Jump to content

தொடர்ச்சியாக அழிக்கப்படும் தேக்கு மரங்கள்! செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!


Recommended Posts

Image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் ஓரமாக தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்களத்தின் உடைய அனுமதியுடன் குறித்த செயற்பாடு அரசமரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இவ்வாறு தேக்கு மரச் சோலைகள் அழிக்கப்பட்டு இருப்பினும் இதுவரை அந்த இடங்கள் வெட்டை வெளியாக காணப்படுகின்றது.

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 வீதமான வனப்பகுதி இருப்பதாகவும் இதனை பாதுகாக்குமாறும் மக்கள் மத்தியில் பெருமையாக கூறியிருந்தார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குறித்த மரங்களுக்கான தேவை இல்லாதபோதும் தொடர்ச்சியாக இவ்வாறு தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள அரசமர கூட்டுத்தாபன வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட தொடர்ச்சியாக வெளிமாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல் அகழ்வு மணல் அகழ்வு கருங்கல் அகழ்வு உள்ளிட்ட செயற்பாடுகளிலும் பல்லாயிரக் கணக்கான மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற.

இவற்றையெல்லாம் அவதானித்துக் வருகின்ற முல்லைத்தீவு மாவட்ட திணைக்களம் எதற்காக தொடர்ச்சியாக மரங்களை அழித்து வருகிறது என்பது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு குறித்த பகுதியில் இன்றைய தினம் மரம் அறுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த பகுதியில் நடைபெறுகின்ற செயற்பாட்டை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் அரசமர கூட்டுத்தாபன அதிகாரிகள் எதற்காக இதை படம் எடுக்கிறீர்கள் என்று ஊடகவியலாளரை தங்களுடைய கைத்தொலைபேசியில் ஒளிப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக செய்யப்பட்டிருக்கிறார்.

அத்தோடு குறித்த இடத்தில் சிங்கள மொழியிலே ஒரு பதாகையை போட்டுவிட்டு அதிலேயே விடயங்கள் அனைத்தும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றார் .முற்றுமுழுதாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியிலே சிங்கள மொழியிலேயே ஒரு பதாகையை போட்டுவிட்டு தங்களுடைய இந்த பணியை செய்து கொண்டிருக்கின்ற அரசமரம் கூட்டுத்தாபனத்தின் இந்த செயற்பாடானது அவர்கள் இதில் ஏதாவது சட்டவிரோதமான வேலை செய்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.

இவ்வாறான தேவைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லாத நிலையில் இவர்களுடைய இந்த செயற்பாடு பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் அரசியல் வாதிகள் இவ்வாறான நிகழ்வுகளை தடுப்பதற்காக உழைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாவட்டத்தில் தேவையில்லாத போது மரங்கள் அறுக்கப்படுவது ஒருபுறமாக இடம்பெற ஏன் பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து மரநடுகை செய்ய வேண்டும் இவ்வாறு மரங்கள் அறுப்பதை தடுக்கலாம் என மக்கள் கூறுகின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/121897

Link to comment
Share on other sites

கேள்வி;  உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் ஒன்றைக் குறிப்பிடுங்களேன்?

இரண்டு சம்பங்களை என் மரணத்தின் பின்பும் மறக்க முடியாது. கடுமையான எரிப்பந்தங்கள் வானிலிருந்து விழுந்து கொண்டிருந்த நாளில், மனிதன் ஒருவன் என் பாதுகாப்பில் பதுங்கிக் கிடந்தான். அவனை நோக்கி வரும் எரிப்பந்தங்களை நான் தாங்கி அவனைக் காப்பாற்றினேன். ஆயினும், அவனின் அவசரம் அவனை எரிப்பந்தின் தாக்குதலுக்கு உட்படுத்தியது. மோசமாகக் காயப்பட்டான். என் மடியில் கிடந்து அழுது அரற்றினான். என்னால் என்ன செய்ய முடியும். அவன் துடிதுடித்து மரணித்தான்.  

பின்னொரு நாள், என்னில் ஏறி என் பிள்ளைகளை ஆசையாய் சாப்பிட்ட பாடசாலை சிறுவன் ஒருவன் தவறிக் கீழே விழுந்தான். வலிதாங்காது துடித்தான்; கதறினான். பல மனிதர்கள் வந்து வேடிக்கை பார்த்தனர். காப்பாற்றினால் சட்டச் சிக்கல் வருமாம். அம்புலன்ஸ் வரும் வரைக்கும் அனைவரும் காத்திருந்தனர். அம்புலன்ஸ் வர அவனின் உயிரும் என் மடியிலேயே பிரிந்தது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் நான் மனிதர்களுக்காக கண்ணீர் வடித்திருக்கின்றேன். அதனை எப்போதும் மறக்க முடியாது.  

இப்போது எந்த வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றீர்கள்?

நம் இருப்பு, மனிதர்களுக்கு மிக அவசியம் எனப் பல்வேறு விஞ்ஞான விளக்கங்களுடன் மனித மாணவர்களுக்குப் பாடசாலைகளில் கற்பிக்கப் படுகின்றது. ஆனால், அவர்கள் நம்மை அழிப்பதை மட்டும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. பெருகிக்கொண்டே போகும் தேவைகளுக்காக எம்மை துரத்தி துரத்தி வெட்டுகின்றனர். இப்போது பாருங்கள், இந்த வீதியில் நின்றிருந்த எத்தனை ஆயிரம் எம்மவர்கள் தறிக்கபட்டு தெற்குப் பக்கமாக இழுத்துச் செல்லப்படுகின்றார்கள்.

நானும் இன்னும் சில நாள்களில் தறிக்கப்பட்டு விடுவேன். இந்த வீதியின் கரையில் நான் நிற்பதால் என்னை அடியோடு கிளப்புவதற்கான திட்டம் போட்டாயிற்று. சில வேளைகளில் நான் முதலும் கடைசியுமாய் உங்களுக்கு வழங்கிய நேர்காணல் வெளிவர முன்பே படுகொலை செய்யப்பட்டு விடுவேன். எனக்கான மரணம் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து, மிக அருகில் வந்து விட்டது. எல்லா மனிதர்களையும் காக்கும் முறிகண்டியானால் கூட, என்னைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் விந்தை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.