சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.
சுப.சோமசுந்தரம்

மொழியிழந்த முகம்

Recommended Posts

                    மொழியிழந்த முகம்

                                              -சுப.சோமசுந்தரம்

                 களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம்.

                  நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்). பெரிய மனது பண்ணி இவனை ‘ஷா’வோடு விட்டார்கள். பயலுக்குத் திரிசங்கு சொர்க்கம்தான். நம்மில் நிறைய பேருக்கு அப்படித்தான்.

                  பால காண்டம் ஆரம்பம். உரிய பருவத்திற்கு முன்பே பள்ளியில் சேர்த்தார்கள். இப்போது அதுதான் உரிய பருவமாம். இவன் பிறக்கும் முன்பே ஆண் குழந்தை பெயரிலொன்றும் பெண் குழந்தை பெயரிலொன்றுமாக அம்மேதகு பள்ளியில் இடம் பிடித்து வைத்திருந்தார்கள் போலும். நன்றாகத்தான் படித்தான். நல்ல பிள்ளைகள் அப்படித்தான் செய்வார்களாம். ஆகையால் பெற்றோர், ஆசிரியர் கொடுமையிலிருந்து இவனது இளமைப்பருவம் ஓரளவு தப்பியது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதோ செத்துப் போன மொழியைப் படித்தான்; இல்லை,அவ்வாறாக விதிக்கப்பட்டான். தாய்மொழியை விடுத்துப் பிற மொழிகள் கற்றதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. பயன்பாட்டில் இல்லாத மொழியைப் படிப்பதில் உள்ள (அ)நியாயமும் நமக்குப் புரியவில்லை. உயிரற்ற உடலாய் ஆக உயிரற்ற மொழிதான் பொருத்தமோ?

                    ஒரே பாட்டில் ஏழைக் கதாநாயகன் பணக்காரன் ஆவதைப் போல், ஒரே மூச்சில் நமது நாயகனின் பள்ளி, கல்லூரி வாழ்க்கையை முடித்து விடுவோமா? இன்றைக்கு உள்ள அலங்கோலத்தில், பாடல் பெற    பள்ளி வாழ்க்கையெல்லாம் காவியங்களா என்ன? கடிவாளம் போட்டு வளர்ந்த குதிரைக்கு, கிரேக்க புராணங்களில் உள்ளது போல் இறக்கை முளைத்தது; கற்பனைக் குதிரை தானே! நாயகன் பிறவிப்பயன் அடைய அமெரிக்கா சென்றான். அங்கு அலுவலகத்திலும், அதன் காரணமாக வாழிடத்திலும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினருடன் வாழ, பழக நேர்ந்தது இவனது அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம் எல்லாம். ஏனெனில் அவர்கள் மொழியைத் தொலைக்கவில்லை அல்லது அவர்களிலும் மொழியைத் தொலைத்தவர்களை இவன் சந்திக்கவில்லை. இவனைப் பொறுத்தமட்டில் தொன்மையான தமிழ் வெறும் பேச்சு மொழி மட்டுமே. மொழி வெறும் தகவல் பரிமாற்ற ஊடகமா என்ன? அதற்கு உயிர் உண்டு;உணர்வு உண்டு. இதனை வெளியுலகம் பார்த்தே தெரிந்து கொண்டான். மாற்றம் ஒன்றே மாறாதது என்று சிறு குழந்தையே சொல்கிறது. சக்கரம் சுழலத்தானே வேண்டும்? சுழன்று விட்டது. தாய்மொழி தெரியாது என்று தமிழன் மார்தட்டிய காலம் இருண்ட காலமானது. மனிதன் எத்துணைக் காலம் தான் உணர்வற்ற உயிராக அல்லது உயிரற்ற உடலாக இருப்பான்? தாய்த் தமிழகத்திலேயே இருந்த வரை உறைக்கவில்லை. வளர்ந்த நாடுகளுக்குச் செல்லும் போது, ‘உன் மொழி என்ன?’ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. தமிழ் என்றதும், “அப்படியா! எங்கே, என் பெயரை உன் மொழியில் எழுதிக் காட்டு!” என்பது போன்ற ஆர்வக் கோளாறு நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. அந்த நேரத்தில் இவனது முழி இருக்கிறதே! ‘இந்த வெள்ளையரும் நம்மைக் கேவலமாய்ப் பார்க்கிறார்களோ!’ என்ற பிரமை வேறு ஏற்பட்டுத் தொலைக்கிறது. அவர்களில் சிலர் தமிழின் சிறப்புகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகையில் தன் மானம் கண் காணாத் தேசத்திற்குக் கப்பலேறுவதைப் போன்ற உணர்வு. இவன் ஆங்கிலம், இந்தி, தேவ பாடை (பாடை கட்டி தேவலோகத்திற்கு எடுத்துச் சென்றதுதான் பெயர்க் காரணமோ!) என்று படித்துத் (படிப்பைத்) தொலைத்தவன். வெளி மாநிலத்தில் வாழ்ந்திருந்தால் பரவயில்லை; இவனோ தமிழ் நிலத்திலேயே வளர்ந்து தமிழைத் தொலைத்தானே! மாமரத்தில் கூடு கட்டி மாங்கனியைச் சுவைக்காத புள்ளினம் நம் நாயகன் சுஷாந்த்! இவனது தாய்மொழியின் அழகான ‘ழ’வை இவன் பார்த்ததில்லை. தன் மொ’ழி’யில் இவனுக்கு அ’ழ’த் தெரியும். விழத் தெரியும். எழத் தெரியாது; எழுத்தும் தெரியாது. இவனது இலங்கைத் தமிழ் நண்பர்கள் சிலருக்கு சங்க இலக்கியமும் சங்கம் மருவிய இலக்கியமும் பேசத் தெரியும். அதைக் கேட்டு இவனுக்கு ஏக்க பெருமூச்செறியத் தெரியும். இவையனைத்திலும் தன் தவறேதும் இல்லை என்பதால், தாய்-தந்தை உட்பட முந்தைய தலைமுறைச் சமூகத்தை மரியாதையாய் வசவு பாடச் சொல்கிறது இவன் மனம். நம் தலைமுறை தம் சந்ததியிடம் இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக வாங்கிக் கட்டுவதைப் பார்த்தால், என்னவொரு அளப்பரிய ஆனந்தம்!

                      ஒரு நாள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை இவன் பார்க்க நேர்ந்தது. அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் மாணவப் பருவக் கவிஞர்களை வைத்து வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்காவின் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அன்று அந்நிகழ்ச்சியில் அமெரிக்கர்களைக் கவர்ந்த பதினேழு வயது மாணவி மாயா ஈஸ்வரன், தனது பாலக்காட்டு வேர்களை அமெரிக்காவில் தொலைத்த புலம் பெயர்ந்த தமிழச்சி. தன் கவிதையை உணர்வு பொங்க வாசித்தாள். அதில் தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள். அனைவரையும் கவர்ந்த வரிகள், “எனது அடையாளம் உதிர ஆரம்பித்தது - முடி உதிர்வதைப் போல. கூந்தலை முழுவதும் இழந்து போகும் பீதி என் மனதில்.” கவிதையைக் கேட்டு மிச்சேல் ஒபாமாவே உணர்ச்சி வசப்பட்டார். தாமும் அந்த ரகம் தான் என நினைத்திருப்பாரோ? கவிதையைக் கேட்ட சுஷாந்த் வாயடைத்துப் போனான். இவன் விழியின் ஓரம் நீர்த்துளி பேசியது. அக்கண்ணீர்த் துளிக்கான காரணம் அக்கவிதையா? கவிதை சொன்ன அப்பெண்ணா? மிச்சேல் ஒபாமாவா? இவனது பெற்றோரா? பெற்றோரின் மனவோட்டத்தை இயக்கும் சமூகமா?

                        இவன் நிலையில் எல்லோரும் ஏங்குவதில்லை. மாயாவைப் போல் இவன் ஏங்கினான். நம் தலைவனாயிற்றே! இவனது ஏக்கத்தைப் புரிந்த தமிழ் நண்பனொருவன் சொன்னான், “நண்பா! At any point in life, it’s never too late. வார விடுமுறையில் ஒரு மணிநேரம் சொல்லித் தருகிறேன். இவ்வளவு ஆர்வமும் ஏக்கமும் உள்ள உன்னைத் தமிழும் தேடுகிறது என நினைக்கிறேன்.” முதல் வகுப்பில் நம் தலைவன் ஒரு தட்டில் அரிசி பரப்பி (அவன் பாட்டி சொல்லித் தந்த சடங்கியல்) எழுதினான் ‘அ’. உடனே அம்மா,அப்பா.......என்றெல்லாம் எழுதி, “அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி!.......” என்று பாடவில்லை. ‘அ’ வுக்குப் பின் ‘ஆ’ தான் எழுதினான். இப்போது ‘சுபம்’ என்று நிறைவுத் திரை போட்டால் சரியாக இருக்கும்.                            

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.
இக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டாலும்,  அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.   
  • யட்டியந்தோட்டை சம்பவம் ‘தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல’ யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/யடடயநதடட-சமபவம-தரதலடன-தடரபடய-சமபவம-அலல/175-241218
  • தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க இந்நாட்டுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கை எங்கள் தாய்நாடு. நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள், கல்விக் கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியைத் தேடவும் வேண்டும்” என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தனது பேஸ்புக்கில் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியக் கட்சிகளின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன், மேற்கண்டவாறு அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசியல் கட்சிகள் சொல்லியோ சொல்லாமலோ, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, ஒரு முனைப்பில், ஒரு செய்தியைச் சொல்லி, வடக்கு, மலையகம், கிழக்கு, மேற்கு, தெற்கு என நாடு முழுவதிலும் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையான சிங்கள பெளத்த மக்களும், வேறு முனைப்பில் இன்னொரு செய்தியைச் சொல்லி வாக்களித்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதற்காக, ஒருசில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது நபர்கள், “நாங்கள் சொன்னோமே, கேட்டீங்களா” என்ற பாணியில் பேசக் கூடாதெனச் சுட்டிக்காட்டியுள்ளார். நமது செய்தியை அவர்கள் புரிந்துக்கொள்வதைப் போன்று, சிங்கள மக்களின் செய்தியை நாமும் புரிந்துக்கொள்ள முயல வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர், தேர்தல் முடிவுகள் வழங்கியுள்ள மகிழ்ச்சியின் பேரால், ஆங்காங்கே சிலர் முன்னெடுக்கும் அசம்பாவிதச் சம்பவங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவை முடிவுக்கு வருமென நம்புவதாகவும், தனது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙகககள-மவனததவரம-வவவற-நடடவரக-பயணகக-மடயத/175-241227
  • அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முன்பே தெரியும் என்பது எனக்கு முன்பே தெரியும். 😀😀
  • இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :  தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.  எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.  தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை.  2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும்.  அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது.  எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.  ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால் , எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன்.  https://www.virakesari.lk/article/69272