• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பிழம்பு

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?

Recommended Posts

பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர்
 

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார்கள் விமர்சகர்கள்.

இலங்கையின் பிரதான அரசியல் தலைவர்கள் மோடியை வரவேற்பதில் காட்டிய ஆர்வமும், அவருடன் நடத்திய பேச்சுக்களும், அமைச்சர் மனோ கணேசன் சொன்னதைப்போல, "தெற்காசியாவின் சௌகிதர்" (பாதுகாவலன்) என்ற நிலையில்தான் மோடி இருக்கியறார் என்பதை உணர்த்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு மோடி அழைத்திருக்கின்றார். ஏப்ரல் 21 தாக்குதல் தெற்காசிய பிராந்திய கள நிலையில், தாக்கம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில் - இலங்கை குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போது ஆராயப்படும் விடயமாகவுள்ளது.

பலம்வாய்ந்த ஒரு அரசாங்கத்தை அமைத்து, ஒரு வார காலத்திலேயே மோதி இலங்கைக்கு பயணம் செய்தது முக்கியமானது. "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" என்ற அவரது கோட்பாட்டின்படி மாலத்தீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே கொழும்பில் அவர் 'தரித்துச்' சென்றார். மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்றே இந்த பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கை வந்த முதலாவது உலகத் தலைவர் அவர்தான். கடுமையான பாதுகாப்பு எச்சரிகையையும் மீறி குண்டுத் தாக்குதலுக்குள்ளான கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் தேவாலயத்தையும் அவர் சென்று பார்வையிட்டார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள்

இந்தியப் பிரதமராக இரண்டாவது தடவையாக மோதி பதவியேற்றுக்கொண்ட போது, இலங்கையில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் முக்கியமாக இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று - இலங்கைப் பிரச்சினை குறித்த இந்திய அணுகுமுறையில் மாற்றம் வருமா என்பது. இரண்டு - வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கப்போவது யார் என்பனதான் அவை. இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் வெளிவிவகார அமைச்சரின் பங்கு முக்கியமானது என்பதால்தான் இவ்விடயமும் ஈழத் தமிழர்களின் அக்கறைக்குரியதாக இருந்தது. வெளியுறவு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். கட்சி அரசியல் சாராத - பிராந்திய அரசியலை நன்கு தெரிந்த ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முக்கியமானது.

மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் சில மோடிக்கு இருந்தாலும் கூட, அவரது நியமனம் இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு முக்கியமானது. வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரியாக இருந்து அமைச்சராக வந்திருப்பதால், வெளிவிவகாரத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து நுணுக்கங்களையும் ஜெய்சங்கர் அறிந்துவைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.  முதல் முறை மோதி பிரதமர் பதவிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டவர் ஜெய்சங்கர். குஜராத் கலவரத்தால் மோதி அமெரிக்கா செல்வதற்கு சில சங்கடங்கள் இருந்தன. மோதிக்கு விசா கொடுக்க அமெரிக்கா மறுத்திருந்தது. அதை எல்லாம் உடைத்து ஜெய்சங்கர்தான் மோதியை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற வைத்தார்.  ஏற்கெனவே, அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அந்த அனுபவத்தின் உதவியுடன் அமெரிக்கத் தரப்பில் பேசி, அந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் ஜெய்சங்கர்.

வெளியுறவுத் துறைச் செயலாளர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகுகூட ஜெய்சங்கரை விடவில்லை மோதி. மோதியின் வெளிநாட்டுப் பயணங்களின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தவர் ஜெய்சங்கரே. வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஜெய்சங்கர், இன்று மோதியின் இரண்டாவது அமைச்சரவையில் அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்றார். அதாவது, மிகச் சிறந்த அதிகாரி. மோதியின் நம்பிக்கைக்கு உரியவர். வெளிவிவகாரத்துறையில் ஆழமான அறிவைக்கொண்டிருப்பவர். இந்த வகையில், எதிர்காலத்தில் இலங்கை குறித்து இந்தியா எடுக்கப்போதும் அணுகுமுறையில், இவருடைய செல்வாக்கு நிச்சயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதனால், மோதியின் இரண்டாவது பதவிக்காலத்தில் இலங்கை குறித்த டெல்லியின் அணுகுமுறை எவ்வாறிருக்கும் என்பதை ஆராயும்போது, ஜெய்சங்கரின் நிலைப்பாட்டையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

இலங்கையும் ஜெய்சங்கரின் அனுபவமும்

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் வெளிவிவகார அமைச்சகமே முக்கியப் பங்காற்றுகின்றது. அதில் கைதேர்ந்த அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். இலங்கை விவகாரத்திலும் ஜெய்சங்கர் கைதேர்ந்தவர். 1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையின் செயலாளராகவும், அரசியல் ஆலோசகராகவும் பணியாறிய காலம் முதல் இலங்கைப் பிரச்சினை குறித்த நேரடி அனுபவத்தைக் கொண்டிருப்பவர் அவர்.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

ஜெய்சங்கரின் நியமனம் குறித்து அமைச்சர் மனோ கணேசன் தன்னுடைய முகநூலில் "இலங்கையின் இன அரசியல், இனங்களுக்கு உள்ளே அரசியல், ஆகியவற்றை அறிந்த, கரைத்து குடித்த முன்னாள் வெளிவிவகார செயலாளர், இலங்கையில் பணியாற்றிய தொழில்சார் நிபுணர் என்பவை தனிப்பட்ட முறையில் நானறிந்த உண்மைகள்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். அமைச்சர் குறிப்பிட்டிருப்பது போல ஜெய்சங்கர் இலங்கை விவகாரத்தைக் கரைத்துக் குடித்தவராக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையை அவர் எவ்வாறு கையாள்வார் என்ற கேள்வி பிரதானமாக எழுகின்றது.

இந்திய அமைதிப்படையின் காலத்தில் ஜெய்சங்கர் அரசியல் செயலாளராக இருந்தவர். அதனால் அப்போது இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் அவருக்குத் தெரியும். குறிப்பாக, விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான மோதல், அதன்பின்னர் இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகள் குறித்த ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை அவரிடம் ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், இலங்கைத் தமிழரின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை அவருக்கு இருந்தது என்கின்றார் அவருடன் நெருக்கமாகப் பழகிய தமிழ் அரசியல்வாதி ஒருவர். ஆனால், அந்தத் தீர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதில் அவரது கருத்து என்ன என்பது குழப்பமானதுதான்.

"இணைப்புக்கு அழுத்தம் கொடுக்க முடியாது"

இலங்கைப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு ஜெய்சங்கரிடம் இருந்தது என்ற கருத்தை தமிழ் கட்சி ஒன்றின் பிரதிநிதி முன்வைக்கிறார். மூன்று  வருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்திருந்த ஜெய்சங்கர், தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது இந்தத் தோரணையைக் காணமுடிந்தது. இந்தப் பேச்சுக்களின் போது, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். "இலங்கை - இந்திய உடன்படிக்கையின் படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை மீண்டும் ஏற்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்பதுதான் அவரது கோரிக்கை.

இலங்கையில் மோதி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த வாக்கு என்ன? - விரிவான தகவல்கள்

இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "இணைப்பை இந்தியா வலியுறுத்த முடியாது. 1987 க்குப் பின்னர் எவ்வளவோ காரியங்கள் நடந்தேறிவிட்டன. மீண்டும் கடந்த காலத்துக்குச் செல்ல முடியாது. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதனையும் பெற முடியாத நிலையே ஏற்படும்" எனத் தெரிவித்திருந்தார். அதாவது அரசாங்கம் தருவதை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இந்தியா இவ்விடயத்தில் எதனையும் செய்யும் நிலையில் இல்லை என்பதும்தான் டெல்லியின் நிலைப்பாடாக அப்போது அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்பாடுகள் அப்போது நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. "2016 இல் தீர்வு கிடைக்கும்" என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அப்போது வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அந்த நிலையில்தான் - இலங்கை அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வைக் கொடுக்கப் போகிறது என்ற நம்பிக்கையில், ஜெய்சங்கர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

மாற்றமடைந்துள்ள அரசியல் கள நிலை

அப்போதிருந்த நிலை இப்போது இல்லை. அரசியலமைப்பாக்க முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டன. அடுத்த தேர்தல்களுக்கு முன்னர் அந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனைவிட, இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர்  வெளிப்படும் ஐ.எஸ். அமைப்பின் ஊடுருவல், இலங்கைக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகியிருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பெரும்பான்மையைக் கொண்ட தனியான ஒரு மாகாணமாக இருந்திருந்தால், ஐ.எஸ். தொடர்பான அச்சுறுத்தல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்ற கருத்து இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிலரிடம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் கள நிலை தமக்குப் பாதகமானது என்ற கருத்து இந்திய இராஜதந்திர மட்டத்தில் காணப்படுவதாக அவர்களுக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் சொல்கின்றன. அதாவது, ஈஸ்ட்டர் தாக்குதலின் பின்னர் இந்தியத் தரப்பின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. "வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு, தமிழர்களுடைய கட்டுப்பாட்டில் அந்த மாகாணம் இருந்தால், இவ்வாறான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்திலும் அச்றுத்தல்களைத் தவிர்க்க இணைப்பு அவசியம் என்பதை மோடி அரசுக்கு உணர்த்த வேண்டும்" என தமிழ்ப் புலமையாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

மோதியின் கொழும்புப் பேச்சுக்கள்: டெல்லியின் அணுகுமுறை மாறுமா?படத்தின் காப்புரிமை Getty Images

இது குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், "இப்போதுள்ள நிலைமைகளை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்பதை வலியுறுத்தினார். மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்டி தன்னுடைய கருத்துக்கு அவர் வலுசேர்க்கிறார். "பலமான பாஜக ஆட்சி இந்தியாவில் அமைந்திருக்கிறது. ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். பலமான முறையில் சீனா இலங்கையில் தன்னுடைய முதலீடுகளை மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்திவருகின்றது. அவற்றின் புலனாய்வு அமைப்புக்களும் இலங்கை வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவினுடைய பாதுகாப்பையும் பலப்படுத்தும் வகையில், தமிழர் தரப்பின் நலன்களையும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழர் தரப்பு செயற்பட வேண்டும்" என்பதுதான் அவரது கருத்து.

நீண்டகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை டில்லிக்கு அழைக்காத மோடி, இப்போது அவர்களை மீண்டும் அழைத்திருக்கின்றார். இலங்கையில் ஏற்பட்டிருக்கும் களநிலை மாற்றங்கள் இந்திய அணுகுமுறையிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதற்கான எதிர்வுகூறலாக இது இருக்கலாம். எதிர்வரும் டிசம்பரில் ஜனாதிபதி தேர்தலும், அடுத்த வருட நடுப்பகுதிக்குள் பொதுத் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை விடயத்தில் அதிரடியாக இந்தியா எதாவது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது என்றாலும்கூட, இந்திய கொள்கை வகுப்பாளர்களிடம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான நிலையை மறுதலிக்க முடியாது என தமிழ்க் கட்சி ஒன்றின் தலைவர் குறிப்பிடுகிறார். 

https://www.bbc.com/tamil/sri-lanka-48601875

Share this post


Link to post
Share on other sites

 இந்தியா மேற்குலகின் பார்வையில் இலங்கை ஒரு Failing state தோற்கும் அரசாக தென்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் சீனா ரஸ்ஸ்சியா அணி நாடுகள் இலங்கையை  வெற்றிபெறும்  அரசாக காண்கின்றது. இது தமிழரைப்பொறுத்து முக்கிய தருணமாகும்.

மாறக்கூடிய  அரசியலில் மாற்றங்களை காத்திருந்து கைநழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும்.  21/19ன் பின்னர் உருவாகிவரும்  சூழலை வெற்றிகரமாக பயன்படுத்துவது என்பது  எல்லா விமர்சனங்களோடும் இந்திய மேற்குலக அங்கீகாரம்பெற்ற  சம்பந்தரை பலப்படுத்தி முன் நகர்த்துவதுதான்.   மறு பக்கத்தில் சம்பந்தர் ஏனைய அரசியல் கட்சிகளையும் பிரமுகர்களையும் புல்ம்பெர்ந்த தமிழர் அமைப்புகளையும் தங்கள் குடையின்கீழ் கொண்டுவரும் முயற்ச்சியை இனியாவது ஆரம்பிக்க வேண்டும். மலையக தமிழ்த் தலைவர்களை அரவணைத்து பூரண ஆதரவை பெறுதல் வேண்டும். முஸ்லிம் தலைவர்களோடு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும். சாத்தியமான சிங்கள ஜனநாயக சக்திகளின் ஆதரவையும் கோரிப் பெற வேண்டும். போகும் வழி தொலைவு. சுமை பெரிது.    

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மக்களுக்காக பாடுபடுபவர்களாயின் இந்தியா, சர்வதேசத்தை பயன்படுத்தி அழுத்தங்களை வழங்கி தீர்வுகளுக்கு முயன்றிருக்கலாம். இவையள் இலங்கை அரசுக்கு நோகாமல் அரசியல் செய்பவர்கள்.
சம்பந்தர் ஐயா சரிப்பட்டு வரமாட்டார், அதிசயம் ஏதும் நடந்தால் மக்களுக்கு நன்மையே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • "கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின்சூக்கா- அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூடும் நிலையேற்படும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்" இதையே இந்த  சீமாட்டி சொல்லாமல் ஒரு சீமான் சொல்லியிருந்தால் ......
    • உத்தரப் பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில், இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், ஐந்து ஆண்கள் தாக்கி அருகிலுள்ள வயலுக்கு இந்த பெண்ணை இழுத்து சென்று, தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னொரு பாலியல் வல்லுறவு வழக்கில் பெரிதும் பேசப்பட்ட உன்னாவ் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய பெண், கார் விபத்து ஒன்றில் கடும் காயமடைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு விசாரணையை காவல்துறை தொடங்கியது. கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு தலைப்பு செய்தியாக வெளியாகி அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில், சமீபத்திய இந்த சம்பவம் இந்தியாவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். புகைப்பட காப்புரிமை @Zebaism @Zebaism <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Zebaism: Another Shocker- This from Unnao, the city infamous for the BJP MLA rape case. Another girl who had filed a rape complaint earlier this year against 2 people has been SET ABLAZE this morning-fighting for her life.Another day. Another girl. Just a week after Hyderabad." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Zebaism/status/1202443319382593537~/tamil/india-50671553" width="465" height="345"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Zebaism</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Zebaism</span> </span> </figure> புகைப்பட காப்புரிமை @thakur_shivangi @thakur_shivangi <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @thakur_shivangi: Nothing has changed. Another rape victim burnt alive in #Unnao." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/thakur_shivangi/status/1202455037718384640~/tamil/india-50671553" width="465" height="213"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @thakur_shivangi</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@thakur_shivangi</span> </span> </figure> புகைப்பட காப்புரிமை @rsabhishek93 @rsabhishek93 <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @rsabhishek93: Today the Unnao Rape accused who was out on bail has burned her victim alive while she was going to court. Is this the India we all want to live in? We call our nation &quot;mother&quot; but still women's condition in india is something we can't even imagine now. @narendramodi @smritiirani" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/rsabhishek93/status/1202468112584458240~/tamil/india-50671553" width="465" height="279"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @rsabhishek93</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@rsabhishek93</span> </span> </figure> கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி, 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் ஹைதராபாத் நகரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டார். அவர் காணாமல் போனதை அடுத்து, எரிந்து கிடந்த உடல் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தலைநகர் புது டெல்லியில் இளம் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்து குற்றுயிராக பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டு, சிகிச்சை பயனளிக்காமல் இறந்ததை தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன“முறைகள் பெரும் கவனம் பெறுகின்றன. ஆனால், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் குறைவதாக எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. 2017ம் ஆண்டு இந்தியாவில் 33 ஆயிரத்து 658 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியதாக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் 92 பாலியல் வல்லுறவுகள் சராசரியாக நடைபெறுவதை இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றது. https://www.bbc.com/tamil/india-50671553
    • எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.  அதன்படி இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவினர், முன்னாள் அமைச்சரின் ஊடக சந்திப்பின் காணொளிகளை ஆராய தீர்மனித்துள்ளனர். அதன்படி விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனைசிங்க, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில்  இடையீட்டு மனுவொன்றூடாக, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் ஊடக சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட 7 ஊடக நிறுவனங்களிடம் உள்ள அந்த ஊடக சந்திப்பின்  செம்மைப்படுத்தப்படாத ஒளி, ஒலிப் பதிவுகளைப் பெற கோரிக்கை முன்வைத்தார்.  இந் நிலையில், சி.ஐ.டி.விசாரணைகளுக்காக கோரும் அந்த ஒளி, ஒலிப் பதிவுகளை வழங்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன ஏழு ஊடக நிறுவங்களுக்கு இன்று உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/70515  
    • சித்திரவதைக்கு உள்ளான 11 பேர் கோத்தாவுக்கு எதிரான வழக்கை வாபெஸ் பெற்றனர் சித்திரவதையால் ஏற்பட்ட சேதங்களுக்காக அமெரிக்காவில் கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பதினொரு இலங்கையர்கள், திரு ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து தண்டனையில் இருந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதிலிருந்து அவரை தடுக்கும் அதேவேளையில் தமது வழக்கினைப் பின்வாங்கிக் கொள்ளும் தந்திரோயாபமாக முடிவினை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நகர்வானது அவர் பதவியை விட்டுச் சென்ற பின்னர் வழக்கினை மீளத்தாக்கல் செய்யக்கூடியதாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாக்கும். இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனை தெரிவித்தனர். அதில் மேலும், “வாழ்நாள் முழுவதும் கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கமாட்டார் அத்துடன் அவர் இப்போது வலையில் தபபியிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நீணட காலத்திற்கு கூட காத்திருக்க வேண்டிவரும் என்பதை இந்த தாமதம் குறிக்கின்றது. “ஒரு நாளைக்கு கோததபாயவின் பதவிக்காலம் முடிவுக்குவரும் போது நீதி சாத்தியமாகும் என்ற உண்மையினால் நாங்கள் பலமடைந்துள்ளளதாக உணர்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.” ITJP சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பெல்ட் LLP உடன் இணைந்து ஆரம்பத்தில் சித்திரவதையில் இருந்து உயிர்தப்பிய றோய் சமதானம்1 என்பவரின் சார்பாக ஏப்பிரல் 2019 இல் மத்திய மாவட்டத்திற்கான அமரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நட்டஈட்டு வழக்கினை தயார்செய்தார்கள். 26 யூன் 2019 இல் இந்த முறைப்பாடனது பாதுகாப்பிற்காக வேணடுமென்றே பெயர்கள் வெளியிடப்படாமல் மேலும் எட்டு தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என பத்து வழக்குத்தொடுநர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்பப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில், திரு ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த பயங்கரமான மீறல்களை விபரித்துள்ளார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைகளிற்கு மேலாக போடப்பட்டு மூச்சுத்திறணச் செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். ஒரு தமிழ் வழக்குத்தொடுநர் 2009 இல் சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மூன்று வருடங்களாக பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாக விபரிக்கின்றார். அவரும் வேறு இளம் தமிழ்ப் பெண்களும் இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டார்கள் அங்கு இரவு நேரங்களில் கடமையில் இல்லாத இராணுவத்தினர் எந்தப் பெண்ணை வெளியில் கொண்டு சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது என தெரிவு செய்வார்கள். அவர்கள் கற்பமாவதைத் தடுப்பதற்காக குடும்பக்கட்டுபப்பாடும் மேற்கொள்ளப்பட்டது. – என்றுள்ளது. https://newuthayan.com/சித்திரவதைக்கு-உள்ளான-11-ப/
    • அரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு!   நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசியல் கைதிகள் எனக் குறிப்பிட்டு சிலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத் தக்கது. https://newuthayan.com/அரசியல்-கைதிகளை-விடுவித்/