Jump to content

மோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்!


Recommended Posts

சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது.

இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.

இதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார்.

ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மேலும் சிலர், "மைத்திரி மீண்டும் தன் எளிமைப் பண்பை நிலைநாட்டிவிட்டார்" என சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளனர்.

எவ்வாறாயும் மைத்திரி ஒரு நட்புறவின் அடிப்படையில் இவ்வாறு செயற்பட்டதாக கூறப்படுகிறது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/121685?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடியும் குடையை பிடித்திருக்கிறார் தானே. தவிர எங்கட வீட்டை விருந்தாளி வந்தால் நாங்கள் தான் வரவேற்க வேண்டும் 

Link to comment
Share on other sites

மைத்திரி இந்தியாவிற்கு குடை பிடித்து மீண்டும் சனாதிபதியாக விரும்பியிருக்கலாம் 🙂 


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , மைத்திரி ஒரு பலவீனமான தலைவர் என ஒரு குறுஞ்செய்தி பதித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

மோடியும் குடையை பிடித்திருக்கிறார் தானே. தவிர எங்கட வீட்டை விருந்தாளி வந்தால் நாங்கள் தான் வரவேற்க வேண்டும் 

அக்கோய் வடிவாக பாருங்கள் மோடி பிடிக்கவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அக்கோய் வடிவாக பாருங்கள் மோடி பிடிக்கவில்லை 

ஓம் என 😃எனக்குத் தான் கண் தெரியல்ல 

 

Link to comment
Share on other sites

மைத்திரி வெளிநாட்டில் “umbrella“ க்கு இருக்கிற meaning ஐ நினைச்சுக்கொண்டு குடை பிடிச்சிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்தக் குடை பிடிப்பதில்..... பெரிய ராஜதந்திரம் ஒன்று உள்ளது.
மற்றவர்களை குடை பிடிக்க விட்டால்... சரியாக பிடிக்காமல், 
அயர்ன் பண்ணி போட்ட  உடுப்புகளை நனைத்து விடுவார்கள்.
தானே குடைபிடித்தால்.... தனக்கு ஏற்ற மாதிரி நனையாமல் பிடித்துக் கொள்ளலாம்.

மைத்திரி... பிடிக்கும் குடையின்  பெரும் பகுதி... மைத்திரி பக்கமே உள்ளது.
குடை பிடிக்கும்  ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ராஜதந்திரத்துக்கு முன், இந்தியா  தோற்று விட்டது. :grin:

Link to comment
Share on other sites

On 6/9/2019 at 9:45 PM, தமிழ் சிறி said:

மைத்திரி... பிடிக்கும் குடையின்  பெரும் பகுதி... மைத்திரி பக்கமே உள்ளது.
குடை பிடிக்கும்  ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் ராஜதந்திரத்துக்கு முன், இந்தியா  தோற்று விட்டது.

மழைகாலம் என்டு தெரிஞ்சும் இந்தியன் ஒரு குடையைக் கூட கொண்டுவரேல்லை!

சேர்ச்க்கு போன இந்தியன் பூக்கொத்து கொண்டு போக முடிது ஆனா குடையை இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2019 at 3:53 PM, Lara said:

மைத்திரி வெளிநாட்டில் “umbrella“ க்கு இருக்கிற meaning ஐ நினைச்சுக்கொண்டு குடை பிடிச்சிருப்பார்.

Image may contain: 3 people, people smiling, people standing and outdoor

:grin:  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐஸ் வைப்பது, குடை பிடிப்பது, காக்காய் பிடிப்பது போன்ற பிரயோகங்களால் நமக்கு மனத்தடை ஏற்படலாம். மற்றபடி இதை ஒரு சாதாரண நிகழ்வாகக் கொள்ளலாம்; நாடுகளின் தலைவர்கள் என்ற அடிப்படையில் நட்புணர்வின் குறியீடாகவும் கொள்ளலாம். இருப்பினும் அங்கதம் நம் பிறப்புரிமை. வாய்ப்பை ஏன் விட வேண்டும்? மைத்திரியை பார்த்திபனாகவும் மோடியை வடிவேலாகவும் கற்பனை செய்து கொள்க! மைத்திரி கையில் அரிவாள்; பலியாடு மோடியை இழுத்துச் செல்வது போல.  எப்போதும் சிறிய நாடுகள்தான் பெரிய நாடுகளது குடையின் கீழ் வர வேண்டுமா? Now India has gone under the Sri Lankan umbrella.

Link to comment
Share on other sites

சிறீலங்காவை குடைவதற்கு மோடி தானே வந்துள்ளார். அவர் ஏன் வேறொரு குடை கொண்டுவரவேண்டும்...?🤔 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.