Sign in to follow this  
கிருபன்

தேரர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்கும் சட்டம், ஒழுங்கு!

Recommended Posts

தேரர்கள் முன்னிலையில் கை கட்டி நிற்கும் சட்டம், ஒழுங்கு!

நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக  மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­கு­தல்­களை கண்­டித்தும், முஸ்லிம் சமூ­கத்தின்  பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென்றும், முழு முஸ்லிம் சமூ­கத்­தையும் பயங்­க­ர­வா­திகள் போன்று சித்­தி­ரித்துக் கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்­கை­களைக் கண்­டித்தும், முஸ்­லிம்­களின் மீது மற்­று­மொரு வன்­முறை கட்­ட­விழ்த்து விடக் கூடா­தென்­ப­தற்­கா­க­வுமே முஸ்லிம் அமைச்­சர்கள் தங்­களின் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­துள்­ளார்கள். 

முஸ்லிம் அமைச்­சர்­களின் இந்த முடிவு ஆளும், எதிர்த் தரப்­பி­ன­ரி­டையே பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா சிங்­கள இன­வா­தி­க­ளினால் இன­நல்­லு­றவை சீர்­கு­லைத்து குளிர்­காய்ந்து கொள்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சியை தோல்வி அடையச் செய்­துள்­ளது. 

குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களின் மீது பார­பட்­ச­மற்ற விசா­ர­ணையை ஒரு மாத காலத்­திற்குள் மேற்­கொள்­ளு­மாறும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தையும், பாது­காப்பு தரப்­பி­ன­ரையும், புல­னாய்வுப் பிரி­வி­னை­யையும் கேட்­டுள்­ளனர்.

___.jpg

உண்­ணா­வி­ரதம்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்த இன­வாத பிர­சா­ரத்­திற்கு ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­க­ளையும் பௌத்த இன­வா­தி­களும், தேரர்­களும் சாத­க­மாக பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், ஆளு­நர்கள் அஸாத்­சாலி, ஹிஸ்­புல்லாஹ் ஆகி­யோரின் மீது பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்­புள்­ள­தென்று குற்­றச்­சாட்­டு­களை முன் வைத்­தாலும், அக்­குற்­றச்­சாட்­டுகள் ஆதா­ர­பூர்­வ­மாக முன் வைக்­கப்­ப­ட­வில்லை. இவர்­களின் மீதான குற்­றச்­சாட்­டுகள் முஸ்லிம் விரோத இன­வாத பிர­சா­ரத்­திற்கு கருப் பொரு­ளாக கையா­ளப்­ப­டு­கின்­றதே அல்­லாமல் வேறொன்­று­மில்லை.

பௌத்த இன­வா­தி­களின் துணை­ யோடு இன­வா­தத்­தையும், வன்­மு­றை­யையும் தூண்டி ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கா­கவே முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மற்றும் முஸ்­லிம்­களின் மீதும் இன­வாதக் கருத்­துகள் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த வழி­மு­றையின் மூல­மாக ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொண்­டாலும் அது நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திற்கும், அமை­திக்கும் நீண்ட காலத்­திற்கு துணை செய்­யாது. இன­வாதம், மத­வாதம், வன்­முறை ஆகி­யன நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும், அமை­தி­யையும் அழித்­து­விடும். மிக மோச­மான இந்த ஆயு­தங்கள் எந்த வேளையில் யாரைப் பலி­யாக்கும் என்றும் சொல்ல முடி­யாது.

1956ஆம் ஆண்டு தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பௌத்த தேரர்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தனிச் சிங்­கள சட்­டத்தைக் கொண்டு வருவேன் என எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்­டாரநாயக்கா கொள்கைப் பிர­க­டனம் செய்தார். இதேவேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியும் 1956  ஆம் ஆண்டு தேர்­தலில் சிங்­கள தனிச் சட்­டத்தை கொண்டு வருவோம் என்று தெரி­வித்­தி­ருந்­தது. ஆயினும், தனிச் சிங்­கள சட்­டத்தை கொண்டு வருவேன் என்று பண்­டார நாயக்க முதலில் தெரி­வித்­த­மையால் பெரும்­பான்­மை­யான பௌத்த தேரர்­களின் ஆத­ரவு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு கிடைத்­தது. இந்தப் பின்­ன­ணிதான் இலங்­கையின் அர­சி­யலில் பௌத்த தேரர்­களின் ஆதிக்கம் அதி­க­ரிப்­ப­தற்கு கார­ண­மாகும்.

1956ஆம் ஆண்டு பண்­டாரநாயக்கா தலை­மையில் ஆட்சி அமைக்­கப்­பட்­டது. தனிச் சிங்­கள சட்டம் கொண்டு வரப்­பட்­டது. தமிழ் அர­சி­யல்­வா­திகள் இதனை எதிர்த்­தார்கள். இதனால், பண்டா – செல்வா உடன்­ப­டிக்கை செய்­யப்­பட்­டது. இவ்­வு­டன்­ப­டிக்­கையில் தமி­ழுக்கும் அந்­தஸ்தும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு அர­சியல் அதி­காரம் வழங்­குதல் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. இதனை எதிர்த்து பண்­டார நாயக்­கா­வுக்கு ஆத­ர­வாக செயற்­பட்ட பௌத்த தேரர்கள் அவ­ரது வீட்டின் முன் உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டார்கள். ஜே.ஆர். ஜய­வர்த்­தன கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்கு யாத்­திரை மேற்­கொண்டார். இதன் பின்னர் பண்டா – செல்வா உடன்­ப­டிக்கை கிழித்து எறி­யப்­பட்­டது. ஆயினும், 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்­மொழி விசேட சட்டம் கொண்டு வரப்­பட்­டது. இதனை பௌத்த தேரர்கள் எதிர்த்­தார்கள். 1959ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி பௌத்த தேரர் ஒருவர் பண்­டார நாயக்­காவை சுட்டுக் கொன்றார்.  

ஆகவே, சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக இன­வாதம் பேசு­வது, வன்­மு­றையை மேற்­கொள்­வது, உண்­ணா­வி­ரதம் இருப்­பது என்­பது இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் புதி­ய­தல்ல. 

ஆனால், தற்­போது அர­சி­யலில் பௌத்த இன­வா­தி­களின் ஆதிக்கம் கட்­டுக்கு அடங்­காத நிலையில் இருப்­ப­தா­கவே உள்­ளது. பௌத்த தேரர்­களின் முன்­னி­லையில் சட்­டமும், ஒழுங்கும் கைகட்டி நிற்கும் நிலை­மையே உள்­ளது. பௌத்த தேரர்கள் நினைத்தால் எத­னையும் சாதிக்­கலாம் என்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நிலை நீடிக்­கு­மாயின் ஆட்­சியை கைப்­பற்ற வேண்­டு­மென்­ப­தற்­காக இன்­றைய இன­வா­தத்­திற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்­டி­ருக்கும் இன­வாத அர­சி­யல்­வா­தி­களின் மீதும் பௌத்த இன­வாதம் தமது கொடூ­ரத்தைக் காட்டும். அதா­வது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை­யா­கவே பௌத்த இன­வா­தத்தை மூல­த­ன­மாகக் கொண்டு செயற்­படும் அர­சி­யல்­வா­தி­களின் நிலை­மாறும்.

ரிஷாத் பதி­யுதீன் மீது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லியே ரத்ன தேர­ரினால் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்று முன் வைக்­கப்­பட்­டது.  இதன் மீதான விவா­தத்தை ஜுன் மாதம் 18ஆம், 19ஆம் திக­தி­களில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் குறித்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தோல்வி அடைந்­து­வி­டு­மென்ற கார­ணத்­தினால் அத்­து­ர­லியே ரத்ன தேரர் 2019 மே 31ஆம் திகதி கண்டி தலதா மாளிக்­கைக்கு முன்­பாக ரிஷாத் பதி­யுதீன், ஆளு­நர்­க­ளான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்,  அஸாத் சாலி ஆகி­யோர் பதவி விலக வேண்­டு­மென்று சாகும்­வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்டார். தனது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு வலுச்­சேர்ப்­ப­தற்­கா­கவே உண்­ணா­வி­ரதத்தை மேற்­கொண்டார். இதன் மூல­மாக அத்­து­ர­லியே ரத்ன தேரர் தமது போராட்­டத்தை  பௌத்த துற­வி­களின் போராட்­ட­மாக மாற்­றினார்.    

 இந்­நி­லை­யில்தான் பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் 2019.6.02ஆம் திகதி  பகல் 12 மணிக்கு முன்னர் மூன்று பேரும் தங்­களின் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­யாது விட்டால் நாடு பூரா­கவும் பெரும் கொண்­டாட்டம் இடம்­பெறும் என்று தெரி­வித்­தி­ருந்தார். இவரின் இந்த அறி­விப்பு கண்­டியில் மாத்­தி­ர­மின்றி முழு நாட்­டையும் பதற்ற நிலைக்குள் தள்­ளி­யது. கண்டி முஸ்­லிம்கள் வீடு­க­ளுக்குள் முடங்கிக் கொண்­டார்கள்.

இந்­நி­லையில் மூவரும் தமது பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­யாது போனால் முஸ்­லிம்­களின் மீது வன்­முறைத் தாக்­கு­தல்கள் இடம்­பெறக் கூடி­ய­தொரு சூழல் ஏற்­ப­ட­லா­மென்றும் கரு­தப்­பட்­டது.

இதேவேளை, சிங்­கள அர­சி­யல்­வா­திகள் பலர் ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளிலும், வேறு குற்­றச்­சாட்­டு­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ளார்கள். கடந்த காலங்­களில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட அர­சி­யல்­வா­திகள் கூட அமைச்­சர்­க­ளாக இருந்­துள்­ளார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக பௌத்த இன­வாதம் தனது முகத்தை காட்­ட­வில்லை. உண்­ணா­வி­ரதம் போன்ற போராட்­டங்­களை மேற்­கொள்ள­வில்லை. இதன் மூல­மாக முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் மீது குற்­றச்­சாட்­டு­களை வைப்­பதன் நோக்­கத்தை புரிந்து கொள்­ளலாம்.

அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா

இந்­நி­லை­யில்தான் 2019.06.03ஆம் திகதி சிரேஷ்ட அர­சி­யல்­வாதி ஏ.எச்.எம்.பௌஸியின் தலை­மையில் அவ­ரது இல்­லத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்று கூடி­னார்கள். மிக நீண்ட நேர­மாக கலந்­து­ரை­யா­டி­னார்கள்.  பின்னர் அனை­வரும் இரா­ஜி­னாமா செய்ய முடி­வெ­டுத்­தனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால் தமது சமூ­கத்­திற்­காக இவ்­வா­ற­ன­தொரு முடி­வினை எடுப்­பார்கள் என்று நாட்டில் யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. பௌத்த இன­வா­தி­க­ளுக்கும், தேரர்­க­ளுக்கும், ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் இது பெரும் அதிர்ச்­சியைக் கொடுத்­தது.

முஸ்லிம் அமைச்­சர்கள் தமது பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­தமை ஊடாக பௌத்த துற­விகள் நினைத்தால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மாத்­தி­ர­மல்ல யாருக்கு எதி­ரா­கவும் எத­னையும் சாதித்துக் கொள்­ள­லா­மென்ற நிலை­யையும், தைரி­யத்­தையும் பௌத்த இன­வா­தி­க­ளுக்கும், தேரர்­க­ளுக்கும் கொடுத்­துள்­ளது. இது ஜன­நா­ய­கத்­திற்கு மிகப் பெரிய சாப­மா­கவே அமையும். உண்­ணா­வி­ரதம் மூல­மாக பௌத்த தேரர்கள் சாதிக்­கலாம் என்றால் நாட்டின் அர­சியல் யாப்பும், சட்­டமும், ஒழுங்கும் தேவை­யற்ற ஒன்­றாகும். அவை பௌத்த துற­விகள், இன­வா­தி­களை எதுவும் செய்து விட முடி­யா­தென்ற அகங்­கா­ரத்தை பௌத்த இன­வா­தி­க­ளுக்கும், தேரர்­க­ளுக்கும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குற்றம் செய்­த­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும். குற்றம் செய்­யா­த­வர்கள் தண்­டிக்­கப்­படக் கூடாது. இதுதான் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஏகோ­பித்த முடி­வாகும். ஆனால், அதனை சட்­டத்தில் உள்ள வழி­மு­றை­களின் ஊடா­கவே மேற்­கொள்ள வேண்­டு­மென்­பதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் நிலைப்­பா­டாகும். ஆனால், சட்டம், ஜன­நா­யகம், அவச­ர­காலச் சட்டம் ஆகிய எத­னையும் கணக்கில் எடுக்­காது, நான் சொன்னால் செய்ய வேண்­டு­மென்ற கோணத்தில் அத்­து­ர­லியே ரத்ன தேரர் மேற்­கொண்ட உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஜனா­தி­பதி, பிர­தமர், ஜன­நா­யகம் ஆகிய எல்­லா­வற்­றையும் அடி­ப­ணிய வைத்­துள்­ளது

உண்­ணா­வி­ர­தத்தின் மூல­மாக தங்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொள்­ள­லா­மென்ற நப்­பா­சையில் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் உண்­ணா­வி­ர­தங்­களை மேற்­கொண்ட போதெல்லாம் அதனை அர­சாங்கம் கணக்கில் எடுக்­க­வில்லை. ஆனால், அத்­து­ர­லியே ரத்ன தேரர் உண்­ணா­வி­ரதம் இருந்த போது, அதனை கவ­னத்திற் கொள்ள வேண்­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார். 

இதே வேளை, ஆளுநர் பதவி, அமைச்சர் பத­வி­களின் மூல­மாக முஸ்­லிம்­களை பாது­காத்துக் கொள்ள முடி­யா­தென்­பது தெளி­வா­கி­யுள்­ளது. அது­மட்­டு­மன்றி பௌத்த இன­வாத தேரர்­களை மீறி எந்தப் பேரி­ன­வாதக் கட்­சி­களின் தலை­வர்­களும், ஆட்­சி­யா­ளர்­களும் செயற்­ப­ட­மாட்­டார்கள் என்­பது மீண்டும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா நட­வ­டிக்­கையை பல­வீ­ன­மா­ன­தொரு முடி­வாக யாரும் கருதி விட­மு­டி­யாது. முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா பௌத்த இன­வா­தி­க­ளி­னதும், தேரர்­க­ளி­னதும், கூட்டு எதிர்க்­கட்­சி­யி­ன­ரதும் திட்­ட­மிட்ட பல நட­வ­டிக்­கை­களை தவிடு பொடி­யாக்­கி­யுள்­ளது. அது மட்­டு­மன்றி பெரி­யதோர் இனக்­க­ல­வ­ரத்தை தடுத்­துள்­ளது. ஆதலால், வெளிப்­ப­டை­யாக பார்க்­கின்ற போது முஸ்­லிம்­க­ளுக்கு தோல்­வி­யாக இருந்­தாலும், சமூ­கத்­திற்கு கேடு என்றால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்சி பேதங்­க­ளுக்கு அப்பால் ஒற்­று­மைப்­ப­டு­வார்கள், தீர்க்­க­மான முடி­வு­களை எடுப்­பார்கள், அமைச்சர் பத­வி­க­ளுக்­காக சமூ­கத்தை அட­மானம் வைக்­க­மாட்­டார்கள் என்று காட்­டப்­பட்­டுள்­ளன. இதனால், முஸ்லிம் சமூகம் வெற்றி பெற்­றுள்­ளது என்­பதே உண்­மை­யாகும்.

பின்­வி­ளை­வுகள்

முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா மூல­மாக கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்­பிய கதை­யா­கி­யுள்­ளது. இலங்­கையின் வர­லாற்றில் முதற் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­தி­யில்­லாத அமைச்­ச­ரவை காணப்­ப­டு­கின்­றது. அத்­தோடு, சர்­வ­தே­சத்தின் கவனம் முஸ்­லிம்­களின் மீதும் திரும்­பி­யுள்­ளது. இந்­நிலை இலங்­கைக்கு இன்னும் மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் ஒன்­றா­கி­யுள்­ளது.

இதே வேளை, நாங்கள் முஸ்லிம் அமைச்­சர்கள் எல்­லோ­ரையும் இரா­ஜி­னாமாச் செய்ய வேண்­டு­மென்று கேட்­க­வில்லை. ஹிஸ்­புல்லாஹ், அஸாத்­சாலி, ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோர்­க­ளையே இரா­ஜி­னாமாச் செய்­யு­மாறு வலி­யு­றுத்­தினோம் என்று கூட்டு எதிர்க் கட்­சி­யினர் தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அத்­தோடு அவர்­களின் பேச்­சு­களில் முன்பு இருந்த வீரி­யத்தைக் காண முடி­ய­வில்லை. முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னாமா மூல­மாக ஹிஸ்­புல்லாஹ், அஸாத்­சாலி, ரிஷாத் பதி­யுதீன் ஆகி­யோர்­களின் மீதான குற்­றச்­சாட்­டுகள் இன­வா­த­மா­னது என காட்­டப்­பட்­டுள்­ளது.

இதே வேளை, இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்­மு­றைகள் தொடர்ந்தும் அதி­க­ரிக்­கு­மாயின், அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தவ­று­மாயின் இலங்­கைக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை விதிக்கும் நிலை ஏற்­ப­ட­லா­மென்று சர்­வ­தேச இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது. இந்த அமைப்பு உலகில் பல­மிக்க முஸ்லிம் நாடு­களின் அமைப்­பாகும். இதில் 57 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்­கின்­றன. சவூதி அரே­பி­யாவில் நடை­பெற்ற இவ்­வ­மைப்பின் கூட்­டத்தில் 57 நாடு­களின் பிர­தி­நி­தி­களும் கலந்து கொண்­டி­ருந்­தார்கள். இதன்­போது இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­பற்றி ஆரா­யப்­பட்­டுள்­ளது. இதன் பின்­னரே இந்த அறி­விப்பை சர்­வ­தேச இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமைப்பு செய்­துள்­ளது.

முஸ்லிம் அமைச்­சர்­களின் இரா­ஜி­னா­மாவை யாரேனும் இன­ரீ­தி­யாக கையாள முற்­ப­டு­வார்­க­ளாயின் அதனை தமிழ் மக்­களும், தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளு­மா­கிய நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் தங்­க­ளது அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்ள வேண்­டு­மென்று மகா சங்­கத்­தினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­லி­ருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை இடம்பெற்றிருக்கக் கூடாது. குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதனை அரசுக்கும், பாதுகாப்பு பிரிவுக்கும் நிரூபியுங்கள். நாட்டின் இன்றைய நிலையை புரிந்து கொள்ளாவிடின் நாட்டிற்கு அழுத்தங்கள் ஏற்படும். நாட்டின் அமைதி குலைந்து பாரிய அபாயம் ஏற்படும் என்றும் மகா சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும், பௌத்த இனவாதத்தின் பின்புலத்தில் இனவாத அரசியல்வாதிகள் உள்ளமையால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரைக்கும் முஸ்லிம்களின் மீது மட்டுமன்றி ஏனைய சிறுபான்மையினர் மீதும் இனவாதக் கருத்துகள் முன் வைக்கப்படலாம்.

இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பால் விடுதலையான கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் தமது கடும்போக்கு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது. 

முஸ்லிம்களின் பாதுகாப்பு, இனவாதம், தேவையற்ற கைது என்பவற்றை மையப்படுத்தி அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தாலும், இதன் பின்னர் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்காதென்பதற்கு உத்தரவாதமில்லை. குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டாலும், ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துக் கொண்டாலும் ஆதாரங்கள் முறையாக முன் வைக்கப்படவில்லை என்பதன் மூலமாக குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள முஸ்லிம் விரோதத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

 

http://www.virakesari.lk/article/57846

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை! https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html 
    • உங்களின் அடுத்த கேள்விக்குப் பதில், இந்த விடயத்தை நான் சொன்னது போல இலங்கையில் வைத்தே இந்த நபரின் குடும்பம் செய்யலாம். இல்லையாயினும், ஒரு பிரிதானிய பிரஜை, அல்லது வதிவாளர் வெளிநாட்டில் ரேப் போல கடும் குற்றம் இழைத்தார் என்று பிரிதானிய பொலீசில் முறையிட்டால் நிச்சயம் அதை விசாரிப்பார்கள். ஒரு குற்றம் எங்கே வழக்காடப் படுகிறது என்பது பின்வரும் வழிகளில் தீர்மானிக்கப்படும். 1. எங்கே குற்றம் நிகழ்ந்தது? 2. குற்றத்துக்கான சாட்சியங்கள், சாட்சிகள் எங்கே உளர்? 3. குற்றவாளி எங்கே வசிக்கிறார்? முதலில் இதை பிரிதானிய பொலீஸ் விசாரிக்கும். இந்த நபர், மகளை இண்டர்வியூ செய்வார்கள். முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் CPS ற்கு அனுப்புவார்கள். அவர்கள் இந்த வழக்கை எங்கே விசாரிப்பது பொருத்தம் என தீர்மானிப்பர்கள். அப்போ இலங்கையின் நிலைமையை காட்டி, வழக்கை இங்கேதான் விசாரிக்க வேண்டும் எனக் கோரலாம். மீறி இலங்கை என CPS முடிவு செய்தால். இதை இலங்கை அரச வக்கீலுக்கு அனுப்பி, FCO மூலம் வழக்கை நியாயமாக நடத்த அளுத்தம் கொடுப்பார்கள். அதுவும் நடக்காவிடின், சாட்சிகளை யூகேயிற்கு எடுத்து, இங்கேயே வழக்கை நடத்துவார்கள்.
    • இந்த பதின்ம வயது சிறுமியான  பெண்ணை வன்முறை மூலம் கற்பமாக்கிய ஒரு முதியவருக்கு கட்டாய கலியாணம் செய்து வைக்குமாறு சொல்லும் நீங்களும் அந்த பாதக  செயலை செய்தவரை போன்ற பாதக செயலையே செய்கிறீர்கள். உங்கள் அடாத்தான பஞ்சாயத் தீர்ப்பு எந்த விதத்திலும் இரக்கம் இல்லாதது. அந்த பெண்ணை பற்றி உங்களுக்கு கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லையே?