கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி பதியப்பட்டது June 19, 2019 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது June 19, 2019 கவி அருணாசலம் எழுதிய... "மூனாவின் நெஞ்சில் நின்றவை" என்ற புத்தகத்தையும், சந்திரவதனா எழுதிய... "மன ஓசை" என்ற புத்தகமும்.. பாஞ்ச் அண்ணா மூலம் கிடைத்தது... மிகப் பெரிய சந்தோசம். 😍 முதல் புத்தகம்... 144 பக்கம். இரண்டாவது புத்தகம் 195 பக்கம். இதனை.. வாசித்து முடிப்பதற்கிடையில்.... எனது, காலம் கடந்து விடுமோ...? என்று, தலையை... சொறிந்து கொண்டு, வாசிக்க ஆரம்பித்தது.... புத்தகத்தை கீழே, வைக்க முடியாமல்... பல இரவுகள்... நடு இரவு ஒரு மணி வரை... வாசித்தேன்.அந்த... இரண்டு புத்தகங்களையும், ஒரு கிழமையில்... வாசித்து முடித்தது, எனக்கே... அதிசயமாக உள்ளது. கவி அருணாசலம். யாழ். யாழ் களத்திற்கு... வந்த விதமே... மின்னல் போன்றது. "2018´ம் ஆண்டு... தை" மாதம், 7´ம் திகதி.. வந்தார். "2019´ம் ஆண்டு.... சித்திரை" மாதம் 19´ம் திகதியுடன் காணாமல் போய் விட்டார். அவர் யாழ். களத்தில் இருந்த 15 மாத காலங்களில்....பதிந்த பதிவுகள்.... 406 மட்டுமே. ஆனால்... அவர் எடுத்த விருப்பப் புள்ளிகள்... 545. இதிலிருந்து..... கவி அருணாசலத்தின் திறமையை.. நீங்கள் எடை போடுங்கள். ஏன்... அவர் யாழ். களத்திற்கு வரவில்லை என்று தெரியவில்லை. ஒருவருடனும்... சண்டை பிடித்துக் கொண்டு போன மாதிரியும் தெரியவில்லை. பாஞ்ச் அண்ணாவும், நானும்... கவி அருணாசலத்தை... யாழ்.கள நட்புகள் சார்பாக.. சந்திக்க முயற்சி எடுக்கின்றோம். விரைவில்.... கை கூடும் என, நம்புகின்றேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted June 20, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 20, 2019 இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி…"சந்திரவதனா" என்பவர் கலைஞனின் அக்காவா? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நந்தன் Posted June 20, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 20, 2019 கப்டன் மொறிஸின் அக்கா Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted June 20, 2019 Share Posted June 20, 2019 சந்திரவதனா யாழ்களத்தில் முன்பு எழுதியவர். ஜேர்மனியில் வசிக்கிறார் என நினைக்கிறேன். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ஈழப்பிரியன் Posted June 21, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 21, 2019 On 6/19/2019 at 1:49 PM, தமிழ் சிறி said: கவி அருணாசலம். யாழ். யாழ் களத்திற்கு... வந்த விதமே... மின்னல் போன்றது. "2018´ம் ஆண்டு... தை" மாதம், 7´ம் திகதி.. வந்தார். "2019´ம் ஆண்டு.... சித்திரை" மாதம் 19´ம் திகதியுடன் காணாமல் போய் விட்டார். அவர் யாழ். களத்தில் இருந்த 15 மாத காலங்களில்.... உண்மை தான் சிறி.ஒரு கலக்கு கலக்கினார் காணாமலே போய்விட்டார். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி Posted June 21, 2019 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted June 21, 2019 On 6/20/2019 at 9:56 PM, ரதி said: இணைப்பிற்கு நன்றி தமிழ்சிறி…"சந்திரவதனா" என்பவர் கலைஞனின் அக்காவா? ரதி..... கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா. அவரின்... சகோதரர் ஒருவர் மாவீரர். Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் ரதி Posted June 22, 2019 கருத்துக்கள உறவுகள் Share Posted June 22, 2019 18 hours ago, தமிழ் சிறி said: ரதி..... கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா. அவரின்... சகோதரர் ஒருவர் மாவீரர். ஓ நன்றி...நந்தன் சொன்னதும் சரி Link to comment Share on other sites More sharing options...
Paanch Posted June 27, 2019 Share Posted June 27, 2019 On 6/21/2019 at 11:05 PM, தமிழ் சிறி said: ரதி..... கவி அருணாசலத்தின் மனைவி தான்... சந்திரவதனா. அவரின்... சகோதரர் ஒருவர் மாவீரர். ஒருவரல்ல,! சந்திரவதனா அவர்களின் மூன்று சகோதரர்கள் தமிழீழ விடுதலைக்காக தங்களையே தந்து மாவீர்களானவர்கள். தள்ளாத வயதிலும் வருவோரை வரவேற்று இன்முகம்காட்டும் இவர்களது அன்னையின் முகத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டேனே என்ற கவலையைக் காணமுடியாது. மாவீரக்களைப் பெற்றெடுத்த பெருமையைத்தான் இன்றும் காணமுடியும். நாங்கள் மூனா என்றழைக்கும் அந்த அன்னையின் மருமகன் செல்வகுமரன் (கவி அருனாசலம்) அவர்களும் சிறந்த ஓவியர் அதிலும் பரிகாசச் சித்திரங்கள் வரைவதில் மிகச் சிறந்தவர். தலைவர் பிரபாகரன் அவர்களாலேயே பாராட்டப்பட்ட குடும்பம். ஆயினும் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் யேர்மனி நிர்வாகிகள் நாங்களே என்று உலாவரும் சில சிறுமதி படைத்தவர்களால் அவர்கள் மனவேதனைக்கு ஆளாகி இருப்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.