Jump to content

என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்ணெதிரே மருத்துவமனை எரிந்தது...!காயப்பட்டவர்கள் சிதறிப் பலியாகினர்...! - முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்

_20185_1559302041_A9CA4F88-FD35-4A93-80AB-67CFD3EC89A7.jpeg

முள்ளிவாய்க்கால் மருத்துவப் போராளி அலன்

விடுதலைப் புலிகளின் அனைத்துப் பிரிவுகளையும்போல மருத்துவப் பிரிவும் இறுதிநாள் வரை மக்களுக்காக பணிசெய்த பிரிவுஓர் அவசர ஊர்திக்குள் வைத்து இறுதியாக சத்திரசிகிச்சை செய்த வரலாற்றையும் தன் மீது பதிந்துகொண்ட பிரிவு இதுஅவ்வாறான பெரும் பணியைச் செய்துதமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மட்டுமல்லாதுதமிழீழ மக்கள் மட்டுமல்லாது யாருக்கு எதிராக போர்க்கருவி ஏந்தி களமாடினார்களோ அந்த எதிரிகளையும் கூடதன்நிறைவோடு பாதுகாத்தவர்கள் எம் மருத்துவப்போராளிகள்அவ்வாறாக இறுதி நாள் வரை தமிழீழவிடுதலைப் புலிகளின் இறுதியான மருத்துவமனையைஅதாவது போராளிகளால் நிர்வகிக்கப்பட்டமருத்துவமனையை பொறுப்பாக இருந்து களப்பணியாற்றியமருத்துவப் போராளி அலன்  அவர்களின் நேர்காணல்.

மருத்துவத் துறையில் உங்களின் போராளிகள் மற்றும்மக்களுக்கான மருத்துவப் பணிகள் எப்படி இருந்தன?

பெரும்பாலான பணி எனக்கு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையில் தான் இருந்ததுபெரும் காலங்கள்அங்கே சத்திர சிகிச்சைகூடங்களிலையே மக்களுக்கானசிகிச்சைகளை வழங்கி வந்தேன்அத்தோடு கடற்புலிகளின்படையணி மருத்துவராகவும் கடமையாற்றினேன்அவ்வாறான காலங்களில் படையணி மருத்துவமனைகளானநெய்தல் மற்றும் முல்லை ஆகிய படையக மருத்துவமனைகள்இயங்கியபோது அம் மருத்துவமனைகளிலும் என் பணிவிரிந்திருந்தது.

மருத்துவர் பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை பற்றிகூறுங்கள்.

உண்மையில் எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பெரும்பாலும்மருத்துவ வளங்கள் குறைவுஅதாவது மருத்துவர்களோஅல்லது மருத்துவப் பொருட்களோ எமக்குத் தாராளமாகக்கிடைப்பதில்லைஅதனால் மக்களுக்கான மருத்துவப்பணிகளை சீர்படுத்துவதற்காக எமது தலைமையின்ஆலோசனையின் பெயரில் நவீன தொழில்நுட்பங்கள்கொண்ட மருத்துவமனைகளை 1996 ஆம் ஆண்டுதொடங்கினோம்அங்கே வாழ்ந்து வந்த அரசமருத்துவர்களின் ஆலோசனைகளும்உதவிகளும்பெறப்பட்டு போராளி மருத்துவர்களை வைத்து நிர்வகிக்கத்தொடங்கினோம்.

இம் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மக்களுடன்நெருங்கிப் பழகி ஆற்றுகைப்படுத்தல் முறைமை என்பதுஉச்சமாக இருக்கும்மருந்தைவிட ஒருவரின் மனதில் 'நீவருத்தக்காரன் இல்லைஎன்ற நினைப்பை ஊட்டினாலேபெரும்பாலான நோய்கள் இல்லாது போய்விடும்இதுபண்டைய காலங்களில் இருந்து வந்த மரபுஅதைப் போலஅங்கே பணியாற்றிய அரச மருத்துவர்களாக இருந்தாலும்சரி போராளிகளாக இருந்தலும் சரி மக்களை நெருங்கிநின்றார்கள்.

பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை அரசமருத்துவமனைகளை விட சிறப்பாக இயங்கியதுஅதுஎவ்வாறு சாத்தியமானது?

இது தேசியத் தலைவரின் உன்னத நோக்கங்களில் ஒன்றாகஇருந்ததுபெரும்பாலான அரச மருத்துவமனைகளில்இல்லாத நவீன வசதிகள் அங்கே இருந்தனசத்திரசிகிச்சைக் கூடம் நவீனமாக உருவாக்கப்பட்டதுஇலவசமாக மக்களுக்கான மருத்துவத்தை இதனூடாககொடுக்க முடியவில்லை என்றாலும் தெற்கோடுஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவுடனானமருத்துவசிகிச்சைகளை மக்கள் பெறக் கூடியதாகஇருந்தது.

அரச மருத்துவர்கள் போராளிகளுடன் இணைந்துபணியாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

இல்லை என்றே நான் கூறுவேன்அவர்களும்நாங்களும்இணைந்துதான் அதிகமான காலங்களில் பணியாற்றிஇருக்கின்றோம்அங்கே பணியாற்றிய பல மருத்துவர்களின்மிகப் பெரும் பங்கு எமது போராளி மருத்துவர்களைஉருவாக்குவதில் இருந்ததுஅதேநேரம் அவர்கள்மக்களுக்கான மருத்துவப் பணியிலோபோராளிகளின்மருத்துவப் பணியிலோ தயக்கமின்றி ஈடுபட்டார்கள்ஆனால்அவர்களின் நிர்வாகத்துக்குள் நாமோஎமதுநிர்வாகத்துக்குள் அவர்களோ கட்டமைப்பு ரீதியாகபங்கெடுத்தது இல்லைமக்கள் பணிக்காக நாம்இணைந்திருந்தோம்

மருத்துவ தடைபொருளாதாரத் தடை என்பன இறுக்கமாகஇருந்த காலங்களில் மருத்துவமனையை எவ்வாறுஇயக்கினீர்கள்?

இது மக்களுக்காக எம் மருத்துவப் பிரிவால் இயக்கப்பட்டமருத்துவமனைஅதனால் எமது படையகமருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் கடல்மார்க்கமாக கொண்டு வருவதைப் போலவே அப்பிரச்சினைகளை நாம் கையாண்டோம்அதற்காக எமதுபிரிவுக்குள் மருத்துவக் களஞ்சியம் மற்றும் கொள்வனவுப்பகுதி என்பன பிரத்தியேகமாக இயங்கின.

பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை தனியார்மருத்துவமனையாக இயங்கிதால் (இலவசமாக இயங்காதநிலையில்)அனைத்து வகையான மக்களும் சிகிச்சையைபெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை அதை எவ்வாறுகையாண்டீர்கள்?

எமது விடுதலைப் போராட்டம் மக்களுக்கானசுதந்திரத்துக்கானதுஇதில் சிகிச்சைக்காக வரும்மக்களிடம் நாம் பணத்தை மிக முக்கியமாகஎதிர்பார்க்கவில்லைமிக அவசரமான அல்லது முக்கியமாகசெய்ய வேண்டிய சிகிச்சைகளை நாம் இலவசமாகவேசெய்தோம்அதே நேரம் அனைத்து மக்களும் சிகிச்சைபெறக் கூடியதாக தியாக தீபம் திலீபன் இலவசமருத்துவமனையை உருவாக்கி அதனூடாக அனைத்துவகைமக்களும் சிகிச்சை பெறக் கூடிய சூழலை உருவாக்கினோம்.

இறுதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போதுபொன்னம்பலம் மருத்துவமனை மீது இலங்கை அரசின்வான்படை தாக்குதலை மேற்கொண்டதுஅப்போது அங்கேஎன்ன நடந்தது?

புதுக்குடியிருப்பு மருத்துவர் பொன்னம்பலம் நினைவுமருத்துவமனையைப் பொறுத்தவரை சத்திரசிகிச்சை கூடம்விடுதிகள்வெளிநோயாளர் சிகிச்சை பகுதி , நிர்வாகப் பகுதிஎன பல பகுதிகளை கொண்டிருந்ததுஅதில் இறுதி நேரம்எமது மருத்துவமனைக்கு தாக்குதல் நடக்கலாம் என்று எமதுவான் தாக்குதல் கண்காணிப்பு பிரிவினால்அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக சத்திரசிகிச்சைக்கூடத்தை உடனடியாக நாம் இரணைப்பாலைப் பகுதியில்சத்திரசிகிச்சைக் கூடத்தை இரண்டு பிரிவுகளாக பிரித்துஅங்கிருந்த இரு வீடுகளுக்கு மாற்றினோம்

அதேநேரம்மல்லாவிஅக்கராயன்குளம்முல்லைத்தீவுகிளிநொச்சிமற்றும் நட்டாங்கண்டல் போன்றமருத்துவமனைகளை ஒன்றிணைத்து மாத்தளன்பாடசாலையில் ஒரு மருத்துவமனையையும் இயக்கினோம்அங்கே தங்கி இருந்த நோயாளர்களை இடம் மாற்றுவதில்தாமதம் ஏற்பட்டிருந்ததுஅந்த நிலையில் தான் எமதுமருத்துவமனை மீது சிங்கள வான்படை தாக்குதலைசெய்ததுஅதில் 60 இற்கும் மேல் மக்கள் சாவடைந்தார்கள்பலர் காயமடைந்தார்கள்.

இத்தாக்குதல் திட்டமிட்டு பொன்னம்பலம் நினைவுமருத்துவமனைக்கு மட்டுமா அல்லது அரசமருத்துவமனைகளுக்கும் நடாத்தப்பட்டதா?

மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சிங்களப்படைகளுக்கு ஒன்றும் புதிய விடயமல்லவழமையாகவேசிங்கள தேசம் செய்கின்ற விடயம்தான்அதுவும்மருத்துவமனைகள் என்று அடையாளமிடப்பட்டிருந்தபோதும் ( சிவப்பு நிற  குறியீடுஎந்த மனச்சாட்சியும்இன்றி நோயாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதுசிங்களப்படைகள்.

அத் தாக்குதல்களில் மருத்துவர்கள்நோயாளர்கள் அல்லதுபணியாளர்கள் சாவடைந்திருக்கிறார்களா?

ஓம்..., பல தடவைகள் நடந்திருக்கின்றதுஇறுதிச்சண்டையில்கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை நாம் எடுத்துக் கொண்டால்கிளிநொச்சி மாவட்டமருத்துவமனை தொடக்கம் தர்மபுரம்புதுக்குடியிருப்புஉடையார்கட்டுவள்ளிபுனம் எனத் தொடர்ந்து இறுதியாகமுள்ளிவாய்க்கால் வரை தாக்குதலை நடத்தியதுஇனவாதப்படைஇவ்வாறான தாக்குதல்களில் பலமருத்துவர்கள் சாவடைந்திருக்கிறார்கள்அதிலும் பலமருத்துவ போராளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சைவழங்கிக் கொண்டிருந்த போது நடத்தப்பட்ட எறிகணைத்தாக்குதல்களில் வீரச்சாவடைந்தார்கள்.

குறிப்பாக மேஜர் அல்லிசெவ்வானம்இறையொளி என்றுஎமது போராளி மருத்துவர்கள் இறுதிச் சண்டை நேரம்மக்களுக்கான மருத்துவப் பணியில் அதுவும்சத்திரசிகிச்சைக் கூடத்தில் சத்திரசிகிச்சை செய்துகொண்டிருக்கும் போது வீரச்சாவடைந்தார்கள்.

இவ்வாறான மக்கள் பணியில் நின்ற போராளி மருத்துவர்கள்மீதான தாக்குதல்களை சிங்கள தேசம் விடுதலைப்புலிகள்மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருந்ததுஇதுஉண்மையா?

ஓம்புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில்முல்லைத்தீவு மாவட்ட , கிளிநொச்சி மாவட்டமல்லாவிஆதார வைத்தியசாலை ஆகியவை இயங்கிக் கொண்டிருந்தபோது இராணுவம் புதுக்குடியிருப்புப் பகுதியைக்கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததுஅப்போதுமருத்துவமனை வளாகத்துக்குள் திட்டமிட்டு சிங்களப்படைகள் தாக்குதலை நடத்தினஅந்த நிலையில் பலநோயாளர்கள் இறந்து போனார்கள்.

நான் அப்போது இரணைப்பாலை மருத்துவமனையில்பணியில் நின்றேன்எனக்கு தகவல் ஒன்று வந்ததுஉடனடியாக மருத்துவமனையை பின் நகர்த்துமாறுபணிக்கப்பட்டதனால் அங்கே பொறுப்பாக நின்ற மருத்துவஅதிகாரிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துபின் நகர்ந்திருந்தனர்அங்கிருந்து வெளியேறும்போது பலமருந்துகளைத் தவற விட்டுள்ளனர் என்று அத்தகவல்தெரிவித்ததுஅதனால் அவற்றை எடுத்து வருவதற்காக நான்இன்னும் ஒரு தம்பியை அழைத்துக் கொண்டுமருத்துவமனைக்கு சென்றிருந்தேன்

அப்போது அங்கே சிறுவர்கள்பெரியவர்கள் என்றவித்தியாசம் இன்றி 20 க்கும் மேலான மக்கள் இறந்துபோயிருந்தார்கள்அவர்களைக் கடந்தே நான் மருந்துக்களஞ்சியம்மருத்துவர் விடுதி என அனைத்துஇடங்களையும் அலசி அம்மருந்துகளை எடுத்து வந்தேன்ஆனால் சிங்கள வல்லாதிக்கத்தின் ஊடகவியலாளரானசமன்குமார ராமவிக்ரமஅடுத்த நாள் அரச செய்திஊடகமான ரூபவாகினியில் விடுதலைப் புலிகள் தங்கி நின்றமருத்துவமனை வளாகம் மீது நடந்த தாக்குதலில் 12 விடுதலைப் புலிகள் பலியாகினர் என்று அறிவித்தார்.

இந்த இடத்தில் ஒன்றை நான் உறுதியாகக் கூற முடியும்எம்போராளிகள் இறுதி நேரத்தில்கூட வீரச்சாவடைந்தபோராளிகளின் வித்துடல்களை கைவிட்டு வருவதைவிரும்புவதில்லைஅதேநேரம் புதுக்குடியிருப்புமருத்துவமனை மீது சிங்களப்படை தாக்குதல்நடத்தியபோது எமது படையணிகள் தங்களது நிலையைபுதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதிக்கு அருகில்அமைத்திருந்தார்கள்இந்த நிலையில் எம் போராளிகள்வீரச்சாவடைந்திருந்தால் அவர்களது வித்துடலை கைவிட்டுவர யாரும் நினைக்க மாட்டார்கள். 12 வித்துடல்களையும்கைவிட்டு வருமளவுக்கு போராளிகள் என்றும் இல்லைஅதை விட ரூபவாகினி காட்டியதைப் போல அங்கே எந்ததுப்பாக்கிகளும் இருக்கவில்லைதளபாடங்கள் மட்டுமேஉடைந்த நிலையில் சிதைந்து கிடந்தது.

அதை விட இத் தாக்குதலில் மக்கள் தான் சாவடைந்தார்கள்என்பதற்கு நான் ஒரு சாட்சி.

புதிதாக மருத்துவமனைகள் அமைக்கப்படும்போது புவியியல்நிலை தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்துவதில்லையா?

எங்கெல்லாம் மக்களுக்கான மருத்துவமனைகளைநிறுவுகிறோமோ அந்த இடத்தின் புவியியல் நிலையை (புPளு– புடழடியட Pழளவைழைniபெ ளுலளவநஅ ) சர்வதேசசெஞ்சிலுவைச் சங்கம் (ஐஊசுஊ ) ஊடாகக் கொடுப்போம்அதை விட கூரைகளில் சிவப்பு நிற குறியீட்டைவரைந்திருப்போம்இவற்றை வைத்துக் கொண்டேதிட்டமிட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்சிங்களப்படைகள்என்னைப் பொறுத்தவரை நாம்அமைவிடத்தை அடையாளப்படுத்திய பின்னரே அதிகமாகதாக்குதலை நடத்தினார்கள்.

நான் இரணைப்பாலையில் என் மருத்துவமனையை நிறுவிஒரு வாரமாக மக்களுக்கான சிகிச்சையை வழங்கி வந்தபோது அங்கே இருந்த தற்காலிக கொட்டகைகளில்நோயாளர்களை படுக்க வைத்திருந்தேன்அந்த ஒரு வாரமும்எந்தத் தாக்குதல்களும் நடைபெறவில்லைஆனால் ஒருவாரம் கழித்து மருத்துவமனையின் நிலையை அறிவித்து 3 ஆவது நாள் என் பொறுப்பில் இருந்த அம்மருத்துவமனைக்கும் தாக்குதல் நடத்தப்பட்டதுஉண்மையில் அதன் அமைவிடத்தைக் கொடுத்ததுமட்டும்தான் இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும்.

அது மட்டுமல்ல மாத்தளனில் இருந்த மருத்துவமனைக்குநேரடியாக உந்துகணையால் (சுPபு ) தாக்குதல்நடத்தப்பட்டதுஇவ்வாறாக அடையாளப்படுத்தப்பட்டபின்பே மருத்துவமனைகள் அதிகமாகத் தாக்கப்பட்டனஅதுவும் சிங்கள அரசினால் உயர் பாதுகாப்பு வலயம் என்றுஅறிவிக்கப்பட்ட இடங்களில் அதிகமாக நடந்ததுஇதுஇறுதி முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது

உயர் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்டஇடங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்களின்நிலை?

இலங்கை அரசு உயர் பாதுகாப்பு வலயம் 1,2,3,4 எனபடிப்படியாக குறிப்பிட்ட பிரதேசங்களை அறிவிக்கிறதுஅதனால் அப் பிரதேசங்களை நோக்கி மக்கள் நகர்ந்துசென்றார்கள்அதற்குள் தாக்குதல் நடக்காது என்று நம்பிச்சென்ற மக்கள் மீது சரமாரியான தாக்குதலை செய்துமக்களை கொன்று குவித்தார்கள் சிங்களப்படைகள்ஒவ்வொரு பாதுகாப்பு வலயங்களும் முழுமையாக தாக்கிஅழிக்கப்பட்டதுகுடும்பம் குடும்பமாக மக்கள் செத்துக்கொண்டிருந்த கொடுமையை அரங்கேற்றி இருந்ததுசிங்கள அரசு.

உயர்பாதுகாப்பு வலயம் 1 என்று அறிவிக்கப்பட்டஉடையார்கட்டு பிரதேசத்தை இலக்கு வைத்து பாதுகாப்புவலயம் என்று அறிவித்த மறுநாளே தாக்குதலைசெய்தார்கள்அப்போது உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் மல்லாவி மருத்துவமனை இயங்கிக்கொண்டிருந்ததுஅம் மருத்துவமனையை குறி வைத்துபெரும் தாக்குதல் ஒன்றை ஒருங்கிணைத்ததுசிங்களப்படைகள்உடையார்கட்டுச் சந்தியில் இருந்துபுதுக்குடியிருப்பு நோக்கி செல்லும் வீதியில் ஒருகிலோமீற்றர் தூரத்துக்குள் 104 ( சரியான தொகைநினைவில்லைமக்களை கொன்று குவித்ததுபாதுகாப்புவலயத்துக்குள் பாதுகாப்புத் தேடி போன மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முயன்றார்கள்அப்படியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்த மக்களைசாகடிக்கும் திட்டமிட்ட தாக்குதலை தேவிபுரம் பகுதியில்வைத்து செய்கிறது சிங்களப்படைஅப்போது 20 பேருக்குமேலான மக்கள் அந்த இடத்திலேயே சாவடைந்தார்கள்காயமடைந்தவர்களை நான் முதலுதவி செய்துமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தேன்இறந்தஉடல்களில் பொறுப்பெடுக்கப்படாத வெற்றுடல்களைதென்னை மரங்களுக்கு கீழே பசளை போடுவதற்காகவெட்டப்பட்ட கிடங்குகளில் போட்டு அடக்கம் செய்தேன்அதைப் போல பல சம்பவங்கள் உயர்பாதுகாப்புவலயங்களில் நடந்தது

இந்த இடத்தில் நான் ஒன்றை கூற வேண்டும்இவ்வாறுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை சிங்களம்செய்து கொண்டிருந்த போது நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதை இவ்வுலகம் உணர வேண்டும்.

இறுதி நாட்களில் தென்தமிழீழத்தில் இருந்த போராளிகள்ஒரு விடயத்துக்காக தலைவரிடம் அனுமதிகேட்டிருந்தார்கள்அதாவது தென் இலங்கை பகுதிகளில்வாழும் சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடாத்தினால்எம்மக்கள் மீதான தாக்குதலை எதிரி கொஞ்சமாவதுகுறைக்க முனைவான் என்றும் அதனூடன திருப்புமுனையுடன் கூடிய கால அவகாசம் ஒன்று எமக்கு வேறுதயார்படுத்தல்களுக்குக் கிடைக்கும் என்றும்அதே நேரம்தென்னிலங்கையில் சிங்கள மக்கள் போரை நிறுத்தச்சொல்லி அரசுக்கு அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என்றும்அவர்கள் தெரிவித்து சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தஅனுமதி கேட்டார்கள்

தலைவரோ எம் விடுதலை அமைப்பின் போரியல் நெறிக்குஅமைவாக எதிரிகளுடன் மட்டும் சண்டை இடுங்கள்சிங்களவல்லாதிக்க அரசுடன் அல்லது சிங்கள படைகளுடன்மட்டும் சண்டையிடுங்கள்நிராயுதபாணிகளாக இருக்கும்அப்பாவி சிங்கள மக்கள் மீது ஒரு சிறு காயத்தையும்ஏற்படுத்தும் தாக்குதல்களைக் கூட நடத்த வேண்டாம் என்றுபணித்தார்இவ்வாறுதான் எம் தலைவர் மக்களுக்கானபோராட்டத்தை முன்னெடுத்தார்சிங்கள அரசைப் போலகொடூர முகம் கொண்டு அப்பாவி மக்களைகொன்றொழிக்கவில்லைஅதே வேளை எம் பராமரிப்பில்எத்தனை சிங்களப் படை வீரர்கள் இருந்தார்கள்அவர்களை எவ்வாறு நாம் பராமரித்தோம் என்பதைஇச்சிங்கள அரசு அறியாது

விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவு காயப்பட்ட சிங்களஇராணுவத்தை பாதுகாத்தது பற்றி கூறுங்கள்?

நிச்சயமாக விடுதலைப் புலிகளின் மருத்துவர்களுக்குதலைவர் வலியுறுத்துவது இதைத்தான்எதிரி என்றாலும்அவன் நோயாளியாக உங்களிடம் வந்தால் எங்கள்போராளிகளைப் போலவே பாதுகாக்க வேண்டும் என்றுஅதைப் போலவே எங்களை கொல்வதற்காக துப்பாக்கியோடுகளத்தில் நின்றவர்கள் காயப்பட்டு வந்தபோது அவர்களையும்எம் போராளிகள் போலவே பாதுகாத்தோம்

இறுதிக் காலங்களில் என்னிடம் 6 சிங்கள இராணுவத்தினர்சிகிச்சை பெற்றார்கள்அதில் இருவர் மேஜர் தரஅதிகாரிகளாகவும்ஒருவர் லெப்டினன்ட் தரஅதிகாரியாகவும்மிகுதியானவர்கள் கோப்ரல் தரபடையினராகவும் இருந்தார்கள்அதை விட இவர்கள்என்னிடம் சிகிச்சைக்காக வந்த போது வயிறுதலைஎன்பவற்றில் பெரும் காயங்களுடனே வந்தார்கள்இவர்கள்பூநகரி பிரதேசத்தில் நடந்த சண்டையில் காயமடைந்துகாப்பாற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

இவர்களின் சிகிச்சைகளின் பின் அவர்களை பாதுகாக்கும் பிரிவினரால் பொறுப்பெடுக்கப்பட்டிருந்தார்கள்அதில்மூவர் .சி.ஆர்.சிஊடாக சிங்கள அரசிடம்கையளிக்கப்பட்டார்கள்ஏனைய மூவரும் விடுதலைசெய்வதற்கான நிர்வாக வேலைகள் நடந்து கொண்டிருந்தகாரணத்தால் தனிப்பட்ட முகாம் ஒன்றில்தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்

இவர்கள் மட்டும்தானா இருந்தார்கள்?

இந்த ஆறு பேரும் என்னிடம் சிகிச்சை பெற்றவர்கள்அதைவிட எம் மருத்துவர்கள் பலரிடம் சிகிச்சை பெற்ற பலஇராணுவ வீரர்களை நாம் விடுவித்துள்ளோம்அதேநேரம்விடுவிப்பதற்கு தயாராக சிலரையும் சிறைக் கைதிகளாகபலரையும் விட்டுச் சென்ற மக்களின் வாழ்விடங்களில் தங்கவைத்திருந்தோம்எனக்குத் தெரிய பலர் அங்கேஇருந்தார்கள்

உங்களிடம் மருத்துவ பொருட்கள் அல்லது உபகரணங்கள்போதுமான அளவில் இருந்ததா?

இல்லைஉணவுப் பொருட்களுக்கு இருந்த தடையைப்போலவே மருந்துப் பொருட்களுக்கும் தடை விதித்திருந்ததுசிங்கள அரசுஅதனால் எம்மிடம் மருத்துவப் பொருட்கள்கையிருப்பில் இல்லைஅதே நேரம் கைவிடப்பட்டபுதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து நான் மீட்டுவந்த மருந்துப் பொருட்களை சிக்கனமாக பாவித்துவந்ததால் இறுதி வரை கொஞ்சமேனும் இருப்பில் இருந்ததுஅதை விட மருத்துவ இருப்பு என்பது அறவே இல்லை

வலிநிவாரணிதொற்றுநீக்கிகள் என்று எதுவுமே இல்லைஅதுவும் சிறுவர்களுக்கான தொற்றுநோய்த் தடுப்புக்குளிசைகள் எம்மிடம் கொஞ்சம் கூட இல்லாமல்போயிருந்ததுஆனால் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்இருந்து எடுத்து வந்த மருந்துகள் எமக்கு பெரிதும் உதவினஅதை விட எலும்புகள் பொருத்துவதற்கா பாவிக்கும் நுஒவநசயெட குiஒயவழைகள் கையிருப்பு இல்லாதநிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்துஎடுக்கப்பட்டதால் இறுதி நாட்கள் வரை மிகப் பயனுள்ளதாகஇருந்தது.  

சிங்கள அரசின் பொருளாதாரத் தடையால் மக்கள்உணவுக்கு பெரிதும் சிரமப்பட்டிருப்பார்களே.?

நிச்சயமாகநான் சிறுவயதில் படித்த ஒரு விடயத்தை இந்தசண்டை எனக்கு நினைவூட்டியது என்பதை விட நேரடியாககாட்டியது என்றே கூறலாம்அதாவது பண்டமாற்றுப்பொருளாதாரம் என்று ஒரு விடயத்தை ஆதிகால மக்கள்செய்திருந்தார்கள்அதாவது பணம் என்ற பரிமாற்றுச்சாதனத்தைக் கண்டுபிடிக்க முதல் பொருட்களைக்கொடுத்து பொருட்களை வாங்கும் முறைமை இருந்ததுஅவ்வாறான முறைமையையே எம் மக்கள் இறுதியாககையாண்டார்கள். “ஒரு கிலோ அரிசி தாங்கோ நாங்கள்உங்களுக்கு பங்கர் வெட்டித் தாறம் “ என்று கேட்டமக்கள்தான் அதிகமாக இருந்தார்கள்உழைப்புக்கு பணம்வாங்க மறுத்தார்கள்பணம் அங்கே பெறுமதியற்ற வெற்றுத்தாளாகவே இருந்ததுஒரு சோற்றுப் பருக்கைதான் அங்குபெறுமதியாக காணப்பட்டதுஇவ்வாறுதான் மக்கள்வாழ்ந்தார்கள்உண்ண உணவில்லை.

தமிழீழ நிர்வாக சேவை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம்ஆகியவை மக்களுக்காக கஞ்சித் திட்டம் ஒன்றைநடைமுறைப்படுத்தியதால்தான் பசியில் சாவடைந்தமக்களின் தொகை கட்டுப்பாட்டுக்குள் இருந்ததுஇல்லைஎன்றால் பசியில் அங்கிருந்த அனைவருமேஇறந்திருப்பார்கள்.

இறுதி நாட்களில் காயப்பட்டவர்களை எவ்வாறுகையாண்டீர்கள்?

உண்மையில் மிக இடர் சுமந்த காலம் அதுசண்டைதொடர்ந்து நடந்து நாங்கள் முள்ளிவாய்க்காலை நோக்கிநகர்ந்து வந்துவிட்டோம்நான் வட்டுவாகல் பகுதியில்இருந்த இரண்டு வீடுகளை சத்திரசிகிச்சைக் கூடமாகமாற்றி இருந்தேன்அதனை சுற்றி சிறு கிடங்குகளைபதுங்குகுழி போல உருவாக்கிமேலே தறப்பாளைகட்டிவிட்டு காயப்பட்டவர்களை படுக்க வைத்திருந்தோம்இதுதான் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை.

எவ்வகையான காயங்களை நீங்கள் கையாண்டீர்கள்?

எல்லா வகையான காயங்களும் வந்தனநான் இறுதியாகவட்டுவாகலுக்கு மருத்துவமனையை மாற்றுவதற்கு முன்னால்முள்ளிவாய்க்காலில் இருந்த போது அங்கே பொஸ்பரஸ்குண்டுத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்தனஅதைவிட இரணைப்பாலையில் இருந்த போதே கொத்துக்குண்டுத்தாக்குதலால் ஏற்பட்ட காயங்கள் வந்திருந்தனஇறுதிக்காலத்தில் கூடுதலாக எல்லாவகையான ஆயுதங்களையும்இராணுவம் பயன்படுத்தி இருந்தான்.

இறுதிக் காலங்களிலும் மருத்துவமனையில் தங்கிநின்றார்களா ?

காயப்பட்டவர்களை கொண்டு வந்து மருத்துவமனையைசுற்றி கிடத்திவிட்டு உறவினர்கள் போய்விடுவார்கள்அதனால் அங்கிருக்கும் காயங்களின் தன்மையை ஆய்வுசெய்து நாம் சிகிச்சை வழங்குவோம்உதாரணமாகஒருவருக்கு கால்களை கழட்டினால் உயிர் தப்ப முடியும்என்றால் உடனடியாக அதை செய்தோம்சிகிச்சை செய்தும்பலனில்லை உயிர் பிரிவது நிச்சயம் எனக் கருதும்காயக்காரர்களை இரத்தத்தை கட்டுப்படுத்திஅவர்களுக்கான முதலுதவிச் சிகிச்சைகளைச் செய்து விட்டுஏனைய காயக்காரரை கவனிப்போம்வேறு ஒன்றையும்செய்ய முடியாத நிலை.

மிகக் கொடுமையான சம்பவம் ஒன்றை இப்போது பகிரவேண்டும்ஓர் இளைஞன் காயப்பட்டு வந்த போது அவனுக்குகால் மற்றும் கைகளில் காயம் இருந்ததுஅதனால்சத்திரசிகிச்சை செய்து அவரை அதற்குப் பின்னானசிகிச்சைகளுக்காக அருகில் இருந்த மாமரம் ஒன்றுக்கு கீழ்சிறிய மருத்துவ பதுங்குகுழிக்குள் படுக்க வைத்திருந்தேன்அப்போதுதிட்டமிட்ட தாக்குதலை மருத்துவமனை மீதுசிங்களப் படைகள் செய்தனஅத் தாக்குதலில் 50 இற்கும்மேலான மக்கள் இறந்தனர்அதேநேரம் 6 போராளிகள்வீரச்சாவடைந்தனர்பல மக்கள் மீண்டும்காயமடைந்திருந்தனர்அதில் அவனும் ஒருத்தன்.

அவன் வயிற்றில் காயப்பட்டிருந்தான்.

“ டொக்டர் என்னைக் காப்பாத்துங்கோ பிளீஸ்...” என்றுகத்தியபடி காயப்பட்டிருந்த காலை இழுத்தபடி ஓடிவருகிறான்இரு கைகளும் வயிற்றில் இருந்து வெளியேவிழுந்த குடலை விழுந்துவிடாமல் பிடித்தபடி இருக்கின்றனஎனக்கு அக் காட்சியை நினைத்தால் இப்போதும் மனம் ஒருநிலையில் இருக்காதுஅப்போது எங்களின் போராளிமருத்துவரான தணிகை அவர்களும் பணியில் இருந்தார்அதனால் அந்த இளைஞனை உடனடியாக சத்திரசிகிச்சைடுயியசழவழஅல செய்வதற்காக தயார்படுத்தினேன்மருத்துவர் தணிகையுடன் இணைந்து நானும் அந்தஇளைஞனுக்கான சத்திரசிகிச்சையை செய்து முடித்தோம்அதே நேரம் அந்த நேரம் அந்த சத்திரசிகிச்சைக்கு இரத்தம்தேவைப்பட்டதுஅதை தருவதற்கு அங்கே யாராலும்தயாராக இல்லாத நிலையில் மருத்துவப் போராளிஉயர்ச்சியிடம் இருந்து குருதி பெறப்படுகிறதுஅக்குருதியைவைத்தே அவ்விளைஞனை காப்பாற்றினோம்.

இதைப் போலவே இன்னும் ஒன்றுசிறு பிள்ளை ஒன்றுதலையில் காயப்பட்டபடி என் மருத்துவமனைக்குகொண்டுவரப்படுகிறாள்அவளைக் கொண்டுவந்தது அவளதுபேரன்அவர் வந்து கத்தி அழுதபடி என் பேத்தியைகாப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார்பரிசோதித்த நான்அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்ஆனால்முடியவில்லைஅவள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளைத் தூக்கி வந்த அந்த ஐயாவிடம்தெரியப்படுத்தலாம் என்று வந்த போதுஅவர் அந்த வீட்டுவாசலைக் கடந்து சென்று கொண்டிருந்தார்அப்போதுசிங்கள இராணுவம் எறிகணைத் தாக்குதல் செய்கிறதுஅத்தாக்குதல் நின்ற போது வாசலை உற்று நோக்குகிறேன்அங்கே அந்த வயதானவர் தலை சிதறி பலியாகி இருந்தார்இவ்வாறு பல கொடுமைகளை எம் மண் சுமந்து நின்றது.

அதை விட கொடுமை என்ன என்றால் என்னிடம் என்குடும்பத் தேவைக்காக இருந்த 2 கிலோ அரிசியைகொடுத்துமக்களைக் கொண்டு வெட்டிய ஒருபதுங்குகுழிக்குள் எம் மருத்துவமனையை சுற்றி இறந்தமக்களைப் புதைத்தேன்கடுமையான தாக்குதல்கள்நடத்தப்பட்டதால் மருத்துவமனையைச் சுற்றிப் பல மக்கள்இறந்திருந்தார்கள்எம்மால் எதையும் செய்ய முடியவில்லைஉடனடியாக அவர்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல்அதனால் அவ்வாறான 47 பேரை நாங்கள் அந்தபதுங்குகுழியில் புதைத்தோம்பண்டமாற்றுபொருளாதாரத்தை எனக்கு காட்டிய இறுதிப் போர் அன்றுகொடுமையான இச்செயலையும் தந்திருந்தது.

இறுதி வரை போராளிகளின் மனநிலை எவ்வாறு இருந்தது?

காயப்பட்ட போராளிகள் கூட காயத்தை மாற்றிக் கொண்டுசண்டைக்கு போக வேண்டும் என்ற மனநிலையில்இருந்தார்கள்ஓரிரண்டு பேர் சண்டையைத் தவிர்த்தாலும்அநேகமான போராளிகள் களமுனைக்கு போக வேண்டும்என்பதில் குறியாக இருந்தார்கள்.

இறுதி நாள் என்ன நடந்தது ?

16 ஆம் திகதி வரை என் பராமரிப்பில் பல போராளிகளும்அதிகமான மக்களும் இருந்தார்கள்பெரும்பாலும் கால்உடைவுக் காயங்கள் தான் அதிகம்அவ்வாறான நிலையில்அவர்களுக்கு முடிந்தளவு அறிவுறுத்துகிறேன் “அப்பாஅம்மாஉறவுகள் யாராவது வந்தால் அவர்களுடன் போகக்கூடியவர்கள் போங்கோ என்றுஅப்படி போனவர்கள்ஓரிரண்டு பேர் தான்மிகுதிப் பேர் அங்கேயே இருந்தார்கள்

இறுதியாக நான் வைத்திருந்த மருத்துவமனையைஇராணுவம் சுற்றிவளைத்து விட்டதுஅதன் பின் அங்கேஎதையும் செய்ய முடியாத சூழல்முடிவெடுக்க முடியவில்லைஎன் மனைவியும் மகனும் என்னுடனேயே நிற்கிறார்கள்அவர்களையாவது காப்பாற்ற வேண்டிய சூழல்நான்அவர்களைக் கூட்டிக் கொண்டு போய் என் நண்பனின்குடும்பத்தோடு சேர்த்து விடலாம் என்று வெளிக்கிட்ட போது,

“ டொக்டர் நீங்களும் எங்களை விட்டிட்டு போகப்போறீங்களா...” என்று ஒரு தம்பி கேட்டான்என்னால்அவனுக்கு எதை செய்ய முடியும்அவர்களை எப்படிகாப்பாற்ற முடியும்என்னால் ஒரு முடிவும் எடுக்கமுடியவில்லைஅவர்களிடம் மனைவி மகனை விட்டுவிட்டுவருவதாக உறுதி வழங்கி விட்டு வட்டுவாகலை நோக்கிசெல்கிறேன்அங்கே நண்பனின் குடும்பத்திடம் என்குடும்பத்தை விட்டுவிட்டு மீண்டும் மருத்துவமனைக்குவருகிறேன்

என்னால் அந்த இடத்துக்கு கிட்டப் போக முடியவில்லைஅவ்வளவு எறிகணைத் தாக்குதல்கள்எப்படியோ நான்அங்கே போய் சேர்கிறேன். 150-200 மீற்றர் தூரத்தைக்கடப்பதற்கு 200 தடவைக்கு மேல் நிலத்தில் விழுந்துபடுத்திருப்பேன் அவ்வளவு தாக்குதல்கள்இவ்வாறுமருத்துவமனைக்குப் போய் சேர்ந்தபோது அப் போராளிகள்மனதில் புது தெம்பு பிறந்திருக்கும் எமக்காக நான்இருக்கிறேன் என்று நம்பிக்கை எழுந்திருக்கும்அதனால்அந்த கொடுமைக்குள்ளும் புன்னகைத்தார்கள்.

நான் என்னோடு பணியாற்றியவர்களை வெளியேறிச்செல்லுமாறு பணித்தேன்அதன் பின் அப்போராளிகளோடுபேசிக் கொண்டிருந்த தருணம் பின்பகுதியில் இருக்கும்கொட்டிலுக்கு போய் வர வேண்டிய சூழல் வந்ததுஅவர்களும் என்னை எதிர்பார்த்திருந்தார்கள்அதனால்அவர்களிடம் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற போதுஒரு தம்பிடொக்டர் எப்பிடியும் ஆமி எங்கள உயிரோடபிடிச்சிடுவான் உங்கட குப்பிய தாங்கோ நான் சாகப் போறன்என்றான்அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குதெரியவில்லைஅவனிடம் அப்பிடி ஒன்றும் நடக்காது என்றுஆறுதல் சொல்லிவிட்டு நகர்கிறேன்அதேவேளை அங்கேஇருந்த மக்கள் மிகவும் அச்சத்தில் இருந்ததை நான்உணர்ந்தேன்அவர்கள் ஒவ்வொருவரும் தம்மைக்காப்பாற்றுமாறு கத்தி அழுதது இன்னும் செவிகளில்கேட்கிறது.

நான் என்ன செய்ய முடியும்எதையும் முடிவெடுக்கமுடியாதவனாய் நின்றபோது என்னுடன் பணியாற்றிய ஒருசகோதரன் தனது குடும்பத்துடன் வந்திருந்தார்அவரைக்கூட்டிக் கொண்டு போய் என் மனைவிமகனோடு விடலாம்என்று யோசித்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோது பெரும் தொகையான 60 எம்.எம்எறிகணைகள் எம்மருத்துவமனையை நோக்கி செலுத்தப்பட்டதை பார்த்தேன்அக் குறுகிய இடத்தில் 100-200 க்கும் மேலானஎறிகணைகள் வெடித்துச் சிதறினஅத்தனையும்மருத்துவமனை என்று தெரிந்து அடிக்கப்பட்ட எறிகணைஎன்பது எனக்கு புரிந்து போனது

தாக்குதல் குறைந்த போது அங்கே செல்ல முனைந்தஎன்னைத் தடுத்து நிறுத்தினார் மற்றவர்ஆனாலும் நான்காப்பாற்றிய எம் போராளிகள் கண்ணுக்கு முன்னே தவித்துக்கிடக்க என்னால் எதையும் செய்ய முடியாமல் தவித்தேன்அப்போது என் போராளி நண்பன் ஒருவன் அங்கிருந்து தப்பிவந்திருந்தான்

'மச்சான் உன்னோட இடத்துக்கு 60எம்.எம்மால பராச்பண்ணி விட்டான்எதுவும் மிஞ்சவில்லைஎல்லாமே சிதறிப்போய்விட்டதுஒருத்தன் கூட உயிரோட இல்லஅவன்தெரிஞ்சுதான் அடிச்சிருக்கான்."

எனக்கு எதையும் செய்ய முடியவில்லையே என்ற ஏமாற்றம்கண்ணுக்கு முன்னால் கொஞ்ச நேரத்துக்கு முதல்கதைத்துவிட்டு வந்த அப்போராளிகளையும் மக்களையும்காப்பாற்ற நாம் போராடிய ஒவ்வொரு விநாடிகளும் இப்படிசிதைந்து போய்விட்டது என்று மனம் உடைந்து போனதுஎன்னால் அந்த இடத்தை விட்டு வரவும் முடியவில்லை

மனைவிமகனை தவிக்க விட்டு இருக்கவும் முடியவில்லைமன நெகிழ்வோடு நான் இருந்தபோது நண்பனும் மற்றசகோதரனும் என்னை தம்மோடு வருமாறுகட்டாயப்படுத்தினர்அதற்குமேல் அங்கே ஒன்றும் இல்லைஎன்றாகிவிட்ட போது நான் எதை செய்யப்போகிறேன் என்றநினைப்பில் மீண்டும் ஒருமுறை அவ்விடத்தை திரும்பிப்பார்த்தபடி உயிரோடு வந்தும் வலியோடு வாழ்கிறேன்.

_20185_1559302041_EF148A3C-EE99-408A-97C

 

_20185_1559302041_6EC8555A-76A5-4370-9C0_20185_1559302041_1E871F8A-378E-46E9-966

 

_20185_1559302041_8926C92F-1BAE-4D3F-905

 

_20185_1559302041_587CF636-9BAA-4838-BB9

http://www.battinaatham.net/description.php?art=20185

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.