uthayakumar

மதமும் மனிதர்களும்

Recommended Posts

மதமும்  மனிதர்களும்
_____________________

உங்கள் நலன்களுக்கு அப்பால் எப்பொழுது மானிடம் பற்றி நீங்கள்  சிந்திக்கிறீர்களோ அப்பொழுது தான் இந்த இரத்த களரியை இல்லாமல் ஆக்க முடியும் மதத்தின் பெயராலும் சொந்த நலத்தின் பெயராலும் உலகம் பிளவுபட்டு கிடக்கும் வரை மிஞ்சி இருக்கப்போவது இரத்தமும் சாம்பலும் தான் மத அடிப்படைவாதிகளினாலும் சொந்த நல பொருளாதார சுரண்டல் காரர்களினாலும் சிரியாவும் ஈராக்கும் இன்று மனிதம் புதைந்த ஒரு சாம்பல் மேடுகளாக மாறி இருக்கிறது .

 

இன முரண்பாடுகளும் மத முரண்பாடுகளும் மீண்டும் மீண்டும் தொடருவதற்கு அந்த நாடுகளின் ஆட்சியாளர்களும் அதிதீவிர மதவாதிகளுமே காரணமாகிறார்கள் .சிறு பான்மை இனத்தின் இருப்புகள் அதன் உரிமைகள் அடையாளங்கள் எல்லாம் வன்முறை மூலம் அளிக்கப்பட்ட வரலாறுகளே தொடர்கின்றன .ஒரு கையில் ஜனநாயக்கதோடும் மறு கையில் ஆயுதங்களாக வியாபார உலகமாக 
இருக்கும் போது மனிதம் வாழுவதற்கு இடமேது .

 

ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை தீர்வாகாது ஒரு பிழைக்குஇன்னும்ஒருபிழையைசுட்டிக்காட்டுவது குழந்தைத்தனமானது .மனித குலத்துக்கு எதிரான எல்லாவன்முறைகளுமேகண்டிக்கத்தக்கவை . முதலாளித்துவத்தின் சுரண்டல்காரர்களின் பெயரால் மதத்தின் பெயரால் நடாத்தப்படுகின்ற எல்லா வன்முறைகளும் மனித மானிட தர்மங்களுக்கு எதிரானவையே .

 

மதம் என்பது ஒரு மனிதனை வன்முறை இல்லாதவனாக ஒழுக்கமான ஒரு 
சமூகத்தை உருவாக்க முனையும் ஒரு சமூக காரணியாகும்.(social fact).
ஆதி கால மனிதன் வன்முறையும் கொலையுமாக சமூக அரசியல் பொருளாதார 
எந்த கட்டமைப்பும் இன்றி தமக்குள் மோதி இறந்தனர் .பல பரிணாமம் கடந்து மக்கள்  அரசனோடு ஒரு ஒப்பந்தம் செய்து அவனிடம் அனைத்து அதிகாரங்களையும் ஒப்படைத்து ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்கினான் .பின்பு மறுமலர்ச்சி (Renaissance period)காலங்களோடு சமுக அரசியல் ஜனநாயக பண்புகள் உடன்  படி படியாக உலக நாகரீகம்  வளர்ச்சி கண்டது .

 

அரசியல் சமூக கலாச்சார பொருளாதார ஸ்தாபனங்கள் வளர்ச்சி கண்டு சமூக இயக்கத்துக்கு காரணமாக அமைந்தன .மதம் என்பதும் இதன் அடிப்படையில் ஆனதே .சமூகவியலாளர் கார்ல் மார்க்ஸ் கூடி மதத்தை எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை ,மதம் என்பது அவின் போன்றது என்று மதமும் பொருளாதாரமும் என்ற தனது ஆய்வுகளில் குறிப்பிட்டு இருந்தார் .

 

முதலாளித்துவ சுரண்டலுக்கு மதம் முக்கியமானது இதனால் மதம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வேறு வேறு பாத்திரங்களில் தோவையாக இருந்தது .முதலாளித்துவ சுரண்டலாலும் தொழிலாளர் தனிமை(alienation) அடைவதால் மதத்தை தொழிலாளி நாடி போக வேண்டி இருந்ததாக கார்ல் மார்க்ஸ்சின் சோஷலிச தத்துவம் விபரிக்கின்றது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்பங்களின் நிமித்தம் மதத்தை நாடுவதும் ஆண்டவனை வேண்டுவதுக்கும் அடிப்படையாக அமைந்தது முதலாளித்துவ வர்க்க சுரண்டலாகும் .அதே வேளை குடும்பங்களை பிரிந்து இயந்திர வாழ்வோடு மனிதன் இருப்பதால் அமைதி வேண்டி ஆண்டவனை நாடுவது அவர்களுக்கு ஒரு மன அமைதியை தருவதாகவே தொழிலாளர் கருதினர் .இதயம் இல்லாத உலகில் இதயம் போன்றதே மதம் என்று மார்க்ஸ் கூறினார் .

ஆகவே மதம் என்பது அமைதியை தேடுவதற்கும் மனிதனை நல்வழிபடுத்தி வன்முறை இல்லாத ஒரு சமுதாயமாக இருபதற்கு ஆன ஒரு மார்க்கமே அன்றி வன்முறைக்கும் மனித அழிவுகளுக்கும் மதம் காரணமாக இருப்பது நாகரிகமான விஞ்ஞான பூர்வமான சிந்தனைக்கு அப்பால் ஆனது .class of civilisation நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்ற தனது நூலிலே சாமுவேல் ஹன்டிண்டன் என்ற அமரிக்கா அரசியல் அறிஞர் மிகவும் தொளிவாக விபரிக்கின்றார் அதாவது யூதர்கள் தங்கள் நாகரிகமும் மதமுமே முதன்மையானதென்றும் தமது கடவுளை விட வேறு கடவுள் இல்லை என்றும் இதே போலவே இஸ்லாமியர்கள் தமது நாகரிகத்தையும் கடவுளையும் விட வேறு கடவுள் இல்லை எனவும் இதே போலவே ஏனைய மதத்தவர்களும் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிளவு பட்டு நாகரீகங்களுக்கு இடையிலான மோதல்களாகவே உலகம் ஒரு வன்முறை கலாச்சாரத்தை நேக்கி நகரும் என்றார் .

 

 

மனிதனின் பாதுகாப்பு நிச்சயா தன்மை இல்லாது இருப்பின் அந்த மனிதர்களின் கலாச்சாரமும் நாகரிகமும் முன்னேற்ரமான பாதையை நோக்கி நகர முடியாது.
Civilization and culture cannot make progress where human life is unsafe And insecure.ஆகவே மனிதர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டிய அனைத்து பாதுகாப்பையும் உறுதி படுத்துவது அந்த நாட்டின் நல் ஆட்சியின் கடமையாகும் .ஒரு மனிதன் மத நம்பிக்கையுடனோ அல்லது மத நம்பிக்கை இல்லாது இருப்பதும் அவனது உரிமை சார்ந்ததாகும்.எந்த மதத்தையும் அவர் அவர் நம்பிக்கையுடன் பின் பற்ற
யாரும் தடை போட முடியாது .இருப்பினும் மனித வாழ்வுக்கு எதிராக மதத்தின் பெயரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் நிறுத்த படவேண்டும்.

முற்போக்கு சிந்தனை உடைய மனிதர்கள்,கல்விஅறிவுடைய சமூகத்தினர் இணைந்து மதங்களின் பெயரால் கட்டு அவிழ்த்து விடப்படும் வன்முறைகளை நிறுத்தி  புதியதொரு நாகரீக சமுதாயம் ஒன்றை நோக்கி நகர இவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.மனிதர்கள் பாதுகாப்புடன் வாழக்கூடிய புதியதோர் உலக ஒழுங்கை உலக தலைவர்களும் மதகுருமார்களும் இணைந்து முன் நோக்கி நகர்த்துவார்களா .

B.Uthayakumar/Oslo

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

Share this post


Link to post
Share on other sites

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

Share this post


Link to post
Share on other sites
On 6/9/2019 at 3:06 PM, ampanai said:

பதிவுக்கு நன்றி. 

உலகில் பெரிய மதமான கிறிஸ்தவம் உலகின் செல்வாக்கு மிக்க பணக்கார மதம். 
உலகின் அதிக மதமாற்றத்தை ' ஊக்குவித்ததும்' அவர்கள். 

இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியினர் இன்று அதன் கொள்கையை பழமைவாய்ந்த பகுதியை கையில் எடுத்து, உலகத்தையே ஆட்டுகின்றார்கள்.  

சோழர்கால ஆட்சியில் இந்து/சைவ வளர்ந்த மதம் பின்னர் அவர்களால் கைவிடப்பட்டது.
  
ஆரியம் மதவாதம் கொண்டது. 
திராவிடம் மதம் அற்றது. 

தற்பொழுது பலநாடுகளில், குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் வளர்ந்து வருவது 'தேசியவாதம்'  என்ற 'மதம்'. 

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

On 6/9/2019 at 2:28 PM, அருள்மொழிவர்மன் said:

மனித குலத்துக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் கண்டிக்கத்தக்கவை. இங்கு குறுகிய எண்ணமுடையவர்களே மதகுருமார்களாகவும், தலைவர்களாகவும் உள்ளனர். 

நல்லதொரு பகிர்வு.

அருள்மொழிவர்மனுக்கும் அம்பானைகும் உங்கள் கருத்துக்கு நன்றிகள் 
உலகத்தின் இன்று சமத்துவம் இன்மையும் ஏற்றதாழ்வுகளும் அதி தீவிர வலது சாரி போக்கு உடையவர்களின் செல்வக்குமாக ஒரு உலக ஒழுங்கை நேக்கி நகர்வது மனித இருப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • சைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....!   😁
    • இப்படியான outdated ideas நெடுக்ஸிடம் இருந்து வருவது ஆச்சரியமில்லை. அதுக்காக ஜூட் அண்ணர் பையன்26ஐ தியாகியாக்கவும் வேண்டாம். சுகன் (சண்டமாருதன்) சொன்னதுபோல் இந்தத் திரியே ஆதாரம் இல்லாத ஒரு tabloid கதையாக உள்ளது. பையன்26 சம்பந்தப்பட்டதால் கருத்துக்கள் நிறைய வந்திருந்தன என்று நினைக்கின்றேன்.  பையனும் கிழவனின் மருமகனும் கொடுத்த அடி, உதை தண்டனை அவர்களுக்கு திருப்தி கொடுத்தாலும், உண்மையில் அது தீர்வு இல்லை. குடும்ப கெளரவத்தைக் காக்க நடந்த பாரதூரமான குற்றத்தை அடியுதையோடு முடிக்கும் முயற்சியாகத்தான் உள்ளது. மருமகளையே தனது காம இச்சைக்குப் பயன்படுத்தியவர் இலண்டனில் பிற பெண் பிள்ளைகளை groom பண்ணி தனது காம இச்சைகளைத் தீர்க்கமாட்டாரா? இவரை பிரித்தானியாவில் sex offenders list இல் சேர்க்காமல் விடுவது மிகவும் ஆபத்தானது. அடுத்ததாக இலங்கையில் பெண்களைப் பாதுகாக்கும் பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றினைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளை பிறந்தால் அதற்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை கொடுக்க முயற்சிக்கவேண்டும்.  இவற்றை அப்பெண்ணைத் தெரிந்தவர்களே முன்னெடுக்கவேண்டும்.
    • எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. எத்தனை வருடம் இந்த நிலையில் தற்போது அங்கு கிடைத்திருக்கும் பொருட்கள்தான் இந்திய வரலாற்றில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம் கீழடியில் கிடைத்த பொருட்களில் செய்யப்பட்ட கார்பன் ஆராய்ச்சியில் அதன் வயது 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 600 வருடங்களுக்கும் முன்பு. என்ன எல்லாம் கிடைத்தது இதற்கு முன் உலகில் எங்கும் இவ்வளவு பழமையான பொருட்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே இங்கு மணி, பொத்தான், தோடு, தகடு, தொங்கட்டான் ஆகிய பொருட்கள் கிடைத்தது. தற்போது கழிவு நீர் குழாய்கள். செப்பு பாத்திரங்கள். மண் பானைகள் ஆகியவை கிடைத்து உள்ளது. இதன் மூலம் 2600 வருடங்களுக்கு முன்பே தமிழ் நாகரீகம் முன்னேறி சிறப்பாக இருந்தது நிரூபணம் ஆகி உள்ளது. குறிப்பு என்ன இந்த ஆதாரங்களில் சில விலங்குகள் பொம்மைகள் இருந்துள்ளது. ஆனால் வழிப்பாடு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை. மிக மிக முக்கியமாக இந்த ஆராய்ச்சியில் இதுவரை இந்து மத அடையாளங்கள் கிடைக்கவில்லை. அதாவது ஆதி தமிழர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கூறும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன அறிக்கை இது தொடர்பாக தொல்லையில் துறை வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், எங்கள் ஆய்வில் சில விலங்குகளின் சின்னங்கள் கிடைத்தது. ஆனால் எங்கும் மதம் மற்றும் வழிபாடு தொடர்பான சின்னங்கள் கிடைக்கவில்லை, என்று கூறியுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், புத்தம், சைவம், வைணவம் என்று எதையாவது பின்பற்றினார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இயற்கையை வழிபாடு அதே சமயம் சில வரலாற்று ஆய்வாளர்கள், தமிழர்கள் இயற்கை வழிபாடு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த முடிவுகள் மூலம் இந்தியாவின் மொத்த முகமும் மாற போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திராவிட வரலாறு, தமிழர் வரலாறு, இந்திய வரலாறு, இந்து வரலாறு அனைத்தையும் கீழடி மொத்தமாக மாற்றி எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை! https://tamil.oneindia.com/news/tamilnadu/no-religion-related-foundings-have-been-found-n-keezhadi-civilization-yet/articlecontent-pf401983-363624.html