• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

"பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்

Recommended Posts

Embedded video

"பஸ்" டே... அட்டாசம். கூரை மீது ஏறி கொண்டாட்டம்.. பிரேக் போட்ட டிரைவர்.. சரிந்து விழுந்த மாணவர்கள்

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர்.

தடையை மீறி பஸ் டே கொண்டாடாடிய 17 மாணவர்களை பிடித்து சென்னை போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

à®à®©à¯à®©à®²à¯ à®à®®à¯à®ªà®¿

விடுமுறை முடிந்து நேற்று சென்னையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பஸ் டே என்ற பெயரில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, இதற்கான சிறப்பு ஏற்பாடாக பஸ்ஸூக்கு அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டு, பொதுமக்களை திசைதிருப்பியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சத்தம் போட்டுக் கொண்டே வந்தனர்.

பஸ௠à®à¯à®°à¯

இதனால் புல்லா அவென்யூ ரோட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதை பார்த்த டிராபிக் போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால் மாணவர்கள் போலீசை பார்த்ததும் தப்பியோடிவிட்டனர்.

இதேபோல பிராட்வே-மந்தைவெளி சாலையில் பஸ் கொண்டாடப்பட்டது. ஆங்காங்கே மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டத்துக்குரிய பேனர்களை பிடித்தபடி நின்றிருந்தனர். இவர்களில் 4 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். இப்படி பஸ்கூரை, படிக்கட்டில் தொங்கியவர், பேனர் பிடித்தவர்கள் என கிட்டத்தட்ட 17 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/bus-day-celebration-in-chennai-and-police-arrested-17-students-354380.html

Share this post

Link to post
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தின்போது மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர் சரிந்து கீழே விழுந்தனர்.

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

அருமை ..👍 பேருந்து ஓட்டுனரின் செயல் மிகவும் பாராட்ட தக்கது .. இவையளை போரில் முன்னரங்கில் விட வேணும்..👌

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ராசவன்னியன் said:

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

குந்தச் சொந்தமாக மண்ணில்லை. ஆனாலும் குந்தியிருந்து விளையாடி,  வீழ்ந்து மகிழ பேரூந்தாவது மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதே... இவர்களுக்கு இந்த விளையாட்டில் மிக்க பரிச்சயம் உள்ளதுபோல் தெரிகிறது. வீழ்ந்து எழுந்து ஏதும் நடவாததுபோல் தட்டிவிட்டுச் செல்கிறார்களே..... 🤔

ஊரில் அன்று நான் புளியமரத்தை உலுக்கிப் புளியம்பழம் பொறுக்கிய ஞாபகம் வருகிறது.🤣

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை ..👍 பேருந்து ஓட்டுனரின் செயல் மிகவும் பாராட்ட தக்கது .. இவையளை போரில் முன்னரங்கில் விட வேணும்..👌

மீடியாக்கள் கண்ணுக்கு முன் நடப்பதையும் பொய்யாக்கும் வல்லமை பெற்றவை நன்றாக கவனியுங்கள் முன்னுக்கு வரும் மோட்டார் சைக்கிள் காரர் சடனாய் பிரேக் போட்ட காரணமே பஸ் ஓட்டுனருக்கு வேறு வழி இல்லாமல் சடன் பிரேக் போடுகிறார் இளரத்தம் சொல்லு கேட்க்காது .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

Image may contain: one or more people and text

தம்பிகளா... இன்னொரு ரவுண்டு போவோமா.....  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 6/18/2019 at 6:58 AM, ராசவன்னியன் said:

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

Image may contain: 1 person, smiling, text and outdoor

Image may contain: one or more people and text

Image may contain: 2 people, people smiling

பஸ்டே... கொண்டாடுற  பயலுக எல்லாம்...  மேல ஏறுங்க(டா...) :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
On 6/18/2019 at 9:24 AM, Paanch said:

குந்தச் சொந்தமாக மண்ணில்லை. ஆனாலும் குந்தியிருந்து விளையாடி,  வீழ்ந்து மகிழ பேரூந்தாவது மாணவர்களுக்குக் கிடைத்துள்ளதே... இவர்களுக்கு இந்த விளையாட்டில் மிக்க பரிச்சயம் உள்ளதுபோல் தெரிகிறது. வீழ்ந்து எழுந்து ஏதும் நடவாததுபோல் தட்டிவிட்டுச் செல்கிறார்களே..... 🤔

ஊரில் அன்று நான் புளியமரத்தை உலுக்கிப் புளியம்பழம் பொறுக்கிய ஞாபகம் வருகிறது.🤣

பாஞ்ச் அண்ணை,   இதில்.... எத்தனை மாணவர்களுக்கு,
இடுப்பு எலும்பு முறிந்தது, முள்ளந்தண்டு வெடித்தது, பல்லு  கொட்டியது...
என்று,  வெட்கத்தில் சொல்லவே மாட்டார்கள். 😎

அதனை வெளியில் சொன்னால்.. "பச்சையப்பன் கல்லூரிக்கு" அவமானம். 😝
"லயோலா கல்லூரி மாணவிகளும்"...  "வெந்த புண்ணில், வேல் பாய்ச்சிய மாதிரி",  
"கிண்டல்"   அடிக்க தொடங்கி விடுவார்கள்.
எல்லாம்... ஊமைக் காயங்கள் ஐயா...  :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 6/18/2019 at 6:58 AM, ராசவன்னியன் said:

காணொளியை போட்டால்தானே யாழுக்கும் கெத்தாக இருக்கும்..? :)

பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிக்குமாப்போல்  ______  பழமொழி 😂

பேரூந்தாலை விழுந்தவனை போலீசேறி மிதிக்குமாப்போல்  ______  புதுமொழி 🤣

Share this post

Link to post
Share on other sites

தோழர், உந்த காணொளியில் ரூ-வீலர்காரர் வேண்டுமென்றே கெட்ட எண்ணம் கொண்டு பிரேக் பிடித்தால் போல கிடக்கு.. அவர்க்கு எதிரே யாருமே இல்லை .. அவரின்ட வண்டியும் காலி..😊

maxresdefault.jpg

மேற்கூரையில் சரியான இரும்பு வேலி அமைத்திருந்தால் ரம்மியே ஆடலாம்..☺️

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.