Jump to content

பகற்கொள்ளை அடிக்கும் இங்கிலாந்து GP களுக்கு வருகிறது ஆப்பு.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs)  ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். 

இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன.

சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். 

இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீரமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் பல தமிழர்கள் இந்த ஜிபி தொழிலை விரும்பிச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலை செய்ய விருப்பமில்லை. காரணம்... வேலைப் பளுவுடன் கூடிய வருமானம் என்றால்.. இப்போது இவர்களுக்கு ரெம்பக் கசப்பது தான். 

ஜி பி தொழில் என்று இவர்கள் ஓடுவதன் சூட்சுமம்...???! 

Stethoscope

GP 'ghost patients' to be investigated by NHS fraud squad

https://www.bbc.co.uk/news/health-48600923

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு காலத்தில் இருந்தது. இப்ப 'வாய்ப்பில்லை ராஜா'.

முன்பு prescription charges கட்ட காசில்லை எண்டால், வீட்டில, அரச மானியத்தில் இருக்கும் நண்பர் பெயரில், டாகுத்தார் அய்யா மருந்து எழுதி தருவார். இப்ப 'வாய்ப்பில்லை ராஜா'.

சிலபேர், மானியத்தில் இருக்கிறதா சொல்லி, பார்மஸில இலவசமா பிறகு ஆதாரம் காட்டுறோம் எண்டு  மருந்து வாங்கிக் கொண்டு வருவினம். மனிதாபிமானம், மருந்து என்பதால் கொடுத்து விடுவார்கள்.

பிறகு, NHS செக் பண்ணி  பார்த்து, அவரது பெயர் மானியம் பெறுபவர்களின் இல்லை என்றால், £108.40 (Presciption  charges   + £100 fine ) கட்டுமாறு கடிதம் போடுகிறார்கள்.

அதேபோல, டாக்டர்களின் patients records செக் பண்ணி கொண்டு தான் 
இருக்கிறார்கள்.

பம்மாத்து விடடால் அவர்களது அனுமதி ரத்தாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

இது காரணமாய்தான் கொழும்பான். அண்டிபயாடிக் என்ற நுண்ணுயிர் கொல்லியை எவ்வளவுக்கு அதிகமாக பயன்படுதுகிறோமோ அந்தளவுக்கு வேகமாக நுணுயிரும் மருந்தை எதிர்க்கும் சக்தியை பெற்றுவிடும். அதுதான் கூர்ப்பின் அழகு.

இப்படி கண்டமேனிக்கு அண்டிபயோடிக் பாவித்தால் - மிக விரைவில் எந்த அண்டிபயோடிக்கும் வேலை செய்யாமல் விட்டிவிடும் ஒரு உலக அபாயம் ஏற்பட்டுவிடும்.

இதனால்தான் அண்டிபயோடிக் கொடுப்பதை வளர்ந்த நாடுகளில் கட்டுப்படுத்துகிறார்கள்.

இலங்கை போன்ற வளரும்நாடுகளில், சின்ன பக்டீரியா தொற்றுக்கே மிக கடுமையான அண்டிபயோடிக்கை கொடுப்பார்கள். நோயாளி உடனே சுகமாகிவிடுவார், ஆனால் இன்னும் கொஞ்ச வருடத்தில் முழு உலகுக்கும் இது ஆப்பாய் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் மருந்து எல்லாம் வலு மலிவாம். உண்மையா ?

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

அப்படி ஒன்றும் மலிவு இல்லை, ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மலிவு.

இங்கு Generic மருந்துகள் மலிவானதாகவும் Brand மருந்துகள் இரண்டு மடங்கானது விலை அதிகமாகவும் இருக்கும். (இரண்டுக்கும் தரத்தில், குணத்தில் வேறுபாடுகள் இல்லை)

11 hours ago, colomban said:

இங்கிலாந்து GP கள் பனடோல் ம‌ட்டுமே தருவார்கள். ஆன்டி பயடிக் கூட தர மாட்டார்கள்.

இங்கும் Antibiotic கொடுக்க மாட்டார்கள். கோசான் சொன்னது மாதிரி Antibiotic எம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி தொற்று நோய்களுக்கு இலக்காவதை அதிகப்படுத்தும். அத்துடன் நாளடைவில் எந்த Antibiotic உம் எமக்கு வேலை செய்யாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி / கோசன்.

இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள்.

மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும்.

70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

உண்மைதான் முன்பு எனக்கு தெரிந்த ஒரு அங்கிள் டாக்டர். அவரிடம் சின்ன சின்ன விசயங்களுக்கு நாங்கல் எல்லாம் இலவசமாய் மருத்துவம் பாப்பது வழமை.

அவரும் பெரிய நிபுணர் எல்லாம் இல்லை. கொஞ்சம் லேசான காச்சல் எண்டால், பனடோல், அதிகமெண்டால் எரித்திரோ மைச்சீன். இதுதான் அவரின் தாரக மந்திர மருந்துகள்.

ஒரு முறை அவரின் வீட்டுக்கு காச்சலோடு போறேன், முன் வீட்டு அன்ரி கேட்டா “ என்ன தம்பி, எங்க இந்த பக்கம் போறாய்?” காச்சலுக்கு மருந்து எடுக்க போறேன் எண்டு சொல்ல, அன்ரி சொன்ன பதில் “அதுக்கேன் உவரிட்ட போறாய், டிஸ்பன்சரில போய் ஒரு கோர்ஸ் எரித்திரோ மைசீன் எடு” 😂.

இது அந்த டொக்டர் அங்கிளை நக்கல் பண்ண சொன்னதேயாயினும், வளர்முக நாடுகளில் எப்படி துஸ்பிரயோகமாகிறது என்பதை சுட்டி நிக்கிறது.

பேயாவ மாரி இப்ப சமஹன் நிவாரண் வருகிறேல்லயே?

கீழே உள்ள சுட்டியில் மேலதிக தகவல்

https://www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance 

————

Antibiotics தவறான பாவனை கொண்டுவரும் பேராபத்து

Marlin Marikkar

மர்லின் மரிக்கார்

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் (Antibiotics) தொடர்பாக விழிப்புணர்வூட்டும் உலக வாரம் நவம்பர் 14 – 20 வரை அனுஷ்டிக்கப்பட்டது. 

அதன் நிமித்தம் 29.11.2016 அன்று சுகாதர கல்வி பணியகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் கருத்தரங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொகடர் பாலித மஹீபால, இலங்கை மருத்துவர்கள் சங்கத் தலைவி டொக்டர் இயந்தி அபேவிக்கிரம, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி குணத்திலக்க, பேராசியர் கீதா பெர்னாண்டோ, பொது மருத்துவ நிபுணர் பிரியங்கர ஜயவர்தன ஆகியோர் தெரிவித்த தகவல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை.

antibiotic

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் மருத்துவ அறிவியலில் அபரிமித வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்பட்டன. அதனால் பல்வேறுபட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அவை பயன்பாட்டுக்கும் வந்தன.

இதன் பயனாக மனிதனுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், சவாலாகவும் இருந்து வந்த பல நோய்களை இம்மருந்துகளைக் கொண்டு ஒன்றில் குணப்படுத்தவோ அல்லது தவிர்த்துக் கொள்ளவோ அல்லாவிட்டால் கட்டுப்படுத்திக் கொள்ளவோ முடிந்துள்ளது. இதனுடாக மனிதன் நீண்ட காலம் முகம் கொடுத்த வந்த ஆரோக்கிய ரீதியிலான பாரிய சவால் பெரிதும் நீங்கியது. அதேநேரம் இம்மருந்துப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டமை மருத்துவ உலகின் பாரிய வெற்றியாகவும் அமைந்தது.

அறிமுகம்
1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் (Antibiotics) மருத்துவ அறிவியலின் ஒரு மைல்கல்லாகும். இம்மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர், குறிப்பாக முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் அதிக மரணங்களுக்கு கண்களுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பக்றீரியா, வைரஸ், பங்கசு என்பனவே அதிகம் பங்களிப்பு செய்து வந்தன. அதற்கு இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் சிறந்த தீர்வாக அமைந்தன. அந்தவகையில் சல்பர் அடங்கிய மருந்தே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்தாக விளங்குகின்றது.

‘பென்சிலின்’ என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்து 1920 களில் கண்டு பிடிக்கப்பட்ட போதிலும் அது இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து 1940 களில் தான் பாவனைக்கு வந்தது.

நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததன் பயனாகப் பல நோய்களை விரைவாகவம், துரிதமாகவும், குணப்படுத்தவும், தவிர்த்துக் கொள்ளவும் முடிந்தது. அதனால் 1960 கள் வரையும் பல நுண்ணுயிர்க் கொல்லி மருநதுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டன. ஆனால் 1960 முதல் 2000 வரையான காலப் பகுதியில் எந்தவொரு நுண்ணுயிர்க் கொல்லி மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு நுண்ணயிர்க் கொல்லி மருந்துகள் தான் கண்டுபிடிக்கப்பட்டு பாவனைக்கு வந்தன. அவ்வளவு தான்.

அச்சுறுத்தல்
ஏனெனில் இவ்வகை மருந்துகள் தொடர்பில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதிலோ அவற்றை உற்பத்தி செய்வதிலோ பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டாதுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம் இம்மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்படும் அதிக செலவவே காரணமாகும். இருப்பினும் அவ்வாறு முதலீடு செய்து மருந்தொன்றைக் கண்டு பிடித்தாலும் அதற்காக முதலிட்ட பணத்தை அதன் மூலம் திரும்ப ஈட்டிக் கொள்ள முடியுமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.

ஏனென்றால் ஒரு நோய்க்கு உள்ளானவருக்கு ஒரு தடவைக்கு சில தினங்களுக்குத் தான் இம்மருந்துகள் வழங்கப்படும். அத்தோடு நோய் குணமடைந்துவிடும். இதன் மூலம் எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்ட முடியாது.

ஆனால் நீரிழிவு, கொலஸ்ரோல், இருதய நோய்கள் போன்றவாறான பல நோய்களுக்கு தொடர்ந்து நீண்ட காலத்திற்கு மருந்தைப் பாவிக்க வேண்டும். அவ்வகை மருந்துகளுக்கு அதிக கேள்வியும் சந்தை வாய்ப்பும் உள்ளது. இது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்குக் கிடையாது. அதனால் தான் பெரும்பாலான மருந்துப்பொருள் உற்பத்திக் கம்பனிகள் இவ்வகை மருந்து பொருட்கள் தொடர்பில் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் ஆர்வம் காட்டாதுள்ளன. ஆனால் இது பெரும் ஆபத்து மிக்க நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது

ஒழுங்குமுறையற்ற பாவனை
அதேநேரம் இம்மருந்துகள் நோய்களைத் துரிதமாகவும் வேகமாகவும் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் கூடியதாக இருந்ததால் அதனை எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிலர் டொக்டர்களின் சிபாரிசுகளின்றி இம்மருந்துகளைப் பாவிக்கின்றனர்.

சில டொக்டர்கள் எல்லா நோய்களுக்கும் இம்மருந்துகளைச் சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சிலர் ஒரு முறை டொக்டர் சிபாரிசு செய்த இவ்வகை மருந்தை ஒவ்வொரு முறையும் பாவிக்கின்றனர்.

images-2

ஆனால் இவ்வகை மருந்துகள் பக்றீரியா தொற்றுக்கு மாத்திரம் சிகிச்சையாக வழங்கப்படக் கூடியதாகும். அதாவது பக்றீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், அவற்றை அழிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் மருந்துகளே இவை. ஆனால் இம்ருந்துகளை வைரஸ் தொற்றுக்கு வழங்குவதால் பயன் கிடைக்காது. தடிமன், இன்புலுவென்ஸா, டெங்கு போன்றன வைரஸ் மூலம் தோற்றுவிக்கப்படும் நோய்கள். இந்நுண்ணுயிர் நோய்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் இரண்டொரு தினங்களில் குணமடையும். அவற்றுக்கு இந்நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை பாவிப்பதால் பயன் கிடைக்காது.

ஆனால் சில மருத்துவர்கள் சிறிய உடல் உபாதைக்கும் கூட அதிகளவில் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர். இன்னும் சில மருத்துவர்கள் நுண்ணயிர்க் கொல்லி மருந்து வழங்கப்படத் தேவையற்றவர்களுக்கும் அவற்றை வழங்குகின்றனர். சிலர் ஏற்கனவே மருத்துவர் சிபாரிசு செய்த மருந்துகளை வேறு நோய்கள் ஏற்படும் போதும் பாவிக்கின்றனர். இவை அனைத்தும் பிழையானதும் தவறானதுமான செயற்பாடு’ என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இம்மருந்துகளைக் கண்டபடி பாவிக்கும் போது சிலருக்கு நோய் குணமடைந்தாலும் அதற்கு இம்மருந்துகள் காரணமாக அமைவதில்லை. மாறாக உடலில் காணப்படும் நோயெதிர்ப்புசக்தியே காரணம். இம்மருந்துகளை எல்லா நோய்களுக்கும் பாவிப்பதால் பின்விளைவுகளும் ஏற்படலாம். அதனால் சில நாட்களுக்கு நோய் நீடிக்கவும் முடியும். சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவித்தால் உணவு உட்கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும். ஆதன் விளைவாக உடல் சக்தியை ஈடுசெய்யவும் தாமதம் ஏற்படலாம்.

அதனால் டொக்டரின் சிபாரிசின்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது. ஆனால் சிபாரிசு செய்யும் நாட்களுக்கு இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும். இம்மருந்தைப் பாவித்து இரண்டொரு நாட்களில் நோய் குணமடைந்து விட்டால் மருந்தை இடைநடுவில் கைவிடக் கூடாது. அதனால் சில சமயம் நோய் மீண்டும் தீவிர நிலையை அடையவும் கூடும். அச்சந்தர்ப்பத்தில் இம்மருந்தை மீண்டும் பாவித்தால் அவை பயனளிக்காது போகலாம். ஏனெனில் பக்றீரியாக்களை அழிக்கவே இவ்வகை மருந்துகள் வழங்கப்படுகின்றது என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.

மருந்தின் முக்கியத்துவம்
ஆனால் சில சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் மிக அத்தியாவசியமானது. அவை இல்லாவிட்டால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது. இம்மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் பக்றீரியாத் தொற்றைத் தவிர்க்கலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது கட்டாயம் இந்நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளைப் பாவிக்க வேண்டும். அப்போது தான் வயிற்றில் காணப்படும் பக்றீரியாக்கள் மூலம் ஏற்படும் தொற்றைத் தவிர்க்கக் கூடியதாக இருக்கும்.

சில புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும். அவ்வாறான நோயாளர்களை ஏனைய நோய்த் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக நுண்ணுயிரக் கொல்லி மருந்துகளை வழங்குவது மிகவும் அவசியமானது. சிறுநீரகம் உள்ளிட்ட அவயவ மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளவும் இம்மருந்துகளைப் பாவிக்க வேண்டும்.

ஆனால் ‘இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்படுவதால் பல பக்றீரியாக்கள் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் வீரியமடைந்துள்ளன. குறிப்பாக பென்சிலின் என்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் சில பக்றீரியாக்கள் 80 வீதம் வீரியமடைந்துள்ளன’ என்று நுண்ணுயிரியல் மருத்துவ நிபுணர் குஷானி ஜயத்திலக்க சுட்டிக்காட்டியுள்ளார். இம்மருந்துகள் கண்டபடி பாவிக்கப்பட்டதன் விளைவாகப் பல நுண்ணுயிர்கள் அம்மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது எவ்வாறு ஏற்படுகின்றன என சிலர் வினவலாம். அதாவது இவ்வகை மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் சில பக்றீரியாக்கள் என்சைம் வகைகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் சில பக்றீரியாக்கள் கலக்கூறுகளை மாற்றிக் கொள்ளுகின்றன. மேலும் சில மரபணுவை மாற்றிக் கொள்கின்றன. அத்தோடு சில பக்றீரியாக்கள் மரபணுவை பரிமாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. இதன் விளைவாக இம்மருந்துகளால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளன. அதனால் தான் இம்மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும் பக்றீரியா உடலில் காணப்படுவதோடு அவை வளர்ச்சி அடையவும் செய்கின்றன.

இதன் விளைவாக நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (antibiotic resistant) தாக்கம் தோற்றம் பெற்றுள்ளது. இது உலகில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஆரோக்கியமான நிலைமை அல்ல.

உயிரினங்களுக்கு வழங்கப்படுதல்
இதேநேரம் இவ்வகை மருந்துகள் மனிதர்களுக்கு மாத்திரமன்றி உணவாகக் கொள்ளப்படும் பிராணிகளுக்கும் பாவிக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றுக்கும் பக்றீரியா தொற்றுக்கள் ஏற்படுகின்றன. அதனால் இவை தவிர்க்க முடியாதவை.

அத்தோடு இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் போன்ற உயிரினங்களில் அதிக இறைச்சியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் இம்மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு கோழி உணவின் ஊடாகவே இம்மருந்துகள் வழங்கப்படுகிறது. இது இலங்கை உட்பட உலகில் பல நாடுகளிலும் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இம்மருந்துகளில் சில இந்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. ஆனால் டென்மார்க் போன்ற நாடுகளில் இறைச்சிக் கோழிப் பண்ணைகளுக்கு இவ்வகை மருந்துகளை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றும் குறைவடைந்துள்ளது.

ஆனால் இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பெற்ற இறைச்சிக் கோழிகளின் மலத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவற்றில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்களை அவதானிக்க முடிந்துள்ளது. அந்தவகையில் நீர்கொழும்பு களப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வில் அங்கு குளோரைட் செறிவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சில மீன்களிலும் நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளின் செறிவும் அதிகமாகக் காணப்பட்டுள்ளது. அத்தோடு இக்களப்பில் வளர்க்கப்படும் இறால்களிலும் இம்மருந்துகளின் செறிவு அவதானிக்கப்பட்டுள்ளன.

அதனால் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பிராணிகளில் காணப்படும் இப்பக்றீரியாக்கள் அவற்றை உணவாகக் கொள்ளும் போதோ அல்லது அவற்றைச் சமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காகக் கையாளும் போதோ மனிதனுக்குத் தொற்ற முடியும். அதேநேரம் இம்மருந்துகளை இப்பிராணிகளுக்கு வழங்குவதால் அவற்றின் மலம் நீரில் கலக்குமாயின் அதிலுள்ள பக்றீரியா சுற்றுச் சூழலில் கலந்து தாவர உணவின் ஊடாகக் கூட மனிதனை அடையலாம். இவ்வகை பக்றீரியாக்கள் மனிதனுக்கும் நோய்களை தோற்றுவிக்கலாம். அவை மனிதனின் இறைப்பையிலும் கூட காணப்படுகின்றன

உலகை எதிர்நோக்கியுள்ள பேராபத்து
என்றாலும் தற்போது நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென மில்லியன் கணக்கான டொலர்கள் தற்போது செலவிடப்படுகின்றன. இதனை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ்வகைத் தாக்கம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கவும் செய்கின்றனர.

இந்நிலைமை தொடருமாயின் 2050 ஆம் ஆண்டாகும் போது இம்மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் (Antibiotic resistant) தாக்கம் காரணமாக 10 மில்லியன் பேர் உயிரிழக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் புற்று நோய்களால் உயிரிழப்பவர்களை விடவும் அதிகமாக இருக்கும் எனவும், இந்த அச்சுறுத்தல் தென்னாசியப் பிராந்திய மக்களுக்கு மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் சில நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியா தொற்றுக்கள் பிரித்தானியாவை விடவும் இலங்கையில் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதனை இந்நாட்டுத் தரவுகளும் வெளிப்படுத்துகின்றன. இது மிகப் பயங்கர நிலைமையாகும்.

அதேநேரம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் புதிதாகக் கண்டுபிடிக்கபடுவதும் பெரிதும் குறைவடைந்துள்ளது. மறுபுறம் புழக்கத்திலுள்ள நுண்ணுயிரக் கொல்லி மருந்துகள் கண்டபடி பாவிக்கபடுவதால் அவற்றுக்கு பக்றீரியாக்கள் இசைவாக்கம் அடைந்துள்ளன, அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் அப்பக்றீரியாக்கள் வீரியமடைந்துள்ளன. இவற்றின் விளைவாக எதிர்காலத்தில் உலகம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை இழந்து விடக்கூடிய பேராபத்து தோற்றம் பெற்றுள்ளது.

அதனால் 1920களுக்கு முற்பட்ட நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அற்ற யுகத்தைப் போன்ற ஒரு யுகத்தில் மீண்டும் உலகம் பிரவேசிக்க நேரிடுமா? என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. முதலாம் உலகப் போரிலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் பெருந்தொகையானோரின் மரணங்களுக்கு நோய்த் தொற்றுக்களே முக்கிய காரணமாக அமைந்தன. அக்காலப் பகுதியில் இவ்வகை மருந்துகள் இருக்கவில்லை.ஆனால் இன்று இவ்வகை மருந்துகள் இருந்தும் அவை கண்டபடி பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியவகையில் பக்றீரியாக்கள் வீரியம் அடைந்திருப்பதே இந்த அச்சத்திற்கு பிரதான காரணமாக உள்ளன. அதனால் தான் இவ்வச்சுறுத்தல் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் மருத்தவ அறிவியல் உலகமும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

தவிர்ப்பு நடவடிக்கைகள்
இதேவேளை வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் அதிகளவில் வழங்கப்படுகின்றன. அதனால் இம்மருந்துகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய பக்றீரியாக்கள் வைத்தியசாலை சுற்றுச் சூழலில் இருக்க கூடும். அதன் காரணத்தினால் வைத்தியசாலைக்கு சென்று திரும்பியதும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவ வேண்டும். உடுதுணிகளையும் உடனடியாகக் கழுவுவது நல்லது. அத்தோடு மலசலகூடம் சென்று வந்த பின்னரும், பயணிகள் பஸ் வண்டிகளில் பயணித்து வந்த பின்னரும் சாப்பாட்டுக்கு முன்னரும், பின்னரும் கைகளை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகள் ஊடாகவே தொற்றுகின்றன.

அவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும் அவை ஏனையவர்களுக்குத் தொற்றுவதைத் தவிர்க்கவும் இவை பெரிதும் உதவும். நுண்ணுயிர்த் தொற்று குறைந்தால் இம்மருந்துகளின் தேவையும் குறைவடைந்துவிடும். அதனால் நோய்க் கிருமிகள் தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் தவிர்த்துக் கொள்வதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே ஒருவருக்கு ஏற்பட்டிருப்பது பக்றீரியா நோயா அல்லது வைரஸ் நோயா என்பதை இனம் கண்டு சிகிச்சை அளிப்பதே சிறந்தது. இது சில சமயம் சிரமான காரியமானாலும் அதுவே சிறந்தது. பக்றீரியா நோய்களுக்கு மாத்திரமே இந்நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் வழங்கப்பட வேண்டும். காய்ச்சல் என்பது பக்றீரியா தொற்று அல்ல. அதனால் காய்ச்சல் காணப்படும் எல்லோருக்கும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து வழங்கப்பட வேண்டியதல்ல. நோயை உரிய முறையில் பகுப்பாய்வு செய்து தேவைப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் இம்மருந்துகளை உரிய அளவில் வழங்க வேண்டும். டொக்டர்களின் சிபாரிசு இன்றி நுண்ணயிர்க் கொல்லி மருந்துகளைப் பாவிக்கக் கூடாது.

நன்றி : தினகரன் (மகுடம்)
10, 17.12.2016

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎12‎/‎2019 at 8:08 PM, நிழலி said:

அப்படி ஒன்றும் மலிவு இல்லை, ஆனால் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மலிவு.

இங்கு Generic மருந்துகள் மலிவானதாகவும் Brand மருந்துகள் இரண்டு மடங்கானது விலை அதிகமாகவும் இருக்கும். (இரண்டுக்கும் தரத்தில், குணத்தில் வேறுபாடுகள் இல்லை)

இங்கும் Antibiotic கொடுக்க மாட்டார்கள். கோசான் சொன்னது மாதிரி Antibiotic எம் நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி தொற்று நோய்களுக்கு இலக்காவதை அதிகப்படுத்தும். அத்துடன் நாளடைவில் எந்த Antibiotic உம் எமக்கு வேலை செய்யாமல் போய்விடும்.

தகவலுக்கு நன்றி...எனக்கு உந்த மருந்துகள் பற்றி தெரியாது...இங்கேயிருந்து கனடாவுக்கு ஹொலிடே  போன சிலர் அங்கிருந்து கணக்க அன்டி பயடிக் குளிசைகள் வேண்டி வந்து பாவிச்சவையல்...என்னோ பெயர் சொல்லிச்சினம் எனக்கு மறந்து போயிட்டுது..அங்க டொக்டரின் பிரிப்கிரிசன் இல்லாமல் வேண்டலாம் என்று சொல்லிச்சினம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

 ஒரு விடயத்தை கவனித்தீர்களா? இந்த நுண்ணுயிர் எதிரிகள் பற்றிய மருத்துவக் கட்டுரையிலும் இடையில் வெங்காயம் போன்ற போலி மருந்துகளுக்கு விளம்பரத்தைச் சொருகியிருக்கிறார்கள்! பார்த்தேன் சிரித்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

தகவலுக்கு நன்றி...எனக்கு உந்த மருந்துகள் பற்றி தெரியாது...இங்கேயிருந்து கனடாவுக்கு ஹொலிடே  போன சிலர் அங்கிருந்து கணக்க அன்டி பயடிக் குளிசைகள் வேண்டி வந்து பாவிச்சவையல்...என்னோ பெயர் சொல்லிச்சினம் எனக்கு மறந்து போயிட்டுது..அங்க டொக்டரின் பிரிப்கிரிசன் இல்லாமல் வேண்டலாம் என்று சொல்லிச்சினம் 
 
தவறான செய்தி...
மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அன்டி-பையோட்டிக் மருந்து, மாத்திரைகள் கனடாவில்  இவற்றை எடுக்க முடியாது. 

amoxicillin
doxycycline
cephalexin
ciprofloxacin
clindamycin
metronidazole
azithromycin
sulfamethoxazole and trimethoprim
amoxicillin and clavulanate
levofloxacin

இங்கு antibiotic மருந்துகளை ஒரு போதும் Prescription இல்லாமல் வாங்க முடியாது. அப்படி எவராவது விற்றால் தண்டனைக்குரிய குற்றம். இங்கு OTC எனப்படும் Over the counter மருந்துகளை மாத்திரம் Prescription இல்லாமல் வாங்கமுடியும்.  பனடோல் போன்ற மருந்துகள், இருமலுக்கு அல்ககோல் இல்லாத பாணிகள், உடல் நோவுக்குரிய தைலங்கள் முதலுதவி பொருட்கள் போன்றனவும் குடும்பக் கட்டுப்பாட்டு மற்றும் பாலுறவுக்கு உதவும் பொருட்கள் / மருந்துகள் மட்டும் தான் OTC இல் அடங்கும்.

இங்கு மூன்று வருடங்கள் நான் பார்மசிகள் வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் மென்பொருளாளராக இருந்தமையால் பார்மசிக்குரிய பொதுவான சட்டங்களை நான் அறியக் கூடியதாக இருந்தது. ஒன்லைனில் மருந்துகள் வாங்குவதாக இருந்தால் கூட மருத்துவரின் கையொப்பத்தை கொண்ட Prescription இனை ஸ்கான் பண்ணி அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த வைத்தியரின் பெயர் சிஸ்டத்தில் இருக்கவும் வேண்டும்.  ஒரு பார்மசி ஆகக் குறைந்தது 7 வருடங்களுக்காகவது ஒவ்வொருவரினதும் Prescription களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். ஒருவர் பார்மசிஸ்ட் ஆக வர கடுமையாக படித்தும் இருக்க வேண்டும் (டிகிரி எடுத்து இருத்தல் அவசியம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 ஒரு விடயத்தை கவனித்தீர்களா? இந்த நுண்ணுயிர் எதிரிகள் பற்றிய மருத்துவக் கட்டுரையிலும் இடையில் வெங்காயம் போன்ற போலி மருந்துகளுக்கு விளம்பரத்தைச் சொருகியிருக்கிறார்கள்! பார்த்தேன் சிரித்தேன்!

உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2019 at 8:31 AM, nedukkalapoovan said:

சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள்.

On 6/12/2019 at 8:31 AM, nedukkalapoovan said:

இங்கிலாந்தில் பல தமிழர்கள் இந்த ஜிபி தொழிலை விரும்பிச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வைத்தியசாலைகளில் வேலை செய்ய விருப்பமில்லை. காரணம்... வேலைப் பளுவுடன் கூடிய வருமானம் என்றால்.. இப்போது இவர்களுக்கு ரெம்பக் கசப்பது தான். 

ஜி பி தொழில் என்று இவர்கள் ஓடுவதன் சூட்சுமம்...???! 

பிரித்தானிய திறைசேரியும், வருமான வரி துறையும்  எங்கிருந்து எதை வசூலிக்கலாம் என்று நடுநிசியில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து சிந்திக்கின்றது.

ஏனெனில், சென்ற 2 மாதங்களுக்கு முதல், Civil Service இல் ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் அறியாமலே அவர்களின் பென்ஷன்க்கு மீதமான தொகை அரசாங்கத்தால்  செலுத்தப்பட்டது audit வழியாக தெரியவந்தது.

பிரித்தானிய அரசாங்கம் மறு கேள்வி இன்றி, மீதமான தொகையை ஓய்வு பெற்றவர்கள் மீளளிக்குமாறு ஆணையிட்டுள்ளது.

இப்படி அரசாங்கத்திடம் இருந்து ghost patients பதிவின் மூலம் பணம் அறவிட்ட GP வைத்தியர்கள்,  நடுநிசியில் மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்து சிந்திக்கும் நேரமிது.

பிரித்தானிய அரசாங்கம், அறவிடும் அழுத்தத்தை அதிகரிப்பதற்க்கு வங்குரோத்தை கழுத்தில் வைக்க கூடிய தன்மையுள்ளது.

இது வெளியில் மூச்சாக கூட தெரிவதில்லை (வங்குரோத்தை பிரித்தானிய அரசாங்கம் கழுத்தில் வைப்பது), காதோடு காது வைத்தது போல நடக்க கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை பின்னேரம் , அலுவலகத்தில் பீர் கிளாக்  ( Beer o’ Clock) நேரம் .. திண்ணையில் அலட்டியும் கன நாள் போல ஒரு பீலிங்  ….

நான் மூன்று   GP  practice இல் பதிவு செய்திருக்கிறேன்.  ஒன்று வீட்டுக்கு கிட்ட உள்ளது; மற்றது அலுவலகத்துக்கு கிட்ட உள்ளது,  ( இரண்டும் bulk  billing வசதி உடைய இடங்கள் )    மூன்றாவதும் அலுவலகத்துக்கு கிட்ட உள்ளது தான் ஆனால்  Pay for the visit  அடிப்படையில் - அவசரத்துக்கு எண்டு

மொத்தத்தில் நானே இரண்டு ஆவி நோயாளிகளை   சிஸ்டத்தில் உலாவ விட்டிருக்கிறேன்.  

ஆன்டி பையோட்டிக்ஸ் பற்றி எனது இரண்டு சதம்……

இலங்கைக்கு போகும் நேரமெல்லாம் ஏதாவதொரு பார்மசியில் வகை வகையான ஆன்டி பையோட்டிக்ஸ் உம் வேறு பல வகை  மருந்துகளும் வாங்கி வருவது எனது வாழ்வின் சோடிப்பில் ( Life style ?) அடங்கிய ஒன்று.

எனது செவிப்பறையில் துவாரம் இருப்பதால்  அடிக்கடி தொற்று ஏற்பட்டு பிரச்சனை கொடுக்கும். இருக்கவே இருக்கு இலங்கையில் வாங்கிய ஆன்டி பையோட்டிக் - பாவிக்க ஒரு   கிழமைக்கிடையில் ப்ரொப்லெம் solved    

பிரச்சனை என்னவென்றால்  முன்பெல்லாம் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு தரம் விசாரிக்க வரும் தொற்று , விருப்பம் கூடி  ஒரு வருடம் , ஆறு மாதம் என்று ஆகி அன்புத் தொல்லை கூடவே , ஸ்டாக் இல் இருந்த ஆன்டி பையோட்டிக் எல்லாம் காணாமல் போயிற்று .

பிறகென்ன லிஸ்டில கடைசியாக இருக்கும் GP இடம் அவசரமாக போய்  ஆண்டிபயாடிக் கேட்டால்அதிர்ச்சி!    தரமுடியாது என ஒரேயடியாக மறுத்து விட்டார்.  $75  தண்டம்.  

பிறகும் மாடு ஏறி மிதித்தித்த கதையாக ENT specialist இடம் போக வேண்டும் என்று வேறு சொல்லி விட்டார்। ($250 potential  lost  ) 

ENT Specialist இடம் அடுத்த இரண்டு கிழமைக்கு அப்பொய்ன்ட்மெண்ட் இல்லை. திரும்ப GP க்கு அடித்து விஷயத்தை சொல்லிஇரண்டு கிழமையில் தொற்று,  மூளைப்  பகுதிக்கு தாவினாலும் தாவி விடும் -ஏன் ரிஸ்க் எடுப்பான் ஆண்டிபயாடிக் தாருமன்”  என்றால் ஆள் அசையுதில்லை;     தலைக்குள்ள அப்படி எதும் வித்தியாசம் தெரிந்தால் உடனேயும் இங்கே வாரும்,  அப்ப பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.

பிறகென்ன Specialist  இடம் $250  அழுது விட்டு போனால் அவர் தனது வேலை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்கிறார் ( $10,௦௦௦?).     நான் வழமையாக நோயாளிகள்  கேட்கும் அதே கேள்வியை கேட்டேன் , சிகிசசையில்    நிச்சயம் சரி வருமா என்று ।

சிங்கன் சொல்கிறார் , அது நிச்சயமாக சொல்ல முடியாது , ஆனால் உனது வாழ்க்கைச் சோடிப்பை ( இது இன்று இரண்டாம் தரம் )  பொறுத்து நீ  முடிவு செய்யலாம் ।

உதாரணமாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தால் நான் இதை கட்டாயம் செய்வேன் , ஏனென்றால் எனது இரண்டு மகன் மாரையும் நீச்சல் பயிற்சிக்கு ஒவ்வொரு கிழமையும் அழைத்துப் போய் அவர்களுடன் நீருக்கடியில் நிறைய நேரம் இருப்பேன் , துவாரம் இருந்தால் காதினுள் நீர்  போய்   தொற்று ஏற்படும் என்று.

எனக்கு பொறி தட்டிற்று.  அவருக்கு கொடுத்த $250  நூறு வீதமும் பிரயோசனமாகப்   போயிற்று  ( அவர் எனக்கு எந்த விதமான மருந்தும் தராத போதிலும் )

எனக்கு இப்ப இரண்டு வருடமாக காதில்  தொற்று வருவதில்லை.

நான் ஆன்டி  பையோட்டிக் ஒன்றும் இப்போது பாவிப்பதில்லை ।

குளிக்கும் பொது toilet Tissue ஒன்றை  எடுத்து இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை காதினுள் வைத்து அடைத்து விடுவேன் , பின்பு ஆனந்தமான  ஷவர் । 

காதினுள் நீர் போக சான்ஸே இல்லை , தொற்று இப்ப தொடுவதும் இல்லை.

$250 செலவில் ஒரு நிரந்தர தீர்வு ।    அந்த GP  க்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரி எங்கேயோ தொடங்கி எதிலோ வந்து நிக்குது போல் உள்ளது .

இங்கு பல்லுக்கு காட்டபோனால் மேசையில் இருப்பவ  இங்கிலாந்து வெள்ளை , வைத்தியர் வெள்ளை ஆனால் அந்த கிளினிக்கை நடாத்தி லாபம் பார்ப்பது தென்ஆபிரிக்கா வில் இருந்து மூன்று தலைமுறைக்கு முன் இங்கிலாந்துக்கு  இடம்பெயர்ந்த குஜராத்தி இப்பவும் தாய் மொழியில் தான் வீட்டில் கதைப்பது .

விசா கார்ட்டுக்கு வேலை போனதால் காசு கட்டவில்லை என்றால் டெப்ட் ஏஜென்ட் ல் கதைப்பவர்கள் வெள்ளைகள் தான் உங்கள் வீட்டுக்கு காசை கட்டுங்கள் இல்லையென்றால்  உங்கள் உரிமையான பொருளை தூக்குவம் என்று வருபவர்களும் வெள்ளை ஆனால் அந்த டெப்ட் ஏஜெண்டை நடாத்துவது இந்த குஜராத்தி கள் தான் .உண்மையில் 60 மாதத்துக்கு மேல் உங்கள் டெப்ட் குற்றம் க்ரடிட் ஏஜென்ட் தன்னுடைய பதிவில் இருந்து எடுத்துவிடுவார்கள்  ஆனால் இவர்களோ தங்களுக்குள் பல கொம்பனிகளை பதிவில் வைத்து மாமன் மச்சான் க்குள் அப்பாவி மக்களின் டெப்ட் வித்து வாங்குவது போல் வாங்கி இன்னும் 60 மாதத்துக்கு நீட்டிப்பார்கள் இப்படி ஒரு கட்டத்தில் இவர்களின் தொந்தரவு தாங்கமுடியாமல் நம்மவர்களை விட வெள்ளைகள் பாதி காசு கட்டுவம் என்று உடன்படுங்கள் இதெல்லாம் இங்கிலாந்து சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வளைத்து பகல் கொள்ளை யடிக்கும் கூட்டம் .

கனக்க வேண்டாம் மருந்து வேண்ட மருந்து கடை போய் பாருங்கள் முன்னுக்கு நிற்பவர்களை விட உள்ளே குஜராத்தி இல்லாத மருந்து கடை பார்ப்பது அரிது பக்கத்தில் இருக்கும் ஜி பி  மாரிடம் டீல் போடுவதும் இவர்கள்தான் .

இந்த விடயங்கள் போல் யூதர் களின் விளையாட்டு சொல்லி மாளாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Sasi_varnam said:

தவறான செய்தி...
மருத்துவர் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் அன்டி-பையோட்டிக் மருந்து, மாத்திரைகள் கனடாவில்  இவற்றை எடுக்க முடியாது. 

amoxicillin
doxycycline
cephalexin
ciprofloxacin
clindamycin
metronidazole
azithromycin
sulfamethoxazole and trimethoprim
amoxicillin and clavulanate
levofloxacin

amoxicillin என்று தான் சொன்ன நினைவு  

22 hours ago, நிழலி said:

இங்கு antibiotic மருந்துகளை ஒரு போதும் Prescription இல்லாமல் வாங்க முடியாது. அப்படி எவராவது விற்றால் தண்டனைக்குரிய குற்றம். இங்கு OTC எனப்படும் Over the counter மருந்துகளை மாத்திரம் Prescription இல்லாமல் வாங்கமுடியும்.  பனடோல் போன்ற மருந்துகள், இருமலுக்கு அல்ககோல் இல்லாத பாணிகள், உடல் நோவுக்குரிய தைலங்கள் முதலுதவி பொருட்கள் போன்றனவும் குடும்பக் கட்டுப்பாட்டு மற்றும் பாலுறவுக்கு உதவும் பொருட்கள் / மருந்துகள் மட்டும் தான் OTC இல் அடங்கும்.

இங்கு மூன்று வருடங்கள் நான் பார்மசிகள் வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் மென்பொருளாளராக இருந்தமையால் பார்மசிக்குரிய பொதுவான சட்டங்களை நான் அறியக் கூடியதாக இருந்தது. ஒன்லைனில் மருந்துகள் வாங்குவதாக இருந்தால் கூட மருத்துவரின் கையொப்பத்தை கொண்ட Prescription இனை ஸ்கான் பண்ணி அனுப்ப வேண்டும். அத்துடன் அந்த வைத்தியரின் பெயர் சிஸ்டத்தில் இருக்கவும் வேண்டும்.  ஒரு பார்மசி ஆகக் குறைந்தது 7 வருடங்களுக்காகவது ஒவ்வொருவரினதும் Prescription களை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். ஒருவர் பார்மசிஸ்ட் ஆக வர கடுமையாக படித்தும் இருக்க வேண்டும் (டிகிரி எடுத்து இருத்தல் அவசியம்).

சசி,நிழலி மீண்டும் நன்றிகள் நான் கனடாவுக்கு வந்ததும் இல்லை...மருந்துகளை பற்றிய அறிவும் இல்லை...நீங்கள் அங்கு இருப்பதால் சொல்வது உண்மையாயிருக்கும்...அவ  கனடா போய் வந்த போது தான் நிறைய அன்டி பயரிக் மாத்திரை வாங்கி வந்தேன் என்று சொன்னா...எனக்கு எப்ப போய் வந்தவ என்று மறந்து போயிட்டுது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎14‎/‎2019 at 9:55 PM, பெருமாள் said:

திரி எங்கேயோ தொடங்கி எதிலோ வந்து நிக்குது போல் உள்ளது .

திரியின் தன்மையே அது தானே.   சாடையாக பக்கத்தில இருக்கும் பற்றக்கூடியதையும் தட்டிப் பார்க்கும் காய்ந்து இருந்தால் பிறகென்ன.
குஜராத்தி பற்றி சொன்னீர்கள் , பஞ்சாபியையும் அதுக்குள்ளே சேர்க்கலாமோ தெரியாது ।   
விசேஷம் என்னவென்றால் குஜராத்தி , பஞ்சாபி பெண்களுக்கு எங்கட  பொடியங்களில ஒரு பிடிப்பு. கெட்டித்தனமான நம்பிக்கையானவர்கள் என கருத்துகிறார்களோ. ।எனது நண்பர்கள் இருவரின் புதல்வர்கள் குஜராத்தி பஞ்சாபி பெண்களை மனம் புரிகின்றனர்.
நல்ல அம்சமான பெண்கள் மிகவும் வசதியானவர்கள்.
கல்யாணவீடு பொற்கோவில் பகுதியில்,   sangeet  Holiday  Inn  இல் . 

போய் பிந்தரன்வாலேயின் கோயிலையும் பார்த்து வரலாம் என எண்ணியிருக்கிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2019 at 8:29 PM, colomban said:

நன்றி நிழலி / கோசன்.

இது நான் அனுபவத்தில் கண்டது. பல காலம் எனக்கு இந்த விடயம் தெரியவில்லை. இங்கு கொழும்பில் என்றால் தெருவுக்கு தெரு நிறைய டிஸ்பென்சரிகள் உண்டு. சாதரண காய்ச்சலுக்கு பெனடோலுடன் கடும் ஆன்டி பயேடிக் தருவார்கள் மேலும் இருமலுக்கு இனிப்பு பாணி ம‌ருந்தும் தருவார்கள் 2, 3 நாட்களில் காச்சல் உடல் வலி எல்லாம் போய்விடும். ஆனல் வளர்ந்த நாடுகளில் இப்படியல்ல. ஒருமுறை ஒரு வெள்ளையின வைத்தியரிடம் கேட்டேன் தரவேயில்லை. ஆனால் இனிப்பு பாணி மருந்து தருவார்கள்.

மேலும் இலங்கையில் அரசாங்க டிஸ்பென்ஸரியில் காச்சலுக்கு ஒருவித கசயாம் போன்ற சிரப் தருவார்கள் அதுவிம் நல்ல பலன தரும்.

70 / 80 களில் பேயவ எனும் ஒர் பானம் இருந்தது, இதனுடன் அலுப்பு மருந்து பக்கட்டில் வாங்கி கலந்து காச்சல் / தடுமலுக்கு குடிப்பார்கள்.
 
அலுப்பு மருந்தா???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/16/2019 at 12:06 AM, சாமானியன் said:

திரியின் தன்மையே அது தானே.   சாடையாக பக்கத்தில இருக்கும் பற்றக்கூடியதையும் தட்டிப் பார்க்கும் காய்ந்து இருந்தால் பிறகென்ன.
குஜராத்தி பற்றி சொன்னீர்கள் , பஞ்சாபியையும் அதுக்குள்ளே சேர்க்கலாமோ தெரியாது ।   
விசேஷம் என்னவென்றால் குஜராத்தி , பஞ்சாபி பெண்களுக்கு எங்கட  பொடியங்களில ஒரு பிடிப்பு. கெட்டித்தனமான நம்பிக்கையானவர்கள் என கருத்துகிறார்களோ. ।எனது நண்பர்கள் இருவரின் புதல்வர்கள் குஜராத்தி பஞ்சாபி பெண்களை மனம் புரிகின்றனர்.
நல்ல அம்சமான பெண்கள் மிகவும் வசதியானவர்கள்.
கல்யாணவீடு பொற்கோவில் பகுதியில்,   sangeet  Holiday  Inn  இல் . 

போய் பிந்தரன்வாலேயின் கோயிலையும் பார்த்து வரலாம் என எண்ணியிருக்கிறேன்  

நீங்கள் கனடாவை வசிப்பிடாமாக கொண்டவர் என்பதை பரிபூரணமாக நம்புகின்றேன்.
இருப்பினும்....
ஈழத்து ஆண்பிள்ளைகள் தங்கள் மனைவியருக்கு என்றும் நேசமாக இருப்பவர்கள் என்ற நற்பெயர் உலகெங்கும் இருக்கின்றது.என்றும் பூ போல் வைத்து பாதுகாப்பார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் கனடாவை வசிப்பிடாமாக கொண்டவர் என்பதை பரிபூரணமாக நம்புகின்றேன்.
இருப்பினும்....
ஈழத்து ஆண்பிள்ளைகள் தங்கள் மனைவியருக்கு என்றும் நேசமாக இருப்பவர்கள் என்ற நற்பெயர் உலகெங்கும் இருக்கின்றது.என்றும் பூ போல் வைத்து பாதுகாப்பார்கள். :grin:

உங்களுக்கு ஏமாற்றத்தைத் தர நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டும் , நான்  அவுஸ்திரேலியா.  ஊரை விட்டு வெளிக்கிட்டு ஒரு 26   வருஷம் ஆச்சு. கனடாவில் என் பகுதியாலும் துணைவியார் பகுதியாலும் நெருங்கிய உறவினர் பலர் இருந்தாலும் இன்னமும் கனடாவிற்கு வர சந்தர்ப்பம் அமையவில்லை. விடு முறை காலங்களில் எனது பயணங்களில் பெரும்பகுதி இலங்கை நோக்கியே ( தந்தையார் அப்போது உயிருடன் இருந்தார்) அமைந்தது.
நீங்கள் ஜேர்மனி / UK ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

உங்களுக்கு ஏமாற்றத்தைத் தர நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டும் , நான்  அவுஸ்திரேலியா.  ஊரை விட்டு வெளிக்கிட்டு ஒரு 26   வருஷம் ஆச்சு. கனடாவில் என் பகுதியாலும் துணைவியார் பகுதியாலும் நெருங்கிய உறவினர் பலர் இருந்தாலும் இன்னமும் கனடாவிற்கு வர சந்தர்ப்பம் அமையவில்லை. விடு முறை காலங்களில் எனது பயணங்களில் பெரும்பகுதி இலங்கை நோக்கியே ( தந்தையார் அப்போது உயிருடன் இருந்தார்) அமைந்தது.
நீங்கள் ஜேர்மனி / UK ?  

Bildergebnis für deutsche fahne gif

:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.