Jump to content

விண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

india-1-720x450.jpg

விண்வெளியில் போர் ஒத்திகை நடத்தும் இந்தியா!

விண்வெளியில் போர் ஒத்திகையொன்றினை நடத்துவதற்கு இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த போர் ஒத்திகையை இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை இந்த செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும்.

அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்தி வெற்றியடைந்திருந்தது.

குறித்த செயற்பாட்டினால் போர்த்திறன் படைத்த நாடுகள் பட்டியலில் 4 ஆவது இடத்தினை இந்தியா பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு சாதனையை நிகழ்த்துவதற்கு விண்வெளியில் போர் ஒத்திகையை நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/விண்வெளியில்-போர்-ஒத்திக/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌லுக்கு மூன்று நேர‌ சாப்பாடு குடுக்க‌ துப்பில்ல‌ , ஆனா உந்த‌ விள‌ம்ப‌ர‌த்துக்கு குறை இல்லை / 

சுத‌ந்திர இந்தியாவில் ம‌க்க‌ள் 
ப‌ல‌ ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / 

Link to comment
Share on other sites

இந்த போட்டி ஆரம்பமாகி பல வருடங்கள் ஆகி விட்டன. காரணம், நாடுகளின் வலிமை அவர்களின் பலவீமான செயற்கை கோள் தொழில்நுட்பத்தில் தங்கி உள்ளது. அதை புடுங்கி விட்டால் விமாங்களால் இலக்கை தாக்க முடியாது. கப்பல்களால் இராக்கெடட்டுக்களை ஏவ முடியாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியா, ஏன் சொந்த தொழிநுட்ப உற்பத்தியில் மிகவும் பின்னேயே உள்ளது.

எனது நினைவின் படி, சீனா 1997 - 2004 anti-satelite weapon தொழிநுட்பத்தை  பரிசோதித்து.

காரணம், சீனாவின் அணுகுமுறை, கிந்தியாவிற்கு western ஆதரவும், access ம்  இருந்தும் கூட.

Western நாடுகளில் உயர் படிப்பு செய்த பல சீனர்கள் சீனாவிற்கு திரும்பினார்கள். தங்கிய சீனர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.

சீனாவும், colloborative research ஐ western நாடுகளோடு ஓர் நிறுவனமயாமாக கட்டியெழுப்பியது.

அதன் மூலம், scientific research சீனாவில் ஓர் கைத்தொழில் புரட்சி போல வளர்ந்தது.

இதில் கூட, கிந்தியா மெய்நிகர் தொழில்நுட்பத்தில் ஒத்திகை.      

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.