Jump to content

மோடியை வரவேற்றார் ரணில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை வரவேற்றார் ரணில்!

June 9, 2019

Modi-Ranil.png?resize=800%2C450

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட்பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினர்  சென்றடைந்தனர்.

அத்துடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன் பின்னர் 11.15 மணியளவிலிலிருந்து விமானத்தை விட்டு தரையிறங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். #நரேந்திரமோடி  #பண்டாரநாயக்கசர்வதேசவிமானநிலையம் #ரணில்விக்ரமசிங்க

Modi-at-colombo.png?resize=581%2C397

 

http://globaltamilnews.net/2019/123859/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ranil-bia-modi1-720x450.jpg

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.

இதன்போது பிரதமர் வந்த விமானத்துடன், பாதுகாப்புக்காக மற்றுமொரு விமானமும் இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று வரவேற்றுள்ளார். இந்த வரவேற்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான உத்தியோப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து அவர் பகல் 12 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ranil-bia-modi2.jpg

ranil-bia-modi.jpg

bia-modi.jpg

http://athavannews.com/இந்தியப்-பிரதமர்-மோடி-இல/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இந்தியப் பிரதமர் மோடி

by in செய்திகள்

St-Anthony-s-Church-modi-1-300x200.jpg

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சிறிலங்கா பிரதமருடன் சென்றிருந்த இந்தியப் பிரதமர், அங்கு இறந்தவர்களின் நினைவாக மலர் செண்டு ஒன்றை வைத்து வணங்கினார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் மோடி, சிறிலங்கா மீண்டும் எழுச்சி பெறும் என்று தாம் நம்புவதாக தெரிவித்தார்.

தீவிரவாதத்தின் பயங்கர செயல்களினால், சிறிலங்காவின் ஆன்மாவை தோற்கடிக்க முடியாது, சிறிலங்கா மக்களுடன், இந்தியா , ஒற்றுமையாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார்.

St-Anthony-s-Church-modi-1.jpgSt-Anthony-s-Church-modi-4.jpg

St-Anthony-s-Church-modi-3.jpgSt-Anthony-s-Church-modi-4-1.jpgSt-Anthony-s-Church-modi-5.jpg

 

http://www.puthinappalakai.net/2019/06/09/news/38437

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

மோடியை வரவேற்றார் ரணில்!

June 9, 2019

Modi-Ranil.png?resize=800%2C450

மிடுக்கான நிலையில் மோடி. Bildergebnis für Angry+simily

பரட்டைத் தலையில் ரணில். Bildergebnis für Ugly+simily

என்னாகுமோ....! ஏதாகுமோ…!!Bildergebnis für Ugly+simily

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣

15 minutes ago, Paanch said:

மிடுக்கான நிலையில் மோடி. Bildergebnis für Angry+simily

பரட்டைத் தலையில் ரணில். Bildergebnis für Ugly+simily

என்னாகுமோ....! ஏதாகுமோ…!!Bildergebnis für Ugly+simily

இந்தியாவின் அடுத்த மாநிலம்  வடக்கு கிழக்கா அல்லது சிறிலங்காவா......தேர்வு சிங்கள மொடயாக்களே உங்களுடையது என மோடி சொல்லியிருப்பாரோ....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அரசியல் எவ்வளவு கேவலமானது......... குண்டு வெடித்த இடத்திற்க்கு முதல் விஜயம்...

அது சரி ரணிலும் மோடியும் கை கூப்பிகொண்டு வழிபடுகின்றனர்....ஆனால் ரஞ்சித்தும் மற்றவர்களும் கையை பிசைத்து கொண்டு வழிபடுகினறனர்......

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு சிறிலங்கா பிரதமருடன் சென்றிருந்த இந்தியப் பிரதமர், அங்கு இறந்தவர்களின் நினைவாக மலர் செண்டு ஒன்றை வைத்து வணங்கினார்.

இந்த குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்தியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் மோடி இங்கு சென்றது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

இந்த குண்டுவெடிப்புக்களின் பின்னணியில் இந்தியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்ற பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் மோடி இங்கு சென்றது சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது!

உண்மை அதுவாக இருந்தாலும் யார் நடவடிக்கை எடுப்பது.......இந்தியாவுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றே நான் சொல்லுவேன் .....இஸ்லாமியர்கள் சொல்லுவார்கள் இந்தியா தான் காரணம் என்று ஆனால் மீண்டும் நான் சொல்லுவேன் இந்தியாவுக்கு சம்பந்தமில்லை  பாகிஸ்தானும் ..சவுதியும் தான் முக்கிய காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Modi meets TNA delegation in Colombo.

மோடிக்கு....  மைத்திரி கொடுத்த பரிசு.

அதிபர் மாளிகையில் மைத்திரிபால சிறிசேனாவை மோடி சந்தித்து பேசினார். மோடிக்கு செங்கம்பள வரவேற்பு கொடுத்த சிறிசேனா, தியான நிலையில் உள்ள புத்தர் சிலையையும் பரிசாக கொடுத்தார்.

இந்த புத்தர் சிலை வெண் தேக்குமரத்தால் ஆனது. இச்சிலை கையால் செதுக்கப்பட்டது. இச்சிலையை கையால் செதுக்க 2 ஆண்டுகளானதாம்.

Read more at: https://tamil.oneindia.com/news/colombo/modi-meets-tna-delegation-in-colombo-353564.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

படங்களுக்கு முகத்தை காட்டிப் பழகின மோடி இந்தப் பக்கம் படம் எடுக்க ஆள் இல்லை ஆனால் ஒரு கறுவல் தான் நிற்குது என்று முகத்தை சுழிக்கிறார்.

அந்தக் கறுவல் ஆவா வாள் வெட்டுக்குழுவைச் சேர்ந்த ஆளாக இருக்கும் என்றும் மோடிக்கு சந்தேகம் வந்திருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nedukkalapoovan said:

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

எல்லாத்திலும் நொட்டை  பிடிக்காதிங்கோ 

Link to comment
Share on other sites

4 minutes ago, nedukkalapoovan said:

St-Anthony-s-Church-modi-5.jpg

கொச்சிக்கடை அந்தோனியாரிடத்திலும் தமிழ் சேதாரப்பட்டுக் கிடக்கிறது.

புனித என்பதற்குப் பதிலாக புணித என்று எழுதப்பட்டுள்ளது. 

பல பல தசாபத்தங்களாக தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இந்த புனித அந்தோனியார் தேவாலயம் சில தசாபத்தங்களின் முன்னர் வலுக்கட்டாயமாக சிங்களக் கத்தோலிக்க காடையர்களால் அபகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

கொச்சிக்கடையில் வாழும் தமிழரிடம் விசாரித்துப் பார்த்தல் மல்கம் ரஞ்சித் கும்பலின் காடைத்தனம் தெரியும்!

Link to comment
Share on other sites

மோடி குஜராத் படுகொலைக்கு பேர் போனவர் என்பதை பலர் இலகுவில் மறந்து விடுகிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் – முழுமையான தொகுப்பு

mod-sl.jpg

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ள நரேந்திர மோடி, இன்று இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தினூடாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரச பிரதானிகள் வரவேற்றனர்.

D8nX1TWVsAAIN8H.jpgசெங்கம்பள மரியாதையுடன் பாரம்பரிய கலாசார முறைப்படி அழைத்து வரப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவேட்டிலும் கையொப்பமிட்டார்.

இதனையடுத்து, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பை வந்தடைந்த அவர், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முதலாவதாக விஜயம் செய்திருந்தார்.

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மோடி

mod-ji.jpgஇதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பேராயர் கர்த்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, அருட்தந்தையர்கள் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் உள்ளிட்ட அதிகாரிகளும் வருகைத் தந்திருந்தனர்.

இங்கு, மலர் வைத்து பிராத்தனையில் ஈடுபட்ட நரேந்திர மோடி, தாக்குதலையடுத்து தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் புனித அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட்டதோடு, குண்டுத் தாக்குதல் தொடர்பிலான புகைப்படத் தொகுப்பையும் பார்வையிட்டிருந்தார்.

பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது

தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த மோடி, இலங்கை விரைவில் மீண்டெழும் என நான் நம்புகின்றேன் என்றும் பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்களால் இலங்கையை ஒன்றும் செய்து விடமுடியாது என்றும் இலங்கையில் உள்ள மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

கொட்டும் மழையினில் மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

D8muFYKVsAI9Y2j.jpgஇதனையடுத்து, அணிவகுப்பு மரியாதையுடன் அவர், ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனால், கொழும்பு மற்றும் அதனை அண்டியப் பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த இவருக்கு இசை வாத்தியங்கள் முழங்க சிங்களப் பாரம்பரிய கண்டி நடனத்துடன் இராணுவ மரியாதை செலுத்தப்பட்டதோடு, 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டு அதியுயர் மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இதன்போது, முக்கிய அதிகாரிகளும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுடன் மோடி விரிவான கலந்துரையாடல்

D8m_GFOV4AA7mhU.jpgஇதனை அடுத்து இடம்பெற்ற மத்திய விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோருடனும் அவர் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

தமிழர்களின் பிரச்சினை – புது டெல்லி வருமாறு கூட்டமைப்பினருக்கு மோடி அழைப்பு!

D8m_yv9UYAApnhv.jpgமேலும் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் 13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். அந்தவகையில் இந்த விடயங்கள் குறித்து புது டெல்லியில் ஒரு விரிவான கூட்டம் நடத்தவும் மோடி ஒப்புக்கொண்டார்.

இதன் பின்னர் இலங்கைக்கான தனது குறுகிய நேர பயணத்தை நிறைவு செய்து பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டுச் சென்றார். இவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழியனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/பிரதமர்-மோடியின்-இலங்கை/

Link to comment
Share on other sites

On 6/9/2019 at 4:33 PM, தமிழ் சிறி said:

image_03a3fa3893.jpg

ராஜீவ் காந்திக்கு... பிடரியில்,  அடி  விழுந்த மாதிரி...
தனக்கும் விழுந்திடுமோ... என்று, அவதானமாக அக்கம், பக்கம் பார்க்கும் மோடி. :grin:

இதைத்தான் பேந்த பேந்த முழிக்கிற என்டு சொல்லுவாங்களோ?
இந்தியாட கறுப்பு பூனை படைக்கு இப்பிடி ஸ்டைலா உடுப்பு போடலாமோ என்டு நோட்டம் விடுறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.