Jump to content

நூறு கதை நூறு படம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

நல்ல பதிவு கிருபன்.ஒன்றிரண்டைத்தவிர மிச்சமெல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு தொகுப்பாக வரும்போது அட நாம இவ்வளவு கதைகளையும்  நம்ம மண்டைக்குள்ளேயும் போட்டு கரைச்சிருக்கிறோமே என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் இருந்த கதைகள் அறிதல் கிரகிப்பு என்பதில் இருந்த அதீத ஆர்வம் இப்போது இல்லை. எதையாவது வாசிக்கப் போனாலே தூக்கம் வந்து விடுகிறது.😴

சேம் கியர்… நான் நினைக்குரன் வயசாகுறதால வாற சோர்வோ தெரியலை..

 

அட இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..

Link to comment
Share on other sites

  • Replies 127
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..

நானும் நினைவு வந்தால்தான் வந்து ஒட்டுவது ஓணாண்டியார். மிச்சத்தை 2022 இல் ஒட்டிமுடிக்கவேண்டும் என்று கொரோனா அம்மனுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறன்😬

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சேம் கியர்… நான் நினைக்குரன் வயசாகுறதால வாற சோர்வோ தெரியலை..

 

அட இவ்ளா நாளும் இந்த திரி என் கண்ணுல படேல்ல.. நல்ல ஒரு திரி..

யோவ் ஓணாண்டி இப்பல்லாம் வயசுபோனாப்பிறகுதான் வாழ்க்கையே... இப்பவே சோர்ந்தால் மிச்சம் இருக்கிற 50 வருசத்தை எப்படிப்பா தாண்ட முடியும்?

லைப்ல த்ரிலிங் இல்லாமப்போச்சு அதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 56 – பிச்சைக்காரன்

வெறுமனே திறமையை மட்டும் கொண்டு உங்களால் வென்றுவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? கனவான்களே.. வெறுமனே திறமையை மாத்திரம் வைத்துக் கொண்டு வெல்வதற்குத் தேவையான திறமை உங்களிடம் கிடையாது.

(ஹெர்ப் ப்ரூக்ஸ் எனும் கோச் கதாபாத்திரமாக கர்ட் ரஸ்ஸெல் miracle 2004 திரைப்படத்தில்) எழுதியவர் Eric Guggenheim

திரைப்படம் எனும் கலை பிற கலைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகிறது. அவற்றில் முதன்மையானது திரைப்படக்கலை மற்ற பல கலைகளின் சங்கமமாக பலவற்றின் கலந்தோங்குகிற பதாகையாக விளங்குவது. இன்னொரு வேறுபாடு என்னவென்றால் திரைப்படமும் காலமும் பிறகலைகளைப் போலன்றிப் பலவிதங்களில் பின்னிப் பிணைந்து ஒழுகுவது. தொழில்நுட்பங்கள் தொடங்கி இசை, கலை, இயக்கம், கதை தொடங்கும் விதம் சண்டைக்காட்சிகள் பாடல்கள் என்றாகிப் பயன்படுத்தப்படுகிற உத்திகள் வரைக்கும் காலத்தோடு இயைந்து பல விடுபடுதல்களும் கைக்கொளல்களுமாகத் தன்னைப் புத்துயிர்த்தபடி விரைந்தோடுகிற மின்னல் ரயில்தான் திரைப்படமென்பது. நேற்றிருந்த ஒன்று இன்று அறவே இல்லை என்பது எதற்குப் பொருத்தமோ திரைப்படத்தில் சாலப் பொருந்தும். இத்தனைக்கும் மேலாக திரைப்படங்களைப் பொறுத்தவரை கைவிடப்பட்ட ஒன்று பெரும் கால இடைவெளிக்கப்பால் மீண்டும் செல்வாக்குப் பெறுவதென்பது காலம் முன்வைத்தால் ஒப்புக்கொள்ளப்படுமே ஒழிய நேரடியாக நிகழ்வதில்லை.

1960ஆம் ஆண்டுகளில் எடுக்கப்படக்கூடிய திரைப்படம் ஒன்றுக்கான திரைக்கதையை எடுத்து பத்து ஆண்டுகள் கழித்துப் படமாக்கினாலேகூட ரசிகர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படக்கூடிய இடரேற்பு உண்டு. ஆனால் அதையே 2016 ஆமாண்டு திரைப்படமாக்கி அந்த வருடத்தின் மாபெரிய வெற்றிப் படமாக ஆக்குவதென்பது மந்திரத்தால் மாத்திரமே சாத்தியமாகக்கூடிய மாங்கனிக்கு ஒப்பான மாயம். ஆனால் நிசத்தில் அதுதான் நிகழ்ந்தது. அப்படியான வருகையும் கொண்டாடப்பட்ட வெற்றியுமாக இந்தியத் திரைப்பட வரலாற்றின் மாபெரும் செல்வாக்குப் பெற்ற செண்டிமெண்டல் சினிமாவாக உருவெடுத்தது சசி இயக்கிய பிச்சைக்காரன்.

pichaikaran-movie-latest-poster-300x169.

 

அன்னை என்பது உலகளாவிய மனித மையம். மாபெரும் செல்வந்தன் ஒருவன் தன் அன்னை இனிப் பிழைக்கவே மாட்டாள் என்றான பிறகு தெய்வத்திடம் அன்னையைக் காப்பாற்றித் தா என்று வேண்டிக் கொண்டு தன் செல்வந்தத்தை பாம்பு சட்டையை உரிக்கிறாற்போல் உரித்தெடுத்து எறிகிறான். 48 நாட்கள் யாசகம் எடுத்து தன் உணவுக்குரிய பணத்தைத் தவிர மீதமனைத்தையும் கோயில் உண்டியல்களில் சேர்ப்பித்தபடி யாதொரு வசதியையும் கொள்ளாமல் வறியவர்களோடு தங்கி வாழ்ந்து கொண்ட விரதத்தை முடிக்க வேண்டும் என்பதில் மனித சதிகள் உறவுக்காரர்களின் சூழ்ச்சிகள் பகை முரண் காவல் துறையின் அதிகாரம் எனப் பல குறுக்கீடுகள் வருகின்றன. அவனை உற்று நோக்கி உணர்வுரீதியாக உடன்வரும் மனம் கவர் தோழியிடத்திலும் தன் உண்மையை ஒரு சொல்லாகக்கூட சொல்வதன் மூலம் விரதகாலத்தில் தன் பழைய செல்வந்தத்தை மீட்டெடுக்க விரும்பாத அருள் புதிய பிறப்பெடுத்தாற்போல் பிடிவாதத்தோடு வேண்டுதலை நிறைவேற்றுகிறான்.

வேண்டுதலை முடிக்கும் நேரம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து அருளை மிரட்டுவார். அப்போது அவர் கையைப் பற்றிக் கெஞ்சும் அருளிடம் பிச்சைக்காரன் நீ என் கையைப் பிடிக்கிறியா என்று அடிப்பார். பொறுமையாக ஒவ்வொரு நாணயமாக எதுவும் சிதறிவிடாமல் உண்டியலில் போட்டு விரதத்தை முடித்த அடுத்த கணம் அருள் இருக்கும் இடத்துக்கு மாபெரிய செல்வச்செழிப்பு மிளிரும் கேரவன் எனப்படுகிற உற்சாகப் பேருந்து வந்து சேரும். அது ஒரு நடமாடும் ஸ்டார் ஓட்டலுக்கு நிகரான கட்டமைப்பை கொண்டது. அதனுள் நுழைந்து குளித்துத் தன் பகட்டாடைகள் அணிந்து மீண்டும் மில்லியனர் அருள் செல்வனாகத் திரும்பும்போது அதே இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்டு அருளின் கையைப் பற்றும்போது நான் எத்தனையோ நாள் பிச்சைக்காரனா இருந்திருக்கேன். அதெல்லாம் எனக்கு அருவெறுப்பா இல்லை. இந்த நிமிஷம் நான் ஒரு பணக்காரனா இருக்குறது எனக்கு அருவெறுப்பா இருக்குது என்பான்.

படம் முடிவில் அம்மா பிழைத்து வருகிறாள். அவளுக்குத் தன் மகன் பட்ட கஷ்டம் தெரியவே தெரியாது. அவளோ போகிற போக்கில் அவனுக்கொரு அறிவுரை சொல்கிறாள் ஏனப்பா உங்கிட்டே யாசகம் கேக்குறவங்களை காக்க வைக்கிறே..? இருந்தா குடு இல்லைன்னா உடனே மறுத்திட்டு அனுப்பிடு. காக்க வைக்கிறது தப்பு அருளு… ஒரு நா அவங்க படுற கஷ்டத்தை நம்மால படமுடியுமா சொல்லு என்கிறாள் அதை ஒப்புக்கொள்கிறவனாய் வெறுமனே தலையை மட்டும் அசைத்துக் கொண்டு உடன் செல்கிறான் அருள். இறைவனுக்கும் அவனுக்குமான டீல் அவனது ப்ரார்த்தனை. அதுவும் நிறைவேறிப் பல நாட்கள் ஆன பிறகும் அதனை யாரிடமும் ஒரு சொல்லாய்க்கூட வெளித்திறக்காத அளவுக்கு அருள் என்னும் மகானைவிடச் சிறந்த நன்மகன் வேடத்தில் மிளிர்ந்தார் விஜய் ஆண்டனி.

தொழில் முறை இசை அமைப்பாளராகத் திரை உலகத்தினுள் நுழைந்த விஜய், மாயூரம் வேத நாயகம் பரம்பரையில் ஒரு வாரிசு. அண்டர் ப்ளே நடிப்பின் உன்னதமான நடிப்பாற்றலைத் தன் படங்களில் தொடர்ந்து தந்து வரும் நடிகராகவும் கவனம் பெற்றவர். ஏக்நாத் ராஜ் எழுதி விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடிய நூறு சாமிகள் இருந்தாலும் பாடலானது பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்வுகளுக்குள் அவர்தம் உணர்விழைகளில் சிலவற்றை மனதாழத்தில் எப்போதும் தாலாட்டுகிற பெரும்ப்ரியமாகவே மாறியது.

சசி மனித உணர்வுகளைக் கொண்டு மெல்லிய நூலாம்படைகளைப் பின்ன விழையும் கலைச் சிலந்தி. ஆனால் எத்தனையோ கற்சித்திரங்கள் சின்னாபின்னமான பிற்பாடும் சசி போன்றவர்கள் ஏற்படுத்திவிடுகிற ஞாபகவலைகள் அப்படியே அந்த இடத்திலேயே உறைந்து நிரந்தரித்து விடுவது கலையின் பேரியல்பு.

பிச்சைக்காரன் கடந்துவிட்ட ரயிலைப் பின்னோக்கி அழைத்து வந்து ஏறினாற் போன்ற அதிசயம். நம்ப முடியாத அற்புதம்.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-56-பிச்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகின்றது.....உங்களுடைய பகிர்தல்களுக்கு நன்றி கிருபன்........!  👍

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 57 – யாவரும் நலம்

 

(முள்தலை) : தயவு செய்து கண்ணீர் வேண்டாம். அது நல்லதோர் துன்பத்தை வீணாக்கிவிடும் Hellraiser (1987))

சின்னச்சின்ன நிகழ்வுகள் அதுவும் எப்படி என்றால் யாருக்கும் பெரிய தீமையோ அல்லது வலியோ நிகழ்ந்துவிடாத கவன ஈர்த்தல்களாகவே புதிரான நிகழ்வுகள் ஒன்றொன்றாய்த் தொடர்கின்றன. பூஜை ரூமில் சாமி படங்கள் மாட்டுவதற்கு ஆணி அடிக்க முடியாமல் போகிறது. பால் தொடர்ந்து திரிந்து போகிறது. குறிப்பிட்ட தளத்தில் தானியங்கி லிஃப்ட் நிற்பதே இல்லை. இப்படித் தொடரும் புதிர்களை அவிழ்த்துப் பார்க்க விழைகிறான் மனோகர். அவனும் அவன் அண்ணனும் ஆசையாசையாய் வாங்கி குடியேறிய 13B அபார்ட்மெண்ட் ப்ளாட்டில்தான் அத்தனை நிகழ்வுகளும் நடக்கின்றன.

05-1409913341-kadalora-kavithaigal-rekha

புதிய வீட்டில் டி.வி. கனெக்சன் கொடுத்த தினம் சரியாக ஒரு சேனலில் ‘யாவரும் நலம்’ என்றொரு நாடகம் தொடங்குகிறது. அது ஒரு மெகா சீரியல். அதன் கதை மாந்தர்கள் மனோகர் குடும்பத்தைக் கதையாக்கினாற் போலவே இருப்பதைத் தற்செயலாக கவனிக்கிறான் மனோகர். தொடரும் புதிர்த்தனங்களில் மாபெரும் ஒன்றாக ஒரு கட்டத்தில் நாடகத்தில் நிகழ்வது எல்லாம் அச்சு பிசகாமல் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த தினங்களில் நடப்பதைக் கண்ணுற்று அதிர்கிறான். மெல்ல மெல்ல நாடகத்தில் யாரெல்லாம் நிசத்தில் யார் அவர்களுக்கு என்ன நடக்கிறது அல்லது நிசத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற உச்சபட்ச கவனித்தலினூடே தன் நண்பன் இன்ஸ்பெக்டர் சிவா இருவரும் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ மேதையும் அவர்களது குடும்ப நண்பருமான டாக்டர் பாலு ப்ரியாவை தக்க சமயத்தில் காப்பாற்றுகிறார்.

நாடகத்துக்கும் அவர்கள் நிச வாழ்க்கைக்குமான தொடர்பு அதிகரித்து நெருக்கமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அத்தனை புதிர்களும் திறந்து கொள்ளத் தொடங்குகிறது அப்படி ஒரு நாடகமே உலகத்தில் ஒளிபரப்பாகவில்லை என்பதும் யாவரும் நலம் என்ற தலைப்பில் ஒரு கேம் ஷோ மட்டுமே ஒளிபரப்பாவதையும் அறியும் மனோகர் பயத்தில் உறைகிறான். தொடர்ந்து அகழும் போது நிஜம் வெளிவரத் தொடங்குகிறது. அந்த அபார்ட்மெண்ட் அமைந்திருக்கும் நிலமனையில் 1977 ஆமாண்டு தனி வீடு ஒன்று இருந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் மனோகர் குடும்பத்துக்கு மட்டும் நாடக ரூபத்தில் வந்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்க விழைகிறார்கள் என்பது புரியவருகிறது. டி.வி. செய்தி வாசிப்பாளினி ஒருத்தி மீது தீராக் காதல் கொண்ட செந்தில் என்னும் மனம் பிறழ்ந்தவன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கொன்று தீர்க்கிறான். அவனுக்கு மன நோய் என்பது நிரூபணமாகி மனநோயர் காப்பகத்தில் சிறையிடப்பட்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

நடந்த விபரங்களை அந்தக் கால செய்தித் தாட்களின் மூலம் அறியும் மனோகருக்கு நிஜமாகவே கொன்றவன் செந்தில் அல்ல என்பது தெரியவருகிறது. தன் காதல் நிறைவேறாமற்போனதால் செந்தில் தற்கொலை செய்து கொள்ள அதன் அதிர்ச்சியில் அவனது அண்ணனான டாக்டர் பாலுதான் அத்தனை பேரையும் கொன்றவர் என்பது தெரிகிறது. மனோகர் டாக்டர் பாலுவைக் கொல்கிறான். அத்தனை ஆன்மாக்களும் நிம்மதி அடைகின்றன. மனோகர் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். படத்தின் இறுதியில் மனோகருக்கு லிஃப்டில் பயணிக்கும்போது ஒரு ஃபோன் அழைப்பு வருகிறது. அதில் மறுமுனையில் டாக்டர் பாலு பேசுகிறார். 13பி குடும்பம் டீவீயைக் கைப்பற்றினாற்போல் பாலு செல்ஃபோனைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவிக்கிறார். லிஃப்ட் மிக வேகமாகப் பயணிக்கிறதோடு படம் இருண்டு நிறைகிறது.

பாஸ்கர்ராவ் கதாபாத்திரத்தில் என்.டி.ஆரின் சரிதசினிமாக்களான கதாநாயகடு மற்றும் மகாநாயகடு இரண்டிலும் தோன்றிய மராத்தி நடிகரான சச்சின் கெடேகர் தமிழில் டாக்டர் பாலுவாகத் தன் கணக்கைத் தொடங்கினார். யூகிக்க முடியாத சாந்தமும் க்ரூரமும் கலந்து நடிப்பது மிகப்பெரிய சவால். அதில் நன்கு வென்றார் சச்சின்.

டெக்னிகல் குழுதான் இப்படத்தின் பெரிய பலம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஷங்கர்-எஸான்-லாய் மூவரின் குளிரச்செய்யும் இசை, ஸ்ரீகர்ப்ரசாத்தின் தொகுப்பு என எல்லாமும் நன்றாகப் பலிதமானது. விக்ரம்.கே.குமாரின் இயக்கமும் தெளிந்த நீர் போன்ற திரைக்கதை ஓட்டமும் முன்னர் அறியாத கதை சொல்லல் முறையும் நறுக்குத் தெறித்தார் போன்ற வசனங்களும் மக்களில் அனேகர் நம்ப விரும்புகிற பேய் மறுஜென்மம் கொன்றவனைப் பழிவாங்குவது ஆவியாக அலைவது நியாயம் கேட்பது போன்ற பழைய வஸ்துக்களை எல்லாம் எடுத்து அறிவியலின் சமீப நீர்மம் கொண்டு அலசி அவற்றைப் புதிதாக்கி வழங்கியதன் மூலமாக மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்.

இந்தி உள்பட அனேக இந்திய மொழிகளிலும் பின்னர் ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்ட பெருமைக்கு உரியதானது யாவரும் நலம். மாபெரும் ஆரவாரங்கள் பெருங்கூச்சல் திகில் வழியும் ரத்தம் இவை ஏதுமின்றி அறிவுக்கு அருகே நின்றவாறே அழகான ஒரு திகில் படத்தைத் தர முடியும் என்று முதன்முதலில் நிரூபித்துக் காட்டினார். அந்தவகையில் தமிழின் சிறந்த படங்களின் வரிசையில் யாவரும் நலம் எனும் படம் நல்கும் அனுபவத்தைச் சேர்க்கலாம்.

யாவரும் நலம் திகிலாட்டம்.
 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-57-யாவர/

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறுகதை நூறு சினிமா: 58 – காதல்

சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை.

-க்ரிஸ்பின் க்ளோவர்

சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம்.

இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.

MV5BODEwZjVmMjUtMGI0ZS00NmYyLTk3YTktYTRl

 

சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது.

சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும்.

சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா.

ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது.

பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது.

தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள்.

சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.

 

https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-58-காதல/

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 59 – தர்மதுரை

 

பலவீனர்களை பலமாக்குவதற்கும் பிரிந்தவர்களை ஒன்றுசேர்ப்பதற்கும் கைவிடப்பட்டவர்களை எழச்செய்வதற்கும் 
அறியாதவர்களை ஆதர்சிப்பதற்கும் திரைப்படத்திற்குச் சக்தி உண்டு.

-அபிஜித் நஸ்கார்  (The Film Testament)

தர்மதுரை என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து பெரிதும் அறியப்பட்ட வெற்றிப் படம் ஒன்று உண்டு. அதனை இயக்கியவர் ராஜசேகர். தான் படிக்காதவனாகத் தன் தம்பிகளின் நல்வாழ்வுக்காகத் தன்னலம் பேணாத அண்ணனாக அந்த தர்மதுரையின் சரித்திரம் அமைந்திருந்தது. அதே பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வேறொரு கதையை படைக்க விழைந்த சீனுராமசாமியின் இந்த நூற்றாண்டின் புதிய தர்மதுரையாக நடித்தவர் விஜய்சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த இயக்குனரின் அடுத்த திரைவார்ப்பாக தர்மதுரையில் நல்லதொரு இயல்பான பரிமாணத்தை வழங்கினார் சேது. சீனுராமசாமியின் திரைமாந்தர்கள் எப்போதுமே இயல்பின் அளவீடுகளுக்குள் கச்சிதமாய்ப் பொருந்துகிறவர்கள் அது தர்மதுரையிலும் தொடர்ந்தது.

கதைப்படி தர்மதுரை குடிகாரன். அவனோடு பிறந்தவர்களும் அக்கா கணவரும் ஏலச்சீட்டு தொழிலை நடத்துகின்றனர் தர்மதுரையைக் கண்ணிமைபோல் காப்பது அவனது தாய் பாண்டியம்மாள். தொல்லை பொறுக்க முடியாமல் குடிகாரனை தீர்த்துக் கட்டிடலாமா என உடன்பிறந்தவர்கள் பேசுவது கேட்டு கலங்கிப் போகும் பாண்டியம்மா எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுமாறு தர்மதுரையை எச்சரிக்கிறார். தான் எதை எடுத்துககொண்டு செல்கிறோம் என தெரியாமல் சீட்டு பணம் மொத்தத்தையும் தன்னோடு எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான் தர்மதுரை.

மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்று தேறிய பொது மருத்துவன் தர்மதுரை என்பது தெரியவருகிறது. படிக்கும்போது உடன் படித்த ஸ்டெல்லா தர்மதுரையை மனப்பூர்வமாகக் காதலித்தவள். அவளைத் தேடிச் செல்கிறான். அவள் இறந்துவிட்டது தெரியவருகிறது. திருமணமாகி தெலுங்குதேசத்தில் வாழச் சென்ற சுபாஷினியைத் தேடிச் செல்கிறான். அவள் பொருந்தாத வாழ்க்கையை முறித்துக்கொண்டு விவாகரத்துக்காகக் காத்திருக்கிறவள் என்பதை அறிகிறான். படிக்கும்போது ஸ்டெல்லா போலவே அவளும் தர்மனை மனதுக்குள் காதலித்தவள்தான். அவளிடம் தனக்கு நிகழ்ந்ததை விவரிக்கிறான். டாக்டர் காமராஜ் எனும் அவர்களது பேராசிரியரின் அறவுறையை மதித்து படித்து முடித்தபிறகு கிராம மக்களுக்கு சேவை செய்ய விழையும் தர்மதுரை விவசாயத் தொழிலாளியான அன்புச்செல்வியை கண்டதும் காதலாகிறான். திருமணம் பேசி நிச்சயமாகிறது. தர்மனுக்குத் தெரியாமல் அவனது குடும்பத்தார் வரதட்சணை கேட்க அதனை ஒட்டி நிகழும் குழப்பங்களின் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாள் அன்புச்செல்வி.

625.500.560.350.160.300.053.800.900.160.

மனமுடைந்து குடிக்கு அடிமையாகும் தர்மதுரை தன் காதலும் வாழ்க்கையும் நாசமானதற்குக் காரணமான சகோதரர்களை கொல்லத் துரத்துபவன் அம்மாவின் முகத்திற்காக அவர்களை விட்டுவிடுகிறான். சுபாஷினிக்கும் அவள் கணவனுக்கும் சட்டப்படி விவாகரத்தாகிறது சுபாஷினியும் தர்மதுரையும் வாழ்வில் இணைகிறார்கள். காலம் கழிகிறது வந்த ஊரில் சிறந்த மருத்துவராகப் பெயர் பெறும் தர்மதுரை யதார்த்தமாகத் தன் பேராசிரியரை சந்திக்க வாய்ப்புக் கிடைக்கிறது. கண்பார்வையை இழந்த டாக்டர் காமராஜ் தர்மதுரையின் சேவை மனப்பான்மையை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார். சீட்டுப்பணத்தை சொன்ன தேதியில் தரமுடியாமல் வீட்டையும் நிலத்தையும் விற்றுப் பணத்தை திருப்பும் தர்மதுரையின் குடும்பத்தார் ஊரெல்லையில் குடிசையில் வசிக்கிறார்கள். தர்மனின் செய்கையால் அவன் மீது கொலைவெறி கொண்டு திரியும் சகோதரர்களில் ஒருவன் அவனைக் கண்டதும் ஸ்பானரால் தலையில் அடிக்கிறான். மருத்துவமனையில் தர்மன் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு கண்விழிக்கிறான். தானும் தன் சூலில் குழந்தையுமாக தர்மதுரைக்காக காத்திருப்பதைச் சொல்லி சீக்கிரமாகத் திரும்பி வருமாறு ஃபோனில் சொல்கிறாள் நடந்ததெதையும் அறியாத சுபாஷினி. மருத்துவன் ஒருவனின் வாழ்வின் விள்ளல் இங்கே நிறைவடைகிறது.

சீனுராமசாமியின் திரை மாந்தர்கள் யதார்த்தத்திலிருந்து கிளைத்தவர்கள். இயல்பின் எந்த ஒரு ஆட்சேபக் கோட்டையும் தாண்டாமலேயே விளையாட்டின் யாதொரு விதியையும் மீறாமல் ஆட்டத்தை ஆடுபவர்கள். எளிதில் யூகித்து விடக்கூடிய வாழ்வின் இயல்பான சம்பவங்களை அடுக்கி கதையாக்குவதன் மூலமாக புனைவின் மெய்நிகர் புள்ளிக்கு மிக அருகே தன் கதையை தொடங்குவதும் தொடர்வதும் சீனுராமசாமியின் திரைமொழி. அவரது நாயகன்கள் தாய்மையில் கட்டுண்டவர்கள். பெற்றவளின் சொல்லேந்திகளாகக் கதையின் வீதிகளெங்கும் தேர் வலம் வருபவர்கள் வாழ்வின் பகுதிகளை மெய்மையில் தோய்த்தெடுத்து அன்பை பாசத்தை மனிதநேயத்தை ஏழ்மையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளப் போராடும் மனிதக் கூட்டத்தின் எத்தனத்தை தோல்வியுறுதலை இயலாமையை பொங்கு வெள்ளமென புதிய காதலை நம்பிக்கை துரோகத்தை வெள்ளந்தி மனிதர்களின் பார்வைகளின் ஊடாக காணச் செய்வது சீனுராமசாமியின் திரை முறை.

சினிமாவிலிருந்து சினிமா தனத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு தங்கள் படைப்புகளின் வழியாக முனைந்து பார்க்கும் படைப்பாளிகளில் அவரது பெயருக்கு முக்கிய இடமுண்டு. காசி விஸ்வநாதனின் தொகுப்பும் சுகுமாரின் ஒளிப்பொறுப்பும் கச்சிதம். யுவன் சங்கர் ராஜாவின் இனிய இசையும் வைரமுத்துவின் வார்த்தைகளும் காண்பவர் தங்கள் நெஞ்சடியில் உன்னதமான ஓரிடம் தந்து நினைவுள் போற்றும் இன்னுமொரு நற்படமாக தர்மதுரையை மாற்றின. வைரமுத்து இந்தப் படத்திற்காகத் தன் ஏழாவது தேசியவிருதைப் பெற்றார்.

புனைவும் நிஜமும் சினிமா எனும் இரயிலானது நில்லாமல் பயணிக்கிற இருப்புப் பாதைகளாகின்றன. தர்மதுரை எப்போதாவது காணவாய்க்கிற மலைப்ரதேச மந்திர மலர். வாழ்க சினிமா!

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-59-தர்ம/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2022 at 17:17, கிருபன் said:

நூறு கதை நூறு சினிமா: 57 – யாவரும் நலம்

 

(முள்தலை) : தயவு செய்து கண்ணீர் வேண்டாம். அது நல்லதோர் துன்பத்தை வீணாக்கிவிடும் Hellraiser (1987))

சின்னச்சின்ன நிகழ்வுகள் அதுவும் எப்படி என்றால் யாருக்கும் பெரிய தீமையோ அல்லது வலியோ நிகழ்ந்துவிடாத கவன ஈர்த்தல்களாகவே புதிரான நிகழ்வுகள் ஒன்றொன்றாய்த் தொடர்கின்றன. பூஜை ரூமில் சாமி படங்கள் மாட்டுவதற்கு ஆணி அடிக்க முடியாமல் போகிறது. பால் தொடர்ந்து திரிந்து போகிறது. குறிப்பிட்ட தளத்தில் தானியங்கி லிஃப்ட் நிற்பதே இல்லை. இப்படித் தொடரும் புதிர்களை அவிழ்த்துப் பார்க்க விழைகிறான் மனோகர். அவனும் அவன் அண்ணனும் ஆசையாசையாய் வாங்கி குடியேறிய 13B அபார்ட்மெண்ட் ப்ளாட்டில்தான் அத்தனை நிகழ்வுகளும் நடக்கின்றன.

05-1409913341-kadalora-kavithaigal-rekha

புதிய வீட்டில் டி.வி. கனெக்சன் கொடுத்த தினம் சரியாக ஒரு சேனலில் ‘யாவரும் நலம்’ என்றொரு நாடகம் தொடங்குகிறது. அது ஒரு மெகா சீரியல். அதன் கதை மாந்தர்கள் மனோகர் குடும்பத்தைக் கதையாக்கினாற் போலவே இருப்பதைத் தற்செயலாக கவனிக்கிறான் மனோகர். தொடரும் புதிர்த்தனங்களில் மாபெரும் ஒன்றாக ஒரு கட்டத்தில் நாடகத்தில் நிகழ்வது எல்லாம் அச்சு பிசகாமல் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த தினங்களில் நடப்பதைக் கண்ணுற்று அதிர்கிறான். மெல்ல மெல்ல நாடகத்தில் யாரெல்லாம் நிசத்தில் யார் அவர்களுக்கு என்ன நடக்கிறது அல்லது நிசத்தில் என்ன நடக்கப் போகிறது என்ற உச்சபட்ச கவனித்தலினூடே தன் நண்பன் இன்ஸ்பெக்டர் சிவா இருவரும் நாட்டின் புகழ்பெற்ற மருத்துவ மேதையும் அவர்களது குடும்ப நண்பருமான டாக்டர் பாலு ப்ரியாவை தக்க சமயத்தில் காப்பாற்றுகிறார்.

நாடகத்துக்கும் அவர்கள் நிச வாழ்க்கைக்குமான தொடர்பு அதிகரித்து நெருக்கமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் அத்தனை புதிர்களும் திறந்து கொள்ளத் தொடங்குகிறது அப்படி ஒரு நாடகமே உலகத்தில் ஒளிபரப்பாகவில்லை என்பதும் யாவரும் நலம் என்ற தலைப்பில் ஒரு கேம் ஷோ மட்டுமே ஒளிபரப்பாவதையும் அறியும் மனோகர் பயத்தில் உறைகிறான். தொடர்ந்து அகழும் போது நிஜம் வெளிவரத் தொடங்குகிறது. அந்த அபார்ட்மெண்ட் அமைந்திருக்கும் நிலமனையில் 1977 ஆமாண்டு தனி வீடு ஒன்று இருந்திருக்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் மனோகர் குடும்பத்துக்கு மட்டும் நாடக ரூபத்தில் வந்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்க விழைகிறார்கள் என்பது புரியவருகிறது. டி.வி. செய்தி வாசிப்பாளினி ஒருத்தி மீது தீராக் காதல் கொண்ட செந்தில் என்னும் மனம் பிறழ்ந்தவன் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கொன்று தீர்க்கிறான். அவனுக்கு மன நோய் என்பது நிரூபணமாகி மனநோயர் காப்பகத்தில் சிறையிடப்பட்டிருக்கிறான் என்பது தெரிகிறது.

நடந்த விபரங்களை அந்தக் கால செய்தித் தாட்களின் மூலம் அறியும் மனோகருக்கு நிஜமாகவே கொன்றவன் செந்தில் அல்ல என்பது தெரியவருகிறது. தன் காதல் நிறைவேறாமற்போனதால் செந்தில் தற்கொலை செய்து கொள்ள அதன் அதிர்ச்சியில் அவனது அண்ணனான டாக்டர் பாலுதான் அத்தனை பேரையும் கொன்றவர் என்பது தெரிகிறது. மனோகர் டாக்டர் பாலுவைக் கொல்கிறான். அத்தனை ஆன்மாக்களும் நிம்மதி அடைகின்றன. மனோகர் ஒரு சாதாரணமான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். படத்தின் இறுதியில் மனோகருக்கு லிஃப்டில் பயணிக்கும்போது ஒரு ஃபோன் அழைப்பு வருகிறது. அதில் மறுமுனையில் டாக்டர் பாலு பேசுகிறார். 13பி குடும்பம் டீவீயைக் கைப்பற்றினாற்போல் பாலு செல்ஃபோனைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவிக்கிறார். லிஃப்ட் மிக வேகமாகப் பயணிக்கிறதோடு படம் இருண்டு நிறைகிறது.

பாஸ்கர்ராவ் கதாபாத்திரத்தில் என்.டி.ஆரின் சரிதசினிமாக்களான கதாநாயகடு மற்றும் மகாநாயகடு இரண்டிலும் தோன்றிய மராத்தி நடிகரான சச்சின் கெடேகர் தமிழில் டாக்டர் பாலுவாகத் தன் கணக்கைத் தொடங்கினார். யூகிக்க முடியாத சாந்தமும் க்ரூரமும் கலந்து நடிப்பது மிகப்பெரிய சவால். அதில் நன்கு வென்றார் சச்சின்.

டெக்னிகல் குழுதான் இப்படத்தின் பெரிய பலம். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, ஷங்கர்-எஸான்-லாய் மூவரின் குளிரச்செய்யும் இசை, ஸ்ரீகர்ப்ரசாத்தின் தொகுப்பு என எல்லாமும் நன்றாகப் பலிதமானது. விக்ரம்.கே.குமாரின் இயக்கமும் தெளிந்த நீர் போன்ற திரைக்கதை ஓட்டமும் முன்னர் அறியாத கதை சொல்லல் முறையும் நறுக்குத் தெறித்தார் போன்ற வசனங்களும் மக்களில் அனேகர் நம்ப விரும்புகிற பேய் மறுஜென்மம் கொன்றவனைப் பழிவாங்குவது ஆவியாக அலைவது நியாயம் கேட்பது போன்ற பழைய வஸ்துக்களை எல்லாம் எடுத்து அறிவியலின் சமீப நீர்மம் கொண்டு அலசி அவற்றைப் புதிதாக்கி வழங்கியதன் மூலமாக மட்டுமே மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்.

இந்தி உள்பட அனேக இந்திய மொழிகளிலும் பின்னர் ஆங்கிலத்திலும் படமாக்கப்பட்ட பெருமைக்கு உரியதானது யாவரும் நலம். மாபெரும் ஆரவாரங்கள் பெருங்கூச்சல் திகில் வழியும் ரத்தம் இவை ஏதுமின்றி அறிவுக்கு அருகே நின்றவாறே அழகான ஒரு திகில் படத்தைத் தர முடியும் என்று முதன்முதலில் நிரூபித்துக் காட்டினார். அந்தவகையில் தமிழின் சிறந்த படங்களின் வரிசையில் யாவரும் நலம் எனும் படம் நல்கும் அனுபவத்தைச் சேர்க்கலாம்.

யாவரும் நலம் திகிலாட்டம்.
 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-57-யாவர/

இந்த படம் ஒரு பயங்கர த்ரில்லர் படம். ஒருநாள் மதியம் சாப்பிட்டபின்பு சக்தி டீவியில் பார்த்த ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2020 at 14:04, கிருபன் said:

நூறு கதை நூறு படம்: 44 வறுமையின் நிறம் சிவப்பு

aathmarthi.jpg

அன்பை விட 
பணத்தை விட 
விசுவாசத்தை விட 
புகழை விட 
நன்மையை விட 
எனக்கு 
உண்மையைத் தா 
போதும்

(SEAN PENN எழுதி நடித்து இயக்கிய INTO THE WILD 2007 படத்தின் ஒரு வசனம்)

பல தலங்களுக்கும் எடுத்துச் சென்று படமாக்கப்பட்ட விரிந்த நாடகங்களாகவே கே.பாலச்சந்தரின் ஆரம்பகாலப் படங்களைக் கொள்ள முடியும். மனித உணர்வுகளின் அதீதங்கள் வினோதங்கள் விளிம்புகளைத் தாண்ட விழையும் சாமான்ய மனங்களின் சரி மற்றும் தவறுகள் அவரவர் கதையில் வாய்க்கவல்ல அவரவர் நியாயம் எல்லாவற்றினூடாக பாலச்சந்தர் தொடர் குரலொன்றை எழுப்பினார். இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற எல்லா நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக நியாயங்களையும் முன் வடிவமைக்கப்பட்ட சார்புநிலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பாரபட்ச தர்மங்கள் எனத் தன்னாலான அளவு தன் பாத்திரங்களின் தைரியத்தை முன்வைத்து ஆனமட்டிலும் வினவுதலையும் மீறலையும் அந்தத் தொடர்குரல் சாத்தியம் செய்தது. அவர் இயங்க வந்த காலத்தோடு பொருத்திப் பார்க்கையில் கே.பாலச்சந்தர் நல்லதொரு கதைசொல்லி மேலும் தைரியமான படைப்பாளியும் ஆகிறார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு வெளியான வறுமையின் நிறம் சிவப்புஅன்றைய இந்தியாவின் தேசிய பிரச்சினைகளில் தலையாயதான வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான கலைவழிக் கலகக் குரல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறந்த படமாக 1980 ஆமாண்டுக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற படம். இதை இயக்கியதற்காக பாலச்சந்தருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மாநில மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஸ்ரீதேவி, எஸ்.வி.சேகர், திலீப், ப்ரதாப் போத்தன், பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தந்தை ஒரு இசைமேதை அவரது சொல்வழி எதிலும் ஈடுபாடற்ற தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரங்கன் தன் வழி செல்கிறான். வீட்டைவிட்டு ஓடிவந்து டெல்லியை அடைகிறான். அங்கே நண்பர்கள், காதல், வேலையில்லா சூழல், வறுமை, உபகதைகள் எல்லாவற்றுக்கும் அப்பால் என்னவாகிறான் தந்தையை மகன் மறுபடி சந்திக்கையில் எப்படியான சந்திப்பாக அது விளங்குகிறது என்பதெல்லாம் வறுமையின் நிறம் சிவப்பு முன்வைத்த மீதக் கதை.

 

varumaiyin-niram-sivappu-movie-review-21

பாரதியாரின் பாடல்களைத் தன் நெஞ்சகத்தில் ஒளிர்விதையென்றே தூவிய நாயகன் படத்தின் இறுதியில் தன் தகப்பனிடம் சொல்லும் அத்தனை பெரிய வசனம் இந்தப் படத்தின் முதுகெலும்பு எனலாம். ஸ்ரீதேவிக்குத் தெரியாமல் வெறும் கலயங்களை சப்தித்து தாங்கள் விருந்துண்ணுகிறாற்போல நடிக்கும் நண்பர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பது அந்தக் காலகட்டத்தின் துன்பியல் மென்மலர் என்றால் திலீப் என்ற கற்பனை கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட தன் பொய்களால் வழிபடும் திலீப் கதாபாத்திரம் இண்டர்வ்யூவுக்கு ரங்கன் செல்வதற்காக வழிப்போக்கர் ஒருவரிடமிருந்து கோட்டை அவரறியாமல் திருடித் தரும் காட்சி அற்புதம் என்றால் அதே கோட்டை வழியில் செல்கையில் சேறடித்து கமல் திகைப்பதும் இண்டர்வ்யூவில் கோட்டை மடித்து வைத்துக்கொண்டு விரக்தியில் தன் சான்றிதழ்களைக் கிழித்தெறியும் காட்சி யூகிக்கமுடியாத ஒன்று. கல்வியின் பின்னதான இருளும் நிச்சயமற்ற எதிர்காலமும் வறுமையும் பசியும் மெல்ல மெல்ல சமாதானமடைந்து எதாவது செய் என்று தன்னைத்தானே கெஞ்சும் இளைய மனங்களின் யதார்த்தமும் இந்தப் படத்தினூடாக துல்லியமாக வெளிக்காட்டப்பட்டன.

ஸ்ரீதேவி, திலீப் ப்ரதாப், எஸ்.வி.சேகர் நால்வரின் திரைவாழ்விலும் இந்தப் படம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றது. குறிப்பாக ப்ரதாப் பின்னியிருந்தார் எனலாம். சாகாவரம் பெற்ற சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடல் இந்தப் படத்தின் அணிகலனாயிற்று. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை கண்ணதாசனின் பாடல்கள் தவிர பாரதியாரின் தீர்த்தக்கரையினிலே நல்லதோர் வீணை செய்தே போன்றவை இசையுடன் கூடி ஒலித்தன.

கலைப் படைப்பு என்பது தன்னளவில் ஒரு பூர்த்தியை தைரியமான தீர்வை இதுதான் இன்னதுதான் என்று முடிவைக் கொண்டிருத்தல் அவசியம். அந்த வகையில் இந்தப் படம் அப்படியான நிறைவை நோக்கி நகர்ந்தோடியது நல்லதொரு ஆறுதல். கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கதாமுடிவோடு ப்ரதாப்பின் பாத்திர முடிவும் எஸ்.வி.சேகரின் அழிதலும் திலீப்பின் சிதைவுமாக நான்கு மனிதர்களின் கதை-முடிவு-முரண் வாயிலாக அழகான கற்பனைக் கோலமொன்றை சாத்தியம் செய்தார் பாலச்சந்தர்.

கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு ஓங்கி ஒலித்த சாமான்யர்களின் நடுங்கும் குரல். வாழ்க சினிமா!

 

https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-44-வறுமைய/

 

80 கிட்ஸாக சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி 
ரசித்த அருமையான காலங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு படம்
80 கிட்ஸாக கதை புரியா விட்டாலும் பார்த்து ரசித்த அருமையான படங்கள்
ஜானி, தில்லுமுல்லு,பில்லா,மூடுபனி,அந்த ஏழு நாட்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,ஆறிலிருந்து அறுபது வரை,உதிரிப்பூக்கள்

அருமையான திரி தொடருங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடருகின்றோம்........!  👏

எஸ்கியூஸ் மீ ....100 என்பதை 200 என்று மாற்ற முடியாதா ......!   😂

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 60 – மதயானைக் கூட்டம்

 

“கடவுள் அடையாளபூர்வமாக வன்முறையை நேசிக்கிறார். நீங்கள் அதனை அப்படியல்ல என்று புரிந்துகொள்கிறீர்கள்”

-லியனார்டோ டி காப்ரியோ நடித்து மார்ட்டின் ஸ்கார்கேஸ் இயக்கிய SHUTTER ISLAND படத்திலிருந்து

வன்மம் என்பது ஒரு சொல் அல்ல. கொடுமைகள் பலவற்றுக்கும் பின்னாலிருக்கக்கூடிய தூண்டு திரியாக வன்மம் ஆழத்தில் புதைந்திருக்கிறது. கண்ணி வெடிகளைப் போலவே இருப்பிடம் தெரியாமலிருக்கக்கூடிய வன்மம் விளைவுகளால் குருதி சுவைக்கிறது. வரலாற்றில் வன்மத்தின் பக்கங்கள் ரத்தத்தில் தோய்ந்தவை. பழிவாங்கும் திரைப்படங்களுக்கு உலகமெங்கும் நிரந்தரமாய் இருக்கும் ரசிகக் கூட்டம் பெரிது. என்ன ஒன்று பழிவாங்கும் திரைப்படங்களில் அத்தி பூத்தாற் போலத் தான் யதார்த்தத்தை மீறாத படங்களின் வருகை நிகழ்கின்றது.

பெருவாரிப் படங்கள் நட்சத்திர அதீதங்களே அடுத்துக் கெடுத்தல் குழி பறிப்பது உடனிருந்து காட்டிக் கொடுப்பது நம்பிக்கை துரோகம் கழுத்தறுத்தல் போன்றவை பொதுவில் நிறுவ முடியாத தனித்த நியாயங்களைத் தனதே கொண்டவை தண்டனையை நன்கு அறிந்த பிற்பாடு முயலப் படுகிற குற்றங்களின் பின்னால் நிலவும் உளவியல் நுட்பமாக அவதானிக்கப் படவேண்டியது. கருணை இன்றி நிகழ்த்தப்படுகிற கொலைகள் கதைகளாகவும் அச்சங்களாகவும் கூட்டப் பெருமிதங்களாகவும் தொடர்கின்றன.

 

80505-192x300.jpg

தீர்ப்பை நோக்கியதாக ஒரு கலைப்படைப்பு இருந்தாக வேண்டும்.கடுமையான எதிர்க்குரலை ஆட்சேபங்களை எள்ளல்களை ஒரு சினிமா நிகழ்த்தவேண்டும். வன்முறையை விடக் கொடுமையானது அதன் பின்னாலிருந்து தூபம் போடும் வன்மத்தின் சுயநலம். மனித பிடிவாதம் எத்தகைய எல்லை வரைக்கும் செல்லும் என்பதை மனித முரண்களுக்கு அப்பாலான நன்மை தீமைகளின் வழி வழியாக அழுத்திச் சொன்ன திரைப் படைப்புகளில் முக்கியமான ஒன்று விக்ரம் சுகுமாரனின் மதயானைக்கூட்டம்.

ஒவ்வொரு படத்துக்கும் தீம் மியூசிக் என்பதை போலவே ஒருமித்த பின்புல வண்ணம் ஒன்று இருக்கும் முதல் பதாகையில் இருந்து படத்தின் எண்டு கார்டு வரைக்கும் சற்றுத் தூக்கலாக ஒற்றை நிறம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவாக்கத்தில் இது ஒரு பின்புல உத்தி. வகையில் குருதி வண்ணத்தை நிகர்த்த செஃபியா டோனை இந்தப் படத்தில் பின்புல வண்ணமாக உணரச் செய்ததில் இருந்து தனது திரைமொழியை துவக்குகிறார் விக்ரம்.
வீரனின் தங்கை செவனம்மா.அவளது கணவர் ஜெயக்கொடி இரண்டாம் திருமணம் செய்ததில் இருந்து அவரிடம் அண்ணனும் தங்கையும் பேசுவதே இல்லை. இரண்டாம் குடித்தனத்தில் ஜெயக்கொடி திடீரென்று மரணமடைய வண்டியில் பிணத்தை ஏற்றிக் கொண்டு தங்கை வீட்டுக்குக் கொணர்ந்து சேர்க்கிறார் வீரா.செவனம்மாவின் ஒரே மகன் பூலோகராசா சித்தி தம்பி பார்த்திபன் தங்கை ப்ரேமா என எல்லோரையும் அன்போடு போற்ற நினைப்பவன். அவனது பரிந்துரையால் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இரண்டாவது குடும்பம் ஜெயக்கொடியின் உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைக்கிறது.

வீரா ஜெயக்கொடி மரணத்தின் போது செய்ய வேண்டிய செய்முறையினைப் பிற்பாடு செய்வதாக செவனம்மாவிடம் தெரியப்படுத்த அவளும் அதனை ஒப்புக் கொள்கிறாள். அதை அறிய நேரும் போது ஆட்சேபிக்கும் பூலோகராசா வீராவையும் அவர் குடும்பத்தையும் கண்டபடி ஏச தள்ளு முள்ளுவாகையில் வீராவின் மகன் தோட்டத்தில் இருக்கும் தேங்காய்க் கத்தி வெட்டி அங்கேயே மரிக்கிறான். தன் மகன் இறந்ததற்குக் காரணம் என பார்த்திபனைக் கொல்ல சபதம் எடுக்கிறார்.
தம்பியைக் காப்பாற்ற உதவுகிறான் பூலோகராசா. முதலில் தானும் உதவும் எண்ணத்தில் அத்தனை நாட்கள் எதிர் கொண்டு பார்த்தே இராத தன் கணவனின் இரண்டாம் மனைவியான பார்த்திபனின் அம்மாவைத் தன் தோட்டவீட்டில் மறைத்து வைக்கிறாள் செவனம்மா. கேரளாவிற்குத் தப்பிச் சென்று விடும் பார்த்திபன் தன் தோழி உதவியோடு அங்கேயே மறைந்து வாழ்கிறான். தன் மகன் சாவுக்கு பழிக்குப் பழியாக பார்த்திபனைக் கொன்றே ஆக வேண்டும் எனத் துடிக்கும் வீரா தங்கையிடம் உதவி கேட்கிறார்.

அண்ணன் பாசம் கண்ணை மறைக்க தன்னை நம்பிப் புகலிடம் வந்திருக்கும் பார்த்திபனின் அம்மாவுக்கு உணவில் விஷம் கலந்து தருகிறாள் செவனம்மா. அவள் இறந்ததும் பார்த்திபன் இறுதிச் சடங்கு செய்ய வந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. ஊர் திரும்பும் பார்த்திபன் இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்ததும் வீராவும் அவரது மகனும் மற்றும் உறவினர்களும் கூட்டமாய் தாக்கத் தொடங்குகின்றனர்.கடைசி வரை எல்லோரையும் சமாளிக்கிற பார்த்திபனின் மீது மறைந்து தூரத்திலிருந்து வளரியை எறிந்து கொல்கிறார் வீரா. போலீஸ் வந்து வீராவைக் கைது செய்து அழைத்துச் செல்கிறது. பார்த்திபனின் ரத்தக் கறையை நீர் கொண்டு கழுவி விட்டபடி ஓவென்று அழுகிறாள் செவனம்மா. படம் நிறைகிறது.

விஜி சந்திரசேகர் முருகன்ஜி இருவரையும் தாண்டி வீராவாக வந்த வேலராமமூர்த்தி தமிழ் சினிமாவின் அடுத்த குணச்சித்திரப் பேருரு என்பதைத் தன் இயல்பான நடிப்பால் நிறுவினார். தமிழ் சினிமாவின் புதிய வரவாக இப்படத்தில் நடித்த கதிர் அதிகம் பேசாமல் தன் முகமொழி மூலமாகவே மறக்க முடியாத நல் நடிப்பை நேர்த்தினார். ஏகாதசியின் வரிகளுக்கு என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் உறுதுணையாயிற்று. ராகுல் தர்மனின் ஒளிக்கூட்டு நேரலையின் நுட்பத்தோடு கதையைக் காணச்செய்தது.

பெருமிதமாய்ப் பராமரிக்கப் பட்டு வந்த பல கருத்தாக்கங்களைத் தன் முதல் படம் மூலமாகவே உடைத்து நொறுக்க முனைந்த விக்ரம் சுகுமாரனின் தெளிவான திரைக்கதையும் கதாபாத்திரங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களின் அச்சுப் பிசகாத பொருத்தமும் இயல்பான தெற்கத்தி வசனங்களும் சொல்ல வந்ததை கொஞ்சம் கூடப் பாவனையோ சுற்றி வளைத்தலோ இல்லாமல் நேரடியாகச் சொல்ல முற்பட்ட துணிவும் எனப் பல காரணங்களுக்காக மதயானைக்கூட்டம் கவனத்தில் கொள்ள வேண்டிய திரைப்படமாகிறது.

மதயானைக் கூட்டம்: பெருவழி வன்மம்

 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-60-மதயா/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 61 – புதிய பறவை

 

இனிமையான புன்னகைகள் இருண்ட ரகசியங்களை வைத்திருக்கின்றன

-சாரா ஷெப்பர்ட் ( Flawless )

தலையைச்சுற்றி மூக்கைத் தொட்ட பறவை என்றால் பொருத்தமாக இருக்கும். ஆங்கிலத்தில் 1958 ஆமாண்டு வெளியான பிரிட்டிஷ் படமான Chase a Crooked Shadow (a.k.a. Sleep No More இனி உறக்கமில்லை எனப் பொருள் வரக் கூடிய படத்திலிருந்து தழுவி எடுக்கப் பட்ட மராத்திப் படமான சாஷ் ஆன்கா (1963)என்ற பேரிலான பெங்காலி படத்தின் மீவுரு தான் தமிழில் புதிய பறவை ஆனது.இதனை இயக்கியவர் தாதா மிராஸி. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தயாரித்து நடித்த படம்.

காதலா அதெல்லாம் எங்களுக்குத் தெரியலையே யாராச்சும் காதலிப்பாங்க நாங்கள்லாம் பார்த்துக்குறோம் என்று அரிதினும் அரிய பண்டமாக காதல் எனும் ஒன்று இருந்திருக்குமேயானால் புதிய பறவை போன்ற படத்தைப் பார்த்த மாத்திரத்தில் பலரும் காதல் வயப்படுவார்கள் எனலாம். அப்படிக் காதலை காவியத் தன்மையோடு அணுகிய தமிழ்ப்படங்களில் புதியபறவையும் ஒன்று.

fZsztXQjEwr22R9e4dtwayxjQWA-267x300.jpg

த்ரில்லர் வகைப் படங்களுக்கான வரவேற்பு எக்காலத்திற்குமானது.(சிவாஜி  – சரோஜாதேவி) கோபால், லதா இருவரும் யதார்த்தமாக ஒரு கப்பல் பயணத்தில் சந்தித்து ஒருவரை ஒருவர் விரும்பவும் தொடங்குகின்றனர். தன் ஊட்டி பங்களாவில் வந்து தங்குவதற்கு கோபால் அழைப்பு விடுக்கிறான். அதை லதாவும் அவள் தந்தையும் ஏற்கின்றனர். விரைந்தோடும் ரயிலைக் காண்கையிலெல்லாம் தன்னை அறியாமல் அதிர்ச்சிக்கு ஆளாகிறான் கோபால். அதற்கான காரணத்தை அறிய நேர்கையில் அவனது முன் கதை விரிகிறது.

சிங்கப்பூரில் தான் காதலித்து பெரும் ப்ரியத்தோடு மணந்து கொண்ட சித்ரா தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஏற்றாற்போல் இல்லை என்பதை அறிந்து மனம் வாடிய கோபால் அவளைத் தன்வசம் திருப்ப எத்தனையோ முயன்றும் தோற்கிறான். எதற்கும் ஒத்துவராத சித்ராவின் அசட்டை குணம் கண்டு ஒருகட்டத்தில் கோபாலின் தந்தை மரணிக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கட்டுப்பாட்டை இழக்கும் கோபால் சித்ராவை ஓங்கி அறைகிறான்; அன்றைய இரவே அவள் ரயில் முன் பாய்ந்து இறந்து விட்டாள் எனும் செய்தி கிடைக்கிறது.

கோபால் மீது இன்னும் பேரன்பாகிறாள் லதா. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து அதற்கான வரவேற்பு நிகழ்வு நடக்கும் போது கோபாலின் மாளிகைக்கு சித்ரா தன் மாமன் ரங்கனோடு திரும்பி வருகிறாள். சித்ரா இறந்து விட்டதாக சர்ட்டிஃபிகேட்டை நீட்டியும் கோபாலால் எதையும் நிரூபிக்க முடியவில்லை. அவன் சொல்வதனைத்தும் பொய் என்று வாதிடும் ரங்கன் சித்ரா இறக்கவில்லை என்று சத்தியம் செய்கிறான்.

திருமணம் நடப்பது சிக்கலாகிக் கொண்டே செல்கிறது வேறு வழியே இல்லாமல் சிங்கப்பூரில் நிகழ்ந்ததை எல்லோரிடமும் சொல்கிறான் கோபால். தான் அறைந்த போதே இதய நோயாளியான சித்ரா கீழே விழுந்து இறந்ததாகவும் குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்காகவே தான் அதை தற்கொலை எனப் புனைந்ததாகவும் ஒப்புக் கொள்கிறான்.

சித்ராவாக வந்திருப்பவள் போலி என்று குமுறும் கோபாலுக்கு கடைசியில் தான் உண்மைகள் தெரியவருகின்றன. சித்ராவின் மரணத்தை விசாரிக்க வந்த போலீஸ் துறையினர்தான் லதா, ராமதுரை, ரங்கன் மற்றும் போலி சித்ராவான சரசா ஆகியோர் என்பது தெரியவருகிறது. செய்த குற்றத்திற்கான தண்டனைக் காலம் முடிந்து விடுதலை அடையும் வரை கோபாலுக்காகத் தான் காத்திருப்பதாகச் சொல்கிறாள் லதா. புதிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறது.

அதிபுனைவு தமிழ் சினிமாக்களின் வரிசையில் சிவாஜிகணேசனின் மிகை நடிப்பு ஒரு வைரம்போல மிளிர்ந்த படங்களில் முக்கியமான ஒன்று புதிய பறவை.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-61-புதி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு படம் நூறு சினிமா: 62 – இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

யாரொருவரையும் நீங்கள் அறிந்து கொள்ளும் வரை சாதாரணமாகத் தான் தோற்றமளிப்பார்கள்

-நாடோடிக் கூற்று

தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று அங்கத திரைப்பட முயற்சிகளில் எஸ் பிக்சர்ஸ் சார்பாக ஷங்கர் தயாரித்த சிம்புதேவனின் முதல் படமான இம்சை அரசன் இருபத்திமூன்றாம் புலிகேசிக்குமுக்கிய இடம் உண்டு

காலம் காலமாக கட்டமைக்கப்பட்டு வந்த மற்றும் ஏற்றிச் செல்லப்பட்ட ராஜவேடங்களின் புனித பிம்பங்களை எல்லாம் அடித்து  நொறுக்கியது இக்கதையின் சிறப்பம்சம் எத்தனை காலம்தான் அரசன் என்ற உடன் மிடுக்கும் கம்பீரமும் என்று தோன்றச் செய்து கொண்டிருப்பார்கள் இங்கே புலிகேசி ஆங்கில டபிள்யூ போல் மீசை கொண்டவன் அவனுடைய கொனஷ்டைகள் அந்தப்  பாளையத்தின் சகலரையும் மனம் சுளிக்க வைத்தவை. அரசர் மொக்கையப்பருக்கு நெடு நாட்களுக்குப் பிறகு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் சுயபுத்தி குழந்தையை கொன்றுவிடச் சொல்லி தாய்மாமன் சங்கிலிமாயன் சதி செய்கிறான். சொல்புத்தி குழந்தை மாமன்னர் புலிகேசி ஆக மாற்றுகிறது காலம் மாமா வைத்ததுதான் சட்டம் என்பதை கண்மூடித்தனமாக நம்புகிற புலிகேசி ஆங்கிலேயர்களுக்கு துணை ஒலி
தட்டுபவன். அவன் செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லை நினைத்ததை எல்லாம் நிறைவேற்றி பார்ப்பவன் குரூர மனம் படைத்த வில்லன் அல்லன் என்றபோதும் அடுத்த கணம் என்ன நிகழுமோ என்கிற அச்சத்தில் மக்களைத் துன்புறுத்துகிறான்  கம்பளிப்பூச்சி மகாராஜா.

64318889-300x225.jpg

தன்னை எப்படி புகழ்ந்து ஓத வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகிறது புலிகேசியின் இம்சை மாடிப்படி பக்கவாட்டு கைப்பிடிச் சுவரில் இறங்குவது ஆகட்டும் வழுக்குவது ஆகட்டும் காவலாளிகளை எடக்குமடக்காக கேள்வி கேட்டு அகற்றுவதில் ஆகட்டும் வித வினோத தண்டனை வழங்குவதில் ஆகட்டும் செய்தி கொண்டு வந்த புறாவை வறுத்து தின்பதில் ஆகட்டும் அவனுக்கு நிகர் அவன் மாத்திரமே அவனை மந்தத்திலேயே வைத்திருக்கும் சகுனி மாமனுக்கு அவையெல்லாம் மகிழ்ச்சி ஆனாலும் புலிகேசி பெற்றோர்களுக்கோ அவன் ஒரு கோமாளியாகவே தென்படுகிறான்.ராஜகுருவின் மீறி கட்டளையை மீறி அந்த இரண்டாவது குழந்தை தப்பிப் பிழைக்கிறது. உக்கிர புத்தனாக பல்கலை ஆக செல்வனாக வளர்ந்து திரும்புகிறான் நண்பர்களுடன் சேர்ந்து நாட்டின் போக்கை ஏதாவது செய்து திருத்த வேண்டும் என்று சபதம் கொள்கிறான் அரசனைக் கொல்ல அரண்மனையிலேயே ஆங்காங்கே அவ்வப்பொழுது சதிகள் நடக்கின்றன ஒரு சந்தர்ப்பத்தில் புலிகேசி சிறைக்குச் செல்கிறார் உக்கிரபுத்திரன் புலிகேசி வேடத்தில் ஆட்சியைப் பிடிக்கிறான் சகோதரர்கள் இணைந்தார்களா நல்லது நிறைந்த தான் என்பதெல்லாம் இரண்டாவது பாதியில் கதை

சிம்புதேவன் படக்கதை ஒன்றின் கதாபாத்திரமாக பிரபல பத்திரிக்கையில் வரைந்த இம்சை அரசன் புலிகேசி பாத்திரம் திரைப்படமாக கண்டது இந்தியாவில் சொற்பமாக உருவாக்கப்பட்ட spoof வகைமை திரைப்படங்களில் புலிகேசி முக்கியமான ஒன்று குதூகலத்தின் வழியாகவும் கொண்டாட்டத்தின் மறைபொருளாகவும் மாறுகையில் எந்த ஒரு கருத்தும் மிகத் துல்லியமாக காண்பவர் மனங்களை தைக்க வல்லவை புலிகேசி படமானது ராஜ காலப் பின்னணியில் சமகாலத்தின் அத்தனை மேடு பள்ளங்களையும் எள்ளி நகையாடிற்று.

அயல்நாட்டு குளிர்பானங்களின் வருகை உள்ளூர் பிரபலங்கள் விளம்பர மாடல்களாக மாறுவது அவற்றின் தயாரிப்பு செலவு இரக்கமற்ற முதலாளிகளின் லாப நோக்கு சண்டைகளுக்கு ஸ்பான்சர் செய்வது என அதகளம் காட்டியது படம் மனோரமா நாகேஷ் நாசர் ஸ்ரீமன் மோனிகா இவர்களுடன் மனோபாலா முத்துக்காளை இளவரசு சிங்கமுத்து சிசர் மனோகர் தியாகு வெண்ணிறாடை மூர்த்தி நகைச்சுவை பட்டாளத்தோடு இருவேடங்களில் நடித்தார் வடிவேலு அவரது திரைவாழ்வில் மகா வெற்றிப்படமாக மாறியது படங்களில் விடுபடல்களும் புலிகேசி படம் எங்கும் இங்கு நிரம்பிய அங்கதமும் கூர்மையான வசனங்களும் கிருஷ்ணமூர்த்தியின் கலை இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்தின வடிவேலு ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனங்களுக்கும் கூடு விட்டுக் கூடு பாய்ந்தார் தனித்த திரைமொழியும் பாத்திர வித்தியாசமும் தொழில்நுட்ப நேர்த்தியும் புலிகேசி திரைப்படத்தை தமிழக மக்களின் கொண்டாட்ட சினிமாவாகவே மாற்றியது

வடிவேலுவுக்கு எதெல்லாம் பலமோ அவற்றை எல்லாமும் சரிவர அவதானித்து அழகிய நகைச்சுவை மாலையாகக் கோர்த்து அவருக்கே அணிவித்தார் சிம்புதேவன். முழுமையான நாயகத்துவத்தின் காரிஸ்மா செல்வாக்குடன் எடுக்கப் பட்ட ஆள்மாறாட்ட இரட்டைவேடத் திரைக்கதையை கோமாளி ராஜா ஒருவனைக் கொண்டு மாற்றுப் புனைவாக முன்னெடுக்கும் போது மொத்தமாக நிராகரிக்கப் படக் கூடிய அபாயமும் அதனுள் நிலவவே செய்யும். அதனை எளிதான தன் திரை உத்திகளால் தாண்டியபடியே உத்தமபுத்திரன் சாயலுடனான கதையினைக் கொண்டு வடிவேலு எனும் பெருவிருப்ப பிம்பத்தை மக்களின் மனம் மயக்கும் சிரிப்பு ராஜாங்கத்தைக் கட்டமைப்பதற்கு முயன்று அதில் பெருவெற்றியும் அடைந்தார். இன்னும் நெடிய காலத்துக்கு நினைத்த மாத்திரத்தில் மனவசியம் செய்யும் மக்கள் ப்ரிய சினிமாவாக இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் இடம் சிறப்பானது. மற்றும் தனித்தது.

 

https://uyirmmai.com/literature/நூறு-படம்-நூறு-சினிமா-62-இம்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுகதை நூறு சினிமா: 63 – பச்சை விளக்கு

 

என்னைப் பொறுத்தவரை மென்நாடகம் (Melodrama) என்பது துன்பப்படுவதற்கான பாதுகாப்பான வழி, ஏனெனில் உங்கள் துன்பம் பொய்யானது. அதனால்தான் நான் மென் நாடகத்தை விரும்புகிறேன்.

-லூயிஸ் நெக்ரோன்

உறவுகள் புனிதமானவை என்பது சென்ற நூற்றாண்டின் அடிநாதம். இந்த நூற்றாண்டுப் புதியவர்களுக்குக் கூட்டுக் குடும்பம் எனும் சொல்லே சரியாய் ஒலிப்பதில்லை. அடுத்தடுத்த வீடுகளில் உறவினர்கள் வசிப்பதையே பழமைத்தனமாகக் கருதும் மனப்பாங்கு வலுத்துவருகிறது. அடுக்கு மாடிச் சிறைகளையே மனிதன் விரும்புகிறான். ப்ரைவஸி எனும் பண்டத்துக்கு விலை தருகையில் ஸ்ட்ரெஸ் எனும் உபபண்டம் கட்டாய இலவசமாய்க் கையளிக்கப் படுகிறது.

வேறொரு காலம் இருந்தது. குடும்பத்தில் ஒருவர் வேலை செய்து எல்லோரையும் காத்தார்கள். மூத்தவன் அண்ணன் மட்டுமன்றித் தகப்பன் விட்டுச் சென்ற கடமைகளை எல்லாம் தன் தலைமேற் சுமந்து நிறைவேற்றுபவனாக இருந்தான். அக்காக்காரி அம்மாவைப் போலவே தனக்கடுத்துப் பிறந்தவர்களை வளர்த்தெடுத்தாள். உணவை விட்டுக் கொடுத்தார்கள். பழைய உடைகளோடு சமரசம் அடைந்தார்கள். உறைவிடத்தில் தம்பி தங்கைகளுக்குப் பேரிடம் தந்து தாங்கள் சிறியதோர் இடத்திற் சுருங்கிக் கிடந்தார்கள். உறவு என்பது உலகத்தை உயிர்க்கச் செய்யும் இடுபொருளாக விளங்கிற்று.

சாரதியின் மனைவி பார்வதி, தம்பி மணி, தந்தை மற்றும் சித்தப்பா ராஜாபாதர் இவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்பவன். இரயிலில் எஞ்சின் ட்ரைவரான சாரதிக்கு வளர்ப்புத் தங்கையான சுமதியை ஒரு டாக்டராக முன்னுக்குக் கொண்டுவந்தே தீரவேண்டும் என்பது வாழ்வின் லட்சியம்.சித்தப்பா ராஜாபாதர் குறுக்கு வழிகளில் முன்னேறத் துடிக்கும் வஞ்சகர் சுமதிமீது காதலோடு வாழும் பார்வதியின் தம்பி பசுபதி. சீஃப் இஞ்சினியர் பொன்னம்பலத்தின் அறிமுகமும் அன்பும் கிடைக்கப் பெறுகிற சாரதி தன் தங்கையை டாக்டராக்குவதைத் தன் உயிரைக் கொடுத்து நிறைவேற்றுவதே பச்சை விளக்கு படத்தின் கதைச்சுருக்கம்

 

.MV5BMzk5ODA3ZTgtMzMxMi00OGRkLTllYTItOWQ3

சிவாஜி மிகை நடிகராக அறியப்பட்டவர் என்றபொதும் மெனுகார்டில் முரண்சுவை பதார்த்தங்கள் வரிசையாக இருக்கிறாற்போல் நடிப்பின் வகைமைகள் பலவற்றையும் முயன்று பார்த்தவர் என்பதும் நிசமே. சிவாஜி ஒரு அண்டர்ப்ளே நடிகராக நடித்து போற்றப்பட்ட படங்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று பச்சைவிளக்கு. மத்யம வகுப்பின் மனிதனாக குடும்பத்தின் பாரந்தாங்கியாக ப்ரெட் வின்னராக அளவான மகிழ்ச்சியும் எப்போதும் அயர்ச்சியும் முடிவெடுக்க முடியாத இயலாமையின் தவிப்பையும் பல இடங்களில் சிவாஜி வெளிப்படுத்திய விதம் அற்புதமானது. எஸ்.வி.ரங்காராவ், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா என மூன்று நடிப்பு அசுரர்கள் இந்தப் படத்தில் இருப்பதை அனாயாசமாகக் கையாண்டிருப்பார் சிவாஜி. நடிப்பைப் பயில விரும்புவோர்க்கு இந்த மூவருக்கும் சிவாஜிக்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகளிலெல்லாம் சிவாஜி எப்படி நடிக்கிறார் என்பதைக் கொண்டே நடிப்பின் கடினங்களை மேலாண்மை செய்வதற்கான உத்திகளை விளக்கிச் சொல்ல முடியும்.

அழகான உணர்வுகளின் கூட்டுத் தொகையாக பச்சைவிளக்கு மனித மதிப்பீடுகளின் பூக்கூடை. இன்றைய நவ வாழ்வு நமக்கு விதித்திருக்கும் பல கண்காணா சங்கிலிகள் முற்றிலுமாக இல்லாத முன் பழைய சொர்க்ககாலம் இப்படத்தின் இயங்குகளம். வண்ணமயமான அத்தனையையும் ஒருபுறம் ரசித்துக் கொண்டே விரும்பிக் கொண்டே பற்றிக் கொண்டே இன்னொரு புறம் முன்னர் பழைய மனிதர்களின் கருப்புவெள்ளை சினிமாக்களை ஏக்கமாகப் பார்ப்பதும் நிகழாமலா இருக்கிறது?

எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு பச்சை விளக்கு போன்ற திரைப்படங்களை எப்போது எங்கே பார்க்க வாய்த்தாலும் கண்கள் லேசாய்ப் பனிப்பதற்கும் உதடுகள் உலர்ந்து போய் சொல்லொணா இறுக்கம் அப்போது துவங்கி நாளெல்லாம் கூடவே முதுகிலிருந்து வழிந்தபடி பயணிக்கிற சொந்த நிழலின் அன்னியம் போலவே நிகழ்கிறது.

கேள்வி பிறந்தது அன்று, அவள் மெல்லச்சிரித்தாள், குத்துவிளக்கெரிய போன்ற க்ளாசிக் பாடல்களோடு பச்சை விளக்கு படத்தின் மறக்க முடியாத நற்பாடலாக இன்னுமின்னும் பகிரப்பட்டும் பாடப்பட்டும் வருவது ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது டி.எம்.எஸ். எனும் மாமேதையின் குரல்வழி வழிந்தோடிய இசைநதி எப்போதும் வற்றாமற் பாடலாய்க் கிட்டுவது.

படிக்காத விவசாயியான தன் மைத்துனன் பசுபதி தங்கை சுமதி மீது ஆசை வைத்திருக்கிறான் என்பதை அறிய நேரும் போது அதனை ஆட்சேபித்து விடுவான் அண்ணன் சாரதி. அதே பசுபதியை வேறுவழியின்றி சூழலின் காரணமாகத் தன் தங்கை சுமதி மணக்க நேரும் போது மனம் குழம்புவதையும் தங்கையும் மைத்துனனும் குடித்தனம் நடத்தக் கிளம்பும் போது தவிப்பையும் வெளிப்படுத்திய விதம் சொல்லி விளக்க முடியாத அற்புதமாயிருக்கும். பேசிக் கொண்டே அழுது மைத்துனனின் தோளில் துவளுவதை யார் வேண்டுமானாலும் நடிக்கக் கூடும். ஒரே ஒரு சிவாஜியால் மட்டுமே நிஜமென்று நிகழ்த்த முடியும். நூற்றுக்கணக்கானவை சிவாஜி படங்கள். அவற்றின் மீதான நிரந்தர ஒளி நல்கும் ஏ.பீம்சிங்கின் பச்சை விளக்கு.
 

https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-63-பச்ச/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுகதை நூறுசினிமா: 64 – ரிதம்

சினிமா என்பது ஒரு இயக்குனரின் ஊடகம். அது அவரது கதை மற்றும் அவரது பார்வை. அது சிறப்பான கதையெனில் மக்கள் அதில் தங்களை இணைத்துக் கொள்வர்.

– நடிகர் விக்கி கௌஷல்

காதல் மனிதனின் பண்பாடு. அது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சிய ஆரம்பம். உணர்வுகளின் வழிபாடு. ஒருவருக்கொருவர் காட்ட விழைகிற உச்சபட்ச மரியாதை. பரஸ்பரம் பேரன்பு என்பதன் சுருக்கப் பெயர் காதல். காதலைவிட நுட்பமான சிறப்பான இன்னொன்று காதலுக்கான காத்திருத்தல். இரண்டு மனங்களும் நன்கு அறிந்து கொண்ட பிறகும் பலகாலம் என்ற ஒற்றை சம்மதச்சொல்லை உதிர்த்துவிடாமல் குழம்பித் தவிப்பது பெரும் சுகம். அது குழப்பமல்ல. மாறாக பதம் காணும் வரையிலான கொதியூட்டல். இதற்கு மேல் தாளாது எனும் நிலையில் தானாய்ப் பொங்கிப் பெருகும் காதல் பெருவெள்ளம் முன் விநாடி வரை அலையலையாய்ப் பிரியும்.

காதலை சுவாரசியமாக்குவது அதன் எல்லா தருணங்களும்தான் எங்கே எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் என்ன வரிசையில் எப்படியெல்லாம் நிகழ்ந்தது எனும் வரைக்கும் காதல் தன்னளவில் ஒரு முழுமையான திரைக்கதையாகவே காலம் காலமாய்த் தொடர்ந்து வருவது. காதலின் உட்பொருள் ஒன்றுதான். யார் அந்தப் பாத்திரங்களை ஏற்கிறார்கள் என்பதுவும் என்னவெல்லாம் நிகழ்ந்தன என்பதுவும் மாத்திரமே புதியது. இது காதலின் நியமம். திரைப்படங்களின் முதற்கடவுள் காதல்தான். காதலை விதவிதமாய்க் காட்டுவதற்கான செலுலாய்ட் ஆலயம்தான் திரைப்படம்

.c1f5cab4068874b272331c8cae47edd6-300x225

இலக்கியத்துக்கு அருகே திரைப்படம் வருவதற்கான முதற்சாத்தியமாகக் காதலையும் அதனொற்றிய பேரன்புமான கதைகள் உதவுகின்றன. காதல் படங்கள் காதலிக்கக் கற்றுக் கொடுக்கின்றன என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. திரைப்படம் கற்பிக்கிற மாபெரும் நளினங்களில் முதன்மையானதும் தீமையற்றதுமானது காதல். காலம் காலமாகத் திரைப்படங்களுக்கும் நிசவாழ்க்கைக் காதல் கதைகளுக்கும் இடையிலான அன்புப் பிடிமானம் நெகிழ்வூட்டக்கூடியது. முதன் முதலில் பார்த்த படம் என்பது வெறும் கேள்வியல்ல. இரு மனங்கள் சங்கமிக்கிற சன்னிதியாகவே திரை அரங்கங்கள் திகழ்ந்தன. காதலிக்கும்போது அமர்ந்த அதே சீட்களில் மறுபடியும் அமர்ந்து படம் பார்ப்பதை காதலின் கொண்டாட்டமாக நினைப்பவர்கள் இன்றும் உண்டு.

மனித உணர்வுகளின் மென்மையான பக்கங்களை கிட்டச் சென்று தரிசிப்பதற்கான பெருவாய்ப்பாகத் தன் படங்களை அமைத்துக் கொண்டவர் வஸந்த். கே.பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து உருக்கொண்டு வந்த வஸந்த் தன் முதல் படத்திலேயே பெரும் அதிர்வை உண்டாக்கியவர்.கேளடி கண்மணி அப்படியான பெருவெற்றிப் படம். அடுத்தடுத்த படங்களின் மூலம் தனக்கென்று தனிப் பாணியை உருவாக்கிக் கொண்டார் வஸந்த். அவரது மனிதர்கள் நாம் எளிதாக சந்திக்கக் கூடியவர்கள். அவர்களுடைய மெல்லிய நூலினாற் பின்னப்பட்ட உலகத்தை அருகே நின்றுபார்ப்பதற்கான கண்களாகவே தன் திரைக்கதைகளை அமைப்பது வஸந்தின் வழக்கம்.

கே.பாலச்சந்தர் விளிம்பு தாண்டி வழியும் திரவமெனத் தன் மாந்தர்களைக் கண்டறிவார் என்றால் வஸந்த் அவர்களுக்கு முந்தைய வரிசையைக் கட்டமைப்பார். கே.பாலச்சந்தர் மற்றும் வஸந்த் இருவரின் கதாமாந்தர்களுக்கு இடையே நிலவக்கூடிய மெல்லிய வித்யாசங்களை உற்று நோக்குபவர்களுக்கு இன்னும் கை நிறையக் கதைகள் கிடைக்கக்கூடும். கே.பியின் பல நுட்பங்கள் வஸந்த் வழி தொடர்ந்தது கூறத்தக்கது. வஸந்தின் திரைக்கதைகள் நில்லாநதிகளாய் நீடூழிப் பாய்பவை. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட எந்தவொரு திருப்பத்தையும் அவற்றினூடாகக் காண்பதற்கில்லை.

வஸந்த் இயக்கி ப்ரமிட் நடராஜன் தயாரித்த ரிதம் அவரது இயக்கப் படங்களில் முக்கியமான ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, ஸ்ரீகர் ப்ரசாத், பி.எஸ்.வினோத் என தொழில் நுட்பச் செறிவுடனான குழுவின் உதவிகரத்தோடு நடிகர்கள் அர்ஜூன், மீனா, நாகேஷ், மோகன்ராமன், ரமேஷ் அரவிந்த், மணிவண்ணன், வையாபுரி, வத்ஸலா, அஜய்ரத்னம் எனப் பெரிய கூட்டமே படத்தில் நிறைந்தார்கள். ஜோதிகா சின்னதொரு பகுதி தோன்றிச் சென்றார்.

திரைக்கதையின் பின்புலம் அதன் பாதிப் பங்கை வகிக்கிறது. கதாபாத்திரங்களின் குணமும் அவர்களுக்கிடையிலான முரணும் படத்தின் முக்காலே மூணு சதத்தை நிரப்பிவிடுகிறது. அழகான க்ளைமாக்ஸ் நோக்கி விரைந்தோடுகிறது படம் என்பது வஸந்தின் படங்கள் எல்லாவற்றிலும் மெய்படக்கூடிய கூற்று. மும்பை என்பதைக் கதைக்களமாக்கியதன் மூலம் சென்று பார்த்திராத நிலத்தை ரசிகனுக்கு மெல்ல ஒரு சுற்றுலா வழிகாட்டி போலப் படத்தின் ஆரம்பம் காட்சிப்படுத்தி வருகிறது. சம்பவங்கள் வளர்கையில் காண்பவனுக்கு மும்பை பரிச்சயமும் அன்னியமும் கலந்த பரவசமாகத் தோன்றத் தொடங்குகிறது.

இரண்டு பொது மனிதர்களுக்கிடையே அன்னியம் உடைந்து மெல்லப் பூக்கும் சினேகிதம் பெருநகரங்களில் மனிதர்களை இணைப்பதற்கென்றே ஒரே ஊர் ஒரே மொழி ஒரே ரசனை எனத் தொடங்கிப் பல உப நுட்பத் தகவல்கள் தோன்றுகின்றன. இவை யாவும் அவரவர் சொந்த நிலத்தில் சாத்தியப்படாது என்பது சற்றுத் தள்ளி நிற்கும் நிசம். சினிமாவுக்கென்றே வழக்கமாக நிலவக்கூடிய அதீதத்தை புனைவின் வழி நிசம் போலாக்குதல் என்பதெல்லாம் தேவைப்படாமல் இயல்பாகவே மெல்ல நிசமாகும் புனைவுத் தன்மை ரிதம் படத்தின் பெரும்பலம். சொல்ல முடியாத அறிவித்துக் கொள்ளாத காதலற்ற காதல் இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையே நிலவுகிறதை நன்கு பார்ப்பவர்களின் மனசுகளில் பதியச் செய்கிறார் வஸந்த், க்ளைமாக்ஸ் வரைக்கும் விலகியும் அடைந்தும் மறுபடி விலகியுமாய்த் தொடர்கிற காதலாட்டம் கடைசியில் ஒன்று சேர்வதோடு பூர்த்தியாகிறது.

சொல்லப்பட்ட விதம் ரிதம் படத்தைப் பேசுபொருளாக்குகிறது. வஸந்த் தனக்கென்று கைக்கொள்ளும் திரைமொழியும் அவரது மனிதர்கள் பேசிக்கொள்ளக்கூடிய சற்றே மிகை எதார்த்தம் கசியும் வசனங்களும் கதையின் ஓட்டத்தினூடே எவ்விதத்திலும் துருத்தாத நகைச்சுவையும் சின்னஞ்சிறிய மனிதர்களின் உபகதைகளும் ரிதம் படத்தின் பலங்கள்.

இரயில் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரம். அர்ஜூனின் அப்பா 35 வருடங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர்.ஒரு இரயில் விபத்தில் மீனா தன் கணவர் ரமேஷ் அரவிந்தையும் அதே விபத்தில் அர்ஜூன் தன் ப்ரியத்துக்குரிய ஜோதிகாவையும் பறிகொடுக்கின்றனர். இருவரும் சந்தித்துக் கொள்வது மும்பை பெருநகரத்தின் மெட்ரோ ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து ரயில் தவிர்க்கமுடியாத பிடிவாத யானையாகவே படமெங்கும் வலம் வருகிறது. இந்தியா எனும் பெரிய தேசத்தின் பாசத்திற்குரிய யானையும் ரயிலென்பதை நினைவில் கொள்ளமுடியும். பல கதைகளின் ரயிலைத் தவிர்த்தால் கதைகள் மாறும் என்பதே மெய்.

எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்பது யூகிக்கத் தேவையற்ற நிசம். அப்படி ஓபன் ரிஸ்க் உள்ள படங்களை இயக்குவது உண்மையிலேயே பெரும் சவால்தான். வஸந்த் அப்படியான படங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். வஸந்த் இந்தியத் திரை உலகத்தில் மிக அழகாகத் திரைப்பாடல்களைப் படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர். அவரது பாடல்கள் கேட்குமின்பத்தை சவால் செய்தபடி பார்க்கும் அனுபவமாய் விரிபவை. எந்த ஒரு பாடலையும் தனியொரு படமாகவும் அதே நேரத்தில் மெயின் பிக்சரின் ஓடுபாதையிலிருந்து விலகாமலும் ஆக்கித் தருவது அவரது மேதமை. இந்தப் படத்திலும் பஞ்சபூதங்களைப் பாடுபொருளாகக் கொண்டு வைரமுத்து எழுதி ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்துத் தந்த பாடல்களை வஸந்த் படமாக்கியதன் மூலம் தனதாக்கினார். அதிலும் தீம்தனனா பாடலும் காற்றே என் வாசல் வந்தாய் பாடலும் இன்றும் தொலைக் காட்சி சானல்களைத் திருப்பவிடாமல் கண்களைச் சிறையெடுக்கின்றன.வஸந்தின் பாடல்களில் ஒவ்வொரு வரியும் ஒரு குறும்படம் எனலாம்.தகும்.

காதலை அதற்குரிய மாண்புடன் படமாக்கியவர்களில் வஸந்த் ஒருவர். காதல் என்பது குடும்பத்திற்கு வெளியே நிகழும் அதீதம் அன்று. மாறாக அது ஒரு மேலதிக உறவு என்பதாகக் காதலுக்கான பிரதிவாதத்தை நிகழ்த்திய அழகிய திரைப்படம் ரிதம்.

 

 

https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறுசினிமா-64-ரிதம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறுகதை நூறு சினிமா: 65 – அபூர்வ சகோதரர்கள்

 

திரைப்பட நடிப்பு என்பதில் மட்டும் தான் நீங்கள் கடினமாக உழைத்தமைக்காகக் கூட விமர்சிக்கப் படுகிற ஒரே ஒரு துறையாக இருக்கும்.வேறு எங்கேயும் கடின உழைப்பென்பது தரமானதாகவும் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

– நிகோலஸ் கேஜ்
நடிகர் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்

நிகோலஸ் கேஜ் சொன்ன மேற்காணும் பழமொழிக்கு நிகராகப் பலமொழிகளைச் சொல்வதற்குரிய தகுதிகள் கமல்ஹாஸனுக்கும் உண்டு.
திரைப்படம் என்பது மெனக்கெடுவது எதற்காக என்பதன் வகைமைகள் தான் அவற்றை ஒன்றுக்கொன்று வேறுபடுத்துகின்றன. இயக்குநரின் மனதில் அல்லது கதாசிரியனின் மனதில் பூக்கிற ஒற்றைப் பூவை அப்படியே அவ்வண்ணமே படமாக்குவது எல்லா நேரங்களிலும் சாத்தியமற்றது.திரைப்படம் என்பது கலைகளின் கூட்டுக்களம். அது ஒற்றைக் கலையாகப் பரிசீலிக்கப்படுவது நல்லதோர் ஏற்பாடு.பெரிய கனியை உடைத்தால் கிட்டுகிற பல சுளைகளைப் போல் உள்ளும் புறமுமாய் ஒரு படத்தில் உறைந்திருக்கக் கூடிய உழைத்த கரங்களும் மனங்களுமாய்த் திரளும். கனவின் வலி திரையில் பெயர்க்க சினிமாவாகிறது. கரவொலிகளும் ஈட்டுத் தொகையுமாய் இணைந்து மீள்கையில் கலைஞன் உயிர்த்து அடுத்த படைப்பை நோக்கிச் செல்கிறான்.

கமல்ஹாஸன் சிங்கீதம் சீனிவாசராவ் இருவருக்கும் இடையே நல்லதோர் கூட்டின் வலு இன்றளவும் தொடர்கிறது.முன்னவர் நடிகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பெரிய முன் காலத்தில் பின்னவர் அறியப்பட்ட இயக்குனராகத் திகழ்ந்தவர் தான். இருவருமாய் இணைந்தளித்த பல படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாக இன்றளவும் நிலைக்கின்றன. ராஜபார்வை தொடங்கி மும்பை எக்ஸ்பிரஸ் வரைக்கும் கமல் படங்களின் வரிசையில் மிளிர்பவை சிங்கீதம் எடுத்தளித்தவை.

அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். திரைக்கதையைக் கமல்ஹாசன் அளிக்க வசனம் எழுதியவர் க்ரேஸி மோகன்.ஒளிப்பதிவு பிசி.ஸ்ரீராம்.எடிட்டிங் லெனின் விஜயன் நடித்தது கௌதமி ரூபிணி ஸ்ரீவித்யா மனோரமா நாஸர் நாகேஷ் ஜெய்சங்கர் டெல்லிகணேஷ் மௌலி ஆனந்த் ஆகியோர்

மூன்றுவேடப் படம். அப்பா கமல்ஹாஸன் சேதுபதி நியாய போலீஸ்.வில்லன்கள் கொல்கின்றனர்.அம்மா ஸ்ரீவித்யாவுக்கு விஷம் கொடுக்கின்றனர். இரட்டை மகன்களில் ஒருவன் ராஜா.இன்னொருவன் அப்பு விஷம் தரப்பட்டதால் உயரம் குன்றிப் பிறக்கும் பிள்ளை. ராஜாவை மனோரமா எடுத்து வளர்க்க ஸ்ரீவித்யாவோடு அப்பு மட்டும் ஒரு சர்க்கஸ் குழுவில் சேர்ந்து வாழ்கிறார்கள்.நால்வரில் ஒருவரான ஜெய்சங்கரின் மகளுக்கும் மெகானிக் ராஜாவுக்கும் காதல். நாலு பேரும் ஒவ்வொருவராகக் கொல்லப்பட உருவப் பிழை காரணமாக அத்தனை பழியும் அப்புவுக்குப் பதில் ராஜா மீது விழுகிறது. நாலாவது நபரான மெயின் வில்லன் நாகேஷை ராஜா முன்னிலையிலேயே கொன்றுவிட்டு கைதாகிறான் அப்பு.சுபம்.

பழிவாங்கும் கதை தான். சொன்ன விதமும் அடுத்தடுத்த கதை நகர்வுகளும் ரசிக்க வைத்தன. ராஜா கமலை காதலிக்கும் கௌதமிக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகள் உலர் நகைச்சுவையின் தோரணமாக அமைந்தன என்றால் அப்பு கமல் சர்க்கஸ் முதலாளி மௌலி இருவருக்கும் இடையே நிகழ்பவை எல்லாம் ஆழமாய்ச் செருகின. கிடைக்கிற இடத்திலெல்லாம் சிக்சர் செய்தார் க்ரேஸி மோகன். நாகேஷ் டெல்லி கணேஷ் உள்ளிட்ட அனுபவஸ்தர்களுக்குக் கிடைத்த சின்னஞ்சிறு வசனங்கள் காண்போரை நகைக்கவைத்தன.

ஸ்ரீவித்யா மற்றும் அப்பு கமல் இருவரின் உலகமும் ராஜா மற்றும் மனோரமா இருவரின் உலகமும் தனித்தனி இழைகளாக அடுத்தடுத்து பயணித்து ஒற்றை முடிவு நோக்கி விரைந்தன. மேற்சொன்ன உலர்தன்மையோடு ராஜாவின் உலகம் இருந்தது என்றால் ஆழச்செருகலாய் அப்புவின் உலகம் அமைந்தது.அப்புவுக்கும் மௌலி மகள் ரூபிணிக்கும் இடையே ஏற்படுகிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கொஞ்சம் தப்பினாலும் படமே கிழிந்திருக்கும். அதை கெட்டிக்காரத் தனமாக மாற்றியது கமலின் சாகசம்.

‘என்னடா இது?’ ‘இதாங்க ராஜா…’ ‘பாதிதான் இருக்கு மீதி எங்கடா!’ என்பது போன்ற இடங்களில் ஹாஸ்ய நாகேஷூக்காக பொறுத்தருளப் பட்டார் வில்லநாகேஷ்.

இன்ஸ்பெக்டராக வரும் ஜனகராஜூக்கும் கான்ஸ்டபிள் ஆர்.எஸ்.சிவாஜிக்கும் இடையிலான பந்தம் சிரிப்புவெடிகளின் மேல் விழுந்த தீப்பந்தமாகவே அதகளம் செய்தது. அதிகாரம் நிறுவனம் ஆகியவற்றில் காணப்படுகிற போலிப் போற்றுதல்களின் குறியீடெனவே ஆர்.எஸ் சிவாஜி அடிக்கடி உதிர்க்கும் ஸார் நீங்க எங்கயோ போயிட்டீங்க என்ற ஜோக் இன்றளவும் தொடர்கிறது.

வாலி தன் எழுத்து வாழ்வில் எத்தனையோ உயரசிகரங்களைப் பார்த்தவர் என்றாலும் இந்தப் படத்தில் இடம்பெறக் கூடிய உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் பாடல் அவருடைய பேனாவால் அவர்தொட்ட மகத்தான உச்சம். இளையராஜாவின் இசை பின்னணியின் மூலமாகவும் பாடல்கள் வழியாகவும் பெரிய கொண்டாட்டத்தை அர்த்தப் படுத்திற்று.

தன் கால்களை மடித்துக் கொண்டு அப்பு கமலாகத் தோன்றுவதற்கு கமல் முன்வைத்த உழைப்பும் மெனக்கெடலும் ஒரு நடிகர் தன் மெய்வருத்திச் செய்த படங்களின் வரிசையில் இதனை இருத்திற்று.

அபூர்வ சகோதரர்கள் செய்நேர்த்திக்காகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய எத்தனம்.
 

 

https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-65-அபூர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 66 – கூண்டுக்கிளி

 

1.ஒருவரின் தனிப் பாணி என்பது தனித்துவத்துடன் கலந்து கவர்கையில் நிகழ்வதன் தொடர்செயல்

(யாரோ)

2.ஒருவரது அபிமானம் ஏற்படுத்தக் கூடிய கவர்தலின் விளைவாக மக்கள் அவரைத் தொடரவும் அவரோடு சூழ்ந்திருக்கவும் அவர்களது ஆதிக்கத்துக்கு உள்ளாகவும் விரும்புகின்றனர்

(ரோஜர் டாவ்ஸன்)

இந்தியாவின் மாபெரும் படம் எது யாரைக் கேட்டாலும் ஷோலே தொடங்கி பாகுபலி வரை எவ்வளவோ படங்களைச் சொல்வார்கள். தமிழில் கூட சந்திரலேகா தொடங்கிச் சந்திரமுகி வரை எவ்வளவோ உதாரணப்பூக்கள். எல்லாவற்றின் பின்னாலும் திரைக்கதை தொடங்கி படமாக்கல் வரையிலான பிரம்மாண்டம் அதன் செலவுக்கணக்கினை முன்வைத்து கணக்கிடப்பட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை டி.ஆர்.ராமண்ணா இயக்கிய கூண்டுக்கிளி அதன் அரிதினும் அரிய நடிகர் பங்கேற்பின் காரணமாக இந்தியாவின் மாபெரும் படமாகிறது. எம்.ஜி.ராமச்சந்திரனும் சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த ஒரே படம்.

இரயிலின் முன் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ளத் துணிந்தான் ஜீவா. அவனைக் காப்பாற்ற அங்கே வருகிறான் தங்கராஜ். அவர்கள் பால்ய சினேகிதர்கள். “பள்ளிப் படிப்பாலும் பழகின தோசத்தாலும் மட்டும் நாம் ஒன்றுபட்டவர்களல்ல பகுத்தறிவின் பலத்தாலும் பணத்திற்கு நம்மை விற்காத பண்பாலும் நாம் ஒன்றுபட்டவர்கள்” என்கிறான் தங்கராஜ். யாரிடம் ஜீவாவிடம். ஜீவா யார். தங்கராஜின் ஆப்த நண்பன். இருவருடைய ஆரம்பகாலங்கள் ஒன்றுதான். என்ன நடந்தது ஏன் இப்படித் தற்கொலையை நாடிச் சென்றாய்? எனக் கேட்கும் தங்கராஜிடம் பதிலாகத் தன் முன் கதையை சொல்கிறான் ஜீவா. பெண் பார்க்கத் தன் குடும்பத்தோடு சென்று அவளைப் பார்த்த மாத்திரத்தில் மனம் மயங்குகிறான். கூடவே வந்திருக்கும் சினேகிதக்காரன் ஜீவாவை கிண்டல் செய்கிறான். “தலைநிமிர்ந்து உட்காரடா வீரத்தமிழனே என்னப்பா வெட்கமா?” தனக்கு நிச்சயமாகப் போகும் நல்மதியைப் பற்றி அங்கேயே வருணிக்கிறான் ஜீவா.” கணக்கான முகவெட்டு கம்பீரமான உடற்கட்டு”
67473175_2465518553499502_50061301283553
அடுத்த கட்டமாய் நிச்சயதார்த்தமும் கல்யாணமும் என்று பேசிவிட்டுத் தன் இல்லம் திரும்புகிற ஜீவா சதா சர்வகாலமும் கனா காண்கிறான். தானாகப் புலம்புகிறான் தனக்கு வரப்போகிறவளை எண்ணி எண்ணி. நண்பன் வந்ததுகூடத் தெரியாமல் எப்படிப் பிதற்றுகிறான் என்றால் “அதற்குப் பிறகு அவளே என் கண்ணானாள். அதற்குப் பிறகு பார்க்கின்ற பெண்களின் முகத்திலெல்லாம் அவளையே பார்த்தேன். அவளே என் காதானாள் அதனால் கேட்கும் குரல்களிலெல்லாம் அவள் குரலையே கேட்டேன்.” என்று உருகுகிறான் ஜீவானந்தம்.

விதி என்பது வேறுகதையைத் தன் வசம் வைத்துக் கொண்டு எல்லோர் வாழ்க்கையையும் மாற்றுகிற குரூரமான கதாசொல்லி அல்லவா..? நொடித்து குடும்பத்தோடு வேறெங்கோ கிளம்பிப் போய்விடுகின்றனர் பெண்வீட்டார். தன் காதல் ராணியைக் கண்டே தீர்வது என அலைந்து திரிகிறான் ஜீவானந்தம். தங்கராஜிடம் கதறுகிறான் “அடுத்த கிராமத்துக்குப் போனேன் அங்கேயும் அந்தக் கிளி இல்லை எவளுக்காக வீட்டை விட்டு வெளியே வந்தேனோ அவளை அடையாமல் வீடு திரும்புவதில்லை என்ற உறுதியோடு கால் போன வழியெல்லாம் நாளை மறந்து மாதத்தை மறந்து வருடத்தை மறந்து நடந்து கொண்டே இருந்தேன். என்ன நடந்து என்ன பிரயோசனம்? செயற்கை அழகால் கண்ணைக் கவரும் காகித மலர்களைத்தான் என்னால் காண முடிந்தது இயற்கை அழகோடு இனிய மணம் வீசும் அந்த வண்ண மலரை என்னால் காண முடியவில்லை. கடைசியில் வாழ்விலே அவளை மறக்க முடியாவிட்டாலும் சாவிலாவது அவளை மறக்கலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு இங்கே வந்தேன். அதிலேயும் எங்கேயிருந்தோ வந்து நீ மண்ணைப் போட்டு விட்டாயே.” இதுவரை கேட்டுக் கொண்டிருக்கும் தங்கராஜ்,

” ஹூம் உன் கதையிலே புத்திசாலித்தனம் இல்லையாவிட்டாலும் புதுமை இருக்கிறது. இதுவரை நானும் எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கதைகளிலெல்லாம் தனக்குப் பிடித்தமான காதலனைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்பதற்காகப் பெண்தான் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கஷ்டப்படுவாள், நீயோ அவள் போனால் இன்னொருத்தி என நினைக்காமல் இத்தனைவருட காலம் உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ளக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். ரொம்ப ஆச்சரியம் தாண்டா வா உனக்கந்தக் கனவுக்கிளி தானே வேண்டும், நான் கண்டுபிடித்துத் தருகிறேன்.”

இதை நம்பவில்லை ஜீவானந்தம். “வேண்டாம் தங்கராஜ் வீண் முயற்சி அப்போது அவள் பொந்துக்கிளியாய் இருந்தாள். இப்போது எவனிடம் கூண்டுக்கிளியாய் இருக்கிறாளோ, அதிலும் அன்று நீ பார்த்த தென்றலல்ல நான். எனக்காக உன் வீட்டு சன்னலைத் திறந்துவிட புயல் உள்ளே நுழையவிட்டால் உன் வீட்டின் அமைதியும் குலைந்துவிடலாம்.” என மறுக்கிறவனின் கை பற்றி தங்கராஜ் “புயலடிக்கும் போது வீட்டின் சன்னலை இழுத்து மூட எனக்குத் தெரியும் வாடா.” என்று அழைக்கிறான்

“வந்த பின் மூடுவதை விட வருவதற்கு முன்பே மூடுவது நல்லது.” எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே அவனைத் துரத்தி வரும் மக்களும் கான்ஸ்டேபிள் ஒருவரும் ஜீவானந்தத்தை மன ஒழுங்கின்றிச் செய்த சிறுசிறு பிழைகளை அடுக்கி ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார்கள். தன் வீடு திரும்புகிறான் தங்கராஜ்.

சாட்சிகள் இல்லை என்று ஜீவாவை விட்டு விடவே அவனை அழைத்து வந்து, தன் ஃபாக்டரி மேனேஜரிடம் கைகாலைப் பிடித்துக் கெஞ்சி ஜீவாவுக்கும் ஒரு வேலையை வாங்கித் தருகிறான் தங்கராஜ். தன் மனைவி ஊரிலிருந்து திரும்பும் வரை தனக்கு உணவளிக்கும் அம்மாவிடமே ஜீவாவுக்கும் உணவு ஏற்பாட்டை செய்து தருகிறான். தன் வீட்டின் அடுத்த போர்சனையே ஜீவாவின் குடித்தனத்திற்கு ஏற்பாடு செய்கிறான் தங்கராஜ். ஊருக்குச் சென்றிருக்கும் அவனது மனைவியும் மகளும் திரும்புகிறார்கள். தங்கராஜின் மகனைக் கொஞ்சுகிறான் ஜீவா. தங்கராஜ் வெளியே சென்றுவிட ஜீவா வென்னீர் கேட்கிறான் கொண்டு வரும் தங்கராஜின் மனைவி தான் தனது உயிரைவிட மேலாக மதிக்கும் காதல் கிளி என்பதைக் கண்ட மாத்திரத்தில் மயக்கமுறுகிறான். ஊரார் கூடிவிடத் தங்கராஜ் திரும்பி வரும்போது ஜீவா மயக்கம் தெளிகிறான். தங்கராஜின் மனைவி மங்களாவுக்கு முன்னர்த் தன்னைப் பெண் பார்க்க வந்தது ஜீவா என்பதே தெரியாது. வரனின் முகத்தைக்கூடப் பாராமல் தாய் தந்தையரின் ஆணைக்கிணங்கி பொம்மைபோல பெண் பார்க்கும் படலத்தில் இடம்பெற்று நீங்கியவள் அவள். ஆதலினால் அவளுக்கு ஜீவாவைத் தெரியவே தெரியாது ஜீவா ஏற்கனவே நோய்மையின் உச்சத்தில் உழலும் மனதோடு உறைந்திருப்பவன். வெளித்தோற்றத்துக்கு அவன் சாதாரணம் நோக்கித் திரும்பிவிட்டாற் போலத் தோற்றமளித்தாலும் உள்ளே அவன் மனம் இன்னமும் அமைதியுறவில்லை என்பது நிஜம், மங்களா ஒரு பாட்டுப் பாடேன்… உன் சங்கீதத்துலயாவது அவன் சஞ்சலம் தொலையுதான்னு பார்ப்போம் என்கிறான் தங்கராஜ். “ம்ஹூம் நான் மாட்டேன்” என்று மறுக்கிறாள் மங்களா. கற்றதைக் கரைச்சா குடிக்கப் போறே சும்மா பாடுன்னா சொல்ல வல்லாயோ கிளியே எனும் பாரதியார் பாடலைப் பாடுகிறாள். தன் மனம் தன்னைக் கொல்லாதா என்று ஏங்குகிறான் ஜீவா. அவனை அவனால் வெல்ல முடியவில்லை. சந்தர்ப்ப வசத்தால் ஜீவாவுக்குப் பதிலாகத்தான் சிறைக்குச் சென்று விடுகிறான் தங்கராஜ். தன் குடும்பத்தை ஜீவா சிரமேற்கொண்டு காப்பான் என நம்பும் அவனது நம்பிக்கை வீண் போகிறது. நிராசை ஜீவாவின் மதியைக் கெடுக்கிறது. சந்தர்ப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது மனிதன் மதங்கொண்ட களிறாகிறான். அவனது எண்ணம் புரிந்து அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள் மங்களா. சிரமத்தோடு தன் மகன் கண்ணனைக் காக்கிறாள்.

கண்ணனுக்கு நோய் உண்டாகி அவன் தவிக்கிறான். தன் ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறான் ஜீவா. கண்ணனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உதவி நாடி ஜீவாவை வேண்டி வரும் மங்களாவை வற்புறுத்தும் ஜீவாவுக்கு மின்னல் வெட்டிக் கண்பார்வை போகிறது. தங்கராஜ் சிறையிலிருந்து வெளியே வருவதும் நிகழவே ஜீவா மீது ஆத்திரமாகி அவனைக் கொல்வதற்காக ஓடுகிறான். அங்கே சொக்கி வந்து ஜீவாவை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறாள். நம்புவதற்கு ஒரு அளவுண்டு. நீ உன் நண்பனை ஏன் அளவுக்கு மீறி நம்பினாய் எனக் கேட்கும்போது தன் தவறு புரிந்து அவர்கள் இருவரையும் விட்டு விலகித் தன் மகன் கண்ணனையும் மங்களாவையும் சென்று சேர்கிறான் தங்கராஜ்.

கூண்டுக்கிளி எம்ஜி.ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி என்கிற இரண்டு பொருத்தமற்ற நடிப்புக் கரைகளுக்கு நடுவே கலந்து ஓடிய ஒரே கடலாம் நடிப்பாற்றலுக்காகவும் எப்போதைக்குமான ஒற்றை சாட்சியமாக நம் முன் நிகழ்ந்த படம். இதன் இசையில் தன்னால் ஆன மட்டிலும் புதுமைகளைப் புகுத்தி இசைத்திருப்பார் கேவி மகாதேவன். சிவாஜி மயக்கமுறும் காட்சி முழுக்க அந்தக் கால ஃப்யூஷன் இசை பொங்குமாங்கடலாய் வியாபிக்கும். மகாதேவ மந்திரஜால இசை என்றால் தகும்.

இன்னொரு மாமேதமை விந்தனுடையது. ஒரு காட்சியில் அண்ணன் என்ற உணர்வோடு காய்ச்சலில் கனன்றுகொண்டிருக்கும் ஜீவாவின் நெற்றியில் பற்றிட்டபடியே சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுமாறு எடுத்துரைப்பாள் மங்களா. அவள் மீதான தன் மனமறை இச்சையை சொல்லாமல் சொல்ல முயலுவான் ஜீவா. அந்த இடத்தில் வசனம் தமிழும் காதலும் இயலாமையும் தெறித்துப் பூக்கும் மின்பூக்களாகவே தோன்றும். கத்தி மேல் நடனம் என்றால் தகும்;

“மங்களா சிரிக்காமல் சிரிக்கும் அவள் செவ்விதழ்கள் சொர்க்கத்தின் வாசற்கதவுகள், பேசாமல் பேசுமவள் பேச்சு சொர்க்கத்தின் ப்ரேமகீதம்,தொட்டவுடன் எங்கேயோ தூக்கிச் செல்லும் அவள் ஸ்பரிசம். ஆஹா… அதுதான் சொர்க்கத்தின் சொல்லித் தெரிந்து கொள்ள முடியாத அர்த்தம். அதை என்னால் மறந்துவிட முடியுமா மங்களா” இதற்குப் பிறகுதான் மனதை மறைக்க முடியாமல் வெடித்துச் சிதறும் ஜீவா எனும் பிம்பம்.

தஞ்சை ராமையாதாஸ் எழுத்தில் “ராத்திரிக்கு புவ்வாவுக்கே லாட்டரி வாழ்க்கை லைட்டெரிய பணம்தானே பேட்டரி ராப்பகலா அலைஞ்சாலென்ன நாய் போலத் திரிஞ்சாலென்ன அந்தக் காலத்தின் சந்தோஷக் குத்தாட்டப் பாடல் கவர்கிறது.

தீபாவளி கொண்டாட்டத்தை முன்வைத்து வாங்க எல்லாருமே சேர்ந்து ஒன்றாகவே என்ற கவி காமு ஷெரீஃப் எழுதிய பாடல் கேட்பதற்குப் புத்திசையும் புதுக்குரலுமாக மிளிர்கிறதென்றால் ஆயிரம் தெறல்களாய் இருளிலிருந்து தொடங்கும் இப்பாடலின் படமாக்கல் அந்தக் காலகட்டத்தின் நவீனம்.

கூண்டுக்கிளி அடுத்த காலங்களில் நினைத்தே பார்க்க முடியாத நடிகசாகசம். எம்ஜி.ஆர்., சிவாஜி எனும் இருபறவைகளின் வாழ்வில் அபூர்வமாய்த் தோன்றிய மந்திரவாதம். இருவரின் ஒரே நிழல்.
 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-66-கூண்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 67 – கல்யாணப் பரிசு

 

நானொரு உலகைப் பற்றி கனா கண்டேன். அதை நான் ஒருபோதும் பார்க்கப் போவதில்லை என நினைத்திருந்தேன். பின்னொரு தினம் அதனுள் நான் நுழைந்தேன்.

-ஜெஃப் பிரிட்ஜஸ் (டிரான்)

ஸ்ரீதரின் அறிமுகம்

ஸ்ரீதர் தமிழில் விளைந்த முதல் தனித்துவ இயக்குநர் எனலாம். அது வரையிலான படங்களைத் திரையில் காண்பதற்கான ஒரு முன் தீர்மானத்தை தொடர் அபிமானத்தை நடிகர்களும் இசையமைப்பாளர்கள், கவிஞர் பாடகர்களும் ஏற்படுத்தி வந்தனர். முதன் முறையாக ஸ்ரீதர் படம் என்று கிளம்பி தியேட்டர் சென்ற ரசிகர்களைத் தயாரித்துக் கொண்டவர் ஸ்ரீதர். பின் நாட்களில் கே.பாலச்சந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஆர்.சி.சக்தி, ருத்ரய்யா, மணிரத்னம் என அந்தப் பட்டியல் நெடிதோங்கிற்று என்றாலும் அதன் முதற்பெயர் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் மெல்லிய உணர்விழைகளின் மூலமாக காதலின் ஆரம்பத் தயக்கங்களையும் நெடுங்காலத் தைரியமின்மையையும் காதலர்க்கிடையிலான புரிதல் கோளாறுகள் பிறமனிதர்களின் ஊடாட்டம் இன்னபிறவற்றாலெல்லாம் காதலர்களிடையே ஏற்படுகிற அத்தனை கருத்துவித்யாசங்களையும் மென்மையான திருப்பங்களாகக் கொண்டு தன் படங்களை அமைத்தவர். விதவிதமான பாத்திரங்களோ அல்லது மீறல்களோ அவர் படங்களில் தென்பட்டதைவிட யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற மாதிரியிலான கதைப்பின்னல்களைக் கையிலெடுப்பதைத் தொடர்ந்தார். குறிப்பாக முக்கோணக் காதல் கதைகள் ஸ்ரீதரின் விருப்ப சினிமாக்களின் விளைநிலங்களாகின. கல்யாணப் பரிசு ஸ்ரீதரின் இயக்கத்தில் முதற்படம்

 

07cp_kalyana_parisu-300x203.jpg

பாஸ்கர், வசந்தி மற்றும் கீதா

பாஸ்கரும் வசந்தியும் காதலர்கள். வசந்தியின் அக்கா கீதாவுக்கு அது தெரியாது. கீதா ஒருதலையாய் பாஸ்கரை விரும்பத் தொடங்குகிறாள். அக்காவுக்காகத் தன் காதலை மறக்கிறாள் வசந்தி. கீதாவுக்கும் பாஸ்கருக்கும் திருமணமாகிறது. பாபு பிறக்கிறான். கீதா நோய்வாய்ப்படுகிறாள். இறக்கும் தருவாயில்தான் பாஸ்கரும் வசந்தியும் முன்பு காதலித்த விசயமே அவளுக்குத் தெரிகிறது. முன்பே வசந்தியை அவள் திட்டியதில் எங்கே சென்றாள் எனத் தெரியாமல் போகிறது. கீதா இறக்கும் தருவாயில் வசந்தியை பாஸ்கர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று சொல்லி மரிக்கிறாள். வசந்தியைத் தேடி வரும் பாஸ்கர் அவளை நெடுங்காலமாய் ஒருதலையாய் காதலிக்கும் ரகுவின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் திருமணம் நிகழவிருப்பதை அறிந்து அங்கே செல்கிறான். திருமணம் முடிந்திருக்கிறது. கல்யாணப் பரிசாக பாபுவை அவர்கள் வசம் தந்துவிட்டு தானும் தன் காதலுமாய் நீங்குகிறான்.

இரண்டாம் உலகம்

பாஸ்கரின் நிஜ உலகத்தினுள்ளே சம்பத்தின் பொய்யுலகமும் ததும்புவதே கல்யாணப் பரிசு படத்தின் கதைக்கட்டுமானம்.
நிசம் நிறையவே கிடைக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு பரிசுத்தப் பொய்மை அபூர்வமானது. ஆகவே சம்பத்தின் உலகம் இங்கே முக்கியமானதாகிறது.

சம்பத்தின் முன் கதை

சம்பத் படித்தவன். ஆனால் படிப்பை முடித்தவனல்லன். விளைவை யோசிக்காமல் பொய் சொல்லி விடுகிற சுயநலவாதி. அவன் பாஸ்கரின் நண்பன் பாஸ்கர்தான் கல்யாணப்பரிசு படக்கதையின் நாயகன் என்றாலும் சம்பத்தின் கதையில் எதிரே வருகிற எல்லோருக்கும் இரண்டே வாய்ப்புகள்தான். ஒன்று சம்பத்தின் பொய்களைத் தெரிந்து நாளும் படபடத்துத் திரியலாம் அல்லது அவன் பொய்களை அறியாமல் அவற்றுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கலாம். பாஸ்கர் உள்ளிட்ட வெகு சிலரே அவனது பொய்களினுள்ளே வந்து செல்பவர்கள். பிற எல்லோருடைய சஞ்சாரமும் வெளியேதான்.

திட்டமிட்ட சதிகளல்ல சம்பத்தினுடையவை. அவன் போகிற போக்கில் அவிழ்த்து விடுகிற டூப்புகள் ஆரவாரம் அடங்குவதற்குள் அவற்றிற்கான பலாபலன்களை அவனுக்குத் தந்து விடுபவை. சோப்புக்குமிழிகளின் ஜீவிதமும் சம்பத்தின் பொய்களின் உயிர்த்தலும் ஒரே போன்றவைதான். அவனுக்குத் தான் செப்பிய பொய்களின்மீது எந்தப் பிடிப்பும் இருப்பதில்லை. அவை நேர்த்திக் கொடுக்கிற சொகுசுகளுக்குள் ஒய்யாரமாகத் திரிவதே அவனது வேலை. துளையிடப்பட்ட பலூனாய் வெடித்துச் சிதறுகையில் படாரென்று தரையில் வீழும் கணத்தில் அங்கே இருந்து எழுந்தோடுவதற்காகத் தன் அடுத்த பொய்யை விசிலடித்துப் பற்றிக்கொண்டு படபடக்கும் பொய்களின் ஸ்பைடர்மேன் தான் சம்பத். அவனுக்குத் தன் பழைய பொய்கள் குறித்து எந்தப் பயமும் இருப்பதில்லை. எடு அடுத்த பொய்யை ஏன் அப்டி செய்தேன் தெரியுமா என்பதிலிருந்து அதனை விரி. நம்பி விட்டார்களல்லவா போகிறவரை போகட்டும் என்று விட்டேத்தியாய் முன் நகர்கிற ஞானம் அவனுடையது.

மாலினி மணாளன்

மாலினியின் தந்தை அவளுக்குப் படித்த நல்ல வேலையிலிருக்கிற பட்டணத்து மாப்பிள்ளையை வரனாய்ப் பார்க்கிற சேதி தெரிந்ததும் நானே நல்வரன் என்று படிக்காத படிப்பை பார்க்காத வேலையை தனது என்று நிலைநிறுத்தி அவளைக் கலியாணம் செய்து கொள்கிறான் சம்பத். பட்டணத்தில் ஜாகை. தினமும் மாலினி சமைத்துத் தருகிற மதிய மாலை உணவுகளை கட்டி எடுத்துக் கொண்டு ஆளில்லாத பார்க்குக்கு வந்து சேர்பவன்தான் மட்டும் ஆடுகிற சீட்டாட்டத்தை பகல் உணவு வரை ஆடுவான். பிறகு லன்ச்சை முடித்துக் கொண்டு நல்ல தூக்கம் தூங்குவான். அப்புறம் எழுந்து ஃப்ளாஸ்கில் இருக்கிற காஃபி டிபன் இத்யாதிகளை உட்கொண்டானென்றால் சலிக்க அலுக்க வேலை முடித்த பாவனையில் ஏழு மணி வாக்கில் கிளம்பி வீட்டுக்குச் செல்வான். அங்கே யதேச்சையாக சந்திக்கும் தன் கல்லூரி நண்பன் பாஸ்கரைத் தன் வீட்டின் தனியறையில் தங்குவதற்காக உள்வாடகைக்கு அழைத்துச் செல்கிறான்.

பொய் நிஜம் மற்றும் சேல்ஸ் மேனேஜர்கள்

மன்னார் அண்ட் கம்பெனியில் சம்பத்தாகிய தான் தான் மேனேஜர் என்கிற தன் பெரும்பொய்யின் உப-பொய்யாக பாஸ்கரை அதே கம்பெனியின் சேல்ஸ் மேனேஜராகத் தன் மனதார நியமித்த சம்பத்தின் பொய்யுலகில் நடுநடுங்கியபடியே திரிகிறான் பாஸ்கர்.வினை எப்படி வருகிறது என்றால் அவர்கள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத மாலினியின் உறவுக்காரர் அவர்களை திருமணம் விசாரிக்க வீட்டுக்கு வருகிறார்.அவர் தான் சென்னையிலிருக்கக் கூடிய ஒரே மன்னார் அண்ட் கம்பெனியின் மேனேஜர் என்பது தெரியவருகிறது.பாஸ்கர் தான் மடும் தப்பி ஓடிவிடுகிறான். வந்த மாமன் மாலினியிடம் எச்சரித்துவிட்டுச் செல்கிறார்.அவர் சொல்வது சரிதான்.மன்னார் அண்ட் கம்பெனிக்கும் சம்பத்திற்கும் எள் நுனி அளவும் சம்மந்தம் இல்லை என்பது தான் நிசமாயிற்றே.

மனைவி மாலினியிடம் உண்மைகளை ஒப்புக்கொள்கிறவன் ஒரு மாதம் டைம் கேட்கிறான். அதற்குள் நல்லதோர் வேலையை அமைத்துக் கொள்வதாக சத்தியம் செய்து அப்போதைக்கு சமரசம் செய்து கொள்கிறான்.

அடுத்து அவன் எடுப்பது தான் அவதாரவிபரீதம்

எழுத்தாள அவதாரம்

இதுவரை தனது முகத்தைக் காட்டியிராத எழுத்தாளர் பைரவன் என்பதுதானே என்று தன் மனைவியிடம் அளந்து விடுகிறான். சென்ற பொய்யாவது பர்ஸனல். திஸ் டைம் தி பொய் இஸ் சோஷியல் ஆல்ஸோ அல்லவா மாலினி பாவம்.தன் கணவன் உண்மையாகவே எழுத்தாளன் தான் என்று நம்புகிறாள். தன் தோழிகளிடத்திலெல்லாம் பின் விளையப்போகும் சாத்தான் பூக்களைப் பற்றிக் கொஞ்சமும் எண்ணாமல் எழுத்தாளர் பைரவன் தன் கணவர் தான் என்று அகமகிழ்கிறாள்.

நேர்காணல் படலம்

தோழியர் எல்லோரும் வீட்டுக்கு வந்து அவனைச் சந்திக்கிறார்கள். எழுத்தாளர் பைரவனுக்கான அவர்களது ரசிகைகளின் கேள்விகளுக்குப் பொய்யை ஒரு அங்கி போலணிந்த சம்பத் அளிக்கும் பதில்கள் சகட்டு மேனிக்கு அமைகின்றன.ஒருவழியாக நேர்காணல் படலத்திலிருந்து
நீங்கித் தப்பித்தோன் பிழைத்தோம் என்று நிம்மதி ஆகிறான் சம்பத்

வந்தது யுத்தம்

எழுத்தாளர் பைரவனுக்குப் பாராட்டு விழா நடக்கப் போகிறது பொன்முடிப்பெல்லாம் வழங்கப் போகிறார்கள் என ஊரே திமிலோகப்படுகிறது.சம்பத் கலங்குகிறான். ஒரு பொய்யை சொல்லி விட்டு உள்பக்கமாய்த் தாளிட்டுக் கொண்டு சற்று நிம்மதியாக இருக்க விடுகிறதா இந்த உலகம் என்ற விசனத்தோடு என்ன நடக்கிறது என்பதை ஒரு கை பார்க்கத் துணிகிறான்.நான் போயி பாராட்டு விழாவுல கலந்துகிட்டு வந்துர்றேன் என்று எளிய முறையில் தானும் வந்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மாலினியை சமாளித்து விட்டு எங்கே ஊர்சுற்றி விட்டு மாலை செண்டு சகிதம் வீடு திரும்புகிறான்

கிழிந்த பொய்த்திரை

எப்படி நடந்தது என்று கேட்கும் மாலினியிடம் தன் மனதிலிருந்து பாரபட்சமில்லாமல் பலநூறு பொய்களை எடுத்து விரிக்கிறான்.ஏகமாய்ப் புளுகித் தள்ளுகிறான் பைரவன் சேவை நாட்டுக்குத் தேவைன்னாறு கமிட்டி சேர்மன் டூ அவர்ஸ் நான் பேசினேன் என்கிறான் பைரவன் எல்லாவற்றையும் கேட்ட மாலினி இந்த மாலைக்கும் செண்டுக்கும் எவ்ளோ குடுத்தீங்க என்று கேட்பதன் மூலமாய் முடித்து வைக்கிறாள்.
பிடிபட்ட சம்பத் உடல் நடுங்கி வீழ்கிறான்.

ஊர் ஊராய்த் தேநீர்

மனம் திருந்தினானா அல்லது இனிப் பொய்களுக்கு வழியில்லை என்பதால் மனம் மாறினானா என்று தீர்மானமாய்ச் சொல்ல முடியாது.டீ கம்பெனியின் ஏஜன்ஸி எடுத்து அவனும் மாலினியும் கைக்குழந்தையைக் கையோடு அழைத்துக் கொண்டு சொந்த வேனில் ஊர் ஊராய்ச் சென்று தேநீர் விற்று ஜீவனம் போற்றுகிறதாக முடிவடைகிறது சம்பத்தின் பொய் களைந்த கதை.

தனக்கென்று எந்த அறமும் அற்ற சம்பத் மாதிரியான மனிதர்கள் நம்மைச் சுற்றியெல்லாம் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை முற்றிலுமாகத் துண்டித்து விட்டு ஒரு உலகத்தை நம்மால் கற்பனை செய்துவிடவே முடியாது. நம்மையே இடுபொருளாக்கி நாம் செய்து பார்க்க விழையும் கேளிக்கையின் நாயகர்கள் சம்பத்கள் தானே பிறகெப்படி அவர்களை அகலுவதும் நீங்குவதும்

கதைக்குள் கதை

ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வு அளவுகடந்தது. தன் படத்தின் கதையில் எத்தனை சதவீதத்தை நகைச்சுவைக் காட்சிகளின் கரங்களில் ஒப்படைப்பது என்ற விஷயத்தில் அவர் கண்டிப்புக் காட்டியதே இல்லை. அவரது பல படங்கள் அதன் மையத் தன்மையைத் தகர்த்து அவற்றின் நகைச்சுவைக் காட்சிகளுக்காகவே காலம் கடந்து இன்றளவும் நினைவுக்கூரப்படுவதும் விரும்பப்படுவதுமாகத் தொடர்வதன் ரகசியமும் ஸ்ரீதரின் நகைச்சுவை உணர்வும் அதனை அவர் நம்பிய விதமும்தான். காதலிக்க நேரமில்லை ஊட்டிவரை உறவு என நிறைய உதாரணங்களைச் செப்ப முடியும் என்றாலும் கதைக்குள் கதையாகத் தன் முதல் படத்தில் அவர் வடித்து வைத்த மினியேச்சர் உலகம் அபாரமானது. இன்னும் எத்தனை காலமானாலும் தகர்க்க முடியாத பேரெழிலாக உறைந்திருப்பது.

கல்யாணப் பரிசு உணர்ச்சிப் பூர்வமான காதலை மறக்க முடியாத காதல் நாயகனின் சிலிர்க்க வைக்கும் கதையாக சொல்ல விழைந்த படம். மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஏ.எம்.ராஜா அதுவரை பாடகராக அறியப்பட்டிருந்தாலும் கல்யாணப் பரிசு மூலமாக அவர் இசை அமைப்பாளராகத் தோற்றமெடுத்தார். வாடிக்கை மறந்ததும் ஏனோ துள்ளாத மனமும் துள்ளும் காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட போன்ற காலத்தால் அழியாத பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பேனாவழி சாத்தியம் செய்தார் ஏ.எம்.ராஜா., ஜெமினி கணேசன், சரோஜாதேவி, கே.ஏ.தங்கவேலு, பி.எஸ்.சரோஜா, நாகேஸ்வரராவ் ஆகியோரின் தோன்றல்களினால் பரிமளம் பூத்தது கல்யாணப் பரிசு.

இவ்வாறாக ஸ்ரீதர யுகம் தோன்றியது. கல்யாணப் பரிசு காலகால வைரம்.
 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-67-கல்ய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 68 – சதுரங்க வேட்டை

 

சரியாக இருப்பதை விட கருணையோடு இருப்பதையே தேர்வு செய்யுங்கள்

-டாக்டர் வேய்னே டைய்யர்

நல்லவன் வாழ்வான் எனும் பதத்தை எள்ளி நகையாடுவதைப் போலத் தான் செய்தித் தாள்களைத் திறக்கையிலும் தொலைக்காட்சி சானல்களில் லயிக்கையிலும் மீண்டும் மீண்டும் நிகழ்வுகள் வரிசை கட்டுகின்றன. ஃப்ராட் அதாவது எத்தன் எனும் சொல் தூரத்தே இருக்கும் வரை மெலிதான புன்னகையை வரவழைத்து விடுகிறது. அதே சொல் எத்தனைக்கெத்தனை அருகே வருகிறதோ அனல் பூக்கிறது குருதி கசிகிறது. எத்தர்களால் எல்லாவற்றையும் ஏன் உயிரை இழந்தவர்களின் சரித்திரம் சாம்பலான ஏட்டிலெழுதப்படுகிற சாட்சியம்.

கத்தியைக் காட்டிப் பணம் பறிக்கிறவர்களை சாகசக் காரர்களாக சித்தரிக்கிற திரைப்படங்களின் வரிசையில் உண்மையாகவே ரகரகமாக தினுசு தினுசாக மற்றவர்களின் பணத்தை ஏமாற்றிக் கைப்பற்றியபடி அடுத்த அத்தியாயத்தை நோக்கிச் சிட்டாய்ப் பறந்து விடுகிற நிசமான சாகசவிரும்பி ஒருவனது கதை தான் சதுரங்கவேட்டை.  நீரள்ளுவோர்க்கு நீர். நிழல்தின்னுவோர்க்கு நிழல். நியாயம் தர்மம் எல்லாம் ஏட்டிலிருக்கிற சொற்கள்.எடுத்துக் கொள்வோரைப் பொறுத்து மாறலாம்.

ஒருவனது பேராசை அவனது அழிவுக்கும் அவமானத்துக்கும் வீழ்ச்சிக்கும் யாரால் அழைத்துச் செல்லப்படுகிறதோ அந்த நபர் அவமானங்களுக்கு அஞ்சாதவனாகவும் குற்றங்களில் கரைகண்ட மனிதனாகவும் இருந்துவிட்டால் அழிவுகள் அதிகரிக்கும்.பலரும் பாதிக்கப் படுவார்கள்.அடுத்தவனின் பேராசையை சிறு தூண்டிலாக்கி அவனது கைப்பொருளைத் தன்மீன்களாக மாற்றிக் கொண்ட காந்திபாபுவின் கதை தான் சதுரங்க வேட்டை. அவனது வாழ்வத்தியாயங்களே திரையின் கதை.

முதல் களப்பலியின் கதையிலிருந்தே காந்திபாபுவின் கதை தொடங்குகிறது.ஒரு ஊரை அதில் வசிக்கும் ஒரு கடை முதலாளியைக் கண்டறிந்து அவரிடம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தலை மண்ணுள்ளிப் பாம்பு நாலு கிலோவுக்கு யாரிடமாவது இருந்தால் பல கோடி ரூபாய்க்கு விலை போகும் எனவும் அதை ஒருவன் மதிப்பறியாமல் சிலபல லட்சங்களுக்குத் தரவிருப்பதாகவும் பேசாசையைத் தூண்ட அவரும் சப்புக்கொட்டிக் கொண்டு பையுள் பாம்பை வாங்கிக் கொணர்ந்து வீட்டில் வைத்துவிட்டு அல்லோலகல்லோலப் பட்டு உண்மையில் அதன் எடை கம்மி என்றறிந்து அதன் போஷாக்கான வளர்ச்சிக்காக என்ன செய்யலாம் என்று மண்ணுளி நலத்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கும் போது வெளியூரிலிருந்து வீடு திரும்புகிற மகனும் மனைவியும் சேர்ந்து வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டதாகக் கருதி அதனை அடித்தே கொன்று விடுவதோடு அண்ணாச்சியின் கனாவில் இடி விழுகிறது. 

sathuranga-vettai-300x300.jpg

தொழில்முறை ஒளிப்பதிவாளராகத் தன் கணக்கைத் தொடங்கிப் பின் அறியப்பட்ட நடிகரான இளவரசு பலவிதமான வேடங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிக வாழ்வின் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களில் ஒன்றை இந்தப் படத்தில் ஏற்று வழங்கினார்.ஏமாறுபவனின் அறியாமையை அதற்குண்டான துல்லியத்தோடு பிரதிபலிப்பது நடிகனுக்குச் சவாலான வெகு சில கடினங்களில் ஒன்று. இளவரசுவின் நடிப்பு ஒரு வேடத்தை எப்படி அதற்குண்டான வெட்டுக்கத்திக் கச்சிதத்தோடு அணுகவேண்டும் என்பதற்கான பாடக்குறிப்பைப் போலவே திகழ்ந்தது.

தான் யாரை ஏமாற்றுகிறோம் அதனால் அவர்கள் என்னவாகிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாத இரக்கமற்ற மனிதனாக இந்தக் கதையின் நாயகன் காந்திபாபு எப்போது தன் செய்கையின் விளைவறிந்து மனம் மாறுகிறான் என்பதே கதை.

உலக வரலாற்றின் சுவாரசியமே வெற்றிகரமான வேட்டையாடிகள் விதவிதமான காரணங்களுக்குப் பலியான கதைகள் தான். யாதொரு வேட்டையாடியும் நிரந்தரமாக வென்றதே இல்லை.களப்பலியாவது போரிலும் வேட்டையிலும் வெவ்வேறு இருத்தல்களை ஏற்படுத்தி விடுகின்றன.சதுரங்கத்தின் வேட்டைகளை அப்படியே வாழ்க்கையின் நகர்வுகளாக்கினால் ஆயிரமாயிரம் திரைக்கதைகள் கிடைக்கும்.யூகிக்க முடியாத கெட்டவனாக காண்பவர் அனைவரையும் வசீகரிக்கிற ஒருவனாக இருந்தால் மட்டுமே ஒருவன் மோசடிமனிதன் எனும் அந்தஸ்தை அடைய முடியும்.அவனது கதையறியாதவர்களுக்கு அவன் கனவான். கதை அறிந்தவர்களுக்கு அவன் ஃப்ராட்.பணம் சேர்த்துக் கொண்டிருக்கும் பெரிய மனிதன் என்பது அவனைப் பற்றி அவன் சொல்ல விழையும் அடையாள வாசகம்.

இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் அறியப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்ராஜ் எனும் நட்டி நாளை எனும் படத்தில் நடிகராக அறிமுகமான நட்டியின் நடிப்பாற்றல் சதுரங்க வேட்டை படத்தில் எல்லோர் கவனத்தையும் கவர்ந்து ஈர்த்தது..சதுரங்க வேட்டை படத்தை நட்ராஜ் எனும் நடிகரை நீக்கி விட்டு யோசிக்கவே முடியாது என்பது வெறும் புகழ்மொழி அல்ல.இந்தப் படத்தின் உள்ளே புகுந்து நட்ராஜ் செய்து காட்டிய சாகசம். ஒவ்வொரு குற்றத்திற்கான முகம் குரல் தொனி மொழி பார்வை ஏன் விரலசைவு வரைக்கும் ஒரே ஒரு காந்திபாபு என்பவன் விதவினோத அவதாரங்களை எடுப்பதன் மீதான காட்சி நம்பகத்தைக் கச்சிதமாக கையாண்டார் நட்ராஜ்.

குற்றம் நிரூபிக்கப் படாமல் விடுதலையாகும் காந்தி பாபு கோர்ட்டுக்குள்ளேயே சிறுதொலைவு நடந்து தனக்காகக் காத்திருக்கும் வாகனத்தை நோக்கி வருவார்.இது வரை எத்தனையோ வில்லத்தனங்களைப் பார்த்திருந்தாலும் அந்த நடையும் அப்போதைய புன்னகையும் அந்தப் படத்திலேயே அதற்கு முன்பின்னாய் வேறெங்கேயும் தோன்றிவிடாத மற்றொன்றாக வழங்கியிருப்பார் நட்ராஜ்

மனிதனுக்குப் பின்னாலிருக்கும் கதை வெற்றியோ தோல்வியோ அவன் சொல்லத் தொடங்கும் போது கொள்பவரின் வரவேற்பு மாறுகிறது.குற்றத்தை இழைத்துப் பிடிபட்டவனுடைய பின் கதை பத்திரிகைகளில் எழுதுவதற்கு சுவையானதாக இருக்கக் கூடும்.அவனிடம் பொருளிழந்தோருக்கு அது எரியும் நெருப்பில் எதெதையோ வார்த்தாற் போல எரிச்சலே தரும். இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பின் வசீகரம் சதுரங்க வேட்டை படத்தை அந்தக் காலத்தோடு உறைந்து விடாமல் அதனை அடுத்த நதிகளிலும் படர்த்திக் கொண்டே சென்றது.தன் முதல் படத்தை இயக்கிய ஹெச் வினோத் கச்சிதமான வேகம் குன்றாத படமாக இதனைத் தந்தார்.

தமிழில் அபூர்வமான இறுகிய நகைச்சுவை வகை படங்களில் சதுரங்க வேட்டையைக் குறிப்பிடலாம். நடிகர்கள் தேர்வும் அவர்களது வழங்கல் விதமும் படத்தின் எந்தக் கட்டத்தையுமே அலுப்பின்றி நிகழாமல் நிகழ்ந்தாற் போன்ற தன்மையைக் காண்பவரிடத்தில் நேர்த்தின.வசனம் இசை ஒளிப்பதிவு போன்ற பலவும் அமைந்து பெருகி அழகான படமானது

சதுரங்க வேட்டை: தன்மீன் தூண்டில்
 

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-68-சதுர/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா:69 – எந்திரன்

 

தேவையானதும் போதுமானதுமாக அமையும்போது தொழில்நுட்பத்தின் பெயர் அற்புதம்

-ஆர்தர் சி க்ளார்க்

சுஜாதா எழுத்தின் உச்சத்தை ஆண்ட தமிழின் சூப்பர் ரைட்டர். அவரது இரட்டைத் தொடர்கள் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ என்ற தலைப்புகளில் ஆனந்தவிகடன் இதழில் வெளியாகித் தமிழ்வாசகர் பரப்பில் பலரைக் கவர்ந்தன. அந்தக் கதை எதிர்காலத்தில் நிகழ்வதாக எழுத்தேற்பாடு. அதில் முக்கியப் பாத்திரமாக ஒரு எந்திர நாய் வரும். அதன் பெயர் ஜீனோ. அது பேசும். படிக்கும் எழுதும் ஓரளவுக்கு எல்லாம் வல்ல ஜீனோவாக அதன் உருவாக்கம் அமைந்தது. இன்றிருக்கும் உலகமல்ல எதிர்கால உலகம். அதனை ஒரே கூரையின் கீழ் ஜீவா என்ற தலைவர் ஆண்டுவருவார். அவரது அடியொற்றிப் பார்க்கும்போதுதான் அவரும் ஒரு புனைவு பிம்பம் மட்டுமே என்ற நிசம் வசமாகும். இப்படியான கதையில் ரோபோநாய், ஜீனோ என்பதை மனிதவுரு ரோபோ சிட்டி என்று மாற்றி வார்த்த புனைவின் ஆரம்பமே எந்திரனின் விதையாயிற்று. சுஜாதாவின் ஒரு பாத்திரம் வேறொன்றாக மாற்றம் பெற்றதே ஒழிய காகிதத் தொடர்கதை கொஞ்சம்கூடத் திரைவசமாகவில்லை. இரண்டும் வேறு வேறுகளே.

மனிதனால் வெல்ல முடியாதவைகளில் ஒன்று மரணம் அடுத்தது பொறாமை. வசீகரன் தன் உருவத்திலேயே சிட்டி என்ற ரோபோவைப் படைக்கிறார். அவருடைய காதல் தலைவி சனா. சிட்டி ரோபோ நல்ல ரோபோ என்பதிலிருந்து கெட்ட ரோபோ என்று ஆகிறது. அதைவிட சனாவைக் காதலிக்கிறது. தன் காதல் ஈடேறுவதைவிட வசீகரன் சனா காதலால் இணையவிடாமல் தடுக்கிறது. கடைசியில் மனிதன் வென்றெடுத்த இயந்திரத்தைத்தானே அழித்து நீதிபரிபாலனத்தை நிலை நாட்டுகிறான்.

ரஜ்னி காந்த் எனும் சூப்பர் பிம்பத்தின் அதிகம் தாண்டிய உயரம் அனேகமாக இந்தப் படம். மெனக்கெடல் வணிகம் பாராட்டு வெற்றி என எல்லா விதங்களிலும் குறையேதுமின்றி விளைந்த வெற்றி எந்திரனுடையது.

 

MV5BMTMzMDE2MDg0N15BMl5BanBnXkFtZTcwNTc0

ஐஸ்வர்யா ராய், டானி டென்ஸோங்க்பா இருவரும் ரஜினிக்கு இணையான கதாபாத்திரங்களை ஏற்றாலும்கூட வில்லனாக மாறிய சிட்டி ரோபோ ரஜினிதான் எல்லோரையும் கவர்ந்தார். காணமுடியாத பழைய வில்லவருகையாகவே சிட்டியின் வருகை நிகழ்ந்தேறியது. அவ்வப்போது தானொரு பழைய வில்லன் என்பதைத் தன் கதாபாத்திரங்களின் குணாம்சங்களின் வழியாக நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் சாதுர்ய நடிகர்தான் ரஜினி. சந்திரமுகி படத்தில்கூட வேட்டைய மகாராஜாவாக அவர் தோன்றக்கூடிய காட்சிகள் அவரது ரசிகர்களின் ஆரம்பக் குதூகலங்களை மீட்டெடுப்பதற்கான உத்தியாகவும் புரிந்துகொள்ளத்தக்கதே.

ரஜினியைத் தாண்டி தொழில்நுட்பம் இந்தப் படத்தின் அனாயாசமாக அமைந்தது. ஷங்கரின் திரைத் தோன்றலும் கணிணி பூர்வமான திரைப்பட உருவாக்கங்களும் ஒரே சமயத்தில் ஆரம்பமானவை என்பதால் ஷங்கர் தன் படங்களில் ஆன மட்டும் அவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று முயன்று பார்ப்பார். பிற்காலத்தில் யூகிக்க முடியாத மற்றொரு கதையோடு எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பேரில் உருவானது வரைக்கும் எத்தனையோ சாட்சியங்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லாம் நன்றாக அமைந்தது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் வைரமுத்துவின் தமிழும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஹரிஹரன் உள்ளிட்டோரின் குரலும் மெருகேறி மிளிர்ந்ததில் பாடல்கள் அபாரமாய் ரசிக்கவைத்தன.

பிரம்மாண்டம் என்பதன் ஒரு வகைமை யூகிக்கக்கூடிய கதையின் யூகிக்கமுடியாத நிகழ்வுகளைப் படமாக்குவது. அடுத்தது யூகிக்கமுடியாத கதையை நேரடியாகப் பெயர்த்தெடுப்பது. ஆங்கிலப் படங்கள் பெருமளவு முதல்வகையினைச் சார்ந்தவை. ஷங்கர் எடுத்த எந்திரன் இந்தியத் திரைப்படங்களில் அன்னியத் தன்மையோடு முயலப்பட்டு வெற்றி பெற்ற பெரிய படம். அந்தவகையில் இந்தப் படத்தின் இடைவேளைக்கு அப்புறமான கதை நகர்வு சவாலாகவே அமைந்தது எனினும் சோடை போகவில்லை.

வெளிநாட்டுப் படங்களின் ஓடுபாதையில் தானும் தன்னை நுழைத்துக்கொண்டு நிகழ்ந்தவகையில் எந்திரன் இந்தியப் பெருமிதம்.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா69-எந்த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா:70 – பசி

வறுமை என்பது வன்முறையின் மோசமான வடிவம்

-மகாத்மா காந்தி

ஷோபாவுக்கு நடிக்கத் தெரியாது. தன்னை அகழ்ந்து கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி நியாயம் செய்யத் தெரியும். பாத்திரத்தில் தன்னை நிரப்பிக் கொள்கிற தண்ணீர் போலவே தன் நடிப்பாற்றலால் கதைகளை சிறப்பிப்பது கலையின் தர்மம். ஷோபா குறுகிய காலமே நடிக்க வாய்த்தாலும் தமிழ்த் திரை உள்ளளவும் பேரும் புகழும் நிலைத்திருக்கும் வண்ணம் அவரது கலைப்பங்கேற்பு திகழ்ந்தது.

அபூர்வமான நடிகை என்பதைவிட அபாயகரமான நடிப்பாற்றல் கொண்டவர் என்றால் பொருந்தும். எந்தக் கதாபாத்திரமும் ஒற்றைத் தன்மை கொண்டதல்ல. ஒரு பாத்திரத்தை சுவர்ப்படம்போல மனங்களில் எழுதுவது சுலபம். ஆனால் ஷோபா முப்பரிமாணம் கொண்ட சிலைக்கு உயிர்தருகிறாற்போல் மாயம் செய்பவர். வீட்டுக்கு வீடு வாசப்படி, ஏணிப்படிகள், சக்களத்தி, முள்ளும் மலரும் உள்பட பல உதாரணங்கள். ஷோபாவின் ஆற்றல் சிற்சில அத்தியாயங்களாய்ச் சுருங்கி விடுவதல்ல. அது ஒரு சகாப்தம்.

துரை எழுதி இயக்கியது பசி திரைப்படம். கே.பாலச்சந்தரின் அரங்கேற்றம் படம் தந்த பாதிப்பு ஒருவிதம் என்றால் பசி இன்னும் முகத்துக்கு நேரே வீசப்பட்ட பந்து எனலாம். 1979 ஆமாண்டு வெளியாகி தேசிய விருதுகளைப் பெற்ற படம். இசை சங்கர் கணேஷ் . ஒளிப்பதிவு ரங்கா. நடிப்பு ஷோபா, விஜயன், தாம்பரம், லலிதா, டெல்லிகணேஷ், நாராயணன், செந்தில், சத்யா, ஜெயபாரதி மற்றும் பலர்.

இது சென்னையின் கதையல்ல. மெட்ராஸின் கதை… பம்பாய் போன்ற எத்தனையோ நகரங்கள் பிறவூர்களிலிருந்து குடியேறியவர்களை தனியே ஒதுக்குவது நகரமாக்கலின் இயல்பு. மெட்ராஸ் மட்டும்தான் தன் படிப்படியான விரிவாக்கத்தினூடாக மண்ணின் மைந்தர்களை ஓரங்களுக்கு அனுப்பியது. மெட்ராஸாக இருந்த சென்னையின் விஸ்தீரணத்தை தரிசிக்க பதிவாக்கப்பட்ட வாய்ப்பாகவும் பசி திரைப்படம் விரிகிறது.

பசியின் கதையில் முனியன் வள்ளியம்மாவுக்கு (டெல்லிகணேஷ் தாம்பரம் லலிதா) 7 பிள்ளைகள். கிஷ்ணன் மூத்த மகன் படித்தவன். ஆனால் குடும்பத்தைக் காப்பாற்றவில்லை. தன் விருப்பப்படி ஒருவளைத் திருமணம் செய்து கொண்டு தனியே சென்றுவிட்டவன். மூத்த மகள் குப்பம்மா (ஷோபா)தான் குடும்பத்தைத் தாங்குபவள். ஒவ்வொன்றும் ஒரு தினுசு. எதற்கெடுத்தாலும் பொய் சத்தியம் செய்தபடி எஸ்கேப் ஆவான் ஒருவன். இன்னொருவன்தான் தான் படித்து தாயை காப்பாற்ற போவதாக முழங்குவான். இருப்பதில் பெரியவன் ஒருத்தன் பல வேலைகள் செய்பவன். தான் மாத்திரம் தனியே காசு பார்த்துக் காசு சேர்க்கும் சமர்த்து தினமும் சம்பாதிக்கும் ஏழு ரூபாயில் நாலு தனக்கு மூன்று தன் குடும்பத்துக்கு என்று அராஜகநீதி பரிபாலனம் செய்யும் தலைவன் தகப்பன் முனியன். தன் இஷ்டத்துக்கு வாழ்பவர். மதுதாசன்.

தந்தையற்ற குடும்பத்தின் மூத்த மகள் குமுதா(ப்ரவீணா பாக்யராஜ்). அவளைப் பாலியல் தொழில் செய்து பொருளீட்டி வரும்படி கட்டாயப்படுத்துகிறாள் அவளைப் பெற்றவள். தன்னைப் போல் தன் தங்கையும் பலியாகிவிடக் கூடாதென்பதற்காகப் பல்லைக் கடித்தபடி தாயின் நிர்ப்பந்தத்தை பொறுத்துக் கொள்கிறாள் குமுதா. தினமும் முனியனின் ரிக்சாவில் தான் அவள் பயணங்கள். முனியனின் குடும்பம் மீது குமுதாவுக்கு ஏற்படுகிற பரிவினால் அவள் மனதார அவர்களுக்கு உதவ நினைக்கிறாள்.

செல்லம்மாவோடு தானும் குப்பை பொறுக்க செல்கிறாள் குப்பம்மா… அது அவர்கள் குடும்பச்செலவுகளை ஓரளவுக்கு சமாளிக்க உதவுகிறது. செல்லம்மா மூலமாக அறிமுகமாகும் லாரி ட்ரைவர் ரங்கனுக்கு குப்பம்மா மேல் ஈர்ப்பு உருவாகிறது. அது மெல்ல வளர்கிறது. ரங்கன் தானறிய நேரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வலிய குப்பம்மாவுக்கு உதவுகிறாற்போல் அவளின் நன்மதிப்பை பெறுகிறான். குடி போதையில் வரும் முனியனை காவலர்கள் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுவிட ஜாமீனுக்கு யாரும் முன்வரவில்லை. சைக்கிள் கடைக்காரன் நேரடியாகவே குப்பம்மாவைத் தன் ஆசைக்கு இணங்கினால் தன்னால் ஜாமீன் தர முடியும் என்று நிர்ப்பந்திக்கிறான். அவனை ஏசிவிட்டு நகர்கிறாள் குப்பம்மா. அவளைத் தேடி வந்து தான் உதவுவதாக சொல்லிச் செல்லும் ரங்கன் சொன்னாற் போலவே முனியனை மீட்டு அழைத்து வருகிறான். குப்பம்மாவுக்கு அவன் மீது நன்றியுணர்ச்சி பெருக்கெடுக்கிறது. அவனைத் தேடிச் சென்று நன்றி கூறுகிறாள்.

 

MV5BNDczYmVjZGQtZjk0MS00ZmJmLTgxMDEtODA4

காரசாரமாய்க் கோழி பிரியாணி வாங்கி வருமாறு மகளிடம் கேட்கிறார் முனியன். அவருக்குக் காய்ச்சல் நெருப்பாய்க் கொதிக்க நீ வீட்டிலேயே இரு என்று கிளம்பி வருகிறாள். ஓட்டலில் தற்செயலாக சந்திக்கும் ரங்கன் குப்பம்மா வீட்டார் அனைவருக்கும் பிரியாணி வாங்கித் தருகிறான். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும் குப்பம்மாவைத் தானே அழைத்துச் சென்று வீட்டருகே விடுவதாக அழைக்கிறான். ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும் என்று அவளை அழைத்துச் சென்று தன்னைப் பற்றிய அவளது அபிப்ராயத்தைக் கேட்கிறான். அவள் நீ என்னப் பொறுத்தவரைக்கும் நல்லவரு என்கிறாள். அவளைப் பேசி வசியம் செய்கிறான். தன் ஆசையை அவளிடம் தெரிவிக்கும் ரங்கனிடம் கடைசிவரைக்கும் என்னை கைவிட்டுற மாட்டியே எனக் கேட்கிறாள். அவன் அதனை ஆமோதிக்கிறான். குப்பம்மா ரங்கனை நம்பி அவனது ஆசைக்கு இணங்குகிறாள்.

குப்பம்மா யாருடனோ லாரியில் வந்து இறங்கியதைப் பார்த்து அவளை விசாரிக்கிறாள் வள்ளியம்மா. நடந்ததை அவளிடம் மறைக்காமல் சொல்கிறாள் குப்பம்மா. அதனைத் தாளாமல் வள்ளியம்மா ரயிலில் விழுந்து சாகிறாள். ரங்கன் திருமணமானவன் என்பது பின்னால் தான் தெரிய வருகிறது. குப்பம்மா கர்ப்பமாகிறாள். தாய்மாமன் வந்து தன் தங்கை சாவுக்கு அப்பாலாவது உண்மையை சொல் எனக் கேட்டும் குப்பம்மா வாய் திறக்க மறுக்கிறாள். சைக்கிள் கடைக்காரன் தூண்டலில் ஒருவன் சாட்சி சொல்ல எல்லோரும் பெட்ரோல் பங்கில் இருக்கும் ரங்கனைத் தேடிச் சென்று உதைக்கிறார்கள். அங்கே வரும் குப்பம்மா ரங்கனுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுக்கிறாள். எல்லோரும் அவளைத் திட்டுகிறார்கள். ரங்கன் தப்பினோம் பிழைத்தோமென வீடு திரும்புகிறான்.

குப்பம்மாவைத் தனியே சந்தித்து மன்னிப்புக் கோருகிறான் ரங்கன். அதற்கு அவள் அவனிடம், “கைவிட மாட்டேன்னு சொன்னியே கன்னாலமாய்டிச்சின்னு சொன்னியா… உன்னைய நான் மன்னிச்சு என்னய்யா இனியாச்சும் என்னை மாதிரி இன்னொரு பொண்ணை ஏமாத்தாம இருய்யா”எனக் கேட்கிறாள். தான் வேண்டுமென்று செய்யவில்லை என்று அவளிடம் சமாதானம் சொல்கிறான் ரங்கன். அது ஏற்கமுடியாத சமாதானம் என்பது அவனுக்கும் தெரியும். மெல்ல அந்தப் பகுதிக்கு வருவதையே நிறுத்திக் கொள்கிறான் ரங்சன்.

காலம் செல்கிறது. குப்பம்மாவும் குமுதாவும் நட்பாகின்றனர். குப்பம்மாவுக்கு உதவுவதற்காகத் தன் நண்பரைச் சந்திக்க செல்லும் குமுதா கைதாகிறாள். குப்பம்மா எத்தனையோ முயன்றும் அவளால் ரங்கனை சந்திக்க முடியவில்லை. வழியில் வலி கண்டு சாலையில் மயங்குகிறவளை அக்கம்பக்கத்தார் குடிசைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்க்கையில் குழந்தை பிறந்ததும் குப்பம்மா இறந்துவிடுகிறாள். குப்பம்மா கையிலிருந்த துண்டுச்சீட்டோடு ரங்கனைத் தேடிச் செல்பவர் மூலம் விபரமறிந்து ரங்கனின் மனைவியும் ரங்கனும் தேடி வரும்போது தெருவில் குப்பம்மாவின் சடலமும் அருகே அழுதபடி ஒரு கிழவியின் கையில் குழந்தையும் இருப்பதைப் பார்த்து குழந்தையைத் தான்வாங்கிக் கொள்கிறாள் ரங்கனின் மனைவி. படம் நிறைகிறது.

“ஒரு டீ கடனாகக் கொடு…” என்றதும் கையை வருடும் டீக்கடைக்காரன். “ஜாமீன் வேண்டுமா என் ஆசைக்கு இணங்கு” என்று நேர் நிர்பந்தம் செய்யும் சைக்கிள் கடைக்காரன்.தேவைக்கு உதவுகிறாற் போல் நடித்துத் தன்னைப் பற்றிய நற்பிம்பத்தை உருவாக்கி அதற்கு விலையாகப் பெண்மையைக் களவாடும் லாரி ட்ரைவர் ரங்கன். “ஊர் உலகத்ல இல்லாததா இது” என்று தன் பிரியாணியே தனக்கு பெரிது எனத் தின்னும் தகப்பன் காதல் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று பெற்ற தாயோடு நாலு வார்த்தை பேசுவதற்குக் கூடத் தயங்கி “இந்தா பாரு… இந்த வட்டத்துக்கே நீ செயலாளரா இருக்கே குடிச்சுட்டு உள்ள போனது உங்கப்பன்னு தெரிஞ்சா காறி துப்புவாங்க… கெளம்பும்மா அப்பறம் அவ ஃபீல் பண்ணுவா” என்று துரத்தும் மூத்த மகன் கிஷ்ணன்

வித விதமான ஆண்மிருகங்களைத் தன் கதையெனும் வெட்டுக் கத்தி கொண்டு தோலுரிக்கிறார் துரை. குமுதா வந்து குப்பம்மாவுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்கும் அந்த நண்பன் கதாபாத்திரம் மட்டும் ஆறுதலளிக்கும் ஆடவனாக முன் நிற்கிறது. இறுதியில் ஷோபா தன் குழந்தையோடு வாழ்வதாகப் படத்தை முடிப்பதில் இயக்குனருக்கு என்ன மனத்தடை என்பது தெரியவில்லை. பெண்ணின் கதையை விவரிக்கும்போது அவளைக் கடைசியில் சாகடிப்பது பசி போன்ற பல முக்கியமான படங்களில் காணவாய்ப்பது சமூக அவலத்தின் சாட்சியமா அல்லது அதுவும்கூட ஆண் மனோபாவமா என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

தன் படத்தில் காட்டுகிற மனிதர்களின் உலகத்துக்குச் சென்று அவர்களை அழைத்து வந்தாற்போன்ற பாத்திரத் தேர்வு தாம்பரம் லலிதா டெல்லிகணேஷ் விஜயன் சத்யா என எல்லாருமே நடிப்பென்றே சொல்லவியலாத நிசத்தை வார்த்துத் தந்தனர். ஷோபா தன் வாழ்கால வலுவெல்லாம் திரட்டி இயங்கினாற்போல் பேருருக் கொண்டார். மெட்ராஸ் பாஷை என்று தனித்துவமாக அறியப்படும் தமிழின் தனித்த வழங்குமொழியை சந்திரபாபு, நாகேஷ் உள்பட சிலரே அதன் கச்சிதத்துக்குள் பேசியிருக்கின்றனர். அந்த வரிசையில் ஷோபா மெட்ராஸ் வட்டாரமொழியைப் பேசியது அற்புதம். பசி ஷோபாவின் ருத்ரதாண்டவம் ரங்காவின் ஒளிப்பதிவும் ஷங்கர் கணேஷின் இசையும் சிறந்து விளங்கின.

குறிப்பாக ஷங்கர் கணேஷின் பின்னணி இசை மெல்லிய போதையின் கிறக்கத்திலிருந்து கொள்ளிப் பசியின் மயக்கம் வரை மனோபாவங்களை உருவாக்கியும் கலைக்காமலும் இசைத்தது. படத்தின் பெரிய பலம் இதன் வசனங்களும் அவற்றை உச்சரித்த குரல் தன்மைகளும் சேர்த்துச் சொல்லலாம். ஆங்காங்கே தென்படக்கூடிய போஸ்டர்கள் குறிப்பாக நியாயம் கேட்கும் காட்சி ஒன்றில் பின்னணியில் நெஞ்சுக்கு நீதி என்ற போஸ்டர் காணப்படும்.

க்ளைமாக்ஸில் ஷோபா இறந்து கிடக்கும் இடத்தில் வந்தமரும் ரங்கனின் மனைவி குழந்தையுடன் யாரென்றறியாத கிழவி கையறு நிலையில் விழிக்கும் ரங்கன் இத்தனை பேரையும் உள்ளடக்கிய காட்சிப் பின் புலச்சுவரில் திசை மாறிய பறவைகள் என்ற படத்தின் போஸ்டர் . சொல்லிக் கொண்டே செல்லலாம் பசி படத்தின் உள்ளார்ந்த சிறப்புக்களை. மனிதர்களை உரித்து நிசத்தை முன் நிறுத்தியவகையில் பசி உன்னதமான திரைப்படம்.

காலங்கடந்து ஒளிரும் திரைவைடூரியம்.

 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா70-பசி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 71 – ஹரிதாஸ்(16.10.1944)

 

நாடகம், கலை, இலக்கியம், திரைப்படம், பத்திரிக்கை பதாகைகள் மற்றும் சாளரக் காட்சிகள் ஆகிய யாவையும் நமது புரையோடிய உலகின் அனைத்து வெளிப்பாடுகளையும் சுத்தப்படுத்தி ஒரு தார்மீகமான அரசியல் மற்றும் கலாச்சார யோசனையில் ஆழ்த்த வேண்டும்.

-அடால்ஃப் ஹிட்லர்

செல்வந்தன் ஹரிதாஸ் முதலில் மனைவி பேச்சைக் கேட்டுக் கொண்டு தாய் தந்தையரை புறந்தள்ளுகிறான். பிறகு ரம்பா எனும் நடனமாதுவின் பரிச்சயம் கிடைத்ததும் அவளுக்காக மனைவியை ஏய்க்கிறான். ரம்பாவோ தன்னை அவமானப்படுத்திய ஹரிதாஸின்  மனைவி லட்சுமியைப் பழிவாங்க திட்டம் தீட்டி முதலில் தாய் தந்தையரிடமிருந்து ஹரி லட்சுமி இருவரையும் பிரித்து பிறகு ஹரியின் சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்கிறாள்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து லட்சுமியோடு செல்வந்தத்தை இழந்த ஹரிதாஸ் வெளியேறுகிறான். திடீரென முனிவர் தோன்றுகிறார். அவரை ஹரி ஏளனம் செய்கிறான். அவனது கால்கள் துண்டாகின்றன. அவன் முனிவரைக் கெஞ்சுகிறான். அவனது தாயும் தந்தையும் அங்கே வருகையில் முனிவர் மறுபடி அவனுக்குக் கால்களை அளிக்கிறார். தாய் தந்தை ஹரி மூவரும் சேர்கிறார்கள். பிறகு லட்சுமி தன் தந்தை வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு போய்விடுகிறாள்.

 

Haridas_1944.jpg

அவரோ அவளை நீ உன் கணவனோடுதான் இருக்க வேண்டுமென்று அனுப்பிவிட மறுபடி வந்து மூவரோடு இணைந்து நால்வராகின்றனர். எல்லா சொத்துக்களையும் அரசர் ரம்பாவிடமிருந்து பறித்து மாதவிதாஸிடம் வழங்குகிறார். ஹரிதாஸ் தன் சொத்துக்களை தானம் செய்துவிடு என மாதவிதாஸ் வசமே தந்துவிடுகிறான். ரம்பா அரசரால் மன்னிக்கப்பட்டு அவளும் ஆன்மீகத்தைத் தன் பாதையென்று ஏற்கிறாள். தாய் தந்தையர் மனம் கோணாமல் அவர்களுக்குச் சேவை புரியும் ஹரிதாஸின் கண்களுக்கு கிருஷ்ணபரமாத்மா காட்சியளிக்கிறார். அவனோடு அவனது குடும்பத்தார் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கிறது. படத்தின் மொத்தம் இருபது பாடல்களுக்கு முன்பின்னாய் இந்தக் கதை நமக்கெல்லாம் காணக்கிடைக்கிறது.

பாபநாசம் சிவன், எம்கேடி கூட்டணி பல நல்ல பாடல்களைத் தமிழ்த் திரைக்கு அளித்தவர்கள். இந்தப் படத்தில் பாபநாசம் சிவன் இசையமைத்ததை பதிவுசெய்து அளித்த இசையமைப்பாளர் ஜி.ராமநாதன். இதன் முதல் காட்சியே வசனத்திலிருந்தல்ல வாழ்விலோர் திருநாள் என்றுதான் ஆரம்பிக்கிறது. தீபாவளி ரிலீஸை முன்னிட்டு திட்டமிடப்பட்டதோ என்னவோ மன்மத லீலையை வென்றார் உண்டோ என் மேல் உனக்கேனோ பாராமுகம் என்று பாகவதர் பாடிய பாடல் காலங்களைக் கடந்து இன்றளவும் தமிழின் க்ளாசிக் ஆரம்பங்களில் ஒன்றெனத் திகழ்கிறது.

பாகவதரின் குரல் வகைமைகளுக்குள் அடங்காதது. மென்மையும் உறுதியும் மிக்கது. ஒப்பிடுவதற்குச் சிரமமான தனித்துவம் மிக்கது. ஒரே நபரின் அடுத்தடுத்த பாடல்கள் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்துவதற்கு அவற்றிடையே தொடர்பொதுத் தன்மைகள் மிகுந்திருத்தல் அவசியம். ஆனால் பாகவதர் தன் குரலைப் பொதுவில் நிறுத்தித் தொனி என்பதைத் தன் தனித்த அடையாளமாக மாற்றுவதைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். இதே படத்தில் இடம்பெறுகிற அன்னையும் தந்தையும் பாடலாகட்டும் கிருஷ்ணா முகுந்தா முராரே ஆகட்டும் வெவ்வேறு தன்மைகளில் பெருக்கெடுப்பவை. தனித்தொலிப்பவை.

இளங்கோவன் எழுதிய கதை வசனத்தை இயக்கியவர் சுந்தர் ராவ் நட்கர்னி. வசனங்கள் ஆங்காங்கே தூய தமிழும் பல இடங்களில் வடமொழிக் கலப்புடனும் அமைந்திருந்தது இன்றைக்குப் புதிதாய்க் கேட்க வாய்க்கையில் வினோதமாய் ஒலிக்கிறது. முதன் முதலில் சந்திக்கும் ஹரிதாஸ், ரம்பா இருவரையும் உடனிருப்போர் அறிமுகம் செய்து வைக்கும் காட்சி ஒரு ஸாம்பிள் இங்கே “சகல சம்பர்ண கலா பூஷித தர்க்க சாஸ்த்ர பாண்டித்ய சங்கீத ரசஞான ஸ்ரீப்ரிய ஸ்ரீமான் ஹரிதாஸ் ப்ரபு” என ஹரிதாஸை ரம்பாவிடம் அறிமுகம் செய்துவிக்கிறான் கண்ணன். பதிலுக்கு இன்னொருவர் முன்வந்து “நாட்டியக் கலாமணி நாரீரமணி கானலோல வீணாவாணி வேணுகான வினோதினி குமாரி ரம்பா…” என்று ஹரிதாஸூக்கு ரம்பாவை அறிமுகம் பண்ணுகிறார்.

டி.ஆர்.ராஜகுமாரி, என்சி, வசந்தகோகிலம், டி.ஏ மதுரம் என மூன்று நடிகைகளின் வெவ்வேறு பாத்திர வெளிப்பாடுகளும் ஹரிதாஸ் படத்தை வெற்றிகரமாக்கியதில் பெரும்பங்கு வகித்தவை. என்.எஸ்.கிருஷ்ணன்., டி.,ஆர்.ராமசாமி அண்ணாஜிராவ், எஸ்.ஆர்.கிருஷ்ணன் என நடிகர்களும் அவரவர் பாத்திரங்களில் பொருந்தி நடித்தனர். முக்கியமாக என்.எஸ்.கே மதுரம் இணையின் இயல்பான காதலும் திருமணமும் பின்னர் அவர்கள் வாழ்வில் வந்து செல்லும் மாதவிதாஸ் பாத்திரத்தில் நடித்த டி.ஆர்.ராமசாமியின் சிண்டுமுடிதலை கலைவாணர் சமாளிக்கிற விதமும் குறிப்பிடத்தக்கவை.

ஹரிதாஸின் கதை எளிமையான ஒன்று. சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அல்ல அதற்கு முந்தைய காலத்தின் கதையாக்கத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய பழைய கதை. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். தமிழ்த் திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களின் வழக்கமான கட்டுமானத்தை அப்படியே பின்பற்றியே திரைப்படங்களை எடுக்க முனைந்தார்கள். திரைக்கதை என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மக்களுக்குப் பரிச்சயமான புராண இதிகாச கதைகள் அறிந்த சம்பவங்களைக் கலைத்தும் சேர்த்தும் வெட்டியொட்டியும் செய்யப்பட்ட கதைகள் போதுமானதாக இருந்தன.

கண்முன் நிகழ்த்துக் கலையாகப் பார்த்துப் பரிச்சயமான கதைகளைத் திரைக்கு அப்பால் நிசமாகவே நின்றும் நடந்தோடியும் நடிப்பதாகவே திரைப்பட ரசிகனின் ஆரம்ப எண்ணங்கள் வாய்த்தன. அவர்களைத் திரைக்கு அழைத்து வருவதற்கான பெரிய சாகசமாகத் திகழ்ந்தவை பாடல்கள். அது பாடல்களின் காலம்.

எம்.கே.டி சரசரவென்று புகழ் ஏணியில் ஏறியவர். உச்சம் தொட்டவர். அங்கேயிருந்து வீழ்ந்தவர். ஹரிதாஸின் கதையின் நகர்திசைக்கும் அவரது வாழ்க்கைக்குமான பெரிய வித்யாசங்கள் இல்லை. 1944ஆமாண்டு நவம்பர் 8 ஆம் தேதி சினிமா தூது பத்திரிக்கையை நடத்திய லட்சுமிகாந்தன் கத்திக்குத்துக்கு ஆளாகி இன்ஸ்பெக்டரிடம் மரண வாக்குமூலமளித்து மறுதினம் பெரிய ஆஸ்பத்திரியில் உயிரிழந்து உடலானார். அன்றைய காலகட்டத்தின் மகா பிரபலங்கள் மூவர் ஒருவர் கோவை பட்சிராஜா குழுமத்தின் உரிமையாளர் செல்வந்தர் ஸ்ரீராமுலு. அடுத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூன்றாமவர் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜபாகவதர்.

மூவருக்கும் லட்சுமிகாந்தன் கொலைக்கும் முகாந்திரம் உள்ளதென வழக்குத் தொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரில் ஸ்ரீராமுலு மட்டும் குற்றம் நிரூபணமாகாமல் பின்னர் விடுவிக்கப்பட்டார். என்.எஸ்.கே மற்றும் எம்.கே.டி. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் ஆகப் பரபரப்பான இரண்டுபேரின் கால்ஷீட்டுக்களை மொத்தமாகக் கைப்பற்றியது. சினிமாவும் நிசமுமாய் இருவேறு உலகங்கள் அதிர்ந்தன. பின் காலத்தில் அவர்கள் இருவரும் அதே வழக்கை மறுமுறை நடத்தியதில் விடுவிக்கப்பட்டார்கள் என்றாலும் இழந்த புகழும் பொருளும் மீளவில்லை.

என்.எஸ்.கே பலவித பாத்திரங்களை ஏற்றார் எனினும் எம்.கே.டி 1959 ஆமாண்டு மரிக்கும்வரை மொத்தம் அவர் நடித்தது 14 படங்கள்தான். ஹரிதாஸ் அவர் நடிப்பில் உருவாகி ஒரு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி அடுத்த இரண்டு தீபாவளிகளைத் திரையரங்கில் பார்த்து மொத்தம் 110 தொடர்ச்சியான வாரங்கள் ஒரே அரங்கில் ஓடிய மாபெரும் பெருமையை அடைந்தது. பாகவதர் லட்ச ரூபாய் சம்பளம் பெற்றார் என்பர் விவரமறிந்தோர். இன்றைக்குப் பல கோடிகளுக்குச் சமம். தன் இறுதிக் காலத்தில் பக்தி மார்க்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பாடல்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து எண்ணிலடங்காத இதயங்களைக் கவர்ந்த மாபெரிய நட்சத்திர பிம்பம் எம்.கே.டி. அவருடைய குரல் அவர் வாழ்ந்த காலம் இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் புரியவரும் பேருரு.

ஹரிதாஸ்: வேர்ப்பலா
 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-71-ஹரித/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூறு கதை நூறு சினிமா: 72 – நான் கடவுள்

 

மனிதன் என்பவன் மிக மோசமான விலங்கினம்

-ஃப்ரெட்ரிக் நீட்ஷே

நல்லவன் வாழ்வான் என்பது ஒரு தியரி. பொதுவாக நம்ப விரும்பப்படுகிற தியரி மட்டுமல்ல. திரும்பத் திரும்ப போதிக்கப்படுகிற தியரி. நல்லது செய்தால் நற்பலன் கிடைக்கும் என்பதும் தீயவற்றைச் செய்வது தீய பலனைத் தருமென்பதும் ஆழ்ந்த நம்பிக்கைகள். சக மனிதனை அன்பு செய்வது ஒன்றுதான் மனிதத்தைத் தழைக்கச் செய்யும் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரக்கூடிய பொது விதி.

மனித வாழ்க்கை ஆசைகளாலும் நிராசைகளாலும் ஆனது. இரண்டையுமே சேர்த்து கனவு நோக்கம் லட்சியம் என்றெல்லாம் பல சொற்கள் நிறுவித் தருபவை. மனிதன் நம்ப விரும்புகிற தத்துவங்கள் காலம் காலமாய்த் தொடர்பவை மேலும் அந்தந்தக் கால கட்டங்களில் சேர்பவை இவ்விரண்டும் சேர்த்ததே. கதைகள் பாடல்கள் ஓவியம் இசை நடனம் எனப் பல கலைவடிவங்களும் மானுட நம்பிக்கைகளை எடுத்தோதுவதற்கான உபகரணங்களாகப் பயனாவது அவற்றின் பரவலுக்கும் முக்கியக் காரணமாகிறது.

ஏழாம் உலகம் ஜெயமோகன் எழுதிய புதினம். உடல் உறுப்புக் குறைபாடுகளைக் கொண்டவர்களைச் சிறையெடுத்துத் தன் லாபத்திற்காக அவர்களைப் பிச்சை எடுக்க வைக்கும் ஈரமற்ற மனிதவுருவிலான மிருகம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட புதினம். இந்த ஒரு கதாபாத்திரத்தின் இரக்கமற்ற செயலைத் தன் திரைக்கதைக்கான ஒரு இழையாக எடுத்துக் கொண்டார் பாலா.

spacer.png

 

காசியில் காணக் கிடைக்கும் அகோரிகள் மனிதவாழ்வின் பாவபுண்ணியக் கணக்கை நேர்செய்பவர்களாகவும் அவர்கள் ஆசீர்வதித்தால் பிறவியைக் கடக்க முடியுமென்பதும் காலம் காலமாய் ஒரு நம்பிக்கை தொடர்கிறது. இறுதிக் கடனை காசியில் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று விரும்பி அதனை காசியில் ஈடேற்றுவது பலரது செயல்முறை. தகனம் திதி உள்ளிட்ட கர்மவினை தீர்க்கும் ஈமச்சடங்குகளை பாவ பரிகாரங்களை செய்வதற்கான புண்ணியத் தலமாக அறியப்படுகிறது காசி நகரம். அங்கே மட்டுமே இருக்கும் அகோரிகளில் ஒருவரைத் தன் திரைக்கதையின் இரண்டாவது இழையாக்கிக் கதையை உருவாக்கினார் பாலா. வசனங்களை எழுதியவர் ஜெயமோகன்.

ஜோசியன் தன் ஒரு மகனைப் பிரிந்தாகவேண்டும் என்று சொன்னதால் தன் மகன் ருத்ரனைப் பதின்ம வயதில் காசியில் விட்டுவிட்டுத் தன் வீடு திரும்பி விடுகிறார் நமச்சிவாயம். தன் மனைவி மகளிடம் பதினாலு வருடம் அங்கே அவன் வேதம் படிப்பதாகப் பொய் சொல்லி விடுகிறார். அவரோடே இருக்கும் இன்னொரு மகன் தவறி விடுகிறான். 14 வருடங்கள் கழித்து எங்கே என் இன்னொரு மகன் என கேட்டழும் மனைவி நிர்ப்பந்தத்தை சமாளிக்க ருத்ரனைத் தேடிகாசிக்குத் தன் ஒரே மகளோடு வருகிறார் நமச்சிவாயம்.

குருவிடம் என் மகனை என்னோடு அனுப்புங்கள் எனக் கேட்க அவர் ருத்ரனிடம் நீ பிறவியின் பந்தங்கள் முழுவதையும் முதலில் அறுத்துவிட்டு வா. என்னை எப்போது வந்தடைய முடியும் என்பது உனக்குத் தெரியவரும் அப்போது வந்தால் போதும் என்று அவனை ஆசீர்வதித்து அனுப்புகிறார். அவர்கள் இருவரோடு ஊருக்கு வரும் ருத்ரன் அங்கே சிலகாலம் இருப்பதும் தன் காட்சிக்கு முன் நிகழும் நல்ல மற்றும் கெட்ட நிகழ்வுகளை இனம் பிரித்து அவற்றுக்கான விளைவுகளை ஏற்படுத்திய பிறகு மீண்டும் தன் குருவைத் தேடிச் சென்றடைவதும் நான் கடவுள் படத்தின் திரைநகர்தல்.

சாதாரணமாகப் பராமரிக்கப்படாத மற்றும் வழங்கப்படாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறவர்களை முழுவதுமாகத் தன் திரை மாந்தர்களாகக் கொண்டு நான் கடவுள் திரைக்கதையை பாலா அமைத்தது குறிப்பிடத்தக்கது. ‘மனுஷனா நீ’ என்று கேட்கக்கூட நியாயமற்ற மிருகமனம் கொண்ட தாண்டவனை கதையின் எதிர் மனிதனாக்கி மனுஷனல்ல கடவுள் என்று அஹம் ப்ரம்மாஸ்மி என்று தன்னை உபாசிக்கும் ருத்ரனை கதையின் காப்பானாக்கியதும் உடல் உறுப்புகள் குறைபாடுகளோடு பிறந்து தாண்டவனிடம் விற்கப்பட்டு அவனது மிருகத்தனத்துக்குக் கட்டுப்பட்டு யாசகம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் அவர்களைப் பராமரிக்கும் தாண்டவனின் வேலைக்காரர்கள் தாண்டவனிடம் மனிதர்களை விலைக்கு வாங்கவும் விற்கவும் வந்து செல்கிற அவனை ஒத்த சக மிருகங்கள் தாண்டவனுக்குப் பக்க பலமாக இருக்கும் காவலதிகாரி தாண்டவனின் பணத்துக்குப் பதிலாகத் தன் ஸ்டேஷனுக்கு பிடித்து வரப்பட்ட வேறொரு குழுவிலிருந்து தாண்டவனின் கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்படுகிற அம்சவல்லி . அவளைத் திருமணம் செய்து கொள்ள வருகிற பெரிய வியாபாரி தாண்டவனிடம் வேலை பார்க்கிறவர்களில் ஈர மனம் கொண்ட முருகன் மலை மேல் இருக்கும் மாங்காட்டுச் சாமி எனக் கதையின் பெருவாரி மனிதர்களின் வருகை நிகழ்கிறது.

தாண்டவனால் பாதிக்கப்படுபவர்களின் கையறு நிலை. தாண்டவனால் பலனடைவோர். தாண்டவனால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அவ்வப்போது சிறு நிகழ்வுகளைக் கண்ணுறும் பொது மக்கள் தன்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது என்று கெக்கலிக்கும் தாண்டவன். வட காசியிலிருந்து கிளம்பித் தெற்கே வந்து தாண்டவனை வதம் செய்துவிட்டு மீண்டும் தன் குருவைச் சென்றடையும் ருத்ரனின் வருகை கதையை நிறைவு செய்கிறது. இரண்டு அதீத மனிதர்கள். நல்ல மற்றும் கெட்ட என்பதைவிட கெட்ட மற்றும் கெட்டதை அழிக்கிற என்ற இரண்டாகக் கிளைக்கிறது பாத்திரமாக்கல்.

கனவில் வரக்கூடிய குழப்பங்களைக் கோர்த்தாற்போலத் தோற்றமளித்தாலும் மிகத் தெளிவான நகர்தல்களால் மனங்களைத் தைத்தெடுத்தார் பாலா. மதுபால கிருஷ்ணன் பாடிய பிச்சைப் பாத்திரம் பாடலும் விஜய்ப்ரகாஷ் பாடிய ஓம் சிவோஹம் பாடலும் இரு கரைகளைப்போல அமைந்ததென்றால் படத்தின் பின்னணி இசை கடலாய்ப் பெருகிற்று. இளையராஜாவின் உக்கிரமான இசை இந்தப் படத்தில் கூடுதல் இயக்கமாகவே திகழ்ந்தது.

பாலா தன் படங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்துகிறவை இப்படத்திலும் உண்டு. உதாரணமாக அதிகார-நிறுவனத்தின் மீதான எள்ளல். இன்னொன்று திரையினால் கூட்டத்தை வசீகரித்தவர்களின் பிம்பங்களை வேறு காலத்தின் பாடல்களை இடம்பெறச் செய்வது சிறுசிறு கதையாடல்களாக முக்கியக் கதைத் திருப்பங்களை அப்படி அப்படியே வெட்டி நிறுத்தி அடுத்ததில் நுழையும் உலர் தன்மை எதிர்பாராத மற்றும் அதிர்வை நிகழ்த்துகிற கண்டனத்தைப் போகிற போக்கில் வசனமாக உதிர்த்தல் போன்றவை.

பாலா சிறந்த இயக்குனருக்கான தேசியவிருதைப் பெற்றார். யூகே சசி சிறப்பான ஒப்பனைக்கான தேசிய விருதை அடைந்தார். ஆர்யா, பூஜா, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, சிங்கப்புலி, அழகன் தமிழ்மணி மற்றும் பலரது நெகிழ்நடிப்பு நான் கடவுள் படத்தைச் சிறப்புற சாத்தியமாக்கிற்று. சுரேஷ் அர்ஸ் தொகுப்பும் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவும் வாலி, இளையராஜா எழுதிய பாடல்களும் பக்கத் துணையாய் நின்றன.

நான் கடவுள் அஹம் பிரம்மாஸ்மி

உனக்குள் இறையை உணர்


 

https://uyirmmai.com/literature/நூறு-கதை-நூறு-சினிமா-72-நான்/

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.