யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா - `இதுவே வரலாற்றில் முதன்முறை!

Recommended Posts

ரலாற்றில் முதன்முறையாக ஐ.நா அமைப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா பொதுவாக நடுநிலையைப் பின்பற்றும். இஸ்ரேல் நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் இதுவரை ஐ.நா. அமைப்பில் நடந்த வாக்கெடுப்புகளில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில்லை.

பாலஸ்தீனத்தில் `ஷாகீத்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வில் தங்களை கண்காணிப்பு அங்கத்தினராக்க வேண்டுமென்று ஷாகீத் அமைப்பு கேட்டிருந்தது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், ஷாகீத் அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. இந்த அமைப்பை அங்கத்தினராக்கக் கூடாது என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானம் 28-14 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

ஜூன் 6- ம் தேதி ஐநா அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் வாக்கெடுப்பு நடைபெற்றது. எனினும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த தகவல் இப்போதுதான் வெளிவந்துள்ளது. அதுவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் துணை தூதர் மயா கடோஷ், `எங்களுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவுக்கு நன்றி. இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதிகளை வேரறுப்போம்' என்று ட்வீட் செய்த பிறகே தகவல் வெளியே தெரிந்தது. `தெற்காசியாவிலிருந்து எங்களுக்கு ஆதரவு கிடைத்திருப்பது நல்லதொரு தொடக்கம்' என்றும் மயா கடோஷ் கூறியுள்ளார். இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தது குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. 

`லெபனானைத் தலைமையகமாக கொண்டு ஷாகீத் அமைப்பு செயல்படுகிறது. மனித உரிமை அமைப்பு என்ற போர்வையில் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பு இது. ஹாமாஸ் அமைப்பின் இன்னொரு முகம்தான் ஷாகீத் என்று, இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இஸ்ரேல் நாட்டுடன் உறவு வலுவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

https://www.vikatan.com/news/india/159572-india-backs-israel-to-keep-palestinian-shahed-group-out-of-un-bodies.html?fbclid=IwAR19uNhionjTjJUCjpkDo869Za187RqY2RyXaJOCaY_4b1r-QgZws3sOj6M

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு