பிழம்பு

நீருக்காக ஏங்கும் தமிழகம், ஏரிகளில் செத்து கருகிய மீன்கள் - மனதை உருக்கும் புகைப்படங்கள்

Recommended Posts

Posted (edited)
 
மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்குபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption மனிதர்களுக்கு மட்டுமா தண்ணீர் பிரச்சனை கிண்டி வன உயிரின பூங்காவில் சொட்டு நீருக்காக காத்திருக்கும் குரங்கு

தமிழகம் இந்த ஆண்டு கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளது. அதிலும், தலைநகர் சென்னையில் குடிநீர் பஞ்சம் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறைந்து போன நிலத்தடி நீர் மட்டம், வறண்டு போன ஏரிகள் என அத்தியாவசிய தண்ணீருக்காக அனுதினமும் தமிழக மக்கள் தர்ம யுத்தம் நடத்தி வருகிறார்கள் என்றால் மிகையாகாது. அதுகுறித்த புகைப்படத் தொகுப்பு.

நீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்குபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption கிண்டியில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்ளும் குரங்கு நீருக்காக ஏங்கும் தமிழகம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR
 

சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் தண்ணீர் இல்லாததால் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர்

சென்னை தண்ணீர் பஞ்சம்படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக சென்னையிலுள்ள ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர் சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளனபடத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption சென்னையில் தீ அணைக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR Image caption சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள் சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR சென்னையில் ஏரி ஒன்றில் நீரில்லாமல் செத்துப்போன நூற்றுக்கணக்கான மீன்கள்படத்தின் காப்புரிமை ARUN SANKAR

https://www.bbc.com/tamil/india-48620355

Edited by பிழம்பு

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்தை கூனல் முதுகு இல்லாத தமிழன் ஆட்சிக்கு வருமட்டும் இந்தக்கதை தொடர்கதைதான் .

மாரியில் வெள்ளமும் கோடையில் வறட்சியும் தமிழ்நாட்டுக்கு கிடைத்த சாபம் .

தண்ணியில்லாத நேரம்தான் வடநாட்டவர்களின் தொழில்சாலைகள் எவ்வளவு தண்ணீரை பொய் சொல்லி எடுக்கின்றனர் என்ற விபரம் சேகரிக்கின்றனர் .

Share this post


Link to post
Share on other sites


வெள்ளம் வந்த பொழுது இராணுவம் வந்தது 

வரட்சி வந்த பொழுது ......

மிகப்பெரிய தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது தமிழ்நாடு. அதிலும், தலைநகர் சென்னையில் முக்கிய நீர் ஆதரமாக விளங்கிய ஏரிகள் வறண்டு, பிளவுப்பட்டு மீன்கள் கொத்து கொத்தாக செத்து கிடக்கின்றன.

ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். மறுபுறம், இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது.

சமூக ஊடகமான ட்விட்டரில் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

யாரை குறை கூறுவது?

"தண்ணீர் பிரச்சனைக்கு நாம் யாரையும் குறைகூற முடியாது. இந்நிலைக்கு மக்களாகிய நாமே காரணம். தற்போது, நாம் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிக்க வேண்டும்," என்கிறார் அருண்பாலா.

https://www.bbc.com/tamil/india-48646638

Share this post


Link to post
Share on other sites

நான் வாழும் நாட்டில் தண்ணிர்ப்பஞ்சம் எனது இரண்டு சந்ததிகள் காலத்திக்கும் வரவே வராது. அதுவும் தலைநகர் கெல்சிங்கியில் அப்படி எதுவும் நடக்காது. காரணம் தலைநகருக்கான தண்ணீர் பின்லாந்தின் இரண்டாவது மிகப்பெரிய வாவியகிய பையந்தின் வாவியிலிருந்து வருகிறது இந்த வாவி  1118 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. இங்கிருந்து இத்தண்ணிர் கெல்சிங்கிக்கு 115 கிலோ மீட்டர் நிலத்துக்கு அடியிலான சுரங்கப்பாதையால் கொண்டுவரப்படுகிறது தவிர இச்சுரங்கப்பாதை உலகில் மிக நீளமான, செயற்கையாக உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதையாகும். 

தவிர பின்லாந்தில் குழாயில் வரும் நீரை நேரடியாகவே பிடித்துக்குடிக்கலாம் ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளிலேயே இப்படியான தரமான தண்ணீர் வினியோகம் இருக்கிறது மற்றப்படி லிடில் சுப்பமார்க்கற்தான் தஞ்சம்.

ஒரு தகவலிக்காகவே இதைச்சொன்னேன்.

கூடிய விரைவில் இப்பிரச்சனை இலங்கையில் குறிப்பாக வடக்கில் அதுவும் யாழ் குடாநாட்டிலும் வரும். எமக்கான நீர் முகாமைத்துவத்தை அறிந்து அதைப்பிரயோகிக்காதுவிடின். 
 

 • Thanks 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

உண்மைதான், யுகேயிலும் எப்பவும் மழை என சலிப்போம். கிரிகெட்டை குழப்ப வேற செய்யும். ஆனால் பைப்பில் வரும் தண்ணீர் போத்தல் தண்ணியை விட சுத்தமானது.

நீறின்றி அமையாது உலகு. உலகின் பாலவனமாதல் மிக வேகமெடுத்துள்ளதாம். 

சீமான் சொல்வது போல் நதிகளின் இயற்கை போக்கை மாற்றுவது ஆபத்து, ஆனால் கால்வாய் மூலம் ஒரு நதியில் ஓடும் உபரி  நீரை ஓடும் இன்னொரு நதியில் சேர்க்கலாம்.

சந்திராயன் மண்ணாங்கட்டிராயன் என்று கரியாக்கும் காசை இப்படி செலவழிக்கலாம்.

ஆனால் தாகம் எடுப்பது தமிழனுக்கு - ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, goshan_che said:

உண்மைதான், யுகேயிலும் எப்பவும் மழை என சலிப்போம். கிரிகெட்டை குழப்ப வேற செய்யும். ஆனால் பைப்பில் வரும் தண்ணீர் போத்தல் தண்ணியை விட சுத்தமானது.

நீறின்றி அமையாது உலகு. உலகின் பாலவனமாதல் மிக வேகமெடுத்துள்ளதாம். 

சீமான் சொல்வது போல் நதிகளின் இயற்கை போக்கை மாற்றுவது ஆபத்து, ஆனால் கால்வாய் மூலம் ஒரு நதியில் ஓடும் உபரி  நீரை ஓடும் இன்னொரு நதியில் சேர்க்கலாம்.

சந்திராயன் மண்ணாங்கட்டிராயன் என்று கரியாக்கும் காசை இப்படி செலவழிக்கலாம்.

ஆனால் தாகம் எடுப்பது தமிழனுக்கு - ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

 

காசு வேண்டி ஒட்டு போடும் மக்கள் இனியாவது சிந்திக்கணும் இந்த பிரச்சனை தேர்தலுக்கு முதல் வந்திருக்கணும் .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

'வà¯à®à®®à®¾à® à®à¯à®±à¯à®¯à¯à®®à¯ நிலதà¯à®¤à®à®¿ நà¯à®°à¯'

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அஞ்சதக்க அளவில் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலையில் 4.5 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாத இடைவெளியில் மட்டும், கடலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கணிசமான அளவு நிலத்தடி நீர் குறைந்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites

64518408_1382923371850175_74882612728241

அது ஒரு அழகிய கனா காலம்..😪

Share this post


Link to post
Share on other sites

குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.

 

தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக தேனியில் அவர் தெரிவித்ததாவது,

“தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயற்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக குடி மராமத்து பணி செய்ய 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலைவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி, குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்.” என்றார்.

 

https://www.virakesari.lk/article/58318

Share this post


Link to post
Share on other sites

எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு இப்போது தான் த‌ண்ணீர் ப‌ஞ்ச‌ம் அதிக‌ரித்து இருக்கு / 500 1000 சில்ல‌ரை காசை வேண்டி போட்டு திருட்டு கும்ப‌லுக்கு ஓட்டு போட்டா உது தான் கெதி / 

அண்ண‌ன் சீமான் சொன்ன‌து எல்லாம் இப்ப‌ செய‌லில் ந‌ட‌க்குது 👏
அண்ண‌ன் சீமானின் அறிவுக்கு அமெரிக்காவில் இருக்க‌ வேண்டிய‌வ‌ர் , ஏதோ அவ‌ர் கொண்ட‌ இன‌ ப‌ற்றால் த‌மிழ் நாட்டில் இருக்கிறார் & ( இது க‌வுண்ட‌ம‌னியின் ப‌ஞ்சு டையிலாக்கில் சுட்ட‌ வ‌ச‌ன‌ம் 😁😉

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவ வல்லரசாக்கி காட்டிற நம்ப கனவு என்னாச்சு?

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, vanangaamudi said:

இந்தியாவ வல்லரசாக்கி காட்டிற நம்ப கனவு என்னாச்சு?

இது எல்லாம் சும்மா வெட்டி பேச்சு உற‌வே , 2020ம் ஆண்டு இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று , 

வெளிப்ப‌டையாய் சொல்ல‌ போனால் இந்தியா இப்ப‌ போல‌ எப்ப‌வும் ஒரு குப்பை நாடா தான் இருக்கும் , 
இந்தியா எல்லாத்திலும் பின் நோக்கி போய் விட்ட‌து / 

ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள்
மூனு நேர‌ உண‌வு சாப்பிடின‌மா
இல்லாவே இல்லை / 

சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ள்
தெரு ஓர‌ங்க‌ளில் ப‌டுக்கின‌ம் /

பிராடுக‌ளிட்டை நாட்டை குடுத்தா நாடு எப்ப‌டி வ‌ள‌ர்ச்சி அடையும் / 
ஊழ‌லில் இந்தியா இர‌ண்டாவ‌து இட‌ம் / தூ தூ 

Share this post


Link to post
Share on other sites

காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கலாம்... மாயம் மந்திரமில்லை... முழுக்க அறிவியல்!

உப்பு நீரைச் சுத்திகரிக்கப்பட்ட நீராக மாற்றுவது என்பது ஒரு மதிப்பு மிக்கசெயல்முறை என்று தான் கூற வேண்டும். ஒன்றில் மூன்று பங்கு மக்களுக்கு இந்த அணுகு முறையில்லை. ஒன்றில் ஐந்து பங்கிலான மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையோடு தான் தங்களது வாழ்வை நகர்த்துகின்றனர். இந்த நிலையைத் தீர்க்கும் பொருட்டு அறிவியல் முறையில் அதாவது wind powered device என்று சொல்லக் கூடிய காற்று இயங்கு சாதனம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இந்த சாதனம் ஒரு நாளைக்கு 37 லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குமாம் நமக்கு.

இதற்குப் பெயர் water seer என்பது.அதாவது தண்ணீர் சீயர். இதனைப் பயன்படுத்தி அவரவர் தனது சுய தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனை நம் அறிஞர்கள் புரோட்டோ-டைப் முறைமையில் ஏற்கனவே பரிசீலனை செய்து பார்த்துவிட்டனர். மேலும் இதன் சமீபத்திய மாடல் ஒன்று 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இறுதியாக்கப்பட்டுள்ளது.

சரி, இதை எப்படி செயல்முறைப்படுத்துவது?

இந்த சாதனம் நிலத்திலிருந்து ஆறு அடிக்குக் கீழ் பொறுத்தப்பட வேண்டும். நிலத்தடியில் அமைந்துள்ள மெட்டல் சைடுகள் மணலால் குளிர்ச்சியாக்கப்படும். காற்று டர்பனைச் சுழற்சி செய்து அதிலுள்ள காற்றாடிகள் காற்றை ஒடுக்கிய அறையினுள் (condensation chamber) செலுத்தும். அதனால் குளிர்ச்சியான காற்றானது அந்த அறையையும் குளிர்ச்சிபடுத்தி நீராவியைக் கெட்டியாக்கி ரிசர்வாயரின் உள்ளே ஒழுகச் செய்யும். அந்த ரிசர்வாயரின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள பம்பு குழாயும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை வெளியேற்றும்.

காற்று இல்லை என்றாலும் நம்மால் 24 மணி நேரமும் நீரை உறிஞ்ச முடியுமாம். அதற்கென்று மீண்டும் நாம் தண்ணீரை இஷ்டத்திற்கு பயன்படுத்திவிடக் கூடாது.அளவுக்கு மீறினால் திறம்பவும் இதே கதி தான்.புரிஞ்சுதோ!!!

இது எல்லா சூழ்நிலையிலும் செயல்படாது. 37 லிட்டர் எப்போதும் கிடைக்காது என இந்த முறையை குறை சொல்லியும் பல வீடியோக்களை பார்க்க முடிந்தது. ஆனால், இது நடக்கவே நடக்காத காரியம் என அவர்களாலும் சொல்ல முடியவில்லை. நீரின் அளவு கூடும்.குறையும் எனதான் சொல்கிறார்கள். விரைவில் இது உண்மையாகி, பரவலாக பயன்பாட்டுக்கு வர வேண்டும். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான்  எல்லோரின் ஆசையும்.

https://www.vikatan.com/news/information-technology/87942-this-machine-can-get-us-water-from-thin-air.html

குறிப்பு : இந்த தொழில்நுட்பம் எவ்வளவு தூரம் சாத்தியம் என தெரியவில்லை 

 

 

https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2018/sep/04/காற்றில்-இருந்து-நீர்-2993997.html

 

Share this post


Link to post
Share on other sites

சராசரி மழை வீழ்ச்சி - சென்னை : https://en.wikipedia.org/wiki/Chennai : The average annual rainfall is about 140 cm (55 in). The city gets most of its seasonal rainfall from the north–east monsoon winds, from mid–October to mid–December.

சராசரி மழை வீழ்ச்சி - அரிசோனா, அமெரிக்க்கா ( வறண்ட மாநிலம் ) 1971 to 2000 was 8.29 inches, and from 2000 to 2015 it was 6.54 inches https://www.tripsavvy.com/does-it-rain-in-phoenix-2683743

சென்னையில் 7.5 வீதம் அதிக மழை, அரிஸோனாவுடன் ஒப்பிடும்பொழுது 

எவ்வாறு மழை நீரை அரிஸோனாவில் வாழும் இவர் சேமிக்கின்றார் 

 

 

Share this post


Link to post
Share on other sites

India's sixth biggest city is almost entirely out of water

The floor of the Chembarambakkam reservoir is cracked open, dry and sun-baked. About 25 kilometers (15.5 miles) away, in Chennai, India's sixth largest city, millions of people are running out of water.

Chembarambakkam and the three other reservoirs that have traditionally supplied Chennai are nearly all dry, leaving the city suffering from an acute water shortage, said Jayaram Venkatesan, an activist in the city.
 
Srini Swaminathan, who took this photograph of Chembarambakkam reservoir from a plane, told CNN: "I have been living here since 1992 and have never seen anything like this before."
Due to an inability to collect sufficient rain water combined with low groundwater levels, the Tamil Nadu state government has been struggling to provide water to residents.
With the reservoirs dry, water is being brought directly into Chennai neighborhoods in trucks. Every day, hundreds of thousands of residents have no choice but to stand in line for hours in soaring summer temperatures, filling dozens of cans and plastic containers.

https://www.cnn.com/2019/06/19/india/chennai-water-crisis-intl-hnk/index.html

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் நிறுவனத்தில் உயரதிகாரிகளாகப் பணிபுரிய எத்தனைபேரை இந்தியா அனுப்பிவைத்துள்ளது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்வது உகந்தது. இல்லையேல் ஐ.நா சபையில் இந்தியர்களை பெரும் பதவியில் அமர்த்தி ஈழப்போராட்டத்தை அழிக்க உதவியதுபோல், கீழடி ஆய்வில் கண்ட தமிழரின் வரலாறுகளையும் அந்த இந்தியர்களைக் கொண்டு, திசைமாற்றி அழித்துவிடலாம். 😲  
  • 2009 வரைக்குமான அயுதமேந்திய போராட்டம் அதற்குமுன்பான தந்தை செல்வாவின் அகிம்சைவழிப்போராட்டம் 2009 க்குப்பின்னதான சர்வதேச ஒழுங்குமுறைகளுடனான போராட்டம் இவைகளில் நாம் பெற்றுக்கொண்டதுதான் என்ன? யாரிடம் போனாலும் இந்தியாவைத்தான் கைகாட்டுகிறார்கள் எனவே நாம் இந்தியாவை நம்புகிறோ எமக்கான தீர்வு அவர்கள்மூலமே கிடைக்கும் எனக் கூறிக்கொள்ளும் இந்தியா இதுவரை எமக்குச் செய்த நன்மைகள் எதையாவது பட்டியலிட முடியுமா? இல்லை  சரி போர்க்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா விடையத்திலாவது ஏதாவது நல்லதை இந்தியா செய்திருகிறதா? அவர்களால் முடியாது காரணம் தமிழர்மீதான போர்க்குற்றத்தை முன்னின்று நடாத்தியதே இந்தியாதானே  ஆகவேதான் இனிமேல் இந்தியா ஈழத்தமிழர்விடையத்தில் தலையிடாமல் இருக்கவேண்டும் எனக்கூறும் காலம்வந்துவிட்டதாகக்கூறுகிறேன்.
  • பையனின் அனுபவத்தை  பார்த்தேன் இதுவும் கடந்து   போகும்  என்பதைத்தவிர வேறு எதுவும்  சொல்லமுடியவில்லை நானும்  இதைத்தாண்டித்தான்  வந்தேன்  (ஆனால்  எம்மவர்களிடமில்லை) எல்லாவற்றிற்கும் ஒரு விலை  இருப்பதாக  சொல்வார்கள் இது  இரு  பகுதியும்  தீர்மானிக்கும் விடயம். நான் முடிந்தவரை  பிரெஞ்சு  சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால் இதுவரை  விசா  இல்லாதவர்களை  வேலைக்கு  அமர்த்தியதில்லை வீட்டு  வேலைக்கு வருபவர்கள் விசா  இல்லாதவர்களை  தம்முடன்  அழைத்து  வந்தால் இரட்டிப்பு  சம்பளமும்  சாப்பாடும்  கொடுத்து  தான்  அனுப்புவேன் மன  நிம்மதிக்காக...  
  • அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே .......!  🦜
  • ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு!   கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. UPDATE -ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பம்! நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் தற்போது நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. UPDATE – ஸ்ரீதரன் எம்.பி.யின் சகோதரரின் காணியில் விசேட தேடுதல்! கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியிலேயே படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய குறித்த காணியில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் குறித்த காணிக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வந்தவுடன் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஸ்ரீதரன் எம்.பி.யின் வீட்டை அண்மித்த பகுதியில் படையினர் குவிப்பு! கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வீட்டை அண்மித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியிலேயே இவ்வாறு இன்று (புதன்கிழமை) அதிகாலையிலிருந்து படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த பகுதியில் தேடுதலை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், எந்த இடத்தில் தேடுதல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதிக்கு நோயாளர் காவு வண்டியும் வரவழைக்கப்பட்டுள்ளது. நல்லுார் வளாகத்தில் இருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றில் ஸ்ரீதரன் நா.உ. உரையாற்றியிருந்த நிலையில் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் இன்று இராணும் குவிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள். http://athavannews.com/ஸ்ரீதரனின்-வீடு-அமைந்துள/