யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
கிருபன்

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.

Recommended Posts

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் எண்ணுகின்றார் ; காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்.

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகின்றார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

DSC_0896.JPG

வவுனியாவில்  850வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உண்ணாவிரத போராட்ட கொட்டகையில் இடம்பெற்ற  ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

ஐ.நா பாதுகாப்பு சபையில் முக்கியமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளமையை  கருத்திற்கொண்டு புதிதாக இணைத்தலைவிகள் மூவரை தெரிவு செய்துள்ளோம். மேலும் வடக்கு, கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தை சேர்ந்த தலைவர்கள் அந்தணர்கள் பங்கு பற்றுகின்ற யாகம்  ஒன்றினை  28ம் திகதி நடாத்த தீர்மானிதுள்ளோம். 

DSC_0892.JPG

குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல் போன உறவுகளிற்கு  கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும்  யாகம் மற்றும் பயனையும் இடம்பெறவுள்ளது. 28ம் திகதி காலை   9.00 மணியில் இருந்து 11.30 மணி  வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

நாங்கள் இவ் யாகத்திற்கு எந்த ஒரு அரசியல்வாதியையும்  அழைக்கவில்லை ஏனெனில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு. இது ஒரு ஆன்மீக ஆத்ம பலத்திற்கான நிகழ்வாக மட்டும் இருப்பதனால் தமிழர்களாக இதில் யாரும் கலந்து கொள்ளலாம். அதற்கு எமக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்தார். 

இதன்போது தற்போதைய சூழலை பயன்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுவிட முடியும் என கூறப்பட்டு வரும் நிலையில் தாங்களது பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என எண்ணுகின்றீர்களா என ஊடகவியலாளரொருவரால் கேட்கப்பட்டபோது,

எமது போராட்ட ஆரம்ப காலத்திலே தமிழ் தேசிய  கூட்டமைப்பு தமிழர்களுக்கான தீர்வை பெற்றுத்தராது என்று கூறியிருந்தோம். குறிப்பாக எமது போராட்டம் ஆரம்பிக்கும் போதே அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சம்மந்தரின் உருவ பொம்மையை எரித்துதான் எங்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்து விடும் தவறுகளையும் வெளிப்படுத்தியிருந்திருக்கின்றோம். 

DSC_0885.JPG

அண்மையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்திய தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று  உரையாற்றியிருந்தார். இவ்வுரையானது தமிழர்களிடையேயும், சமுக வலைத்தளங்களிலேயும் ஒரு கேலிக்குரிய விடயமாக நகைச்சுவையான விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களிற்கான உண்மையான தீர்வாக அமையும் என தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/58512

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகின்றார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

ரணிலுக்காக நீதிமன்றங்களில் போரை நடத்திய தளபதியாக சகுனி சுமந்திரனை தமிழுரசுக் கட்சி கருதுகிறது! 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

missing-1.jpg

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகிறார் – உறவுகள் சாடல்

போரை வழி நடத்திய தளபதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை எண்ணுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட கொட்டகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கை சேர்ந்த அந்தணர் ஒன்றியத்தைச் சேர்ந்த தலைவர்கள் அநதணர்கள் பங்குபற்றுகின்ற யாகம் ஒன்றினை 28ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளோம். குறிப்பாக தமிழர்களின் தீர்வுக்காகவும் காணாமல்போன உறவுகளுற்கு கிடைத்த முதல் வெற்றியினை தக்க வைப்பதற்காகவும் யாகம் மற்றும் பஜனையும் இடம்பெறவுள்ளது.

28ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து 11.30 மணி வரை யாகம் நடைபெறவுள்ளதால் அனைத்து தமிழர்களும் குறிப்பாக பாதிக்கப்பட்ட தாய்மார்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கின்ற சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தான் ஒரு போராட்டம் ஒன்றினை நடத்தி தளபதி போன்று தீர்வுக்கு முயலுவோம் என்று உரையாற்றியிருந்தார்.

இவ்வுரையானது தமிழர்களிடையேயும் சமூக வலைத்தளங்களிலேயும் ஒரு நகைச்சுவையான விடயமாக பார்க்கப்படுகின்றது. அதனால் இவர்கள் அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்குவதுதான் தமிழர்களுக்கான உண்மையான தீர்வாக அமையும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/போரை-வழி-நடத்திய-தளபதியா/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர். அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்துகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்" என தெரிவித்தனர்.     https://www.virakesari.lk/article/60845
  • தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்   தமிழகத்தில் இந்தி திணிப்பை மோடி அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையில் இந்தியர்களே மற்ற நாட்டவர்களுக்கு குருவாக இருப்பார்கள். தொழில்முனைவோரை உருவாக்கிடவும், தொழில்களை பெருகிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். சூட்கேஸ்கள் ஆங்கிலேயரின் கலாச்சாரத்தை  வெளிப்படுத்தக் கூடியது. நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் வரவு செலவு திட்டம்  சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சூட்கேஸ் என்பதற்கு மறைமுகமாக வேறு அர்த்தமும் இருக்கிறது. சூட்கேஸ் கொடுப்பது, சூட்கேஸ் வாங்குவது போன்ற லஞ்ச பழக்கவழக்கங்களை அது குறிப்பதாக இருக்கிறது. மோடியின் அரசாங்கம் சூட்கேஸ் அரசாங்கம் அல்ல. மோடி அரசின் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் சூட்கேஸிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு எல்லாம் மோடி அரசு செய்யவில்லை. மாறாக சிரேஷ்ட பாரத் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் தமிழை வளர்க்கும் முயற்சியில் பா.ஜ.க.வும் ஈடுபட்டு வருகிறது. ஹிந்தி திணிப்பு என்பது உங்களுக்கு கிடைத்த தவறான தகவல். தபால் துறை தேர்வில் நடந்தது நிர்வாக ரீதியிலான விவகாரம். அது ஹிந்தி திணிப்பு ஆகாது. தற்போது தபால் துறை நேர்முகப்பரீட்சைகளை தமிழில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.” என்றார்.   https://www.virakesari.lk/article/60827
  • மானிப்பாய் துப்பாக்கிச்சூடு – நால்வர் கைது! யாழ்ப்பாணம் – மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை)  யாழ்.போதனா வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் உயிரிழந்தவருடன் அலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/மானிப்பாய்-துப்பாக்கிச்/
  • கன்னியாவில் இந்துமதகுருவுக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டும் ஏன் தமிழர்களே அமைதியாக உள்ளனர்.? இந்நிலையில் வேற்று இனமக்கள் எப்படிக் குரல் கொடுப்பார்கள்.?? ஒரு மதத்தைக் கடைப்பிடிக்கும் அந்த மக்கள் இனத்திலிருந்தே மதகுருமார்கள் தோன்றுகின்றனர். ஆனால் இந்து மதத்தைக் கடைப்பிடிக்கும் தமிழ் இனத்திலிருந்து இந்து மதகுரு தோன்றுவதில்லை. பிராமணர் என்ற வேறொரு இனத்திலிருந்து வந்தவர்களே மதகுருக்களாகத் தோன்றுகின்றனர்.. ஒன்றில் பிராமணர் என்ற வழக்கொழிந்து அனைவரும் தமிழர்கள் ஆகவேண்டும் அன்றில் தமிழர்கள் என்ற வழக்கொழிந்து அனைவரும் பிராமணர்கள் ஆகவேண்டும். அப்போதுதான் தங்களுடைய இனமென்றும், தங்கள் மதகுருவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற உணர்வும் அந்த மக்களுக்கு ஏற்படும். வேற்றுமத இனமக்கள், தங்கள் மதகுருவோடு பழகும் குடும்ப, இன ஒற்றுமை, இன்று இந்துமதத்தைத் தழுவியிருக்கும் தமிழர்கள், மற்றும் இந்துமத குருக்கள் இடையிலும் இல்லை என்பதே உண்மை. அதனாலேயே இந்த இடர்ப்பாடு என்று கொள்ளலாம். எது எப்படியாயினும் மதகுரு என்ற நிலையில் ஒருவரை அவமானப்படுத்துவது மாபெரும் குற்றம். அது தண்டிக்கப்படவேண்டியதே.    
  • பேலியோ!  இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது.  பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக்  கைவிட்டிருந்தேன். இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன்.  இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத்தொடங்கும்.  சுவாசவீதம் அதிகரிக்கும். இதயத்துடிப்பு எகிறும் ஆனால் 5 கிலோமீட்டர் ஓடியபின்பும் என் சுவாசவீதமும், இதயத்துடிப்பும் ஓய்வாக இருக்கும்போது இருக்கும் நிலையிலேயே இருந்தது.  நாங்கள் படித்த உடற்தொழிற்பாட்டையே முற்றாக மாற்றிப்போட்டுவிட்டது இந்தப்பேலியோ உணவுமுறை.   தொழில்முறையான விளையாட்டு வீரர்கள் இந்த உணவுமுறைக்கு மாறினால் பல சாதனைகளை இலகுவாகச் செய்யலாமென நினைக்கிறேன். இந்த உணவுமுறை பற்றிய மேலதிக தகவல்களை விரைவில் ஆறாவதறிவு இணையத்தளத்தில் எழுதுகிறேன்.