யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
ampanai

`கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 4 லட்சம் விதைப்பந்துகள்!' - கரூர் சிறுமியின் அசத்தல் முயற்சி

Recommended Posts

புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும், இயற்கையை வளர்க்கவும் கரூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 8,000 கிலோமீட்டர் வரை பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். தனது இயற்கை குறித்தான பல்வேறு முயற்சிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் கொடுத்த ஒரு லட்சம் மற்றும் மேற்கொண்டு மூன்றரை லட்சம் செலவு செய்து, இந்த அசத்தல் முயற்சியை எடுக்க இருக்கிறார்.

4 லட்சம் விதைப்பந்துகள்

கரூர் மாவட்டம், ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ரவீந்திரன், சங்கீதா தம்பதியினர். இவர்களின் மகள் ரக்ஷனா. கரூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். பூமி வெப்பமயமாதலைத் தடுக்கவும், அதுபற்றிய விழிப்புணர்வை நாடுமுழுக்க மக்களிடம் ஏற்படுத்தவும், இந்தச் சிறுமி இத்தகைய அசத்தல் முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதாவது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 8,000 கிலோமீட்டர் பயணித்து, 4 லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறார். இன்றுமுதல் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
 
அதற்காக, இருபது வகையான விதைகளை விதைப்பந்துகளாகத் தயார் செய்திருக்கிறார்கள். லாரி மூலம் பத்து தன்னார்வலர்களோடு சிறுமி ரக்ஷனா பயணத்தைத் தொடங்குகிறார். பயணம் முழுக்க விதைப்பந்துகளைத் தூவுவதோடு, புவி வெப்பமயமாதல், பெண் கல்வியை ஊக்குவித்தல், பறவை இனத்தைக் காத்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல், குழந்தைத் தொழிலாளர்கள் முறையைத் தடுத்தல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுத்தல் உள்ளிட்ட ஆறு விஷயங்கள் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறார். 

4 லட்சம் விதைப்பந்துகள்.

இந்தச் சிறுமி ஏற்கெனவே, மாநிலம் முழுவதும் பயணித்து 80,000 மரக்கன்றுகளை மக்களிடம் இலவசமாகக் கொடுத்துள்ளார். அதோடு, 1,600 நபர்களை கண்தானம் செய்ய பதிய வைத்திருக்கிறார். 50,000 நபர்களுக்கு பத்தொன்பது வகையான முதலுதவி பயிற்சி எப்படிக் கொடுப்பது என்று பயிற்சி விளக்கம் அளித்துள்ளார். அதோடு, விவசாயத்துக்குக் குறைந்த நீரில் தண்ணீர் பாய்ச்சும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். உலகம் முழுக்க விதைப்பந்து தூவ வேண்டி 24 மணிநேர தொடர் விழிப்புணர்வு தியானம் செய்திருக்கிறார். அதேபோல், புவி வெப்பமயமாதலைத் தடுக்க ஒருலட்சம் பேரிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

10 மொழிகளில் மரம் பற்றிய விழிப்புணர்வு பேச்சு, சிலம்பத்தில் இந்திய அளவில் சாதனை, 120 கிராமங்களில் மரம் நடுதல், குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்ல சேமிப்பு நிதி வழங்குதல் என்று ரக்ஷனா இதுவரை செய்த முயற்சிகள் அளப்பரியவை. இவரின் இந்த இயற்கை சார்ந்த முயற்சிகளைப் பாராட்டி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த வருடம் ஒரு லட்சம் பணப் பரிசு வழங்கினார். அந்த ஒரு லட்சத்தையும் இப்போது தான் மேற்கொண்டிருக்கும், இந்த நாடு முழுவதும் விதைப்பந்து தூவும் விஷயத்துக்காகச் செலவுசெய்து அசரடிக்கிறார். அவர் படிக்கும் பள்ளி மைதானத்தில் நான்கு லட்சம் விதைப்பந்துகளையும் பரப்பிவைத்து, பிரமாண்டம் காட்டி, பிரமாதப்படுத்தி இருந்தார்கள். நாம் ரக்ஷனாவிடம் பேசினோம்.

ரக்ஷனா

``இந்தப் பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம்னு இருக்கக் கூடாது. இந்தப் பிறவிக்கு அர்த்தம் சேர்க்கிறாப்புல ஏதாச்சும் சாதிக்கணும்'னு அம்மாவும் அப்பாவும் சின்ன வயசில் இருந்தே எனக்குள் நல்ல கருத்துகளை விதைச்சுக்கிட்டே இருந்தாங்க. அப்துல் கலாம் அய்யா வேறு, 'மாணவர்களே, கனவு காணுங்கள்'னு சொல்லி வச்சுட்டு போயிருக்கிறார். அதனால், இந்தச் சமூகத்துக்கும் சக மனிதர்களுக்கும், நம்மை படைத்த இயற்கைக்கும் ஏதாவது ஒருவகையில் பயன் உள்ளதாக இருக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கு என்னோட பெற்றோர் உறுதுணையா இருந்தாங்க. அதனால், இயற்கையைக் காக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தேன்.

இப்போ, புவிவெப்பமயதலைத் தடுக்கவும், இயற்கையைக் கட்டமைக்க வலியுறுத்தியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த 8,000 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து, நான்கு லட்சம் விதைப்பந்துகளைத் தூவ இருக்கிறேன். அதைதவிர, வழிநெடுக நான் சந்திக்க இருக்கும் மக்களிடம் ஆறு விஷயங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த இருக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க இயற்கைக்காக இயங்கிகிட்டே இருப்பேன்" என்றார் முத்தாய்ப்பாக!.

https://www.vikatan.com/news/tamilnadu/159732-karur-school-girls-bold-decision-to-fight-against-climate-change.html?fbclid=IwAR2BbWVmIHBZpSHAkkA5amFg4xzIxd3XTprO0nGmYM1swtTFGIgMTQT2zn0

Share this post


Link to post
Share on other sites

`விதைப்பந்துகள் மட்டுமல்ல... 1 கோடி மரக்கன்றுகள் நடப்போறேன்!' - கடலூர் இளைஞரின் அசத்தல் முயற்சி

சமீப காலமாகச் சமூக வலைதளங்களில் விதைப்பந்து குறித்து அதிகளவில் பரப்புரை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு மற்றும் சூழல்மீது ஆர்வம் கொண்டோர், விதைப்பந்து மூலமாக மரம் வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் வசித்து வரும் இயற்கை ஆர்வலர் மணிகண்டன். கடந்த 2 வருடங்களாக இலவசமாக விதைப் பந்துகளை வழங்கி வருகிறார்.

விதைப்பந்து

விதைப்பந்துகளை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது, ஏன் வந்தது உள்ளிட்ட கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த மணிகண்டன், ``முன்பு குருவிகள் அதிகமா இருந்தது. அதுங்க பழம் சாப்பிட்டு அந்த பழத்தோட விதைய தன் எச்சத்தோட சேர்த்து எங்கேயாவது போட்டுட்டுப் போய்டும். அந்த விதை முளைச்சு மரமா ஆகி மீண்டும் பழம் தரும். காகம் ஒரு காட்டையே உண்டாக்குன கதையெல்லாம்கூட நாம் கேட்டிருப்போம். இப்போ குருவிகளோட எண்ணிக்கை குறைஞ்சு வர்றதை நம்ம கண்முன்னே பார்க்கலாம். அதற்கு மனிதர்கள்தான் முதல் காரணம். விவசாய நிலங்களுக்கு பக்கத்துல உயர் மின் கோபுரம், நம்ப வீடுகள்ல பழ வகை மரங்களை விட்டுட்டு அழகுக்காகப் பூச்செடிகள் மட்டும் வளர்ப்பது, குருவிகளின் முக்கிய உணவான சிறுதானிய சாகுபடியின் சரிவு எனப் பல காரணங்களை அடுக்கிகிட்டே போகலாம்.

 

 

தண்ணீர் தட்டுப்பாடு, புவி வெப்பமடைதல்னு பல பிரச்னை, மரங்கள் இல்லாததால்தான். அந்தச் சிட்டுக்குருவிகளோட பணியை நாம் செய்யணும்னு தோனுச்சு. அப்போதான் காற்று, எறும்புகள் மற்றும் பறவைகள் மூலம் விதைகள் சேதம் அடையாம இருக்க களிமண் மற்றும் இயற்கை உரங்களோட பந்துகளா செஞ்சு அதுக்கு நடுவுல விதைகளை வெச்சு நீர் நிலைகளுக்குப் பக்கத்துல வீசலாம் என்கிற எண்ணம் வந்தது. சில குடும்ப நிகழ்வுகளில் மரக்கன்றுகள் கொடுப்பது வழக்கமா இருக்கு. அப்படிக் கொடுக்குற மரங்களை யாரும் சரியாக நட்டு பராமரிப்பதில்லை.

ஆனால், விதைப் பந்துகள் வீணாவதில்லை. பராமரிப்பு இல்லாமலே நல்லா வளர்ந்து நிழல் மற்றும் பழம் கொடுக்கும். புன்னை, புங்கை, வேப்பம், நாவல், கொன்றை, இலுப்பை போன்ற வகை விதைகளைத்தான் விதைபந்துக்குப் பயன்படுத்துறோம். வலியது வெல்லும் என்பதுதான் இயற்கையின் தத்துவம். விதைப்பந்துகள் அதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. தனக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்தவுடன் தானாக முளைத்து விருட்சமாகும்" என்றார். 

விதைப்பந்து

இதுமட்டுமன்றி பள்ளி மாணவர்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் சேர்ந்து விதைப்பந்துகள் செய்யப் பயிற்சி அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு தன் குறிக்கோளான ஒரு கோடி மரக் கன்றுகளை கடலூர் மாவட்டம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலுவலகங்களில் நடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக இதுவரை 2 லட்சம் மரக் கன்றுகளை வைத்துள்ளார். தனது அடையாளம் அறக்கட்டளை மூலமாக நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து மணிகண்டன் இதைச் செய்து வருகிறார். 

https://www.vikatan.com/news/tamilnadu/159905-cuddalore-man-preparing-seed-balls.html?fbclid=IwAR2s1u5WRRGpZcgqt-CqBJllQ8xNsWi-hZQ83lTPvTels0N2XhgpK9AacUU

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • அதுவல்ல காரணம்; அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்பதே
  • இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள் இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்து ஆலயங்கள் மற்றும் இந்து வரலாற்றை கொண்ட சில பகுதிகளில் பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்ட சில அசம்பாவித சம்பவங்களை அடுத்து தமிழர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். முல்லைத்தீவு - நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள நந்தி கொடிகள் சேதமாக்கப்பட்டது, திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று கிணறுகளை பௌத்த மயமாக்கல், கண்ணியாவின் விகாரையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் மற்றும் நுவரெலியா - கோட்லோஜ் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பௌத்த கொடியொன்றை பிக்குவொருவர் வலுக்கட்டாயமாக ஏற்றியது உள்ளிட்ட பல சம்பவங்கள் கடந்த சில தினங்களுக்குள் இடம்பெற்றுள்ளன. https://www.bbc.com/tamil/sri-lanka-49042532  
  • ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஏன் கலந்து கொள்ளவில்லை? - சுமந்திரன் விளக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுக் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்பில் பங்கேற்குமாறு அமைச்சர் மனோ கணேசன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை. கூட்டமைப்பினர் பங்கேற்காமை தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். “அமைச்சர் மனோ கணேசன் நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதியுடனான சந்திப்பு பற்றிக் கூறினார். ஜனாதிபதியுடன் யார் சந்திப்பை ஒழுங்குபடுத்தினாலும், சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படும். இந்தச் சந்திப்புக்கான அழைப்பு ஜனாதிபதி செயலகத்தாலோ, ஜனாதிபதியிடமிருந்தோ கிடைக்கவில்லை. கிண்ணியா விவகாரம் தொடர்பில் பேசப்பட இருந்ததால், அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கலந்துகொள்ள வேண்டும். அவரைத் தொடர்புகொண்டு, கூட்டத்துக்கான அழைப்பு கிடைத்ததா என்று கேட்டேன். எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் தனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மேலும், ஜனாதிபதியை இந்த விவகாரங்கள் தொடர்பில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு நாங்கள் கோரியிருந்தோம். எனவே, அவரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்துவோம். http://thinakkural.lk/article/31976
  • நாட்டில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும், அதனை மேம்படுத்துவத்றகும் அரசாங்கம் உறுதிக்கொண்டுள்ளதாக  அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்திருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வோஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அமைச்சர்களுக்கான இரண்டாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே தூதுவர் ரொட்னி பெரேரா இவ்வாறு கூறியிருக்கிறார்.  அத்தோடு இலங்கைக்கு வழங்கும் ஆதரவு மற்றும் இலங்கை மக்களுடனான ஒருமைப்பாடு என்பவற்றுக்காகத் தனது நன்றியையும் அங்கு வெளிப்படுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/60780
  • ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும் என தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. கன்னியா பிள்ளையார் ஆலயம் தொடர்பாக தமிழர் மரபுரிமைப் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்றையதினம்(19) குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .   கடந்த 16.07.2019 அன்று தென்கயிலை ஆதினத்தால் கன்னியா பிள்ளையார் கோயிலை மையப்படுத்தி அங்கு சென்று சமய வழிபாடுகள் செய்யும் நோக்குடனும் கன்னியா தமிழரின் பூர்வீகம் என்பதை அடையாளப்படுத்தும் நடவடிக்கையாகவும் வடக்கு கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. அந்த கவனயீர்ப்புக்குச் சென்ற பல பேர் குறிப்பாக  வெளியிடங்களிலிருந்து சென்றவர்கள் இராணுவ, பொலிஸார் சோதனைச் சாவடிகளைக் கடந்து மிரட்டல்களுக்கும் இராணுவ கண்காணிப்புகளுக்கும் மத்தியில் சென்றடைந்ததையும் களத்தில் நடந்த சம்பவங்களையும் பதிவு செய்வது காலத்தின் கட்டாயமாகும். பல நூற்றாண்டுகளாக சைவ சமயத்தோரும் அதன் இதிகாச வரலாற்றோடும் தொடர்புடைய கன்னியா வெந்நீரூற்றையும் அதை அண்டி இருந்த கன்னியா பிள்ளையார் கோவிலையும் தொல்லியல் திணைக்களம் அபகரித்ததை யாவரும் அறிந்தது.     கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் பௌத்த விகாரையின் வரலாறு ஒரு தசாப்ததிற்குட்பட்டது. தமிழரின் பூர்வீகம் அதன் வரலாறு வரலாற்றில் திரிவுபடுத்தப்படுகின்றது. சிங்கள பௌத்த மையம் கூர்ந்து இதனூடு சிங்கள பௌத்த தேசியம் தன்னை ஒரு பூர்வீக தூய்மையான கலப்பற்ற இனமாக சித்தரிக்க முற்படுகின்றது. இவ் அரசியல் நிகழ்ச்சி ஏனைய இனங்களின் பூர்வீகத்தையும் அதன் வரலாற்றையும் கேள்விக்குட்படுத்தி மாற்றியமைக்க முற்படுகின்றது. ஒரு இனத்தின் வரலாற்றுச் சான்றுகளையும் அதன் பூர்வீகத்தையும் அழித்தல் என்பது அந்த இனத்தின் இருப்பை அழித்தலாகும்.  கன்னியாவின் பூர்வீகம் தமிழின இருப்பின் பூர்வீகம். பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்யச் சென்ற சமயக் குருக்களையும் பக்தர்களையும் பொலிஸார் தடை செய்தது என்பது ஒரு சமயத்திற்குரிய வழிபடுகின்ற உரிமையை மறுத்தலாகும். நீதிமன்ற தடையுத்தரவு கண்பிக்கப்பட்டு அம்முயற்சி தடை செய்யப்பட்டபோது மக்கள் தங்கள் எதிர்ப்பை மிக அமைதியான முறையில் காட்ட முற்பட்ட போது இராணுவத்தினர் விசேட  அதிரடிப்படையினர், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை காட்டுவதற்கான வெளி முற்றாகவே குறைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணி அவர்களின் இருப்புசார் கோரிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்பதே அதன் உள் நோக்கமாக இருந்தது. ஒரு சமய மதத் தலைவரை அங்கிருந்தவர்கள் அநாகரிகமாக அவதரித்தது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இதே அவமதிப்பு ஒரு பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால்  அது அரசியல் மயமாக்கப்பட்டு வன்முறைச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கும் ஆனால் தமிழர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழர்கள் அகிம்சைவாதிகள் வன்முறையை விரும்புபவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றார்கள்.  அதிகார ஆயுத அரசியல் பலத்தோடு பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதை ஏனையவர்களின் உரிமையை பறிப்பதாக கூட இருக்கலாம் செய்யலாம் என்ற தோற்றப்பாடு வரலாற்றில் நடந்தேறியுள்ளது மீண்டும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.   மத வழிபாடு செய்வது நாட்டின் இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்பது அப்பட்டமான பொய். அவ்வாறெனில் வடக்கு கிழக்கில் பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றில் காளான்களாக முளைத்த பௌத்த விகாரைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவ்வாறான நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு அது சிங்கள பௌத்தர்களுக்குரியது. ஏன்பதை சுட்டி நிற்கின்றது. அவ்வாறெனில் இலங்கையின் பல்லினத்தன்மைக்கான வெளி மறைக்கப்பட்டு விட்டதா ?? பெரும்பான்மை சனநாயக வெளியில் ஒற்றையாட்சித் தன்மையில் ஏனைய இனக் குழுமங்கள் நாளடைவில் இன அழிப்பை சந்திக்கும் என்பதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. அவ்வாறான பாதையை இலங்கை அரசு தெரிந்தெடுத்திருப்பது என்பது இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிருபணமாகின்றது. மேற்குலக நாடுகளுக்கும் ஐ.நாவுக்கும் தன்னை ஒரு சனநாயக நாடு நல்லிணக்க சமாதான விரும்பி என காட்டிக்கொண்டு அதன் இன்னொரு கோர முகத்தை பெரும்பான்மை தவிர்ந்த இனத்தவர் மேல் காட்டுவது என்பது உண்மையில் இலங்கை அரசின் அரசியல் இருப்பில் ஐயம் கொள்ளச் செய்கின்றது. அண்மைய காலங்களில் பௌத்த பிக்குகளின் இலங்கை சனநாயகத்தை சிதைக்கின்ற முயற்சிகளும் அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தண்டனை விலக்கீட்டு நிலையில் இறைமை ஆட்சி நோக்கிப் பயணிக்கின்றதா என்று சந்தேகக் கொள்ளச் செய்கின்றது. மேற்கூறப்பட்ட அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்பில் தங்களை மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் மௌனம் காப்பது இந்நிகழ்சியில் இவர்களும் பங்காளிகள் என சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. இதுவரைக்காலம் இது பற்றி தமிழ் அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். தமிழின இனப்படுகொலையின் தமிழ் அரசியல் கட்சிகளதும் அரசியல்வாதிகளதும் வகிபங்கை வரலாறு பதிவு செய்யும். https://www.virakesari.lk/article/60753