Jump to content

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

pannvarilal-720x450.jpg

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விவகாரம்: தமிழக ஆளுநர் டெல்லிக்கு விஜயம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிக்கு இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த டெல்லி விஜயத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து. கலந்துரையாடலொன்றில் ஈடுபடுவாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் பயணம் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேர/

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் றோ இருந்தது. இவர்கள் பாவம்.

Link to comment
Share on other sites

றோ மட்டுமல்ல, CIA, Mossad உம் பின்னணியில் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

றோ மட்டுமல்ல, CIA, Mossad உம் பின்னணியில் இருந்தது.

எந்த ஒரு நாட்டிலாவது... நீதித் துறையில், அரசு தலையிடுமானால், 
அந்த அரசினால்... மக்களுக்கு பெரும் சிரமம். இந்தியாவில்.. இந்தத் தலையீடு  அதிகம்.
ராஜீவ் கொலை வழக்கில்... சுப்பிரமணிய சாமி, சந்திரா சுவாமி ஆகியோரை 
விசாரிக்க வேண்டுமென கூறியும், அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்திற்க்காக 
விசாரிக்காமலேயே வழக்கை  முடித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

On 6/10/2019 at 6:04 PM, தமிழ் சிறி said:

சந்திர சுவாமி, சுப்ரமணியன் சுவாமி இருவருக்கும் கொலையில் சம்பந்தமிருக்கு. ஆனால் அவர்கள் பிராமணர்கள் என்பதற்காக அவர்களை விசாரிக்காமல் விடவில்லை. கொலையில் சம்பந்தப்படும் பலரை காப்பாற்றும் நோக்கிலேயே அவர்களை விசாரிக்கவில்லை. 😎

CIA 1986 இல் வெளியிட்ட “India after Rajiv......” என்ற 23 பக்க அறிக்கையில் (தலைப்பிலும் பக்கங்களிலும் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது) ராஜீவ் காந்தி 1989 இல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய முன்னமே சீக்கியர்களால் அல்லது காஷ்மீரி முஸ்லிம்களால் கொல்லப்படலாம், கொல்லப்பட்டால் P.V.Narasimha Rao அல்லது Viswanath Pratap Singh இடைக்கால பிரதமராக வரலாம் எனவும் கூறியிருந்தது. (அப்பவே கொல்ல பிளான் போட்டுட்டார்கள்)

ராஜீவ் காந்தி 1991 இல் கொல்லப்பட்ட பின் P.V.Narasimha Rao பிரதமராக வந்தார்.

ராஜீவ் காந்தி 1991 வரை உயிருடன் இருந்ததே பெரும் அதிசயம். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

லாரா.... ராஜீவ்  காந்தியை, சி.ஐ.ஏ. கொல்ல  ஏன் திட்டம் போட்டது.

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தி கொலைக்கு முன் CIA, Mossad உளவாளிகளும் இந்தியாவுக்குள் சுற்றித்திரிந்தார்கள்.

பல RAW உளவாளிகளும் அக்கால கட்டங்களில் Mossad இடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் இவர்கள் இணைந்து செயற்படும் வாய்ப்பும் இலகுவாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, text

பேரறிவாளன் கைது செய்யப் பட்டு... இன்றோடு 29 ஆண்டுகள்.

Link to comment
Share on other sites

16 hours ago, தமிழ் சிறி said:

லாரா.... ராஜீவ்  காந்தியை, சி.ஐ.ஏ. கொல்ல  ஏன் திட்டம் போட்டது.

ஆட்டுவிப்போர் கைகளில் ஆடாமல் விட்டால் அல்லது ஆடுவதை விட்டு விலக முற்பட்டால் இப்படித்தான் போட்டுத்தள்ளுவார்கள். 😎

அவர் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு எதிராகவும் கதைத்து விட்டார்.

சந்திர சுவாமி CIA, Mossad உடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்தவர். அதனால் கொலையில் அவர் பங்கு அதிகம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே அவரை நீக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டவர். (இந்திய அரசியலுக்காகவும்)

இந்திரா காந்தி படுகொலையின் பின்னணியிலும் CIA இருந்தது. அதிலும் சந்திர சுவாமியின் பங்கு இருந்தது. 

CIA 1983 இல் வெளியிட்ட “India in the mid-1980s: Goals and Challenges” என்ற அறிக்கையில் இந்திரா காந்தி தேர்தலுக்கு முன்பே திடீர் மரணமடைவது பற்றி கூறியிருந்தது, அவரும் 1984 இல் கொல்லப்பட்டு விட்டார். இந்திரா காந்தியின் திடீர் மரணத்தின் பின் ராஜீவ் காந்தி பிரதமராக வந்தால் அது குறுகிய காலமாகவே இருக்கும் என்ற ரீதியிலும் கூறப்பட்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாரா யார் யாரை சி.ஐ.ஏ கொன்றது என்று எழுதாமல், யாரையெல்லாம் சி.ஐ.ஏ கொல்லவில்லை என்று எழுதினால் அந்தப் லிஸ்ற் இலகுவான குறுகிய லிஸ்ற்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இது லாராவுக்கல்ல: இப்படியான அரைகுறை மொழிப்புரிதலை வைத்துக் கொண்டு லாரா மாதிரியான நபர்கள் பின்னும் கற்பனைக் கதைகளை நம்புவோருக்காக மட்டும்..

https://www.cia.gov/library/readingroom/docs/CIA-RDP86T00302R000300520006-9.pdf

இது தான் சி.ஐ.ஏ தன் இணையத்தில் இரகசியம் நீக்கி வைத்திருக்கும் ஆவணம். இது NIE எனப்படும் எல்லா நாடுகளையும் பற்றி சி.ஐ.ஏ தயாரிக்கும் ஒரு ஆவணம், இதில் பக்கம் 6, பொயின்ற் 12, பக்கம் 7, பொயின்ற் 15 என்பன லாரா சொல்வதைச் சொல்கின்றன, ஆனால் அவர் விளங்கிக் கொண்ட அர்த்தத்தில் அல்ல! அரைகுறை விளக்கத்திற்குக் கற்பனையைப் போட்டு நிரப்பி இப்படி நிறையக் கதைகளைச் சொல்வார்கள்! மூலத்தைத் தேடி அறிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணமாக மட்டும் இதை இணைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

36 minutes ago, Justin said:

அரைகுறை விளக்கத்தை வைத்து கற்பனை செய்யவில்லை, CIA கூறிய விடயங்களையும் ஏனைய நடந்த விடயங்களையும் ஒப்பிட்டே அதுபற்றிய என் கருத்தை எழுதினேன். CIA தான் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்யப்போகிறேன் என்று நேராக சொல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு நான் முட்டாள் கிடையாது. 😎

Link to comment
Share on other sites

அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இந்தியாவுக்குள் பிரச்சினையை உருவாக்கிக்கொண்டிருந்த நேரம் Super Powers நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவிகளும் வழங்குகிறார்கள் என கூறி ராஜீவ் காந்தி Punjab, Assam, Mizoram, Gorkhaland உட்பட்ட சில பகுதிகளில் பிரச்சினையை தீர்க்க முற்பட்டு 1985, 1986 இல் அவர்களுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.

பலஸ்தீன மக்களுக்கு சார்பாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் கதைத்தார்.

US, USSR போன்றன இந்தியாவில் தலையிடுவதிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றார்.

Moscow பாக்கிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு எதிராக பாக்கிஸ்தானிலுள்ள anti-russian group உடன் சேர்ந்து இயங்கியவர்.

ஈரான்-ஈராக் போரை மேற்குலக நடத்திய போது அதை இவர் விரும்பவில்லை. அதற்கெதிராகவும் கருத்து கூறியிருந்தார்.

1990 இல் அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் ஈராக்கில் புகுந்து போர் நடத்துவதற்கு எதிராகவும் கருத்து கூறியிருந்தார்.

இப்படி பல... 

இதனால் ராஜூவ் காந்தியை கொன்று விட்டு வேறொருவரை பதவிக்கு கொண்டு வர முயன்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓபிஎஸ்சுடன் சென்று, ஆளுநரை எடப்பபாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன்? 3 முக்கிய விஷயங்கள்

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுநர் மாளிகையில், இன்று மாலை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன், திடீரென பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி.

இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி, நிருபர்களிடம், முதல்வரோ, அல்லது அவருடன் வந்தவர்களோ விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிஜிபி யார்

முதல் காரணம், தமிழக டிஜிபியாக யாரை நியமிப்பது என்பது தொடர்பான ஆலோசனை என கூறப்படுகிறது. தற்போது டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபியை நியமிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட் உள்ளிட்டோர், டிஜிபி பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் உட்பட 14 சீனியர் அதிகாரிகள் பெயர், பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பிவைத்தது. திரிபாதியை டிஜிபியாக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. தமிழக அரசு சாய்ஸ் ஜாபர்சேட்டாக உள்ளதாம். எனவே இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர்

மற்றொரு முக்கிய விஷயம், புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது பற்றியது. 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களில் ஒருவராக இருந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதி, அதாவது இம்மாத இறுதியோடு முடிவடைகிறது. கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதை அவர் ஏற்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த தமிழக தலைமை செயலாளரை நியமிப்பதில் தமிழக அரசு தீவிரமாகியுள்ளது.

போட்டிகள்

புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில், மொத்தம், 5 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோரின் பெயர்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த விவகாரம் பற்றியும், ஆளுநருடன் முதல்வர் மற்றும் அவருடன் சென்ற முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

7 தமிழர் விடுதலை

மேலும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று, நீண்டகாலமாக சிறையில் வாடும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாகவும், ஆளுநரிடம், முதல்வர் ஆலோசித்துள்ளார். நேற்று டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதனிடையே, இன்று, முதல்வரும், ஆளுநருடன் இதுபற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

கொப்பி என்றாலே நரசூஸ் கொப்பிதான் பேஸ் ..பேஸ் ..ரொம்ப நன்னா இருக்கு..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பெரிய இந்தியாவுக்கு ரண்டே ரண்டு சீக்ரட் ஏஜெண்டுகள் மட்டும் தானா? இது உளவு பார்க்கப் பட்ட இந்தியாவுக்கே அவமானமில்லையா?

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

இந்தப் பெரிய இந்தியாவுக்கு ரண்டே ரண்டு சீக்ரட் ஏஜெண்டுகள் மட்டும் தானா? இது உளவு பார்க்கப் பட்ட இந்தியாவுக்கே அவமானமில்லையா?

அவர்கள் 2 என்று சொன்னால் பல மடங்கு அதிகம் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் இன்னொருவர் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் நீங்கள் இருப்பது கவலைக்கிடம். 🙃

CIA, Mossad பற்றி றோ கதைக்குது எண்டதுக்காக றோவுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்றும் நினைக்க கூடாது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை, கவலைக்கிடம் தான்! கூடாது கூடாது, நினைக்கவே கூடாது, உடன நம்பி விட வேணும்!  😊

Link to comment
Share on other sites

Shyam Sunder Mohapatra கூறியிருந்தார் இந்திராகாந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராக வந்த நாளிலிருந்தே சந்திர சுவாமி அடிக்கடி பலரை கூட்டி meeting வைத்து ராஜீவ் காந்தியை அகற்றி அவருக்கு பதிலாக P.V.Narasimha Rao ஐ பிரதமராக்க முயன்றார் என்று.

Lakhubhai Pathak கூறியிருந்தார் 2 january 1984 சந்திர சுவாமி கூறியிருந்தாராம் P.V.Narasimha Rao பிரதமராக வருவார் என்று. அது எப்படி நடக்கும் என கேட்க “sant mahatma” பவர் பற்றி அவருக்கு தெரியாதோ என தன்னை கேட்டதாகவும் கூறியிருந்தார். 

இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் 14 november 1984 தான் ராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியதாகவும் அதில் சந்திர சுவாமி 45 மில்லியன் டொலர் பணத்தை சேகரித்ததாகவும் அதை P.V.Narasimha Rao ஐ ஆட்சியிலேற்ற பயன்படுத்தவிருப்பதாகவும் கூறியதாகவும் சொல்லியிருந்தார்.

அத்துடன் இவருக்கு இந்திராகாந்தி கொலையில் சம்பந்தமிருக்கு என தான் கருதுவதாகவும் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2019 at 6:04 PM, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... நீதித் துறையில், அரசு தலையிடுமானால், 
அந்த அரசினால்... மக்களுக்கு பெரும் சிரமம். இந்தியாவில்.. இந்தத் தலையீடு  அதிகம்.
ராஜீவ் கொலை வழக்கில்... சுப்பிரமணிய சாமி, சந்திரா சுவாமி ஆகியோரை 
விசாரிக்க வேண்டுமென கூறியும், அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்திற்க்காக 
விசாரிக்காமலேயே வழக்கை  முடித்து விட்டார்கள்.

த‌மிழ் சிறி அண்ணா , இந்தியா என்ர‌ நாடு ஒரு போதும் வ‌ல்ல‌ர‌சு நாடா ஆகாது , 

2020ம் ஆண்டு இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடு ஆகிடும் என்று சொன்னார்க‌ள் , இந்தியா வ‌ல்ல‌ர‌சு ஆகிடிச்சா , 

ஜ‌ரோப்பா போன்ற‌ நாடுக‌ளில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்யும் அது யாரா இருந்தாலும் , ஆனா இந்தியாவில் அப்ப‌டியா ,  இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாது / 

அது தான் இந்திய‌ ம‌க்க‌ளின் பின்ன‌டைவுக்கும் ம‌ற்றும் இந்தியா நாடு வ‌ள‌ர்ச்சி பாதைக்கு போகாத‌ர்க்கு முழு கார‌ண‌ம் / 

134கோடி ம‌க்க‌ளை கொண்ட‌ இந்தியாவில் ஒலிம்பிக் போன்ர‌ உல‌க‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் இர‌ண்டு ப‌த‌க்க‌ம் தான் பெற‌ முடிஞ்ச‌து , 34கோடி ம‌க்க‌ளை கொண்ட‌ அமெரிக்க‌ன் நூறு ப‌த‌க்க‌ங்க‌ளுக்கு மேல‌ வென்று கொண்டு போராங்க‌ள் , இது இந்திய‌ ம‌க்க‌ளுக்கு வெக்க‌க் கேடு / 

என்ன‌ த‌மிழ் நாட்டில் 
ந‌ல்ல‌ உள்ள‌ம் ப‌டைச்ச‌ எம் உற‌வுக‌ள் வாழ்கிறார்க‌ள் , அவ‌ர்க‌ளின் ம‌ன‌ம் புண் ப‌ட்டு விட‌க் கூடாது என்ர‌ ப‌டியால் , 
ப‌ல‌த‌ அட‌க்கி வாசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

லாரா யார் யாரை சி.ஐ.ஏ கொன்றது என்று எழுதாமல், யாரையெல்லாம் சி.ஐ.ஏ கொல்லவில்லை என்று எழுதினால் அந்தப் லிஸ்ற் இலகுவான குறுகிய லிஸ்ற்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

இது லாராவுக்கல்ல: இப்படியான அரைகுறை மொழிப்புரிதலை வைத்துக் கொண்டு லாரா மாதிரியான நபர்கள் பின்னும் கற்பனைக் கதைகளை நம்புவோருக்காக மட்டும்..

https://www.cia.gov/library/readingroom/docs/CIA-RDP86T00302R000300520006-9.pdf

இது தான் சி.ஐ.ஏ தன் இணையத்தில் இரகசியம் நீக்கி வைத்திருக்கும் ஆவணம். இது NIE எனப்படும் எல்லா நாடுகளையும் பற்றி சி.ஐ.ஏ தயாரிக்கும் ஒரு ஆவணம், இதில் பக்கம் 6, பொயின்ற் 12, பக்கம் 7, பொயின்ற் 15 என்பன லாரா சொல்வதைச் சொல்கின்றன, ஆனால் அவர் விளங்கிக் கொண்ட அர்த்தத்தில் அல்ல! அரைகுறை விளக்கத்திற்குக் கற்பனையைப் போட்டு நிரப்பி இப்படி நிறையக் கதைகளைச் சொல்வார்கள்! மூலத்தைத் தேடி அறிந்து கொண்டால் தெளிவு கிடைக்கும் என்பதற்கு ஒரு சிறு உதாரணமாக மட்டும் இதை இணைக்கிறேன்.  

நன்றி ஜஸ்டின்,

நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களையும் பந்திகளையும் படித்துப் பார்த்தேன். எனது அறிவிற்கு எட்டிய வகையில் அங்கே சதிக் கோட்பாட்டிற்கான ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே? ஒருவேளை, சங்கேதக் குறியீடுகளைப் பாவித்து இந்த ரகசிய அறிக்கைகளைத் தயாரித்து இருப்பார்களோ, ஒரு சில பேரின் கண்களுக்கு மட்டுமே புரியும் படியாக??!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2019 at 5:04 PM, தமிழ் சிறி said:

எந்த ஒரு நாட்டிலாவது... நீதித் துறையில், அரசு தலையிடுமானால், 
அந்த அரசினால்... மக்களுக்கு பெரும் சிரமம். இந்தியாவில்.. இந்தத் தலையீடு  அதிகம்.
ராஜீவ் கொலை வழக்கில்... சுப்பிரமணிய சாமி, சந்திரா சுவாமி ஆகியோரை 
விசாரிக்க வேண்டுமென கூறியும், அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்திற்க்காக 
விசாரிக்காமலேயே வழக்கை  முடித்து விட்டார்கள்.

சிறி அண்ணை,

இது பல வளர்ந்த நாடுகளிலும் நடக்கும் விடயம்தான். கீழே அமெரிக்க அதிபர்களால் பொது மன்னிப்பு அளிக்கப் பட்டோரின் விபரத்தை இணைத்துள்ளேன். நம்மட கிளிண்டனார் கொகேய்ன் வழக்கில் சிக்கிய சொந்த தம்பியையே மன்னித்து! விட்டுள்ளார். 

https://en.m.wikipedia.org/wiki/List_of_people_pardoned_or_granted_clemency_by_the_President_of_the_United_States 

ராணியை நாட்டின் தலைவராக கொண்ட பொதுநலவாய நாடுகளில் ராணியின் பெயரால், அரசாங்க மந்திரிகள் பொது மன்னிப்பு வழங்கும் வழக்கம் இருக்கிறது.

https://en.m.wikipedia.org/wiki/Royal_prerogative_of_mercy

இது நீதிதுறையில் தலையீடுதான். ஆனால் இந்தியா/இலங்கையில் மட்டும் நடப்பதில்லை.

Link to comment
Share on other sites

21 minutes ago, ரஞ்சித் said:

நன்றி ஜஸ்டின்,

நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களையும் பந்திகளையும் படித்துப் பார்த்தேன். எனது அறிவிற்கு எட்டிய வகையில் அங்கே சதிக் கோட்பாட்டிற்கான ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே? ஒருவேளை, சங்கேதக் குறியீடுகளைப் பாவித்து இந்த ரகசிய அறிக்கைகளைத் தயாரித்து இருப்பார்களோ, ஒரு சில பேரின் கண்களுக்கு மட்டுமே புரியும் படியாக??!!!

அவர்கள் இறப்பு பற்றி முன்பே கதைத்ததும் அது நடந்ததும் பற்றியே என் கருத்து அமைந்தது. கொலையில் CIA பின்னணி இருந்ததற்கு அது ஒரு ஆதாரம். பலர் கண்களுக்கு அது தெரியப்போவதில்லை.

சிலருக்கு இலங்கை இராணுவம் Mossad இடம் பயிற்சி பெற்ற விடயம் கூட தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2019 at 11:23 PM, goshan_che said:

சிறி அண்ணை,

இது பல வளர்ந்த நாடுகளிலும் நடக்கும் விடயம்தான். கீழே அமெரிக்க அதிபர்களால் பொது மன்னிப்பு அளிக்கப் பட்டோரின் விபரத்தை இணைத்துள்ளேன். நம்மட கிளிண்டனார் கொகேய்ன் வழக்கில் சிக்கிய சொந்த தம்பியையே மன்னித்து! விட்டுள்ளார். 

https://en.m.wikipedia.org/wiki/List_of_people_pardoned_or_granted_clemency_by_the_President_of_the_United_States 

ராணியை நாட்டின் தலைவராக கொண்ட பொதுநலவாய நாடுகளில் ராணியின் பெயரால், அரசாங்க மந்திரிகள் பொது மன்னிப்பு வழங்கும் வழக்கம் இருக்கிறது.

https://en.m.wikipedia.org/wiki/Royal_prerogative_of_mercy

இது நீதிதுறையில் தலையீடுதான். ஆனால் இந்தியா/இலங்கையில் மட்டும் நடப்பதில்லை.

கோசான்.... எல்லாரும், வெள்ளை வேட்டி கட்டின.. கள்ளர் போலை இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

நான் எழுதிய கருத்து ஆதாரமில்லை என கூறப்பட்டு நீக்கப்பட்டுள்ளதால் இதை இங்கு இணைக்கிறேன். உண்மை தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் வந்து சொல்லுங்கப்பா.

B2ECA047-02D0-436F-8AFF-635FE08B0DE8.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.