யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
புரட்சிகர தமிழ்தேசியன்

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பி தர வேண்டும் ..!

Recommended Posts

Posted (edited)

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !!

rajeev-2-jpg_1200x630xt.jpg

இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இங்கிருந்து அள்ளிச் சென்ற சொத்துக்களை அந்நாடுகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கிந்திய கம்பெனி மூலம் வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த இங்கிலாந்து கொஞ்சம், கொஞ்சமாக தனது ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதையும் வளைத்துப் பிடித்தது.

வியாபாரம் என்ற பெயரில் இந்தியாவில் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை இங்கிலாந்து , ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் கொள்ளையடித்துச் சென்றன. உதாரணமாக கோகினூர் வைரம் போன்ற அற்புதமான சொத்துக்களை இங்கிலாந்து  நாட்டுக்கு அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.ஆனால் அவர்கள் எடுத்துச் சென்ற சொத்துக்களை திரும்ப கொண்டு வர இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தற்போது பாஜக பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசு அந்த சொத்துக்களை திரும்பவும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து திருடிச் சென்ற சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்க இதுவே சரியான தருணம் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, ஹாலந்து, போர்ச்சுக்கல், ஃபிரான்ஸ்  போன்ற நாடுகள் இந்திய மக்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற சொத்துக்களை திரும்ப இந்தியாவிடமே ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Rajeev Chandrasekhar
🇮🇳
@rajeev_mp
I think a discussion must start abt how n when #GreatBritain can start repaying its debts to #India !

Great Britain Holland Portugal France - its time that they start returning back the wealth they took from “colonies” n the people who it belongs to
How Britain stole $45 trillion from India
aljazeera.com

https://tamil.asianetnews.com/politics/rajeev-chandrasekhar-mp-s-tweet-to-britain-psx2z6

டிஸ்கி :

நியாயமாக இவையள் அவையளுக்குதான் கோயில் கட்டி கும்பிடவேணும் .. 👌 பல்வேறு தேசிய இனங்களை அடிமைப்படுத்தி, ஒன்றாக்கி கிந்தியா என்ற பெயரில் கூட்டு கொள்ளை , ஊழல் செய்ய வழிவகை செய்தமைக்கு..☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பதிலுக்கு....இங்கிலாந்து போட்ட....இரும்புத் தண்டவாளங்களையும்....புகையிரத நிலையங்களையும்....டெல்லி செங்கோட்டை போன்ற கட்டிடங்களின்...பெறுமதிகளையும்....அவர்களுக்குக் கொடுத்தால்....இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளலாம்!

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவிடம் இருந்து கொள்ளை அடித்த சொத்துக்களை திருப்பித் தர வேண்டும் ! இங்கிலாந்து , ஃபிரான்சுக்கு ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. வேண்டுகோள் !!

 

1 hour ago, புங்கையூரன் said:

பதிலுக்கு....இங்கிலாந்து போட்ட....இரும்புத் தண்டவாளங்களையும்....புகையிரத நிலையங்களையும்....டெல்லி செங்கோட்டை போன்ற கட்டிடங்களின்...பெறுமதிகளையும்....அவர்களுக்குக் கொடுத்தால்....இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று ஏற்றுக்கொள்ளலாம்!

புங்கையூரன் அவர்களே! நீங்கள் சந்திரசேகர் எம்.பி. ஐ சாதரணமாக எடைபோடவேண்டாம். அதற்குள் தமிழர் நலனும் அடங்கியிருப்பதை கவனிக்கவேண்டும். இங்கிலாந்தும், பிரான்சும் அனைத்தையும் திரும்பக் கொடுக்க முன்வந்தால்...... தமிழர்களின் அரசும் அவர்கள் நிலங்களும் தமிழர்களிடம் திரும்ப வந்துசேரும் என்பதையும் நினைவில் கொள்ளவும். அவரை ஆதரிப்போம். 🤣 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இவர்களது வாய்ச்சவடாலுக்கு எல்லையே கிடையாது.

டெல்லி மொகலாய இசுலாமியர்கள் ஏகாதிபத்திய வாதிகள், இன்றையபங்களாதேஷ் வரை மேற்கே பரவி இசுலாமிய மார்க்கத்தை தழுவ வைத்த அவர்கள்.... பர்மா, தாய்லாந்து என்று, போய், இசுலாமிய மார்கத்தைக் தழுவிய மலேசியா, இந்தோனேசியாவினை இணைத்திருப்பார்கள்.

தெற்கே ஆந்திராவின் ஹதராபாத், தமிழகம் மதுரை வரை, வந்து இருந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் வந்திராவிடில், முழு இந்தியாவும், இலங்கையும், பர்மாவும், தாய்லாந்தும் இஸ்லாமிய நாடாக மாறி இருக்கும்.

குஜராத்தின் சோமநாதர் கோவிலை 7 தடவை படை எடுத்து வந்து கஜனி முகமது கொள்ளை அடித்தான்.

காசி விசுவநாதர் கோவில், அயோத்தி ராமர் கோவில் தரைமட்டமாகி பள்ளிகள் அமைத்துக் கொண்டார்கள். பின்னர் அதன் அண்மையிலேயே இன்றய ஆலயங்கள் பல ஆண்டுகள் பின்னர் அமைந்தன.

ஆங்கிலேயர்கள், அவைகளில் கை வைக்கவில்லை. இஸ்லாமியர்களிடம் அடித்த காசை கேட்கலாமே. 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • வெளிநாட்டிலென்று பார்த்தா நமது ஆட்களுமா?
  • அப்படியெல்லாம் விடுதலை என்ற வார்த்தையை வைத்து யாரையும் கண்மூடித்தனமாக சுட்டுவதில்லை. ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்(நான் அப்படியல்ல):  உங்கள் பார்வைப்படி பார்த்தால், கோடம்பாக்கம், சிறீபெரும்புதூர் கடந்து செல்லும்போதெல்லாம் 'இவர்களை ஆதரித்தோமே, ஏன் இப்படி நடந்தார்கள்..?' என இந்தியப் பற்றுள்ள எவருக்கும் 'அந்த துன்பியலை மறக்க முடியாது' என அவர்கள் சொல்வதும் சரிதானா..? இதே மனநிலை சிலருக்கு இருப்பதால்தான் ஏழு தமிழர்களின் விடுதலையும் தள்ளிச் செல்கிறது. இப்படி காலம் பூராவும், ஒருத்தர் மாற்றி ஒருத்தர் மனக்குறையுடன் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான், விடிவு வராது சாமிகளே, ஆளை விடுங்கள்..!
  • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
  • இத்தாலி நாட்டில் வாழும் இலங்கையருள் தமிழரை காட்டிலும் சிங்களவர்களே அதிகம். கத்தோலிக்கர்களாக இருக்கும் இவர்கள் இலங்கையில் மேற்கு கரையோர சிங்களவர்களே. இத்தாலி நாட்டில் அதிகம் வசிப்பவர்கள் இருக்கும் இடம் என்ற அர்த்ததில் கொழும்பான் வென்னபுவவில் “இத்தாலி சிங்களவர்” அதிகம் என்கிறார்.
  • வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து 25 பேர் வரை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 10வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் ஜூலை 4ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேலான நாடுகளில் இருந்து அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.தமிழகத்தில் இருந்து  பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் தாக்கல் செய்தவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் கூறினார்.  மாநாட்டில் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள், அதன் பின்னர் இணையதளத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மாநாட்டிற்கு வேண்டிய நிதியுதவியை தமிழக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  வட அமெரிக்கா தமிழ்ச் சங்கமும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார். ஜூலை 4ம் தேதி சிறப்பு பட்டிமன்றம், ஈழத் தமிழ் நாட்டியமும் மரபுகளும், தமிழ் இசை, இளைஞர் போட்டிகள், குறும்பட போட்டிகள், கங்கை கொண்ட சோழன் இராஜேந்திர சோழன் நாட்டிய நாடகம் நடக்க இருக்கிறது. ஜூலை 5ம் தேதி தமிழ் இசை, கவியரங்கம், இலக்கிய விநாடி வினா நடக்க உள்ளது. அன்று மாலை சிகாகோவில் ஐயன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இயற்கையில் பிறந்த தமிழ் - இசைப்பெரும் நாட்டிய நாடகம் நடக்க உள்ளது.  http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505379 மாநாடு நிகழ்வுகள்: ·        நிகழ்த்துநர் : அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) & சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS). ·        நிகழிடம் : சாம்பர்க் (Schamburg) கருத்தரங்கு மையம், சிகாகோ-அமெரிக்கா. ·        நிகழும் நாள் : 4th, 5th, 6th, & 7th ஜூலை 2019. பெரும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் : ஜூலை 4 & 5. ·        உலகத் தமிழ் தொழில்முனைவோர் கூடல் (GTEN) : ஜூலை 6. ·        அணிவகுப்பு & பெருவிருந்து : ஜூலை 6, மாலை. ·        தமிழ் ஆராய்ச்சி மாநாடு : ஜூலை 5 & 6. ·        நினைவேந்தல் : அமரர், முனைவர் வா.செ.குழந்தைசாமி துணைத் தலைவர் – IATR & முன்னாள் துணைவேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம். இம்மாநாடு, அமெரிக்காவில் நிகழ விழைந்து பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஜூலை 4, 5ம் தேதிகளில் தமிழ் ஆராய்சி நகர்வுகளுக்கும், 6ம் தேதி நடக்கவிருக்கும் உலகத்தமிழ் தொழில்முனைவர் கூடலில் அமெரிக்க வாழ் இளம் தொழில்முனைவர்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் மற்றும்  இந்தியா உட்பட உலக நாடுகளில் வசிக்கும் பிரபல தொழில்முனைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என GTEN அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா மூப்பனார் தெரிவித்தார். 10ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தன் துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மாநாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார். https://yourstory.com/tamil/10th-world-tamil-research-conference-in-chicago-ykpc1kms5o