Sign in to follow this  
கிருபன்

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

Recommended Posts

மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

Last updated Jun 11, 2019

“இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.”

வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும்.

Thurairaja-04-copy-copy.jpg

பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரின் கருத்தல்ல; தமிழினத்தின் ஒட்டுமொத்தக் குரலும் – உணர்வும் இதுதான். இந்த உணர்வை பேராசிரியரின் பிரிவுபசார நிகழ்ச்சிகளின்போதும், பின்னர் அவரது மரணச்சடங்குகளின் போது மொதுமக்களும், மாணவர்களும், சக கல்விமான்களும் அவருக்குச் செலுத்திய இறுதி மரியாதையிலும் கண்டுகொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூடுவதுபோல, தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டையும் கெளரவ விருதையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டார். பிரிவுபசாரத்தின்போது பேராசிரியரின் பணியைப் பாராட்டி ஒரு செய்தியையும், பேராசிரியர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செய்த ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டு, பேராசிரியருக்கு ஒரு அதி உச்சக் கௌரவத்தைத் தலைவர் கொடுத்திருந்தார்.

ஈழத்தமிழினம் கல்விப் பாரம்பரியம் மிக்க ஒரு மக்கள் இனம் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வர். உலகம் போற்றும் கல்விமான்கள் பலரை தமிழீழ அன்னை பெற்றேடுத்துள்ளாள் என்பதும் மறுக்கப்படமுடியாத உண்மை. ஆனால் இவர்களுள் எத்தனைபேர் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்தார்கள்? எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள்? அறிவின் உச்சத்தில் பணிவைக் கடைப்பிடித்து மக்கள் சேவகனாக, மக்களில் ஒருவனாக வாழ்ந்த மண்பற்றுள்ள பேராசான்கள் எத்தனைபேர்?

Thurairaja-02-copy-copy.jpg

இந்த வினாக்களுக்கு விடையாக “பேராசியர் துரைராசா!” என்று எல்லோரும் ஒருமித்துக் கூறுவார். அந்தளவுக்கு பேராசிரியரின் அறிவும், பண்பும், பணிவும், தனிப்பட்ட வாழ்வும், மேன்மையுடையதாக அமைந்திருந்தன.

தமிழ் மக்களின் சொத்துக்களின் ஒன்றாகிய கல்விக்குப் பேராபத்து நேர்ந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமிழரின் உயர் கல்விக்கு புத்துயிர் ஊட்டி, புது இரத்தம் பாய்ச்சியிருந்தார் என்பது வரலாற்று உண்மை.

அவர் வகித்த பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியங்களும் சிங்கள அரசின் கைகளில் இருந்தபோதும், தமிழீழ தேசத்திற்கு, தமிழ் மக்களுக்கு சேவை புரிவதற்கு அவற்றை ஒரு தடையாகச் சொல்லி இவர் தப்பிக்க முயன்றதில்லை. அவர் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கலந்துரையாடல்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், தமிழினத்துக்கு எதிரான ஒடுக்குமுறைபற்றியும் தமிழீழ தேசியம் பலம்பெறவேண்டிய அவசியம் பற்றியும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை எடுத்துக்கூறுவார்.

Thurairaja-01-copy-copy.jpg

நூல் வெளியீட்டு விழாவிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

கல்வி மற்றும் அபிவிருத்தி சம்மந்தப்பட்ட கூட்டங்களிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

பேராசானுக்கு விருது சூட்டி மகிழும் பெருந்தலைவன்

“தேசப்பற்றோடும், மக்கள் நேயத்தோடும் மண்ணுக்கு அவர் மகத்தான சேவை ஆற்றினார்.”

சக கல்விமான்கள் மற்றும் வேற்று இன நண்பர்களுடன் கலந்துரையாடும்போதும் தமிழீழ தேசியத்தை வலியுறுத்திப் பேசுவார்.

ஏன்! அவருக்கு நடந்த பிரிவுபசாரக் கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.

தமிழீழத்தில் நடந்த கூட்டங்களில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தில், கல்விமான்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் அதையேதான் பேசினார்; வெளிநாடுகளில் நடந்த சந்திப்புக்களிலும் அதையேதான் வற்புறுத்தினார்.

Thurairaja-04-copy-copy.jpg

தமிழரின் சுயநிர்ணய உரிமைபற்றியும், தமிழீழ தேசியத்தைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் பேசுவதற்கு ஒர்போழுதும் அவர் அஞ்சியதுமில்லை; பின் வாங்கியதுமில்லை.

அதேவேளை. உலகளாவியரீதியில் தத்தமது வாழ்க்கைச் சக்கரங்களைச் சுழற்றுவதற்குத் திண்டாடும் ஏழை மக்களையும் அவர் அடிக்கடி நினைவூட்டிப் பேசி, அந்த மக்களின்பால் தான் வைத்திருக்கும் கரிசனையையும் எடுத்துரைப்பார். 500 கோடி உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் பட்டினிக்கு முகங்கொடுத்து வாழப்போராடுகின்றனர் என்று எடுத்துக்கூறி, அந்தத் துர்ப்பாக்கியநிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறுவார்.

“அரசு திட்டமிட்டு தமிழரின் கல்வியை அழிக்க முநிகின்றது. ஆனால் தமிழினத்தின் கல்வியை அழியவிடாது பாதுகாப்பது எங்களின் கடமை” என்று, வதிரியில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய பேராசிரியர் அவர்கள்…………….

“எமது இயற்கை வளத்தையும் கல்வியால் பெறப்படும் மூளைவளத்தையும் கொண்டு எமது மனத வளத்தையும் சரியாக வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, எமது தேசத்தின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்” என்று தேசியப் பிரக்ஞையுடன் பேசினார். அத்துடன் நின்று விட்டாரா…………..?
இல்லை.

“கிராமங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளரும்” என்றார்.

“ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்ந்தால்தான் கிராமம் வளரும்” என்றார்.

“இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்த சனசமூக நிலையங்கள் பாடுபடவேண்டும்” என்றும் அறிவுரை கூறினார்.

Thurairaja-03-copy-copy.jpg

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயம்பற்றி சிங்கள தேசத்தில், சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதிக்கும்போது, எதிராளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டோ அல்லது தன்னலத்தை அடிப்படையாகக்கொண்ட காரணங்களுக்காகவோ விட்டுக் கொடுத்தோ அல்லது ‘சளாப்பிக்’ கதைத்தோ இல்லை. இந்த நேர்மையை தெளிவான அவரது அரசியல் நிலைப்பாட்டை, பேரினவாத உணர்வுடன் உள்ள சிங்கள இனத்தின் புத்திஜீவிகள் கூட மதித்தனர்.

பிரிவுபசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது பேராசிரியர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஒருநாள் கத்தோலிக்கச் சிங்களவரான ஒரு கல்விமான் பேராசிரியரிடம் சொன்னாராம்.

“சிங்களவர் மத்தியில் கத்தோலிக்கரான நாங்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கின்றோம். அதனால் பௌத்த சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுத்து, சகிப்புத் ஹன்மையுடன் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக, அமைதியாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். அதுபோல நீங்களும் (தமிழினம்) விட்டுக்கொடுத்து அமைதியாக வாழலாம்தானே” என்று.

இதற்குப் பதில்கூரும்போது, சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின விரோத நடவடிக்கைகளை பேராசிரியர் விளக்கிவிட்டு,

“…………தமிழர் ஒரு தேசிய இனம் (Nation); அவர்களுக்கு என்றொரு தனித்துவமான நிலமுண்டு, அதேபோல மொழி உண்டு, பண்பாடுண்டு, பொருளாதார வாழ்வுண்டு, ஆகவே அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிசெய்ய விரும்புகின்றார்கள்” என்று பதிலளித்தாராம்.

இந்த விடயங்களை ஒரு கூட்டத்தில் வைத்து பேராசிரியர் அவர்களே தெரிவித்தார்.

தமிழீழத் தேசிய உணர்வுடன் பேசியது மட்டும்தானா பேராசிரியர் செய்த பணி? இல்லை; பேசியபடி வாழ்ந்தும் காட்டியதுதான் அந்தப் பேராசானின் பெருமைக்குக் காரணம்!

“சலுகை ஏறக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கிண்றீர்கள்?” என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராற்ற வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.

“எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும். நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்” என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.

இன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார். அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.

பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய அந்த உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடிகொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

யாழ்.பல்கலைக்கழக கட்டடமொன்றில், ‘துணைவேந்தர்’ என்ற பெயர்பலகையுடன் அதியுயர் அதிகாரத்தையும் கொண்ட அந்த அறையினுள் பேராசிரியர் இருக்கும்போது, பாலர் வகுப்பறை போன்றே அது தென்படும். பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றூழியர்கள் சகஜமாக உள்ளே போவதும், சந்தோசமாக உரையாடுவதும், சிரித்த முகத்துடன் வெளியே வருவதும் வழமையான காட்சிகள்.

சாதாரணமாக இத்தகைய உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கவே சிரபப்படும் நிலையில், அன்றாடம் இவரை எல்லோரும் சிரமமின்றிப் பார்த்தனர்; அவருடன் பேசினார்.

அவரது சொந்தக் கிராமத்திலும் உயர எழுப்பிய மதில்சுவருக்குள் சிறையிலிருந்து, மக்களிடமிருந்து அன்னியப்பட்டு அவர் வாழவில்லை.

சனசமூக நிலையம் சென்று பத்திரிக்கை வாசித்தார்; குடும்பத்தாருடன் சேர்ந்து தோட்டம் செய்தார்; கிராமத்து வீதிகளில் நின்றபடி மக்களுடன் அன்றையப் புதினங்களைப்பற்றிக் கதைத்தார்; மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்ப ஒரு சில நாட்கள் முன்னர் பேராசிரியரை அழைத்த புலிகளின் அரசியல் துறையினர், அவரது சேவையைப் பாராட்டும் முகமாக ஒரு விருந்துபசாரம் நடாத்தி அவரைக் கௌரவித்தனர். தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட அந்த நிகழ்வில் பேராசிரியர் துறைராசாவும் உரையாற்றினார்.

வழமைபோலவே போராட்டத்தின் தேவை பற்றியும், சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை பற்றியும், தன்னிறைவான பொருளாதாரத்தின் அவசியம்பற்றியும் பேசினார். அப்பேச்சின் ஒரு கட்டத்தில்…..,

“……..எமது இனத்தின் விடுதலைக்காக தங்களது உயிரைத் தியாகம்செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விடும்புகின்றேன்” என்று, தனது தூய நாவால் போராளிகளை மதித்து உரையாற்றிய அந்தப் பெருந்தகை, எம்மைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.

பேராசிரியர் துரைராசா அவர்கள், புலமையும் பரந்த பார்வையும் கொண்ட பேராசான் மட்டுமல்ல….,

தமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தெடுத்த ஒரு மக்கள் சேவகன் மட்டுமல்ல……,

தமிழீழ அன்னைக்குத் தொண்டு செய்த அதன் தவப்புதல்வன்.

தமிழீழ அன்னைக்கு வலுச்சேர்க்கப் பாடுபட்ட ஒரு தேசப்பற்றாளன்.

ஒரு உண்மை மனிதன்.

தமிழினத்தின் கல்வியில் அவரது சேவை ஒரு கலங்கரை விளக்கு.

உலகக் கல்விமான்கள் மத்தியில் அவர் ஒரு அறிவுப் பழம்.

எமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும்போது அவர் ஒரு போராளி.

அவரது கிராமத்திலோ வேட்டி கட்டிய ஒரு விவசாயி.

இவ்விதம் மக்களின் அனைத்து மட்டங்களிலும் தனது பண்பான, நேர்மையான, பணிவான, சேவையால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட பேராசிரியரின் திடீர் மறைவு, தமது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பைத்தான் மக்கள் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது.

தனது உணர்வை வெளிப்படுத்த வதிரிக் கிராமத்தின் அந்த முதியவர் பயன்படுத்திய வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது!

“பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும்!”

-நினைவுப்பகிர்வு:- எல்லாளன்.
வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ் 

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

https://www.thaarakam.com/2019/06/11/மாமனிதர்-பேராசிரியர்-துர/

Share this post


Link to post
Share on other sites

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

Share this post


Link to post
Share on other sites

அவரிடம் மாணாக்கனாக இருந்திருக்கிறேன் என்பதில் மற்றையோரை போல நானும் பெருமை கொள்கிறேன்.
அவர் மறைவதற்கு சில நாட்களின் முன் வைத்தியசாலையில் அவரை சென்று பார்த்திருந்தேன் । மிகவும் சாதாரணமாகவும் எப்போதும் போல இயல்பாகவும் இருந்தார்.
அவருடைய தவிபு உடனான தொடர்புகள் தெரிந்திருந்தும் , இற்றை வரைக்கும் பெரும்பான்மையினத்தை சேர்ந்த எமது சக மாணவர்களோ வேறு எவருமோ அவரை பற்றி எந்த விதமான எதிர்நோக்கு கருத்துக்களை வைத்து நான் அறிந்ததில்லை .

அவரிடம் மாணாக்கனாக இருந்திருக்கிறேன் என்பதில் மற்றையோரை போல நானும் பெருமை கொள்கிறேன்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அது 1993 இன் ஓர் நாள். வவுனியா நோக்கி செல்வதற்காக புலிகளின் ஓமந்தைச் சாவடியில் பாஸ் நடைமுறைகளை முடித்துவிட்டு, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்காகக் காத்துநிற்கின்றோம். அப்போது அந்த வாகனமமும் எங்கள் பகுதியில் வந்துநின்றது. புலிகளது பொறுப்பாளர் ஒருவர் வாகனத்தின் கதவைத்திறந்துவிட, அதிலிருந்து அந்த உயர்ந்த மனிதர் தனது சிறிய கைப்பையுடன் இறங்கி எங்களோடு வந்துநின்றார்.

தொழில்நிமித்தம் இராணுவகட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நித்தமும் சென்றுவரும் வியாபாரிகளை புலிகள் முதலில் அனுப்புவார்கள். அவர்கள் அப்போது ஏறக்குறைய மூன்று மைல்களாக இருந்த சூனியப்பிரதேசம் என்றழைக்கப்பட்ட, இராணுவத்தினதோ இல்லை புலிகளதோ பிரசன்னம் இல்லாத, இரு பகுதி 'சென்றி'களுக்குமிடைப்பட்ட பகுதியைத் தாண்டி இராணுவ சென்றியை சென்றடைந்து, பிரைச்சினைகள் ஏதுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னர் புலிகள் பொதுமக்களைச் செல்ல அனுமதிப்பார்கள்.

சிலவேளைகளில், இராணுவப்பகுதியில் இருந்து ஆட்கள்வரும்வரை காத்திருந்து, பொதுமக்கள் செல்லப் பிரைச்சினைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியபின் தங்கள் பகுதியிலிருந்து மக்களைச் செல்ல அனுமதிப்பார்கள்.ஏனெனில் இருபக்கத்திற்குமிடையில் பொது மக்கள் சென்றுவருவது பற்றிய தகவல்பரிமாற்றம் ஒன்றும் இருந்ததில்லை. சிலவேளைகளில் மக்கள் சென்றுகொண்டிருக்கும்போது ஆமி சுடத்தொடங்குவான். அவ்வாறான சூழ்நிலையில் சூட்டிற்கு மாட்டுப்பட்டு பல பொதுமக்கள் இப்பகுதிகளில் மரணித்திருக்கின்றார்கள்.

எங்களைச் செல்ல புலிகள் அனுமதித்ததும், வாகனங்கள் ஏதுமற்ற அந்த சூனியப்பிரதேசத்தை இயலுமானவர்களோ இயலாதவர்களோ , குழந்தைகளோ குட்டிகளோ என்றவேறுபாடு ஏதுமற்று, எல்லோரும் நடந்தே செல்லவேண்டும் என்றளவில் எல்லோரும் நடந்து சென்றுகொண்டிருக்கின்றோம். அப்போதுதான் கவனித்தேன், எங்களோடு புலிகளின் சென்றியில் புலிகளது பொறுப்பாளரால் கைலாகுகொடுத்து வழியனுப்பப்பட்ட அந்த உயர்ந்த மாநிற மனிதரும் வந்துகொண்டிருந்தார். படித்த மிகவும் பண்பாளராகத்தெரிந்தாலும் எங்களுக்குள் ஒரு கலக்கம், இவரைப் புலிகள் கொண்டுவந்து, மக்கள்முன்னே வெளிப்படையாக அதுவும் கைலாகு கொடுத்து இறக்கிவிட்டபடியால், எம்போன்ற மக்கள்வடிவில்வரும் படையினருக்கு தகவல் சொல்லுபவர்கள், ஏன் பொதுமக்களை ஆமி விசாரிக்கும்போதே அவர்களே சொல்லுவார்களே, சொன்னால் அந்த உயர்ந்த மனிதருக்கு சிங்கள இராணுவம் என்னசெய்யும் என்று எண்ணியவாறு எதற்கும் அவரிடமிருந்து கொஞ்சம் பின்தள்ளிச் செல்லுவோம் என்று யோசித்தவாறே சென்று கொண்டிருக்கின்றோம்.

ஆமியின் சென்றிக்கு கிட்டவாகச்சென்றதும், வயல்வரம்பினூடு ஒருவர்பின் ஒருவராகச்செல்லவேண்டும். தப்பித்தவறி வரம்பைவிட்டு கிழே இறங்கினால் மிதிவெடிவெடிக்கும் என்கின்றநிலை.

சென்றியில் நிற்கும் இராணுவமும் தலையாட்டிகளும் வரும் பொதுமக்கள் ஒவ்வொருவரையும் கண்காணித்தபடி இருப்பார்கள்.

நாங்கள் எதிர்பார்த்தவாறே, சென்றிக்கு அருகாமையாகச்செல்லும்போது, ஒருவித பதட்டம் இராணுவத்தினரின் மத்தியில் காணப்படுகின்றது. அப்பகுதிக்கு பொறுப்பான இராணுவ மேயர் ஒருவர் நான்கைந்து படையினர் சூழ எங்களை நோக்கிவருகின்றனர். எங்களுக்கு முன்னே ஒரு ஏழெட்டுப்பேருக்கு முன்னே அந்த உயர்ந்தமனிதர் சென்றுகொண்டிருக்கின்றார்.

நாங்கள் ஏதோ பிசகிவிட்டது என்று யோசிப்பதற்கிடையில், அந்த சம்பவம் இடம்பெற்றுவிடுகின்றது.

முன்னே சென்ற அந்த உயர்ந்தமனிதர் இராணுவத்தின் சென்றியைத்தாண்டி உள்ளே செல்லவும், அந்த இராணுவ மேஜர் அவரை நோக்கிவரவும் சரியாக இருந்தது. முன்னரே எதிர்பார்த்ததுபோலவே, யாரோ போட்டுக்குடுத்து, அவரை இராணும் கைது செய்யப்போவதாகவே அக்கணத்தில் நினைத்தேன்.

ஆனால் நடந்ததோ வேறு. வந்த இராணுவ மேஜர், அந்த மனிதருக்கு சலூட் அடித்து கைலாகு கொடுத்ததுடன், கட்டிப்பிடித்து தனது அன்பையும் வெளிப்படுத்திக்கொண்டான்.

அந்த உயர்ந்தமனிதர் வேறுயாருமில்லை, அவரது மறைவின் முகமாக, சரிநிகர் பத்திரிகையில் நினைவுக்கட்டுரையொன்றில், புலிகளை கடுமையாக வமர்சிக்கும், பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் எழுதியதைப்போல, புலிகளையும் அவர்களது பக்க நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களின் நிர்வாகப்பகுதியினுள் கடைமையாற்ற விரும்பிச்சென்ற, மண்ணியல் பொறியல்துறையில் தனதுபெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்,பேராசான் அழகையா துரைராஜாவேதான் அந்த உயர்ந்த மனிதர்.

அந்த இராணுவ மேஜர், அவரிம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர்.

துரைராஜா அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் தலைவராக (dean) இருந்தொவொரு காலப்பகுதியில், சிங்கள மாணவர்கள், துணேவேந்தரை அவரது அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாதவரை அவரை விடுதலை செய்யமாட்டோம் என்றுவிட்டார்கள். எத்தனையோ பேராசிரியர்கள் மாணவர்களோடு பேசமுயன்றும், மாணவர்கள் மறுத்துவிட்டு, அவர்கள் நிபந்தனை போட்டார்கள், நாங்கள் பேசுவதாக இருந்தால், அது பேராசிரியர் துரைராஜா அவர்களிடம் மட்டுமே என்று. தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது, மாணவர்களோடு சென்று பேசி, அப்பிரைச்சினை சுமூகமாக முடிய வழியேற்படுத்தினார்.

அதுபோல அவர்மறைந்த பின்னர், ஒரு நாள் அதே பேராதனையில் கல்விகற்றுக்கொண்டிருந்த அவரது மூத்தமகள் தங்கியிருந்தவீட்டில் சோதனையில், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுவிடுகின்றார், அதை அறிந்ததும், பேராதனைப் பொலிஸ் நிலையத்தில் ஏகப்பட்ட வாகனங்களில் வந்து இறங்கினர், பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொலிசாரே மிரண்டுவிட்டனர், தாங்கள் யாரோ மினிஸ்ரரின் மகளைக் கைதுசெய்துவிட்டோமோ என்று.

அவரின் இறுதிவணக்க நிகழ்வுகள் அவரது சொந்த இடமான, இரும்புமதவடி என்னும், உடுப்பிட்டி மாலிசந்தி வீதியில் நவிண்டிலுக்கு அடுத்த ஊரில் நடைபெற்றன. புலிகளது சார்பில் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களும், திரு பொட்டு அம்மான் அவர்களும் பங்குகொண்டிருந்தனர்.

முழுத் தமிழ் உலகமுமே அவரது மறைவிற்காகக் கண்ணீர் விட்டது. ஏனெனில் அவர் ஒரு கல்விமான் என்பதற்காக அல்ல. சமூக மனிதனாக வாழ்ந்து தனது தேசத்திற்கு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும் என்கின்ற அந்த மனிதாபிமானத்திற்காக.

 
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சென்ற முறை ஈழ உறவுகளுக்காக நாம் தமிழர் நண்பர்களிடம் பேசி உதவி செய்தார். இப்போதும் நாம் தமிழர் கட்சி மக்கள் பசி போக்க கைக் கொடுத்துள்ளனர். மிக்க நன்றி தோழர்களே. முன் பின் அறிமுகம் இல்லையெனிலும் மனிதம் காக்க எதுவும் தடையில்லை என்பதை மறுபடியும் மெய்ப்பித்துள்ளீர்கள். நன்றி   #NTK
  • தமிழகம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள்-முழு விவரம்! மின்னம்பலம் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது.   இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 31) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். சில தளர்வுகளையும், தடைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், எதற்கெல்லாம் தடைகள் *வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். .· நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. *தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.   *வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம். *சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள். அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். கட்டுப்பாடுகள் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இ-பாஸ் முறை · வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். எவற்றிற்கு அனுமதி பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது *தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.   *அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். *வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. * 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.   *டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. * மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. *வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் பாஸ் இன்றி பயன்படுத்தலாம். *ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது. * முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்குமட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது *தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. *தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். *அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். *வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. *டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். *மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. *மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. * அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. *வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. * ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது. *பொது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். *தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். https://minnambalam.com/politics/2020/05/31/24/tamilnadu-lockdown-extented-june-30  
  • சுமந்திரனின் வெற்றியும் தோல்வியும் -கபில் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக் கடந்தும், தமிழர் தரப்பு அரசியலில், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டிருப்பவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியானது, தமிழரின் ஆயுதப் போராட்டத்தை தவறு என்று கூறி விட்டார் என்று தமிழ் அரசியல் பரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சுமந்திரன், அவ்வாறு கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி, அவரது தமிழ் அரசுக் கட்சிக்குள்ளேயே இந்தக் கருத்து சுமந்திரனுக்கு எதிரான அலையை தோற்றுவித்தது. சுமந்திரனின் ஆட்கள் என்று கூறப்பட்டவர்கள் கூட, இந்தக் கருத்தினால் சினமடைந்தனர். அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும், தவறான மொழியாக்கத்துடன், தமது செவ்வி தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டு விட்டதாக சுமந்திரன் அதனை நியாயப்படுத்திக் கொண்டார். அது மாத்திரமன்றி, தவறான நோக்கத்துடன் கேட்கப்பட்ட கேள்வியை, சரியானமுறையில் அணுகியிருக்கிறார் சுமந்திரன் என்று சான்றிதழ் கொடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முயன்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். எவ்வாறாயினும், அந்தச் செவ்வியில் ஆயுதப் போராட்டத்தின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் கூற முயன்றது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும்- தமிழர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டதை, அந்தச் சந்தர்ப்பத்தில் சுமந்திரன் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே, பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்தது. கொரோனாவுக்குப் பின்னர் தமிழ் அரசியல் பரப்பில் சூட்டைக் கிளப்பி விட்ட இந்த விவகாரம் இப்போது சற்று அடங்கி விட்டது. சுமந்திரனும் இப்போது கொழும்பில் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும், வழக்கில் கவனம் செலுத்தி வருகிறார். ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி உத்தரவை ரத்துச் செய்து உத்தரவிடக் கோரியும், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தான் முக்கியமாக வாதிட்டு வருகிறார். முதலாவதாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சரித்த குணரத்னவின் சார்பில், அவர் முன்னிலையாகிறார். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா - இல்லையா என்ற பரிசீலனையே தற்போது உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாமின் முன்பாக நடந்து வருகிறது. கடந்த 18ஆம் திகதி தொடங்கிய இந்தப் பரிசீலனை, இந்தப் பத்தி எழுதப்படும் போது, இரண்டாவது வாரமாகவும், நடந்து கொண்டிருக்கிறது. பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதா என்று உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும். நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தலை பிற்போட வேண்டும், நாடாளுமன்றத்தை கூட்டி, பிரச்சினையை கையாளும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்பது, ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு. எதிர்க்கட்சிகளின் இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்த மனுக்களில், சட்டத்தரணி சுமந்திரனின் வாதங்கள் மிகமுக்கியமானவை. ஆனால், அவர் இந்த மனுக்கள் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கத்தில் இருந்து திடீரென விலகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்து, உத்தரவிட்டார். அதற்கு எதிராக அப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் முதலில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் சுமந்திரன் தான் மிக முக்கியமாக வாதிட்டிருந்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என்று அப்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு சுமந்திரனுக்கு கொழும்பு அரசியலில் பெரும் புகழைத் தேடிக் கொடுத்திருந்தது. அதேவேளை, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காகத் தான் வாதாடுகிறார், ரணில் விக்ரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதற்கே வழக்காடினார் என்ற குற்றச்சாட்டுகளும் தமிழ் அரசியல் பரப்பில் முன்வைக்கப்பட்டன. அண்மையில் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, பிணை கோரி, நீதிமன்றத்தில் சுமந்திரன் முன்வைத்த வாதங்களும் தமிழ் அரசியல்பரப்பில் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அவர் தனது சட்டப் புலமையை, தமிழ் மக்களின் நலனுக்காக , அவர்களின் உரிமைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே கூறப்பட்டு வருகின்றன. அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, வடக்கு, கிழக்கு இணைப்புக்காக, ஏன் அவர் இதனைப் பயன்படுத்த வில்லை என்று, தமிழ் மக்களின் உணர்வுபூர்வ பிரச்சினைகளுடன் சுமந்திரனை தொடர்புபடுத்தி விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இவ்வாறானதொரு நிலையில், தமது கட்சியினராலேயே சுமந்திரன் பெரிதும் கைவிடப்பட்ட நிலைக்குள்ளாகியிருக்கும் சூழலில் தான், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீது அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இந்த மனுக்கள் மீதான பரிசீலனையில் அளிக்கப்படப் போகின்ற தீர்ப்பு, சுமந்திரனைப் பொறுத்தவரையில் மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. இதில் வெற்றி பெற்றால், 2018 அரசியல் குழப்பத்தை முடித்து வைத்த வரலாற்றுத் தீர்ப்பு எந்தளவுக்கு சுமந்திரனுக்கு புகழைத் தேடிக் கொடுத்ததோ, அதுபோன்றதொரு புகழை அவருக்கு கொடுக்கக் கூடும். உயர்நீதிமன்றத்தில் 7 மனுதாரர்கள் சார்பில் வேவ்வேறு சட்டத்தரணிகள் வாதிட்டிருந்தாலும், சுமந்திரனின் வாதமே பிரதானமாக இருக்கிறது. எனவே இந்த வழக்கு தொடர்பாக கிடைக்கக் கூடிய புகழும் சரி, விமர்சனங்களும் சரி சுமந்திரனுக்கானதாகவே இருக்கப் போகிறது. இந்த தீர்ப்பில் வெற்றியைப் பெற்றாலும் கூட, தமிழ் அரசியல் பரப்பில் சுமந்திரனின் வாதத்திறமை போற்றப்படுமே தவிர, அவர் தெற்கின் அரசியல் சக்திகளுக்காகத் தான் வாதாடுகிறார் என்ற விமர்சனங்கள் முடிவுக்கு வரப்போவதில்லை. அதேவேளை இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டால், அதுவும் கூட சுமந்திரனின் தோல்வியாகத் தான் தமிழ் அரசியல் பரப்பில் பிரசாரப்படுத்தப்படும். எதிர்க்கட்சிகளின் தோல்வியாக அது பார்க்கப்படுவதை விட, சுமந்திரனின் தோல்வியாகவே அடையாளப்படுத்தப்படும். ஏனென்றால் அவர் அரசியலில் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவராக பெரும்பாலானவர்களாக பார்க்கப்படுகிறார். அவ்வாறான ஒருவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தோல்வியடையும் போது கூட, அரசியல்வாதியின் தோல்வியாகத் தான் பூதாகாரப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த மனுக்களைப் பொறுத்தவரையில் சுமந்திரனுக்கு மிக முக்கியமானவை. உயர்நீதிமன்றம் அளிக்கப் போகும் தீர்ப்பு அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம். ஆனால், அது தமிழ் அரசியலில் அவருக்கு சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.   https://www.virakesari.lk/article/83109
  • என்ன‌ தாயே , நான் நினைத்தேன் நீங்க‌ள் வீர‌ம‌ங்கை என்று , போயும் போயும் அட்டைக்கு ப‌ய‌ப்பிடுறீங்க‌ள் 😁, சீனா கார‌னிட்டை அட்டைய‌ குடுத்தாலு அவ‌ங்க‌ள் உண‌வாய் சாப்பிடுவாங்க‌ள் 😀 ( லொள் ) சின்ன‌னில் நானும் அக்காவும் அம்ம‌ம்மா வீட்டில் இருந்த‌ போது அட்டைக்கு ப‌ர்க்க‌த்தில் போய் இருந்து கூ என்று க‌த்துவோம்  அட்டை உட‌ன‌ சுருங்கிடும் , இப்ப‌ அக்காவே சொல்லுவா ஊருக்கு போயிட்டு வ‌ந்து , மாமா வீட்டில் தான் அட்டைய‌ பார்த்த‌ இர‌வில் இருந்து தூங்க‌ வில்லை என்று / அட்டையோட‌ சின்ன‌னில் விளையாடின‌ என‌து அக்காவுக்கே அல‌ர்சி என்றால் அந்த‌ அலர்சி உங்க‌ளுக்கும் இருக்கும் 😊
  • நன்றாக தெரிந்த உண்மையை பலவீனப்படுத்தும் வகையில் அதிகப்பிரசங்கி தனமா சிந்திச்சு எரித்த சிங்களவனை காப்பாற்றுவதை விட புதுசா சாதிக்க போவது ஒன்டுமில்லை.