொண்ணுங்கள் கண்ணில படோணும் என்றால் 4 பொது இடங்களுக்கு போகோணும்...அவர்களது கண்ணில படுற மாதிரி நிக்கோணும் வீட்டில இருந்து கொண்டு புத்தகங்களை வாசிச்சு கொண்டு ,மு.புத்தகத்தில் அரசியல் விமர்சனம் செய்து கொண்டு இருந்தால் மட்டும் காணாது கடலை போடவும் தெரியோனும் 😓

கோயில்கள் பொது இடங்கள் என செல்வது உண்டு ,திருமண விழாக்கள் உறவினர்கள் இங்கு அதிகம் இல்லாததால் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை  

Share this post

Link to post
Share on other sites

எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை இல்லை. சாதகம் பார்த்துக் கலியாணம் என்று வெளிக்கிடுபவர்களோடு (நெருங்கிய சொந்தமாக இருந்தாலும்) மல்லுக்கட்டி பிரயோசனம் இல்லை என்பதால் ஒன்றும் சொல்லுவதில்லை! சொல்லவெளிக்கிட்டால் இருக்கிற உறவும் போய்விடும் என்பதால்தான்.

நாலு இடத்திற்குப் போய் சனங்களோடு பழகினால் ஒன்று வந்து அணையாதா என்ன?

மனப்பொருத்தம் இருந்தால் போதும். இல்லையென்றால் இரண்டு பேரும் DNA sequence செய்து பார்க்கலாம்!

Share this post

Link to post
Share on other sites

இதில எழுதிய  முதல்  பந்தியிலேயே

தம்பி இந்த  விடயத்துக்கு  சரிவரமாட்டார் என்பது புரிந்து விட்டது..

காதலோ

கல்யாணமோ

பொய்  இல்லாவிட்டால்...??😋

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, கிருபன் said:

இங்கு எங்களவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலே  தான் உள்ளனர் ,எங்க இடங்களில் எனில் திருமணவீடு கள் மற்றும் நிகழ்ச்சிகளில் சந்திக்க கூடியதாக இருக்கும் இங்கு கோயில்களில் மட்டும் பெரும்பாலானோர் கோயில்களிற்கு செல்வதும் குறைவு 

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, விசுகு said:

இதில எழுதிய  முதல்  பந்தியிலேயே

தம்பி இந்த  விடயத்துக்கு  சரிவரமாட்டார் என்பது புரிந்து விட்டது..

காதலோ

கல்யாணமோ

பொய்  இல்லாவிட்டால்...??😋

என்ன செய்ய அது தான் (பொய்)முடியவில்லையே என்னால் 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.