Jump to content

தடுப்பூசிகளுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன?


Recommended Posts

தடுப்பூசிகள் ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காப்பாற்றுகின்றன. இப்படித்தான் இவை வந்தன. இதனால் தான் இது மிகவும் முக்கியமானதாகிறது.

 

கடந்த நூற்றாண்டில் தடுப்பூசிகள் கோடிக்கணக்கானோரின் உயிர்களைக் காப்பாற்றி உள்ளன. இருப்பினும் பல நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் "தடுப்பூசிகள் மீது தயக்கம் காட்டும்" போக்கு அதிகரித்து வருவதையும் சுகாதார நிபுணர்கள் இனங்கண்டுள்ளனர்.

தடுப்பூசிகள்

உலக சுகாதார நிறுவனம் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பத்து சுகாதார அச்சுறுத்தல்களில் இதையும் பட்டியலிட்டுள்ளது.

 

தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

தடுப்பூசிகள் தோன்றுவதற்கு முன், நோய்களால் உலகம் மிகவும் அபாயகரமான இடமாக இருந்தது. இன்றைய அளவில் தடுக்கப்படக் கூடிய நோய்கள் காரணமாக ஆண்டு தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைந்து வந்தனர்.

சீனர்கள்தான் முதன்முறையாக தடுப்பூசிகளின் முதலாவது வடிவமான அம்மை குத்துதலை கண்டுபிடித்தனர். இதன்படி, ஆரோக்கியமான நபருக்கு நோய்வாய்ப்பட்ட திசுவை புகுத்தி அவருக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே இந்த நுட்பம்.

எட்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிட்டிஷ் டாக்டர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், பால் கறந்து விநியோகம் செய்யும் பெண்களுக்கு லேசான பசுஅம்மை நோய் தாக்குதல் ஏற்படுவதையும் அவர்களுக்கு மிகவும் அரிதாகவே பெரியம்மை தாக்குவதையு கண்டார்.

பெரியம்மை மிகவும் கொடுமையான தொற்றுநோய். இந்த நோய் தாக்கியவர்களில் 30 சதவீதத்தினர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தோர் பெரும்பாலும் உடல் நிறைய தழும்புகளைக் கொண்டிருந்தனர். அல்லது பார்வையிழந்திருந்தனர்.

1796ஆம் ஆண்டு ஜென்னர், எட்டு வயது நிரம்பிய ஜேம்ஸ் பிப்ஸ் மீது சோதனையை மேற்கொண்டார்.

பசு அம்மையின் புண்ணில் இருந்து சீழினை அந்த சிறுவனிடம் செலுத்தினார். அவன் உடலில் உடனடியாக அறிகுறிகள் தென்பட்டன.

இதனால் கிடைத்த வெற்றி என்ன?

பிப்ஸ் குணமடைந்ததும், அவன் மீது பெரியம்மை கிருமியை செலுத்தினார். ஆனால் அவன் ஆரோக்கியமாக இருந்தான். பசு அம்மை அவனை பெரியம்மை நோயின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியது.

1798ஆம் ஆண்டு இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இருந்துதான் வேக்சின் (VACCINE) என்ற சொல் உருவானது. Vacca என்ற சொல் லத்தீன் மொழியில் பசு என்று பொருள். அந்த சொல்லிலிருந்துதான் வேக்சின் என்ற சொல் உருவாக்கப்பட்டது.

இதனால் கிடைத்த வெற்றி என்ன?

கடந்த நூற்றாண்டில் பல நோய்களின் தாக்கத்தை வெகுவாக குறைக்க இந்த தடுப்பூசிகள் உதவின. 1960களில் முதன் முறையாக தட்டம்மை நோய்கு எதிரான தடுப்பூசி போடப்படுவதற்கு முன்பு வரை, சுமார். 26 லட்சம் பேர் ஆண்டு தோறும் தட்டம்மையால் உயிரிழந்து வந்தனர்.

தடுப்பூசிகள் காரணமாக 2000 முதல் 2017 வரை 80 சதவீத தட்டம்மை நோய் மரணங்கள் குறைந்தன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகள் எப்படி வேலை செய்கின்றன

சில பத்தாண்டுகள் முன்னர் வரை, போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு முடக்குவாதம் அல்லது மரணம் ஏற்பட்டு வந்தது மிகவும் கவலையளித்த ஒன்றாக அமைந்தது. இப்போது போலியோ நோயே இல்லாமல் போய்விட்டது.

சிலர் ஏன் தடுப்பூசி வேண்டாம் என்கிறார்கள்?

தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர். தடுப்பூசிகள் சுத்தமில்லாதவை என்றும், அவர்கள் கருதினார்கள். தடுப்பூசி போட வேண்டுமா வேண்டாமா என்ற தங்கள் சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்ட சந்தேகமாக இது அமைந்தது.

1800களில் தடுப்பூசிகள் எதிர்ப்பு அணிகள் பிரிட்டன் முழுவதும் தோன்றின, இதன் காரணமாக தடுப்பூசிகளுக்க மாற்றாக மாற்று மருந்துகளை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். நோயாளியை தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

1870களில் முதலாவது தடுப்பூசி எதிர்ப்பு குழு அமெரிக்காவில் பிரிட்டிஷ் தடுப்பூசி எதிர்ப்பாளர் வில்லிம் டெப் என்பவரால் தொடங்கப்பட்டது.

சமீபத்திய வரலாற்றில் தடுப்பூசியை எதிர்த்த முக்கியமான நபர்களில் ஒருவர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட்

1998ல் லண்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எம்.எம்.ஆர். தடுப்பூசியுடன் ஆட்டிசம் மற்றும் குடல் நோய்க்கு வழிவகுக்கிறது என்று தவறான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தடுப்பூசி என்றால் என்ன

எம்.எம்.ஆர். என்பது இளம் குழந்தைகளுக்கு தட்டம்மை, தாளம்மை மற்றும் ரூபெல்லா அல்லது ஜெர்மனி தட்டம்மையின் தாக்குதலுக்கு எதிராக செலுத்தப்படுகிறது.

அவரது ஆய்வறிக்கை புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வேக்ஃபீல்ட்டின் பெயர் இங்கிலாந்தின் மருத்துவர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இங்கிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

2004ஆம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 10000 குழந்தைகள் எம்.எம்.ஆர். தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாக தட்டம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தடுப்பூசிப் பிரச்சினை பெரும்பாலும் அரசியல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியின் உள்துறை அமைச்சர் மேட்டியோ சால்வினி, தடுப்பூசி எதிர்ப்பு குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எவ்வித ஆதாரமும் இன்றி, தடுப்பூசிகளை ஆட்டிசம் நோயுடன் இணைத்தார். ஆனால் மிக சமீபத்தில் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிகள் மீதான மனப்போக்கு தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று, தடுப்பூசிகள் மீதான மக்களின் நமபிக்கை பொதுவாக நன்றாக உள்ளதாக தெரியவந்தாலும், ஐரோப்பாவின் பகுதிகளில் இந்த நம்பிக்கை மிகவும் கீழே உள்ளதும், பிரான்சில் இந்த நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆபத்துகள் என்ன?

மக்களில் அதிக அளவிலானோருக்கு தடுப்பூசி போடப்படும்போது இந்த நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த நோய் பாதிக்கக்கூடிய ஆபத்து உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு திறன் மேம்படாமல் இருப்பவர்களுக்கும் இந்த நோய் பரவாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஆபத்துகள் என்ன?

இதற்கு மந்தை நோய் எதிர்ப்புத்திறன் என்று பெயர். இது உடையும் போது மக்கள் தொகையில் பலருக்கும் இந்த நோய் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.

இந்த இனக்குழு / மந்தை நோய் எதிர்ப்புத்திறனை பராமரிக்க, மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க விகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியது நோய்க்கு நோய் மாறுபடுகிறது. தட்டம்மைக்கு இது 90% ஆக இருக்கும் நிலையில் குறைந்த தொற்றுத் தன்மை கொண்ட போலியோவிற்கு 80% ஆகும்.

அமெரிக்காவில் புரூக்ளினில் பழமைவாத யூதர் சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு தடுப்பூசிகளுக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறும் தவறான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன..

இதே சமூகத்தினரிடையே தான் அமெரிக்காவில் தட்டம்மை பெரிய அளவில் பரவும் மையமாக கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

தடுப்பூசிகளுக்கு எதிரான பொய் பிரசாரங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பெருமளவு பரப்பப்பட்டு மக்கள் முட்டாளாக்கப்படுவதாக இங்கிலாந்தின் மிகவும் மூத்த மருத்துவர் கடந்த ஆண்டு எச்சரித்து இருந்தார். அமெரிக்க ஆய்வாளர்களும், தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களை ரஷ்யர்கள் போலியாக இயக்கும் சமூகவலைத்தள கணக்குகள் மூலம் பரப்பப்படுவதை கண்டறிந்தனர்.

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் விகிதாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாக 85 சதவீதத்திலேயே மாறாமல் இருந்தது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆண்டுதோறும் தடுப்பூசிகள் காரணமாக உலகெங்கும் இருபது முதல் முப்பது லட்சம் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

தடுப்பூசிகளுக்கு மிகப்பெரிய சவால்களை வழங்கும் நாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்வோரின் குறைந்த விகிதமும் உள்ள நாடுகள் வரிசையில், போர் மற்றும் குறைந்த சுகாதார பேணல் முறை உள்ள நாடுகள் இடம்பெறுவது தெரியவந்துள்ளது. இது ஆப்கானிஸ்தான், அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு போன்ற நாடுகளாகும்.

ஆனால், வளர்ந்த நாடுகளில் முக்கிய பிரச்சினை அவை தன்னிறைவு உணர்வுடன் இருப்பதுதான் என்று உலக சுகாதார நிறுவனம் இனம் கண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொன்னால், மக்கள் ஒரு நோய் என்ன தீங்கினை விளைவிக்கும் என்பதை மறந்துவிட்டதுதான்.

https://www.bbc.com/tamil/science-48688583

 

Measles vaccine fears cost me my children

As cases of measles soar globally, the Philippines is facing a major outbreak.

Since a controversy over a dengue fever vaccine, confidence has fallen in the country's immunisation programmes.

Arlyn B. Calos told the BBC that misinformation on television and social media led her to ignore government advice to have her children vaccinated against measles, a decision she hopes no other parents make.

https://www.bbc.com/news/av/world-asia-48644136/measles-vaccine-fears-cost-me-my-children

Link to comment
Share on other sites

 

 

ஏன் தடுப்பூசி போட வேண்டும்? - தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து 140 விநாடிகளில் விளக்குகிறது இந்த காணொளி. தடுப்பூசி குறித்து நிச்சயம் இதுவொரு புரிதலை வழங்கும்.

https://www.bbc.com/tamil/global-48697635

Link to comment
Share on other sites

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்

தடுப்பூசிகள் மீதான உலகின் பிற்போக்குத்தனமான செயல்பட்டால், நோய் கிருமிகளின் மூலம் பரப்பப்படும் உயிழப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களை தடுக்க வாய்ப்பிருந்தும் முறியடிக்க முடிவதில்லை என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய்த்தடுப்பு ஊசிகள் குறித்த மக்களின் மனப்பான்மையை அறிவதற்காக நடத்தப்பட்ட உலகளவிலான ஆய்வில் பல பிராந்தியங்கள் மிகவும் குறைவான நம்பகத்தன்மையை பதிவு செய்துள்ளன.

உலகிலுள்ள 140க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 1,40,000க்கும் மேற்பட்ட மக்களிடம் இதுகுறித்த ஆராய்ச்சியை வெல்கம் டிரஸ்ட் எனும் அமைப்பு மேற்கொண்டது.

உலகளவில் சுகாதாரத்துறைக்கு இருக்கும் முக்கியமான 10 அச்சுறுத்தல்களாக ஐநாவின் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள பட்டியலில், தடுப்பூசியை போட்டுக்கொள்வதில் இருக்கும் தயக்கமும் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் சிறிதளவு நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் பாதுகாப்பானதா என்று கேட்டபோது,

  • 79% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்புவதாக தெரிவித்தனர்.
  • 7% பேர் சிறிதளவு அல்லது முற்றிலுமாக நம்பவில்லை
  • 17% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

தடுப்பூசிகள் வேலை செய்ததாக நம்பினார்களா என்று கேட்டபோது,

  • 84% பேர் சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நம்புவதாக தெரிவித்தனர்.
  • 5% சிறிதளவோ அல்லது முற்றிலுமாகவோ நிராகரித்தனர்.
  • 12% பேர் தெளிவுற பதிலளிக்கவில்லை.

இது ஏன் முக்கியமானது?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தட்டம்மை போன்ற கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் தொற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பூசி சிறந்த பாதுகாப்பாகும் என்பதற்கு ஏராளமான அறிவியல் சான்றுகள் உள்ளன.

தடுப்பூசிகள் உலகெங்கிலும் உள்ள பில்லியன்கணக்கான மக்களைப் பாதுகாக்கின்றன. பெரியம்மை எனும் நோயிலிருந்து உலகம் முற்றிலுமாக விடுபட்டுள்ளதுடன், போலியோ போன்றவற்றை உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளது.

ஆனால்,பயம் மற்றும் தவறான தகவல்களால் மக்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதை தவிர்ப்பதால் அம்மை போன்ற வேறு சில நோய்கள் மீண்டும் எழுச்சி பெறுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறுகிறார் ஐநாவின் உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர் டாக்டர் ஆன் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

"தடுப்பூசியின் மூலம் தடுக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதில் உலகம் கண்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றத்தை, தடுப்பூசியை போட்டுக்கொள்வதிலுள்ள தயக்கம் மட்டுப்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.

"உலகிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டதாக நாம் நினைக்கும் சில நோய்கள் மீண்டும் தலைத்தூக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத பின்னடைவு."

தட்டமையின் நிலவரம் என்ன?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தட்டமையை முற்றிலுமாக நீக்கும் நிலையை நெருங்கிய பல நாடுகளில் திடீர் பின்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் தடுப்பூசி போடுவதை தவிர்க்க நினைத்தால் அது அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும்.

தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை பெரும்பான்மையை தொட்டுவிட்டால், அது மேலும் பரவுவதை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த பகுதியில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது?

அதிக வருமானத்தை கொண்டவர்கள் வசிக்கும் பிராந்தியங்கள் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை நிலவி வருகிறது.

எடுத்துக்காட்டாக, இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு பிரான்ஸ் நாட்டு மக்கள் தாங்கள் தடுப்பூசியை நம்புவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, தடுப்பூசிகள் மீதான குறைந்த நம்பகத்தன்மையில் பிரான்ஸ்தான் முதலிடம் வகிக்கிறது.

இதன் காரணமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து எட்டாக அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே போன்று, பிரான்ஸுக்கு அருகிலுள்ள நாடான இத்தாலியில் நோய்த்தாக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, தடுப்பூசி போடாத குழந்தைகள் பள்ளியில் படிப்பதை தடைசெய்யும் மற்றும் அவர்களது பெற்றோருக்கு தடை விதிக்கம் சட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. இத்தாலியில் 76 சதவீத மக்கள் தடுப்பூசிகளை நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு, 2019ஆம் ஆண்டின் முதல் பாதிப் பகுதி வரை, அமெரிக்காவின் 26 மாநிலங்களில் 980 தட்டம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலும், வட மற்றும் தென் ஐரோப்பாவிலும் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் தடுப்பூசியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், மேற்கு ஐரோப்பாவில் 59% மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 50% பேர்தான் நம்பகத்தன்மை தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு ஐரோப்பியாவிலேயே அதிகமாக 53,218 தட்டம்மை பாதிப்புகளை பதிவு செய்திருந்த உக்ரைன் மக்கள் தடுப்பூசிகள் மேல் 50 சதவீத நம்பிக்கையையே கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நம்பகத்தன்மை மிக்க பகுதிகள்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று இந்த கருத்துக்கணிப்பின்போது தெரிவித்துள்ளனர். அதாவது, உலகிலேயே அதிகபட்சமாக தெற்காசியாவை சேர்ந்த 95 சதவீத மக்கள், அதற்கடுத்த இடத்தை 92 சதவீதத்துடன் கிழக்கு ஆப்ஃரிக்காவும் பெற்றுள்ளது.

வங்கதேசமும் ருவாண்டாவும் மக்களுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் பல சவால்கள் இருந்தபோதிலும் மிக உயர்ந்த நோய்த்தடுப்பு விகிதங்களை அடைந்துள்ளன.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான ருவாண்டா இளம்பெண்களை கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பூசியை நாடு முழுவதும் வழங்கியதில் உலகின் முதல் நாடாக உருவெடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையின் நிலவரம்

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதே கருத்துக்கணிப்பு இந்தியா மற்றும் இலங்கையிலும் நடத்தப்பட்டது.

95 சதவீத இந்தியர்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 98 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 91 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை, 95 சதவீத்தினர் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று தாங்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதே போன்று, தடுப்பூசிகள் உண்மையிலேயே பலன்மிக்கதாக உள்ளதாக 95 சதவீதத்தினரும், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முக்கியமென்று 95 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டதாக 95 சதவீத பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களை அச்சமடைய வைப்பது எது?

தடுப்பூசிகள் குறித்த மக்களின் அச்ச உணர்வு உலகிற்கே அச்சுறுத்தல்படத்தின் காப்புரிமைARUN SANKAR

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் போன்றவர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பாலும் தடுப்பூசிகள் குறித்த நேர்மறையான பார்வையை கொண்டுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகள் குறித்து மக்களிடையே குறைந்த நம்பகத்தன்மை உள்ளது தொடர்பாக குறிப்பிட்ட எந்த ஒரு காரணமும் இந்த கருத்துக்கணிப்பில் வாயிலாக அறியப்படவில்லை.

அனைத்து விதமான மருந்துகளும் பக்கவிளைவுகளை கொண்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் குறித்து இணையதளம் வாயிலாக பரப்பப்பட்ட போலிச் செய்திகள் மக்களிடையே அதுகுறித்த எதிர்மறையான எண்ணவோட்டத்தை ஏற்படுத்தியதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

"தடுப்பூசிகள் குறித்த மக்களிடையேயான தயக்கத்தையும், அச்சத்தையும் போக்குவதற்கு மக்களின் அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலளிக்க தெரிந்த மருத்துவ பணியாளர்களே மிகவும் அவசியம்" என்று மருத்துவர் லிண்ட்ஸ்ட்ராண்ட்.

https://www.bbc.com/tamil/science-48710011

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.