Jump to content

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

4 பயà®à¯à®à®°à®µà®¾à®¤à®¿à®à®³à¯ à®à¯à®¤à¯

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு!

சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர். 

இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு ஏஜென்சி எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனாலும் இலங்கை அரசு அலட்சியமாக இருந்தது. கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நடத்திய சோதனைகளின் போது இது தொடர்பான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கைக்கு சென்ற இந்திய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், சஹ்ரான் குழுவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். மேலும் இலங்கையிலும் அந்த குழு விசாரணை நடத்தியது.

à®à¯à®µà¯à®¯à®¿à®²à¯ à®à¯à®¤à®©à¯

இதனைத் தொடர்ந்து இலங்கை தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருடனான தொடர்புகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் அன்புநகர் உட்பட 7 இடங்களில் இன்று புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையானது பகல் 2 மணிவரை நடைபெற்றது.

சஹ்ரான் நடத்தி வந்த தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினரும் கோவை சந்தேக நபர்களுக்குமான தொடர்புகளை உறுதி செய்த பின்னர் இச்சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சோதனையின் முடிவில் 4 பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தற்போது துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட் டிஸ்க், 13 சிடி-டிவிடிகள், 300 ஏர் கன் குண்டுகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read more at: https://tamil.oneindia.com/news/coimbatore/nia-conducts-searches-seven-places-in-coimbatore-353809.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

india-2-720x450.jpg

இலங்கை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அறுவர் கோவையில் கைது!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதல்களுடன் கோவையை சேர்ந்த அசாருர்தீன் என்பவருக்கு தொடர்பிருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பை போன்று கலிஃபா சி.எப்.எக்ஸ் என்ற பெயரில் முகநூல் பக்கத்தை அவர் நடத்தி வந்துள்ளதாகவும், அதன்மூலம் ஐ.எஸ் அமைப்பினரின் கருத்துக்களை பரப்பி வந்துள்ளதாகவும், தேசிய புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சஹரான் ஹாசிமுடன், அசாருதீன் முகநூலில் தொடர்பில் இருந்ததாகவும், தீவிரவாத கருத்துக்களை பரஸ்பரம் பரப்பிக்கொண்டதாகவும் குறித்த அமைப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோவையை சேர்ந்த சிலருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவை, உக்கடம் உள்ளிட்ட ஏழு இடங்களில் என்.ஐ.ஏ என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டனர்.

குறித்த பிரிவினர் முதற்கட்டமாக முகமது அசாருர்தீன் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், இதனையடுத்து அபுபக்கர் சித்திக், இதயத்துல்லா, சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா உள்ளிட்ட அறுவரின் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கோவையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

குறித்த அறுவர் மீதும் கேரள மாநிலம் கொச்சியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இலங்கை-குண்டுவெடிப்பு-தா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.