Jump to content

நம்பிக் கெட்ட சூழல் - பி.மாணிக்­க­வா­சகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக் கெட்ட சூழல்

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவின் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் பொத்திப் பொத்தி பாது­காக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்கம், அர­சியல் தீர்­வையும் காண­வில்லை. தமிழ் மக்­களின் ஏனைய பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் முன்­வ­ர­வில்லை. 

ஏற்­க­னவே தமிழ் மக்­களை உள்­ளாக்­கி­யி­ருந்த இந்த நிலைமை, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையை மனக்­க­சப்­புக்கும் வெறுப்­புக்கும் ஆளாக்கி இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தை நம்பிக் கெட்ட சூழலில் இருந்து எவ்­வாறு வெளி­வ­ரு­வது என்று கூட்­ட­மைப்பின் தலைமை தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தையே காண முடி­கின்­றது.  

இந்த நிலையில் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் இலங்கை வருகை கூட்­ட­மைப்­புக்கு ஒரு நம்­பிக்கை ஒளியைத் தந்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த பின்னர் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்­டி­ருக்க வேண்­டிய மகிந்த ராஜ­பக்ச அரசு யுத்த வெற்றி மோகத்தில் திளைத்து, இரா­ணு­வத்தை முதன்­மைப்­ப­டுத்தி, எதேச்­ச­தி­காரப் போக்கில் பய­ணித்­தி­ருந்­தது. இரா­ணுவ மயப்­ப­டுத்­தப்­பட்ட அந்த ஆட்­சிக்கு முடி­வு­கட்டி, ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து, புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் மூலம் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காகக் கொண்டு வரப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கமும் தமிழ் மக்­களை ஏமாற்­றி­விட்­டது என்று தமிழ் தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா குறிப்­பிட்­டுள்ளார். 

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்தில் அதி­முக்­கிய தூண்­க­ளாக விளங்­கி­ய­வர்­களில் ஒரு­வரா­கிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­னி­லையில், மனம் கசந்த நிலையில் அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அது மட்­டு­மல்­லாமல், இந்த அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வந்­ததன் மூலம் பெரிய தவ­றி­ழைத்­து­விட்­ட­தா­கவும் மாவை சேனா­தி­ராஜா கூறி­யுள்ளார்.

vira.jpg 

கவ­லை­ய­ளிக்கும் நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்­தே­சிய கூட்­ட­ம­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இன்னும் ஒரு படி மேலே சென்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான தனது அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்ளார். போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்­பேற்று பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தாக ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் மூன்று தீர்­மா­னங்­க­ளுக்கு இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­ற­ுவ­தாக உறு­தி­ய­ளித்த நல்­லாட்சி அரசாங்கம் அவற்றை உதா­சீனம் செய்து புறக்­க­ணித்துச் செயற்­பட்டு வரு­வ­தாக சம்­பந்தன் குற்றம் சாட்­டி­யுள்ளார். 

ஐ.நா.உதவிச் செய­லாளர் நாய­கமும், ஐ.நா.பாது­காப்புச் சபையின் பயங்­க­ர­வாத ஒழிப்­புக்­கான நிறை­வேற்றுக் குழுவின் நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ரு­மா­கிய மிச்சேல் கொனின்ஸ் அம்­மை­யா­ரி­டமே இந்தக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஐ.நா.தீர்­மா­னங்­க­ளையும், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திற்­காக பாரா­ளு­மன்­றத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்­தையும் நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்ற பொறுப்­பற்ற போக்கு, அரசு வித்­தி­யா­ச­மான ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வ­தையே காட்­டு­கின்­றது என்றும் மிச்சேல் கொனின்ஸ் அம்­மை­யா­ரிடம் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

அர­சாங்­கத்தின் இந்த நிலைமை எங்­க­ளுக்குக் கவலை அளிக்­கின்­றது, இது இந்த நாட்­டுக்கு நல்­ல­தல்ல. குறிப்­பாக ஐ.நா.மன்­றத்­திற்கும் நல்­ல­தல்ல. ஓர் அர­சாங்கம் தான் நினைக்­கின்ற எத­னையும் சர்­வ­தேச சமூ­கத்­திற்கு உறு­தி­ய­ளித்த பின்னர், அதனை முற்­றிலும் புறக்­க­ணித்து, தான் விரும்­பி­ய­வாறு செயற்­ப­டு­மானால், அத்­த­கைய செயற்­பா­டுகள் ஐ.நா.மன்றம் போன்ற நிறு­வ­னங்­களின் இருப்­பையும் அவற்றின் தேவை­க­ளையும் கேள்­விக்கு உள்­ளாக்­கி­விடும் என்றும் சம்­பந்தன் எடுத்­து­ரைத்­துள்ளார். 

போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று அமெ­ரிக்­கா­வினால் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ஐ.நா.மனித உரிமைப் பேர­வையில் கொண்டு வரப்­பட்ட 30-/1 தீர்­மா­னத்தை தாம­த­மின்றி செயற்­ப­டுத்­து­வ­தற்­கான தூண்­டுதல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதைக் கைவிட்டு, அரசாங்கத்­திற்கு அடுத்­த­டுத்து கால அவ­காசம் வழங்­கு­வ­தி­லேயே கூட்­ட­மைப்பின் தலைமை ஆர்­வ­மாக இருந்­தது. 

கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இழுத்­த­டிக்­கின்ற ஒரு போக்கில் செல்­கின்ற அர­சாங்­கத்­திற்கு அனு­ச­ரணை வழங்கக் கூடாது என கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களும் பாதிக்­கப்­பட்ட மக்­களும் வலி­யு­றுத்திக் கூறிய போதிலும், அதனை கூட்­ட­மைப்பின் தலைமை புறந்­தள்ளிச் செயற்­பட்­டி­ருந்­தது. 

இந்தச் செயற்­பாட்டின் விளைவை நிதர்­ச­ன­மாக உணர்ந்­தி­ருப்­பதன் வெளிப்­பா­டா­கவே கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மற்றும் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரின் கருத்­துக்கள் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. 

தவ­றுக்கு மேல் தவறா.........?

அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் ஏகோ­பித்த அர­சியல் தலைமை என்ற அந்­தஸ்­தையும் கௌர­வத்­தையும் மரி­யா­தை­யையும் பெற்­றி­ருந்­தது. யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் விடு­த­லைப்­பு­லி­களின் பிர­சன்னம் இல்­லாத நிலையில் இந்த அர­சியல் பொறுப்பை ஏற்­றி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான இரா­ஜ­தந்­திர வழி­களில் மக்­களை வழி­ந­டத்­தி­யதா என்­பது கேள்­விக்­கு­ரி­யது.

மக்­களை வழி­ந­டத்­தி­யதா என்­பது ஒரு புற­மி­ருக்க சிறு­பான்மை தேசிய இன­மா­கிய தமிழ் மக்­க­ளிடம் இன­வாத விரோதப் போக்கைக் கொண்ட இலங்கை ஆட்­சி­யா­ளர்­களை சரி­யான வழி முறையில் கையாள முடிந்­ததா என்­பதும் கேள்­விக்­கு­ரி­ய­தாகும். 

அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் என்ற யுத்­தத்தை, பயங்­க­ர­வாத­மாகச் சித்­த­ரித்து, மனித உரிமை மீறல்­க­ளிலும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளிலும் நிக­ரற்ற முறையில் செயற்­பட்ட மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு எதிர்ப்­ப­ர­சி­யலை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. 

ஆட்சி மாற்­றத்­தின்­போது நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கு­வ­தற்கு உட­னி­ருந்து உறு­தி­யாகச் செயற்­பட்டு, இணக்க அர­சி­யலில் கூட்­ட­மைப்பு ஈடுபட்­டி­ருந்­தது. எதிர்ப்­ப­ர­சி­ய­லி­லும்­சரி, இணக்­க­முறை அர­சி­ய­லி­லும்­சரி, ஆட்­சி­யா­ளர்­களை அர­சியல் தீர்வை நோக்கி கூட்­ட­மைப்­பினால் நகர்த்திச் செல்ல முடி­ய­வில்லை. அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கும் எரியும் பிரச்­சி­னை­க­ளாக மாறி­யுள்ள ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய வழி முறை­களில் ஆட்­சி­யா­ளர்­களை ஈடு­படச் செய்ய முடி­ய­வில்லை. 

யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, பிரிக்­கப்­பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான மாகாண சபை­களின் நிர்­வாகச் செயற்­பா­டு­களின் ஊடா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­ய­வில்லை.

மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருந்­த­போ­திலும், பெரும்­பான்மை அர­சியல் பலத்தைக் கொண்­டி­ருந்த வட­மாகாண சபையின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்கக் கூடிய அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளிலும் கருத்­தூன்றிச் செயற்­பட முடி­யாத நிலை­மையே நில­வி­யது 

கண்­கெட்ட பின் சூரிய நமஸ்­காரம் என்­ற­து­போல, காலம் கடந்த நிலையில் வட­மா­காண சபையின் திற­மான செயற்­பா­டு­க­ளுக்­காக மாகாண முத­ல­மைச்­ச­ராக முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி.விக்­கினேஸ்­வ­ரனைக் கொண்டு வந்­தது தவறு என கழி­வி­ரக்­கத்­துடன் கருத்­து­ரைக்­கவே  முடிந்­தி­ருக்­கின்­றது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முழு­மை­யான ஆளு­கைக்கு உட்­பட்­டி­ருந்த வட­மா­காண சபையை சரி­யான வழித்­த­டத்தில் கொண்டு நடத்­தி­யி­ருக்கக் கூடி­ய­தாக இருந்த போதிலும், அதனை கூட்­ட­மைப்­பினால் செய்ய முடி­யாமல் போனது. அர­சி­யலில் உள்­ளகச் செயற்­பா­டு­களை உரிய முறையில் முன்­னெ­டுக்க முடி­யாமல் போனது போலவே, புற அர­சியல் செயற்­பா­டா­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி, அர­சாங்­கத்தின் நலன்­களைப் பாது­காத்­ததன் மூலமும், தமிழ் மக்­க­ளுக்­கான இலக்­கு­களை அடைய முடி­யாமல் போய்­விட்­டது, 

இதனால், இந்த அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வந்து தவ­றி­ழைத்­து­விட்டோம் என்று தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா கழி­வி­ரக்­கத்­துடன் இய­லா­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அத்­துடன், நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­யதன் மூலம் தமிழ் மக்­களும் தவ­றி­ழைத்­து­விட்­டார்கள் என்று அவர் ஆதங்­கத்­துடன் கூறி­யுள்ளார். இதன் மூலம் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் ரீதி­யான இய­லாமை அப்­பட்­ட­மாக வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது. 

முஸ்­லிம்­களின் முன்­மா­தி­ரி­யான நகர்வு

விடு­த­லைப்­பு­லி­களின் இரா­ணுவ ரீதி­யான மறை­வை­ய­டுத்து, தமிழ் மக்­களின் அர­சியல் தலைமைப் பொறுப்பை ஏற்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பல கட்­சி­களின் ஒற்­று­மை­யுடன் கூடிய வலு­வா­னதோர் அர­சியல் சக்­தி­யாக மிளிர்ந்­தது. தமிழ் மக்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் கூட்­ட­மைப்பின் பின்னால் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் அணி திரண்­டி­ருந்­தார்கள். 

ஆனால் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களை உறு­தி­யா­னதோர் அர­சியல் கட்­ட­மைப்­புக்குள் வைத்து, தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் கூட்­ட­மைப்பின் தலைமை தவ­றி­விட்­டது, நாளுக்கு நாள் கூட்­ட­மைப்பின் உள்ளே கருத்து முரண்­பா­டு­களும், செயல் முரண்­பா­டு­களும் வளர்ந்­த­ன­வே­யொ­ழிய அது ஓர் இறுக்­க­மான அர­சியல் இயக்­க­மாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்­றி­ருந்த தமி­ழ­ரசுக் கட்சி அந்தப் பொறுப்பின் ஊடாக கட்சி அர­சி­யலை வளர்த்­தெ­டுப்­ப­திலும், அதன் ஊடாக கூட்­ட­மைப்பின் உள்ளே தேர்தல் அர­சி­ய­லுக்­கான கட்சி நலன்­களை மேம்­ப­டுத்­து­வ­திலும் தீவிர கவனம் செலுத்­தி­யதே அல்­லாமல் ஒன்­றி­ணைந்த செயற்­பாட்டின் மூலம் தமிழ் மக்­களை ஓர­ணியில் வைத்­தி­ருக்க முடி­யாமல் போய்­விட்­டது. 

பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­டையே எழுந்த உள்­ளக முரண்­பா­டுகள் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை, கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பா­கிய நிலை­மைக்கே கொண்டு சென்­றுள்­ளது. முதலில் தமிழ்க் காங்­கிரஸ் பிரிந்து சென்று தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியை உரு­வாக்­கி­யது. பின்னர், ஈ.பி­.ஆர்.­எல்.எவ். பிரிந்து சென்று, தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து தேர்­த­லுக்­காக உரு­வாக்­கிய தமிழ்த்­தே­சிய விடு­தலைக் கூட்­ட­மைப்பு கலைந்து போனது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பில் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மையில் ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்­சி­களே அங்கம் வகிக்­கின்­றன. கூட்­ட­மைப்பின் தலை­வரும் பழுத்த அர­சியல் அனு­பவம் வாய்ந்­த­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் காலத்­துக்குக் காலம் தமிழ் மக்கள் ஓர­ணியில் திரண்டு தமது ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்த வேண்டும். அந்த ஒற்­று­மையை இறுக்­க­மாகப் பேண வேண்டும் என அடிக்­கடி வலி­யு­றுத்தி வரு­கின்ற போதிலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் உள்ளே பங்­காளிக் கட்­சி­களை இறுக்­க­மாகப் பிணைத்து ஒற்­று­மையைப் பேணு­வ­தற்கு முடி­யாமல் போயுள்­ளது. இந்த நிலைமை ஊருக்­குத்தான் உப­தேசம் உனக்­கல்ல என்­பதைப் போலுள்­ளது. 

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு பல தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் உள்­ள­டக்கி உறு­தி­யான ஒன்­றி­ணைந்­ததோர் அர­சியல் சக்­தி­யாக மாற வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். கருத்து முரண்­பா­டுகள் அர­சியல் வழிக் கொள்­கைகள் என்­ப­வற்­றுக்கு அப்பால் ஒன்­றி­ணைந்த ஒற்­று­மையின் மூலம் காரி­யங்­களை எதிர்ப்­புக்­களை முறி­ய­டிக்க முடியும். காரி­யங்­களைச் சாதிக்க முடியும் என்­பதை உள்­ளங்கை நெல்­லிக்­க­னி­யாக முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தமது அமைச்சுப் பத­வி­களைத் துறந்­ததன் மூலம் எடுத்­தி­யம்­பி­யுள்­ளார்கள். 

அண்­மையில் இடம்­பெற்ற முஸ்லிம் தலை­வர்­களின் அர­சியல் நகர்வை முன்­மா­தி­ரி­யாகக் கொண்­டா­வது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அடுத்த கட்ட அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும். 

அடுத்த கட்டம் 

ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தி நல்­லாட்­சியைக் கொண்டு நடத்தும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட மைத்­திரி – ரணில் இணைந்த அர­சாங்­க­மா­னது, 2018 அக்­டோபர் அர­சியல் சதிப்­பு­ரட்­சியைத் தொடர்ந்து ஸ்திர­மற்ற ஒரு நிலையில் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் நிலை­மை­களை மேலும் மோச­மாக்­கி­யுள்­ளது. 

அரச தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கேலிக் கூத்­தான சில நட­வ­டிக்­கைகள் அர­சியல் ஸ்திரத்­தன்­மையை மேலும் மேலும் மோச­மாக்­கி­யுள்­ளது. 

இந்த நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் இணைந்து புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதன் ஊடாக அர­சியல் தீர்வு காணலாம். பிரச்­ச­ினை­க­ளுக்குத் தீர்வு காணலாம் என்ற தமிழர் தரப்பின் நம்­பிக்கை சித­றுண்டு போயுள்­ளது. 

ஆனாலும், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னணியில் இந்திய அரசின் அணுகுமுறையில் தென்படத் தொடங்கியுள்ள மாற்றங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிலவற்றையாவது தீர்ப்பதற்கு வழி வகுக்கும் என்ற நம்பிக்கை ஒளிக் கீற்றைத் தோற்றுவித்துள்ளது, 

இரண்டாவது தடவையாக இந்தியாவின் பிரதமர் பதவியை ஏற்றுள்ள நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குக் கிட்டியிருந்தது. அந்த வாய்ப்பின்போது அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை அவருக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எடுத்துரைத்ததையடுத்து, பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காகக் கூட்டமைப்பினரை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைத்­துள்ளார். 

அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சி முடங்கியதையடுத்து, தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளும் முடக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் பிரச்சினைகளில் காட்டியுள்ள ஆர்வம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வாயில் ஒன்றைத் திறந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஆதரவுடன் தீர்வை வென்றெடுப்போம் என்று சம்பந்தன் நம்பிக்கை வெளி­யிட்டுள்ளார். 

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான முயற்சிகள் முன்னைய நடவடிக்கைகளைப் போலல்லாமல் சமயோசிதமாகவும் இராஜ தந்திரத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான தயாரிப்புக்களுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  

பி.மாணிக்­க­வா­சகம்

 

https://www.virakesari.lk/article/58446

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.