• advertisement_alt
• advertisement_alt
• advertisement_alt
Sign in to follow this
nunavilan

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பேச்சு – பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா கோரிக்கை

Recommended Posts

இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பேச்சு – பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா கோரிக்கை

india-SL-army-talks-1-300x201.jpgஇந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார், கேணல் நிஷிட் ரஞ்சன், லெப்.கேணல் சிறீநாத் சடிப்பா ரெட்டி ஆகியோரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி மிஸ்ரா ஆகியோரும், நேற்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்தின் இளம் அதிகாரிகளுக்காக இந்தியாவில் அளிக்கப்படும் பயிற்சி பயனுள்ளதாக இருப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, மூத்த அதிகாரிகளுக்கான புலனாய்வு, சிறிய ஆயுதங்களைக் கொண்ட பொறிமுறைகள் போன்ற பயிற்சி நெறிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் அவர் இந்திய அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

india-SL-army-talks-2.jpg

அதேவேளை, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இரண்டு நாடுகளின் இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் நேற்றுக்காலை ஆரம்பமானது.

இந்த கலந்துரையாடலுக்கு சிறிலங்கா இராணுவத்தின் பொது அதிகாரிகள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிசங்க ரணவானவும், இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சுசீந்திர குமாரும் இணைத் தலைமை தாங்கினர்.

இந்தப் பேச்சுக்களில் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

http://www.puthinappalakai.net/2019/06/12/news/38517

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this

• Topics

• Posts

• "கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின்சூக்கா- அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூடும் நிலையேற்படும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்" இதையே இந்த  சீமாட்டி சொல்லாமல் ஒரு சீமான் சொல்லியிருந்தால் ......
• உத்தரப் பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் பேரில், இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், ஐந்து ஆண்கள் தாக்கி அருகிலுள்ள வயலுக்கு இந்த பெண்ணை இழுத்து சென்று, தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னொரு பாலியல் வல்லுறவு வழக்கில் பெரிதும் பேசப்பட்ட உன்னாவ் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய பெண், கார் விபத்து ஒன்றில் கடும் காயமடைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு விசாரணையை காவல்துறை தொடங்கியது. கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்கு தலைப்பு செய்தியாக வெளியாகி அதிர்ச்சி அளித்திருக்கும் நிலையில், சமீபத்திய இந்த சம்பவம் இந்தியாவில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். புகைப்பட காப்புரிமை @Zebaism @Zebaism
புகைப்பட காப்புரிமை @Zebaism @Zebaism
புகைப்பட காப்புரிமை @thakur_shivangi @thakur_shivangi
புகைப்பட காப்புரிமை @thakur_shivangi @thakur_shivangi
புகைப்பட காப்புரிமை @rsabhishek93 @rsabhishek93
புகைப்பட காப்புரிமை @rsabhishek93 @rsabhishek93
கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி, 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் ஹைதராபாத் நகரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டார். அவர் காணாமல் போனதை அடுத்து, எரிந்து கிடந்த உடல் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தலைநகர் புது டெல்லியில் இளம் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்து குற்றுயிராக பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டு, சிகிச்சை பயனளிக்காமல் இறந்ததை தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன“முறைகள் பெரும் கவனம் பெறுகின்றன. ஆனால், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் குறைவதாக எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. 2017ம் ஆண்டு இந்தியாவில் 33 ஆயிரத்து 658 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியதாக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் 92 பாலியல் வல்லுறவுகள் சராசரியாக நடைபெறுவதை இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றது. https://www.bbc.com/tamil/india-50671553
• எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியர் கடத்தப்பட்டு, சில மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளிப்படுத்திய விடயங்கள் குறித்து விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளது.  அதன்படி இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவினர், முன்னாள் அமைச்சரின் ஊடக சந்திப்பின் காணொளிகளை ஆராய தீர்மனித்துள்ளனர். அதன்படி விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்ஜித் முனைசிங்க, இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில்  இடையீட்டு மனுவொன்றூடாக, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் ஊடக சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட 7 ஊடக நிறுவனங்களிடம் உள்ள அந்த ஊடக சந்திப்பின்  செம்மைப்படுத்தப்படாத ஒளி, ஒலிப் பதிவுகளைப் பெற கோரிக்கை முன்வைத்தார்.  இந் நிலையில், சி.ஐ.டி.விசாரணைகளுக்காக கோரும் அந்த ஒளி, ஒலிப் பதிவுகளை வழங்க கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன ஏழு ஊடக நிறுவங்களுக்கு இன்று உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/70515
• சித்திரவதைக்கு உள்ளான 11 பேர் கோத்தாவுக்கு எதிரான வழக்கை வாபெஸ் பெற்றனர் சித்திரவதையால் ஏற்பட்ட சேதங்களுக்காக அமெரிக்காவில் கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பதினொரு இலங்கையர்கள், திரு ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து தண்டனையில் இருந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதிலிருந்து அவரை தடுக்கும் அதேவேளையில் தமது வழக்கினைப் பின்வாங்கிக் கொள்ளும் தந்திரோயாபமாக முடிவினை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நகர்வானது அவர் பதவியை விட்டுச் சென்ற பின்னர் வழக்கினை மீளத்தாக்கல் செய்யக்கூடியதாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாக்கும். இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனை தெரிவித்தனர். அதில் மேலும், “வாழ்நாள் முழுவதும் கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கமாட்டார் அத்துடன் அவர் இப்போது வலையில் தபபியிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நீணட காலத்திற்கு கூட காத்திருக்க வேண்டிவரும் என்பதை இந்த தாமதம் குறிக்கின்றது. “ஒரு நாளைக்கு கோததபாயவின் பதவிக்காலம் முடிவுக்குவரும் போது நீதி சாத்தியமாகும் என்ற உண்மையினால் நாங்கள் பலமடைந்துள்ளளதாக உணர்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.” ITJP சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பெல்ட் LLP உடன் இணைந்து ஆரம்பத்தில் சித்திரவதையில் இருந்து உயிர்தப்பிய றோய் சமதானம்1 என்பவரின் சார்பாக ஏப்பிரல் 2019 இல் மத்திய மாவட்டத்திற்கான அமரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நட்டஈட்டு வழக்கினை தயார்செய்தார்கள். 26 யூன் 2019 இல் இந்த முறைப்பாடனது பாதுகாப்பிற்காக வேணடுமென்றே பெயர்கள் வெளியிடப்படாமல் மேலும் எட்டு தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என பத்து வழக்குத்தொடுநர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்பப்பட்டது. நீதிமன்ற ஆவணங்களில், திரு ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த பயங்கரமான மீறல்களை விபரித்துள்ளார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைகளிற்கு மேலாக போடப்பட்டு மூச்சுத்திறணச் செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். ஒரு தமிழ் வழக்குத்தொடுநர் 2009 இல் சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மூன்று வருடங்களாக பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாக விபரிக்கின்றார். அவரும் வேறு இளம் தமிழ்ப் பெண்களும் இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டார்கள் அங்கு இரவு நேரங்களில் கடமையில் இல்லாத இராணுவத்தினர் எந்தப் பெண்ணை வெளியில் கொண்டு சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது என தெரிவு செய்வார்கள். அவர்கள் கற்பமாவதைத் தடுப்பதற்காக குடும்பக்கட்டுபப்பாடும் மேற்கொள்ளப்பட்டது. – என்றுள்ளது. https://newuthayan.com/சித்திரவதைக்கு-உள்ளான-11-ப/
• அரசியல் கைதிகளை விடுவித்ததாக நாடகம்; கைதிகள் மறுப்பு!   நேற்றைய தினம் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை என்று அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரசியல் கைதிகள் எனக் குறிப்பிட்டு சிலர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளுக்கும் தொடர்பில்லை எனவும் அரசியல் கைதிகள் தரப்பில் இருந்து எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இதேவேளை இப்போது சிறைகளில் 89 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி 36 பேர் தண்டனை பெற்ற கைதிகளாகவும், 35 பேர் சந்தேகக் கைதிகளாகவும் மற்றும் 15 பேர மேன் முறையீடு செய்த கைதிகளாகவும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத் தக்கது. https://newuthayan.com/அரசியல்-கைதிகளை-விடுவித்/