Jump to content

எங்கள் ஊரின் சிகையலங்கார நிலையமும் நினைவுகளும்


Recommended Posts

.எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம்  செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு 🙂  

வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் 🙂

அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ் கட்" தான். ( காரணம் அம்மா மார் தான், அவரகள் தானே எங்கள் நிதியமைச்சர்கள்). 

அனேகமாக அப்படியான சிகையலங்கார அனுபவம் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருந்திருக்கும்.

பின்னர், அனேகமான ஊர்களின் சந்திகளில் சிகையலங்கார நிலையங்கள் முளைத்தன. சந்திகளில் கூடுவதற்காகவே முடிவெட்டவரும் வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு வேறு நோக்கமும் இருந்தது என்பது இன்னொரு சுவாரசியமான விடயம். 

அந்த சிகையலங்கார நிலையங்கள் பலவேறு வடிவமைப்பில் இருந்தன, ஆனால், அவை எல்லாமே ஒன்று இரண்டு அன்றைய சினிமா நாயகர்களின் அழகான முடிவெட்டை கொண்டிருக்கும். அதை பார்த்து தமக்கும் அதே 'கட்' வேண்டும் என இளையவர்கள் வேண்டுவதுண்டு. 

நுழைந்த நாம் அங்கே, ' அண்ணை எவ்வளவு நேரம் எடுக்கும்?" எனக்கேட்டு அங்கே இருக்கும் ஈழநாட்டை மேலால் மேய்வதும் வழமை. இடைக்கிடை இளையவர்கள் வந்து தலையை வாரி செல்வதும் கண்ட  காட்சிகள். 
  
பின்னர், தலைமுடியை வெட்ட முதல் அடிக்கும் "ஒருவகை நீர்", சிலவேளைகளில் தரப்படும் 'மசாச்' மற்றும் விசுக்கி முதல் போர்த்தியவருக்கு போர்த்திய வெள்ளாடை போர்ப்பது என்பன நாம் பெற்ற ஒரு  வி ஐ.பி  நிகழ்வாக இருக்கும். 

ஆனால், இன்றைய நவீன உலகில் 'அப்ஸ்' ஊடாக ஒரு நேரம் குறித்தெடுத்து புலம்பெயர் நாடுகளில் சென்றாலும் அன்றைய அந்த சுகம் இல்லை.  சலூன் என்ற ஆங்கில வார்த்தை எல்லோருக்கும் தெரிந்த வார்த்தையாக மாறி தமிழாக மாறிவிட்டது 😞 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.