யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பரியாரி

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி.

Recommended Posts

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாத அரசு மஹிந்தவுக்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குகிறது – ஜே.வி.பி.

In இலங்கை     June 18, 2019 9:24 am GMT     0 Comments     1267     by : vithushan

Bimal-Ratnayake.jpg

குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சில அமைச்சர்களுக்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 57.54 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்தபோதே பிமல் ரத்னாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த அரசாங்கம் நஷ்ட ஈட்டினை முழுமையாக வழங்கவில்லை.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய பல இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல எதிர்க்கட்சி தலைவருக்கு வாகனம் வழங்குவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறினார்.

http://athavannews.com/தாக்குதலில்-பாதிக்கப்பட/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக்க படைகள் 2003ஆம் ஆண்டு ஈராக் போர் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் சவூதி அரேபியாவில் கால்பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்க படைகள்   #சவூதி அரேபியா #கால்பதிப்பு #வளைகுடா #ஈராக்   http://globaltamilnews.net/2019/127041/
    • ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்   ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை, இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளது. ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பில் குறித்த குழுவினால் கேட்டறியப்பட்டன. கலந்துரையாடல் தொடர்பில் கேப்பாப்புலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றைய தினம் எம்மைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாம் தொடர்சியாக முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தின் நியாயப்பாடு, போராடத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எம்மிடம் கேட்டறிந்தனர்    மேலும் எமது பிரச்சினைக்கு அவர்களால் உடனடியாக தீர்வு சொல்ல முடியாத நிலையிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், அமைப்புகளுடனும் கலந்துரையாடி எமக்குரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு தாம் உறுதுணையாக இருப்பதாக கூறிச் சென்றிருக்கின்றனர். என்றனர்.     https://www.virakesari.lk/article/60868
    • சிவனொளிபாதமலையில் மண்சரிவு   நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலையின் மகாகிரிதம்ப பகுதியில் 20ஆம் திகதியன்று இரவு  சுமார் 15 மீட்டர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் கம்பங்கள் மற்றும் நீர் குழாய்கள் சேதமடைந்துள்ளமையால் நீர் மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடற்படையினர் படிக்கட்டு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடும் மழை பெய்தமையால்  மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/60867
    • ஓம் தோழர், அவர் சிறிது காலம் தந்தி ரீவியில் பாண்டேவின் கீழ் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .. 😢
    • 3  மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி ; பாதிக்கப்பட்டோர் உட்பட பலர் பங்கேற்பு ! கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் திறக்கப்பட்டது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர். கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் மாத்திரம் சுமார் 105 பேர் உயிரிழந்ததுடன், பலர்  படுகாயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    https://www.virakesari.lk/article/60860