Jump to content

முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர்
 
Editorial / 2019 ஜூன் 19 புதன்கிழமை, மு.ப. 11:31

image_cafafa9966.jpg

 

அமைச்சுப் பதவிகளில் இருந்து அண்மையில் விலகிய, முஸ்லிம் பிரதிநிதிகளில் இருவர்,  இன்று (19) மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய, கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோரே, இவ்வாறு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

  •  

http://www.tamilmirror.lk/செய்திகள்/முஸ்லிம்-அமைச்சர்கள்-இருவர்-மீண்டும்-பதவியேற்றனர்/175-234369

 

 

Link to comment
Share on other sites

சந்தர்ப்பவாத அரசியல் 

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் 22 பேர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தங்கள் நாடாளுமன்றப் பதவியை விலக்கவில்லை.. அமைச்சர் பதவியை வகித்த நான்கு முஸ்லிம்கள், நான்கு இராசாங்க அமைச்சர்கள், ஒரு துணை அமைச்சர் என மொத்தம் 9 அமைச்சர்கள் மட்டுமே தங்கள் பதவிகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். 

அசாத் சாலி தனது ஆளுநர் பதவியை விலக்கிய மறு கணம் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசாமில் அதே இடத்துக்கு சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். அசாத் சாலிதான் ஞானசார தேரரின் விடுதலைக்கு  சனாதிபதி சிறிசேனா அவர்களின் தூதராகச் செயற்பட்டார். 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு முஸ்லிம்கள் சந்தர்ப்பவாத அரசியலை கச்சிதமாக கடைப்பிடித்து வருகிறார்கள். அன்று தொட்டு நேற்றுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் இடம்பெறாத அமைச்சர் அவை கிடையாது. அமைச்சர் பதவிகளை வகிப்பதன் மூலம்  முஸ்லிம் மக்களது  கல்வி, வாணிகம், கைத்தொழில், மருத்துவம், சட்டத்துறை என பல துறைகளிலும் முன்னேறக் காரணமாக  இருந்துள்ளார்கள்.  

அதற்கொரு சின்ன எடுத்துக்காட்டு  ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலத்தில் (22.11.2010 - 28.12.2014)  சட்டக்கல்லூரிக்கு 2013 இல் அனுமதி பெற்ற  மொத்த மாணவர்களில் (309) 78 பேர் முஸ்லிம்கள். சிங்களவர்கள்  155 பேர். தமிழர்கள் 55 பேர்.   2011 இல் 51  பேர் சித்திபெற்றார்கள்.  2008 ஆம் ஆண்டு மொத்தம் 242 இல்  14  முஸ்லிம் மாணவர்கள்  மட்டும்  சித்தி பெற்றார்கள். 2013 இல் சித்தி பெற்றவர்களில்  முதல் 3 இடத்தைப் பிடித்த மாணவர்கள் முஸ்லிம்கள் ஆவர். முதல் 10 இடத்தில்  6 பேர் முஸ்லிம்கள். முதல் 50 இடத்தில் 28 முஸ்லிம் மாணவர்கள் சித்தி பெற்றார்கள். 
 

 

Link to comment
Share on other sites

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாத காலம் தாம் அமைச்சுப்பதவிகளை எடுக்கப்போவதில்லை என கூறி ஹபீர் ஹசீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில் இன்று மீண்டும் ஹபீர் ஹசீம் அமைச்சுப்பதவியை ஏற்றது எவ்வாறு? ஒரு மாதகாலம் முடிந்துவிட்டதா ? அல்லது விசாரணை முடிந்துவிட்டதா? என எதிர்க்கட்சி உறுப்பினர் நிமலன்சா சபையில் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று சபை அமர்வுகளின் போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் நிமல் லண்சா:- சபாநாயகர் அவர்களே, நான் ஒரு கத்தோலிக்க நபர் என்ற வகையில் இந்த கேள்வியை எழுப்புகின்றேன். 

கடந்த ஈஸ்டர் தாக்குதலை அடுத்து குற்றவாளிகளை கண்டறியும் விசாரணைகள் முடியும் வரையிலோ அல்லது ஒரு மாதகாலத்திற்கு அமைச்சுப்பதவிகளை எடுக்க மாட்டோம் என கபீர் ஹாஷிம் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினார்கள். 

ஆனால் ஹபீர் ஹசீமும் , ஹலீமும் அமைச்சுப்பதவிகளை எடுத்துள்ளனர். அப்படியென்றால் இவர்களின் ஒருமாத காலம் முடிந்துவிட்டதா அல்லது விசாரணை முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்.

இதன்போது பதில் தெரிவித்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல :- இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தான் பதவி பிரமாணம் செய்துள்ளனர். ஆகவே உரிய நபர்களிடம் கேளுங்கள். இவர்கள் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமைக்கும் பாராளுமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.  

https://www.virakesari.lk/article/58583

Link to comment
Share on other sites

மற்றவர்களும் வந்துகொண்டிருக்கிறார்கள் பதவியை ஏற்க..நிலையற்றது தொப்பி.நிலைமாறும் எப்போதும் அவர்களின் புத்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.