Jump to content

தீர்­வுக்­கான அழுத்­தங்­களை கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீர்­வுக்­கான அழுத்­தங்­களை  கொடுப்­ப­தற்கு முய­ல­வேண்டும்

 

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்­கு­மி­டை­யி­லான  முரண்­பா­டுகள் கார­ண­மாக   தமிழ் மக்­களே  அதி­க­மாக   பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.  தமிழ் மக்­களின்  அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு  தீர்­வு­காணும் வாய்ப்­புக்கள்  அனைத்­துமே  தட்­டிப்­ப­றிக்­கப்­ப­டு­கின்­றன.  எனவே  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்  ஓர­ணி­யாக இணைந்து   தமிழர் பிரச்­சி­னைக்கு  முதலில்  தீர்வை  பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்று தமி­ழ­ர­சுக்­கட்சித்  தலை­வரும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா   தெரி­வித்­தி­ருக்­கின்றார். 

அர­சாங்­கத்தின் மீது   நம்­பிக்­கை­யில்­லாத கார­ணத்­தி­னா­லேயே   தொடர்ந்தும்   நாம் சர்­வ­தேச தரப்பை நம்­பி­யி­ருக்­க­வேண்­டி­யுள்­ளது என்றும்   தனது ஆதங்­கத்தை   அவர்  வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். 

இதே­போன்றே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனும்  நல்­லாட்சி அர­சாங்க காலத்தில்   இனப்­பி­ரச்­சி­னைக்கு  அர­சியல் தீர்வைக் காண முடியும் என்று  பெரும் நம்­பிக்கை கொண்டு   செயற்­பட்டு வந்தார். 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்­திற்குள்  அர­சியல் தீர்வை  காண முடியும் என்று  அவர் பகி­ரங்­க­மாக    நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்தார். ஆனால்  தற்­போது 2019ஆம் ஆண்டு  ஆகி­விட்­ட­போ­திலும்   இன்­னமும் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வென்­பது  காணப்­ப­ட­வில்லை. 

 இன்­னமும் சில மாதங்­களில் மீண்டும்   ஜனா­தி­பதி தேர்தல்  இடம்­பெ­ற­வுள்­ளது.  அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்றத் தேர்­தலும்    இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றது.  இவ்­வாறு தேர்தல் நெருங்­கி­யுள்ள தற்­போ­தைய நிலையில்  அர­சியல் தீர்­வென்­பது   சாத்­தி­ய­மற்­ற­தொன்­றா­கவே மாறி­யி­ருக்­கி­றது. 

ranil_mythri.jpg

இவ்­வா­றான  நிலையில்   நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அர­சியல் தீர்வைக் காண முடியும் என்று நம்­பி­யி­ருந்த சம்­பந்­தனும் ஏமாற்­ற­ம­டைந்த நிலையில் தற்­போது கருத்­துக்­களை  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.   எமது நாட்டின் வர­லாற்றை எடுத்து நோக்­கினால்   தமிழ் மித­வாதத் தலை­வர்கள் நான்கு தசாப்­த­கா­லங்­க­ளாக  தமிழ் மக்­களின் உரி­மை­களை  நிலை­நாட்­டு­வ­தற்­காக தொடர்ச்­சி­யாக அஹிம்­சா­ வ­ழிப் போராட்­டங்­களில்  ஈடு­பட்டு வந்­தனர். அதன் பின்னர்   தமிழ்  இளை­ஞர்கள்  ஆயு­தப்­போ­ராட்­டத்­தினை ஆரம்­பித்து மூன்று தசாப்­த கா­லத்­திற்கும் மேலாக ஆயு­தப்­போ­ராட்­டத்தின் மூலம்  தமிழ் மக்­களின்  உரி­மை­களை நிலை­நாட்ட  முயற்சி எடுக்­கப்­பட்­டது. ஆனால்  அந்த  நட­வ­டிக்­கையும்  2009ஆம் ஆண்டு மே மாதத்­துடன்  நிறை­வுக்கு வந்­தது. 

இதன் பின்னர் மீண்டும் தமிழ் மக்­களின் உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­கான   அஹிம்­சா­வ­ழிப் போ­ராட்­டங்­களை  நடத்தும்  பொறுப்பு  தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்பு தலை­மை­யிடம்   வந்­தது.   இந்த நிலையில்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது  யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் அன்­றைய  ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி  அர­சாங்­கத்­துடன்    இணக்­கப்­பாடொன்றை ஏற்­ப­டுத்தி பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண  முயற்­சித்­தது. 

2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்­டு­வ­ரையில்    அன்­றைய அர­சாங்கப் பிர­தி­நி­தி­க­ளுக்கும்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் 16 சுற்றுப் பேச்­சுக்கள் வரையில் இடம்­பெற்­றன. ஆனாலும் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தை    தட்­டிக் க­ழிக்­க­வேண்டும் என்று எண்­ணிய  அன்­றைய அர­சாங்­க­மா­னது   பேச்­சு­வார்த்தை மேசை­யி­லி­ருந்து வில­கி­யி­ருந்­தது. இதன்­பின்னர்   இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில்   பேச்­சுக்­களை ஆரம்­பிக்க முடி­யாத சூழ்­நிலை உரு­வா­னது. 

அதனைத் தொடர்ந்தே 2015ஆம் ஆண்டு நல்­லாட்சி  அர­சாங்கம் பத­வி­யேற்­ற­பின்னர்  அர­சியல் தீர்­வுக்­கான நம்­பிக்கை உரு­வா­கி­யி­ருந்­தது.  ஜனா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின்   வெற்­றிக்கு  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யது.   இந்த  தேர்தல் காலத்தில்   இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது  அர­சியல் தீர்­வுக்­கான உறுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.   

இதற்­கேற்­ற­வ­கையில்  நல்­லாட்சி  அர­சாங்க காலத்தில்  புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­ட­துடன் அதன்­மூலம் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. பெரும் இழு­ப­றி­க­ளுக்கு மத்­தியில் அர­சியல் தீர்வு குறித்து ஆரா­யப்­பட்டு  இடைக்­கால அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.  ஆனால்  அதன் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட அர­சியல்  சூழ்­நிலை கார­ண­மாக  அர­சியல் தீர்­வுக்­கான முயற்சி தற்­போது முழு­மை­யாக தடைப்­பட்­டி­ருக்­கின்­றது. 

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான முஸ்­தீ­புகள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன. இந்த நிலையில்    அர­சியல் தீர்வு குறித்தோ, புதிய அர­சியல் யாப்­புக்­கான முயற்சி தொடர்­பிலோ எவரும் பேசு­வ­தாக  இல்லை. அந்த முயற்­சிகள் குறித்து  நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மானால் அது தெற்கில்  பெரும்­பான்மை சிங்­கள  மக்கள் மத்­தியில்  தவ­றான அபிப்­பி­ரா­யத்தை ஏற்­ப­டுத்தும் என்ற சூழ்­நிலை தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. . பெரும்­பான்­மை­யினக் கட்­சிகள் இந்த எண்­ணத்­தி­லேயே தற்­போது செயற்­பட்டு வரு­வ­தினை அவ­தா­னிக்க முடி­கின்­றது.  

இந்தப் பின்­ன­ணி­யில்தான் தற்­போது  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் அர­சியல் தீர்­வுக்­கான தமது முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்­துள்ள நிலையில்  பெருங் க­வ­லையைத் தெரி­வித்து வரு­கின்­றனர்.  சர்­வ­தே­சத்தின் உத­வி­யு­ட­னா­­வது  அர­சியல் தீர்வை  காண­வேண்டும் என்று   அவர்கள் சிந்­தித்து வரு­கின்­றனர்.  

அண்­மையில்   இலங்கை வந்­தி­ருந்த இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை சந்­தித்த   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர்  அர­சியல் தீர்வு விடயம் தொடர்­பிலும் அவ­ரிடம்  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர். தமிழ் மக்­க­ளுக்கு   அர­சியல் தீர்வைக் காணும் விட­யத்தில் இந்­தியா   உறு­து­ணை­யாக   நிற்­க­வேண்டும் என்றும்   அதற்­கான அழுத்­தங்­களை   கொடுக்­க­வேண்டும் என்றும்   இந்­தியப் பிர­த­ம­ரிடம் கூட்­ட­மைப்­பினர் கோரி­யி­ருந்­தனர்.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு புது­டில்­லிக்கு வருகை தர­வேண்டும் என்று  கூட்­ட­மைப்­பினர் விடுத்த கோரிக்­கை­யினை ஏற்­றுக்­கொண்ட இந்­தியப் பிர­தமர் அதற்­கான நட­வ­டிக்­கை­யினை எடுக்­கு­மாறு  அதி­கா­ரி­க­ளுக்கு  உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருக்­கின்றார்.  விரைவில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு புது­டில்­லிக்கு சென்று அர­சியல் தீர்வு தொடர்பில்  பேசக்­கூ­டிய நிலைமை தற்­போது உரு­வா­கி­யி­ருக்­கின்­றது.. 

நாட்டில்  பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள்  தமது அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய அர­சியல் தீர்­வினைப் பெற­ மு­டி­யாது காலத்­திற்கு காலம் ஏமாற்­றப்­பட்டே வரு­கின்­றனர். இந்த நிலைமை இனியும் தொட­ரக்­கூ­டாது.  ஏனெனில்  வடக்கு, கிழக்கைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­கள பௌத்த மய­மாக்கம் என்­பது திட்­ட­மிட்­ட­வ­கையில் அரங்­கேற்­றப்­பட்டு வரு­கின்­றது. இந்த நிலைமை தொட­ரு­மானால்  வடக்கு, கிழக்கு  தமிழர் தாயகம்  என்ற   நிலைப்­பாடே  மாற்­ற­ம­டைந்­து­விடும்.  எனவே அவ்­வா­றான  சிங்­கள பௌத்த மய­மாக்­கத்தை தற்­போது தடுத்து நிறுத்­து­வ­துடன்  அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு  தமிழ் மக்­களின் தலை­மைகள்  ஒன்­றி­ணைந்து  செயற்­ப­ட­வேண்­டிய சூழ்­நிலை தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஆனால்  தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தலை­மைகள்   இன்றும்  ஒன்­றுடன் ஒன்று முரண்­பட்­டுக்­கொண்டு  பிரி­வி­னை­களை  அதி­க­ரித்து வரு­வ­த­னையே காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.  இந்த நிலை­மை­யா­னது  தமிழ் மக்­களின் அர­சியல் பலத்­தினை   பல­வீ­னப்­ப­டுத்­தவே உத­வப்­போ­கின்­றது. எனவே  தமிழ்  கட்­சிகள்  அனைத்தும்  ஒன்­றி­ணைந்து ஓர­ணியில் செயற்­பட்டு  அர­சியல் தீர்­வுக்­கான  முயற்­சி­களை முன்­னெ­டுக்­க­வேண்டும்.. 

தற்­போ­தைய நிலையில் தென்­ப­குதி   அர­சி­யலை எடுத்­துக்­கொண்டால் இன­வாத சக்­தி­களின் செயற்­பா­டுகள்  அதி­க­ரித்து வரு­கின்­றன. சிங்­கள மக்கள் மத்­தியில் தவ­றான  எண்­ணக்­க­ருத்­துக்­களை பரப்பி  சிறுபான்மையின மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கும் செயற்பாடுகள்  முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில்  தமிழ்  அரசியல் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும்  இந்த விடயம் தொடர்பில் சிந்தித்து   அரசியல் தீர்வு விடயத்தில்  ஓர் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.  தற்போது புதுடில்லியில்  இந்தியப் பிரதமரை சந்தித்து  தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.  அதற்கு முன்னர் தமிழ்  தலைமைகள் தமக்குள் ஒன்றுபட்டு தீர்வு தொடர்பில்  ஒருமித்த கருத்துடன்  இந்தியப் பிரதமரை சந்திக்க முன்வரவேண்டும். 

அனைத்துத் தலைமைகளும் ஒன்றிணைந்து   ஒரே குரலில்  கோரிக்கையை முன்வைக்கும்போது அதற்கான அழுத்தங்களை கொடுத்து  செயற்படுத்த வேண்டிய தேவை இந்திய மத்திய அரசுக்கும் ஏற்படும். எனவே  தீர்வு கிடைக்கவில்லை  என்று கவலைப்படுவதை விடுத்து அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

 

https://www.virakesari.lk/article/58451

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.