Dr-Hirato-Izumi-300x200.jpgபல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார்.

ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமியே, சிறப்பு தூதுவராக சிறிலங்கா வரவுள்ளார்.

அவர், வரும் 20ஆம் நாளுக்கும் 22ஆம் நாளுக்கும் இடையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா தொடர்பாக ஜப்பானிய அரசாங்கம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்வது குறித்து, சிறிலங்கா பிரதமர் கலந்துரையாடுவார் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஜப்பானிய சிறப்பு தூதுவர் பேச்சு நடத்தவுள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/06/12/news/38506