Jump to content

படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி

பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது  பாதுகாப்பை உர்ஜிதப்படுத்தாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

DSC_0544_1.JPG

வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து மேலும் கருத்துரைக்கையில்,

நாங்கள் எத்தனையோ போராட்டங்களை பார்த்தவர்கள். எங்களுடைய போராட்டம் என்பது இனரீதியான போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று போராட்டம் என்ற ரீதியிலே மிகவும் பயங்கரமான ஒரு பயங்கர வாத நிகழ்வு கூடுதலாக எங்களுடைய மக்கள் யார் இருந்தாலும், எந்த சமூகம் இருந்தாலும், மக்கள் தொகை மரிக்கின்ற எண்ணிக்கையை வைத்து கொண்டு ஒரு முஸ்லீம் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று கூறி தங்களுடைய நாடு.

இந்த உலகம் முழுதும் தங்களுக்கு வர வேண்டும். தங்களுடைய நாடாக மாற வேண்டும் என்ற சிந்தனையிலே செயற்படுகின்ற ஒரு நிகழ்வாக நாங்கள் அயல் நாடுகளிலே பார்த்திருக்கின்றோம். இப்பொழுது எங்களுடைய நாட்டிலே அது உருவெடுத்திருக்கிறது. 

ஆகவே மக்களுடைய எண்ணிக்கை அதுவும் கூடுதலாக இந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது தமிழர்கள் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே எண்ணிக்கை என்பது மக்களுடைய பிணங்களை எண்ணி  கணக்குப் பார்த்து சந்தோசப்படுகின்றது தான் இந்த தீவிரவாதத்தின் எண்ணம். ஆகவே நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை நாங்கள் தான் பார்க்க வேண்டும். அந்த விடயத்திலே நாங்கள் எல்லோரும் கவனமாக போகும் வழிகளில் பிள்ளைகளை, எல்லோரையும் கவனமாக நாங்கள் தான் பார்க்க வேண்டும். 

இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற நாங்கள் இவ்வளவு இழப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நாங்கள் இந்த வாழ்க்கையை நடத்துகிறோம் என்றால் எங்கள் கடவுள் ஏதோ ஒரு வகையில் எங்களை விட்டிருக்கிறார் என்று சொன்னால் நாங்கள் நல்லதை செய்ய வேண்டும் என்பதற்காகவே.

எங்களுடைய இலட்சிய போராட்டம் என்பது, அதற்கான எல்லைகள் என்பது அல்லது கவனம் என்பது இன்றைக்கு பார்த்தவர்கள் இருந்தால் எவ்வளவு பிரச்சனை. ஆகவே சமூக ஒற்றுமை என்பது கட்டாயம் தேவை. எங்களுடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். 

ஆகவே பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே அது பொலிஸ் பார்த்துக்கொள்ளும், இராணுவம் பார்த்துக்கொள்ளும் எங்களை சோதனை செய்யும்போது அது ஒரு விருப்பம் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழல். ஆனால் எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்கின்ற ஒரு கட்டாய நிலைக்கு நாங்கள் வந்திருக்கின்றோம்.

ஆகவே எங்களுடைய தேசத்திலே இன்றைக்கு பல பிரச்சனைகளை எங்களுடைய தமிழ் சமூகம் சந்தித்திருக்கிறது. இவ்வாறானவைகளிலிருந்து மீண்டு நாங்கள் எங்களுடைய செயற்பாட்டை  செய்ய வேண்டும்  என மேலும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/58202

Link to comment
Share on other sites

"ஆகவே பாதுகாப்பை நீங்கள் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டிலேயே அது பொலிஸ் பார்த்துக்கொள்ளும், இராணுவம் பார்த்துக்கொள்ளும் எங்களை சோதனை செய்யும்போது அது ஒரு விருப்பம் இல்லாமல் இருக்கின்ற ஒரு சூழல்." - செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவர்

ஒரு மக்களின் தலைவராக, பிரச்சனைகளை தெரிந்து வைத்துள்ளீர்கள். அதையும் தாண்டி, என்ன தீர்வை உங்களால் மக்களுக்கு தரமுடியும் என்பதே மக்களின் அங்கலாய்ப்பு 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

ஒரு மக்களின் தலைவராக, பிரச்சனைகளை தெரிந்து வைத்துள்ளீர்கள். அதையும் தாண்டி, என்ன தீர்வை உங்களால் மக்களுக்கு தரமுடியும் என்பதே மக்களின் அங்கலாய்ப்பு 😞 

போராட்டத்தையும் ,தியாகிகளையும் வருடா வருடம் நினைவு கூறுவோமல்ல...அதுதான் தமிழ்மக்களுக்கு எம்மால் வழங்க முடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.