Jump to content

ராஜராஜ சோழனை இழிவுபடுத்தவில்லை – பா.இரஞ்சித்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜராஜ சோழனை இழிவுபடுத்தவில்லை – பா.இரஞ்சித் :

June 12, 2019

 

image-4.png?resize=677%2C486திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சியை விமர்சித்துப் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கான எதிர்வினையும் வலுத்துள்ளது. இதுதொடர்பாக, பா.இரஞ்சித் மீது காவல்நிலையத்தில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய பா.இரஞ்சித்    “தனித் தொகுதிகளைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சாதி அடிப்படையில்தான் வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள். அதை வெளிப்படையாக யாரும் சொல்வதில்லை. திராவிடத்திலிருந்தும், தமிழ் தேசியத்திலிருந்தும் பட்டியலின மக்களைத் தனிமைப்படுத்துகிறீர்கள் என்கிறார்கள். ஏற்கெனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத்தானே இருக்கிறார்கள். ஊரிலிருந்து சேரி தனித்துவிடப்பட்டுள்ளது. அந்தச் சேரியிலிருந்து சேரிப் பிரச்னையைப் பேச வந்திருக்கிறேன்” என்று   தெரிவித்தார்

மேலும் அவர், “ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தைப் பொற்காலம் என்று சொல்கிறார்கள். ஆனால், ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று நான் சொல்கிறேன். ராஜராஜசோழன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று நிறைய பேர் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் மக்களுடைய நிலம் ராஜராஜன் ஆட்சியில்தான் பறிக்கப்பட்டது. சாதிய ரீதியில் மிகப்பெரிய ஒடுக்குமுறை அவருடைய ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அவரின் ஆட்சியில்தான், 400 பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டனர். தேவதாசி முறை அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் அமல்படுத்தப்பட்டது” என்று பேசியது பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருடைய கருத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும்விதமாகப் பேசியதாக பா.இரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் கேட்டபோது, “ராஜராஜ சோழன் காலத்தில்தான் சாதியம் வலுப்பெற்றது என்று சொல்பவர்கள், அதற்கான சான்றுகளைத் தர வேண்டும். மன்னர்கள் காலத்தில், ஒப்பீட்டளவில் நல்ல அரசாக அவன் இருந்துள்ளான்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “சோழர்களுக்கு முன்பே வர்ணாசிரமம் இருந்தது. ராஜராஜன் ஆட்சியில் இருந்ததே 27, 28 ஆண்டுகள்தான். அதற்குள் அவரால் முடிந்ததைச் செய்துள்ளார். கெடுதல் எதையும் அவர் செய்யவில்லை. ராஜராஜ சோழன்தான் முதன்முதலில் பறையர் சமூக மக்களுக்கு இறையிலி நிலம் கொடுத்தவர். அதாவது, வரி இல்லாத நிலம். இதற்குக் கல்வெட்டு சான்று இருக்கிறது.

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, அந்தக் கோயிலைத் திறந்தபோது, அதில் பணியாற்றியவர்களுக்கு ராஜராஜ சோழன் சிறப்புப் பட்டங்களைக் கொடுத்தார். தலைமைப் பொறியாளர் சிங்காரமல்லர் என்று இருந்தார். அவருக்கு ராஜராஜ பெருந்தச்சன் என்ற பட்டத்தை ராஜராஜ சோழன் கொடுத்தார். அரச அறிவிப்புகளை பறையறைந்து வெளியிடுபவர் பறையர். அதனால்தான் பறையர் என்று பெயர் வருகிறது. அவர்களுக்கு, `ராஜராஜ பெரும் பறையன்’ என்ற பட்டத்தை ராஜராஜ சோழன் கொடுக்கிறார். பெரிய கோயிலில் முடிதிருத்துபவர்களுக்கு, `ராஜராஜ பெரு நாவிதன்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார். ராஜராஜனின் இயற்பெயர் அருண்மொழித்தேவன். ராஜராஜன் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பட்டத்தை, மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார். யாரையும் சாதிவேறுபாடு இல்லாமல் சமத்துவமாக நடத்துகிறார். குடவோலை முறை மூலம் பஞ்சாயத்து ஆட்சி முறையைக் கொண்டுவந்தவர், அவர். ஒரு ஜனநாயக ஆட்சி முறையை, உள்ளாட்சி முறையைக் கொண்டுவந்தது ராஜராஜன் சோழன்தான். வேளாண்மையை விரிவுபடுத்தி புதிய புதிய கால்வாய்களை உருவாக்கியவர் அவர். `மன்னராட்சி என்பது ஜனநாயக ஆட்சியைவிட சிறந்த ஆட்சி முறை’ என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், அந்த ஆட்சி முறைக்குள் ஒரு சிறப்பான ஆட்சியை அவர் நடத்தியுள்ளார் என்பதை பா.இரஞ்சித் போன்றவர்கள் பார்க்கவேண்டும்” என்றார்.

சோழர் ஆட்சி முறை குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டு புத்தகங்கள் எழுதியிருக்கும் பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “சாம்ராஜ்ய காலத்தில் நிலக்குவியல் இருந்தது. நிலம் முழுவதும் மன்னருக்குச் சொந்தம். அந்த நிலங்களை, குறுநில மன்னர்களுக்கும் நிலப் பிரபுக்களுக்கும் கொடுத்துவிடுவார்கள். அவர்கள் மன்னருக்குக் கப்பம் கட்டுவார்கள். பஞ்சமர்களிடம் இருந்த நிலத்தைப் பறித்து குறுநில மன்னர்களிடம் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அன்றைக்கு இருந்த அமைப்பு முறையே, நிலப்பிரபுத்துவ அமைப்புமுறைதான். அந்த நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையின் வெளிப்பாடாகச் சாதியமும், ஆணாதிக்கமும் இருந்தன. அதில்தான், தேவதாசி முறை உருவானது. இவர்களுக்கு முன்பாகவே, சங்க காலத்தில் பரத்தையர் இருந்தனர். களப்பிரர் காலத்தில் பரத்தையர், கணிகையர் இருந்தனர். மணிமேகலையும் மாதவியும் கணிகைகள்தானே.

பெண்களைப் பொது மகளிராகப் பாவிப்பது சங்க காலத்தில் இருந்தது; அடுத்ததாகக் களப்பிரர் காலத்திலும் இருந்தது. அதற்கடுத்தாக, சாம்ராஜ்ய காலத்திலும் வந்தது. சோழர்கள் காலத்தில் பெரும் கோயில்களை நிர்மாணம் செய்து, அதனுடன் தேவதாசிகளை இணைத்துவிட்டனர். தேவதாசிகள், கடவுளுக்குச் சொந்தம் என்றார்கள். உண்மையில், அவர்களை மன்னரும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும் கோயில் பூசாரிகளும்தான் அனுபவித்தார்கள். ஆகவேதான், கோயிலைச் சுற்றி ஒருபுறம் பூசாரிகள் தெருவும், மறுபுறம் தேவதாசிகள் தெருவும் இருந்தன. இதற்கெல்லாம் சான்றுகள் உள்ளன.

படையெடுப்பில் வெற்றிகொள்ளப்பட்டவர்களைப் பிடித்துக்கொண்டுவந்து பஞ்சமர்கள் என்று ஆக்கினார்கள். அந்தப் பெண்களை, தேவதாசிகள் என்று ஆக்கினார்கள். அப்படித்தான் அந்த முறை உருவானது. போர்க்கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களை வைத்துத்தான், பெரிய, பெரிய கோயில்களை நிர்மாணித்தார்கள். தஞ்சையில் ராஜராஜ சோழன் பெரிய கோயிலை அப்படித்தான் கட்டினான். ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். அந்தக் கோயில்களில் பிராமணப் பூசாரிகள் அர்ச்சகர்கள் ஆக்கப்பட்டனர். அந்த பிராமண பூசாரிகளுக்கு இலவசமாக நிலங்கள் வழங்கப்பட்டன. அதுவும் முழுமுழு கிராமங்களாகக் கொடுக்கப்பட்டன. அவைதான் பிரமம் தேயங்கள், சதுர்வேதி மங்கலங்கள். இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில்தான் சாதிய அமைப்பு முறை நிலைநிறுத்தப்பட்டது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

அதே நேரத்தில், சோழர்கள் ஆட்சியில் நீர்ப்பாசன முறை ஒழுங்குபடுத்தப்பட்டு, விவசாயம் செழித்தோங்கியது. அதனால்தான், ராஜராஜ சோழனால் அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டியாள முடிந்தது. தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் அற்புதமான ஓவியங்கள் எல்லாம் இருந்தன. எல்லாம் இன்று அழிந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு பிரமாண்டமான கோயிலைக் கட்டியிருப்பது மிகப்பெரிய அதிசயம். அந்த அதிசயத்தைக் கொடுத்ததில் ராஜராஜனுக்கு ஒரு பெருமை உண்டு. அதேநேரத்தில் அவன் ஒரு ராஜாதான். நிலப்பிரபுத்துவ ராஜாதான். அவன்தான், இங்கு வர்ணாசிரமத்தை நிலைநிறுத்தியவன். வர்ணாசிரமம் என்பது சாதியமும், ஆணாதிக்கமும் கொண்டது. ஆணாதிக்கம் என்பது தேவதாசி முறை மூலம் வெளிப்பட்டது. நான்கு வர்ணங்கள், அந்த நான்கு வர்ணங்களுக்குக் கீழ் பஞ்சமர்கள், தீண்டாமை எல்லாம் சாம்ராஜ்ய காலத்துக்குக் கொஞ்சம் முன்பாகவே வந்துவிட்டன. அதையெல்லாம் ராஜராஜ சோழன் நிலைநிறுத்தினான் என்பது உண்மை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மன்னராட்சி முறை அப்படித்தான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், மன்னர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களைப்போய், இன்றைக்கு நாம் விமர்சனம் செய்துகொண்டிருப்பது தேவையில்லை என்றே நினைக்கிறேன். அதே நேரத்தில், அந்த ஆட்சி முறையை  விமர்சனம் செய்தால், ‘ராஜராஜ சோழனை இழிவுபடுத்திவிட்டார்கள்’ என்று சொல்வதும் நியாயமல்ல.

பா.இரஞ்சித் போன்றவர்கள் ராஜராஜ சோழன் ஆட்சியின் இன்னொரு பகுதியையும் பார்க்க வேண்டும். பாசன வசதிகளை உருவாக்கியது, கட்டடக் கலைகளை வளர்த்தது, கலைநுட்பம் வாய்ந்த பிரமாண்டமான கோயில்களைக் கட்டியது என்பதையெல்லாம் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து” என்றார் அருணன்.

பற்ற வைத்து விட்டார் பா.இரஞ்சித். அது இப்போதைக்கு அணையுமென்று தோன்றவில்லை.

#பா.இரஞ்சித் #ராஜராஜ சோழன் #பொற்காலம்

image1-2.png?resize=350%2C475image2.png?resize=400%2C345

 

http://globaltamilnews.net/2019/124168/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.