Recommended Posts

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது நடந்து இரண்டு மாதங்களுக்குக்கிட்ட. போன கிழமைதான் அவள் பிரட்டின கடிதம் வந்தது. யேர்ம்ன் போல் இங்கு பொலிஸ் வந்து முடிவெடுப்பதில்லை. அதுதான் உதுகளுக்குத் துணிவு.

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, Nathamuni said:

உதில முக்கியமான விஷயம் ஒண்டு இருக்குது.

அதுதான் இன்சூரன்ஸ் கொம்பனியலின்ட தொழில் ரகசியம்.

பிழை அந்தப் பக்கம் இருந்தாலும், அந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, உண்ட ஆள் தான் பிழை எண்டு கதையை முடிசிட்டு, நம்மளில பிழை எண்டு அவை சொல்லுகினமே எண்டு இங்க நூல் விடுவினம்.

நாம சொல்லுறதை எடுக்காத மாதிரி, கதையை விட்டு, ப்ரீமியத்தை ஏத்தப் பார்ப்பினம்.

இதென்ன கோதரியாகிடக்குதெண்டு கண பேர் ப்ரீமியத்தினை கூட கடடுவினம்.

மூன்று  வழி:

ஒன்று, கொஞ்சம் காசு கூடினாலும், நல்ல, மதிப்புள்ள, இன்சூரன்ஸ் கொம்பனியளோட சகவாசம் வைக்க வேண்டும். மலிவு எண்டு சில்லறை கம்பெனியளிடம் போனால், இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இணைய யுகம் வந்த பின்னர், இந்த சில்லறைக் கொம்பனிகள் அதிகம் வந்துள்ளன.

இரண்டாவது: தகவல் அறியும் சட்டத்தின் படி, மற்ற இன்சூரன்ஸ் கம்பெனி உடனான dealing முழு விபரத்தினை நான் கோர முடியுமா என்று ஒரு மறுத்தான் நூலை போட்டு பார்க்க வேண்டும்.

மூன்றாவது: நீ, சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முறைப்பாடு செய்யும் வழிமுறை, விபரத்தினை தா என்று அடுத்த நூலை இறக்க வேண்டும்.

டபெக்கெண்டு எல்லா நூலையும் விடாமல், நிலைமையை புரிந்து விடுங்கோ.

இங்க பகிர்ந்தியல் எண்டால், பலர் ஆலோசனை தருவார்கள்.
 
அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

2 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை உந்த பிரட்டல் வேலையெல்லாம் சரிவராது  தெரியும் தானே......அது சரி காரை ஏன் பின்னுக்கு உருள விட்டனீங்கள்? 
இல்லாட்டி றிவேஸ் கியரை மாத்தி போட்டுட்டியளோ??

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, பெருமாள் said:

இருவரின் காரின் அடிவிழுந்த பகுதி போட்டோக்கால் உண்மையை சொல்லி விடும் .

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
35 minutes ago, nedukkalapoovan said:

இப்படியும் ஒரு பெருமை உலாவுதா நம்பவர்களிடம்.

ஆனால்.. எனி எல்லாக் கார்களுமே ஆட்மெட்டிக் தான். காரணம் எல்லாமே.. மின்சாரக் கார்களாகப் போகின்றன. ஆகவே இந்தப் பெருமையும் எனி எம்மவர்களிடம் இருந்து விடைபெற்றாகனும். 

ஏற்ற இறக்கங்களில்.. சரியாக கான்ட் பிரேக் போடாட்டி.. சரியான முறையில் பார்க் பண்ணாட்டி எந்தக் காரும்..தரித்து நிற்கும் எந்தக் காரும்..  முன்.. பின் என்று தளச் சரிவுக்கு ஏற்ப இயங்கும். 

ஆனால்.. லண்டன் தெருக்களில் ஆசிய ஆன்ரிகள் (தமிழ் ஆன்ரிகள் உட்பட) போக்குவரத்து நெரிசலில் முக்கிய பங்கெடுக்கிறார்கள் என்பதை இவர்கள் வதியும் பகுதிகளில்.. பாடசாலை தொடங்கும்... விடும் நேரங்களில் காரை செலுத்தினால் புரியும். 

யேர்மனியில் மூன்று தடவை தான் ஒருவர் லைசென்சுக்கு தேர்வுக்கு ஓடிக் காட்டலாம். அதன் பிறகு லைசென்ஸ் கொடுக்க மாட்டார்கள்  நாம் லைசென்ஸ் எடுத்த காலத்தில் அப்படித்தான் சட்டம். ஸ்பெஷல் நீட் தேவையுள்ளவர்கள் மட்டுமே ஓட்டமற்றிக் கார் ஓடுவது. மிக விலை உயர்ந்த கார்களுக்கு மட்டும் ஓட்டமற்றிக் இருக்கும். இப்ப எப்படியோ தெரியவில்லை. ஆனால் இங்கு லண்டனில் பத்துத் தரம் கூட எடுக்கலாம். அதிகமான பெண்கள் பயத்தில் ஒட்டமற்றிக் கார் ஓடுவது. எனக்கு அது பிடிப்பதே இல்லை.

தளச் சரிவுகள் இல்லாத சம தளத்தில் கியர் மொடல் கார் உருளாது. அத்துடன் நான் ஐந்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் உருளச் சந்தர்ப்பமேயில்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளின் Texco இன்சூரன்ஸ் இல் இருந்து வந்து என் காரைப் பார்ப்பதற்குக் கேட்டுள்ளனர். 

Tesco தொழில் மளிகை யாவாரம்.

இன்சூரன்ஸ், பாங்கிங் எல்லாம், கமிஷன் யாவாரம்.

நான் சொன்ன சில்லறைகளில், இது பெரிய சில்லறை.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவளது Texco.  நான் இடிக்கவும் இல்லை. கிளைம் பண்ணவும் போவதில்லை. அவர்களின் காரில் எந்தக் காயமும் இல்லை.

கிளம்பிட்டினம் இனி என்னைக் கெட்டவள்  ஆக்க.😀 

முப்பது ஆண்டுகள் அனுபவம் கண்டியளோ. ஒருநாளும் பின்னால உருள விட்டது கிடையாது. லண்டன் பெண்கள் முழுப்பேரும் ஓட்டமற்றிக் கார் ஓட நான் கியர் மொடல் தான். வச்சிருக்கிற காரும் ஸ்போர்ட் மொடல். WV Passat சலூன் மொடல். முன்னால வேகமாய் போகும். பின்னால போகாது.

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

 • Haha 4

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

Edited by goshan_che

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

 • Confused 1
 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, புங்கையூரன் said:

நான் இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்....VW  பசாட்  எண்டு....!

லண்டனில    பேரை மாத்தி வைச்சிட்டாங்கள் போல கிடக்குது......!😘

கைதடுமாறி ஒண்டைப் போட்டிடக்கூடாது இங்க. 24 மணித்தியாலத்துக்குள்ள எடிட் பண்ணலாம் என்று நிழலி சொன்ன ஞாபகம். ஆனால் 12 மணித்தியாலத்துக்குப் பிறது விடுக்குதில்லை.😀

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

1 hour ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதற்கான பதில் நான் தனித்திரி திறந்து கூறுகிறேன். ஏனெனில் அதன் காரணங்கள் பெரிது.

உங்களுக்கும் கோசானுக்குச் சொன்ன பதில் தான்

நன்றி. எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கூடவே ஜேர்மனியில் இருந்து யூகேவுக்கு வந்த பின்னரும், சதா யூகேயை புறணி பாடும் மனோநிலை பற்றியும் அலசலாம்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, goshan_che said:

எனக்கு ஒண்டு மட்டும் விளங்கிறதே இல்லை.

யேர்மனி அந்த மாரி ஒரு நாடு, காற்றுப் பறிஞ்சாலும் பொலிஸ் வந்து தீத்து வைக்கும். பொம்பிளையள் எல்லாம் மனுவல் கார்தான் ஓடுறது.

ஆனாலும் ஜேர்மன் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஏனிந்த தமிழ்ச் சனம் மட்டும் லண்டன் லண்டன் எண்டு ஓடிவருகுதுகள்?😂.

இன்னொண்டும் விளங்கிறேல்ல,

சொர்க்கம் போல ஜேர்மனி இருந்தும், இதுவரைக்கும் பிரிடிஸ் பாஸ்போர்ட் எடுத்த கையோட ஜேர்மனிக்கு போன தமிழ் குடும்பம் எண்டு ஒண்ட இன்னும் நான் காணேல்ல.

இது ஏன்?

11 hours ago, MEERA said:

பிள்ளைகளின் படிப்பை சாட்டுவினம். ஆனால் பெரும்பாலானவர்கள் வர காரணம்,

உதவித் தொகை - 50%

அங்கிருக்கும் வீட்டு வாடகை - 25%

படிப்பு - 25%

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, குமாரசாமி said:

அப்போ யூகே சிற்றிசன் எடுத்தாப்பிறகு  கனடா அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்த டமிழர்களின் நோக்கம் என்னவாக இருக்கும்? :cool:

எனக்குத் தெரிய இப்படி போற ஆக்கள் வலு குறைவு. சிங்கிளாக இருப்பவர்கள் கலியாணம் கட்ட எண்டு போவீனம். அல்லது ப்ரொபெசனல்ஸ் வேலை தேடிப் போவீனம். ஆனால் ஐரோப்பாவில் இருந்து வாற மாரி குடும்பம் குடும்பமா வாறேல்ல.

போலந்து, ரொமேனியா, பல்கேரியா காரர் ஏன் வருகீனம் என்றது விளங்குது, ஆனா 10 வருசத்துக்கும் மேலாக யூகேயை விட பெரிய பொருளாதாரத்தை உடைய நாட்டில் வசித்து விட்டு, பிள்ளையள் நல்லா டொச் கதைக்கிற நிலையிலும் ஏன் எங்கட சனம் ஓடி வருதெண்டுதான் விளங்கேல்ல.

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, goshan_che said:

ஓரளவுக்கு......ஆங்கிலம் பேசுபவர்களை....அண்ணார்ந்து பார்த்த அடிமைப் புத்தி தான் காரணம்.. என நினைக்கிறேன்!

நானும் இங்கிலாந்திலிருந்து...தொழில் ரீதியாக...அவுஸ்திரேலியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களுக்குள் அடங்குவேன்! 

முக்கியமான காரணம் எனது துணைவியாருக்குக்  குளிர் காலனிலை ஒத்து வரவேயில்லை!

மற்றும் படிக்கு...இங்கிலாந்தில்....இருந்த நண்பர்களையும்.....அந்தக் காலனிலையையும்...இன்னும் மிஸ் பண்ணுகிறேன்!

பாக்கி என அவர்கள் அழைக்கும் போது .....ஒரு காலத்தின் கொதித்தும் போயும் இருக்கிறேன்!  இப்போதெல்லாம் அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

அவுஸும் அருமையான தேசம் தான்..! எல்லோரும் வந்தான் வரத்தான் என்ற படியால்...பாக்கி என்று அழைக்கும் துவேசங்களும் மிகவும் குறைவு...!

மார்கழி மாதத்துக் காலனிலை.....புங்குடுதீவையே நினைவு படுத்தும்!

காகங்கள் மட்டும்...கொஞ்சம் வித்தியாசம்..! அண்டம் காகங்களுக்குக் கொஞ்சம் வெள்ளையடிச்சு விட்டது மாதிரி..!😋

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, புங்கையூரன் said:

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, புங்கையூரன் said:

நான் ஒரு மழை விரும்பி. மப்பும் மந்தாரமாக 364 நாள் இருக்கும் நாடெல்லாவா இது😂. வெள்ளையள் எல்லாம் மழை, மழை என சலித்துகொள்ள நானோ காரில் இருந்து ஒவ்வொரு மழைதுளியாக ரசிக்கும் பேர்வழி. ஆகவே பொருத்தமான உடுப்பை போட்டால் காலநிலை எனக்கு பெரிய அலுப்பில்லை. சின்னதில் அப்பாவுடன் ஹட்டன் போய், திரும்பி போக வேண்டாம் என அடம்பிடிச்ச ஆள் நான், ஆகவே எனக்கு சொல்லப்போனால் இந்த காலநிலை ஒரு நித்திய வரப்பிரசாதம்.

நீங்கள் 90களில் இருந்திருப்பீர்களோ? முன்பு போல முகத்தில் அடிக்கும் துவேசம் இப்போ குறைவு. ஒரு பாக்கி நாட்டின் முன்னாள் கிரிகெட் கேப்டன், ஒரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் லண்டன் மேயர், இன்னொரு பாக்கி பஸ் ஓட்டுனரின் மகன் உள்நாட்டு மந்திரி 😂😂😂.

வைத்தியம், சட்டம், அரசியல், கலை, தொலைக்காட்சி தொடங்கி அரச குடும்பம் வரை வெள்ளையர் அல்லாதோர் பிரசன்னம்.

நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. என் வாழ்நாளில் கண்ட அளவிலியே.

ஆனாலும் பாக்கி என்றைழைக்கப் படுவது இருக்கத்தான் செய்கிறது. டாமி ரொபின்சன் வகையறாக்கள் வெறுப்பை உமிழ்வதும் தொடர்கிறது. 

சுருங்ககூறின் மல்டி கல்சரலிசம் வளர்கிறது, துவேசம் குறைகிறது.

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, goshan_che said:

பகிர்வுக்கு நன்றி....கோசான்!

நீங்கள் சரியாகக் கணித்துள்ளீர்கள்! தொண்ணூறுகளில் தான்!

அவுஸ்திரேலியா மல்ரி கல்சரலிஸத்துக்கு  முன்னுதாரணமாகக் கூறப்படும்  ஒரு நாடு எனினும்...பழைய  POM தலைமுறையின் எச்சங்களும்...மிச்சங்களும் இன்னும் உணடு...! ஆனால் அவர்களின் domination  குறைந்து கொண்டு வருகின்றது!

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

Note: Technically our Head of State is still your Queen!

Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, புங்கையூரன் said:

POM - Prisinors of Motherland ( Referring to convicts)

Please do not try this with any Englishmen, because it is a rude word over there.

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சில ஆடுகளுக்கு முன் இங்கிலாந்தின் கேப்டனாக குக் இருந்த போது, ஆஸி பேட்டிங் செய்யும் போது, ஒரு பதாதை வைத்திருந்தார்கள்.
'A cook from England civilised you in the 1770s....

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Nathamuni said:

கராஜ் ஒன்றில் வேலை செய்யும் போது, ஒரு வெள்ளை பாக்கி என்றான்.

போடா ஐரிஷ்காரா என்றேன்.

அவ்வளவு தான். தான் எப்படிப்பட்ட ஆங்கிலேயன், அப்பா, அம்மா என்று தோம்பு இழுத்து, தனது பரம்பரை சொல்லி, என்னை போய், ஐரிஸ்  காரர் எண்டு சொல்லி போட்டியே என்றான்.

ஆகா, உங்கட வீக் பாயிண்ட் அங்கவா இருக்குது எண்டு.... ஆனாலும், சுத்த ஆங்கிலேயன் இப்படி நடந்து கொள்ள மாட்டானே.... எண்ட படியால் நீ, ஐரிஸ் தான் என்றேன்.

நொந்து போய் போனார்.

ஐரிஷ் காரர்கள் எங்களுக்கு ஒன்றும் கெடுதல் செய்ய வில்லை.  ஆங்கிலேயர்கள் அவர்களை கீழாகவே பார்ப்பார்கள் என்று புரிந்தது. 

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, சாமானியன் said:

சாமானியன், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்..!

நான் அங்கிருக்கும் காலத்தில்...நடந்தது! 

ஐரிஸ் பெண்களுக்கு ....எமது இனத்து ஆண்களை மிகவும் பிடிக்கும்!

காரணம்...நாங்கள் பெரிய மன்மதர்கள் என்று அல்ல..!

அவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதாலும்...எங்கள் ஆண்கள்...கலியாணம் கட்டினால் ..இடையில்  விட்டு விட்டு ஓடி விட மாட்டார்கள் என்பதாலும் மட்டுமே!

இவ்வாறு நம்மவர் ஒருவருக்கு....ஐரிஸ் பெட்டையுடன் தொடர்பு  ஏற்பட்டுக் கொஞ்ச நாட்கள்  ஒன்றாகவும் இருந்தார்கள்!

பின்னர் அவருக்கு ஊரில் கலியாணம் பேச .....அவர் எங்களிடம்  ஆலோசனை கேட்க.. அவள் காலெல்லாம் பிடிச்சு விடுகிறாள்......பேசாமல்...கலியாணத்தைக் கட்டு...என்பதே எமத  ஆலோசனையாக இருந்தது!

அவன் விடாப் பிடியாய்.....நிற்கவே.....சரி...ஒரு நாளைக்கு நல்ல மிளகாய் போட்டு....ஒடியல் கூழைக் காய்ச்சு......என்னநடக்குது என்டு பாப்பம் என்று கூறினோம்!

அவன் கூழும் காய்ச்ச ....அவளும் சேர்ந்து குடித்து விட்டு......அன்றைய பொழுது...போய் விட்டது.!

காரத்துக்குப்  பயந்து அவள் ...ஓடி விடுவாள் என்று அவர் நினைத்தார்!

அடுத்த நாள்...அவள் முதலில்...கேட்ட கேள்வி.இது தான்..!

அடுத்த கூழ் எப்போது செய்வீர்கள்.?😀

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Nathamuni said:

இங்கத்தையன் வெள்ளையள் தான் அவுஸ் காரர்களை மட்டம் தட்ட சொல்வார்கள்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியில் இது சகயம்.

சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும், இது பிழையான தகவல்.

பொம்ஸ், பொமீஸ் -என்பது யுகே வெள்ளைகளை கேலி செய்ய அவுஸ்ரேலியர்கள் பயன்படுத்தும் சொல்லாடல்.

அவுஸ்ரேலியர்களை மட்டம் தட்ட - பிரிடிஸ்காரார் “கான்விக்ட்ஸ்” convicts என்ற பதத்தையே பாவிப்பர்.

சுருங்க சொல்லின்,

அவுஸ்ர்ரேலியர்= Convicts

பிரிட்ஸ் = Poms/Pommies

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

எம்மை போலவே “குடும்ப பாங்காகனவர்கள்” ஐரிஸ்காரர். எனவே எங்கள் ஆண்கள் மீது இயல்பான ஈர்ப்பு. 

உங்கள் நண்பருக்கு “கூல் டவுண்” என்று சொல்லி இருப்பியள் போல 😂.

4 hours ago, சாமானியன் said:

நான் வேலை செய்யும் அலுவலகத்தில் 15  வருடங்களுக்கு முன்பு சேர்ந்த போது அலுவலகத்தில் ஒரு 50,60  பேர்  இருந்திருப்பார்கள்  எல்லோருடனும் தனிப்பட்ட ரீதியில் என்றாலென்ன அலுவலக முறையில் என்றாலென்ன மிகுந்த சினேக முறையிலான தொடர்புகள் உண்டு , இந்த ஒரு பிரகிருதியை விட , கதைக்கவே மாட்டான் பார்க்கும் போது பூச்சியைப் பார்க்கிற மாதிரி தான் பார்ப்பான் । ஒரு 5,6  வருடங்களின் பின்னரே தெரிய வந்தது அவன் ஒரு  பிரிட்டிஸ்காரன் எண்டு . அவன் போனவருடம் retire  பண்ணி போகு மட்டும் அவனுடன் கதைத்த வார்த்தைகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.    
ஐரிஷ் காரர்கள் நிறைய இருக்கிறார்கள்,  அருமையாகப் பழகுவார்கள்.   family / cultural   values இலும் மிகுந்த ஒற்றுமையைக் காணலாம்.

ஆங்கிலேயர்கள் கொஞ்சம் உயர்வுநவிற்சி உடையவர்கள்தாம் ஆனாலும் பழக இனிமையானவர்களே. குறிப்பாக, சட்டத்தின் ஒழுங்கு, வரிசையில் நிற்றல், நீதி (fairness) என்பவற்றை கடைப்பிடிப்பதில் பிரிடிஸ்காரர் மேலானவர்கள். ஐரிஸ்காரரில் சுத்துமாத்து பேர்வழிகள் அதிகம்.

கத்தோலிக்கமா, புரொட்டஸ்டாண்டா என்று வரும் போது ஐரிஸ்காரர் துவேசிப்பதை போல  பிரிட்டிஸ்காரார் இல்லை.

சுருங்கச் சொல்லின். வீட்டுக்கு வீடு வாசல்ப்படி.

Share this post

Link to post
Share on other sites

நான் வேற திரி திறக்கிறன் எண்டதுக்குக் காரணம் இருக்கு. பிறகு அவசரப்பட்டு இதில் எழுதுறியளே??????

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • எங்களுக்கு அறிவில்லைத்தான் நாலு எழுத்து படிக்கவில்லை உங்களை போல் ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமத்திரன்ய் பின்கதவால் கொண்டு வந்தபோது நாங்கள் சொன்னதுதான் இதுவரைக்கும் நடந்து இருக்கு இங்கும் Elugnajiru சொன்ன கருத்துக்கு உங்களால் பதில் சொல்லமுடியாமல் என்னுடன் அதான் உங்கள் பாசையில் வெறிகாரனுடன் தனவல் முடிந்தால் அவர்களின் கருத்துகளுக்கு உங்களின் பதில் கருத்துக்களை வையுங்கள் அறிவு குறைந்த எங்களுடன் ஏன் கொள்ளுப்பாடு உங்களால் அவர்களுடன் ஆக்கபூர்வமாக கருத்தாட முடியாது ஏனெனில் உங்கள் இரத்தம் மனியடிச்சால் ஓடிபோய் உங்கள் கடமையை  செய்ய பழக்கபட்டு இருக்கு  . ( அந்தகால அரசர்கள் காலைகடனை  கதிரையில் வட்டமாக வெட்டிய பகுதியில் இருந்து கழிப்பது உண்டு எல்லாம் முடிந்தபின் அவர்கள் தங்கள் கைகளை உபயோகிப்பதில்லை பதிலாக மணியை அடிப்பார்கள் உடனே அடிமைகள் போட்டி போட்டுகொண்டு வந்து மிருதுவான பஞ்சினால் துடைத்து கிளீன் பண்ணி விடுவார்களாம் சில ராஜ்யிங்களில் அப்படி சரியாக துடைத்த அடிமைக்கு வெகுமதியும் அளிப்பது உண்டாம் )
  • ஆறு வாரங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்டுள்ள எண்ணற்ற உயிரிழப்புகள் குறித்தும், அதன் காரணங்கள் குறித்தும் பல முரண்பட்ட தகவல்கள் உள்ளன இந்த சூழலில் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயி ஸ்ரீநகரில் நடைபெற்ற சில சம்பவங்கள் தொடர்பாகப் பார்வையிட்டார்.       இந்திய துணை ராணுவப் படை சுட்டது ஆகஸ்டு 6ஆம் தேதி 17 வயதான அஸ்ரர் கானுக்கு, நான்கு வாரங்களில் தனது உயிரைப் பறித்துக் கொண்ட காயம் ஏற்பட்டபோது அவர், தனது வீட்டுக்கு வெளியே தெருவில் நின்று கொண்டிருந்தார். கெட்டிக்கார மாணவனாகவும், விளையாட்டில் ஆர்வமானவனாகவும், அறியப்பட்ட அஸ்ரர் கானின் உயிரிழப்பு ஏற்கனவே பதற்றத்திலிருந்த சூழலில், மீண்டும் ஒரு சர்ச்சையாக மாறியுள்ளது. அஸ்ரர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, நெற்றியில் புகைக்குண்டின் சிலிண்டரும் உலோக பெல்லட் குண்டுகளும் அஸ்ரர் கானின் நெற்றியில் பட்டதாகக் குற்றம் சுமத்துகிறார் ஃபிர்தூஸ் அகமது கான். அஸ்ரருடன் விளையாடிக் கொண்டிருந்த அவனின் நண்பன் இந்திய துணை ராணுவப் படை அவனை சுட்டதாக தெரிவிக்கிறான்.   மறுக்கும் ராணுவம் அஸ்ரரின் மருத்துவ அறிக்கை அவர் பெல்லட் குண்டுகளாலும், கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததாலும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கிறது. ஆனால் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் உயர் ராணுவ கமாண்டர், லெஃப்டினட் ஜெனரல் கே.ஜே.எஸ்.தில்லான், காஷ்மீர் போராட்டக்காரர்கள் ஆயுதப்படைகள் மீது எறிந்த கற்கள் அஸ்ரர் மீது பட்டதாகத் தெரிவித்துள்ளார். Image caption அஸ்ரர் மருத்துவ அறிக்கை பிபிசியிடம் பேசிய காஷ்மீர் போலிஸாரும் இதையே தெரிவித்தனர். மருத்துவமனை அறிக்கை தெளிவற்றதாக இருப்பதாகவும், அதுகுறித்து மேலும் விசாரணைகள் தேவை என்றும் தெரிவிக்கின்றனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளியிட்ட நாளில்தான், இந்த சம்பவம் நடைபெற்றது. எதிர்பாராத இந்த அறிவிப்பு வெளியான நாளுக்கு முன்பாக, தொடர்ந்து சில நாட்களாக பல்லாயிரக் கணக்கான இந்தியத் துருப்புக்கள் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்துக்களின் புனித யாத்திரை ஒன்று ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.   94 சதவீதம் மதிப்பெண் உயிரிழந்த அஸ்ரர் தனது 10-வது வகுப்புத் தேர்வில் 94 சதவீதம் மதிப்பெண் பெற்றதைக் காட்டும் ஒரு ரேங்க் கார்ட்டும், கிரிக்கெட் கோப்பையுடன் அவரின் புகைப்படம் உள்ள ஒரு செய்தித்தாளும்தான் தற்போது அவரின் குடும்பத்துக்கு விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். Image caption அஸ்ரர் பெற்ற மதிப்பெண் ''இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எனது வலியை அறிவாரா? இதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? இது குறித்து அவர் கண்டனம் தெரிவித்தாரா?'' என்று அஸ்ரரின் தந்தை பிபிசியிடம் வினவினார். ''நாளை உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம். இன்றைய காஷ்மீரில் யாரும் எதற்கும் பொறுப்பேற்பதில்லை'' என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட நடக்கவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது. ஆனால், அரசு எதிர்ப்பு போராட்டங்களில் எறியப்பட்ட கற்களால் தாக்கப்பட்டு அஸ்ரார் உள்பட இரண்டு பேர் இறந்ததாக அரசு கூறுகிறது. ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்களால் மேலும் மூவர் இறந்ததாக அரசு தெரிவித்துள்ளது.   குலாமை சுட்டது யார்? கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதியன்று, 60 வயதான குலாம் முகமது என்ற கடைக்காரர் கடையின் உள்ளே தனது மனைவியுடன் அமர்ந்திருந்தபோது மோட்டார் பைக்கில் வந்த மூன்று பேர் அவரை சுட்டு விட்டுத் தப்பியோடியுள்ளனர். கடையைத் திறக்கக்கூடாது என்ற தீவிரவாத குழுக்களின் எச்சரிக்கையை மீறி கடையைத் திறந்ததால் குலாம் முகமது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற யூகம் நிலவுகிறது. குலாம் முஹமதின் குடும்பத்தினரை பிபிசி சந்தித்தபோது, அவர்கள் இது குறித்துப் பேச அச்சப்பட்டனர். குலாம் கொலை செய்யப்பட்டதன் உள்நோக்கம் குறித்து தாங்கள் விசாரணை செய்து வருவதாக போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், அண்மைய நாட்களில் இறந்த தங்களின் உறவுகள், நண்பர்களின் எண்ணிக்கைக்கும், அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைக்கும் வேறுபாடு உள்ளதாகப் பலர் கூறுகின்றனர்.   பானுவின் கதை அதில் ஒருவர் ரஃபிக் ஷாகூ. ஸ்ரீநகரில் உள்ள பெமினா பகுதியில் ஆகஸ்டு 9ஆம் தேதி, தனது மனைவி ஃபெமீடா பானுவுடன் தனது இரண்டடுக்கு மாடிக் கொண்ட வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே உள்ள பகுதியில் மோதல் வெடித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். போராட்டக்காரர்களைக் கலைக்கப் பாதுகாக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் கண்ணீர்ப் புகை தனது வீட்டைச் சூழ்ந்து கொண்டதாகவும், 34 வயதான ஃபெமீடா அதனால் மூச்சு திணறியதாகவும் தெரிவிக்கிறார். மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக அவள் என்னிடம் தெரிவித்தாள். எனவே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் தொடர்ந்து என்னிடம் தனக்கு என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். மிகவும் பயந்துவிட்டாள். மருத்துவர்கள் அவளைக் காப்பாற்ற பெரிதும் முயன்றனர். ஆனால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. பானுவின் மருத்துவ அறிக்கை அவர் விஷவாயுவை சுவாசித்தால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கிறது. தற்போது பானுவின் கணவர் தனது மனைவியின் இறப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார். பானுவை போன்ற கதைதான் ஸ்ரீ நகரில் உள்ள சஃபகடல் பகுதியைச் சேர்ந்த 60 வயது முகமது அயூப் கானின் கதையும். ஆகஸ்டு 7ஆம் தேதி இந்த போராட்டம் வெடித்த போது அந்த பகுதியை அயூப் கான் கடந்து சென்றதாக அவரின் நண்பர் ஃபயஸ் அகமது கான் தெரிவிக்கிறார். கானின் காலுக்கடியில் இரண்டு கண்ணீர் புகைக் குண்டுகள் வந்து விழுந்ததாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுவரை அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்திற்கு எந்த ஓர் அறிக்கையும் தரப்படவில்லை. ஆனால் கான் கண்ணீர் புகையைச் சுவாசித்ததால்தான் உயிரிழந்தார் என்று கூறுவது வதந்தி என போலீஸார் தெரிவிக்கின்றனர்.   தகவல் தர மறுக்கும் போலீஸார் அந்த பகுதியில் முழு அடைப்பு நடைபெற்று வந்தாலும், தடை உத்தரவு மீண்டும் மீண்டும் அமலில் இருந்தபோதும், அங்கு போராட்டக்காரர்கள், அரசுக்கும், பாதுகாப்புப் படைக்கும் எதிராகப் போராட்டங்கள் நடத்துகின்றனர். அது வன்முறையாகவும் மாறி வருகிறது. படத்தின் காப்புரிமை Getty Images இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து மருத்துவமனைகள் எந்த தகவலையும் தர மறுக்கின்றன. காயமடைந்த பலர் தங்களின் காயங்களுக்கு முறையான சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கைது செய்யப்படலாம் என அஞ்சுகின்றனர். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், மற்றும் வணிகர்கள் ஆகியோரை அரசு தடுத்து வைத்திருக்கிறது என நம்பப்படுகிறது. இதில் பலர் உள்ளூர் சிறையிலிருந்து நகரத்தின் வெளியே உள்ள பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இதில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என அறிவது கடினமாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது காஷ்மீர் இதற்கு முன்னால் எதிர்கொண்ட அமைதியின்மையைவிட ஒப்பீட்டளவில் இது சிறியது. காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், "2008, 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் அதிகளவிலான மக்கள் உயிரிழந்தனர்." என்கிறார். "பாதுகாப்புப் படை இரவும், பகலும் அயராது உழைத்து, எந்த தனி மனிதரையும் காயப்படுத்தாமல் அமைதியை உறுதிப்படுத்தி உள்ளனர்" என்று தெரிவிக்கிறார். தொலைத்தொடர்பு துண்டிப்பு, ராணுவ நடவடிக்கை காரணமாகத்தான் உண்மையான நிலவரம் இன்னும் முழுமையாக வெளியே தெரியவில்லை எனப் பலர் கூறுகின்றனர். காஷ்மீரில் நடைமுறையில் உள்ள பல தடைகள் எப்போது முடிவுக்கு வரும், அப்படி முடிவுக்கு வரும்பட்சத்தில் என்ன நடக்கும் என முழுமையாகத் தெரியவில்லை. https://www.bbc.com/tamil/india-49714631
  • பல நாடுகள் ஏற்கனவே பாகிஸ்தானுடன் மத்திய கிழக்கு நாடுகளில் தான் விளையாடுகின்றன. இலங்கையும் அவ்வாறு செய்யலாம். இவரும் இம்ரான்கான் போன்று அரசியலில் இறங்க உள்ளார் போல் தெரிகின்றது.  🙂 🙂 
  • இந்த கட்டுரையாளர் என்ன நோக்கத்திற்காக எழுக தமிழ் நடந்தது என்பதை விளங்காமல் எழுதினாரா இல்லை விளங்கியும் வேறு நோக்கத்துடன் எழுதினாரா? என்ற கேள்வி எழுகின்றது. காரணம், இங்கே இவர் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை,. ஆனால், எழுப்பிய நேரமும் இடமும் தவறானவை.