பிழம்பு

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

Recommended Posts

இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

இலங்கையை சேர்ந்த இருவரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோளான 'இராவணா 1", சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3.45 அளவில் இராவணா 1 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் 'இராவணா 1" செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையை சேர்ந்த இருவரின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்ட 'இராவணா 1" செயற்க்கைக்கோள் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது.

தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட 'இராவணா 1" செய்ற்கைக்கோள் கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

BIRDS 3 Satellite Project

இவ்வாறு கையளிக்கப்பட்ட 'இராணவா 1" செயற்கைக்கோளுடனான ராக்கெட், அமெரிக்காவின் விர்ஜினியாவிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி அதிகாலை, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சிக்னுஸ் (Cygnus) என்றழைக்கப்படும் பொட்களுடனான ராக்கெட் மூலம் இந்த 'இராவணா 1" செய்றகைக்கோள் நாசாவினால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பார்ட்ஸ் 3 திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை, ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து மூன்று சிறியரக செயற்கைக்கோள்களை இன்று விண்ணுக்கு ஏவியிருந்தன.

சிறிய ரகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளுக்கு, மிகவும் குறைந்தளவிலான நிதியே செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைபடத்தின் காப்புரிமை BIRDS 3 Satellite Project

1000 சென்டி மீட்டர் அளவை கொண்டமைந்துள்ள இந்த செயற்கைக்கோள், 1.05 கிலோகிராம் எடையை கொண்டமைந்துள்ளது.

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இராவணா 1 செயற்கைக்கோளின் பயன்பாடு

இலங்கை மற்றும் அதனை அண்மித்துள்ள நாடுகளின் புகைப்படங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல பயன்பாட்டு திட்டங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இராவணா செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதுபடத்தின் காப்புரிமை Getty Images

ஆர்த்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய இந்த செயற்கைக்கோள் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு 'இராவணா 1" என பெயர் சூட்டிப்பட்டிருந்தது.

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-48664561

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பிழம்பு said:

இராமயணத்தில் வரும் இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

Share this post

Link to post
Share on other sites

லாரா சொல்வதை போல இராவண மன்னன் மிகவும் போற்றத்தக்க மன்னனாகவும், அதிசயபிறவியாகவும் சிங்கள மக்களால் போற்றப்படுகிறர்.
இந்த வீடியோவை பாருங்கள் ...சிங்கள பேராசிரியர்,  இலங்கையில் பௌத்தர்களுக்கு முன்னரேயே சிவ வழிபாடை போற்றிய தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் ...ராவணனின் வானியல் சாஸ்திரம் பற்றிய பெருமைகளுமே 

https://youtu.be/QianljhjsqE

https://youtu.be/QianljhjsqE

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
14 hours ago, ampanai said:

இராவணனின் பெயர்? சிங்கள பௌத்தம் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில் இது நடந்துவிட்டது.

நாளை பெயர் மாற்றம் செய்யப்படலாம் !

14 hours ago, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

ஸ்ரீலங்கா... இந்தியாவுக்கு கடுப்பு ஏற்றுவதற்காக, 
இலங்கை மன்னன், சிவ பக்தன்...  இராவணனின் பெயரை தெரிவு  செய்து இருக்கலாம்.

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

செயற்கைக்கோள்களின்  முக்கியத்துவம் அதிகரித்துள்ள  காலத்தில்...
குறிப்பாக இந்தியாவை... ஸ்ரீலங்கா வடிவாக கண்காணிக்கும்.

இந்த செயற்கோளை...  ஸ்ரீலங்காவின் நட்பு  நாடான இந்தியாவிலிருந்து விண்ணுக்கு  ஏவாமல், அமெரிக்காவிலிருந்து  ஏவியதிலிருந்தே...  இருவரின் நட்பு  எப்படி இருக்குது என்று  அறிந்து கொள்ளலாம். :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா.... இராமனுக்கு  முக்கியத்துவம் கொடுத்து,  
இராவணனனை ஒரு அரக்கனாக தான் பார்க்கிறார்கள்.

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

9 hours ago, தமிழ் சிறி said:

தற்போது  விண்வெளியில்... இலங்கை தனது முதல் முயற்சியை  செய்துள்ளது.
இராவணா - 1 என்று பெயர் வைத்ததிலிருந்தே... இன்னும் பல இராவணாக்கள்,  
விண்ணுக்கு செல்லும் என்ற செய்தியை  சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

சிங்களவர்களுக்கு ஒரு தெளிவான வரலாறு கிடையாது. உலகில் ஒரு தீவில் வாழும் இந்தக் குழும மக்கள் மீது ஆதிக்க சக்திகள் அத்தீவின் அமைவிடம் கருதி.. செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். 

அதனடிப்படையில் அத்தீவின் ஆட்சி அதிகாரங்களை அத்தீவின் பெரும்பான்மையினர் என்ற வகையில் இன்று சிங்களவர்கள் தம் வசம் வைத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால்.. சிங்களவர்கள்.. இராவணனை விட சீதா இராமனை அதிகம் கொண்டாடுகின்றனர். புத்த கோவில்களில் இந்துக் கடவுள்களை வைத்துள்ளனர்..!

ஆனால்.. அரசியல் ரீதியில்..தமிழர்கள் வாழும் இடங்களில்.. இந்துக் கோவில்களை இடித்து.. புத்த கோவில்களை அமைக்கின்றனர். இராவணனை தமிழ் மன்னன் என்றதும்.. சீதா இராமனை விட்டு இராவணனை கொண்டாடுகின்றனர். அடிப்படையே இல்லாமல்.. சிங்கத்தில் இருந்து வந்த இனம் என்கின்றனர்..!

இப்படி சிங்களவர்களிடம்.. பல சுயமுரண்கள் காணப்படுகின்றன. ஆனால்.. உலகின் கண்களுக்கு இலங்கைத் தீவின் அமைவிடமும்.. அங்குள்ள பெரும்பான்மை இனத்தின் ஆதரவும் தான் முக்கியமாகத் தெரிகிறது. அதில் நல்லா குளிர்காய்கிறது சிங்கள இனம். அவ்வளவே. 

Share this post

Link to post
Share on other sites
On 6/18/2019 at 2:38 PM, Lara said:

சிங்களவர்கள் இராவணனை சிங்கள மன்னனாக தான் கூறுபவர்கள்.

சிங்களவர்கள் கிமு கிபி இடைப்பட்ட ஆண்டுகளில்தான் இலங்கையில் குடி ஏறி கள்ள காணி பிடித்தவை என்று புளுகுவம்சம் மன்னிக்கவும் மாகாவம்சம் கூறுது அதே காலபகுதியில் தான் வால்மிகியால் ராமாயணம் தொடர் எடுக்கபட்டது சே ........ எழுதபட்டது என்கிறார்கள் இதுக்குள்ள  கள்ள காணி பிடிக்கும் போது பூர்வீக குடிகளான இயக்கர்களை கல்லெறிந்து கலைத்தவையாம் இந்த சிங்களர் எப்படி இராவணன் மன்னன் ஆகினான் இவங்களுக்கு ?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, Lara said:

வால்மீகி இராவணனை நல்ல விதமாக தான் எழுதியதாகவும் கம்பன் உட்பட சிலர் இராவணனை அரக்கனாக சித்தரித்ததாகவும் கேள்விப்பட்டேன். (வால்மீகி எழுதிய இராமாயணத்தை நான் வாசித்ததில்லை).

லாரா... இராமாயணம், நானும் வாசித்ததில்லை.
எனக்கும்,   உங்களைப்  போல்...  சில செவிவழி  தகவல்கள் மட்டுமே தெரியும்.
எனக்குத் தெரிந்த அளவில், யாழ். களத்தில்.. புங்கையூரான் மட்டுமே, இராமாயணத்தை.. கரைத்து குடித்தவர்.  :)

4 hours ago, Lara said:

10 தலை கொண்ட இராவணன் என கூறப்படுவதால் இராவணா-10 வரை அனுப்பக்கூடும். :grin:

(இராவணனுக்கு உண்மையில் 10 தலைகள் இல்லை, 10 துறைகளில் சிறந்து விளங்கியதால் அவ்வாறு கூறப்பட்டது என அறிந்தேன். புனைவுகள் இல்லாமல் யாரும் எதையும் எழுத மாட்டார்கள் தானே.:grin:)

அட்றா சக்கை...  "அப்பலோ  10"  வரை.... மட்டும் தான்,  விண் வெளியை நோட்ட மிட்டது.
அப்பலோ  11,  வெளியில் கால் வைத்து  சாதனை புரிந்தது.

இராவணாவும், அப்பலோவும்...  நாசாவில் இருந்து, போனதால்...
இராவணா  11 வராமல்...  அதற்கு,  பராக்கிரமபாகு என்றோ,   பிரபாகரன் என்றோ... 

சிங்களவர் பெயர் வைக்க, சாத்தியம் நிறைய உள்ளது. :grin:

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரிக்கு (பாகிஸ்தான்) × பிருத்துவி (கிந்தியா) என்டால்..ராவணனுக்கு எதிர் கட்டாயம் ஏதாவது உந்த இஸ்ரோகாரர் செய்வினம் .. பார்ப்பம் 😊

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இது உண்மையில் செயற்கை கோளே அல்ல. செயற்கை கல். அதை விண்வெளில கொட்டினம்.. எனி அதால விண்வெளியும் அதாவது பூமியை சுற்றிய விண்வெளியிலும் நெரிசல் வரப்போகிறது. 

நாசா பல விடயங்களை மூளை கெட்டதனமாய் செய்திட்டு.. அப்புறம்.. தான் சிந்திப்பார்கள்.. ஐயோ இப்படி ஆகிச்சேன்னு. 

Share this post

Link to post
Share on other sites

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

Image result for space waste

On 6/18/2019 at 12:31 PM, பிழம்பு said:

இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் ஒன்றரை வருடம் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஐந்து வருடங்கள் அதன் பயன்பாட்டை பெற்றுக் கொள் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒன்றரை வருடத்துக்குப் பின் குப்பையில் போட்டது நிரந்தரக் குப்பையாகிவிடும். 

More than 7,000 satellites have been launched into Earth’s orbit for 60 years, but now only one-third are still functioning. The remaining satellites have ceased functioning, and have become space junk.

We know, the object is in the sky. But how much, no one knows. European space agency ESA’s data pointed that since 6,600 satellites have been launched since 1957. Moreover, there are more 29,000 objects measuring more 10 centimeters in Earth orbit.

It is feared that there will be a collision hazard, due to fracture of the satellite, because the diameter of one centimeter alone is a danger threat. Because the spacecraft waste space moving at speeds up to 40,000 km per hour.

“A fractional collision of an object the size of a coffee bean at such a high speed with a satellite, has the equivalent impact force of a grenade,” said the astronaut, quoting the page.

https://www.spacewastesolutions.com/decades-outer-space-junk-orbiting-earth/

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

34 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, பெருமாள் said:

இந்த வகை சற்றலைற் யாரும் செய்யலாம் கொஞ்ச தொழில் நுட்ப அறிவு இருந்தால் காணும் யு tube ல் நிறைய இருக்கு இவைண்ட பெருமைக்கு குப்பைகளை அனுப்பி விளையாடினம் .

இங்க ஒருத்தன் யுரிப்பை பார்த்து 3D பிரின்டரை பாவிச்சு சுடக்கூடிய துப்பாக்கியே செய்திருக்கான்.

இதெல்லாம் இப்ப யுயுபி. 😂

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, Justin said:

பெருமாள், யூரியூபில் இருக்கிற வீடியோக்கள் பேப்பரில் எப்படி ஒரு செய்மதியின் மொடலைச் செய்வது என்று தான் காட்டுகின்றன! எப்படி ஐயா இப்படியெல்லாம் ஏமாறுகிறீர்கள்? 😥

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, ரதி said:

இது குப்பை, யூ டியூபை  பார்த்து எல்லோரும் செய்யலாம் என்று சொல்றவை தாங்களும் செய்யலாமே!...வாயால வடை சுட த்  தான் லாயக்கு 

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, பெருமாள் said:

நாங்க எண்ணை சட்டியில் நல்ல கொதிநிலைக்கு வந்த பின்தான் வடை என்னது சொல்லுங்க "வடை " சுடுவது உண்டு நாங்களே குப்பை என்றுவிட்டம் பின்பு உங்களுக்கு விருப்பம் என்றால் செய்து பாருங்க. 

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, பெருமாள் said:

சிறிய செய்மதி செய்யும் ஒளிநாட உண்டு  பாஸ் .

பெருமாள், இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை! ஆனால் போக முதல்: ஒளிநாடா இருந்தால் இங்கே இணைப்பது தானே? ஜூஸ் பெட்டியில் குழந்தைகள் எப்படி செய்மதி செய்யலாம் எண்டு தான் நாசா போட்டிருக்கிறது. சென்சர்கள், சூரிய சக்தி மூலம், மின்கலம், ரிமோட் சென்சிங் என்று சில தொழில் நுட்பங்களை இணைத்துச் செய்யும் செய்மதியும் பொறியியல் விசையால் இயங்கும் 3D துப்பாக்கியும் ஒன்று என்று நீங்களும் நண்பர்களும் நம்பினால், அந்த அல்லா தான் உங்களைக் காப்பாற்ற வேண்டும்!

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Justin said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

7 minutes ago, ரதி said:

ஊரை விட்டு ஓடி வந்து விட்டு ,இங்க  வசதியாய் இருந்து கொண்டு ஊரில் இருப்பவர்கள் தங்களால் இயன்றதை செய்கின்றனர்...அதை நக்கடிக்க கொஞ்சசம் கூட வெட்கமாயில்லை ...எல்லாத்தையும் கரைச்சு குடித்தவர்கள் மாதிரி...இது செய்வது இலகு என்று சொன்னது நீங்கள்...செய்து காட்ட வேண்டியது நீங்களே அன்றி நான் இல்லை 

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, Justin said:

இந்தக் கொமெடித் திரியில் நேரம் செல்வழிக்கப் போவதில்லை!

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சும்மா சிங்களம்,தமிழ் என்று கதை விட வேண்டாம்...அண்மையில் வன்னியில் இருந்து ஒரு தமிழ் மாணவனது சாதனையும், கல்முனையில் இருந்து  ஒரு  தமிழ் மாணவனது சாதனையும்  உதே சிங்களவன் தான் பாராட்டு ஊக்கம்  கொடுத்து செய்வித்தவன்.
 நீங்கள் அவர்களை பாராட்டவோ,ஊக்கம் கொடுக்கவோ தேவையில்லை...அவர்களுக்கு அது தேவையுமில்லை...ஆனால் நக்கலடிக்காமல்,குறை சொல்லி உங்களை தாழ்த்தாமல் இருந்திருக்கலாம்.

யாழை எத்தனை பேர்  பார்க்கினம்...உங்களுக்கு இது பிடிக்கா விட்டால் விலகி போங்கள்...நீங்கள் எத்தனை நூல்களை வாசிக்கிறீர்கள்...உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை 
 
Share this post

Link to post
Share on other sites

சிங்களவர்களாக பார்க்காது இரண்டு தனி மனிதர்களின் முயற்சி என பார்க்கும்போது,

உலகமே பல பில்லியன் கோடி டாலர்களை கொட்டி இயங்கும் ஒரு துறையில், உலகம் முழுவதுமே பிச்சை எடுக்கும் நாட்டிலிருந்து இரு மனிதர்களின் சிறு அளவிலான எத்தனமும் அதை வெற்றிகரமாக விண்வெளியில் நிறுத்தும் அளவிற்கு தரமானதாக வடிவமைத்ததும்   சிறிலங்காவின் கொண்டிசனோடு ஒப்பிடும்போது அந்த நாடுக்காரர் இருவர் செய்தது நிச்சயம் பெரிய பாய்ச்சல்தான்.சாதனைதான்.

இதையே வடகிழக்கில் இருக்கும் இரு  தமிழ் பல்கலைகழக மாணவர்களோ புத்தி ஜீவிகளோ செய்திருந்தால் வாழ்த்து மழைகள் விண்ணை முட்டியிருக்கும்.

அடக்குமுறை என்று வரும்போது சிங்களவன் தமிழன் பேதம் கண்டிப்பாக பார்க்கப்படவேண்டும்.

அறிவியலில் அது எதற்கு?

செயற்கைகோள் தொழில் நுட்பத்தில்; அரிவரி நிலையில்உள்ள நாட்டில் கொண்டு ஓரிருவரின் கூட்டு முயற்சியில் உருவான சாதனைக்காக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதனை சிங்கள இனத்தின் சாதனையாக அவர்கள் உள் நாட்டிலும் வெளி உலகத்துக்கும் காட்டிக்கொண்டார்கள் என்றால் காரி துப்பிவிட்டு வாழ்த்தை வாபஸ் வாங்கவேண்டியதுதான்.

 • Like 6

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

தாங்கள் ஏதோ பிரம்மன் போல் இங்கு வந்து தரிசனம் தருகின்றீர்கள்.தாங்கள் ஒரு தனி திரி திறந்தாலும் ஏதோ தங்களை புதுமையாக விசேடமானவனாக வெளிக்காட்டுகின்றீர்கள்.தங்கள் கருத்துக்களும் ஏதோ  பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை போல் இங்கே பகிர்கின்றீர்கள். உங்களுக்கு நேரமில்லையெண்டால் எவன் வெத்திலை வைச்சு கூப்பிட்டவன்? முன்னர் ஒரு திரியில் நீங்கள் குறிப்பிட்டது போல் உங்களுக்கு  பிரயோசனமான தளங்களில் போய் வெட்டி புடுங்க வேண்டியதுதனே.

அண்ணை, அவ்வளவு சீக்கிரமாகப் போய் விடப் போவதில்லை! அதிருக்கட்டும், இது அறிவியல் சம்பந்தமான திரியல்லவா? நீங்கள் உங்க நிண்டு என்ன செய்யிறீங்கள்? 

3 hours ago, பெருமாள் said:

யாரும் உங்களை இழுத்து பிடிப்பதில்லை பாஸ் கருத்து சுதந்திரம் .

உங்கடை இனமா சிங்களவர் ? அவர்கள்தான் இந்த மினி சட்லைட் செய்துவிட்டு அடைகோழி போல் கத்துகின்றனர் அதுவும் சிங்கள அரசின் அனுசாரனையுடன் . இதே வேலையை வடகிழக்கு மாணவர்கள் செய்தால் பின் தள்ளபட்டு இருப்பார்கள் எந்த உதவியும் கிடைத்தும் இருக்காது .

என்னுடன் கோபபட்டு விட்டு போங்கள் நான் கவலைப்படமாட்டன் ............

சரி, அந்த பேப்பர் சற்றலைற் செய்யும் இணைப்பு எங்கே? அல்லது அதுவும் முன்னர் ஒரு திரியில் GMO உணவை இங்கிலாந்தில் துகிலுரித்த ஒரு விஞ்ஞானியின் பேப்பரைத் தேடிக் கொண்டு வாறன் எண்டு "கம்"மெண்டு கழண்ட மாதிரிக் கழரும் திட்டம் தானா? 

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகள் ஒருபோதம் கோட்டாவுக்கு கிடைக்காது. ஏனெனில் அவர் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவர். அதற்கும் மேலதிகமாக அவர் சட்டங்களை மதிக்கும் நபர் இல்லை. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதில் சாதக தன்மை அற்றவர். இவ்வாறான ஒருவரை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்” என மேலும் தெரிவித்தார்.     http://athavannews.com/தமிழர்கள்-ஒருபோதும்-கோட்/
  • புதிய பிரதமராக இன்று பதவியேற்கின்றார் சஜித்? ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மாலை அல்லது நாளை மாலை சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறிப்பாக ஹரீன் பெணான்டோ, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் குழப்ப நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரணிலை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   http://athavannews.com/புதிய-பிரதமராக-இன்று-பதவ/  
  • சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்று மட்டக்களப்பு கல்லடி உப்போடை சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக வீரர் எஸ். அபிநாத் 92கிலோவுக்கான பிரிவில் பங்குகொண்டு 03ஆம் இடத்தினைப்பெற்றுள்ளார். இவர்களுக்கான பயிற்சிகளை மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் ப.திருச்செல்வம் வழங்கியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமைசேர்த்த இந்த மாணவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இன்று மாலை மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று வீரர்களை வரவேற்ற மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான சாதணைகளை மல்யுத்த வீரர்கள் தேசிய ரீதியில் மேற்கொண்டுவரும் நிலையில் வீரர்கள் பயிற்சிகளை செய்வதற்கு தனியான இடம் இல்லாத நிலை தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார். இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மாநகரசபை உறுப்பினரும் சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக முகாமையாளருமான தி.சிறிஸ்கந்தராஜா,மாநகரசபை உறுப்பினர்களான து.மதன்,ரகுநாதன்,வி.பூபாலராஜா, மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் அதிபர் சண்டேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.   http://www.battinaatham.net/description.php?art=21280
  • புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190     பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகி அங்கு தனது BA (Hons ) பட்டப்படிப்பையும் பின்னர் PHD பட்டத்தையும் பெற்றுள்ளார். பேராசிரியர் நிஷான் கனகராஜா 2006-2009 ஆம் ஆண்டுவரை பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்துக்கான ஆராய்ச்சி பணிப்பாளராகவும், 2010- 2011 வரை கணனி விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும், 2011- 2014 வரை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக நியமனம் பெற்றார். Signal Processing என்ற ஆய்வில் பேராசிரியர் நிஷான் கனகராஜா நிபுணத்துவம் பெற்றுள்ளார். இது தொடர்பில் இவர் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 1966 இல் சுண்டிக்குளியில் பிறந்த பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் தந்தை கனகராஜா யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் தாய் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஆசிரியையாகவும் இருந்தவர்கள். உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி லெஸ்டர் பல்கலைக்கழகம் 167 ஆம் இடத்தில் உள்ளது. பிரித்தானியாவில் 25 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சென் ஜோன்ஸ் கல்லூரியில் 1985 ஆம் ஆண்டின் உயர்தரப் பிரிவில் கற்ற பேராசிரியர் றமா திருநாமச்சந்திரன் பிரித்தானியாவின் Canterbury Christ Church University இல் துணைவேந்தராக உள்ளார் என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.   http://www.samakalam.com/செய்திகள்/புகழ்பெற்ற-லெஸ்ரர்-பல்கல/
  • ஆம், Three இன் mobile home  broadband, மிகவும் உபயோகமானது. வாகனத்தில் boot இற்குள்ளோ அல்லது ஆசனகளுக்கு கேலேயோ வைத்து, மின் இணைப்பு கொடுத்தால், வாகனத்தில் broadband.